Tuesday, July 7, 2009

கூரியர் அனுப்பலாம் வாங்க..

ஒரு நண்பருக்காக வாங்கிய புத்தகங்களை இன்று கூரியர் அனுப்பிவிடுவது என நேற்றிரவே முடிவுசெய்து விட்டேன். ஏனெனில் எனது உதவும் வேகம் குறித்து இன்றைய நாட்களில் பலரும் பல்லின் மேல் நாக்கை வைத்து கேள்வி கேட்கும் அளவில் ஆகிவிட்டிருக்கிறது. ஆகவேதான் இந்த அதிரடி ஆபரேஷன். புதிய இடமாகையால் கூரியர் அலுவலகம் எங்கு இருக்கிறது என தெரியவில்லை. கண்டுபிடித்துவிடலாம் அது பிரச்சினை இல்லை. ஆனால் அவர்கள் என்னென்ன பிரச்சினை பண்ணுவார்கள் என்று முன்னனுபவம் இருப்பதால், முதல் நாளே ஒரு கேரி பேகில் புத்தகங்களை அடுக்கி, அதை ஒரு காட்டன் கவரில் போட்டு ஸ்டேப்ள‌ர் அடிக்காம‌ல் (என்ன‌ இருக்கிற‌து உள்ளே பார்க்கணும்.. என்று ஒற்றைக்காலில் நிற்பார்க‌ள்) ரெடி ப‌ண்ணிக்கொண்டேன்.

இப்போது கிள‌ம்பும் போது ம‌ற‌க்காம‌ல் ஸ்டேப்ள‌ரையும் பேன்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன் (சமயங்களில் அங்கு ஸ்டேப்ளர் இருக்கும் பின் இருந்து தொலைக்காது). மேற்கு நோக்கி ஆபீஸுக்கு செல்ல‌ வேண்டும். புது அலுவ‌ல‌க‌த்தில் இன்னும் க‌ர‌ன்ட்கூட‌ வ‌ந்த‌பாடில்லை (உல‌கின் மிக முக்கியமான‌ க‌ர‌ன்ட்டு க‌ம்பெனிக்கே க‌ர‌ன்ட் இல்லை, என்ன.. முர‌ண்பாடு?) ஆக‌வே வேலை ஏதுமில்லாம‌ல் ரெண்டு நாட்க‌ளாக‌ கேன்டீனில் கும்மிதான் அடித்துக்கொண்டிருக்கிறோம். ஆக‌வே ஏன் லேட்டுனு பாஸ் கேட்டாலும் ச‌மாளித்துக்கொள்ள‌லாம் (இப்போதெல்லாம் ஆபிஸிலும் பிளாக் வாசிக்க‌ப‌ப்டுவ‌தால் முன்னைப்போல இல்லாமல் அலுவ‌ல‌க‌ விஷ‌ய‌ங்களில் கொஞ்ச‌ம் டீஸென்டாக(?) எழுத‌ வேண்டியுள்ளது, என்ன பண்றது?) வ‌ண்டியை எதிர் திசையில் விட்டேன்.

போகிறேன்.. போகிறேன்.. தாம்ப‌ர‌மே வ‌ந்துவிட்ட‌து. வழியில் ஒரு கூரிய‌ர் நிறுவ‌னம் கூட‌ இல்லை. தாம்ப‌ர‌த்திலும் இர‌ண்டு இட‌ங்களில் விசாரித்து க‌டைசியில் வித்யா திரைய‌ர‌ங்க‌ம் அருகே மாடியில் ஒளிந்துகொண்டிருந்த‌ 'ப்ரொப‌ஷ‌னலை' க‌ண்டு பிடித்தேன். ஐந்து நிமிடங்கள் காக்கவைத்து ஒருவர் வந்து பார்சலை வாங்கினார். புக்கைப்பார்த்துவிட்டு ஸ்டேப்பிள் ப‌ண்ணி சீட்டு எழுத‌த்துவ‌ங்கும் முன்ன‌ர் அவ‌ரை இன்னொரு ஊழிய‌ர் பிடித்துக்கொண்டார். "ஏண்டா லூசு, டாகுமென்ட் த‌விர‌ வேறெதுவும் புக் ப‌ண்ண‌க்கூடாதுன்னு நேத்துதானே சொன்னேன். என்ன‌ சார் இது புக்கா? நீங்க‌ ப‌ஸ்டான்ட் ப‌க்க‌ம் மெயினாபீஸுக்குதான் போவ‌ணும்" என்றார். "முத‌லிலேயே சொல்ற‌துக்கென்னா?" என்று முன‌கி விட்டு.. லூசுப்ப‌ச‌ங்க‌ என்று ம‌ன‌சுக்குள் திட்டிவிட்டு கிள‌ம்பினேன். ஏன் மெப்ஸ் வ‌ரை அலைந்து ஒரு சேவைக்குறைபாடுள்ள‌ த‌னியார் நிறுவ‌ன‌த்திட‌ம் தொங்க‌ வேண்டும். இவ்வ‌ள‌வு பெரிய ஊரில் போஸ்ட் ஆபீஸா இருக்காது.? அர‌சு சேவையே ப‌ய‌ன் படுத்துவோம் என தேசபக்தி திடீரென தோன்றியது.

போஸ்ட் ஆபீஸ் எங்கே என‌ விசாரித்தேன். மெயின் ரோடிலிருந்து முத‌ல் குறுக்குத்தெ‌ரு என்றார் ஒரு ஆட்டோக்கார‌ர். வந்த ஒரு வாரத்திலேயே மெயின் ரோட் வசந்தபவனில் சண்டை போட்ட அனுபவம் இருந்ததால் லேஸா சந்தேகம் வர மீண்டும் கேட்டேன். 'மெயின் ரோடா? முத‌ல் தெருவா?' ச‌ந்தேக‌மேயில்லாம‌ல் முத‌ல் தெரு என்றார் அவ‌ர். சென்றேன். சென்ற இடம் ச‌ரியாக‌ போஸ்ட் ஆபீஸின் பின்புற‌ம். பில்டிங்குக்கும், காம்ப‌வுன்ட் சுவ‌ருக்கும் ந‌டுவே முன்புற‌ம் போக‌ முடியாத‌ அள‌வில் பிளாக் செய்திருந்தார்க‌ள் புண்ணிய‌வான்க‌ள். எப்ப‌டியாவ‌து பின்புற‌ம் வ‌ழியாக‌வே போய்விட‌லாமா? என‌ நுழைந்த‌வ‌னை செக்யூரிட்டி க‌ழுத்தைப்பிடித்தார். வேறு வழியில்லாமல் ஆட்டோக்காரரை மனதில் வாழ்த்தியவாறே கிரிவலம் சுற்றுவ‌து போல‌ ப‌ஜார் சுற்றிக்கொண்டு முன்ப‌க்க‌ம் வ‌ந்தேன்.

ந‌ம்புங்க‌ள் 'கியூ' இன்னும் ஒழிந்துவிட‌வில்லை. க‌வுன்ட‌ர்க‌ள் முன்பு சாரை சாரையாய் ம‌க்க‌ள். ச‌ரியாக‌ பார்ச‌ல் க‌வுண்ட‌ரைத்தேர்ந்து அந்த‌ கியூவில் நின்றேன். 20 நிமிடம் கழித்து என் முறை வ‌ந்த‌ போது பார்ச‌லைத் த‌ந்தேன். முன் ஜாக்கிர‌தையாக‌ பின்க‌ளை அக‌ற்றியிருந்தேன்.

"பின் போட்டு ஒட்டிக்கொடுங்க‌ சார், ஏன் சார் டைம் வேஸ்ட் ப‌ண்றீங்க‌"

"இல்ல‌ நீங்க‌ செக் ப‌ண்ணுவீங்க‌ளேன்னு.."

"அதெல்லாம் தெரியும் சார் எங்க‌ளுக்கு" க‌டிந்தார்.

ஒட்டுவ‌த‌ற்கு ப‌சை தேடினேன். 1988ல் நான் 8ம் வ‌குப்பு ப‌டித்த‌ போது எங்க‌ள் ஊர் போஸ்ட் ஆபீஸில் பார்த்த‌ அதே டெக்னால‌ஜி ப‌சை. ம்ஹூம் கை பூராவும் போஸ்ட‌ர் ஒட்டுவ‌து ஆக்கிக்கொண்டு முய‌ற்சித்த‌ப்பிற‌கும் அது ஒட்ட‌வில்லை. பின் போட்டு ஒப்பேற்றிய‌ பிற‌கு மீண்டும் கியூ. இந்த‌ முறை,

"ஏன் சார், இவ்வ‌ள‌வு வெயிட் இருக்குது க‌வ‌ர் கிழிஞ்சு போயிராது, அப்புற‌ம் புக்கக் காணோம்னு எங்க‌ உயிர‌ வாங்குவீங்க‌.. போய் டேப் போட்டு கொண்டுவாங்க சார்‌"

'அட‌ப்பாவி, நீ சொல்ற‌து த‌ப்பில்ல‌.. ஆனா முத‌ல்லேயே சொல்லியிருக்க‌ப்ப‌டாதா?' என்று ம‌ன‌திலேயே திட்டிக்கொண்டு மீண்டும் வெளியே வ‌ந்து ஸ்டேஷ‌னரி தேடினேன். கிடைக்க‌ணுமே? மூன்று கடைகள் விசாரித்து பின் நான்காவ‌து க‌டையில் செலோ டேப் கிடைத்த‌து. அங்கேயே வைத்து விளிம்புகளை ஒட்ட‌த்துவ‌ங்கினேன். க‌ட் ப‌ண்ண‌முடியாம‌ல் பேனாவை வைத்து குத்தி கிழித்து உருட்டி பார்சலை ப‌டுத்திக்கொண்டிருந்தேன். பார்த்துக்கொண்டே இருந்த க‌டைக்கார‌ரோ க‌டைசி வ‌ரை க‌த்த‌ரி கொடுத்து உத‌வ‌வேயில்லை. ந‌ல்ல‌ ம‌ன‌சுடா உன‌க்கு, வியாபார‌ம் விள‌ங்கிடும் என‌ எண்ணிக்கொண்டே மீண்டும் போஸ்ட் ஆபீஸ் வ‌ந்தேன். இந்த முறை ச‌க்ஸஸ்.

அடுத்த‌முறை கூரிய‌ரோ, போஸ்ட் ஆபீஸோ வ‌ந்தால் என்னென்ன‌ கொண்டு வ‌ர‌வேண்டும் என‌ குறிப்பெடுத்துக்கொண்டு ஆபீஸ் வ‌ந்து சேர்ந்த‌ போது கேண்டீனில் ல‌ஞ்ச் டைம் துவ‌ங்கியிருந்த‌து. ந‌ண்ப‌ர்க‌ளோடு நானும் போய் அம‌ர‌ 'கேகே' கேட்டார்,

"பாஸ் காலையில‌யிருந்தே உங்க‌ளை தேடிக்கொண்டிருந்தாரே.. எங்க‌ போனீங்க‌? அவ‌ர் கிட்ட‌ சொல்ல‌லியா?"


.

47 comments:

ஜோசப் பால்ராஜ் said...

நான் கூட படிக்க வேண்டிய புத்தகங்கள் ஒரு பெரிய லிஸ்ட் வைச்சிருக்கேன். லிஸ்ட் அனுப்புறேன். நீங்க தான் வாங்கி அனுப்ப சரியா ஆளுன்னு குசும்பன் சொன்னாரு. அனுப்பிடுறீங்களா ஆதி அண்ணா?

கார்க்கி said...

//ங்க தான் வாங்கி அனுப்ப சரியா ஆளுன்னு குசும்பன் சொன்னா/

இதுக்கு வாய்ப்பே இல்லை..

அண்ணே.. இப்ப தெரிதா ஏன் தாம்பரம் சிட்டி இல்லைன்னு சொல்ரேன்னு

குசும்பன் said...

//போகிறேன்.. போகிறேன்.. தாம்ப‌ர‌மே வ‌ந்துவிட்ட‌து.//

அண்ணே அப்படியே வடக்கால ஒரு 340கிலோமீட்டர் ஜஸ்ட் வாக்கபுல் டிஸ்டண்ஸ் போய் இருந்தீங்கன்னா எங்க வீட்டுக்கே போய் இருக்கலாம்:)))


(ங்கொயால உனக்கு அலைஞ்சு திரிஞ்சு கூரியர் அனுப்பினால் நெக்கலாடா செய்யுறன்னு கேட்குறீங்களா பாஸ்:))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அதை எதுக்கு இவ்ளோ கஷ்டப்பட்டு அவனுக்கு கூரியர்ல அனுப்பணும்..

என்கிட்ட கொடுத்திருந்தாலே போதுமே..

குசும்பன்கிட்ட கொடுக்கிறதும் ஒண்ணு.. என்கிட்ட கொடுக்குறதும் ஒண்ணுதான..?

காசு வேஸ்ட்டு.. டைம் வேஸ்ட்டு.. அலைச்சல் வேஸ்ட்டு..

அடுத்த தடவையாச்சும் குசும்பன் மேட்டரை என்கிட்ட விட்ருங்கப்பா..!

ஜானி வாக்கர் said...

ஒரு கூரியர் / தபால் அனுப்ப அரை நாளா ? அட கடவுளே !

// வந்த ஒரு வாரத்திலேயே மெயின் ரோட் வசந்தபவனில் சண்டை போட்ட அனுபவம் இருந்ததால் //

எங்க போனாலும் இதே பொழப்பா ??

கும்க்கி said...

அடப்பாவிகளா...

கூரியர் அனுப்புவதுக்கே இத்தன கூத்தா?

ஆமூகி நாங்கள்லாம் ஆத்துல தொலைஞ்சு போன பாடியையே (அட அதில்லீங்க) தேடி கண்டு பிடிச்சு பார்சல் கட்டி வாங்கிட்டு வந்தம் தோஸ்த்.

வெண்பூ said...

இவ்வளவு பெரிய சமூக சேவகரா நீங்க ஆதி??? எனக்கு கூட இந்த வாரக் கடைசில சினிமா பாக்க ரெண்டு டிக்கெட் புக் பண்ணித்தரணும், பண்ண முடியுமா??? :)))

T.V.Radhakrishnan said...

//ஒரு நண்பருக்காக வாங்கிய புத்தகங்களை இன்று கூரியர் அனுப்பிவிடுவது என நேற்றிரவே முடிவுசெய்து விட்டேன்//
ஆகா..எவ்வளவு முக்கியமான விஷயம்...நீங்களே முடிவெடுத்தீங்களா? யாரையாவது கலந்து ஆலோசித்து எடுத்த முடிவா?

அதிஷா said...

ஹிஹி ஐ ஜாலி.

MayVee said...

tambaram vanthu irukkinga... enakku phone panni irunthingana naan vanthu unga kitta oru autograph vangi iruppene????

appadiye oru 500 rupaai kadan vangi iruppen....

Mahesh said...

கூரியர் அனுப்பலாம் வாங்க.. டரியல் ஆகலாம் வாங்க....

அடேயப்பா... ஒரு வழியா அனுப்பிச்சீங்களா??

லவ்டேல் மேடி said...

// "பாஸ் காலையில‌யிருந்தே உங்க‌ளை தேடிக்கொண்டிருந்தாரே.. எங்க‌ போனீங்க‌? அவ‌ர் கிட்ட‌ சொல்ல‌லியா?" //


எல்லாம் விதி தலைவரே....!!!


செல்லோ டேப் மீதி இருக்கா தலைவரே.......?
நா ஒரு போஸ்ட் அனுப்பனும்.....!!!!

வால்பையன் said...

அவசரமில்லை!
நானெல்லாம் ஒரு மாதம் அவரது பொறுமையை சோதித்திருக்கிறேன்!

rathnapeters said...
This comment has been removed by the author.
$anjaiGandh! said...

:))

Anonymous said...

சென்னையில் ஒரு ஆபீஸ் போட்டு உன்னைத்தான் உட்கார வைக்கணும்னு நெனைச்சேன். நல்ல வேளை தப்பிச்சேன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஜோஸப்.! (ரொம்ப நாள் கழிச்சு வர்றீங்க..)
நன்றி கார்க்கி.! (ரொம்ப நாள் கழிச்சு சீக்கிரம் வர்றீங்க..)
நன்றி குசும்பன்.! (கவுக்கறதுக்குன்னே வர்றீங்க..)
நன்றி உண்மையார்.! (ரொம்ப ஆசையோடு வந்திருக்கீங்க..)
நன்றி ஜானி.! (கொஞ்ச நாள்தான்னாலும் ஒழுங்கா வர்றீங்க..)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி கும்க்கி.! (நீங்க யாரு.? உங்ககிட்ட வேகுமா?
)
நன்றி வெண்பூ.! (ஆமாய்யா..வாங்க. என் நெத்தில A to Z னு எழுதியிருக்கேனே கவனிக்கலயா?)

நன்றி டிவிஆர்.! (எதுன்னாலும் தங்கமணிக்கிட்ட டிஸ்கஸ் பண்ணீட்டுதான் முடிவெடுக்கறதேவும்)

நன்றி அதிஷா.! (உன்னைக்கொல பண்ணீனா தேவலையா?)

நன்றி மேவீ, மகேஷ், லவ்டேல், வால், ரத்னா, சஞ்சய், வேலன்.!

கும்க்கி said...

நன்றில வேணும்னே உனா தானா அண்ணனுடைய பின்னூட்டத்தை புறக்கணித்துள்ளதை கண்டித்து கனேஷ் அல்லது மிஸ்ட்டர் NO யாரையாவது வாலண்டியராய் அழைக்கிறேன்.
எப்பூடி..?

Cable Sankar said...

இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு அனுப்பிச்ச குரியர் போய் சேர்ந்திச்சா.? கார்கி சொல்றதை நம்பாதீங்க.. தாம்பரம் சிட்டிதான் ஆனா பார்டர்.. ஹி..ஹி

தமிழ்ப்பறவை said...

ரசித்தேன்...

தமிழ் வெங்கட் said...

நேற்று நானும் கூரியரில் புத்தகம் அனுப்பினேன்...ஆனால் துன்பமில்லை..

cheena (சீனா) said...

ஆகா - கூரியர் அனுப்பறதே ஒரு இடுகையாப் போடலாமா - ஆகா தெரியாமப் போச்செ !

சரி சரி - குசும்பனுக்குப் போய்ச் சேந்துச்சா - கன்பர்மேஷன் வந்துச்சா

நல்ல சேவை - கை வசம் தொழில் இருக்கு அப்ப

நல்வாழ்த்துகள் தாமிரா

தராசு said...

//எனது உதவும் வேகம் குறித்து இன்றைய நாட்களில் பலரும் பல்லின் மேல் நாக்கை வைத்து கேள்வி கேட்கும் அளவில் ஆகிவிட்டிருக்கிறது//

பல் மேல நாக்கை வைத்து பார்த்தேன், ஆனா நாக்கை பல்லு மேல வெச்சுட்டு எப்பிடி கேள்வி கேக்கறது, எக்ஸ்ப்ளென் பிளீஸ்.

நாஞ்சில் நாதம் said...

பார்சல் அனுப்ப அரை நாளா ? கிளிஞ்சுது போ........

\\அண்ணே.. இப்ப தெரிதா ஏன் தாம்பரம் சிட்டி இல்லைன்னு//

ரியல் எஸ்டேட்காரங்களுக்கு தெரியுமா

மங்களூர் சிவா said...

இம்புட்டு கஸ்டமாய்யா கூரியர் அனுப்பறது.

:))))

ஆபீஸ் ரிசப்ஷனிஸ்ட்கிட்ட குடுத்தா பேக் பண்ணி அனுப்பீடுவாங்களே. டெலிவரி சலானும் பத்திரமா வாங்கி வைச்சி குடுப்பாங்க. சமயத்துல நாம காசுகுடுக்கலைனா அவங்களே காசும் போட்டு அனுப்பீட்டு சார் போனவாரம் கூரியர் அனுப்பினதுக்கு 12 ரூ தரணும்னு கேட்டு பொறுமையா வாங்கிப்பாங்க.

தனித்திறமை இருந்தா ஆப்பீஸ் அக்கவுண்ட்லயும் அனுப்பலாம்.

:))))

Anonymous said...

நான் கூட படிக்க வேண்டிய புத்தகங்கள் ஒரு பெரிய லிஸ்ட் வைச்சிருக்கேன். லிஸ்ட் அனுப்புறேன். நீங்க தான் வாங்கி அனுப்ப சரியா ஆளுன்னு குசும்பன் சொன்னாரு. அனுப்பிடுறீங்களா ஆதி அண்ணா?//

repeattuu

அ.மு.செய்யது said...

//ஜோசப் பால்ராஜ் said...
July 7, 2009 6:28 PM நான் கூட படிக்க வேண்டிய புத்தகங்கள் ஒரு பெரிய லிஸ்ட் வைச்சிருக்கேன். லிஸ்ட் அனுப்புறேன். நீங்க தான் வாங்கி அனுப்ப சரியா ஆளுன்னு குசும்பன் சொன்னாரு. அனுப்பிடுறீங்களா ஆதி அண்ணா?
//

அண்ணே எனக்கும் !!!!!!!!!!

நாஞ்சில் நாதம் said...

தல எல்லாரும் புத்தக லிஸ்ட் கொடுக்கிறாங்க. அப்ப எனக்கு ........

எம்.எம்.அப்துல்லா said...

அடுத்தவங்களுக்கு கொரியர் அனுப்புறாராமா கொரியரு!!!
மொதல்ல எங்கிட்ட ஓசி வாங்குன புக்க திருப்பிக்குடுண்ணே

:)

அதிலை said...

என்ன சார் தெரு கோணலா இருக்கா?

பாபு said...

முக்கியமான கரண்ட் கம்பனின்னா A ல ஆரம்பிச்சு A ல முடியுமே அதுவா?

விக்னேஷ்வரி said...

:))))))))))

'இனியவன்' என். உலகநாதன் said...

ஆதி,

உண்மையாகவே எனக்கு சில புத்தகங்கள் மலேசியாவுக்கு கொரியர் பண்ணமுடியுமா?

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)-

அனுஜன்யா said...

ஆதி,

welcome back with a bang. இப்பிடி ஒரு ஆபீசா? எனக்கும் ஒரு வேல வாங்கிக் கொடேன். குசும்பன் படிக்கிற புக்கு. ஸ்டேப்ளர் எல்லாம். போட்டு. ம்ஹ்ம், சரியாப் படல.

அனுஜன்யா

புன்னகை said...

உங்களுக்கும் இப்படி ஒரு அற்புத நிகழ்வா? நானும் கூட ஜூன் மாதம் இதே பிரச்சனைல மாட்டிக் கிட்டேன்! அதை இன்னைக்குப் பதிவா போடலாம்னு நினைச்சுட்டு இருக்கும் போதே, நீங்க முந்திகிட்டு இருக்கீங்க! உங்க பேச்சு கா ஆதி!!! :-(

நர்சிம் said...

//வெண்பூ said...
இவ்வளவு பெரிய சமூக சேவகரா நீங்க ஆதி??? எனக்கு கூட இந்த வாரக் கடைசில சினிமா பாக்க ரெண்டு டிக்கெட் புக் பண்ணித்தரணும், பண்ண முடியுமா??? :)))
//

கலக்கல் கமெண்ட்.. என் கமெண்ட்டா? என்னத்தச் சொல்ல ஆதி.. நமக்கு மட்டும் இப்படி ஆகுதேன்னு நிறையவிசயத்துல யோசிப்பேன்.. இனி நமக்கும் ஆதிக்கும் மட்டுமேன்னு சேர்த்துக்கவேண்டியது தான்.. ஒரு யூ டர்ன் எடுக்கணும்னா கூட நமக்குன்னு பார்த்து 27 கி.மீ தூரத்துல வச்சுருப்பாய்ங்க...

அமுதா கிருஷ்ணா said...

அடுத்த முறை தாம்பரம் போஸ்ட் ஆஃபிஸில் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போங்களேன்!!டமாஸா இருக்கும்!!!

" உழவன் " " Uzhavan " said...

//இந்த முறை ச‌க்ஸஸ்//

யப்பா.. ஒலிம்பிக்ல மெடல் வாங்குன ஒரு பீல் வந்திருக்குமே :-))
அனுபவம் புதுமை மற்றும் இனிமை.

ஆதிமூலகிருஷ்ணன் said...

கும்க்கி said...
July 7, 2009 11:25 PM நன்றில வேணும்னே உனா தானா அண்ணனுடைய பின்னூட்டத்தை புறக்கணித்துள்ளதை கண்டித்து கனேஷ் அல்லது மிஸ்ட்டர் NO யாரையாவது வாலண்டியராய் அழைக்கிறேன்.
எப்பூடி..?
//

நல்லா பாருங்க சார், பதில் போட்டுருக்கேன். அதோட நான் மிஸ் பண்ணியிருந்தாலும் இந்த தண்டனை கொஞ்சம் ஓவராயில்ல.?

வால்பையன் said...

//கனேஷ் அல்லது மிஸ்ட்டர் NO யாரையாவது வாலண்டியராய் அழைக்கிறேன்.//

இது எனக்கு வச்ச பொறியா!?

ஆதிமூலகிருஷ்ணன் said...

கேபிள், பறவை, வெங்கட், சீனா, தராசு (ரொம்ப சிந்திக்கிறீங்க.. பார்த்து.. இருக்கிற நாலு முடியும் கொட்டிறப்போகுது), நாஞ்சில், சிவா (அவ்வ், குடுத்து வெச்சவரு), மயில், செய்யது, அப்துல் (இதென்ன புதுக்கூத்து?), அதிலை (ரசனையான கமெண்ட்), பாபு (ஆமான்னு சொல்லமாட்டேன்), விக்னேஷ்வரி, இனியவன் (எத்தனைப்பேரு இப்படி கிளம்பியிருக்கீங்க.? நிஜம்னா மெயிலுக்கு வாங்க..), அமித்து, அனுஜன் (அலோ.. புது பிளாண்டுல வேல நடக்குது, சரியான பிற்றகு பெண்ட நிமித்திருவாங்க.. வேல வேணுமாம்ல வேல.?), புன்னகை (பரவாயில்ல நீங்களும் போடுங்க), நர்சிம் (புது பேண்டுல ஜிப்பு கிழிஞ்சிருக்குமே), அமுதா (பார்சலுக்கே இந்த பாடு, இதுல பாஸ்போர்ட் வேறயா?? விள்ளங்கிரும்), உழவன்..

அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.!!!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி வால்.!!

வெண்பூ said...

நர்சிம், ஆதிகூட என்னையும் உங்க லிஸ்ட்ல சேத்துக்கலாம்.. இந்த மர்ஃபி லா எனக்கு மட்டும் எப்படி செட் ஆகுதுன்னே விளங்க மாட்டேங்க்குது.. உதாரணமா இந்த சன்டே அன்னிக்கு ராத்திரி 8 மணிக்கு எங்க வீட்ல இருந்து ஃபோன், என்னோட வயசான அத்தை ஒருத்தங்களுக்கு உடம்பு முடியாம இருக்கு, இன்னும் ஒரு மணிநேரத்துல காரியம் ஆகிடும். ஃபோன் பண்ணுறோம், காலையில கிளம்பி வந்துடுன்னு.. சரின்னு ரயில் டிக்கெட் செக் பண்ணினா திங்கக்கிழமை காலைலைக்கு எல்லா ரயிலும் ஃபுல். சரி பரவாயில்லை, அன்ரிசர்வ்ட்லயே காலைல 6.15 கோவையில போயிடலாம்னு தூங்க போயிட்டேன்.

அலார்ம் வெச்சி 4 மணிக்கு எந்திரிச்சி வீட்டுக்கு ஃபோன் பண்ணினா, இன்னும் அப்படியேத்தான் இருக்காங்க. ஆனவுடனே ஃபோன் பண்ணுறேன், இப்பவே கிளம்பாதன்னு சொல்லிட்டாங்க. நம்புங்க, கரெக்டா அவங்க ஃபோன் பண்ணுனது 6.30க்கு. :( அடுத்த ரயில் 11.30க்குதான்.. அதனால பஸ்தான்.

சரின்னு அடிச்சி புடிச்சி கிளம்பி அசோக் பில்லர்ட்ட போய் சேலம் பஸ் பிடிச்சி ஆத்தூர்ல இற‌ங்கி ராசிபுரம் போயிடலாம்னு வீட்ல இருந்து ஆட்டோ புடிச்சா, பாதி வழியில (மொத்தமே 2 கி.மீ தூரம்தான்) ஆட்டோ ப்ரேக் டவுன். அடுத்த ஆட்டோவை புடிச்சி அசோக் பில்லர் போய் நின்னா வர்ற மொஃபசல் பஸ்ல 50% பஸ் திருச்சி பக்கம் போறது, மீதி திருவண்ணாமலை போற ஸ்பெஷல்.. ரொம்ப நேரம் கழிச்சி வந்த ஒரே சேலம் பஸ்ஸும் வேலூர் வழியா போகுற பஸ். ஆத்தூர் போகாது. அப்புறம் மறுபடியும் வெய்ட் பண்ணி பஸ்ல ஏறுனா அவன் ரொம்பதான் மெதுவா போகுறான்.

அதுவாவது பரவாயில்ல, காலையில அவசரத்துல சாப்புடாம பஸ் ஏறிட்டு அவன் வழியில நிறுத்துற இடத்துல சாப்பிட்டுக்கலாம்னா அவன் சாப்பாட்டுக்கு நிறுத்துன இடத்துல உள்ள நுழையுறப்பவே ஒண்ணுக்கு ஸ்மெல்.. பயபுள்ள யூரின் ரூமுக்குள்ளவே கிச்சன வெச்சிருப்பான் போல.. இப்படியே ஒண்ணும் சாப்புடாம வெறும் தண்ணியும் பிஸ்கட்டும் மட்டும் சாப்புட்டுகிட்டு ஊருக்கு போய் சேந்தப்ப சாயங்காலம் மணி 4.30...

என்னவோ உங்களுக்கு மட்டும்தான் அப்படி நடக்குதுன்ற மாதிரி எழுதுனத வன்மையா கண்டிக்கிறேன்.. :)))

செல்வேந்திரன் said...

உம்ம வீட்டுக்கு பொறத்தாலயே ஒரு கட இருக்கு... ஒக்குள்ள புள்ளய வச்சிட்டு ஊரெல்லாம் தேடுன கதையால்லா இருக்கு...

பட்டாம்பூச்சி said...

:)))