Wednesday, July 8, 2009

திரைக்கதை எழுதுவது எப்படி?

ஏற்கனவே இங்கே நாம் பல 'எப்படி?'களை பார்த்துப் படித்து தெளிந்திருக்கிறோம். அதில் குறிப்பிடத்தகுந்தவை 'குறும்படம் எடுப்பது எப்படி?' 'சிறுகதை எழுதுவது எப்படி?' என்பனவாகும். இந்த வரிசையில் 'திரைக்கதை எழுதுவது எப்படி?'யை எழுதச்சொல்லி அனுஜன்யா நம்மைத்தீவிரமாக கேட்டுக்கொண்டதால் அது இப்போது உங்களுக்காக..

முன்குறிப்பு : இது சினிமா திரைக்கதை குறித்தான பாடம‌ல்ல. அதையெல்லாம் இப்படி கட்டணம் வாங்காமல் பொதுவில் சொல்லிகொடுக்க முடியாது. வேண்டுமானால் தனி மெயிலுக்கு அப்ளை பண்ணுங்கள். கேபிள் சங்கரும் நானும் இணைந்து கிளாஸ் எடுக்கலாம் என்று இருக்கிறோம். மேலும் சினிமாவைப்பொறுத்த வரை 'திரைக்கதை எழுதுவது எப்படி?' என்பதைப்போலவே இன்னொரு முக்கியப் பகுதியாக 'திரைக்கதை சொல்வது எப்படி?' என்ற ஒன்றும் இருக்கிறது. இதுவும் கிளாஸில் சொல்லித்தரப்படும். (ஊஹூம்.. அப்துல்லா இதுக்கெல்லாம் அழக்கூடாது.)

அதென்ன திரைக்கதை சொல்வது என்கிறீர்களா? "டைட்டில் பிளாக் கட் பண்ணி ஓப்பன் பண்ணினா.. ஒரு பெரிய மலை.. அதுமேல ஒரு சின்ன குயில்" என்று ஆரம்பித்து மூணு மணி நேர படத்தின் கதையை மூணேமுக்கால் மணி நேரம் சோறு தண்ணியில்லாமல் சொல்லும் தனித்திறன்தான் அது. கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு வாந்தி மயக்கம் வருகிறதா என்பதையெல்லாம் கவனிக்காமல் ஈவு இரக்கமெல்லாம் பார்க்காமல் அடித்து துவம்சம் செய்யவேண்டும். சரி இப்போது அது நமக்குத் தேவையில்லை. நாம் வெறும் 'எழுதுவது எப்படி?' எப்படி என்பதைத்தான் பார்க்கப்போகிறோம். அதுவும் ஆஃப்ட்ரால் சினிமா கூட கிடையாது. குறும்படம்.! போலாமா.?

சுய முன்னேற்பாடுகளை அப்படியே 'சிறுகதை எழுதுவது எப்படி'யில் இருக்கும் வண்ணம் செய்துகொள்ளவும். அது குறித்து எழுதி இங்கே நேரம் வேஸ்ட் செய்யவேண்டாம். இருப்பினும் கூடுதலாக சில ஓவியம் வரைவதற்கான பென்சில்களையும், கூடுதல் பேப்பர்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். திரைக்கதைக்கே நாம் வந்துவிட்டபடியால் முன்னதாகவே கதை ரெடியாக இருக்கிறது என்று அர்த்தமாகிறது. என்ன இன்னும் கதை ரெடியாகவில்லையா? மன்னிக்கவும்.. நீங்கள் ஆட்டைக்கு கிடையாது. சிறுகதைக்கான கதை, குறும்படத்துக்கான கதை போன்றவற்றை எப்படி தயார் செய்வது என்று பலமுறை சொல்லியும் கேட்காமல் வந்தால் என்ன செய்யமுடியும். நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு. நீங்களெல்லாம் கிளாஸை விட்டு வெளியே போய்விடலாம். கதை ரெடியாக இருப்பவர்கள் மட்டுமே மேற்கொண்டு தொடருங்கள். (முட்டை இருந்தால்தானே ஆம்லெட் போடமுடியும்?)
துவங்கும் முன்னர் நீங்கள் ஒரு திரைக்கதை ஆசிரியர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இயக்குனரோ, தயாரிப்பாளரோ அல்ல. என்னதான் குறும்படத்தை நீங்கள்தான் தயாரித்து இயக்கப்போகிறீர்கள் என்றாலும் திரைக்கதையில் அவர்களின் தாக்கம் இருந்தால் சுதந்திரம் போய்விடும். இத்தனை நடிகர்களா? அவ்வளவு பிரியாணிக்கு எங்கே போறது என்ற தயாரிப்பாளர் எண்ணமும், அய்யய்யோ இந்தக் காட்சியில் ஹீரோவை எப்படி குளிக்கவைப்பது என்ற இயக்குனர் எண்ணமும் படைப்பை சிதைக்கச்செய்யும். புரிந்ததா?

ஸ்னாப்சிஸ் (வெண்பூ கவனிக்கவும் ஸ்னாக்ஸஸ் அல்ல) என்றால் என்ன? ஒன்லைன் என்றால் என்ன? அவுட்லைன் என்றால் என்ன? ஸ்கிரிப்ட் என்றால் என்ன? இப்படி நிறைய சந்தேகம் இருக்கிறதா? ரொம்ப டைம் வேஸ்ட் பண்ணாமல் டிக்ஷ்னரியை பார்த்துக்கொள்ளவும். 5 நிமிடம் ஓடக்கூடிய படத்தின் கதையை ஓவியங்கள் சேர்க்காமல் ஏறக்குறைய (கும்ஸாக) 10 பக்கங்கள் எழுதினீர்கள் என்றால் ஓகே. (கடும் எச்சரிக்கை : உண்மைத்தமிழனாரின் திரைக்கதையின் அளவையோ, 'புனிதப்போர்' படத்தையோ பார்த்து அளவு ஒப்பீடு செய்பவர்கள் கிளாஸில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்)

சொன்னது போல 5 நிமிடப்படத்துக்கு 10 பக்கங்கள் எழுதப்படுவது திரைக்கதை எனப்படும் ஸ்கிரிப்ட் (வெறும் கதை என்பது 1 பக்கத்துக்கு இருந்திருக்கும். சரிதானா?). இந்த 10 பக்கத்தை 10 வரிகளில் உங்களால் சொல்ல முடிந்தால் அது ஸினாப்ஸிஸ். ஒரே வரியில் சொல்லமுடிந்தால் அது ஒன்லைன். ஸ்கிரிப்ட் என்பது தாண்டி ஃபுல் ஸ்கிரிப்ட்(?) என்று ஒன்று இருக்கிறது. லேண்ட்ஸ்கேப் ஸ்கெட்சஸ், வசனங்கள் என்று நிறைய இருக்கும் அதில். அதெல்லாம் இப்போ நமக்கு தேவையில்லை என்பதால் நம்ப வேலையை மட்டும் பார்ப்போம்.

கதை புதுமையாகத்தானே பண்ணி வைத்திருக்கிறீர்கள்.? ஏனெனில் கதையும் கிளைமாக்ஸ் டிவிஸ்டும் ரொம்ப முக்கியம். அது உங்கள் பாடு எனினும் உதாரணமாக ஒரு புதுமையான கதை எப்படி இருக்கும்னு ஒரு கிளான்ஸ் பார்த்துவிடலாம். ஒரு லவ்ஜோடி. இருவர் வீட்டிலும் எதிர்ப்பு. ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிறது, தற்கொலை பண்ணிக்கிறது, பிரெண்ட்ஸா பிரிஞ்சு போறதுன்னெல்லாம் கேள்விப்பட்டிருப்பீங்க. அப்படியில்லாமல் ரெண்டுபேரும் சாமியாராப்போயிடுறாங்கன்னு(இதுக்கு கல்யாணமே பண்ணியிருக்கலாமேங்கறீங்களா?) பண்ணிடுங்க. அப்பதான் கொஞ்சம் புதுமையா இருக்கும். இந்தக் கதையின் முதல் காட்சியில் ஒரு காதலர்கள் பூங்காவில் காதலித்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு எப்படி திரைக்கதை எழுதுவது? இந்தக்காட்சிக்கு சொல்லித்தருகிறேன். மற்ற காட்சிகளுக்கு நீங்களே எழுதிவிடுங்கள். விரும்பினால் மெயில் அனுப்புங்கள், திருத்தி அனுப்புகிறேன்.

காட்சி :1
களம் : பூங்கா
மாந்தர்கள் : கார்க்கி, தாரா

(கதை, மூட் மற்றும் ஃபீலிங்க்ஸ்க்கு தகுந்த மாதிரி லேண்ட்ஸ்கேப் முடிவு செய்து எழுதவேண்டும்.

உதாரணமாக, இந்தக்காதல் காட்சி ரொமான்ஸாக இருக்கப்போகிறது எனில், மயக்கும் மாலை நேரம், மெல்லிய தென்றல், புல் தரை, அழகிய ரோஜாப்பூச்செடிகள் நிறைந்த சூழல், குயில் கூவல், வெள்ளைப்பூக்கள் மேலிருந்து அவர்கள் தலையில் விழுதல் போன்றவை.

இருவரும் சண்டை போட்டுக்கொள்ளப்போகிறார்கள் எனில், மண்டைகாயும் மதிய வெயில், சிமெண்ட் பெஞ்ச், தாள்பூ செடிகள், கச்சாமுச்சா சத்தங்கள், கன்னங்களில் வழியும் வியர்வை போன்றவை.

இருவரும் எந்த மூடிலும் இல்லாமல் குழம்பிய மனநிலையென்றால், பெரிய மரங்கள், காய்ந்த சருகுகள், பூக்களில்லாத குரோட்டன்ஸ் செடிகள், குறுக்கும் மறுக்கும் அலையும் பொதுஜனங்கள் போன்றவை..

அதற்காக ஹீரோயின் அழுதுகொண்டிருக்கும் காட்சி என்பதற்காக பேக்ட்ராப்பில் மழை என்றெல்லாம் யோசிக்கவேண்டாம். மழை வரவைக்க நம்மால் முடியாது. அப்படியே மழை வரும் போது போய் எடுத்தாலும் இருக்குற ஒற்றை காமிராவும் நனைஞ்சுடும்)

கதையின் மூடுக்கு தகுந்த லேண்ட்ஸ்கேப் மாதிரி, அவர்களின் உடை, காமிரா ஆங்கிள் (இது இயக்குனரின் வேலை என்றாலும் நீங்களும் தேவைப்பட்டால் திங்க் பண்ணவேண்டிவரும்), இவற்றை கணக்கில் கொண்டு வேண்டியவற்றை தெரிவித்துவிட்டு சரசரவென வசனங்களை எழுதிவிட்டால் வேலை முடிஞ்சுது.

..ஸ்ஸப்பா எவ்ளோ நீளமாயிருச்சு, மேலும் டவுட் இருப்பவர்கள் வரும் ஞாயிறு மாலை 3 மணிக்கு ஜீடிவியில் குட்டி அண்டசராசர நாயகன் சாம் ஆன்டர்சன் நடித்த‌ 'யாருக்கு யாரோ step nee' என்ற ஆஸ்கர் விருது பெற்ற தமிழ் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. தவறாது பாருங்கள். எல்லா சந்தேகங்களும் தெளிவடைந்து நிம்மதியாக போய்ச் சேர்ந்துவிடுவீர்கள். நன்றி.

.

39 comments:

நாஞ்சில் நாதம் said...

ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ்பா...........

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

பழகுன பாவத்துக்கு முதல் குத்தை நான் குத்தி்ட்டேன்..

ஆனா எதையும் நான் படிக்கலே..

பின்னாடி நான் இயக்கப் போற படத்துல இது மாதிரி சீன் இருந்து தொலைச்சி.. என்னைக் காப்பியடித்து பேர் வாங்கிய உண்மைத்தமிழன்னு நீங்க ஏதாவது எழுதி..

எனக்கென்ன வம்பா..?

ஆளை விடுங்கப்பா..

தராசு said...

நாங்க கொஞ்சம் பெருசா எழுதுனா மாத்திரம் திட்டறது, இப்ப நீங்க மட்டும் என்னவாம்??

சரி சரி படிச்சுட்டு அப்புறம் வர்றேன்.

T.V.Radhakrishnan said...

முக்கியமா...ஒரு ஊர்லன்னு ஆரம்பிச்ச உடனே..ஆகா..ஓகோ.ன்னு சொல்ற ஒரு கும்பலை பக்கத்தில வைச்சுக்கணும்..

$anjaiGandh! said...

//நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு. நீங்களெல்லாம் கிளாஸை விட்டு வெளியே போய்விடலாம்//

ரைட்டு.

கார்க்கி said...

அய்யா சாமி.. தமிழ் சினிமாவே நல்ல படம் எடுக்க ஆரம்பித்து வெற்றியும் பெறுகிறார்கள்.. ஆனா நாம, என்ன செய்றோம்?

முரளி,தராசு,அதிஷா, நீங்க, அட இப்பலாம் நர்சிம் கூட இப்படி மொக்கைப் போட்டா எப்படி?

அப்புறம் நானெல்லாம் எதுக்கு இருக்கிரேன்? ஹிஹிஹி

ஸ்டார் கூட இந்த வாரத்தில் ஒரு மரண மொக்கை போடவிருப்பதாக செய்தி..

ஒரு முக்கியமான செய்தி.. இந்த எடுத்துக்காட்டில் காதலரக்ள் சண்டையோ, பிரிவோ ஏதொ ஒன்னு செய்யட்டும்.. ஆனா ஹீரோ பயங்கர கோவத்தில் தாராவின் கன்னத்தில் (அல்லது வேறெங்காவ்து) முத்தம் தருவது போல் காட்சி வைக்கவும்..

அப்பதான் எப்படி பலவிதமாக நடிப்பது என்று விளக்கி என்னால் சொல்ல முடியும். ச்சே காட்ட முடியும்

Anonymous said...

ஏம்ப்பா தங்கமணி இல்லாமத் தனியா இருந்தப்ப நல்லா இருந்தே. இப்ப என்னடான்ன இப்படி ஆகீட்டயே?

ஏதும் கைகலப்பா? அடி பலமா? சொல்லு ஆம்புலன்ஸ் அனுப்புறேன்.

அனுஜன்யா said...

ஹா ஹா ஹா. அட்டகாசம். அதுவும் லேண்ட்ஸ்கேப் பகுதி அதகளம்.

யோவ், நா எங்கையா கேட்டேன்? அப்புறம் எல்லாரும் என்ன திட்டப் போறாங்க.

ஆமா, கார்க்கி நடிக்கும் போது, flashback இல் சின்ன வயசு கார்க்கியாக நடிக்கும் யூத் நான் தானே?

அனுஜன்யா

வால்பையன் said...

//இந்தக் காட்சியில் ஹீரோவை எப்படி குளிக்கவைப்பது //

உங்ககிட்ட கத்துகிட்ட நான் நாசமாத்தான் போகணும்!

ஹீரோயினை குளிக்கவைக்க சொல்லி கொடுப்பவர்களிடம் மட்டுமே நான் சேருவேன்!

கும்க்கி said...
This comment has been removed by the author.
அ.மு.செய்யது said...

// (முட்டை இருந்தால்தானே ஆம்லெட் போடமுடியும்?) //

அசத்தல்ணே.

ஆமா அந்த எலுமிச்சம் பழ புளியற மாதிரி ஒரு சீன் வந்துதே.அந்த திரைக்கதை எழுதுனது நீங்க தானா ??

( அவ இப்ப எங்க போனா..அவளுக்கு அந்த ஆசையெல்லாம் இருந்துச்சா ?? ...)

லவ்டேல் மேடி said...

தலைவரே... இந்த கதையோட திருட்டு டி.வி.டி எங்க கிடைக்கும்....!!

எல்லா எப்பிசோடும் கிடைக்குமா...???

ப்ளீஸ் சொல்லுங்க தலைவரே.....!!!!!

Truth said...

ஆதி, இரண்டு மூன்று இடங்களில் சிரிக்க முடிந்தது. இது வரை நீங்கள் எழுதிய அளவிற்கு இந்தப் பதிவு கண்டிப்பாக இல்லை. ஏதோ எழுதுனும்னு எழுதின மாதிரி இருக்கு. ஒரு வேளை எனக்கு மட்டும் அப்படி இருந்திருக்கலாம், இல்ல, ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்றேனோ? :)

Mahesh said...

புது வீடு போனதும் குளிர் விட்டுப் போச்சு போல....

ஆமா...அப்பறம் ஆம்லெட் போட்டிங்களா இல்லயா அதச் சொல்லவே இல்லயே...

அதிஷா said...

எக்ஸலன்ட்!

செம காமெடி ஆதி.

பீர் | Peer said...

"திரைக்கதை எழுதுவது எப்படி?" சுஜாதா ஏற்கனவே எழுதிட்டாரே... இதென்ன பார்ட் 2 வான்னு பார்க்க வந்தால்... அசத்திட்டீங்க ஆதி.

அப்டியே இந்த மாதிரி பதிவு போடுறது எப்டின்றதையும் எழுதிடுங்க.

பாலா said...

முட்டை இருந்தால்தானே ஆம்லெட் போடமுடியும்?) //


ulakamaga unmai ayya

mudiyala

மங்களூர் சிவா said...

/
வால்பையன் said...

//இந்தக் காட்சியில் ஹீரோவை எப்படி குளிக்கவைப்பது //

உங்ககிட்ட கத்துகிட்ட நான் நாசமாத்தான் போகணும்!

ஹீரோயினை குளிக்கவைக்க சொல்லி கொடுப்பவர்களிடம் மட்டுமே நான் சேருவேன்!
/

வாலு நீ தனியாள் இல்ல!
:)))))))))

ஜானி வாக்கர் said...

நல்லா சிரிக்க வச்ச பதிவு.

ஆக மொத்தம் கார்க்கி டவுசர கிழிக்க னும் உங்களுக்கு அதுக்கு அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில குறும்படத்துல கிழிக்கறீங்க.

கார்க்கி, ஆதி கிட்ட கொஞ்சம் உசார இருங்க.

தமிழ்ப்பறவை said...

நல்ல நையாண்டி...
//முட்டை இருந்தால்தானே ஆம்லெட் போடமுடியும்?)
//
அப்போ கட்டாயமா ஆம்லேட் சீன் ஒண்ணு இருக்கும்னு நினைக்கிறேன்...

டக்ளஸ்....... said...

\\காமிரா ஆங்கிள்\\

இத நான் மட்டும் கரெக்டா
"தாமிரா அங்கிள்"ன்னு படிச்சுட்டேன்..
ஸாரி அங்கிள்..!

அறிவிலி said...

தாரா ஸ்டில் கெடைக்குமா? கார்க்கிக்கு மேட்ச்சா இருக்காங்களான்னு பாக்கலாம்னுதான்.

மாசற்ற கொடி said...

சூப்பர் ! சிரிச்சு மாளலை.

அன்புடன்
மாசற்ற கொடி

Cable Sankar said...

/இருவரும் சண்டை போட்டுக்கொள்ளப்போகிறார்கள் எனில், மண்டைகாயும் மதிய வெயில், சிமெண்ட் பெஞ்ச், தாள்பூ செடிகள், கச்சாமுச்சா சத்தங்கள், கன்னங்களில் வழியும் வியர்வை போன்றவை.//

ஏன் நல்ல ஜூஸ் ஷாப்பில் சண்டை காட்சி வைக்க கூடாதா என்ன..? (இப்பவே டிஸ்கஷன் ஸ்டார்ட் ஆயிருச்சு..)

Cable Sankar said...

/ என்னைக் காப்பியடித்து பேர் வாங்கிய உண்மைத்தமிழன்னு நீங்க ஏதாவது எழுதி..

எனக்கென்ன வம்பா..?

ஆளை விடுங்கப்பா..
//

அண்ணே.. உங்க அளவுக்கு "பெரிய" ஸ்கிரிப்ட் ரைட்டரா அண்ணே இவங்கலாம்.. விடுங்க.. இவ்வளவு சின்ன சீனை நீங்க வைப்பீங்களா..?

தராசு said...

@கார்க்கி said

//ஆனா ஹீரோ பயங்கர கோவத்தில் தாராவின் கன்னத்தில் (அல்லது வேறெங்காவ்து) முத்தம் தருவது போல் காட்சி வைக்கவும்..//

நீங்க பொதுவா மூக்குல தான முத்தன் கொடுப்பீங்க, இப்ப எதுக்கு கன்னத்தில் .......

நாடோடி இலக்கியன் said...

ஆதி,உண்மையிலேயே எனக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக இருந்தது.

நன்றி.

நர்சிம் said...

//அதற்காக ஹீரோயின் அழுதுகொண்டிருக்கும் காட்சி என்பதற்காக பேக்ட்ராப்பில் மழை என்றெல்லாம் யோசிக்கவேண்டாம்.//

கலக்கல்.

குசும்பன் said...

//கேபிள் சங்கரும் நானும் இணைந்து கிளாஸ் எடுக்கலாம் என்று இருக்கிறோம்.//

எள்ளுதான் எண்ணெய்க்கு காயுது எலி புலுக்கை ஏன் காயுது?:)))

//அது ஒன்லைன். ஸ்கிரிப்ட் என்பது தாண்டி ஃபுல் ஸ்கிரிப்ட்(?) என்று ஒன்று இருக்கிறது. //

இப்படி எல்லாம் எழுதுவதற்கு ” ஸ்பிரிட்” வேண்டுமாமே அது நிஜமா?


//ரொமான்ஸாக இருக்கப்போகிறது எனில், மயக்கும் மாலை நேரம், மெல்லிய தென்றல், புல் தரை, அழகிய ரோஜாப்பூச்செடிகள் நிறைந்த சூழல், குயில் கூவல், வெள்ளைப்பூக்கள் //

இது அவுட்டோர் காதல் ஓக்கே, இண்டோர் காதல் என்றால்? கொஞ்சம் விளக்கமாக சொல்லவும்!

எஸ்கேப்பு ஆவமுடியாதுடி டன்டன்னனா டர்னா :))

குசும்பன் said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
//பின்னாடி நான் இயக்கப் போற படத்துல இது மாதிரி சீன் இருந்து தொலைச்சி.. //

விரோதி வருடத்தில் மக்கள் பல துன்பங்களை அனுபவிப்பார்கள் என்று வாழிங்கன்னூர் வரதுகுட்டி சொன்னது சரியாதன் இருக்கு! ஆண்டவா தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் காப்பாத்துப்பா!

எவனோ ஒருவன் said...

//கதை ரெடியாகவில்லையா? மன்னிக்கவும்.. நீங்கள் ஆட்டைக்கு கிடையாது//
//நீங்களெல்லாம் கிளாஸை விட்டு வெளியே போய்விடலாம்//
//...படத்தையோ பார்த்து அளவு ஒப்பீடு செய்பவர்கள் கிளாஸில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்//
நீங்க ரொம்ப ஸ்டிரிட்டுதான்.
---
//ஃபுல் ஸ்கிரிப்ட்(?) என்று ஒன்று இருக்கிறது. //
ஃபுல் என்ற வார்த்தை இருந்தும் அதைப் பற்றி ஒன்றும் சொல்லாத வால்பையனை வன்மையாக கண்டிக்கிறேன்.
---
//மேலும் டவுட் இருப்பவர்கள் வரும் ஞாயிறு மாலை 3 மணிக்கு ஜீடிவியில் குட்டி அண்டசராசர நாயகன் சாம் ஆன்டர்சன் நடித்த‌...//
ஸ்ப்ப்பா... நல்லாத்தான் போய்ட்டு இருந்து இது வரைக்கும். இந்த பினிசிங் டச்ச எதிர்பாக்கவே இல்ல, அந்த அளவுக்கு நல்லா இருக்கு.

//ஏனெனில் கதையும் கிளைமாக்ஸ் டிவிஸ்டும் ரொம்ப முக்கியம்//
அதானா இது?
---
ஒரு ஆள் கெடச்சிட்டாப் போதுமே, இப்படி கூடிச் சேந்து கும்மி அடிச்சிர்றீங்களே.
---
இத யாரு சார் ஆரம்பிச்சது?

செந்தழல் ரவி said...

மேட்டரை சொல்லறதுக்கு முன்னுரை போட்டே தாவு தீந்திரும் போலிக்கே...

கார்க்கிக்கு சொன்னமாதிரி ரெண்டு ரொமான்ஸ் வைத்திருந்தால் நன்று...

Joe said...

ஏற்கனவே இந்தாளு எடுத்த குறும்படத்தைப் பாத்தா கொடுமை பத்தாதுன்னு, இப்போ மத்தவங்களுக்கு வேற சொல்லிக் கொடுக்கிறாரு?

இந்தியாவில இருக்கிறதில ஒரு நல்ல விஷயம் என்னன்னா, இணைய இணைப்பு வேகம் பத்தலை, படம் பாக்க முடியலைன்னு போய்டலாம்!
;-)

மணிகண்டன் said...

***
ரெண்டுபேரும் சாமியாராப்போயிடுறாங்கன்னு(இதுக்கு கல்யாணமே பண்ணியிருக்கலாமேங்கறீங்களா?) பண்ணிடுங்க.
***

தாமிரா, ஈஷா மையத்துல என் மனைவிக்கு தெரிஞ்ச ஒரு ஜோடி இப்படி போய் சேர்ந்து இருக்குங்க. அதுவும் ரெண்டு பேரு வூட்டுலயும் ஒத்துக்கிட்ட பிறகு.

பாருங்க. இப்ப எல்லாம் நம்ப மக்கள் ரொம்ப புத்திசாலியா இருக்காங்க :)-

திரைக்கதை நீங்க. வசனம் எழுத எப்ப கிளாஸ் ?

வெங்கிராஜா said...

Unmaithamizhan pathi sollumpOthu vedi sirippu! LOL

Anujanya Sir comment-um sema comedy! :))))

இளைய பல்லவன் said...

டியர் ஆதி,

திரைக்கதை எழுதுவது எப்படி என்று நானும் ஒரு தொடர் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதன் சுட்டி இதோ.

http://ilayapallavan.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88

உங்கள் கருத்துக்களைச் சொன்னால் என்னைத் திருத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நாஞ்சில், உண்மைத்தமிழன், தராசு, டிவிஆர், சஞ்சய்,

கார்க்கி (ஆனா ஹீரோ பயங்கர கோவத்தில் தாராவின் கன்னத்தில் (அல்லது வேறெங்காவ்து) முத்தம் தருவது போல் காட்சி வைக்கவும்.// மூக்கில் என்றுதான் ஸ்கிரிப்ட் சொல்கிறது, பரவால்லையா?)

வேலன், அனுஜன்யா (கார்க்கி வயசாகி பேரன் பேத்தி எடுத்தப்புறம் வரும் காட்சிகளில் கார்க்கியாக நடிக்கப்போவது நீங்கதான்), வால்பையன் (விளங்கிரும்), செய்யது, லவ்டேல், ட்ரூத் (அதான் சொல்லிட்டீங்களே, ஓவர் எக்ஸ்பெக்டேஷ‌ன்), மகேஷ், அதிஷா, பீர், பாலா, மங்களூர், ஜானி, தமிழ்பறவை, டக்ளஸ், அறிவிலி (விரைவில் வெளீயாகும்), மாசற்றகொடி, கேபிள், இலக்கியன், நர்சிம்,

குசும்பன், எவனோ ஒருவன், செந்தழல், ஜோ, மணிகண்டன், வெங்கி, பல்லவன் (என்ன விளையாடுறீங்களா?)

அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..

ஹிஹி.. கொஞ்சம் லேட்டாயிருச்சு.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

வலுவில் எழுத வேண்டுமே என்று எழுதினால் கொஞ்சம் சொதப்பலாகத்தான் ஆகிவிடுகிறது. எழுத வேறு விஷயங்கள் இருந்தாலும் இந்த சீரிஸ் தலைப்பில் குறும்படமும், சிறுகதையும் அடைந்த வெற்றியும், வரவேற்பும் இதை எழுத தூண்டியது.

உண்மையில் குறும்படம் பதிவின் முதல்பாகத்தின் பக்கத்தில்கூட இந்தப்பதிவு வரமுடியாது என தோன்றுகிறது. இதுவும் ஒரு பாடம்.!

சுரேகா.. said...

நாங்கூட ரொம்ப சீரியஸா நோட்டெல்லாம் எடுத்துக்கிட்டு வந்தா...

பரவால்ல..!

அடிச்சு ஆடுங்க! :)))