Wednesday, July 22, 2009

கீழப்பாவூரில் நடந்தது என்ன?

கீழப்பாவூரில் நடந்தது என்ன? (கண்ணன் கதை 2)

இன்று எப்படியும் கீழப்பாவூருக்கு போய்விடுவது என்று காலையிலேயே முடிவு செய்தாயிற்று. எனக்குதான் கொஞ்சம் பயமாகவும், திரில்லாகவும் இருந்தது. உள்ளுக்குள் விருப்பம்தான், இருப்பினும் 'வேண்டாம் வேண்டாம் எதுக்குடா அதெல்லாம்?' என்று சும்மா பம்மாத்து காண்பித்துக்கொண்டிருந்தேன். கண்ணன் எனக்கு நிஜமாகவே விருப்பமில்லை என்று நினைத்துக்கொண்டு என்னை தாஜா செய்துகொண்டிருந்தான். நானும் கடைசியில் மனமின்றி ஒப்புக்கொள்வதைப்போல சரியென்று தலையாட்டினேன். யாராவது பார்த்துவிட்டால் மானம் போய்விடும்.

"தென்காசியிலயே வெளிய சுத்துனா நம்மள பாக்குறதுக்கு ஒரு நாதி கிடையாது, கீழப்பாவூர்லயா தெரிஞ்ச ஆள் வரப்போவுது?" என்றேன் நான்.

அதற்கு கண்ணன், "அட லூசே.. சுத்துபட்டி பதினாறு ஊர்லருந்தும் ஆள் வருவாங்கடா அங்க" என்று என் கிலியை அதிகப்படுத்தினான்.

அதற்காக திட்டத்தையா கைவிடமுடியும்? இரவு இரண்டாம் காட்சிக்கு செல்வதாய் முடிவு செய்யப்பட்டது. அப்படி எங்கதான் போறதுக்கு பிளான் போடப்பட்டது என்று கேட்கிறீர்களா? சென்னைக்காரர்களுக்கு புரியுற மாதிரி சிம்பிளாக சொல்வதென்றால் பழைய 'பரங்கிமலை ஜோதி' என்றால் போதும். அப்பேர்க்கொத்த இன்னொரு தலம்தான் 'கீழப்பாவூர் மணி', நெல்லை மாவட்டத்தின் மேற்குப்பகுதி வாழ் மக்களுக்கு சேவை செய்துகொண்டிருந்த ஒரு திரையரங்கம்.

பாவூர்சத்திரத்தில் நண்பன் ஒருவனின் அறையில் தங்குவதற்கு முன்னேற்பாடு செய்யப்பட்டு, அங்கிருந்து வாடகை சைக்கிளில் செல்வதாக திட்டம். காலையிலிருந்தே திரில் துவங்கியிருந்தது. சண்முகம் வேறு போலீஸ், ரெய்டு என்று இன்னும் கொஞ்சம் பயத்தை கிளப்பியிருந்தான். மாலையில் நிஜமாகவே திட்டத்தை கேன்சல் செய்துவிடலாமா என்கிற அளவில் பரபரப்பு கூடியிருந்தது. கண்ணன் உறுதியாக இருந்தான். பயத்தைப் போக்க அடுத்த திட்டமாக ஒரு குவார்ட்டரை வாங்கிவந்து நாலு பேரும் பூஜை பண்ணினோம். இதுவும் அவன் ஐடியாதான். அதற்கே எனக்கு கொஞ்சம் மயக்கம் வருவது போல தோன்றியது.

"வாணாம்டா.. இன்னொரு ரவுண்டு அடிச்சுட்டு இங்கியே படுத்துடலாம்டா" என்றேன்.

"மிதிச்சு நவுட்டிருவேன், ஒனக்கு ஊத்துனதே தப்பு. ஒழுங்கா மரியாதயா எந்திச்சிரு.. கெளம்புவோம்" என்றான். கிளம்பினோம்.

நானும் கண்ணனும் ஒரு சைக்கிள், சண்முகமும் அவன் நண்பனும் இன்னொரு சைக்கிள். தியேட்டரை அடைந்தபோது மணி 9.15. தியேட்டரில் ஒரு நாதியில்லை. வெளியே ஒட்டப்பட்டிருந்த போஸ்டரைப் பார்க்கக்கூட எனக்கு வெட்கம் வெட்கமாய் வந்து தொலைத்தது. பக்கத்திலிருந்த ஒரு டீக்கடைக்குள் தஞ்சம் புகுந்தோம். சண்முகத்துக்கு இதில் ஏற்கனவே அனுபவமிருந்ததால் அவன் திட்டப்படியே எல்லாம் நிகழ்ந்தது.

"முந்துன ஷோ அப்பலயே முடிஞ்சிருக்கும், அதான் ஆளில்ல. செகன்ட்ஷோவுக்கு இந்தமாதிரி படத்துக்கு படம் போட்டப்புறம்தான் கரைட் டயத்துக்கு கூட்டம் வரும்" என்றான் அவன்.

எங்களை விட சின்னப்பசங்க ரெண்டு பேரு எங்கள மாதிரியே கடைக்குள் வந்து பம்மினர். நேரம் செல்லச்செல்ல எல்லா வயதிலும் ஆட்கள் ஒவ்வொருவராய் வரத்துவங்கினர். ஒருவழியாய் டிக்கெட் வாங்கி உள்ளே சென்று 10.10க்கு படம் துவங்கியபோது கூட்டம் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது.

ஒரு பழைய ஆங்கிலப்படம் ஓடத்துவங்கியிருந்தது. 30ஐத்தாண்டியிருந்த ஒரு தம்பதியினரின் வாழ்க்கைப்பிரச்சினை. அந்த ஹீரோ ஒழுங்காக ஆஃபீஸுக்கு போய் வந்துகொண்டிருந்தார். ஹீரோயினுக்கும் அவருக்கும் மனத்தாங்கல். ஹீரோயின் அழத்தயாராவதும் பின் தேற்றிக்கொள்வதுமாய் இருந்தார். இதற்கு மேல் ஒன்றும் புரியவில்லை. படம் முழுதும் பேசிக்கொண்டேயிருந்தார்கள். தியேட்டரிலோ மயான அமைதி. நான் கண்ணனைப்பார்த்தேன். சின்சியராக படத்தில் மூழ்கியிருந்தான். ஒரு மணி நேரம் வரை இதே நிலை.

ஒரே ஒரு காட்சியில் அந்த ஹீரோயின் உடைமாற்றும் நேரத்தில் லேசாக உடை விலகி கண்ணிமைக்கும் நேரம் அவரது உள்ளாடை தெரிந்தது. அதற்கே தியேட்டரில் உய்யென்று ஒரு உற்சாக அலை எழுந்து பின் ஓய்ந்தது. பின் சிறிது நேரத்தில் படம் நிறுத்தப்பட்டு விளக்குகள் போடப்பட்டன. இவ்வளவுக்கும் அந்தப்படம் முடியவேயில்லை. நான் முதலில் இடைவேளையாக இருக்கும் என எண்ணினேன். ஆனால் 'ஏதோ ரெய்டாம்' என்று முனகிக்கொண்டே கூட்டம் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியேறத்துவங்கியிருந்தது.

வெளியே வந்ததும் நான் கண்ணனைப் பார்த்துக்கேட்டேன், "கிளைமாக்ஸ்ல அவங்க ஒண்ணு சேர்ந்திருப்பாங்களாடா.?"

அவன் முகத்தில் ஈயாடவில்லை.. விட்டால் கோபத்தில் சண்முகத்தின் மூக்கிலேயே குத்துவான் போல தெரிந்ததால் எதுவும் பேசிக்கொள்ளாமல் அனைவரும் அமைதியாக அறைக்கு வந்து சேர்ந்தோம்.

.

29 comments:

டக்ளஸ்... said...

மதுரை தங்கரீகல்ல ரெய்டெல்லாம் வராதுப்பா..!
ஆனா, அங்கல்லாம் இப்போ படம் போடுறதே இல்ல.
:(

Mahesh said...

இத்தனைக்கு அப்பறமும் க்ளைமாக்ஸைப் பத்தி கவலைப் பட்டுருக்கீங்களே... அம்புட்டு நல்லவராண்ணே நீங்க??

அ.மு.செய்யது said...

//சிம்பிளாக சொல்வதென்றால் பழைய 'பரங்கிமலை ஜோதி' //

பரங்கிமலை ஜோதின்னா உங்களுக்கு அவ்ளோ சிம்பிளா போச்சா...

கடையடைப்பூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ !!!!!!!

ஆட்டோ ஸ்டிரைக்கு......

நாடோடி இலக்கியன் said...

+2 படிக்கும்போது இப்படி ஒரு அனுபவம்,ஆனா அப்போ தமிழ் சினிமா ஏதோ கரணத்தினால் ஸ்ட்ரெய்க்,அதனால நிறைய தெலுங்கு டப்பிங் படமா வந்தது குறிப்பா 'ரௌடி பாஸ்' என்று சிரஞ்சீவி,ரம்யா கிருஷ்ணன்,ரம்பா நடிச்ச படம்,அந்த படத்த பார்த்தப்போ இருந்த கிளு கிளுப்பு "இந்த" படத்தில இல்ல, இதிலதான் ஒன்னுமே இல்லையே இதுக்கு ஏண்டா எல்லோரும் பயந்து பயந்து வறாங்க என்றேன்.பிறகுதான் தெரிந்தது அங்கே ரெய்ட் நான் போன அன்று.

கார்க்கி said...

ரெய்ட் ரெய்ட்..

சே.. ரைட் ரைட்..டாப் கியர்ல போட்டு அப்படியே தூக்குங்க சகா..

சரி, அப்ப எப்போதான் பார்த்திங்க?

மங்களூர் சிவா said...

/
Mahesh said...

இத்தனைக்கு அப்பறமும் க்ளைமாக்ஸைப் பத்தி கவலைப் பட்டுருக்கீங்களே... அம்புட்டு நல்லவராண்ணே நீங்க
/

:))))))

குசும்பன் said...

//சரி, அப்ப எப்போதான் பார்த்திங்க?//

அந்த அனுபவம் கரும்புகாட்டுக்குள்ளேன்னு ஒரு தொடர் வரப்போவுது! சரிதானே ஆதி?

☼ வெயிலான் said...

அதிஷா காத்து அடிச்சிருச்சா ஆதி?

துபாய் ராஜா said...

பாளையங்கோட்டை 'கலைவாணி' தெரியுமா ??

அந்த தியேட்டர் ஸ்டாப் வந்ததும், 'களவாணி'யெல்லாம் இறங்குன்னு கண்டக்டர் குரல் குடுப்பார் பாருங்க.பஸ்ல இருக்கிற எல்லாரும் சிரிச்சிருவாங்க.:))

நாஞ்சில் நாதம் said...

:-))))))

அனுஜன்யா said...

இங்க என்ன நடக்குது? இங்கயும் ஒரு ரெய்டு செய்யணும் போல இருக்கே!

@ துபாய் ராஜா

//அந்த தியேட்டர் ஸ்டாப் வந்ததும், 'களவாணி'யெல்லாம் இறங்குன்னு கண்டக்டர் குரல் குடுப்பார் பாருங்க.பஸ்ல இருக்கிற எல்லாரும் சிரிச்சிருவாங்க.:))//

ஹா ஹா ஹா. அட்டகாசம்.

அனுஜன்யா

தராசு said...

கண்ணன் கிட்ட இருந்து இன்னம் நெறய எதிர்பாக்குறோம்.

இரா.சிவக்குமரன் said...

:)

pappu said...

மதுரை தங்கரீகல்ல ரெய்டெல்லாம் வராதுப்பா..!
ஆனா, அங்கல்லாம் இப்போ படம் போடுறதே இல்ல.
:(/////
ஆமா :(

ஆமாஅ..... அப்போ கடைசி வரை பிட்டு இல்லயா? :(

bahrain bangali said...

hai verry good

bahrain bangali said...

அய்யோ..பழச எல்லாம் ஞாபகப்படுத்துறாரே....

ஆமா தியேட்டர மூடீரவா செஞ்சுட்டாங்க

கிறுக்கன் said...

சீ டி வந்துருச்சு இன்னும் சினிமாவா?

ஆ.முத்துராமலிங்கம் said...

(எனக்கு இந்த மாதிரி அனுபவம் இல்லை) மேலும் இப்பதிவு சுத்தமாக எனக்கு பிடிக்கவில்லை!!!

(மண்ணிக்கவும் இவ்வளவு அதி வெளிப்படையாக சொன்னதற்கு.)

தருமி said...

அந்த தியேட்டரில் நான் ஐம்பது-அறுபதுகளில் படம் பார்த்த போது இந்த மாதிரியெல்லாம் யாரும் சொல்லலையே... சரி .. அப்ப எல்லாம் ஏது பிட்டு படம் ..!

தருமி said...
This comment has been removed by the author.
தமிழ் பிரியன் said...

ராசா.. பழச எல்லாம் ஞாபகப்படுத்துறீங்களே.. :(

பட்டிக்காட்டான்.. said...

ம்ம்..

அப்படிங்களா..?

குப்பன்_யாஹூ said...

மதுரைல மது திரை அரங்கில் தானே படம் ஓடும், தங்க ரீகல் எங்கு உள்ளே வந்தது.

ஆதி- கீழஅப்பாவூர் மணி, பாளை கலைவாணி களுக்கு மத்தியில் சூப்பர் ஸ்டாரை வந்தது கல்லிடை சக்தி.

கல்லிடை சக்தி பற்றியும் எழுதுங்கள்.

குப்பன்_யாஹூ

ஊர்சுற்றி said...

ரேடியோவில உழவர்களுக்கான செய்திகள்ல மட்டுமே கேள்விப்பட்ட ஊர். ஒரே மாவட்டம்னாலும் பார்க்காத ஊர்.

வெயிலான் said
//அதிஷா காத்து அடிச்சிருச்சா ஆதி?//

:))))

Cable Sankar said...

அப்ப கடைசி வரைக்கு சீனு பாகக்லையா.? :(

அத்திரி said...

அய்யோ பாவம்னே நீங்க............... அப்புறம் எப்பதான் பாத்தீங்க

அத்திரி said...

//துபாய் ராஜா said...
பாளையங்கோட்டை 'கலைவாணி' தெரியுமா ??அந்த தியேட்டர் ஸ்டாப் வந்ததும், 'களவாணி'யெல்லாம் இறங்குன்னு கண்டக்டர் குரல் குடுப்பார் பாருங்க.பஸ்ல இருக்கிற எல்லாரும் சிரிச்சிருவாங்க.:))//

ஹிஹி அப்படியே திருநெல்வேலி டவுன் லஷ்மி தியேட்டரும்........கிகிகி

தத்துபித்து said...

அண்ணே தென்காசி வாஹிநியில நல்லா போடுவாங்கன்னே!
அத வுட்டுடுடீங்களே
வடை போச்சே.....

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி டக்ளஸ்.!
நன்றி மகேஷ்.!
நன்றி சிவா.!
நன்றி குசும்பன்.!
நன்றி வெயிலான்.!
நன்றி துபாய்ராஜா.!
நன்றி செய்யது.!
நன்றி இலக்கியன்.!
நன்றி கார்க்கி.!
நன்றி நாஞ்சில்.!
நன்றி அனுஜன்.!
நன்றி தராசு.!
நன்றி சிவக்குமரன்.!
நன்றி பப்பு.!
நன்றி பங்காளி.!
நன்றி கிறுக்கன்.!
நன்றி தருமி.!
நன்றி குப்பன்.!
நன்றி பட்டிக்காட்டான்.!
நன்றி முத்துராமலிங்கம்.!
நன்றி ஊர்சுற்றி.!
நன்றி தமிழ்பிரியன்.!
நன்றி கேபிள்.!
நன்றி தத்துபித்து.!
நன்றி அத்திரி.!