Monday, July 20, 2009

நட்பூ.!


எந்த சப்ஜெக்ட் என்றாலும் தத்துவம் மற்றும் சென்டிமென்டுகளைப் புழிவது என்றாலே எனக்கு கொஞ்சம் அலர்ஜிதான். நிஜத்தில் எனக்கும் உறவுகள், நட்புகளிடம் மிகுந்த சென்டிமென்ட்ஸ் உண்டு என்பதுதான் உண்மை.
நட்பு அரியது.
இடுக்கண் களைவது மட்டும்தான் நட்பா என்ன? உணர்வுகளும் ரசனையும் ஒன்றிப்போனால் நேரில் பார்த்திரவே செய்யாமலும் கூடத்தான் நட்பு பூக்கிறது. ஒவ்வொரு காலகட்டங்களிலும் நண்பர்களை வலியோடு பிரிந்துவந்திருக்கிறோம். ஆனால் அவர்களுடனான நட்பு மட்டும் மனதோடு இருக்கத்தான் செய்கிறது. சரி.. எந்த கொசுவத்திக்கும் இடமளிக்காமல் நேரே விஷயத்துக்கு வந்துவிடுகிறேன். வலையுலகில் சச்சரவுகள், குழப்பங்கள் நேர்ந்து வருந்தியிருந்த இந்த நேரத்தில் விருதுகள் சீசன் துவங்கியிருப்பது ஆறுதல். இப்போதுதான் சுவாரசிய விருது கிடைத்த கையோடு இன்னொன்று திரு.ரங்கா உருவாக்கி புதுகைத்தென்றல் மூலமாக என்னை விரைந்துவந்து சேர்ந்திருக்கும் 'நட்பு விருது'. இப்படிப்பட்ட விருதுகள் தனிப்பட்டவர் அவரது விருப்பப்படி இன்னொருவருக்கு வழங்குவதாக அமைகிறது. தகுதிவாய்ந்த ஒரு குழுவாலோ, வாசகர்களாலோ தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டால் மட்டுமே அது நிஜமான தகுதியுடையதாக இருக்கும். தாங்கள் உருவாக்கிய இலச்சினை எவ்வளவு தூரம் பரவுகிறது என்று காணும் சுயநலம் இதில் கலந்துவிட்டால் அந்த விருதுகளுக்கும் மதிப்பு இருக்காது, அந்த இலச்சினைகளை வைத்துக்கொள்ள வலைப்பூவிலும் இடம் இருக்காது.

நட்புச்சங்கிலியை உருவாக்கும் வாய்ப்பிருப்பதால் இந்த விருதை தோழி புதுகைத்தென்றலிடமிருந்து மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வதுடன் நானும் என் நண்பர்களுக்கு இவற்றை அளிக்கிறேன். சிறந்த/ சுவாரசிய படைப்புகள் என்றல்லாது நட்புக்கு இந்த விருது வாய்ப்பளிப்பதால் வலையுலகம் தாண்டியும் நட்பு ஏற்பட்ட பதிவர்களுக்கு இதை அளிக்கிறேன். அப்படிப்பார்த்தால் பலருடன் இனிய நட்புடன் பழகும் வால்பையன் போன்ற நண்பர்களுக்கு பல திசைகளிலிருந்தும் இந்த ஒற்றை விருது குவிந்துவிடும் வாய்ப்பிருப்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

நேசமனம் கொண்ட அன்பு அண்ணன் புதுகை அப்துல்லா
நல்ல புரிதல் கொண்ட அன்புத் தம்பி கார்க்கி
அனைவரிடமும் அன்பைக்காணும் அன்பு அண்ணன் பரிசல்காரன்
கள்ளமில்லா வெள்ளைமனம் கொண்ட அன்பு அண்ணன் வெண்பூ
காதல் வழியவழியப் பெருகும் அன்புத் தம்பி ஒற்றைஅன்றில் ஸ்ரீ
இடுக்கண் தேடிக்களையும் அன்பு அண்ணன் வடகரை வேலன்
பாசமும் பரிவும் நிறைந்த அன்பு அண்ணன் அனுஜன்யா
மயக்கும் சொல்லிலும் அன்பு கொண்ட அன்புத் தம்பி செல்வேந்திரன்
ஆர்வம் பொங்கிப்பெருகும் அன்பு அண்ணன் கேபிள்சங்கர்
இனம்புரியாத ஈர்ப்பினால் விழைந்த நட்பின் அன்புத் தோழன் அதிஷா

வலைப்பூ துவங்கிய காலத்திலேயே பழக்கம் ஏற்பட்டு உதவிகளையும், ஊக்கங்களையும் தந்த வலை தாண்டி நட்பு ஏற்பட்ட மேற்குறித்த நண்பர்களுக்கு இந்த நட்பு விருதை வழங்குவதில் மனம் மகிழ்கிறேன். இனிய தோழர் நர்சிம்முக்கு இந்த விருது ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. இன்னும் நான் நேரில் பழகும் வாய்ப்பு கிடைத்த இனிய நண்பர்கள் முரளிகண்ணன், மகேஷ், வால்பையன், வெயிலான், கும்க்கி, குசும்பன், தராசு, ச்சின்னப்பையன், தமிழ்பிரியன், அத்திரி, ரம்யா என இன்னும் நான் வழங்க விரும்பும் பட்டியல் மிகப்பெரிதாகத் தொடர்கிறது எனினும் நானே அனைவருக்கும் வழங்கி பிறரின் வாய்ப்புகளை தடுப்பது நியாயமல்ல என்பதால் அவர்கள் அனைவருக்குமே என் அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

.

இந்தப்பதிவுக்கு தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடமாட்டீங்கன்னு தெரியும். அட்லீஸ்ட் மறக்காம வலது புறம் தேர்தலில் ஓட்டு போட்டுட்டுப் போங்க..

.

27 comments:

ஊர்சுற்றி said...

அடுத்தும் ஒரு விருதா...!!!

எவனோ ஒருவன் said...

அடுத்த விருதா? ஓக்கே ஓக்கே... எப்படியும் சுத்தி சுத்தி நம்ம கிட்டயும் வரும். நெனச்சா சந்தோசமாத்தான் இருக்கு.
---
ஓட்டு எல்லாம் போட்டோமே, ரிசல்ட் எப்போ சொல்வீங்க?

Cable Sankar said...

உங்கள் மனதில் உள்ள்தே போதும் ஆதி..

RAMYA said...

விருதுக்கு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
ஆதி.

உங்களிடம் இருந்து விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்
ஆதி.

நீங்கள் உங்கள் நண்பர்கள் பட்டியலில் எனது பெயர் சேர்த்திருக்கிறீர்களே
அதுவே எனக்கு நீங்கள் அளித்த மிகப் பெரிய விருது என நான் கருதுகிறேன்.
நன்றி ஆதி!!

RAMYA said...

எதையும் எதிர்பார்க்காமல் விளையும் நட்பு இருக்கிறதே அது மிகப் பெரிய சொத்து ஆதி.

அந்த நட்பு பூக்கள் நம்மைச் சுற்றி என்றுமே ஒரு பாதுகாப்பு வளையமாக
இருக்கும்.

jothi said...

//அந்த நட்பு பூக்கள் நம்மைச் சுற்றி என்றுமே ஒரு பாதுகாப்பு வளையமாக
இருக்கும். //

உண்மைதான். உண்மையான நட்பைவிட பாதுகாப்பானது எது?,. சொந்தங்களையும் சேர்த்து,..

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

வஷிஸ்டர் கையில் நானும் ஒரு நாள் விருது வாங்குவேன். என்னங்க ஆதி??

T.V.Radhakrishnan said...

வாழ்த்துக்கள்
ஆதி.

தமிழ் பிரியன் said...

வாழ்த்துக்கள் ஆதி அண்ணே! நாலுக்கு ரெண்டு பழுதில்லைக்கு ஓட்டுப் போட்டு இருக்கேன்.. (மனசாட்சிக்கு கட்டுப்பட்டு). ;-))

அப்பாவி முரு said...

என்னையா இது டெண்டுல்கர் வீட்டு கேலரி மாதிரி ஆகிடும் போலிருக்கே நம்ம ப்ளோக்

:)))

'இனியவன்' என். உலகநாதன் said...

விருதுகளுக்கு வாழ்த்துக்கள் ஆதி.

Mahesh said...

நட்பூ... தா(மரை)மிராப்பூ.. சூப்பரப்பூ...

ஆ.முத்துராமலிங்கம் said...

வாழ்த்துக்கள்! (இது ஒன்னு போதும் பிண்ணூட்டம் போட!!!)

டக்ளஸ்... said...

\\ இலச்சினை\\

இந்த வார்த்தை புதுசா இருக்கு அங்கிள், அர்த்தம் சொல்ல முடியுமா..!
அட. சீரியஸாத்தான் கேக்குறேன்.

கும்க்கி said...

Cable Sankar said...

உங்கள் மனதில் உள்ள்தே போதும் ஆதி....

ATHEY...ATHEY.

தராசு said...

தல,

டேங்சு.

தம்பி, டக்ளசு, இலச்சினைனா முத்திரைன்னு அர்த்தம்ப்பா,

நாஞ்சில் நாதம் said...

:))))

புதுகைத் தென்றல் said...

நட்பூ அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

இளையராஜா said...

வாழ்த்துக்கள்

எம்.எம்.அப்துல்லா said...

மிக்க நன்றி அண்ணே. ஆமா விருது குடுத்துதானா நம் நட்பை நிரூபிக்கணும்??

எம்.எம்.அப்துல்லா said...

// அப்பாவி முரு said...
என்னையா இது டெண்டுல்கர் வீட்டு கேலரி மாதிரி ஆகிடும் போலிருக்கே நம்ம ப்ளோக்

//

முரு அண்ணே சமீபத்தில் நான் படித்த பின்னூட்டங்களில் சரியான டைமிங் பின்னூட்டம் இதுதான். மனம்விட்டு இரசித்துச் சிரித்தேன்

MayVee said...

:))

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஊர்சுற்றி.!
நன்றி எவனோஒருவன்.!
நன்றி கேபிள், ரம்யா.! (சும்மா உதார் விடாதீங்க, உங்க நட்புக்கு நான்தான் பெருமைப்பட்டுக்கணும்)

நன்றி ஜோதி.! ((என்னைக்கிழவன்னு சொல்ற்றதுல அப்படி என்னையா உங்களுக்கு சந்தோசம்?)

நன்றி டிவிஆர்.!
நன்றி தமிழ்.! (ஹிஹி.. ஏதோ அந்தமட்டுக்குமாவது இருக்குதே..)

நன்றி முரு.! (ஆனாலும் நக்கல் ஓவரு..)

நன்றி இனியவன்.!
நன்றி மகேஷ்.!
நன்றி முத்துராமலிங்கம்.!
நன்றி டக்ளஸ்.! (தராசு பதிலைப் பார்க்கவும்)

நன்றி கும்க்கி.!
நன்றி தராசு.! (ஐகான்னு தமிழிலும் சொல்லலாம்)

நன்றி நாஞ்சில்.!
நன்றி தென்றல்.!
நன்றி இளையராஜா.!
நன்றி அப்துல்.!
நன்றி மேவீ.!

வால்பையன் said...

உங்க அன்பு ஒன்றே பல விருதுகளுக்கு சமம்ணே!

வாழ்த்துக்கள் அனைவருக்கும்!

அ.மு.செய்யது said...

//ஒவ்வொரு காலகட்டங்களிலும் நண்பர்களை வலியோடு பிரிந்துவந்திருக்கிறோம். ஆனால் அவர்களுடனான நட்பு மட்டும் மனதோடு இருக்கத்தான் செய்கிறது. //

மிகச்சரி !!!

வாழ்த்துக்கள் அனைவரது மனதிலும் இடம் பிடித்தமைக்கு...விருதுக்கும்...

☼ வெயிலான் said...

முதல் சந்திப்பிலேயே சகோதரர்களாகி விட்டோம். நட்பும் அதிலடக்கம்.

நன்றி சகோதரா!

அத்திரி said...

வாழ்த்துக்கள் அண்ணே

பாலா... said...

/இந்தப்பதிவுக்கு தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடமாட்டீங்கன்னு தெரியும். அட்லீஸ்ட் மறக்காம வலது புறம் தேர்தலில் ஓட்டு போட்டுட்டுப் போங்க../

யாரு சொன்னா. போட்டுட்டம். வாழ்த்துகள்.