Saturday, July 4, 2009

உன்னுள் இருக்கும் அந்த மிருகம்

முன்னர் இருந்த கூலர்ஸ் அணிந்த ப்ரொஃபைல் போட்டோவை அறிவீர்கள்தானே, கொள்ளை அழகா இருக்குமே அதேதான்.. அதை மாற்றிவிட்டு இப்போதிருக்கும் படத்தை ஒரு பிரபலம் வைக்கச்சொன்னார். ஏனெனில் இப்போதிருக்கும் படத்தில் அதைவிடவும் அழகு கொள்ளைகொள்ளயாக இருக்கிறது என்றார். சரி என்று சொல்லி மாற்றினேன். பின்னர் ஒரு பிரபல வெளிநாட்டு பதிவரிடம் சமீபத்தில் போனில் பேசிக்கொண்டிருந்தபோது,

'முன்னர் இருந்த படம் மாதிரி இல்லைங்க, நல்லாவேயில்ல.. மாற்றுவது மட்டுமில்ல.. சுத்தமா இதை அழிச்சுடுங்க' என்றார்.
'இல்லையே நல்லாருக்குன்னு சொன்னாங்களே..'
'ஊஹூம்.. கண்றாவி'
'ஒருவேளை உங்களுக்குத்தான் சரியா தெரியலையோ, பிக்ஸல் பிரச்சினையா இருக்குமோ?'
'அதெல்லாம் இல்லை, வகிடு எடுத்த ஸ்டைலும், பிங்க் பேக்ரவுண்டும் சகிக்கலை.. மாத்திடுங்க'
'சரி விடுங்க, இருக்கிற‌ அழகுதானே இருக்கும். இருந்துட்டு போகட்டும். ஓயாம மாத்திக்கிட்டிருந்தா நல்லாவாயிருக்கும்?'
'அடப்பாவிகளா, எவ்வளவு சொன்னாலும் அசையவே மாட்டிங்கிறீங்களேய்யா.. இவ்வளவு அழகாவா ஒருத்தர் இருப்பாங்க? ஒரு வயித்தெரிச்சலில்தான் போட்டுப்பாத்தேன்..'
'கிர்ர்ர்ர்ர்..'

இப்படியும் கொலவெறியோடு சுத்தறாங்களேப்பா என நினைத்துக் கொண்டேன். என்னுடன் போனில் பேசும் நண்பர்கள் விளையாடினால் அதை புரிந்துகொள்ளும் அளவு நமக்குப் பத்தாது. ஒரு முறை செல்வா என்னை போனில் கலாய்க்க, அது புரியாமல் ஊள் ஊள்னு கேட்டுக்கிட்டிருந்தேன். அப்புறம் இது ஒரு பேக்குனு நினைச்சுட்டு போனை வெச்சிருப்பாருன்னு நினைக்கிறேன். மேல் சொன்ன கதையில் போட்டுப்பார்த்தவர் வேறு யாருமல்ல.. நம்ம குசும்பன்தான்.

**********

நர்சிம்முடனும், கார்க்கியுடனும் சமீபத்தில் பேசிக்கொண்டிருந்தபோது.. ஒரு வருஷமாக எழுதிக்கொண்டிருக்கிறோமே, ஆரம்பத்துக்கு இப்ப எழுத்து தேறியிருக்கிறதா என்ற டாபிக் வந்தது. அது குறித்து அலசிக்கொண்டிருந்தோம். பழைய, புதிய பதிவுகளை ஒப்பிடும்போது நர்சிம் ஏதோ சொல்ல வந்தார், 'முன்னாடி அப்படி இப்படி எழுதிக்கொண்டிருந்தோம். இப்ப எழுத்தாளராயிட்டோமா? அதனால..'

'எழுத்தாளராயிட்டோமா? எப்போ? சொல்லவேயில்ல..' இது கார்க்கி.

**********

தமிழ்மண புத்தகப் பரிசை வாங்க ஒருவழியாக டிநகர் 'நியூபுக்லேண்ட்' சென்றிருந்தேன். மிகச்சிறிய இடமாயினும் நேர்த்தியாக, ஆர்வம் ஏற்படுத்துவதாய் இருந்தது. ஏற்கனவே படிக்க வேண்டிய வரிசையில் நிறைய புத்தகங்கள் இருப்பினும், இதுபோல புத்தகக்கடைக்கு வந்துவிட்டால் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற ஆவலை அடக்கமுடியவில்லை. படிக்கிறோமோ, இல்லை ஃபிலிம் காண்பிக்கிறோமோ வாங்கி வந்து ஷெல்பில் வைத்துக்கொள்வதில் அப்படி ஒரு ஆசை. பரிசுத்தொகையை விட மேலும் ஒரு மடங்கில் புத்தகங்கள் வாங்கிக்கொண்டு வந்து சேர்ந்தேன்.

**********

அந்த புத்தகங்களில் ஒன்றான விக்கிரமாதித்யன் கவிதைகள் தொகுப்பில் இருந்து..

உன்னுள் இருக்கும் அந்த மிருகம்
உன்னுள்
வாழும்
அந்த மிருகம் எப்படி இருக்கிறது
இரை
போட்டுத்
தூங்கப்பண்ணிவிட்டாயா
சங்கிலியால்
கட்டிப்
போட்டு வைத்திருக்கிறாயா
யாரையும்
கடித்துக்
குதறிவிடாது பார்த்துக்கொள்கிறாயா
வேண்டிய நேரத்தில்
வேண்டியது
செய்து கொடுக்கிறாயா
உன்னையே
விழத்தட்டி
உயிரை வாங்கிவிடும் பார்த்துக்கொள்.

**********

இசையை மட்டுமே உண்டு வாழும் சாதகப்பறவையைப் போல.. தபூசங்கர் காதலை மட்டுமே படைத்து வாழும் கவிஞன். 'வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?' என்ற தலைப்பில் படத்துவக்கவிழா போஸ்டர்களை சிட்டியில் பல இடங்களில் நேற்று காணமுடிந்தது. கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத அளவில் காதலால் நிரம்பியிருக்கும் அவரது ஹீரோவை எப்படி செல்லுலாய்டில் உருவாக்கப்போகிறார் என்று ஆவலாக இருக்கிறது. அந்த ஹீரோ சொதப்பாமல் இருக்கக்கடவதாக.. வாழ்த்துகள் தபூ.!

.

37 comments:

வெ.இராதாகிருஷ்ணன் said...

ம்ம்... நண்பர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் எனச் சிலநேரங்களில் புரிவதில்லைதான்.

உன்னுள் இருக்கும் அந்த மிருகம் மிகவும் அழகாகவே இருக்கும் போலிருக்கிறது.

தபூசங்கர் வெற்றி பெற்றிட நானும் வேண்டுகிறேன்.

அழகிய பதிவு, மிக்க நன்றி.

ச.செந்தில்வேலன் said...

நல்ல பதிவு.. தபுசங்கர் வெற்றியடைய வாழ்த்துகள்

நாடோடி இலக்கியன் said...

"வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்" கொஞ்ச வருடங்களுக்கு முன் எனக்கு இந்த கவிதைகள்தான் தேசியகீதம்.

சிரிக்கிறாய் அழகென்றேன்,
சிவக்கிறாளே என்ன செய்ய..!

தபு சங்கரின் பாதிப்பில் நான் கிறுக்கியது.

விக்கிரமாதித்யன் கவிதை அருமை.

// வகிடு எடுத்த ஸ்டைலும், பிங்க் பேக்ரவுண்டும் //

ஆமாம் ஆதி,இப்போ இருக்கிற போட்டோவைவிட முன்னாடி இருந்ததுதான் நல்லா இருந்தது. ஆனாலும் இப்போ இருக்கிற போட்டோவில் இருப்பது போன்றுதான் அந்த "பாப்பாக்குடி"வீடியோவிலும் இருந்தீர்கள்.

தராசு said...

எனக்கு இப்ப ஒரு மேட்டர் தெரிஞ்சாகணும்,

அந்த போட்டோவுல இருக்கறது யாரு, உன்னுள் இருக்கும் மிருகமா, அல்லது நீயா?

ஜீவன் said...

உண்மைய சொல்லனும்னா முன்னாடி இருந்த படத்துலயும் சரி,இப்போ இருக்குற படத்துலயும் சரி நேரில பார்க்குறப்போ இருக்குற ஒரு லுக் இல்ல!!

பாலா said...

vikkiramathiththyan kavithai top

நர்சிம் said...

நீயுமாய்யா?ரைட்டு..

Mahesh said...

அப்பாடா... புத்தகங்கள் வாங்கியாச்சா?

அதுசரி.... உங்களைக் கூடவா குசும்பன் கலாய்ச்சுட்டாரு??

ஜானி வாக்கர் said...
This comment has been removed by the author.
ஜானி வாக்கர் said...

போட்டோ எப்படி இருந்தா என்ன, அழக இருக்கறவங்க எல்லோரும் நல்ல வங்களா என்ன ?? ஹெலோ உங்கள சொல்லல பொதுவா சொன்னேன்.

//'முன்னாடி அப்படி இப்படி எழுதிக்கொண்டிருந்தோம். இப்ப எழுத்தாளராயிட்டோமா? அதனால..' //

சரியா தான் சொல்லிருக்காரு

தாரணி பிரியா said...

இது ஒரு இருபது வருசம் முன்ன எடுத்த படம்தானே. சின்ன வயசுல எல்லாரும் அழகாதான் இருப்பாங்க :)

டக்ளஸ்....... said...

\\'ஊஹூம்.. கண்றாவி' \\
சட்டில இருந்தாத்தான அகப்பையில வரும்..!
என்ன சரிதான அங்கிள்..?

ரமேஷ் வைத்யா said...

பழைய ப்ரொஃபைல் போட்டோவைவிட இப்போ ப்ரொஃபல்ல எடுக்கப்பட்டிருக்குற இந்த போட்டோதான் அழகு. (ஏன்னா, லைட்டிங் சரியில்லாததால முகம் சரியாத் தெரியலை. :‍ ))

☼ வெயிலான் said...

// இவ்வளவு அழகாவா ஒருத்தர் இருப்பாங்க? //

இதெல்லாம் நீங்களா சேத்ததுனு குசும்பன் சொல்றார்.

மணிநரேன் said...

இடுகை நன்று.

கார்க்கி இப்படியெல்லாம் கலாய்கறாரா????

வால்பையன் said...

//'எழுத்தாளராயிட்டோமா? எப்போ? சொல்லவேயில்ல..' இது கார்க்கி. //

எழுத்தாளர் ஆனா கூட பிரச்சனையில்லை, செலிபிரட்டி ஆகி தொலைச்சிராதிங்க,
இருக்குற செலிபிரட்டி தொல்லையே தாங்க முடியல!

இரா.சிவக்குமரன் said...

நீங்க நல்ல புகைப்பட கலைஞர்னு ஊர்ல பேசிக்கறாங்க! அந்த படத்த ,இன்னும் கொஞ்சம் நல்லா அழகா எடுத்திருக்கலாமே?

பீர் | Peer said...

ஆதி, உன்னுள்வாழும் அந்த மிருகம் எப்படி இருக்கிறது?


//வால்பையன் said...
....
எழுத்தாளர் ஆனா கூட பிரச்சனையில்லை, செலிபிரட்டி ஆகி தொலைச்சிராதிங்க,
இருக்குற செலிபிரட்டி தொல்லையே தாங்க முடியல!//

வால், நீங்களும் பிக் செலிபிரட்டியாமே?

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ராதாகிருஷ்ணன்.!

நன்றி செந்தில்வேலன்.!

நன்றி இலக்கியன்.!

நன்றி தராசு.! (ஆங்.. அது உங்க தம்பி.!)

நன்றி ஜீவன்.! (ஏன் இப்படி?)

நன்றி பாலா.!

நன்றி நர்சிம்.!

நன்றி மகேஷ்.!

நன்றி ஜானி.!

நன்றி பிரியா.! (எப்பிடி கேட்டாலும் வயசச்சொல்லிருவேன்னு நினைக்காதீங்க)

நன்றி டக்ளஸ்.!

நன்றி ரமேஷ்.! (நீங்களும் குசும்பன் கூட சேர்ந்தவர்தானா? விளங்கிரும்..)

நன்றி வெயிலான்.!

நன்றி நரேன்.!

நன்றி வால்.! (நீங்களும் அதேபோல தொல்லை பண்றதா கேள்விப்பட்டேனே)

நன்றி சிவக்குமரன்.!

நன்றி பீர்.!

அ.மு.செய்யது said...

//முன்னர் இருந்த கூலர்ஸ் அணிந்த ப்ரொஃபைல் போட்டோவை அறிவீர்கள்தானே,//

அந்த போட்டோ தாங்க யூத் ஆக்காட்டுது உங்கள..

So athaiyae maintain pannunga..

அ.மு.செய்யது said...

கடதொறந்து ரெண்டு நாளாச்சி...

நீங்கள்லாம் வராம அடுத்த சரக்கு ஏத்த முடியல..

மங்களூர் சிவா said...

nice

வெங்கிராஜா said...

கவிதை பிரமாதம்!
போட்டோ ;D

பிரியமுடன்.........வசந்த் said...

தபூ சங்கர் போன்ற காதல் கவிஞர்கள்

வருவது தமிழ் சினிமாக்கு பூஸ்ட் குடுச்ச மாதிரி......

ப்ரொஃபல் போட்டோ நல்லாத்தானிருக்கு...காப்பர்......

T.V.Radhakrishnan said...

//ஜீவன் said...
உண்மைய சொல்லனும்னா முன்னாடி இருந்த படத்துலயும் சரி,இப்போ இருக்குற படத்துலயும் சரி நேரில பார்க்குறப்போ இருக்குற ஒரு லுக் இல்ல!! //

repeateyyy

ஆ.முத்துராமலிங்கம் said...

):

pappu said...

என்னைய மாதிரியே அப்பாவியா இருக்கியேண்ணே!

இந்த போட்டோ நல்லாருக்கு. இதோட ஸ்பெஷாலிட்டியே உங்க முகத்த மறைச்சிருக்குறதுதான். இதுக்கபுறம் பாலோயர்ஸ் கூடிருப்பாங்களே!

ஊர்சுற்றி said...

//வால்பையன்

எழுத்தாளர் ஆனா கூட பிரச்சனையில்லை, செலிபிரட்டி ஆகி தொலைச்சிராதிங்க,
இருக்குற செலிபிரட்டி தொல்லையே தாங்க முடியல!//

நல்ல எழுத்தாளரானா தானாவே செலிபிரட்டி ஆயிடுவாங்களே வால்பையா!

ஆதி, எல்லாமாகவும் வாழ்த்துக்கள்.

Anonymous said...

ம்ம்ம். அந்த போட்டோ மேட்டர் நானும் சொல்லணும் என்று நினைத்தேன். முதலில் இருந்தது நீங்கள் சரி.. ஓகே. ரெண்டாவது போட்டோ - என்ன நெனைத்தனா, நீங்க ஒரு சேஞ்சுக்கு உங்க சித்தப்பா போட்டோ போட்டுஇருகீங்கனு நினைத்தேன்... சரி உங்க ஆசை தொடரட்டும்ம்.. ( என்ன போட்டோ!! ஜூப்பரு)

அப்பறம் ஒரு எழுத்தாளர்னு சொன்ன இந்த மாதிரி போட்டோ வேணுதான்...

தபூ சங்கர்... தயவுசெய்து ஆனந்த தாண்டவம் மாதிரி ஆகிடாம கவனமா பார்த்துக்கங்க ..

வால்பையன் said...

//வால், நீங்களும் பிக் செலிபிரட்டியாமே? //

நான் pig செலிபிரட்டி!

ராஜா | KVR said...

நெஜமாவே முன்னர் இருந்த படம் இப்போ இருக்கிறத விட நல்லா தான் இருந்துச்சு தலைவா (குசும்பரின் குசும்போடு சொல்லலை, மனசுல பட்டதச் சொல்றேன்).

நர்சிம்மின் சில பழைய பதிவுகள் படிக்கும்போது நிறையவே முன்னேறி இருக்கிறார் என்று இரண்டு நாள்கள் முன்னர் தோன்றியது, உங்களுடையதுல பழசு தான் சூப்பர் (பல நேரங்கள்ல சுடுசோற்றை விட பழையசோறு ருசியா இருக்கும், உங்களோடது அந்த வகை)

விக்கிரமாதித்யன் கவிதை நல்லா இருக்கு. கொத்து கொத்தா புத்தகம் வாங்கும் நண்பர்கள் புத்தகத்தின் தலைப்புகளை இங்கேயும் சொன்னிங்கன்னா (சொல்ல முடிகிற தலைப்புகளை மட்டும்) எங்களை மாதிரி எப்போதாவது ஒரு தடவை ஊருக்கு வந்து போறவங்களுக்கு ”என்ன புத்தகம் வாங்கலாம்”ன்னு ஒரு ஐடியா கிடைக்கும்ல்ல.

தமிழ்ப்பறவை said...

ஜீவன் போட்டதுதான் சரியான பிட்டு. உங்களை அடிக்கடி நேர்ல பார்க்க முடியாத தைரியத்துல இப்படிச் சொல்றாரு. அதுவும் சரிதான்னு எனக்குத் தோணுது.
தபூ சங்கர்... பேரைச் சொன்னாலே சிலிர்க்கிறது. இமானின் இசையில் சில பாடல்கள் எழுதி இருக்கிறார். சுந்தர்.சி படங்களில் வந்தது. ‘மொபைலா’ பாடல் மட்டும் நல்ல ஹிட்.இமானின் அதிரடி இசையிலும் இவர் கவிதை கபடி ஆடி இருப்பார்.
இவரின் வெற்றிக்கு வாழ்த்துகிறேன்.
இது ‘மிக்ஸட் ஊறுகாயோட’ லேட்டஸ்ட் வெர்ஷன் தானே...?!ஓ.கே...

நாஞ்சில் நாதம் said...

//நம்ம குசும்பன்தான்\\ நான் இத குசும்பன் தான் சொல்லியிருப்பாரு ண்ணு எதிர்பார்த்தேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அது புரியாமல் ஊள் ஊள்னு கேட்டுக்கிட்டிருந்தேன்

இப்படியெல்லாமா கேப்பாங்க!!! :)-

இதுபோல புத்தகக்கடைக்கு வந்துவிட்டால் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற ஆவலை அடக்கமுடியவில்லை. படிக்கிறோமோ, இல்லை ஃபிலிம் காண்பிக்கிறோமோ வாங்கி வந்து ஷெல்பில் வைத்துக்கொள்வதில் அப்படி ஒரு ஆசை. //

ரொம்ப சரி.

விக்ரமாதித்தனின் கவிதை அருமை, நல்ல பகிர்வு.

ஆதிமூலகிருஷ்ணன் said...

செய்யது, சிவா, வெங்கி, வசந்த், TVR, முத்து, பப்பு, ஊர்சுற்றி, மயில், வால், ராஜா, தமிழ்பறவை, நாஞ்சில், அமித்து அம்மா அனைவருக்கும்..

நன்றி..

அனுஜன்யா said...

ஆதி,

பதிவு செம்ம சுவாரஸ்யம். அப்படியே மெய்ண்டெயின் பண்ணுங்க.

அனுஜன்யா

வாழவந்தான் said...

keep this dp..
இதுல தான் லட்சணமா ஒரு புள்ளைக்கு அப்பா மாதிரி இருக்கீங்க. முனாடி இருந்த படம் ஏதோ கொஞ்சம் வயச கம்மியா காட்டுது ;-)