Monday, July 13, 2009

இடைத்தேர்தல்

நிஜமாகவே நான்கு நாட்களாக கொஞ்சம் பிஸியாக இருந்துவிட்டபடியால் இணையம் பக்கம் வரமுடியவில்லை. அடுத்து ஒரு தங்கமணி பதிவு ரெடியாக வைத்திருந்தாலும் போட ப‌யமாக இருக்கிறது. ஏனெனில் ரமா கொஞ்சம் கொஞ்சமாக பதிவுலகில் ஆர்வம் காட்டத்துவங்கியுள்ளார். அவர் வாசித்துவிடும் ஆபத்திருக்கிறது. மேலும் விழித்திருக்கும் நேரங்களில் ஜூனியருடனும், அவர் தூங்கும் நேரங்களில் ரமாவிடமும் போராடவே நேரம் சரியாக இருப்பதால் இனி முன்போல இயங்கமுடியமா என சந்தேகிக்கிறேன். பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று..

**********

தேர்தல் நடத்தி ரொம்ப நாளாகிவிட்டது. ஆகவே ட்ராப்டில் பதிவுகள் இல்லாத இந்நிலையில் இந்த பழைய பதிவைப்படித்துவிட்டு அப்படியே வலதுபக்கம் ஓட்டும் போட்டுவிட்டு செல்லுங்கள். இந்த வருட வாசகர் மனநிலை எவ்வாறு இருக்கிறது என பார்க்கலாம்..

**

பதிவுகள் குறித்த தேர்தல் முடிவுகள்.

ஒரு பத்து நாளா தளத்தில் கவனம் செலுத்தமுடியாதபடிக்கு வேலை இருந்தது. ஆனால் முடிந்தவரைக்கும் பிற வலைப்பூக்களில் மேய்ந்தேன். ஒண்ணும் சொல்றதுக்கில்லை.. கொட்டிக்கிடக்குது ஆயிரமாயிரமாய்.! வலைப்பூக்கள்தான் எத்தனை வகைகளடா அதில்தான் மொக்கைகள் எத்தனை வகைகளடா.. மேலும் எத்தனை விதமான சென்டிமென்ட்கள், எத்தனை விதமான அனுபவங்கள், எத்தனை விதமான ரசனைகள், எத்தனை விதமான கருத்துச்செறிந்த கட்டுரைகள்.

சிலர் நிஜமாகவே படிக்கப்படிக்க சுவையான பலவிதமான பதிவுகளைத் தருகின்றனர் (பெய‌ரைச்சொன்னால் சிலர் விட்டுப்போக‌ நேரிடலாம், அதனால் வருத்தம் வந்து சேரும். மேலும் நான் பார்த்தது கையளவே, இன்னும் கடலளவு பாக்கியிருக்கிறது). பலரோ தாங்கமுடியாத அளவில் பிளேடு போடுகிறார்கள், நாலு வரிகளுக்கு மேல் படிக்கவே முடியவில்லை. (அவற்றையெல்லாம் மொக்கையென்று சொல்ல எனக்கு விருப்பமில்லை. அந்த வார்த்தைக்கு இப்போ நல்லபடியான அர்த்தம் கிடைத்திருக்கிறது அல்லவா? சரி.. காக்கைக்கும் தன்பதிவு, பொன்பதிவு இல்லையா? அவர்கள் திருப்திக்கு அவர்கள் எழுதுகிறார்கள், இப்ப நீ இல்லையா? என்று என்னையே கேட்டுக்கொள்கிறேன். பெயரைச் சொன்னால் வருத்தத்தோடு சேர்ந்து ஆட்டோவும் வரக்கூடும் என்பதால் தவிர்க்கிறேன்).

மேலும் சில‌ர் என்ன‌ எழுதினாலும், கூட்ட‌மும் பின்னூட்ட‌மும் அலைமோதுகிற‌து. சில‌ர் என்ன எழுதினாலும் சீண்ட‌ நாதியில்லை. அவ‌ர்க‌ளுக்கு நாலு பின்னூட்ட‌ம் வ‌ந்தால் ந‌ன்றி சொல்லி எட்டு பின்னூட்ட‌ம் போடுகிறார்க‌ள். சில பதிவுகளில் பதிவை விட பின்னூட்டம் சுவையாக இருக்கிறது. சிலர் எதிர்பார்க்காத நேரங்களில் பின்னூட்டமிட்டு உற்சாகத்தை ஏற்படுத்தி பின்னர் காணாமல் போய் காயவைக்கின்றனர். சில‌ர் முப்பது நாளில் மூணு ப‌திவு போடுகிறார்க‌ள் (இதிலும் தரமற்றவை உண்டு). சில‌ர் மூணு நாளில் ‌முப்ப‌து ப‌திவு போடுகிறார்க‌ள் (இதிலும் த‌ர‌மான‌வை உண்டு). சில‌ர் ரொம்ப‌ அட‌க்க‌ம். சில‌ரோ ஆர்ப்பாட்ட‌ம். பதிவுகளை சூடாக்குகிறேன் பார் என்று மொக்கைப் பேர்வழிகளெல்லாம் தனது சப்பைப்பதிவுகளுக்கு பதிவுக்கு சம்பந்தமேயில்லாமல் 'ஏடாகூடமாய்' தலைப்பு வைத்து சாவடிக்கிறார்கள். அப்புறம் தொடர்பதிவு... சரி, ச‌ரி.. இந்த ஹிஸ்டரியெல்லாம் எதுக்கு இப்ப.. ஏற்கனவே தெரிஞ்சதுதானே, இப்ப‌ என்ன‌ங்கிறீங்க‌ளா?..

ச‌ரி விஷ‌ய‌த்துக்கு வ‌ந்துட‌றேன். நிறைய‌ பேர் த‌ன‌து த‌ள‌ங்க‌ளில் ஒரு ஓர‌மாய் த‌ன‌க்கு பிடித்த‌ விஷ‌ய‌ங்க‌ளில் தேர்த‌ல் ந‌ட‌த்துகிறார்க‌ள் அமைதியான‌ முறையில். என‌க்கும் அதைப்பார்த்த‌தும் நாமும் ஒரு மெகா தேர்தல் ந‌ட‌த்தினால் என்ன‌ தோன்றி, "வாச‌க‌ர்க‌ளின் ம‌ன‌தைப்புரிந்து கொள்கிறேன் பார்" என்று ஒரு மூன்று கேள்விக‌ளைக் க‌ள‌த்தில் வைத்தேன். ஆனால் பாருங்கள். நான் அறிவித்த‌திலிருந்து (3 நாட்க‌ள் தேர்த‌லை நீட்டித்தும் கூட) பத்து நாட்களில் சுமார் 600 ஹிட்டுக‌ளும் குறைந்த‌ப‌ட்ச‌ம் 80 ஓட்டுக‌ளும்தான் வ‌ந்திருக்கின்ற‌ன. எவ்வளவோ கெஞ்சியும், மிரட்டியும் பார்த்துவிட்டேன். வந்தவர்கள் பெரும்பாலும் ஓட்டு போடவில்லையா? அல்லது வந்ததே இவ்வளவு பேர்தானோ என்று ஒரே சந்தேகமாக ஆகிவிட்டது. அப்புற‌ம்தான் யோசித்தேன் இது நிறைய‌ ஹிட்டுக‌ள் வாங்க‌க்கூடிய‌ யாராவ‌து பண்ணியிருக்க‌ வேண்டிய‌ வேலை என்று. ச‌ரி செய்துவிட்டு பிற‌கு சிந்திப்ப‌து ந‌ம‌க்கு என்ன‌ புதிதா? என்று ச‌மாதான‌ம் செய்துகொண்டேன்.

பானை சோற்றுக்கு ஒரு சோறு ப‌த‌ம் என்று நினைத்துக்கொண்டு தேர்த‌ல் முடிவுக‌ளை பார்த்துக்கொள்ளுங்க‌ள். முத‌ல் கேள்வி சொந்த‌க்க‌தையாக‌ இருந்தாலும், பின்னிரு கேள்விக‌ள் உங்க‌ளுக்கு ப‌ய‌ன்ப‌ட‌லாம்.! காமெடி,மொக்கை,க‌லாய்த்த‌ல் ப‌திவுக‌ளே 51% வாக்குக‌ள் பெற்று முத‌லிட‌ம் பிடித்திருக்கிற‌து என்ப‌து நாம் அறிய‌ வ‌ரும் ம‌கிழ்ச்சியான‌ சேதி. கூடுத‌லாக‌ 36% பேர் எப்போதுமே பின்னூட்ட‌மிடுவ‌தில்லை என்றும் 16% பேர் அத்திபூத்தாற்போல‌ பின்னூட்ட‌மிடுவேன் (ப‌ன்னிர‌ண்டு நாட்க‌ளுக்கு ஒருமுறை?) என்றும் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.


.

26 comments:

ஆதிமூலகிருஷ்ணன் said...

எக்ஸ்ப்ளோரர் 8க்கு முந்தைய பிரவுஸர்களை பயன்படுத்துபவர்களுக்கு நீண்ட வெள்ளைப்பக்கமும், வலதுபுற காலம் முடியும் இடத்தில் பதிவு துவங்குவதாகவும் கம்ப்ளைண்ட் இருந்தது. அது சரிசெய்யப்பட்டுள்ளது. எக்ஸ்ப்ளோரர் 8க்கு முந்தைய பிரவுஸர்களை பயன்படுத்துவோர் சரியாகிவிட்டதா என கருத்துக்கூறவும்.. பிளீஸ்..

அனுஜன்யா said...

ஓட்டு போட்டாச்சு. கவிதைக்கு போடல. மொக்கைக்கு தான். எது நல்லா வருதோ அதை வரவேற்கணும்ல :)

அனுஜன்யா

தராசு said...

படிச்சுட்டேன், ஓட்டுப் போட்டுட்டேன்.

ராஜா | KVR said...

IE7ல பின்னூட்டங்களை காணவில்லை. stylesheetல் எங்காவது பிரச்சனை இருக்கலாம், பார்த்து சரி செய்ங்க

ராஜா | KVR said...

Sorry aadhi, comments r appearing but taking too much time to appear.

ஜானி வாக்கர் said...
This comment has been removed by the author.
ஜானி வாக்கர் said...

இடைத்தேர்தல்ல இது வரைக்கும் வோட்டே போட்டது இல்ல, ஏதோ உங்க புண்ணியத்துல இன்னிக்கு வோட்டு போட்டுட்டேன்.

சென்ற வாரம் சண்டை நடந்தது, அதனால நீங்க எஸ் அதான உண்மை?

சரி சரி முன்பு போல் இயங்காட்டியும் பரவா இல்ல, தினம் குறஞ்சதது ஒரு பதிவு போட முயற்சி பண்ணுங்க.

எம்.எம்.அப்துல்லா said...

சரியாகிவிட்டது

:)

அறிவிலி said...

எக்ஸ்ப்ளோரர் 7 க்கு ஒன்றும் பிரச்சினை இல்லை.

Mahesh said...

//சில‌ர் என்ன எழுதினாலும் சீண்ட‌ நாதியில்லை. அவ‌ர்க‌ளுக்கு நாலு பின்னூட்ட‌ம் வ‌ந்தால் ந‌ன்றி சொல்லி எட்டு பின்னூட்ட‌ம் போடுகிறார்க‌ள்.//

அப்பாடா... இது என்னைப் பத்தி இல்லை :)))))))))

என்ன நம்ம கடைப்பக்கம் காத்து வாங்கக் கூட வர முடியாம ஆணியா??

Truth said...

சரியாகிவிட்டது. ஆனால் எப்படி சரிசெய்தீர்கள் என்று சொல்லுங்களேன் ப்ளீஸ். தேவைப் படுகிறது.

நாஞ்சில் நாதம் said...

இடைத்தேர்தல்!!!!!!!!!!!!

நானும் எதோ வில்லங்கமான கருத்து கணிப்புபோண்ணு நினைசேன்

அப்பாவி முரு said...

எப்படி சரி செய்தீர்கள் என்பதை எழுதவும்.

சில புது டெம்பிளேட் பிளாக்குகளை படித்து மூடும்போது, ஆயிரம் விண்டோஸ் ஓபென் ஆகி சிஸ்டத்தயே கேங் பண்ணுகிறது, அதை தவிர்ப்பதைப் பற்றி தெரிந்தாலும் எழுதவும்.

புன்னகை said...

ஓட்டு போட்டாச்சு.

எவனோ ஒருவன் said...

ஒன்றே ஒன்றை மட்டும் தேர்வுசெய்வது கஷ்டமாக இருக்கிறது...
ஒன்றுக்கும் மேற்பட்ட சாய்ஸை தேர்வுசெய்யும்படி மாற்றினால் என்ன? இதற்கு ஏதேனும் காரணம் உள்ளதா?
---
ஓட்டுப் போட்டாச்சு.
---
பக்கம் லோடு ஆவதற்கு ரொம்ப நேரம் ஆகிறது, எனக்கும்.

எவனோ ஒருவன் said...

Your feedback.. ல் ’பிடித்திருந்தால் மட்டும்’ என்பதையும் சேர்க்கலாமே...
நெஞ்சைத் தொட்டால் மட்டும் அல்ல, பிடித்திருந்தாலும் பின்னூட்டமிடுவேன்.

எவனோ ஒருவன் said...
This comment has been removed by the author.
அ.மு.செய்யது said...

ஓட்டு போட்டேங்க‌...ந‌ம‌க்கு சிறுக‌தை,க‌விதை தான் இண்ட்ர‌ஸ்ட்..

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அனுஜன்.!
நன்றி தராசு.!
நன்றி ராஜா.!

நன்றி ஜானி.! (சென்ற வாரம் சண்டை நடந்தது, அதனால நீங்க எஸ் அதான உண்மை// இல்லை ஜானி நிஜமாவே பிஸிதான்)

நன்றி அப்துல், அறிவிலி.! (அப்பாடி, வயித்துல பால வாத்தீங்க..)

நன்றி மகேஷ்.! (என்ன நம்ம கடைப்பக்கம் காத்து வாங்கக் கூட வர முடியாம ஆணியா?// யோவ்.. என் கடையை தொறக்கவே நேரமில்லாமல் இருக்கேன். இதுல காத்துவாங்க வர்லியாம்ல, எதாவது சொல்லிறப்போறேன்..)

நன்றி நாஞ்சில்.!

நன்றி ட்ரூத், அப்பாவி முரு.! (நான் ஸாஃப்ட் ஆளில்லை. இது விபரங்கள் எனக்கும் தெரியாது. நண்பர்கள் உதவியால் ஆயிற்று)

நன்றி புன்னகை.!

நன்றி எவனோஒருவன்.! (நீங்கள் அழித்த கமெண்ட் கூட நல்லாத்தான் இருந்தது)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி செய்யது.!

RR said...

Your Feedback, Your visit'க்கு ஓட்டு போட்டுவிட்டான்.

Your Preference'க்கு ஓட்டு போடவில்லை.....All of the Above ன்னு ஒரு வாய்ப்பு இருந்து இருந்தால் வசதியாக இருந்திருக்கும், அதற்கு ஓட்டு போட்டிருப்பேன்.

அப்பாவி முரு said...

//அப்பாவி முரு.! (நான் ஸாஃப்ட் ஆளில்லை//

ஹல்லொவ் என்ன மெரட்டுறீங்களா?

நாங்களும் ரஃப் ஆளுகதான், ஆமா!!!எப்பூடி...

Mahesh said...

//Comment deleted
This post has been removed by the author.

July 13, 2009 3:03 PM

//

இந்த பதிவுக்கு கூட வில்லங்கமான கமெண்ட் வருதா?

எவனோ ஒருவன் said...

//(நீங்கள் அழித்த கமெண்ட் கூட நல்லாத்தான் இருந்தது)//

//தவறாமல் வருகிறேன், அத்தனை பதிவுகளும் அருமை//
நான் தவறாமல் வருபவன். தவறாமல் வருகிறேன் ஓக்கே... ஆனால் அனைத்துப் பதிவுகளும் அருமை என்றெல்லாம் சொல்ல முடியாதே... இதுக்குள்ள இப்படி ஒரு சூனியம் வச்சிட்டீங்களேன்னுதான் அந்த கமண்ட்.

//தவறாமல் வருகிறேன். நாலுக்கு ரெண்டு பழுதில்லை//
அப்புறம் இதைப் பார்த்தேன். ஓக்கே, இதுக்கும் ஒரு சான்ஸ் குடுத்துருக்கீங்க... அப்டின்னு அதை அழிச்சிட்டேன்.
---
ஆனால் எனக்கு பத்துக்கு ஒன்பது பழுதில்லை என்றே தோன்றியது, அதனால் முதலாவதுக்கே போட்டுவிட்டேன்.
---
’தவறாமல் வருகிறேன்’ என்று மட்டும் விட்டிருக்கலாம். நிறைய ஓட்டு விழுந்திருக்கும்.
---

எவனோ ஒருவன் said...

//Mahesh said...
இந்த பதிவுக்கு கூட வில்லங்கமான கமெண்ட் வருதா?//
வில்லங்கம்லாம் இல்ல, இதுதான் விளக்கம். மேலே உள்ளதை படித்துக்கொள்ளுங்கள்.

Cable Sankar said...

ஓட்டு போட்டாச்சு..