Tuesday, July 14, 2009

மூன்று அலறல்கள்

இப்போது நாங்கள் முதல் மாடியில் வசித்துக்கொண்டிருக்கிறோம். கீழ் மற்றும் எதிர் வீடுகளிலிருப்போர் அதிர்ச்சியடையும் வண்ணம் திடீர் திடீர் என எங்கள் வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கிறது, பகல் நேரங்களிலும் நள்ளிரவு நேர‌ங்களிலும் கூட..

அலறுவது யார்? ஏன்?

*ஆசை ஆசையாய் வாங்கிவந்த புதிய பேனா கரகரவென தரையில் வைத்து கீறப்படுகிறது.

*மெயில் செக் பண்ணிக் கொண்டிருக்கப்படும் போது கீ போர்டில் சர்ரென பிஸ் அடிக்கப்படுகிறது.

*பல் தேய்த்துவிட்டு பேப்பர் பார்க்க பேப்பரை தேடினால் அதற்குள்ளாகவே சுக்கல் நூறாக கிழிக்கப்பட்டிருக்கிறது. சமயங்களில் டாய்லெட் பேப்பராக பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது.

*பைக் சாவி வாசல் சாக்கடையில் கண்டெடுக்கப்படும் நிமிடங்களில்..

"ஆஆஆஆஆஆஆவ்வ்வ்.."

அலறுவது நான்.!

*சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது டிவி ரிமோட் கண்ட்ரோலர் புளிக்குழம்பு சட்டியில் திடுமென முக்கி வைக்கப்படுகிறது.

*ஒரு குடம் நன்னீரில் காகம் கதை போல ஒரு வெங்காயம், இரண்டு காரட்டுகள், ஒரு டூத்பிரஷ், ஒரு செல்போன், ஒரு சோப்பு இவை கண்டெடுக்கப்படுகிறது.

*பாட்டிலில் ஊற்றுவதற்கு முந்தைய விநாடிகளில் ஆறவைக்கப்பட்டிருந்த பால் மெத்தையில் கொட்டுப்படுகிறது.

*நள்ளிரவில் தோளில் கிடத்திய ஸ்டேன்டிங் நிமிடங்கள் மணிகளாய் மாறும் நேரங்களில்..

"ஏஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்"

அலறுவது ரமா.!

*தண்ணீரில் அளவளாவ அனுமதி மறுக்கப்படுகிறது.

*வலுக்கட்டாயமாக சாதம் திணிக்கப்படுகிறது.

*புத்தகங்கள், கம்ப்யூட்டர், பிரிட்ஜ், செல்போன்கள், சிடிக்கள் போன்றவற்றையெல்லாம் கேட்டவுடனேயே அக்செஸ் செய்துவிடமுடிவ‌தில்லை.

*எவ்வளவு கவனமாக நடந்தாலும் இந்தத்தரை வழுக்கி விழச் செய்துகொண்டேதான் இருக்கிறது.

*நள்ளிரவு இரண்டு மணிக்கு கதவைத்திறந்து உலாத்தமுடிவ‌தில்லை.

*காரணங்கள் வேண்டுமா என்ன, பொழுதே போகாத தருணங்களில்..

"ஈஈஈஈஈஈஈஈய்ய்ய்"

அலறுவது சுபா (தி ஜூனியர்).!

.

Update (14.07.09/ 12.50):

முதல் முறையாக ஒரு பதிவை அப்டேட் செய்கிறேன். இந்தப்பதிவுக்கு வந்த 'மயில்' விஜிராமின் ஒரு சுவாரசியமான க‌மென்டுக்காக..

மயில் : இதோட 7 ரிமோட், மூணு டிவி, கொறஞ்சது 100 லிட்டர் பால், ஒரு பிரிட்ஜ், (பின்னாடி ட்யுப் இழுத்து பிரிட்ஜ் புகைந்து போச்சு ), 2 மூணு சக்கர சைக்கிள், ஐம்பது ball , ஒரு பத்து கிலோ க்ரயான்ஸ், கலர், பிரஷ், ஒரு மூட்டை பென்சில், ரப்பர், அப்பறம் வீட்டு சுவர்க்கு வெள்ளை அடிக்க வருஷம் 15,000 ரூபாய், (முடியல, மூச்சு வாங்குது) எல்லாம் ரெடி பண்ணி வைங்க ஆதி....இன்னும் இருக்கு..
ஐய்யா... ஜாலி.!!
.

58 comments:

ஆதிமூலகிருஷ்ணன் said...

கேட்காமலேயே மனமுவந்து ஓட்டு போட்டதாய் சரித்திரம் உண்டுமா நமக்கு? வலதுபக்கம் தேர்தலில் ஓட்டுப்போடும் அதே வேளையில்.. மறக்காமல் தமிழ்மண, தமிழிஷ் ஓட்டுகளையும் குத்துங்கள்.!

நாஞ்சில் நாதம் said...

நீங்க கம்பிளைன்ட் பண்ணுற அளவுக்கு ஒண்ணும் அவரு டெர்ரர் மாதிரி தெரியலையே. நெம்ம்ம்ப சாப்ஃடா தானே இருக்காரு.

சுரேகா.. said...

அப்பா..
அம்மா..
இருவரின் அலறலின் காரணமும்
மூன்றாவது அலறல்.!
ஆஹா..
எல்லா வீட்டிலயும் நடக்கிறதை
சூப்பரா சொல்லியிருக்கீங்க !

:)

Mahesh said...

உய்................ விசிலடிப்பது நான் !!

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் !!

Mahesh said...

வலைப்பூ பேருக்கேத்த பதிவு !!

Anonymous said...

இதுக்கே இப்படி அலறலா, இன்னும் கொஞ்சம் பெரிசாகட்டும் அப்பறம் பாருங்க :)

நாடோடி இலக்கியன் said...

நல்லாயிருக்கு ஆதி.

//ஒரு குடம் நன்னீரில் காகம் கதை போல ஒரு வெங்காயம், இரண்டு காரட்டுகள், ஒரு டூத்பிரஷ், ஒரு செல்போன், ஒரு சோப்பு இவை கண்டெடுக்கப்படுகிறது.//

:)

நன்றி இலக்கியன்.
(இதை அப்படியே மறுமொழிக்கு யூஸ் பண்ணிக்கோங்க).

அப்பாவி முரு said...

ஐ...

ஜாலியா இருக்கும் போலிருக்கே

:)))

அப்பாவி முரு said...

பக்கத்து வீட்டுக்காரங்களுக்குத் தான் கஷ்ட்டம்.

நான் ஏன் என்வீட்டுக்குள்ள, அடுத்த வீட்டுக்காரனா வாழணும்???

அப்பாவி முரு said...

வீட்டுல மனசு வந்து பொண்ணு பார்க்குறாங்க.

அதைக் கெடுக்கவா பார்க்குறீங்க???

கார்க்கி said...

அய்யா ஜாலி

Anonymous said...

அய்யா ஜாலி//

eppoodii!!!!!!!!

டக்ளஸ்....... said...

இதுக்கு நீங்க அண்ணனாகவே இருந்திருக்கலாம் அங்கிள்..!

பாபு said...

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் !!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி நாஞ்சில்.! (சின்ன பாட்டிலுக்குள்தான் பெரிய ஜீனீ ஒளிந்துகொண்டுள்ளது நாஞ்சில்)

நன்றி சுரேகா.!

நன்றி மகேஷ்.! (ரசனையான பின்னூட்டம்)

நன்றி அம்மிணி.! (இன்னுமா.?)

நன்றி இலக்கியன்.! (ஆனாலும் கிண்டல் ஓவருங்க..)

நன்றி முரு, கார்க்கி.! (என்பாடு உங்களுக்கு ஜாலியா? எப்படியும் எவனும் எச்சரிக்கைகளை மதிக்கப்போவதில்லை என்பது நிச்சயம். பட்டுத்தான் திருந்துவீங்கடா நீங்கல்லாம்..)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மயில், டக்ளஸ், பாபு.!

ஜானி வாக்கர் said...

//அய்யா ஜாலி//

அது சரி, ரெம்பொ சந்தோசப்படாதீங்க அய்யா கார் கீ மற்றும் மயில் ( நீங்க முக்கால்வாசி கிணறு தாண்டியாச்சுணு நெனைக்கறேன்) , யாரா இருந்தாலும் இந்த நிலைகளை கடந்து தான் வரணும், என்ன ஆதி கொஞ்சம் முன்னாடி போறாரு நீங்க பின்னாடி வருவீங்க அவ்ளோ தான் , அப்போ நாங்களும் சொல்லுவோம் அய்யா ஜாலி அப்படினு, இப்போ நீங்க தனிய சொல்லுறீங்க நாங்க எங்க வாரிசுகலோட சேந்து சொல்லுவோம்.

அப்பப்பா சொம்பு கனம் தாங்க முடியல யாராவது கொஞ்சம் கை கொடுங்கப்பா. எத்தன நாளைக்குத்தான் நான் ஒருத்தனே தூக்குறது, அய்யா டக்ளஸ் ஒரு கை கொடுகிறது.

சரி ஒரு 15 நாளைக்கு லீவு சொல்லிக்றேன் நாளை முதல்.

தராசு said...

//@ கார்க்கி said...
அய்யா ஜாலி//

இருங்கடி, இன்னும் ரெண்டு மூணு வருஷங்கழிச்சு நாங்களும் பாப்பம்ல, நீங்க எப்படி அலற்ரீங்கன்னு.

வால்பையன் said...

//நீங்க கம்பிளைன்ட் பண்ணுற அளவுக்கு ஒண்ணும் அவரு டெர்ரர் மாதிரி தெரியலையே. நெம்ம்ம்ப சாப்ஃடா தானே இருக்காரு.//


எனக்கும் அப்படிதான் தெரியுது!
குறைஞ்சது 5 செல்போன் மாத்தனும், 3 ரிமோட் மாத்தனும், ஒரு லேப்டாப்பை பரண்ல ஏத்தனும் இதெல்லாம் பண்ணிட்டு அப்புறம் எங்கூட போட்டிக்கு வாங்க!

Anonymous said...

வாங்க ஜானி,

கார்க்கி தான் இன்னும் கிணறு தாண்ட ஓடவே இல்ல, நாங்கல்லாம் தப்பிச்சுடோம் இல்ல,

// குறைஞ்சது 5 செல்போன் மாத்தனும், 3 ரிமோட் மாத்தனும், ஒரு லேப்டாப்பை பரண்ல ஏத்தனும்//

இதோட 7 ரிமோட், மூணு டிவி, கொறஞ்சது 100 லிட்டர் பால், ஒரு பிரிட்ஜ், (பின்னாடி ட்யுப் இழுத்து பிரிட்ஜ் புகைந்து போச்சு ), 2 மூணு சக்கர சைக்கிள், ஐம்பது ball , ஒரு பத்து கிலோ க்ரயான்ஸ், கலர், பிரஷ், ஒரு மூட்டை பென்சில், ரப்பர், அப்பறம் வீட்டு சுவர்க்கு வெள்ளை அடிக்க வருஷம் 15,000 ரூபாய், (முடியல, மூச்சு வாங்குது) எல்லாம் ரெடி பண்ணி வைங்க ஆதி....இன்னும் இருக்கு..

ஐய்யா... ஜாலி

வால்பையன் said...

//இதோட 7 ரிமோட், மூணு டிவி, கொறஞ்சது 100 லிட்டர் பால், ஒரு பிரிட்ஜ், (பின்னாடி ட்யுப் இழுத்து பிரிட்ஜ் புகைந்து போச்சு ), 2 மூணு சக்கர சைக்கிள், ஐம்பது ball , ஒரு பத்து கிலோ க்ரயான்ஸ், கலர், பிரஷ், ஒரு மூட்டை பென்சில், ரப்பர், அப்பறம் வீட்டு சுவர்க்கு வெள்ளை அடிக்க வருஷம் 15,000 ரூபாய், (முடியல, மூச்சு வாங்குது) எல்லாம் ரெடி பண்ணி வைங்க ஆதி....இன்னும் இருக்கு..//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

முடியாது, என்னால முடியாது!

'இனியவன்' என். உலகநாதன் said...

நான் பத்து வருசமா அனுபவித்துக் கொண்ண்டிருக்கிறேன் ஆதி.

பரிசல்காரன் said...

ம்!

நல்ல ஃப்ளோ வந்துருக்குய்யா...

எழுத்துலயும், வாழ்க்கைலயும்!

நர்சிம் said...

ரைட்டு.ஸ்டார்ட்ட் மியூசிக்னு சொல்றது இதைத்தான்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஜானி.!
நன்றி தராசு.!
நன்றி வால்.! (அவ்வ்வ்வ்வ்..)
நன்றி மயில்.! (ஓஓஓஓவ்வ்வ்.. பின்னூட்டம் சுவாரசியம் கருதி பதிவில் இணைக்கப்பட்டுள்ளது)
நன்றி இனியவன்.!
நன்றி பரிசல்.!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

செய்றதையும் செஞ்சுப்புட்டு புலம்பினா எப்படிங்க தம்பீ..!

இதையெல்லாம் 'முன்னாடியே' யோசிச்சிருக்கணும்..!

ஆதிமூலகிருஷ்ணன் said...

இது அஃபிஷியலாக சுபா அறிமுகமான பதிவென நினைக்கிறேன். டூ பர்சனல் வேண்டாமென நினைத்திருந்தேன். பிளான் செய்யவில்லை.. இயல்பாக நிகழ்ந்துவிட்டது.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி நர்சிம்.!
நன்றி உண்மைத்தமிழன்.!

அமிர்தவர்ஷினி அம்மா said...

கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்க :)))))))))))))))))

ஜீனியருக்கு வாழ்த்துகள்

அக்பர் said...

நாம பதிவெழுதுவது பாப்பாக்கே பிடிக்கலை போல இருக்கு...

வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்.

புதுகைத் தென்றல் said...

அலறல்கள் தொடரட்டும்.

நீங்களும் அடிக்கடி அப்டேட்ஸ் கொடுங்க.

Truth said...

அதே அதே...
ஐயா ஜாலி.

ஆதி, நல்லா இருந்திச்சு. நாலா ரசிச்சேன். பேக் டு பார்ம்.

எம்.எம்.அப்துல்லா said...

உங்க அலப்பறைக்கு பய அலறலே தேவலாம்

:)))

செல்வேந்திரன் said...

மயக்குறு மக்கள் இல்லோர்க்குப் பயக்குறை இல்லை!

அசத்தல் எழுத்து!

தமிழ்ப்பறவை said...

ஆதி சார்...
அசத்தல் பதிவு...
really nice...

bala said...

AYYYO SUPER

ராமலக்ஷ்மி said...

ஃபண்டாஸ்டிக் அலறல்கள்:))!!!

//*சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது டிவி ரிமோட் கண்ட்ரோலர் புளிக்குழம்பு சட்டியில் திடுமென முக்கி வைக்கப்படுகிறது.

*ஒரு குடம் நன்னீரில் காகம் கதை போல ஒரு வெங்காயம், இரண்டு காரட்டுகள், ஒரு டூத்பிரஷ், ஒரு செல்போன், ஒரு சோப்பு இவை கண்டெடுக்கப்படுகிறது.

*பாட்டிலில் ஊற்றுவதற்கு முந்தைய விநாடிகளில் ஆறவைக்கப்பட்டிருந்த பால் மெத்தையில் கொட்டுப்படுகிறது. //

சின்னதில் என் மகனிடம் இத்தனை குறும்பு இருந்ததில்லை. ஆனால் என் தங்கை பெண் இவற்றை மிஞ்சி விட்டிருந்தாள்:)! இப்போது ஐந்து வயதாகி விட்டதால் “சற்றே” பரவாயில்லை:)!

புன்னகை said...

:-)
ரொம்ப நாள் கழிச்சு ரசிக்கும்படியான ஒரு பதிவு! சுபா புகைப்படம் ஏதும் இல்லையா? கண்லயே காட்ட மாட்டேங்கறீங்க பாப்பாவ?

//ஐயா ஜாலி//
இப்படி கமன்ட் போட்டவங்க எல்லாருக்கும் ரெட்டைப் பிள்ளை பிறந்து அவஸ்த்தை பட என்னுடைய வாழ்த்துக்கள்!

முரளிகண்ணன் said...

நல்லாயிருக்கு ஆதி

ராஜா | KVR said...

நீங்க சொல்றது கொஞ்சம் கம்மி தான். டெர்ரர் லெவல் இன்னும் அதிகம் ஆகும்ன்னு தோணுது. மயில் சொன்ன மாதிரி ஆகலாம் :-).

எங்க வீட்டு வாலு இப்போதைக்கு லேப்டாப்பில் மூணு பட்டன், அவங்க அம்மா மொபைலை மட்டும் பதம் பார்த்திருக்காங்க. போகப்போக எவ்ளோ ரகளைகள் பாக்கி இருக்கோ...

மணிநரேன் said...

நன்றாக இருந்தது.
அழகான தருணங்கள்.
ரசித்து மகிழுங்கள்.:)

அறிவிலி said...

இதுவும் ஒரு தனி சுகம். ரெண்டு நாள் இல்லாட்டி பாருங்க வீடே ஓஓஓஓன்னு இருக்கும். போரடிச்சுரும்.

டக்ளஸ்....... said...

\\அய்யா டக்ளஸ் ஒரு கை கொடுகிறது.\\

நம்ம அங்கிளுக்கு இல்லாத்தா..?
ரெண்டு கையுமயே தாரேன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அமித்து.!
நன்றி அக்பர்.!
நன்றி தென்றல்.!
நன்றி ட்ரூத்.!
நன்றி அப்துல்.!
நன்றி செல்வா.!
நன்றி தமிழ்பறவை.!
நன்றி பாலா.!
நன்றி ராமலக்ஷ்மி.!

நன்றி புன்னகை.! (நல்ல சாபம் குடுக்குறீங்க.. அப்படியே கால வாறிட்டிங்களே.. அவ்வ்வ்)

நன்றி முரளி.!
நன்றி ராஜா.!
நன்றி மணிநரேன்.!
நன்றி அறிவிலி.!
நன்றி டக்ளஸ்.!

அ.மு.செய்யது said...

உங்க‌ளோட‌ ட்ரெட் மார்க் ப‌திவு !!! க‌ல‌க்க‌ல்ணே !!!

ர‌சித்து ப‌டித்தேன் 2 முறை !

வாழவந்தான் said...

:-)
நீங்க என்ன பாடு படுத்துநீங்கனு உங்க அம்மாவ கேட்டா அவங்க இதை விட அதிகமா சொல்வாங்க. பாவம் சின்ன குழந்தைக்கா அலறுறது

சென்ஷி said...

க்ளாஸ் ஆதி!

Anonymous said...

நல்லா இருக்கு ஆதி.

இப்பத்தான் உன்னுடைய ஸ்டேண்டேர்டு பதிவுகள் வர ஆரம்பிக்குது.

என்ன இதுக்கே அலுத்துக்கிற. இன்னும் ஓட்டலுக்கெல்லாம் கூட்டீட்டுபோக ஆரம்பிச்ச பின்னாடிதான் தெரியும். கல்லாவில் இருப்பவர் போட்டிருக்கும் கண்ணாடிதான் வேணும்னு அடம் பிடிச்ச குழந்தைங்க இருக்கு தெரிஞ்சுக்கோ.

Cable Sankar said...

இன்னும் ஆரம்பிக்கவேயில்ல.. அதுக்குள்ளேயேவா..?

வெங்கிராஜா said...

ஹய்யா... எனக்கு நெம்ப சந்தோஷமா இருக்குது!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி செய்யது.!
நன்றி வாழவந்தான்.!
நன்றி சென்ஷி.!
நன்றி வேலன்.! (என்ன பண்றதுனே புர்ல..)
நன்றி கேபிள்.!
நன்றி வெங்கி.!

" உழவன் " " Uzhavan " said...

அடடா.. நமக்கு இப்பவே வயித்துல புளிய கரைச்சமாதிரி இருக்கே.. அவ்வ்வ்வ் :-)

மங்களூர் சிவா said...

haa haa
super super!!

☼ வெயிலான் said...

ம்......... இன்னொரு புலம்பல்கள் பக்கம் ஆரம்பிக்கணும் போல இருக்கே சுபாவுக்காக.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி உழவன் (இன்னா, யூத்து மாதிரி பீலா விடுறீங்களா தல..)

நன்றி சிவா, வெயிலான்.!

Saravana Kumar MSK said...

சான்ஸே இல்லாத பதிவு.. செம அருமையா எழுதி இருக்கீங்க.
அல்டிமேட்..

மயிலின் பின்னூட்டமும் அப்படியே..

Saravana Kumar MSK said...

//அய்யா ஜாலி//
Rippeettu..

(நானும் கல்யாணம் ஆகாத சிறுவன் என்பதால், இப்பின்னூட்டம்.)

cheena (சீனா) said...

வாழ்க வாழ்க - ஆதி - ரமா - சுபா - வாழ்க வாழ்க

நல்வாழ்த்துகள்