Tuesday, July 28, 2009

கொஞ்சம் தியரி படிக்கலாமா?

தொழிற்துறையில் கடந்த சுமார் ஒரு நூற்றாண்டாக குவாலிடி என்ற ஒரு துறை உருவாகி, வளர்ந்து, பிறவற்றை வளர்த்து, பிராண்டி, முக்கியத்துவம் பெற்று, இன்றியமையாததாகி, இன்று விஸ்வரூபமெடுத்து திணறி, திணற வைத்துக் கொண்டிருக்கிறதே..

அப்படி என்ன அவசியம் இந்த குவாலிடிக்கு? குவாலிடி (Quality -தரம்) என்றால் என்ன?

சிம்பிள்... நுகர்வோர் (End user) பயன்படுத்த இயலாத ஒரு பொருள் உருவாகிவிட்டது என்றால் அங்கே குவாலிடி இல்லை என்று அர்த்தமாகிவிடுகிறது. இதேதான் ஒரு பொருள் என்ற‌ல்லாது ஒரு சேவை என்று வந்தாலும் திருப்தியற்ற சேவையில் குவாலிடி இல்லை என்றாகிறது. இதனால் என்ன.. அந்தப் பொருளைத் தூக்கிப்போட்டு விட்டு வேறு வாங்கிக்க வேண்டியதுதான் என்கிறார் ஒருவர். தயாரிப்பவருக்கே அது தெரியுமே.. சொன்னால் அவங்களே அடுத்து கவனமா இருந்துக்க மாட்டாங்களா என்கிறார் இன்னொருவர்.

பிறகு ஏன் இப்படியொரு துறை? ஏன் இத்தனை போராட்டம்?

சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் வேகமெடுக்கத்துவங்கிய எஞ்சினியரிங் இப்போது வரலாறு முன்னெப்போதும் கண்டிராத வேகத்தையும் , முன்னேற்றத்தையும் அடைந்திருக்கிறது. இன்னும் செல்லப்போகும் தூரம் கற்பனைக்குள் அடங்காது. சில ஐந்தாண்டுகளுக்கு முன்னர் கட்டிடம், எந்திரவியல், மின்னியல் என்றிருந்த எஞ்சினியரிங் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடையத் துவங்கியது. ஸ்பெஷலைசேஷன் என்பது முக்கியத்துவம் பெறத்துவங்கிய போது எஞ்சினியரிங்கின் ஒவ்வொரு பிரிவுகளும் இரண்டிரண்டாக பிரிந்து செல்கள் பல்கிப் பெருகுவதைப்போல பெருகியது. இன்னும் பெருகிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் விரிவாக்கங்களும், ஆராய்ச்சிகளும், செயல்திட்டங்களும் இன்னும் ஆழமான எஞ்சினியரிங் அற்புதங்களைக் காண நம்மை கொண்டு செல்லும் என்பதில் வியப்பில்லை.

சிலவாக இருந்த பிரிவுகள் இப்போது சிவில், கன்ஸ்ட்ரக்ஷன், அக்ரிகல்ச்சர், மெகானிகல், மெட்டீரியல்ஸ், மைனிங், பிரிண்டிங், உற்பத்தி (Manufacturing), தொழிலகம், ஏரோநாடிகல், தயாரிப்பு (Production),ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், வடிவமைப்பு, கம்ப்யூட்டர் அறிவியல், தொலைத்தொடர்பு, கருவியியல், வேதியியல், எனர்ஜி, உணவியல், மருந்தியல், சூழலியல்.. இன்னும் இன்னும் என நுண்ணிய பிரிவுகளாக பிரிந்து பொறியாளர்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. சிலந்திவலை போல எஞ்சினியரிங்கின் ஒவ்வொரு பிரிவுகளும் பின்னிப்பிணைந்து உள்ளன. இது பெரிது, அது உயர்ந்தது, இல்லையில்லை இதுதான் சிறந்தது என எந்தப் பிரிவுகளையும் சொல்லிவிடமுடியாது.

இப்போது நீங்கள் அணிந்திருக்கும் ஆடையை உருவாக்கித்தந்தது எது எனக்கேட்டால் உடனே சொல்லிவிடுவீர்கள். டெக்ஸ்டைல் எஞ்சினியரிங். சரிதான். ஆனால் அதுமட்டும்தானா? அது தனிப்பட்டதா? பல்வேறு பிரிவுகளின் துண்டுகள் இணைந்ததுதான் அது அல்லவா? பருத்தியை நூலாக மாற்றவும், நெய்யவும் பெரிய எந்திரங்களும், தொழிற்சாலையும் தேவைப்பட்டனவே (Mechanical, Industrial, Production). அவை இயங்க மின்சாரமும், அதைச்சார்ந்த கருவிகளும் (Electrical), கணினிக்கட்டுப்பாடுகளும் (Electronics, Computer, Software) தேவைப்பட்டன. அவற்றை நிறமேற்ற வேதியியல் (Chemical) பயன்பட்டது. இவை நேரடியாக சம்பந்தப்பட்ட பிரிவுகள் மட்டுமே, இன்னும் மறைமுகமாக என்று பார்த்தால் ஒவ்வொன்றையும் சொல்லி மாளாது.

மேலும் ஒவ்வொரு துறைகளின் அற்புதத்தையும், தொழில்நுட்ப புரட்சியையும் நாம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். கடல்களுக்கு உள்ளேயும், உயர்ந்த மலை முகடுகளிலும் உறுதியான நீண்ட மலைக்க வைக்கும் பாலங்கள், கடலுக்குள் கண்ணாடிக்கட்டிடங்கள், பாலை நாடுகளில் செயற்கைக்கடல்கள் என சிவில் துறையின் அற்புதங்கள். அதிவேக ரயில்கள், விமானங்கள், வியக்கவைக்கும் கார்கள், 300 டன் வெயிட்டையெல்லாம் சாதாரணமாக இழுத்துச்செல்லும் பெரிய்ய லாரிகள் என ஆட்டோமொபைல் விந்தைகள், விமானங்களை, ராக்கெட்டுகளைக் கட்டும் தொழிற்சாலைகள், வானளாவிய எந்திரங்கள் என பிரமிக்கச்செய்யும் எந்திரவியல், வெட்டிப்பிளக்காமல் உடலின் உள்சென்று ஊடுருவும் மைக்ரோ கருவியியல், இன்னும் இன்னும்.. இவற்றையெல்லாம் யாவரும் நொடியில் அறிந்திடச்செய்யும் தகவல் தொழில்நுட்ப பிரமிப்பு என எஞ்சினியரிங்கின் வளர்ச்சி மனிதகுலத்தின் வளர்ச்சிக்கான முக்கிய அளவுகோல்.

அட.. எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறோமே.. பேக் டு த பாயிண்ட் குவாலிடி.

முதலில் இழப்புகளைக் கட்டுப்படுத்துவதில் துவங்கிய குவாலிடியின் பயணம், விரயங்களைக் கட்டுப்படுத்துதல், வேக உற்பத்தி என்று பயணித்து வாடிக்கையாளர் திருப்தியை (Customer satisfaction) நோக்கமாக கொண்டு தொடர்ந்து இப்போது வாடிக்கையாளர் மகிழ்ச்சி (Customer ecstasy) என்று தன் பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நீண்ட நெடும்பயணத்தில் பலவிதமான அறிவியல் வழிமுறைகள் (Methods), கருவிகள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள் என பயன்படுத்தப்பட்டுள்ளன, பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த வழிமுறைகளும், சித்தாந்தங்களும் சுவாரசியமானவை. பல அரிய வெற்றிக்கதைகளுனூடே சில தோல்விக்கதைகளும் உண்டு. 5எஸ், லீன், சிக்ஸ் சிக்மா, போகே யோகே, CAPA, NVA போன்ற சில வழிமுறைகளையும் (Tools), கோட்பாடுகளையும் பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் இன்று இன்னொரு முக்கியமான என்னைக்கவர்ந்த ஒரு தத்துவத்தைக் காண்போம்.

ஏன் குவாலிடி என்பது அவசியமானது? பணவிரயம், உழைப்பு விரயம், நேரவிரயம் நேர்கிறது. பிறகு.?

உங்கள் வீட்டில் இப்போது இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருட்கள் என்னென்ன இருக்கின்றன என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? பழங்கள், அரிசி, உணவுப்பொருட்கள், தண்ணீர் என உடனே சொல்லிவிடுவீர்கள். ம்.. அப்புறம்? என்கிறேன் நான். என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆம்.. அதேதான்.! அத்தனையும்தான்..!!! நீங்கள் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் கணினித்திரைக்கான மூலப்பொருட்கள், கண்ணாடி, பிளாஸ்டிக் அத்தனையும் இயற்கையிலிருந்தே பெறப்பட்டன. கொஞ்சம் உங்களைச்சுற்றிலும் பாருங்கள். செங்கல், சிமெண்ட், புத்தகங்கள், மேஜை, அதன் மீதிருக்கும் டம்ளர், அதற்குள்ளிருக்கும் தேநீர் என இரும்பிலிருந்து துரும்பு வரை அத்தனையும் இயற்கையிலிருந்து பெறப்பட்ட மூலப்பொருட்களின் மாறிய உருவம்தான். இப்போது சொல்லுங்கள். ஒரு சிறிய பேனா தரமற்றதாக இருந்து வீணாகும் போது இயற்கையை நமது கவனக்குறைவால் வீணடிக்கிறோம் என்று பொருளாகிறது அல்லவா?

இயற்கை மனிதர்கள் பயன்படுத்திக்கொள்ளவே தன்னை ஈந்து நிற்கிறது, அதிலிருந்து ஒரு துளியும் வீண் செய்ய நமக்கு உரிமையில்லை. கச்சிதமாக நமது முழுமையான பயன்பாட்டுக்காகவும், மறு சுழற்சிக்குரியதாகவுமே நாம் உருவாக்கும் ஒவ்வொரு பொருளும் இருந்தாக வேண்டும். ஜப்பானிய தொழில்நுட்ப மேதை 'தா கு சி' (Ta gu chi) உணர்ந்து சொன்ன இந்த கோட்பாட்டிற்குப் பின்னர் குவாலிடி துறை தனக்கான தனித்துவமான கடமையை உணர்ந்தது. அதற்காகவும், இன்ன பிறவற்றிற்காகவும் தன் வழியில் செவ்வனே பீடு நடை போட்டுக்கொண்டிருக்கிறது குவாலிடி எஞ்சினியரிங் (Quality Engineering).

பி.கு : கொஞ்சம் நீளமாக போயிடுச்சோ.. ஸாரிபா. இதை தூங்கிவழியாமல் முழுசா படிச்சவுங்களுக்கு அடுத்த முறை நேரில் பார்க்கச்சொல்லோ ஒரு கோxxரும் கோழிபிரியாணியும் வாங்கித்தரப்படும். முன்னதாக பதிவிலிருந்து கேள்வி கேட்கப்படும்.

.

54 comments:

ஆதிமூலகிருஷ்ணன் said...

பெரும்பாலான குவாலிடி வழிமுறைகளும், கோட்பாடுகளும் பொது பயன்பாட்டில் வைக்கமுடியாத அளவில் முறைமை செய்யப்பட்டுள்ளன.

ஆகவே அனைத்தையுமே சர்வ விளக்கமாக இணைப்புகளுடன் பேசிவிடமுடியாது.

இருப்பினு எதைக்குறித்தும் நீங்கள் அறிய விரும்பினால் எனக்கு மெயிலிடுங்கள் அல்லது பின்னூட்டமிடுங்கள் விதிமுறைகளுக்குட்பட்டு எனக்குத்தெரிந்ததை, அல்லது தெரிந்துகொண்டு இயன்ற அளவில் எளிமையாக விளக்க முயல்கிறேன்.

டெக்னிகல் பதிவுகளுக்கு நல்ல ஆதரவு தந்து வரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

நாமக்கல் சிபி said...

//பி.கு : கொஞ்சம் நீளமாக போயிடுச்சோ.. ஸாரிபா. இதை தூங்கிவழியாமல் முழுசா படிச்சவுங்களுக்கு அடுத்த முறை நேரில் பார்க்கச்சொல்லோ ஒரு கோxxரும் கோழிபிரியாணியும் வாங்கித்தரப்படும். முன்னதாக பதிவிலிருந்து கேள்வி கேட்கப்படும்.
//

நன்றி!

டக்ளஸ்... said...

\\குவாலிடி (Quality -தரம்) என்றால் என்ன?\\
மறுபடியும் "தரமான பதிவா" அங்கிள்..!
கூப்புடுங்கடா தராசண்ணன..!

தராசு said...

தல,

அட்டகாசம். இந்த தொடர் தொடருமா??

ஆமா, QC ஆளுங்கன்னாவே ஒரு டெரராத்தான் இருப்பீங்களா?

தராசு said...

டக்ளசு,

தலயோட இந்த மேட்டர்ல மட்டும் கை வைக்காதீங்கப்பா, ஏன்னா இதுல நிறைய "அது" இருக்குது.

Cable Sankar said...

குவாலிட்டி கண்ட்ரோல் என்பது எவ்வளவு முக்கியமான ஒரு விஷயம். என்பதை இதை விட ஈஸியாய் சொல்ல முடியாது ஆதி..

டக்ளஸ்... said...

சூப்பரான பதிவு தல...
குவால்டிய விட சொன்ன, எடுத்துக்காட்டுகள் அருமை.

டக்ளஸ்... said...

ஏப்பா, வாழவாந்தான் எங்கய்யா இருக்கா நீயி..?
வேகமா ஓடி வா ராசா..!

MayVee said...

details vendum ......

viswanaath@gmail.com


(examples with ref. to branding)

அறிவிலி said...

//சிம்பிள்... நுகர்வோர் (End user) பயன்படுத்த இயலாத ஒரு பொருள் உருவாகிவிட்டது என்றால் அங்கே குவாலிடி இல்லை//

சில சமயங்களில் தரமில்லாத பொருளை (சேவை) உபயோகப்படுத்த முடியும். உதாரணத்துக்கு கிழிந்து போன அல்லது அழுக்கான இருக்கைகள் இருக்கும் சினிமா தியேட்டர் அல்லது பேருந்து. திருப்தியான அளவுக்கு சுவையோ மணமோ இல்லாத டீ தூள்.

எனவே இது வாடிக்கையாளர் எதிர்பார்ப்புக்கு ஏற்ற பொருளாக இல்லாவிட்டால் தரமில்லை என்று கொள்ளலாமா?

விஜய் ஆனந்த் said...

கோxxரும் என்றால் என்ன? தயவிட்டு விளக்கவும்.

இளையராஜா said...

\\ இயற்கை மனிதர்கள் பயன்படுத்திக்கொள்ளவே தன்னை ஈந்து நிற்கிறது, அதிலிருந்து ஒரு துளியும் வீண் செய்ய நமக்கு உரிமையில்லை. கச்சிதமாக நமது முழுமையான பயன்பாட்டுக்காகவும், மறு சுழற்சிக்குரியதாகவுமே நாம் உருவாக்கும் ஒவ்வொரு பொருளும் இருந்தாக வேண்டும் \\

nice...........

நாஞ்சில் நாதம் said...

தல,

அட்டகாசமான பதிவு.

/// விதிமுறைகளுக்குட்பட்டு எனக்குத்தெரிந்ததை, அல்லது தெரிந்துகொண்டு இயன்ற அளவில் எளிமையாக விளக்க முயல்கிறேன்.\\\

அப்புறம் ISO 9001, ISO 14000 போடுறாங்களே அப்படினா என்ன?

Quality control, Quality Assurance, Quality Engineering, Quality management principles இதபத்தியெல்லாம் ஒரு டீட்டைல்டு பதிவு கிடைக்குமா?

ISO, BIS (இந்தய தர கட்டுப்பாடு நிறுவனம) தொழிற்துறையில் இவைகளின் பணி என்ன?

இந்த தொடர் தொடர வேண்டும்.

நாஞ்சில் நாதம் said...

தல,

அட்டகாசமான பதிவு.

/// விதிமுறைகளுக்குட்பட்டு எனக்குத்தெரிந்ததை, அல்லது தெரிந்துகொண்டு இயன்ற அளவில் எளிமையாக விளக்க முயல்கிறேன்.\\\

அப்புறம் ISO 9001, ISO 14000 போடுறாங்களே அப்படினா என்ன?

Quality control, Quality Assurance, Quality Engineering, Quality management principles இதபத்தியெல்லாம் ஒரு டீட்டைல்டு பதிவு கிடைக்குமா?

ISO, BIS (இந்தய தர கட்டுப்பாடு நிறுவனம) தொழிற்துறையில் இவைகளின் பணி என்ன?

இந்த தொடர் தொடர வேண்டும்.

Anonymous said...

ண்ணா, பின்னறீங்க.. ரொம்ப சூப்பர், நாளைக்கு ஒரு டெமோ ருக்கு, ரொம்ப உபயோகமாக இருக்கும். தேங்க்ஸ்

asir said...

Boss..
Konjam muchu muttuthu..
Rest eduthutu varen

ஜோசப் பால்ராஜ் said...

//இயற்கை மனிதர்கள் பயன்படுத்திக்கொள்ளவே தன்னை ஈந்து நிற்கிறது, அதிலிருந்து ஒரு துளியும் வீண் செய்ய நமக்கு உரிமையில்லை. கச்சிதமாக நமது முழுமையான பயன்பாட்டுக்காகவும், மறு சுழற்சிக்குரியதாகவுமே நாம் உருவாக்கும் ஒவ்வொரு பொருளும் இருந்தாக வேண்டும். //

அருமையான கருத்து.

இவ்வளவு சுவாரசியமா, பதிவின் நீளத்தையும் பொருட்படுத்தாமல் படிக்க வைக்கும் அளவுக்கு எழுதியுள்ளது மிக அருமை.

ஒரு பொருளின் உற்பத்தியில் பல கட்டங்களை கடந்து வரும், ஒவ்வொரு கட்டத்திலும் தரக் கட்டுப்பாட்டு சோதனைகளை செய்தால் அது கடைசிவரை சென்று நேரம் மற்றும் பண விரயம் ஏற்படுவதை தவிர்கலாம் என தி கோல் புத்தகத்துல Dr. எலியாகு M கோல்ட்ராட் சொல்லியிருப்பார். மிக சுவாரசியமானது தரக் கட்டுப்பாடு. தொடர்ந்து பல பதிவுகளை உங்கள் துறையில் எழுதுங்கள் ஆதி அண்ணா.

cheena (சீனா) said...

ம்ம்ம்ம்ம் நீண்ட, தரமுள்ள, அறிவுசால் பதிவு. தொழில் நுடபம் அறிந்தவர்களும் அறிய விரும்புபவர்களும் படிக்க வேண்டிய பதிவு. எழுதுவதற்கே அதிக நேரம் ஆகி இருக்கும்

கோழி பிரியாணி எனக்கும் கேள்விகள் கியூசிக் குழிவினருக்கும் அளிக்கலாமே

வால்பையன் said...

நான் முழுசா படிச்சேன்!

(ஆனா முதல்ல டிஸ்கிய படிச்சேன்)

வால்பையன் said...

நீங்க சொல்ற குவாலிட்டிக்கும், குவாலிடி ஐஸ்கிரீமுக்கும் சம்பந்தம் உண்டா!


இவண் துறை சார்ந்த பதிவுகள் படித்து நொந்து போனோர் சங்கம்!
ஈரோடு கிளை!

வால்பையன் said...

குவாலிட்டி எவ்ளோ முக்கியம்னு சொன்னது ஜப்பான் காரர்னு சொன்னிங்க, ஆனா அந்த ஜப்பான்ல தான் பால்பவுடர்ல கலப்படம் பண்ணி நிறைய குழந்தைகளை மருத்துவமனைக்கு அனுப்பினாங்க!

குசும்பன் said...

கொஞ்சம் தியரி படிக்கலாமா? //

ஆட்டை எல்லாம் கேட்டுக்கிட்டா வெட்டுறாங்க?
என்னமோ ரொம்ப நல்லபுள்ள மாதிரி கேட்கவேண்டியது.

வால்பையன் said...

எங்கூர் ஹோல்சேல் மளிகை கடையில் வித்தியாசமான குவாலிடி கடைபிடிக்கப்படும்!

சுத்தம் செய்த கருப்பு சுண்டல் 60 ரூபா!
சுத்தம் செய்யாதது 45 ரூபா!

வாங்கிட்டு போய் பார்த்தா சுத்தம் செய்யாத சுண்டலில் கால்கிலோ சரளை கற்கள் இருக்கும்! சரி தானே முக்காகிலோ 45 ருபான்னு கணக்கு போட்டா நாம் முட்டாப்பயளுக!

கால்கிலோ சரளை கல்லை எடுக்குற நேரமும் ஆள் உழைப்பும் கடைகாரனுக்கு மிச்சம்!

இவண்
சுண்டல் வாங்க கியூவில் நிற்கும் போது யோசிப்போர் சங்கம்!
தமிழ்நாடு கிளை!

குசும்பன் said...

தல,

அட்டகாசமான பதிவு.

/// விதிமுறைகளுக்குட்பட்டு எனக்குத்தெரிந்ததை, அல்லது தெரிந்துகொண்டு இயன்ற அளவில் எளிமையாக விளக்க முயல்கிறேன்.\\\

அப்புறம் ISO 9001, ISO 14000 போடுறாங்களே அப்படினா என்ன?

Quality control, Quality Assurance, Quality Engineering, Quality management principles இதபத்தியெல்லாம் ஒரு டீட்டைல்டு பதிவு கிடைக்குமா?

ISO, BIS (இந்தய தர கட்டுப்பாடு நிறுவனம) தொழிற்துறையில் இவைகளின் பணி என்ன?

இந்த இத்தோடு முடிய வேண்டும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

தரமான பதிவின் பகிர்வுக்கு நன்றி.

குசும்பன் said...

சரி தானே முக்காகிலோ 45 ருபான்னு கணக்கு போட்டா நாம் முட்டாப்பயளுக!//

வீட்டுல எதுக்கு ஒரு ஆள் சும்மாவே இருக்காங்க அவுங்களுக்கு வேலைக்கொடுக்கலாம் என்று கணக்கு போட்டா புத்திசாலியா?:)))

வால்பையன் said...

//வீட்டுல எதுக்கு ஒரு ஆள் சும்மாவே இருக்காங்க அவுங்களுக்கு வேலைக்கொடுக்கலாம் என்று கணக்கு போட்டா புத்திசாலியா?:))) //

அதனால டென்ஷன் ஆயி பூரிகட்டை உடைஞ்சா பரவாயில்லையா!?

நீங்க எந்த காலத்துல இருக்கிங்க!
வாராவாரம் பருப்புக்கு கல்லு பொறுக்குறது நானு!
வீட்ல சும்மா இருக்குறாங்கலாம்ல!

குசும்பன் said...

அமிர்தவர்ஷினி அம்மா said...
தரமான பதிவின் பகிர்வுக்கு நன்றி.//

என்னப்பா இப்படி எல்லாம் சொல்லி என்னை பதிவை படிக்கவெச்சுடுவாங்க போல, ஸ்டாரே ரெக்கமெண்ட் செஞ்சுட்டாங்க அட்லீஸ்ட் டிஸ்கிய மட்டுமாவது படிக்கிறேன்:)

dharshini said...

நல்ல தகவல் ஆதி...

துபாய் ராஜா said...

இத்துறை சார்ந்த மேலும் பல நல்ல விஷயங்களை எதிர்பார்க்கிறோம்.

ராஜா | KVR said...

//இயற்கை மனிதர்கள் பயன்படுத்திக்கொள்ளவே தன்னை ஈந்து நிற்கிறது, அதிலிருந்து ஒரு துளியும் வீண் செய்ய நமக்கு உரிமையில்லை. கச்சிதமாக நமது முழுமையான பயன்பாட்டுக்காகவும், மறு சுழற்சிக்குரியதாகவுமே நாம் உருவாக்கும் ஒவ்வொரு பொருளும் இருந்தாக வேண்டும்.//

எவ்ளோ அற்புதமான ஒரு தத்துவத்தை ரொம்ப எளிமையா தெளிவா சொல்லி இருக்கிங்க.

//பி.கு : கொஞ்சம் நீளமாக போயிடுச்சோ.. ஸாரிபா. இதை தூங்கிவழியாமல் முழுசா படிச்சவுங்களுக்கு அடுத்த முறை நேரில் பார்க்கச்சொல்லோ ஒரு கோxxரும் கோழிபிரியாணியும் வாங்கித்தரப்படும். முன்னதாக பதிவிலிருந்து கேள்வி கேட்கப்படும்.//

நீளமெல்லாம் இல்லை. இது மாதிரி அழகா எழுத ஆள் இருந்தா இன்னும் நீளமா இருந்தாலும் படிப்போம். “கோxxரும்” - இது என்னன்னு தெரியலை (சின்னப்பையன்பா), அதனால கோழி பிரியாணி மட்டும் பார்சல்....

Indian said...

Very nice post.

Indian said...

//குவாலிட்டி எவ்ளோ முக்கியம்னு சொன்னது ஜப்பான் காரர்னு சொன்னிங்க, ஆனா அந்த ஜப்பான்ல தான் பால்பவுடர்ல கலப்படம் பண்ணி நிறைய குழந்தைகளை மருத்துவமனைக்கு அனுப்பினாங்க!

//

If you are referring to melamine tainted milk scandal, it happened in China.

வால்பையன் said...

//If you are referring to melamine tainted milk scandal, it happened in China. //

ஸாரின்னே!
எல்லா முக்கும் சப்பையா இருந்ததால அடையாளம் தெரியல!

(வெறும் நகைச்சுவை நோக்கில் மட்டுமே பதிலளிக்கப்பட்டது, இனவெறி, பணவெறின்னு கொலைவெறியோட கிளம்பிறாதிங்க)

Rithu`s Dad said...

நல்ல பதிவு தொடருங்கள் ஆதி.. தரக்கட்டுப்பாடு சரி.. ஆனால் அதைச் செய்பவர்களுக்கே தரக்கட்டுப்பாடு செய்யவேண்டியிருக்கிறதே .. அதும் அதிகமா நம்ம ஊரில்..??

நாடோடி இலக்கியன் said...

அருமையான பதிவு.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி சிபி.!
நன்றி டக்கு.! (தரமான பதிவா? என்ற கேள்வியை ரசித்தேன்)
நன்றி தராசு.! (நிறைய எது இருக்குதுன்னு சொன்னா தேவலை)
நன்றி கேபிள்.!
நன்றி மேவீ.! (எதுகுறித்து வேண்டும்? புரொபைலில் மெயில் ஐடி இருக்குது)

நன்றி அறிவிலி.! (உங்கள் கேள்விக்கு ஒரு பின்னூட்டத்தில் பதில் சொல்லிவிட இயலாது. ஆரோக்கியக்குறைவை ஏற்படுத்தும் எந்தச்சேவையிலும் நிச்சயம் தரமில்லை என்று சொல்லிவிடலாம். டீயில் மணமில்லை என்பது தரக்குறைவு என சொல்லமுடியாது. அது சேவைக்குறைபாடு)

நன்றி விஜய்.! (ஆமா, சின்ன பாப்பா இவுரு)
நன்றி இளையராஜா.!
நன்றி நாஞ்சில்.! (நேரம் கிடைக்கையில் நிச்சயம் எழுதுகிறேன் தோழர்)
நன்றி மயில்.! (அதென்ன டெமோருக்கு?)
நன்றி அசிர்.!

நன்றி ஜோஸப்.! (விரிவான பாராட்டுக்கு மகிழ்ச்சி தோழர்)
நன்றி சீனா.! (கேள்விகளுக்கு பதில் சொன்னால் மட்டுமே கோழி என்பதை அறிக)

நன்றி வால்.! (நீங்கள் கூறியது தரமற்ற சேவை, தரமற்ற பொருள் இரண்டுக்குமான உதாரணம்)
நன்றி குசும்பன்.! (பதிவைப்படிக்காமத்தான் இவ்வளவு அக்கப்போரு நடக்குதா?நா ரொம்ப கோவக்காரன்னு கேள்விப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன். ஜாக்கிரதை)

நன்றி அமித்துஅம்மா.!
நன்றி தர்ஷினி.!
நன்றி துபாய் ராஜா.!
நன்றி ராஜா.! (இங்க பாருங்கப்பா, இன்னொரு சின்னப்பையன்)

நன்றி இன்டியன்.!
நன்றி ரிதுவின் அப்பா.! (சரியா சொன்னீங்க..)

குசும்பன் said...

ஏலேலோ ஐலசா! இன்னு கொஞ்சம் ஐலசா!

குசும்பன் said...

ம்ம்ம் அப்படிதான் இன்னும் கொஞ்சம் ஐலசா!

குசும்பன் said...

இன்னும் கொஞ்சம் தான் ஐலசா!

குசும்பன் said...

அவ்வளோதான் முடிஞ்ச்சுட்டு ஐலசா!

(என்னா முழிக்கிறீங்க ஆதி, 40 கமெண்ட் அடிச்சு முதல் பக்கத்தில் இருந்து தூக்க 3 கமெண்ட்தான் தேவை பட்டுச்சு)

உங்க பதிவு 40 கமெண்டுக்கு கீழ வாங்கினா நல்லாவா இருக்கும்:)

Sivakumar said...

good one...continue writing more like this!

RR said...

அருமையான பதிவு தல. நீளமான பாதிவாக இருந்தாலும், நீளம் தெரியாத வண்ணம், மிகவும் சிறப்பான நடை.....வாழ்த்துக்கள்! இதுபோல் நிறைய பதிவு உங்களிடம் இருந்து வர வேண்டும் என்பது தாழ்மையான கோரிக்கை.

அ.மு.செய்யது said...

இது ஒரு தரமான துறைசார்ந்த பதிவு தான்.ஆனால் முற்றிலும் டெக்னிக்கல் பதிவு என்று
சொல்லிவிட முடியாது.

நிறைய தகவல்கள் White paper ரகத்தை சேர்ந்தவை தான்.

பிற்பாதியில் நிறைய தகவல்கள் "டல்" அடிக்கின்றன.குறிப்பாக‌ பின்வ‌ருவ‌ன‌.

//நீங்கள் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் கணினித்திரைக்கான மூலப்பொருட்கள், கண்ணாடி, பிளாஸ்டிக் அத்தனையும் இயற்கையிலிருந்தே பெறப்பட்டன. கொஞ்சம் உங்களைச்சுற்றிலும் பாருங்கள். செங்கல், சிமெண்ட், புத்தகங்கள், மேஜை, அதன் மீதிருக்கும் டம்ளர், அதற்குள்ளிருக்கும் தேநீர் என இரும்பிலிருந்து துரும்பு வரை அத்தனையும் இயற்கையிலிருந்து பெறப்பட்ட மூலப்பொருட்களின் மாறிய உருவம்தான். //

இன்னும் நிறைய‌ எதிர்பாக்குறோம்.

அ.மு.செய்யது said...

அண்ணே..மறந்துட்டேன்..எனக்கு கோழிபிரியாணி மட்டும் போதும்.

pappu said...

ரொம்ப நாள் கழிச்சு ஒரு 'சரக்குள்ள பதிவு'!

எனக்கு கோழி பிரியாணி மட்டும் போதும்.

கார்க்கி said...

quality post சகா

:))))

செல்வேந்திரன் said...

யோவ், க்ளீன் பிக்ஸரா ஒரு பதிவு எழுதிட்டு, படு கேவலமா ஒரு டிஸ்கியா?! கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

SK said...

அண்ணே, நல்ல பதிவு.

டாக்டர் ப்ருனோ அவர்கள் செய்வது போல தமிழில் தொழில் நுட்ப சொற்களை எழுதி அதற்கான ஆங்கில வார்த்தையை அடைப்பு குறிக்குள் கொடுத்தால் நிறைய வார்த்தைகள் நாங்களும் தெரிந்து கொள்வோம். ஆனால் நேரம் அதிகம் பிடிக்கும் எழுதுவதற்க்கு. முடிந்தால் முயற்சி செய்யவும்.

SK said...

இது ரொம்ப தப்பு வந்து அம்பதுக்கு ஒரு பதில் கம்மி :-) அதை நான் எப்படி விடறது.. :) :)

மீ தி பிப்டி :-)

" உழவன் " " Uzhavan " said...

//ஒரு கோxxரும் கோழிபிரியாணியும் வாங்கித்தரப்படும்//
 
இந்த ரெண்டும் குவாலிட்டி செக்குக்கு போனதுதானே? :-)

blogpaandi said...

எங்களை மகிழ்வூட்டக்கூடிய தரமான (Quality) கோழி பிரியாணிக்காக காத்திருக்கிறோம்.
தொடர்ந்து இது போல பயனுள்ள தகவல்களை தரவும் ( கோழி பிரியாணியையும் சேர்த்துதான் சொல்றேன் :) )

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி குசும்பன்.! (யோவ்.. நீர் நல்லாவே இரும்.!)

நன்றி RR.! (உங்கள் ஆத்ஹரவு இருந்தால் வரும் என நம்புகிறேன்)
நன்றி சிவக்குமார்.!
நன்றி செய்யது.! (கொஞ்சம் டெக்னிகலா உள்ள போனா கடை காத்தாடிடும் செய்யது..ஹிஹி அனுபவம்)

நன்றி பப்பு.!
நன்றி கார்க்கி.!
நன்றி செல்வா.! (உங்களுக்கும் இதுமாதிரி பதிவுகள் பிடிக்குமா?)

நன்றி SK.! (நிச்சயம் முயற்சிக்கிறேன் தோழர்)
நன்றி உழவன்.!
நன்றி பிளாக்பாண்டி.!

பிரியமுடன்...வசந்த் said...

துறை சார்ந்த பதிவுன்னாலும் நிறைய விஷயங்கள் அறிய தருகிறீர்கள் சார்...!