Thursday, July 30, 2009

டயட்டு.. அப்பிடின்னா?

அவர் என்னைப்பார்த்து "உனக்கு கொழுப்பு ஜாஸ்தியாயிடுச்சு" என்று சொன்னபோது எனக்கு கோபமெல்லாம் வரவில்லை, பதிலாக‌ பரிதாபமாக அவரைப்பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். வேறு யாரும் இந்த வார்த்தையை என்னை நோக்கி சொல்லியிருந்தால் என்னவாகியிருக்கும், என் ஈகோ எப்படி பாதிக்கப்பட்டிருக்கும் என நினைத்துப்பார்க்கிறேன்.

அவர் ஐம்பது வயதை தாண்டியவராக இருந்தார். மேலும் நான் சின்னப்பையனாக (அதாவது இளமையாக) அவருக்குத்தோன்றியிருக்கலாம். ஆகவே முதன்முறையாக அவர் முன்னால் உட்கார்ந்திருந்தபோதும், 'உங்களுக்கு' என்பதற்குப் பதிலாக 'உனக்கு' என்று கூறியபோதும் எனக்கு வித்தியாசமாகப் படவில்லை. கண்ணாடியை கழற்றியவாறே "வேறெந்த பிரச்சினையுமில்லை, இதுக்கு மருந்தெல்லாம் தேவையில்லை, ஒழுங்கா காலையிலேயே எந்திருச்சு சுறுசுறுப்பா வாக்கிங், ஜாக்கிங் போகப்பாரு.. அப்பிடியே டயட்டையும் பாத்துக்கோ" என்று மிரட்டலாக சொன்னார். விட்டால் நாளைக்கு காலையிலே ஜாகிங் போனாயா? என்று போன் பண்ணிக்கேட்பேன் என்று சொல்வார் போல இருந்தது. வேகமாகத் தலையாட்டினேன்.

அலுவலகத்திலிருந்து முப்பது வயதைத் தாண்டியவர்களையெல்லாம் வருடாந்திர‌ 'மெடிக்கல் செக்கப்'புக்காக தார்க்குச்சி வைத்து குத்தி த‌ள்ளிக்கொண்டிருந்த‌ன‌ர். அந்த‌ பிரப‌ல‌ ம‌ருத்துவ‌ம‌னையில் சென்ற‌ வார‌ம் செக்க‌ப்புக்கு சென்றிருந்தேன். எக்ஸ்ரே, ஸ்கான், ஈசிஜி மற்றும்பல சோதனைகளும் எழுதக்கூச்சமாக இருக்கும் சில சோதனைகளையும் செய்துவிட்டு அனுப்பிவிட்டனர், அரைநாள் ஆகிவிட்டது. இன்று சோதனை முடிவுகள் குறித்து மருத்துவருடன் க‌ன்ச‌ல்ட் செய்துகொண்டிருக்கிறேன். முப்ப‌து வ‌ய‌தைத்தாண்டிய‌வ‌ர்க‌ள் எல்லாம் இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு ஒருமுறை இந்த‌ செக்க‌ப்பை செய்துகொள்வ‌து ந‌ல்ல‌து என‌ நினைக்கிறேன். ஆர‌ம்ப‌ நிலை நோய் அறிகுறிக‌ளை தெரிந்துகொண்டு, முன்னெச்செரிக்கையாக‌ இருந்துகொள்ள‌லாம். நோய்க‌ள் இல்லையென‌ உறுதி செய்து கொண்டால் த‌ன்ன‌ம்பிக்கை சிற‌க்கும். மேலும் நோய்க‌ள் முற்றி பாதிக்கப்பட்ட‌‌பின்ன‌ர் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டால் இன்றைய‌ கால‌க‌ட்ட‌ங்க‌ளில் ம‌ருத்துவ‌ச்செல‌வுக‌ள் எவ்வ‌ள‌வு ப‌ய‌முறுத்துவ‌தாய் இருக்கின்ற‌ன‌ என்ப‌தை நீங்க‌ள் அறிவீர்க‌ள். இந்த‌ செக்கப்பை நமது ப‌ட்ஜெட்டுக்குள் அட‌ங்குவ‌து போல‌வே சில‌ பிர‌ப‌ல‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ள் செய்து த‌ருகின்ற‌ன‌. அல்ல‌து வேறு காப்பீட்டுத்திட்ட‌ங்க‌ளில் வ‌ழியுள்ள‌தா என்ப‌தை அறிந்தோர் சொல்ல‌லாம். ப‌டிப்போருக்கு ப‌ய‌னுள்ள‌தாய் இருக்கும்.

ம‌ருத்துவ‌ருக்கு ந‌ன்றி சொல்லிவிட்டு எழுந்த‌போது அவ‌ரைப்பார்த்து ச‌ந்தேக‌த்துட‌ன் கேட்டேன், "சார் ட‌ய‌ட்டுன்னா, பிரியாணி சாப்பிட‌லாமா.. கூடாதா?". அவ‌ர் விருட்டென்று ப‌க்க‌த்திலிருந்த‌ ர‌த்த‌ம் உறிஞ்ச‌ ப‌ய‌ன்ப‌டும் கோணிஊசிய‌ள‌வு இருந்த‌ சிரிஞ்ச்சை கோப‌த்தோடு எடுத்தார். நான் வெளியே பாய்ந்தேன்.!

.

27 comments:

என். உலகநாதன் said...

ஆதி,

காலைல யோகா பண்ணுங்க. மாலையில் கண்டிப்பாக ஜிம் செல்லுங்கள்.

நகைச்சுவையாக எழுதியிருந்தாலும் உங்கள் நல்லதுக்கு சொல்கிறேன்.

கோபம் வேண்டாம்.

ஆ.முத்துராமலிங்கம் said...

நீங்கள் சொல்லுவதும் உண்மைதான்
நோய் வருவதற்கு முன்பே முன்னெச்சரிக்கையா இருப்பது ரொம்ம நல்லதுதான். (நல்ல அனுபவம் உங்களுக்கு..))மொத்தமா செலவு செயவத இப்படி தவனை முறையில செலவு செஞ்சா நோய் வரும் முன்னே உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்ன்னுறீங்க!!

தராசு said...

//மேலும் நான் சின்னப்பையனாக (அதாவது இளமையாக) அவருக்குத்தோன்றியிருக்கலாம்.//

இங்க பார்றா, இப்பிடியெல்லாம் கனவு கண்டுகிட்டு, எதுக்கப்பு,

தமிழ் பிரியன் said...

நல்லா வாக்கிங் போனாப் போதும்..:)
இல்லைன்னா வீட்டுக்கு அருகில் இருக்கும் கடைகளுக்கு, கட்டிடத்தின் மாடிகளுக்கு நடந்தே போங்க.. போதுமானது.

கார்க்கி said...

ரைட்டு...

எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைங்கண்ணா

Anonymous said...

வேணுமே வயசான டாக்டர் கிட்ட போக வேண்டியது, அப்பத்தான யூத்ன்னு சொல்ல முடியும்,

நாஞ்சில் நாதம் said...

:))

ஆதிமூலகிருஷ்ணன் said...

நேரமின்மையால் மீள் பதிவு .. ஜாரிங்க..

நன்றி உலகநாதன்.! (நல்லது சொன்னா ஏன்ங்க கோபப்படப்போறேன்?)
நன்றி முத்துராமலிங்கம்.!
நன்றி தராசு.!
நன்றி தமிழ்பிரியன்.! (ரொம்ப நாளாச்சு கடப்பக்கம் வந்து)
நன்றி கார்க்கி.!
நன்றி மயில்.!
நன்றி நாஞ்சில்.!

வால்பையன் said...

//கார்க்கி said...
ரைட்டு...
எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைங்கண்ணா//

ஆமாங்கண்ணா நானும் இன்னும் இருவதையே தாண்டலைங்கண்ணா!

Anonymous said...

//அவர் என்னைப்பார்த்து "உனக்கு கொழுப்பு ஜாஸ்தியாயிடுச்சு" என்று சொன்னபோது எனக்கு கோபமெல்லாம் வரவில்லை, //

இதை உங்க தங்கமணியே அடிக்கடி சொல்லிருப்பாங்களே :)
Jokes apart நமக்கெல்லாம் ஒண்ணும் வராதுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தா ‍ அது தப்பு, நானும் கொலஸ்ட்ரால் செக் பண்ணப்போனா ஸ்லோ தைராய்டுன்னு சொல்லிட்டாரு எங்கூரு டாக்டர்.

யாசவி said...

above 30?

so may be 40+?

will give some tips in my blog soon

:-))

கதிர் - ஈரோடு said...

//ஒழுங்கா காலையிலேயே எந்திருச்சு சுறுசுறுப்பா வாக்கிங், ஜாக்கிங் போகப்பாரு..//

அண்ணே அந்த டாக்டர் தாத்தாவ... என்னோட
ஒரு 25 நிமிட நடையின் வரலாறு(!!??)
http://maaruthal.blogspot.com/2009/07/25.html
படிக்கச் சொல்லுங்கண்ணே

அ.மு.செய்யது said...

//முப்ப‌து வ‌ய‌தைத்தாண்டிய‌வ‌ர்க‌ள் எல்லாம் இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு ஒருமுறை இந்த‌ செக்க‌ப்பை செய்துகொள்வ‌து ந‌ல்ல‌து என‌ நினைக்கிறேன்//

ரைட்டு...நெக்ஸ்ட் மீட் பண்றேன்.

Truth said...

என்னோட பிரச்சனையே வேற. ரொம்ப நாளா கஷ்டப்படறேன். உங்க பதிவ படிச்சப் பிறகு தான் கொஞ்சம் நம்பிக்கையே இருக்கு. எனக்கு உதவி பண்ணுங்க ஆபீசர்.

நர்சிம் said...

ரைட்டு..வாழ்க..வளர்க்க, ஸாரி வளர்க..

பரிசல்காரன் said...

நான் டயட்டுன்னா அடிக்க வாராங்க ஆதி!

அமிர்தவர்ஷினி அம்மா said...

மீள் பதிவுதானே இது?

அப்ப இன்னும் அதே மாதிரிதான் இருக்கீங்களா டயட் கண்ட்ரோல் இல்லாம?

அப்பாவி முரு said...

இது விளையாட்டுப் பதிவானாலும் சரி, வினையான பதிவாக இருந்தாலும் சரி.

திரி ஒயிட் பாய்சன்ஸ் எனப்படும் உப்பு, ஜீனி மற்றும் பாலை அளவுபடுத்திக் கொண்டால் போதும் எல்லாம் கட்டுப்பட்டுவிடும்.

சூரியன் said...

:)

துபாய் ராஜா said...

வீட்டம்மாவிற்கு தெரியாமல் ஹோட்டல்களில் புகுந்து விளையாடுவதை தவிர்க்கவும். :))

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி வால்.! (வெளங்கிரும்)
நன்றி அம்மிணி.!
நன்றி யாசவி.!
நன்றி கதிர்.!
நன்றி செய்யது.!
நன்றி ட்ரூத்.!
நன்றி நர்சிம்.!
நன்றி பரிசல்.!
நன்றி அமித்து.!
நன்றி முரு.!
நன்றி சூரியன்.!
நன்றி துபாய் ராஜா.!

dharshini said...

//மேலும் நான் சின்னப்பையனாக (அதாவது இளமையாக) அவருக்குத்தோன்றியிருக்கலாம்.//

நெனப்புதான் பொழப்ப கெடுக்கும்னு பழமொழி படிச்சமாதிரி ஞாபகம்..... எஸ்கேப்!

RR said...

// "சார் ட‌ய‌ட்டுன்னா, பிரியாணி சாப்பிட‌லாமா.. கூடாதா?". //
அப்படியே கூட தொட்டுக்க குவோட்டர் சேத்திகிட்டா தப்பான்னு கேட்டிருக்கலாம் இல்ல :-).

மங்களூர் சிவா said...

என்னங்ணா மறு ஒளிபரப்பா???

T.V.Radhakrishnan said...

:-))

sriram said...

டயட்டுன்னா என்னான்னு தெரியாதா? நம்ம யூத்து கேபிளார் லக்கி மாதிரி ஆவுறதுக்கு இருக்க வேண்டியது

என்னா வாலு, இன்னும் இருபதையே தாண்டலியா, எந்த இருபது?? நூத்தி இருபதா?

என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston USA

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தர்ஷினி.! (ஹிஹி..)
நன்றி RR.! (அதுவும் சரிதான்)
நன்றி சிவா.!
நன்றி டிவிஆர்.!
நன்றி ஸ்ரீராம்.!