Friday, July 17, 2009

இடைப்பட்ட நேரத்தின் எரிதல்

ரமாவுக்கு சினிமா பார்க்கும் வழக்கம் கிடையாது. டிவியும் கூட விரும்பிப் பார்ப்பதில்லை. இதனால் சில நன்மைகளையும் சில இடர்களையும் நான் உணர்ந்திருக்கிறேன். நாளைக்கு யாராவது முதல்முதலாக ஜோடியாக பார்த்த சினிமா எதுவென கேட்டு பதில் இல்லாத சூழலில் சிக்கிவிடக் கூடாதே என பயந்து நான் அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்ற படம் "கண்டநாள் முதல்". பின்பொரு சமயம் கண்ணனின் தவிர்க்க இயலாத ஏற்பாட்டில் 'இம்சை அரசன்' பார்த்தோம். இந்த இரண்டுதான் நாங்கள் பார்த்த சினிமாக்கள். அப்படிப்பட்ட அவர் நேற்று டிவியில் வந்த ஒரு சினிமா விளம்பரத்தைக்கண்ட போது என்னைப்பார்த்து இப்படிக்கேட்டார்..

"என்னங்க, கம்பல்சரி படம் எடுக்கணும்னு எதாவது ரூல்ஸ் இருக்காங்க.? யாரையாவது வச்சு எப்படியாவது படம் எடுத்தே ஆகணும்னு எடுப்பாங்களோ.?"

**********

வழக்கமாக விருதுகளோ, தொடர்பதிவுகளுக்கான அழைப்புகளோ எல்லோரும் எல்லோருக்கும் வழங்கி வேறு யாருமில்லை என்ற நிலையில்தான் நம்மை வந்து சேரும். இந்தமுறை அப்படி தாமதமாகாமல் விரைந்தே வந்து சேர்ந்தது ஒரு விருது. செந்தழலால் உருவாக்கப்பட்ட அடுத்த பிளாகர் விருதை (நமக்கென்ன ஸ்டேட் இருக்கிறதா, சென்ட்ரல் இருக்கிறதா விருது வழங்க.? நமக்கு நாமே வழங்கிக்கிறதுதான்) நண்பர் அ.மு.செய்யது நமக்கு சில பெரிய கைகளோடு சேர்த்து வழங்கியிருக்கிறார். அவருக்கு நன்றி. வழக்கம் போல அதை நாமும் நமக்கு பிடித்தவர்களுக்கு (6 பேர், அப்பதான் சீக்கிரம் எல்லோரையும் வந்தடைந்துவிடும்) வழங்கவேண்டும். இதோ எனது பரிந்துரை. அனைவரும் தயைகூர்ந்து அன்போடு பெற்றுக்கொண்டு பிறருக்கும் வழங்குங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.**********

விதி வலியது. லிஸ்டில் இருக்கும் ஒரு படத்தைக் காணச்சென்று தியேட்டர் வாசலில் வைத்து அறிய நேர்ந்தது படத்தை மாற்றிவிட்டார்கள் என்று. அலைச்சலை வேஸ்ட் ஆக்கவேண்டாமென்று அரை மனசோடு பார்க்க முடிவு செய்த படம் வாமனன். வழக்கம் போல தவறான முடிவு. இயக்குனர் விரும்பும் வண்ணம் கேரக்டர்கள் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு விதமாக புத்திசாலித்தனம், மொண்ணைத்தனம், கொள்கைத்தனம், சொம்பைத்தனம் என்று கடுப்படிக்கிறார்கள்.

யார் எவரென்றே தெரியாத ஹீரோவின் மீது அன்பைப்பொழியும் ஹீரோயின் மற்றும் அவரது அம்மா அவர் மீது கொலைப்பழி விழுந்ததும் என்ன செய்வார்கள்? அதிகபட்சம் விரட்டிவிடுவார்கள்தானே. இங்கே என்னவோ அவர்கள் கத்தி கூப்பாடு போடுகிறார்கள்.. 'ஐயோ படுபாவி, எங்கள் வாழ்க்கையையே நாசப்படுத்திவிட்டாயே, நம்பி மோசம் போனோமே' என்று கதறுகிறார்கள். நமக்கு என்னவோ நாம் ஏதும் தூங்கிவிட்டோமா? ஹீரோயினை ரேப் செய்துவிட்டாரோ ஹீரோ என சந்தேகம் வருகிறது.

இன்னொரு கேரக்டர் வருகிறது பாருங்கள்.. கொடுமைடா சாமி. தலைவாசல் விஜய் போலீஸ் கமிஷனராம். ஒரு அடியாளைப்போல வில்லன் அருகிலேயே நிற்கிறார். வில்லனுக்கு கோபம் வந்தால் அவரை 'போடா நாயே' என்று திட்டுகிறார். அடிக்க வருகிறார். பள்ளிப்பிள்ளைகள் ஒருவரை ஒருவர் தள்ளிவிடுவார்களே அதுபோல தள்ளிவிடுகிறார். அவருக்குப்பக்கத்தில் மொட்டைத்தலையும், உள்பனியனும் போட்டு இன்னொரு அடியாள். அவருக்கு படம் முழுதும் எங்கு சென்றாலும் அதே காஸ்ட்யூம். சட்டையே அவரிடம் இல்லை போலிருக்கிறது. எல்லாம் தலையெழுத்து.

**********

குட்டிக்கவிதை

நிகழ்வுக்கு முன்னர் மிளிர்கிறாய்..
நிகழ்வுக்குப் பின்னர் ஒளிர்கிறாய்..
இடைப்பட்ட நேரத்திலோ.. எரிகிறாய்.!


**********

'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்திய சிறுகதைப்போட்டியின் முடிவுகள் தவிர்க்க இயலாத காரணங்களால் ஆகஸ்ட் முதல் வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிகச்சரியாக 250 கதைகள் களத்தில் உள்ளன. எல்லோரையும் போல நானும் முடிவுகள் அறிய மிகுந்த ஆவல் கொண்டுள்ளேன். சிறிது ஏமாற்றம்தான் எனினும் கடும்பணி என்பதால் காத்திருக்கலாம், தவறில்லை. நண்பர்கள் சிலர் செய்ததைப்போல நானும் அனைத்து கதைகளையும் படிக்க ஆவல்கொண்டு முயன்றேன். சுமார் 60 கதைகள் வரை படித்தேன்.. முடியல.. நண்பர்களும் 80, 100 களில் தோல்வியை தழுவியதை அறியமுடிகிறது. நடுவர்களை நினைத்து கொஞ்சம் பரிதாபம் தோன்றினாலும் வாழ்த்துவோம் அவர்களை இந்த நற்பணிக்காக.

*

தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டுகள் தவிர்த்து மறக்காமல் வலதுபுறம் தேர்தலிலும் ஓட்டுப்போட்டீர்கள்தானே..

29 comments:

biskothupayal said...

விருதுக்கு வாழ்த்துக்கள்!!
விருது பெற்ற அனனவருக்கும் வாழ்த்துக்கள்!!

மணிகண்டன் said...

***
நடுவர்களை நினைத்து கொஞ்சம் பரிதாபம் தோன்றினாலும் வாழ்த்துவோம் அவர்களை இந்த நற்பணிக்காக
***

நிச்சயமா. நான் தேர்ந்தெடுத்த கதைகளோ என்னவோ. ஒரு பத்து கதை படிச்சவுடனயே எனக்கு நடுவர்களின் போன ஜென்ம கர்மாக்களில் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மேல் ஒரு பரிதாபம் தோன்றியது.

அ.மு.செய்யது said...

விருதை ஏற்று கொண்டு பகிர்ந்தளித்ததற்கு நன்றிகள்.

பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

// குட்டி கவிதை // நீங்க எழுதுனதா ?? நல்லா இருக்கு..

அமிர்தவர்ஷினி அம்மா said...

விருதுக்கும் + விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Karthik said...

டெம்ப்ளேட் சூப்பரா இருக்குங்க! (நான் இப்போதான பார்க்கிறேன்?)

வாழ்த்துக்கள்! :)

கே.ரவிஷங்கர் said...

விருதுக்கு நன்றி.சந்தோஷம்தான்.
ஏற்கனவே ஒருத்தர் கொடுத்து கழுத்தில் உறுத்தி இப்பத்தான் கழட்டி வைத்தேன்.


விருதுகளுக்குப் பதிலா பின்னூட்டம் போட்டு ஊக்கப்படுத்துங்கப்பா.இது பெஸ்ட்.ஒரு நல்லப் பதிவைப் படித்தோம் என்றால் அப்பவே ஒரு பின்னூட்டம். இது ஒரு உலக மகா பூஸ்டர் டானிக்.

நாஞ்சில் நாதம் said...

:)))))))))

MayVee said...

naanum

:)))

podugiren

புதுகைத் தென்றல் said...

விருதுகளுக்குப் பதிலா பின்னூட்டம் போட்டு ஊக்கப்படுத்துங்கப்பா.இது பெஸ்ட்.ஒரு நல்லப் பதிவைப் படித்தோம் என்றால் அப்பவே ஒரு பின்னூட்டம். இது ஒரு உலக மகா பூஸ்டர் டானிக். //

அழகா சொல்லியிருக்கீங்க ரவிஷங்கர்

எவனோ ஒருவன் said...

விருதுக்கு வாழ்த்துக்கள்.
---
//அலைச்சலை வேஸ்ட் ஆக்கவேண்டாமென்று அரை மனசோடு பார்க்க முடிவு செய்...//
உங்கள மாதிரி ஆளுங்களாலதான்...
---
குட்டிக்கவிதை சூப்பர்.
நானும் பக்கம் பக்கமா ட்ரை பண்றேன், ஆனா இந்த மாதிரி த்ருப்தி வரல, கடைசி வார்த்தையில் அனைத்தையும் அடக்கியிருப்பது அழகு.
---
//நடுவர்களை நினைத்து கொஞ்சம் பரிதாபம் தோன்றினாலும் //
கொஞ்சம் கஷ்டம்தான் அவர்கள் பாடு.
//வாழ்த்துவோம் அவர்களை இந்த நற்பணிக்காக.//
வாழ்த்தலாம் வாங்க.

புதுகைத் தென்றல் said...

விருதுக்கு வாழ்த்து.

இடைப்பட்ட நேரத்தின் எரிதல் அவியல் மாதிரி வந்திருக்கு.

கதிர் said...

விருதுக்கு
வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

விருது வாங்கிய உங்களுக்கும்,
உங்களால் வழங்கப் பட்ட மற்றவருக்கும்
வாழ்த்துக்கள்!

ஹிஹி. உரையாடல் போட்டி பற்றிய தகவலுக்கு நன்றி.

T.V.Radhakrishnan said...

வாழ்த்துக்கள்!!

புன்னகை said...

விருதுக்கு வாழ்த்துக்கள்! குட்டிக் கவிதை நல்லா இருக்கு!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி பிஸ்கோத்து.!
நன்றி மணிகண்டன்.!
நன்றி செய்யது.! (யோவ் வேற ஆள் எழுதுனதுன்னா பேர் போடுவோம்யா..)

நன்றி அமித்து.!
நன்றி கார்த்திக்.! (நீங்க எவ்ளோ நாட்களூக்கு ஒரு தபா வர்றீங்கன்னு தெரிஞ்சுபோச்சு..)

நன்றி ரவிஷங்கர்.! (சொல்லிட்டீங்கல்ல.. போட்டுடலாம் பாஸ்)

நன்றி நாஞ்சில்.!
நன்றி மேவீ.!
நன்றி ஃபிரெண்ட்.!
நன்றி எவனோ ஒருவன்.!
நன்றி கதிர்.!
நன்றி ராமலக்ஷ்மி.!
நன்றி டிவிஆர்.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி புன்னகை.!

பாலா said...

kavithai thaan higtlight

☼ வெயிலான் said...

விருதுக்கு வாழ்த்துகள்.
விருதுக்கு நன்றிகள் ஆதி!

Cable Sankar said...

/ சுமார் 60 கதைகள் வரை படித்தேன்.. முடியல.. நண்பர்களும் 80, 100 களில் தோல்வியை தழுவியதை அறியமுடிகிறது. //

நல்ல வேளை நம்ம கதை 171தான்..:)

அறிவிலி said...

மிகவும் நன்றி ஆதி.

நாடோடி இலக்கியன் said...

வாழ்த்துகளுடன் நன்றியும் ஆதி..!

Mahesh said...

"வாமனன்" படமெல்லாம் கடைசி வரைக்கும் உக்காந்து பாத்தீங்களா? அதுக்கே எதாவது விருது தனியா குடுக்கணும்....

அடடா.. என் கதை 81 படிக்கலயா அப்ப? போனாப் போகுது... நான் பரிசு வாங்கினதும் படிங்க :)

Mahesh said...

மிஸ்டர்.அறிவிலி.... ப்ளீஸ் நீங்க எனக்கு அந்த விருதை பாஸ் பண்ணாதீங்க... ப்ளீஸ்.. எனக்கு இந்த விருதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல... குடுக்காதீங்க... சொன்னா கேளுங்க...ப்ளீஸ்... எவ்வளவு சொன்னாலும் கேக்க மாட்டீங்களே? சரி.... :)))))))))))))))))))))

மங்களூர் சிவா said...

கவித கவித

ச்சும்மா அதிருதுல்ல
:)))

வால்பையன் said...

சுவாரஷ்ய வலைபதிவுக்குச் சரியான விருது தான்!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி பாலா.!
நன்றி வெயிலான்.!
நன்றி கேபிள்.!
நன்றி அறிவிலி.!
நன்றி இலக்கியன்.!
நன்றி மகேஷ்.!(ரசித்தேன்)
நன்றி சிவா.!
நன்றி வால்பையன்.!

செல்வேந்திரன் said...

விருதை எனக்கு வழங்கி விருதிற்கு கவுரவம் சேர்த்த தாமிராவைப் பாராட்டுகிறேன்.

Saravana Kumar MSK said...

//"இடைப்பட்ட நேரத்தின் எரிதல்"//
கவிதை செம. இந்த தலைப்பு கூட.