Tuesday, July 21, 2009

ஆண்கள் ரசிக்கும் பெண்களின் 10

10. அலுவலகத்திலிருந்து வந்ததும் வராததுமாய் அருகே வந்து உரசிக்கொண்டு வழிந்துகொண்டு 'திட்டக்கூடாது.. திட்டமாட்டீங்கன்னா ஒண்ணு சொல்றேன்..' என்றபடியே சிரிக்கும் சிரிப்பு.

09. வீட்டுக்கு வந்த நண்பர்களுடன் வெளியே கெத்தாக கிளம்பும் போது அவர்களுக்குத் தெரியாமல் 'போனா.. தொலைச்சுப்புடுவேன்' என்று மிரட்டும் முகபாவம்.

08. அரிதான இரவு நேர பால்கனி தருணங்களில் நீண்ட கெஞ்சல்களுக்குப்பிறகு கிடைக்கும் ஒற்றை சிகரெட்டுக்கான அனுமதி. 07. 'மையி வெச்சா எனக்கு நல்லாருக்குமாங்க?' பதிலை எதிர்பாராமல் ஒரு சிறுமியின் ஆசையோடு மெலிதாக மை தீற்றிக்கொள்ளும் கண்கள்.

06. 'எல்லா மண்ணாங்கட்டியும் நினைவிலிருக்குது, இத்தன பூக்கடை கண்ணு முன்னாடி இருந்தும் இந்தப் பூ வாங்குறது மட்டும் எப்படி மறந்துபோகுது இந்த மரமண்டைக்கு?' என்று அரற்றும் கோபம்.

05. ஸ்கேல் வைத்து அளந்து மடித்ததைப்போன்ற படுகச்சிதமான உன் முந்தானை மடிப்புகள்.

04. கடும் சண்டைக்குப் பின்வரும் இரவு உணவின் போது சுவற்றைப் பார்த்தவாறே நீ கேட்கும் 'மிளகாப்பொடி போதுமா? சட்னி அரைக்கணுமா?' மிளகாய் வார்த்தைகள்.

03. பட்டுச்சேலை வாங்கப்போனாலும், பிளாஸ்டிக் குடம் வாங்கப்போனாலும் கடைக்காரர்களை ஏற்றத்தாழ்வு பார்க்காமல் நீ செய்யும் ஒரே மாதிரியான டார்ச்சர்.

02. 'ஒழுங்கா கம்ப்யூட்டர் கத்துக்கோ' வேலைகள் முடிந்து படுக்கும் நேரங்களில் வலுவாய் பிடித்து உட்கார வைத்து கற்றுத்தரும்போது, 'ப்ளீஸ்ங்க, நாளைக்கு பாக்கலாமே.. ஆவ்வ்வ்..' என்று வெளியாகும் கொட்டாவி.

01. ஸ்டிக்கர் பொட்டுகளே எப்போதும் உன்னை அழகு செய்துகொண்டிருந்தாலும் எப்போதாவது ஸ்டிக்கருக்குக் கீழே நீ தீற்றிக்கொள்ளும் குங்குமம்.

**********

இந்த டிரிபிள் ஷாட்டின் மற்ற இரு ஓசைகளுக்கு இங்கே செல்லுங்கள்.

.

53 comments:

டக்ளஸ்... said...

அங்கிள், கோபத்துல ஆரம்ப்பிச்சு ரொமான்ஸுக்கு வந்துட்டேள்..!
அக்கா பக்கத்துல உக்காந்து கைட் பண்ணுனாங்களா..?

தராசு said...

ஆரம்பிச்சுட்டாங்கய்யா, அடுத்த பத்து.

வாழ்க.

ஆனா அந்த விஜய் பத்துக்கு லின்க் தட்டுனா கார்க்கி கடையில அந்த மாதிரி ஒரு மேட்டரே இல்ல. கார்க்கி நம்ப வெச்சு கழுத்தறுத்துட்டாரா.....

முரளிகுமார் பத்மநாபன் said...

அப்ப்டியா? (பிதாமகனில் சரக்கபோட்டுகிட்டு பேசும் சூர்யா ஸ்டைலில் படிக்கவும்)

Anonymous said...

//கடும் சண்டைக்குப் பின்வரும் இரவு உணவின் போது சுவற்றைப் பார்த்தவாறே நீ கேட்கும் 'மிளகாப்பொடி போதுமா? சட்னி அரைக்கணுமா?' மிளகாய் வார்த்தைகள்.//

கடும்சண்டைக்கப்பறம் சாப்பாடு உண்டா என்ன. வெறும் மிளகாய்பொடி மட்டும்தான் :)

நாஞ்சில் நாதம் said...

///அக்கா பக்கத்துல உக்காந்து கைட் பண்ணுனாங்களா..?\\\

அக்கா இவர கைமா பண்ணிடாங்க. அந்த கோவத்துல எழுதுனது இது. இவரு கோவப்பட்டா என்ன செய்வாருண்ணு நமக்கு தான் தெரியுமே.

சரி சரி நல்லா எழுதியிருக்கீங்க இந்தா பிடிங்க பத்துக்கு பாத்து மார்க்

தமிழ் பிரியன் said...

செம கலக்கல் எதிர் பதிவுகள்.. சபாஷ் சரியான போட்டி!.. ;-))

நர்சிம் said...

கண்மை மேட்டர் மிக ரசித்தேன் ஆதி.

எம்.எம்.அப்துல்லா said...

சபாஷ். நான் பரிசலுக்கு முதல் எதிர்பதிவு போட்டு உம்மை முந்தினாலும் விஷயத்தோடு எழுதுவதில் நீர் ஜெயித்துவிட்டீர்.சபாஷ்.

Mahesh said...

கலக்கல் பத்து !! உம்ம ரசனையே அலாதி...

MayVee said...

ஏய் ஏய் ..... பாரு... பதிவு போடுறேன் ; பதிவு போடுறேன் ..... நானும் ரவுடி

MayVee said...

அங்கிள் .... என்னை மாதிரி சின்ன பசங்களுக்கு பிடிச்ச பத்து விஷயங்கள் எப்போ எழுதிவிங்க ????

புதுகைத் தென்றல் said...

ஆஹா இப்படி பத்து பத்தா போடும்பதிவர்கள் கைக்கு பத்து போடும் நிலை வராமல் இருக்க வை ஆண்டவா!!!


:))))))))

கோவி.கண்ணன் said...

எப்படான்னு காத்திருப்பிங்களா ?

அக்கம் பக்கம் பார்த்து வீட்டுக்கார அம்மா இல்லாத நேரம் பார்த்து தானே பதிவிட்டிங்க

குசும்பன் said...

அண்ணே அந்த ரிசப்ஸனிஸ்ட் கிட்ட பிடிச்சதுன்னு அன்னைக்கு ஒரு அரை மணி நேரம் மொக்கை போட்டீங்களே அவுங்கதான் இந்த பதிவு எழுத இன்ஸ்பிரேசனா?

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி டக்ளஸ்.!
நன்றி தராசு.! ((ஹிஹி.. கொஞ்சம் லேட்டாகுதுன்னு நினைக்கிறேன். ஒரு வேளை ரசிகர்களுக்கு புடிச்சது எதுவும் இல்லையோ என்னவோ? அதுக்குதான் அண்ணன் அப்துல்லா போட்டிருக்காரே.!)

நன்றி முரளிகுமார்.!
நன்றி அம்மிணி.!(ரசித்துச்சிரித்தேன்)
நன்றி நாஞ்சில்.! (ரகசியத்தை வெளிய சொல்லப்புடாது)

நன்றி தமிழ்.!
நன்றி நர்சிம்.!
நன்றி அப்துல்.! (நீங்க பதிவு போடுறீங்கன்னு தெரியாது. ஆபிஸ்ல பிளாகர் தொறக்கமுடியாது, அதான் லிங்க் இல்ல)

நன்றி மகேஷ்.!
நன்றி மேவீ.! (சீக்கிரம் போட்டுறலாம்)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தென்றல்.! (ஹிஹி..)
நன்றி கோவிஜி.! (ஹிஹி..)
நன்றி குசும்பன்.! (ஹிஹி..)

பரிசல்காரன் said...

//எம்.எம்.அப்துல்லா said...

சபாஷ். நான் பரிசலுக்கு முதல் எதிர்பதிவு போட்டு உம்மை முந்தினாலும் விஷயத்தோடு எழுதுவதில் நீர் ஜெயித்துவிட்டீர்//

Gr8!

i agree!

அமிர்தவர்ஷினி அம்மா said...

வீட்டுக்கு வந்த நண்பர்களுடன் வெளியே கெத்தாக கிளம்பும் போது அவர்களுக்குத் தெரியாமல் 'போனா.. தொலைச்சுப்புடுவேன்' என்று மிரட்டும் முகபாவம் //

சத்தம் போட்டு சிரிக்க வெச்சுடுச்சு...
பத்தில் வரும் இந்த 09.

நட்புடன் ஜமால் said...

ஆஹா இப்படி பத்து பத்தா போடும்பதிவர்கள் கைக்கு பத்து போடும் நிலை வராமல் இருக்க வை ஆண்டவா!!!]ஹா ஹா ஹா ...

அறிவிலி said...

//கடும் சண்டைக்குப் பின்வரும் இரவு உணவின் போது சுவற்றைப் பார்த்தவாறே நீ கேட்கும் 'மிளகாப்பொடி போதுமா? சட்னி அரைக்கணுமா?' மிளகாய் வார்த்தைகள்.//

கோவத்துல கூட ஆப்ஷன் குடுக்கறாங்களே.ஹ்ம்ம்ம்ம்..
ரொம்ப நல்லவங்களா இருப்பாங்க போல.

சென்ஷி said...

செம்ம கலக்கல் 10 ஆதி!

ரொம்ப ரசித்து படித்தேன் :)

பிரியமுடன்.........வசந்த் said...

//
09. வீட்டுக்கு வந்த நண்பர்களுடன் வெளியே கெத்தாக கிளம்பும் போது அவர்களுக்குத் தெரியாமல் 'போனா.. தொலைச்சுப்புடுவேன்' என்று மிரட்டும் முகபாவம். //

இது மேட்டர்..........

அ.மு.செய்யது said...

எதிர்பதிவாருந்தாலும் உங்களோட அக்மார்க் டிரெண்ட் அசத்தல் ஆதியண்ணே !!!

கொஞ்சம் லேட்டா எழுதினாலும் லேட்டஸ்டா எழுதிட்டேள் !!!

நாடோடி இலக்கியன் said...

அசத்தல் ஆதி,

//பட்டுச்சேலை வாங்கப்போனாலும், பிளாஸ்டிக் குடம் வாங்கப்போனாலும் கடைக்காரர்களை ஏற்றத்தாழ்வு பார்க்காமல் நீ செய்யும் ஒரே மாதிரியான டார்ச்சர்.//

கலக்கல்.

10,09,07,04,01.
அழகான கவிதை தருணங்கள்.

வாழ்க்கயை வாழத் தெரிஞ்ச ஆளுய்யா நீங்க.

கார்க்கி said...

//ஆனா அந்த விஜய் பத்துக்கு லின்க் தட்டுனா கார்க்கி கடையில அந்த மாதிரி ஒரு மேட்டரே இல்ல. கார்க்கி நம்ப வெச்சு கழுத்தறுத்துட்டாரா..//

நம்பி வந்தா நம்மளையே கொடுப்போண்ணா.. கொஞ்சம் லேட்டாயிடுச்சு..

சித்து said...

நன்னா இருக்கு, ரொம்ப ரசிச்சு எழுதிஇருக்கீங்க போல!!!!!!!

'இனியவன்' என். உலகநாதன் said...

நல்லா இருக்கு ஆதி

ராஜா | KVR said...

பரிசலின் பதிவில் சொன்னது தான் இங்கேயும். தலைப்பு பொதுவானது, ஆனா மேட்டர் என்னமோ மேடமை பத்தினது!

Cable Sankar said...

கண் மை மேட்டர்..
'திட்டக்கூடாது.. திட்டமாட்டீங்கன்னா ஒண்ணு சொல்றேன்..' என்றபடியே சிரிக்கும் சிரிப்பு.மேட்டர்
ஸ்கேல் வைத்து அளந்து மடித்ததைப்போன்ற படுகச்சிதமான உன் முந்தானை மடிப்புகள்


ஸோ.... க்யூட் ஆதி..

Karthik said...

நல்லா இருக்கு. ஆனால் இது கணவர்கள் ரசிக்கும் மனைவியின் பத்து மாதிரி இருக்குங்ணா! :)

T.V.Radhakrishnan said...

:-))

எவனோ ஒருவன் said...

நல்லாருக்கு.

இராம்/Raam said...

கலக்கல்... :)

பீர் | Peer said...

"ஆண்கள் ரசிக்கும் பெண்களின் 10"

என்னைக்கேட்டால் இன்னும் பல பத்துக்கள் தேறும்...

jothi said...

அழகு

ஆ.முத்துராமலிங்கம் said...

ரசிக்க வைக்கின்றது பிடித்த விசயங்கள்

ஊர்சுற்றி said...

எல்லாமே சரி.

ஆனா, திருமணமானவரின் நிலையிலிருந்தே யோசித்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன். :)

யூத்ஃபுல்லா இதையே யாராவது கன்டினூ பண்ணுங்களேன்.

காதலில் விழுந்தும் விழாமல் சைட் அடித்துக் கொண்டிருப்பவராக இருந்தால் நலம்.

செல்வேந்திரன் said...

பட்டுச்சேலை வாங்கப்போனாலும், பிளாஸ்டிக் குடம் வாங்கப்போனாலும் கடைக்காரர்களை ஏற்றத்தாழ்வு பார்க்காமல் நீ செய்யும் ஒரே மாதிரியான டார்ச்சர்.

// சூஊஊப்பர்!

Anonymous said...

நீங்களா இப்படி எதாவது கற்பனை பண்ணி சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான் :)))

புன்னகை said...

கண்மை, புடவை மடிப்புகள், மிளகாய்ப் பொடி விஷயங்கள் ரசித்தேன்! பதிவு நல்லா வந்திருக்கு, மற்ற பத்துகளை விடவும் கூட :-)

ஸ்ரீமதி said...

Super anna.. Enakku romba pidichirukku indha pathivu.. :))

அத்திரி said...

அண்ணே பழைய பார்முக்கு திரும்பிட்டீங்களே..........வருக..................

கலக்கல்

அத்திரி said...

// அலுவலகத்திலிருந்து வந்ததும் வராததுமாய் அருகே வந்து உரசிக்கொண்டு வழிந்துகொண்டு 'திட்டக்கூடாது.. திட்டமாட்டீங்கன்னா ஒண்ணு சொல்றேன்..' என்றபடியே சிரிக்கும் சிரிப்பு. //

ம்ம்ம்ம்ம்ம்ம்...................

vipoosh said...

இது பொண்டாட்டி பத்து....

மங்களூர் சிவா said...

வாழ்க வளமுடன்!

10ம் சூப்பர்.

Vinitha said...

ரொம்ப நல்லா இருக்கு!

Vinitha said...

இந்த கருப்பு பேக் க்ரவுண்ட் சுத்த கொடுமைங்க. ப்ளீஸ் மாத்துங்க!

SanjaiGandhi said...

ஏனுங்கணா. பொதுவா பெண்கள்னு தலிப்பு வச்சிட்டு ரமாக்கா பத்தி மட்டும் எழுதினா எப்புடிங்க்ணா? அப்போ கல்யாணம் ஆகாதவங்க எல்லாம் பெண்கள் கிட்ட ரசிக்க ஒன்னியும் இல்லீங்க்னு சொல்ல வரீங்களாங்க்ணா.. என் கிட்ட கேட்டா 100 மேட்டர் எடுத்து விடுவேங்க்ணா..:)

மங்களூர் சிவா said...

/
SanjaiGandhi said...

அப்போ கல்யாணம் ஆகாதவங்க எல்லாம் பெண்கள் கிட்ட ரசிக்க ஒன்னியும் இல்லீங்க்னு சொல்ல வரீங்களாங்க்ணா.. என் கிட்ட கேட்டா 100 மேட்டர் எடுத்து விடுவேங்க்ணா..:)
/

ஹி ஹி அதெல்லாம் பேத்தல்னு கல்யாணம் ஆனதும் தெளிஞ்சிடுவ மாமா
:))))

மணிகண்டன் said...

***
ஹி ஹி அதெல்லாம் பேத்தல்னு கல்யாணம் ஆனதும் தெளிஞ்சிடுவ மாமா
***

:)- neengalae sirppaanum poda koodaathu siva.

me the 50th.

மங்களூர் சிவா said...

/
மணிகண்டன் said...

:)- neengalae sirppaanum poda koodaathu siva.
/

அது சஞ்சைய நெனைச்சப்ப வந்த சிரிப்பு கமெண்ட்டுக்கு இல்ல!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி பரிசல்.!
நன்றி அமித்து.!
நன்றி ஜமால்.!
நன்றி அறிவிலி.!
நன்றி சென்ஷி.!
நன்றி வசந்த்.!
நன்றி செய்யது.!
நன்றி இலக்கியன்.!
நன்றி கார்க்கி.!
நன்றி சித்து.!
நன்றி இனியவன்.!
நன்றி ராஜா.!
நன்றி கேபிள்.!
நன்றி கார்த்திக்.!
நன்றி டிவிஆர்.!
நன்றி எவனோஒருவன்.!
நன்றி இராம்.!
நன்றி பீர்.!
நன்றி ஜோதி.!
நன்றி முத்துராமலிங்கம்.!
நன்றி ஊர்சுற்றி.!
நன்றி செல்வா.!
நன்றி விஜி.!
நன்றி புன்னகை.!
நன்றி ஸ்ரீமதி.!
நன்றி அத்திரி.!
நன்றி விபூஷ்.!
நன்றி சிவா.!
நன்றி வினிதா.!
நன்றி சஞ்சய்.!
நன்றி மணிகண்டன்.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

தலைப்பை சரியாக உள்வாங்கிக்காமல் ஏதோ ஃபுளோவில் எழுதிவிட்டேன். பலரும் சொன்னது போல இது கணவர்கள் மனைவியரிடம் ரசிக்கும் பத்தாகவே அமைந்துவிட்டது என்பதை நானும் மறுவாசிப்பில் கண்டு பிடித்துவிட்டாலும் சரி ஒரு எதிர்பதிவுக்கான வாய்ப்பை ஏன் விடணும் என்று அப்படியே விட்டுவிட்டேன்.

கண்டுபிடித்து சொல்லியவர்களிடம் சரி போகட்டும் என விட்டுவிடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.. ஹிஹி..