Friday, July 3, 2009

புலன்களின் திசை

கண்ணன் கதைகள் என்று பில்ட் அப் கொடுத்து ரொம்ப நாளாகிறது. மேலும் தங்கமணி கதைகள், டெக்னிகல் கதைகள் வேறு எழுதி ரொம்ப நாட்களாகிறது. நேரமின்மையால் எதையுமே எழுதமுடியவில்லை. அதனால்தான் விகடன் கதை, பாவனா, மீள்பதிவு என ஒப்பேற்றிக்கொண்டிருக்கிறேன். கிடைக்கும் கொஞ்ச நேரத்திலும் நண்பர்களின் பதிவைப் படிக்கத்தான் முடிகிறது. அலுவலக மற்றும் வீடு மாற்றம் அவ்வளவு எளிதாக முடிந்தபாடில்லை. இதே நேரமின்மை பிரச்சினை அப்துல்லா, பரிசலுக்கும் வந்ததோ என்னவோ அவர்களின் படைப்புகளையும் காணமுடியவில்லை. வெண்பூவைப்பற்றி பேச வேண்டியதில்லை. வழக்கம் போல வேலன், கார்க்கி, அனுஜன்யா, கேபிள் சிறப்பாக‌ இயங்கிவருகிறார்கள். புதிய உற்சாகமாய் நர்சிம் மட்டும் ஃபுல் பார்மில் வெளுத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கமுடிகிறது. நர்சிம்மைப்போலவே பிறரும் ஃபுல் பார்மில் வெளுத்துக்கட்டி அடுத்த இன்னிங்ஸைத் துவக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது. அது நடக்கும். அதற்காக நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.!

விரைவில் அதிரடியாக சந்திப்போம்.. இப்போது வந்த உங்களை வெறுங்கையோடு எப்படி அனுப்புவது? அதற்காக..
***********************************************************************

புலன்களின் திசை

***

என்னை யாராவது
நீ அழகாக இருக்கிறாய் என்று சொல்கையில்
வியப்பேன்
ஒரு கைக்குட்டையைப்போல‌
உன் அழகை ஒற்றியெடுப்பதற்கே
இத்தனைப்பாராட்டா.?

**********

உன் பின்புற
எல்லைகளை மறைத்து அலைபாயும்
உன் கூந்தல்
சமயங்களில்
என் பார்வையின் எல்லைகளையும்
தாண்டி மிதக்கிறது

**********

சுழலும் காந்த ஊசிகளுக்கான‌
வடக்கைப்போலவே
என் புலன்களுக்கான திசையாக‌ நீ இருக்கிறாய்

**********

சில நேரங்களில்
காற்றிலே மிதக்கும்
இறகாகிவிடுகிறேன்
ஊதி விளையாடுபவள்.. நீ.!

.

33 comments:

ஜானி வாக்கர் said...

கவிதை நல்லாவே இருக்கு. ஏதோ ஒண்ணும் இல்லாததுக்கு இது ஓகே

//சுழலும் காந்த ஊசிகளுக்கான‌
வடக்கைப்போலவே
என் புலன்களுக்கான திசையாக‌ நீ இருக்கிறாய் //

ரசிக்கும்படி இருந்தது.

மீண்டும் ஃபுல் ஃபார்மில் ஆதியை எதிர்நோக்கி நிற்கும் அபலை ஆதி ரசிகன்.

லவ்டேல் மேடி said...

// அதனால்தான் விகடன் கதை, பாவனா, மீள்பதிவு என ஒப்பேற்றிக்கொண்டிருக்கிறேன். //


ஒய் ப்லட்..... !! மீ தி செம் ப்லட் ....!! நானும் கதை கிடைக்காமல்.... ஹை-கூ கவிதையா எழுதி தள்ள வேண்டியதா போச்சு .....!!!!

// உன் பின்புற
எல்லைகளை மறைத்து அலைபாயும்
உன் கூந்தல்
சமயங்களில்
என் பார்வையின் எல்லைகளையும்
தாண்டி மிதக்கிறது ///


இந்த எடம் நெம்ப சூப்பருங்கோவ்....!!!! அருமை ...... வாழ்த்துக்கள்....!!!!!

இராகவன் நைஜிரியா said...

// அலுவலக மற்றும் வீடு மாற்றம் அவ்வளவு எளிதாக முடிந்தபாடில்லை. //

அண்ணே இன்னும் முடியலைங்களா...

Cable Sankar said...

செட் ஆயிட்டு வாங்க்.. ஆதி

"அகநாழிகை" said...

ஆதி,
சீக்கிரம் செட்டிலாகுங்க.

கவிதையில் எனக்குப் பிடித்தது.

//என் புலன்களுக்கான திசையாக‌ நீ இருக்கிறாய் //

இந்த வரிகள் அருமை.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

ஆ.முத்துராமலிங்கம் said...

கவிதைகள் ரசிக்கும் படி...!

தராசு said...

சரி, சரி,

ஒத்துக்கறோம். சீக்கிரமா ஆணியெல்லாம் புடுங்கிட்டு வந்து சேருங்க.

அப்புறமா,

//சில நேரங்களில் காற்றிலே மிதக்கும் இறகாகிவிடுகிறேன் ஊதி விளையாடுபவள்.. நீ.! //

ஜூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

கார்க்கி said...

கடைசி கவிதை..

வாவ்...

அராஜகம் ஆதி..

வெங்கிராஜா said...

//என் புலன்களுக்கான திசை//
பின்னிட்டீங்க... தபூ சங்கரின் புத்தக தலைப்பு மாதிரி இருக்கு!

பரிசல்காரன் said...

ஊதித்தளுபவள் நீ’

அங்க இருக்கீங்க ஆதி நீங்க!

சபாஷு!!

அ.மு.செய்யது said...

கர்ச்சீப் கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துதுங்க..

நம்ம ஆளுங்களும் 20 20ல தோத்த இந்திய அணி மாதிரி அவுட் ஆப் பாரம்.

தே வில் க‌ம் பேக் ஸ்ட்ராங்க்...என்று டோனி மாதிரி ந‌ம்புவோமாக‌.

நாஞ்சில் நாதம் said...

\\இப்போது வந்த உங்களை வெறுங்கையோடு எப்படி அனுப்புவது? அதற்காக.. //

ரெம்ப நல்லவருய்யா இவரு.

\\ஊதி விளையாடுபவள்.. நீ.! //

உயரமா பறக்கிறீங்க போல

Mahesh said...

தலைப்பே வெகு வசீகரம் !!!

Anonymous said...

எழுத முடியலன்னு சொல்லறதுக்கு என்னா பில்ட் அப்பு...

kavithai :இதுகூட பழைய டைரியில் இருந்து எடுத்து போட்டதுதானே..

நர்சிம் said...

// பரிசல்காரன் said...
ஊதித்தளுபவள் நீ’

அங்க இருக்கீங்க ஆதி நீங்க!

சபாஷு!!
//

அப்புறம் என்னங்க..கலக்கல்

Anonymous said...

நல்லா இருக்கு ஆதி.

அப்துல்லாவுக்கு வேலைப் பளு.

பரிசலுக்கு இறக்கிவைக்க முடியாத பளு ஒன்றைப் பாவ மூட்டையாக்ச் சுமக்கிறார். அந்த வேண்டப்பட்ட விரோதியின் செயல்கள் அவரைக் காயபபடுத்திக் கொண்டே இருக்கிறது.

அடுத்த வாரத்தில் அதிரடியாக இறங்கவிருக்கிறார்; புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன்.

வால்பையன் said...

கவித கவித!

நர்சிம் said...

// புதிய உற்சாகமாய் நர்சிம் மட்டும் ஃபுல் பார்மில் வெளுத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கமுடிகிறது. நர்சிம்மைப்போலவே பிறரும் ஃபுல் பார்மில் வெளுத்துக்கட்டி அடுத்த இன்னிங்ஸைத் துவக்க வேண்டும்//

நல்ல்ல்லாத்த்தான போய்க்கிட்டு இருந்துச்சு.. ஏன் இந்தக் கொலவெறி.

வெ.இராதாகிருஷ்ணன் said...

இரசிக்கும்படியான அழகிய கவிதைகள். புலன்கள் செல்லும் திசையை நோக்கிய பயணம் மிகவும் சிறப்பு.

மிகவும் அருமை.

பாலா said...

periyamanusangellam parattittu poitaanga naan ennaththa solrathu

athanala naan solren

"onnum nalla illa "
(summa lululaayi )

புன்னகை said...

கவிதைகள் எல்லாம் அருமை. அதுவும் குறிப்பாக, "என் புலன்களுக்கான திசையாக‌ நீ இருக்கிறாய்" சூப்பரோ சூப்பர்! விசிலடிக்கத் தெரியலயேனு வருந்திய தருணங்களில் இதுவும் ஒன்னு. கவிதைகள் எல்லாம் அநியாயம்பா!!! :-)

அனுஜன்யா said...

கடைசி இரண்டு கவிதையும் ரொம்ப நல்லா இருக்கு. அதனால கலாய்க்க வந்தவன், சல்யூட் செய்துவிட்டு போறேன். ஆனா, ஒரு நாள் நீ மாட்டுவே :)

அனுஜன்யா

" உழவன் " " Uzhavan " said...

தலைப்பிலிருந்தே தெரிகிறது.. அந்தக் கவிதைதான் அனைவரையும் கவர்ந்தது என்று.

அன்புடன் அருணா said...

/சில நேரங்களில் காற்றிலே மிதக்கும் இறகாகிவிடுகிறேன் ஊதி விளையாடுபவள்.. நீ.! /
இது நல்லாருக்கே!

முரளிகண்ணன் said...

கடைசி இரண்டடு கவிதையும் கலக்கல் ஆதி.


முத்தம்னு ஒரு கவிதை பிளாக் வச்சுருந்தீங்களே?

அதில இது வந்திருக்கா?

ஜீவன் said...

///சில நேரங்களில்
காற்றிலே மிதக்கும்
இறகாகிவிடுகிறேன்
ஊதி விளையாடுபவள்.. நீ.! ///

அருமை .......ரசித்தேன்!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

சுழலும் காந்த ஊசிகளுக்கான‌
வடக்கைப்போலவே
என் புலன்களுக்கான திசையாக‌ நீ இருக்கிறாய் //

அருமை...

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஜானி.!

நன்றி லவ்டேல்.! (அலோ.. கதை கிடைக்கலைனு சொல்லலை, நேரமில்லைனு சொன்னேன்)

நன்றி ராகவன்.! (வீடு 95%, அலுவலகம் 30%.. ஆமா அதென்ன சின்னப்பசங்க மாதிரி அண்ணா, நொண்ணா.. யோவ் பெருசு, ஒழுங்கா பேரு சொல்லி கூப்பிடும் சொல்லிப்புட்டேன்)

நன்றி கேபிள்.!

நன்றி வாசுதேவன்.!

நன்றி முத்து.!

நன்றி தராசு.!

நன்றி கார்க்கி.!

நன்றி வெங்கி.!

நன்றி பரிசல்.! (பூச்சாண்டி புடிச்சுட்டு போயிருந்தானே, விட்டுட்டானா பரிசல்.?)

நன்றி செய்யது.! (யெஸ்.!)

நன்றி நாஞ்சில்.!

நன்றி மகேஷ்.! (உங்க பேரை லிஸ்ட்ல விட்டுட்டேன், அடிக்கடி வராம இருந்தா இப்பிடித்தான் ஆகும்.. ஹிஹி..)

நன்றி மயில்.! (கரெக்டா புடிக்கிறது மட்டுமில்லாம போட்டும் வேற குடுத்துருவீங்களே..)

நன்றி நர்சிம்.! (இப்பவும் நல்லாத்தானே போய்க்கிட்டிருக்குது)

நன்றி வேலன்.! (அதாரு வேண்டப்பட்ட எதிரி? நா அங்க வரவா.?)

நன்றி வால்.!

நன்றி ராதாகிருஷ்ணன்.!

நன்றி பாலா.!

நன்றி புன்னகை.!

நன்றி அனுஜன்யா.! (ஏன் இந்தக் கொலவெறி?)

நன்றி உழவன்.!

நன்றி அருணா.!

நன்றி முரளி.! (அந்தக்கடையை மூடிரலாமான்னு யோசனை பண்ணிக்கிட்டிருக்கேன் முரளி. பிற விஷயங்கள் எழுத நேரமில்லாத இது போன்ற சமயங்களில் கவிதைகளையும் இங்கேயே போட்டுவிடலாமான்னு பார்க்கிறேன். ஒரு கடையை ஒழுங்கா பார்த்தாலே போதும்னு நினைக்கிறேன். என்ன சொல்றீங்க.? என்ன ஒண்ணு.. அனுஜன்யா மாதிரி ஆளுங்க கவிதைகளை படிச்சுட்டு கவுஜன்னாலே காத தூரம் ஓடிவிடுறான்கள் எல்லோரும்.. என்ன பண்றது?)

நன்றி ஜீவன்.!

நன்றி அமித்துஅம்மா.!

மங்களூர் சிவா said...

// உன் பின்புற
எல்லைகளை மறைத்து அலைபாயும்
உன் கூந்தல்
சமயங்களில்
என் பார்வையின் எல்லைகளையும்
தாண்டி மிதக்கிறது ///

wow fantastic!

தமிழ்ப்பறவை said...

கடைசிக்கவிதை சூப்பர்...

T.V.Radhakrishnan said...

கலக்கல்

ராம்.CM said...

சில நேரங்களில்
காற்றிலே மிதக்கும்
இறகாகிவிடுகிறேன்
ஊதி விளையாடுபவள்.. நீ.! ///

அழகு.அருமை.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மங்களூர்.!

நன்றி டிவிஆர்.!

நன்றி தமிழ்பறவை.!

நன்றி ராம்.!