Monday, July 27, 2009

ஹிஹி.. நன்றிங்க.!

சமீபத்தில் நானும், அலுவலக நண்பர் கேகேவும் (பழைய பதிவுகளில் பார்த்திருப்பீர்கள்) அலுவல் வேலையாக வெளியே சென்றிருந்த போது அவர் எங்கோ செல்போனை தொலைத்துவிட்டார். காணாமல் போன ஐந்து நிமிடத்திலேயே அதை உணர்ந்து என் போனில் இருந்து அழைத்தோம். யாராலோ எடுக்கப்பட்டது.

பிளீஸ் சார் குடுத்துடுங்க, மிஸ் பண்ணிட்டோம் என்று நாங்கள் கேட்குமுன்பே நல்லவிதமாக பேசப்பட்டு நானே கொண்டு வந்து தந்துவிடுகிறேன், எங்கிருக்கீங்க சொல்லுங்க? என்றார் எடுத்தவர். இல்லையில்லை, நாங்களே வந்து வாங்கிக்கிறோம், நீங்க எங்கிருக்கீங்க சொல்லுங்க என்றோம்.

"செண்ட்ரல், ஜிஎச் பக்கத்துல.."

நாங்கள் தொலைத்தது தாம்பரத்தில்.

"அது அவ்வளவுதான், முடிந்துபோன கதை. விட்டுத்தள்ளுங்கள் கேகே"

"போன் போனா பரவாயில்ல எல்லா ஐடி, பாஸ்வேர்டெல்லாம் அதுல வச்சிருக்கேன். ஜிமெயில், ஆபிஸ் ஐடி, நெட் பேங்கிங் இன்னும் எல்லாம்"

"விடுங்க அதெல்லாம் பாஸ்வேர்டுன்னு அவனுக்கு தெரியவா போகுது" என்றேன்.

"பாஸ்வேர்ட்னு ஒரு போல்டர் கிரியேட் பண்ணி தெளிவா போட்டு வெச்சிருக்கேன்"

"கார்டு இல்லாம நெட்டில் ஒண்ணும் பண்ணமுடியாதில்லையா?" என்றேன்.

"அதுசரிதான், அவனால ஒண்ணும் பண்ணமுடியாதுதான். ஜிமெயில் போனா போவுது, ஆனா மற்ற பாஸ்வேர்டுகளுக்கு நான் என்ன பண்றது?" என்றார்.

ஜிமெயில் போனா போவுதா.? சட்.. நான் என் போனில் பாஸ்வேர்ட் போல்டரைத் திறந்தேன்.. அழிப்பதற்காக.!

**********

"ஈ..ந்த நாட்டிலே, ஈ..ந்த நாட்டிற்கு யாரால் சுதந்திரம் கிடைத்தது? யாருக்காக கிடைத்தது? நான் கேட்கிறேன், யாரால் சுதந்திரம் கிடைத்தது? மகாத்மா காந்தியால் கிடைத்தது. அவர் யார்? அவர் ஏ..ன்ன செய்தார்? அரையாடை கட்டினார். நான் கேட்கிறேன். அவர் ஏ..தற்காக அரையாடை கட்டினார்? அவர் ஏ..ன்ன காரணத்துக்காக அரையாடை கட்டினார்? ஏ..ன்ன நோக்கத்துக்காக அரையாடை கட்டினார்? அவர் ஏ..ன்ன..."

முடியல.. சானல் மாற்றினேன். சானல் தாவுகையில் நேற்று காலை இந்தக்கொடுமை கண்ணில் பட்டது. இழுத்து இழுத்து அரசியல் மேடை போல முழங்கிக்கொண்டிருந்தது டி.ஆர். இந்த ஆள் இன்னுமா பொழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்? அவர் முழங்கியது 'அரட்டை அரங்கம்'. இந்த நிகழ்ச்சி இன்னுமா நடந்துகொண்டிருக்கிறது?

ஹூம். ஆனாலும் நம் மக்களின் பொறுமைக்கும், ரசனைக்கும் அளவே இல்லைதான்.

**********

எப்படியோ ஒரு தரமான பதிவு (ஹிஹி..) எழுதிடறோம்னு வையுங்க, அதைப் பாராட்டி பின்னூட்டமோ மெயிலோ வந்தால் பிரச்சினை இல்லை. பதிலுக்கு நாமும் நன்றி சொல்லி எழுதிவிடலாம். ஆனால் சமயங்களில் நம் பதிவு அவர்கள் நெஞ்சைத் தொட்டுவிடுவதால் போன் போட்டே பாராட்டிவிடலாம் என எண்ணி அப்படியே போனும் செய்துவிடுகிறார்கள் (இது எப்போ நடந்ததுங்கிறீங்களா? உஸ்.. முதல்ல கதையை கேளுங்க). இங்கேதான் பிரச்சினை ஆகிவிடுகிறது. வழக்கமாக பதிவர்களுடன் போனில் பேச நேர்கையில் 'பதிவர் சந்திப்பா? என்னைக்கு? எப்போ? எங்கே?' என்பதாக இருக்கும். அல்லது 'என்ன இருந்தாலும் அவர் அப்பிடி எழுதிருக்கக்கூடாதுதான், ஆமா அவரு என்ன எழுதுனார்னு சொன்னீங்க?' அல்லது 'எங்க அடையார் சங்கீதாதானே, அதெல்லாம் சரியா வந்துடுவேன்' என்பது போன்ற விஷயங்கள்தான் பேசப்படும்.

சமீபத்தில் ஒரு பிரபல பதிவர் அழைத்தார்,

"ஆதி, எப்பிடியிருக்கீங்க?"

"நல்லாயி.." முடிக்கவில்லை அதற்குள்ளாக..

"வேற ஒண்ணுமில்ல, இன்னிக்கி போட்டிருக்கீங்களே ஒரு பதிவு. கலக்கிட்டிங்கங்க.."

சொதப்பிட்டீங்கங்க என்பதாய் காதில் விழுந்து உண்மையில் கலாய்க்கிறாரா, பாராட்டுகிறாரா என்பது தெரியாமல் மையமாய், "..ஹிஹி.."

"நிஜமாத்தான்ங்க.. அப்படியே பின்னீட்டிங்க.."

"அப்டியா சொல்றீங்க.." இன்னும் சந்தேகம்.

"எப்டிங்க இப்பிடியெல்லாம்.? அதான் பாராட்டலாமேன்னு கூப்புட்டேன்"

"..ஹி.."

"இன்னும் எங்கியோ போப்போறீங்க.."

அடுத்தவாரம் ஹைதராபாத் போற பிளான் இவருக்கு தெரிஞ்சிருக்குமோ? அசடு வழிய, "ஹிஹி.. நன்றிங்க.." என்பதாய் ஆகிவிடுகிறது. இந்த பாராட்டு போன்கால்களுக்கு எப்படி பதில் சொல்வது என்பதை யாரால் சொன்னால் தேவலை.

.

27 comments:

தராசு said...

//சமீபத்தில் ஒரு பிரபல பதிவர் அழைத்தார், //

இந்த பிரபலம்ங்கற வார்த்தைக்கு இருக்கற பிரபலம் இருக்கே, ஹூம், என்ன சொல்றது.

நாஞ்சில் நாதம் said...

:))

டக்ளஸ்... said...

\\இந்த பாராட்டு போன்கால்களுக்கு எப்படி பதில் சொல்வது என்பதை யாரால் சொன்னால் தேவலை. \\

சாரி..ராங் நம்பர்...

ஆதிமூலகிருஷ்ணன் said...

Thanks to Tharaasu, Nangil, 'Duck'las.!

Don't forget to Vote in (the right side bar) election.!

Jawarlal said...

அலுப்பு ஏற்படுத்துகிற தொலைகாட்சி நிகழ்ச்சிகள் குறித்து எழுதி இருந்ததை ரசித்தேன். வலையில் எப்படி எழுதினால் அலுப்பின்றி படிப்பார்களோ அப்படி எழுதுகிறீர்கள்.

பாராட்டுக்கள்.

http://kgjawarlal.wordpress.com

துபாய் ராஜா said...

//சமீபத்தில் ஒரு பிரபல பதிவர் அழைத்தார், //

நாட்டுல இந்த பிரபலபதிவருங்க தொல்லை தாங்க முடியலப்பா.....

அன்பை சொன்னேங்க... :))

கே.ரவிஷங்கர் said...

ரசித்தேன்.நல்லா இருக்கு.

Anonymous said...

என்ன பில்ட் அப்பு....

பரிசல்காரன் said...

நல்லாயிருக்குங்க பதிவு.

இருங்க ஃபோன்லயே கூப்டு சொல்லிடறேன்...

அப்பாவி முரு said...

//அவர் முழங்கியது 'அரட்டை அரங்கம்'. இந்த நிகழ்ச்சி இன்னுமா நடந்துகொண்டிருக்கிறது?//

அண்ணோவ், இந்த புரோகிராமுக்கு இன்னும் பெரிய ரசிகர் கூட்டமே இருக்கு.

சாவடிப்பானுங்க. ஞாயத்துக்கிழமை காலை 11 மணிக்கு ஹாலுக்கு வரமுடியாது. கதவைப் பூட்டி ரூமிலேயே உக்காந்தா தப்பிக்கலாம்.

Mahesh said...

சென்னைல மெட்ரோ போட்டாச்சா? தாம்பரம் டொ சென்ட்ரல் 5 நிமிஷத்துலயா? தமிழகம் ஒளிர்கிறது !!!

நல்லவேளை.. உங்களுக்கு ஃபோன் பண்ணி பாராட்டுன 'பிரபல' பதிவர் நாந்தாங்கறதை சொல்லாம விட்டீங்க.... 'ஆப்புசாமி' கோவத்துல இருந்து காப்பாத்திட்டீங்க... நன்றி..

MayVee said...

unga phone enakku mail pannunga pls....

naan ungaloda perama visuri....

எம்.எம்.அப்துல்லா said...

// இந்த பாராட்டு போன்கால்களுக்கு எப்படி பதில் சொல்வது என்பதை யாரால் சொன்னால் தேவலை.

//

இந்த பிரச்சனையாலதான் நான் யாரும் பாராட்டும்படி எழுதுறதேயில்லை

:)

பாலா said...

eththa muraithaanya vote podurathu

ராஜா | KVR said...

//இந்த பாராட்டு போன்கால்களுக்கு எப்படி பதில் சொல்வது என்பதை யாரால் சொன்னால் தேவலை. //

இப்படி நீங்க பேசின மாதிரியே மையமா பேசிட்டு வச்சிட வேண்டியது தான் :-)

//Don't forget to Vote in (the right side bar) election.!//

போட்டாச்சு. அதிக ஓட்டு மொக்கைக்கு விழுந்திருக்குன்னு ரொம்ப மொக்கைப் போட்டுடாதிங்க. உங்க தங்கமணி பதிவுகளுக்கும், துறை சார்ந்த பதிவுகளுக்கும் கொஞ்சம் ரசிகர்கள் இருக்கோம்.

RAMYA said...

// இந்த பாராட்டு போன்கால்களுக்கு எப்படி பதில் சொல்வது என்பதை யாரால் சொன்னால் தேவலை.
//


இந்த பதிவு நல்லா இருக்குன்னு போன் பண்ணி சொல்லால்ம்னு நினைச்சேன்.

சரி ஹி ஹி ஹி இப்படி சிரிச்சே சமாளிங்க என்ன செய்யறது :))

அறிவிலி said...

நாங்கள்ளாம் இந்த பிரச்சினையே கூடாதுன்னுதான் நல்ல பதிவே எழுதறதில்ல.

நமக்கு இந்த பாராட்டே ஆகாதுங்க...

நர்சிம் said...

ம்.

அப்புறம்..

நன்றி ஆதி...

நாஞ்சில் நாதம் said...

/// Don't forget to Vote in (the right side bar) election.! ///


எலக்சனா. ஒட்டு போட்டா போச்சு. ஒரு ஆயிரம் ரூவா கொடுத்துடுங்க

☼ வெயிலான் said...

நீங்க மூத்த பதிவராயிட்டீங்க.

அதான் பிரபலங்கள்ட்டருந்து போன் கால்கள், விசாரிப்புகள், பாராட்டுகள்....

ஆமா! இதெல்லாம் நெசம் தானே? அப்புறமா எனக்கு போன்ல சொல்லுங்க.

MayVee said...

200 followers adikka en valthukkal

பீர் | Peer said...

ஆதி, எப்பிடியிருக்கீங்க?
வேற ஒண்ணுமில்ல, இன்னிக்கி போட்டிருக்கீங்களே ஒரு பதிவு....ட்டீங்கங்க ;)

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஜவர்லால், துபாய்ராஜா, ரவிஷங்கர், மயில், அப்பாவி, மகேஷ், அப்துல், மேவீ, பாலா, ராஜா, ரம்யா, அறிவிலி, நர்சிம், வெயிலான், பீர்..

அனைவரின் அன்புக்கும் அன்பான நன்றிகள்.!

Cable Sankar said...

hallo.. ஆதி இருக்காருங்களா..?

அ.மு.செய்யது said...

//எம்.எம்.அப்துல்லா said...
July 27, 2009 12:45 PM // இந்த பாராட்டு போன்கால்களுக்கு எப்படி பதில் சொல்வது என்பதை யாரால் சொன்னால் தேவலை.

//

இந்த பிரச்சனையாலதான் நான் யாரும் பாராட்டும்படி எழுதுறதேயில்லை

:)
//


ஹா..ஹா....

நான் கூட பதிவ பாத்ததுக்கு அப்புறம் தான் மொபைல்ல ஸ்டோர் பண்ணியிருக்கற பாஸ்வேர்ட் எல்லாத்தையும் அழிச்சேன்...

தேங்க்ஸு..

T.V.Radhakrishnan said...

:-))

அன்புடன் அருணா said...

\இந்த பாராட்டு போன்கால்களுக்கு எப்படி பதில் சொல்வது என்பதை யாரால் சொன்னால் தேவலை. \\
அதான் நல்லா சமாளிச்சுருக்கீங்களே! இதை விட எப்படி அழகா சமாளிப்பது?!