Friday, July 17, 2009

ஒரு தரமான பதிவு

எழுத வந்து ஒரு வருடமாகிவிட்டது, ஒரு லட்சம் ஹிட்ஸ் வாங்கியாச்சு, 200 பதிவுகள் எழுதி பிரபல பதிவராகவும் ஆகியாச்சு (எவ்வளவு வாங்கிக்கட்டினாலும் உரைக்காதாப்பா உங்களுக்கு?), பல விருதுகளையும், பாராட்டுகளையும் வாங்கியாச்சு (இது எப்போ நடந்தது?).. இப்பேர்ப்பட்ட நேரத்தில் நமக்கு பொறுப்பு கூடிவிட்டது என்பதை உணர்வதால் இனி முன்போல அவ்வப்போது கூட‌ மொக்கைப்பதிவுகள் போடமுடியாது போல தெரிகிறது. மீறிச்செய்தால் நாலு பேரின் கேள்விக்கு ஆளாகிவிடும் சூழல் தெரிகிறது. ஆகவே இனி தரமான பதிவுகள் மட்டும்தான் எழுதுவது என்று முடிவு செய்தாயிற்று. ஆகவே அப்படிப்பட்ட தரமான பதிவுகளை எப்படி எழுதலாம் என்ற ஒரு சின்ன முன்னேற்பாடுதான் இந்தப்பதிவு.

முதலில் நாம் அப்படியான பதிவுகள் ஏதாவது எழுதியிருக்கிறோமா என்ற வரலாறைத் திரும்பிப்பார்த்தோமானால் கடந்துவந்த பாதை காய்ந்து போய் கிடப்பதைக் காணமுடிகிறது. பிறகு ஏன் நம்மிடம் போய் அதை எதிர்பார்க்கிறார்கள்.?

அந்தப்படம் சரியில்லை, இந்தப்படம் நொள்ளை, ஏன் இந்த ஹீரோ ஷேவ் பண்றதேயில்லை என்றவாறு சினிமா குறித்து கருத்தோ, விமர்சனமோ எழுதலாம் என்று பார்த்தால் அதை யாரும் விரும்புவதில்லையாம் (பாருங்கள் வலது புறம் ஓட்டெடுப்பை.. பார்த்தாச்சா? அப்படியே கையோடு நீங்களும் ஓட்டு போட்டுவிடுங்கள்). ஆகவே அதுகுறித்து எழுதமுடியாது.

அனுபவம் என்ற பெயரில் சின்ன வயசு சம்பவங்கள், ஊர், கல்லூரி நினைவுகளை கொசுவத்தியாக சுத்த‌லாம் என்று பார்த்தால் இந்த சப்ஜெக்டில் நம்ப பதிவர்கள் பழம் தின்று கொட்டை போட்டுவிட்டார்கள். என்ன எழுதினாலும் முன்னமே யாரோ எழுதியதைப்போலவே இருக்கிறது. சரி படிக்கும் புத்தகங்களைப்பற்றி (அப்படியே படிக்கிறோம் என்று பீலா விட்டுக்கலாம்) எதையாவது எழுதிவைக்கலாம் (வேறென்ன விமர்சனம்தான்.. தடியெடுத்தவன்லாம் தண்டல்காரன்கிற மாதிரி பிளாக் இருக்கிறது. ச.தமிழ்செல்வனைக்கூட சக பதிவர் என்றோ, எஸ்ராவை சக எழுத்தாளர் என்றோகூட டப்பென்று சொல்லிவிடலாம். கேட்க யார் இருக்கிறார்கள்?) என்று பார்த்தால் எதையாவது படித்தால்தானே ஆச்சு? புத்தகமா.. பேப்பர்ல பிரின்ட் பண்ணி பைன்ட் பண்ணியிருப்பாங்களே அதுதானே? என்று கேட்கக்கூடிய நிலைமை.

சரி விடு. இருக்கவே இருக்கு தங்கமணி பதிவுகள், டெக்னிகல் பதிவுகள் என்று பார்த்தால் அட என்னப்பா இவன் கேஸட்டை திருப்பி திருப்பி போட்டுகிட்டிருக்கான் என்று முனகல் சத்தம் கேட்கிறது. எவ்வளவுதான் நைஸாக அரைத்தாலும் அரைச்ச மாவு என்பதை கண்டுபிடித்துவிடுகிறார்கள். சரி நாம்தான் காதலைப் புழிவதில் கொஞ்சம் அனுபவம் வைத்திருக்கிறோமே அதில் இன்னும் கொஞ்சம் புழிந்தால் என்ன என்று யோசித்தால் வீட்டில் நிலைமை எப்படியிருக்கிறது.? போராட்டக்களத்தில் பூங்குயில் கூவுவதா? சான்ஸேயில்லை.

ஒரே வழி சிறுகதைதான். புனைந்து தள்ளிவிடலாம், ஒரு பய தரமற்ற பதிவுன்னு சொல்லமுடியாது. வேண்டுமானால் நல்லாயிருக்கு, நல்லாயில்லை அவ்வளவுதான் சொல்லமுடியும் அப்படின்னு யோசிச்சு சிறுகதை எழுதலாம்னு உட்கார்ந்தா அதுக்கு ஏதோ 'நாட்' வேணுமாமே. நானும் எவ்வளவோ ரோசனை பண்ணி பார்க்குறேன், அப்படி ஒண்ணு வந்து விழுந்து தொலைக்கமாட்டேங்குது. நான் என்ன பண்றது? சரிதான், பதிவர் வம்புதும்பு, கிசுகிசுக்கள், அறுவை ஜோக், பத்திரிகை செய்திகள், சுண்டல் செய்வது எப்படி போன்று மொக்கை போடலாம் என்று பார்த்தால் அவையெல்லாம் தரமான பதிவுகள் இல்லையாமே.. என்னதான் பண்றது? எழுத வந்து ஒரு வருடமாகிவிட்டது, ஒரு லட்சம் ஹிட்ஸ் வாங்கியாச்சு, 200 பதிவுகள் எழுதி பிரபல பதிவராகவும்..... (திரும்பவும் முதல்லேர்ந்தா.. சை.!)

பி.கு : சில குறிப்பிடத்தகுந்த பதிவர்கள் அனானி மற்றும் ஹேக்கிங் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி வேதனையையும், பயத்தையும் தருகிறது. பலரும் கசந்த மனநிலையில் உள்ளனர். ஏற்கனவே குடும்ப, அலுவலகச்சூழலில் ஒவ்வாத நிலை இருக்கிறது. இதில் இது போன்ற நிகழ்வுகள் மேலும் சோர்வுறச்செய்கின்றன. அப்ப‌டியும் எழுதித்தான் ஆகணுமா? என்ற எண்ணம் எழுகிறது. நண்பர் ஒருவர் தரமான படைப்பு என்பதைத்தாண்டி, பின்னூட்டங்கள், ஹிட்ஸ் என 15 நிமிடப்புகழை நோக்கி நம்மை குறுக்கிக்கொள்ளலாகாது என்றிருக்கிறார் தனது சமீபத்திய பதிவில். அவரது கூற்று ஏற்புடையதே எனினும் என்னைப்பொறுத்தவரை இன்றைய தமிழ்ச்சூழலில் எழுத்து என்பதே கூட 15 நிமிடப்புகழ்தானோ என்று கருதுகிறேன். புகழ் நோக்கமாகத்தான் இத்தனைக்காரியங்களும் செய்யப்படுகின்றன.

இந்த மேற்குறித்த பதிவு நகைப்புக்காகவே எழுதப்பட்டிருந்தாலும்.. இனி கண்டதையும் எழுதுவதை கூடுமானவரை தவிர்த்து, வாசிக்கும் வழக்கத்தை அதிகரித்து வாரம் ஒன்றல்லது இரண்டு பதிவுகளாயினும் என்னளவில் தரம் என்ற சொல்லுக்கு நியாயம் செய்ய முயல்கிறேன். உள்நோக்கமில்லாத சிலரின் உண்மையான பாராட்டுகளே என்னை தொடர்ந்து கொண்டுசெல்கிறது. அனைவருக்கும் நன்றி.

.

51 comments:

shabi said...

ME THE FIRST .................

shabi said...

சும்மா நீங்க எது எழுதுனாலும் அது கததான் நாட்லாம் வேணாம்.அந்த கதைக்கு சூப்பர்,கலக்கிட்டீங்க,அப்டின்னு ரெடிமேட் பின்னூட்டமும் வரும்

shabi said...

இப்ப இங்க அதான் நடக்குது எது எழுதுனாலும் ஒரே கமெண்ட் cut and paste(ctrl+c.ctrl+v)

Cable Sankar said...

மிகவும் யோசித்து எழுதிய பதிவா.. ஆதி..?

அது சரி said...

ஆதி,

என்ன எழுதுவது என்பது உங்கள் விருப்பம்...கொசுவத்தியும் சுத்தலாம்...காவியமும் படைக்கலாம்...

ஆனால், நீங்கள் எழுதுவதின் அடிப்படை நோக்கம் என்ன? எதற்காக எழுதுகிறீர்கள் என்பது தான் உங்கள் எழுத்தை தீர்மானிக்கிறது...

பதிவுலகில் பிரபலமாக கொசுவத்தியும், சினிமா விமர்சனங்களும், கொஞ்சம் மொக்கையும், அவ்வப்போது பிறர் மீது அதிரடி தாக்குதல்களுமே போதுமானது என்றே தெரிகிறது (இது எனது புரிதல்)...இதில் தவறேதுமில்லை...

ஆனால், இதை மீறி, ஒரு படைப்பாளியாக நீங்கள் விரும்பினால் கொசுவர்த்திகளை குறைப்பது நல்லது....உங்கள் கொசுவத்தி போல இங்கே ஒரு லட்சம் கொசுவத்திகள்...

கொசுவத்தி எழுதியே பிரபலமாக வேண்டுமானால், நீங்கள் அதற்கு முன்னரே மிகப் பிரபலமாக இருக்க வேண்டும், பில் க்ளிண்டன், பராக் ஓபாமா போல...

அடுத்த கட்டமாக நீங்கள் தொடர் கதை எழுதலாம்...இது என்னோட ஆசை...

ஏதோ எனக்கு தெரிந்தது!

(இன்னொரு விஷயம் சொல்ல தோன்றுகிறது....ஆனால் வேண்டாம்...)

சூரியன் said...

என்னமோங்க இப்படி இத பண்ணுவேன் அத பண்ணுவேனு பல பதிவ போட்டுருவீங்க போல

T.V.Radhakrishnan said...

//பிரபல பதிவராகவும் ஆகியாச்சு//

:-)))

jothi said...

பதிவில் என்ன சொன்னீர்கள் என சத்தியமாக தெரியவில்லை. ஆனால் உங்களின் அந்த எழுத்து நடை, சான்சே இல்ல,.. அடிச்சிக்க முடியாது ஆதி. ( எனக்கென்னவோ ரமாவின் மீள்பதிவே நல்லா ஓடும்னு தோணுது,.. நம்ம எம்.ஜி.யாரின் நாடோடி மன்னன் மாதிரி,..)

jothi said...

//என்னமோங்க இப்படி இத பண்ணுவேன் அத பண்ணுவேனு பல பதிவ போட்டுருவீங்க போல//

ஹா ஹா ஹா பார்த்துங்க,.. வலைப்பதிவை சுடுற மாதிரி கண்ணன் கதையையும் யாராச்சும் சுட்டுற போறாங்க,..
நம்ம வேற சிட்டி அவுட்டர்ல இருக்கோம், திருட்டு பயம் ஜாஸ்தி,.. அதுக்குதான்

அறிவிலி said...

தரம் என்பது படிபபவர்களின் மனோநிலை, மனோபாவம் போன்றவற்றை பொருத்தது. நாற்பது பேர் நன்றாக இருப்பதாக சொல்லும் விஷய்த்தை நாலு பேர் பழி கூறுவதும், நாலு பேர் பாராட்டுமபோது 40 பேர் திட்டுவதும் சகஜம். உங்கள் மனதுக்கு திருப்தியாக, அடுத்தவர்கள் ரசிப்பார்கள் என்று தோன்றும் விஷயங்களை பதிவிடுங்கள்.
உங்கள் எழுத்து நடை எதையும் சுவாரஸியமாக்கிவிடும்.

அ.மு.செய்யது said...

// வாசிக்கும் வழக்கத்தை அதிகரித்து வாரம் ஒன்றல்லது இரண்டு பதிவுகளாயினும் என்னளவில் தரம் என்ற சொல்லுக்கு நியாயம் செய்ய முயல்கிறேன்.//

வாங்க..!!!

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள். Preference பட்டையில் நான் இரண்டாவதுக்குதான் வாக்களித்தேன்:)! காமெடி,சமூக பொது நல சிந்தனை, அனுபவம் எல்லாமே நீங்கள் எழுதினால் படிக்க விருப்பம்தான். ஆனால் வாக்கு ஒன்றிற்குதானே அளிக்க முடியும்:)? கலந்து கட்டி எழுதுங்கள்.ஆனால் கடைசியா எடுத்திருக்கும் முடிவும் நன்றாகவே உள்ளது. ஆரம்பத்தில் இருந்தே நான் வாரம் ஒன்று என மாதம் 3 அல்லது 4 பதிவுகளே இடுகிறேன். [தரம் என்றெல்லாம் சொல்லிக்க வரலைங்க]. அந்த முறையே பிடித்தும் இருக்கிறது.

MayVee said...

சார் , நீங்க பிரபலமா????? எதாவது நியூஸ்பேப்பர் ல போட்டோ வந்து இருக்கா ???

(நீங்க பிரபலம் இல்லை ; உங்க எழுத்துக்கள் தான் பிரபலம் என்று எனது தாழ்மையான கருத்து.................. எப்பூடி நாங்களும் terror காட்டுவோம் ல )


உங்க பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். உங்க எழுத்துகளில் இருக்கும் நகைச்சுவை க்கு நான் ரசிகன். தரமான பதிவு எழுதுகிறேன் என்று சொல்லி நீங்களும் இலக்கியவாதி அகிவிடாதிங்க ......

வாழ்த்துக்கள் ........

MayVee said...

எனக்கு நீங்க போடுற மொக்கை பதிவுகள் தான் ரொம்ப பிடிக்கும்

MayVee said...

"This blog does not allow anonymous comments."


யாருங்க அந்த அனானி ????

ஆ.முத்துராமலிங்கம் said...

//இரண்டு பதிவுகளாயினும் என்னளவில் தரம் என்ற சொல்லுக்கு நியாயம் செய்ய முயல்கிறேன். உள்நோக்கமில்லாத சிலரின் உண்மையான பாராட்டுகளே என்னை//

நல்ல எண்ணம். அப்படியே செய்யுங்கள்
ஆதிண்ணா!

எம்.எம்.அப்துல்லா said...

என்ன கொஞ்சம் பொலம்புற மாதிரி இருக்கு???ஒரே நேரத்தில் நாம ரெண்டு பேரும் வந்தோம் இல்லையா?? அவனுக்கு நம்ப எவ்வளவோ பரவாயில்லைன்னு நினைச்சு மனச தேத்திக்கிங்க

:)

பரிசல்காரன் said...

ஆதி.

நல்ல ஃப்ளோ எழுத்துல. வலதுபுறம் உங்க அவார்டுகள் பிரமிக்க வைக்குது!

இந்தப் பதிவின் பல வரிகள் எனக்கு மிக மிகப் பிடித்திருக்கிறது. அது பற்றி மெயிலில்.

பாலா said...

போராட்டக்களத்தில் பூங்குயில் கூவுவதா? சான்ஸேயில்லை.

இந்த வசனத்த எங்கோ கேட்ட ஞாபகம்
(தம்பி வா ,தரணி ஆள வா )

ஸ்ரீ.... said...

உங்களின் முடிவும், முடிவு குறித்த இடுகையும் தரம். அற்புதமான இடுகைகளை எதிர்பார்க்கலாம் என்பதைக் குறிப்புகளால் உணர்த்தி விட்டிர்கள்.

ஸ்ரீ....

தாரணி பிரியா said...

நான் ஓட்டு போட்டதும் ரெண்டாவதுக்குதான். ஆனா எதை எழுதினாலும் ரசிச்சு படிக்கிற மாதிரி எழுதறீங்க :) அதனால தொடர்ந்து எல்லாத்தையும் கலந்தே எழுதுங்க.

தராசு said...

//மீறிச்செய்தால் நாலு பேரின் கேள்விக்கு ஆளாகிவிடும் சூழல் தெரிகிறது.//

யாருங்க அந்த நாலு பேரு,

டக்ளஸ் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வந்து இந்த புதிரை விடுவிக்கவும்.

தராசு said...

//இந்த சப்ஜெக்டில் நம்ப பதிவர்கள் பழம் தின்று கொட்டை போட்டுவிட்டார்கள்.//

டக்ளஸ் நோட் த பாயிண்ட். இது என்ன பழம், அதுல ஏன் கொட்டையை திங்காமல் போட்டு விட்டார்கள், அப்படியே போட்டாலும் எங்கே போட்டார்கள் என எல்லாருக்கும் தெரியப் படுத்த வேண்டியது நம் கடமை.

தராசு said...

//இனி கண்டதையும் எழுதுவதை கூடுமானவரை தவிர்த்து, வாசிக்கும் வழக்கத்தை அதிகரித்து வாரம் ஒன்றல்லது இரண்டு பதிவுகளாயினும் என்னளவில் தரம் என்ற சொல்லுக்கு நியாயம் செய்ய முயல்கிறேன்.//


ம்.....ம்...

அது.... அது....

அந்த பயம் இருக்கட்டும்.

டக்ளஸ்... said...

ஏன்ப்பா, உங்கள வாழ்த்தி ஒரு பதிவு போட்றக்குடாதே....!
உடனே அத எழுதுறேன், இத எழுதுறேன் கிளம்பீரது.
மொதல்ல, உங்ககிட்ட இருந்து பேனாவ ஸாரி, கீ போர்ட புடுங்கனும்யா...!

டக்ளஸ்... said...

\\டக்ளஸ் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வந்து இந்த புதிரை விடுவிக்கவும்.\\

அண்ணே, ஒன்னு நானு, இன்னோன்னு நீங்க, அப்பறம் ஜானி வாக்கரு. ம்ம்
நாலாவது யாரு..?
ம்ம்...ஒரு வேளை கண்ணனோ..?

டக்ளஸ்... said...

\\டக்ளஸ் நோட் த பாயிண்ட். இது என்ன பழம், அதுல ஏன் கொட்டையை திங்காமல் போட்டு விட்டார்கள், அப்படியே போட்டாலும் எங்கே போட்டார்கள் என எல்லாருக்கும் தெரியப் படுத்த வேண்டியது நம் கடமை.\\

ஆமாண்ணே...!
இத பதிவாவே போட்டு, அங்கிள் கிட்ட கேட்கலாம்..!
அவங்க அந்த கொட்டைய போட்ட இடத்தச் சொன்னா, அத திரும்ப எடுத்துட்டு வந்து விதை போட்டு திரும்ப திரும்ப பழம் தின்னு கொட்டை போடலாம். ஒ.கே. வா..?

மங்களூர் சிவா said...

தரமான பதிவு.

டக்ளஸ்... said...

\\என்ன கூத்து இது.? சொல்லவேயில்ல..
தராசு, என்னை மிகவும் பெருமை செய்துள்ளீர்கள் (உள்ளதுக்கு அதிகமாகவே). வார்த்தையற்று நிற்கிறேன். நன்றிகள் உங்களுக்கும், நண்பர்களுக்கும்.
(பாருங்க, ஒரு ஆளக்காணோம்..)\\

அங்க வந்து இப்பிடி சைலன்டாசொல்லிட்டு, இங்க வந்து இப்பிடி என்னாது இது சின்னப்புள்ளத்தனமா..?

டக்ளஸ்... said...

\\மங்களூர் சிவா said...
தரமான பதிவு.\\

ஆமாய்யா...
இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளப்ப்டுத்திட்டு நீங்க பாட்டுக்கு போயிருவீங்க...!
தாங்குறது யாரு , நாங்கதான..!
எங்களோட வலி உங்களுக்கு புரியாதுப்பா...!

டக்ளஸ்... said...

இதுக்கெல்லாம் காரணம் அந்த "அசத்தும் ஆதிமூலகிருஷ்ணன்" தான அங்கிள்..?
இருங்க, தராசு அண்ணன்கிட்ட சொல்லி, அந்த பதிவ தூக்க சொல்றேன்.

டக்ளஸ்... said...

உங்கள் சொல்லி ஒன்னுமில்ல அங்கிள்..
எல்லாம் அந்த "வாழவந்தான" சொல்லனும்.

தராசு said...

சரி, சரி, தரம் என்ற சொல்லுக்கு நியாயம் செய்ய முயலுகிறேன் அப்டீன்னு சொல்றாரு,

அதுனால இத்தோட நிறுத்திக்குவோம்.

நாடோடி இலக்கியன் said...

தரமான பதிவுகள் என்று எதனை அளவுகோலாக வைத்திருக்கின்றீர்கள் என்று புரியவில்லை ஆதி.என்னை பொருத்தவரைக்கும் உங்க பதிவில் முகம் சுழிக்க வைக்காத மெல்லிய நகைச்சுவையுணர்வு இழையோட எழுதும் உங்க எழுத்து நடைக்குத்தான் இங்கே வருகிறேன்,பிடிச்சிருந்தா பின்னூட்டம் இல்லைன்னா எஸ்கேப்(கவனிக்க உங்க இதுநாள் வரை பதிவுகள் ஃபாலோவர் ஆனதிலிருந்து மிஸ் பண்ணியதில்லை,ஆனாலும் எல்லாத்துக்கும் பின்னூட்டம் போட்டிருக்க மாட்டேன்).
இப்போ என்ன சொல்ல வரேன்னா கொசுவத்தியோ,தங்கமணி,
டெக்னிக்கல் பதிவுகளோ எது எழுதினாலும் எனக்கு சிரிப்பு வரணும் அதுக்குதான் நான் இங்கே வரேன்.சிக்ஸ் சிக்மா இப்போ யார் என்னிடம் எப்போ கேட்டாலும் விளக்கமாய் சொல்ல முடியும் காரணம் அதை நீங்க நகைச்சுவையா எழுதியிருந்த விதம்தான்.

அப்புறம் இந்த பதிவில் நிறைய இடங்களில் கலக்கியிருக்கீங்க.

//கடந்துவந்த பாதை காய்ந்து போய் கிடப்பதைக் காணமுடிகிறது//
//ச.தமிழ்செல்வனைக்கூட சக பதிவர் என்றோ, எஸ்ராவை சக எழுத்தாளர் என்றோகூட டப்பென்று சொல்லிவிடலாம்//
//பேப்பர்ல பிரின்ட் பண்ணி பைன்ட் பண்ணியிருப்பாங்களே அதுதானே? //

இதுக்குத்தான் இங்கே.
ஸோ எதை பற்றி வேணாலும் எழுதுங்க உங்க ஸ்டைலில்.

ஆப்பு said...

சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!

Anonymous said...

ரொம்ப சந்தோசம்... துறை சார்ந்த பதிவுகள் நெறைய எழுதுங்கள்.. வாழ்த்துகள்.

அத்திரி said...

தாம்பரத்து "தண்ணி" அண்ணனுக்கு ஒத்துக்கலைனு நினைக்கிறேன்...அதான் என்னன்னவோ எழுதியிருக்காரு??

ராஜா | KVR said...

//அவரது கூற்று ஏற்புடையதே எனினும் என்னைப்பொறுத்தவரை இன்றைய தமிழ்ச்சூழலில் எழுத்து என்பதே கூட 15 நிமிடப்புகழ்தானோ என்று கருதுகிறேன்//

இதையே பதிவு எழுதுபவர்கள் குறித்து எழுத்தாளர் சுஜாதா சொன்னபோது நமது பதிவர்கள் பொங்கி எழுந்தார்கள். இப்பொழுது சக பதிவரே சொல்கிறார், என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம் :-)

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு ஆதி (நாடோடிகள் பாதிப்பு)

Mahesh said...

தரமான பதிவு ஆதி !!!

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஷபி, கேபிள், அதுசரி (சொல்லவந்ததையும் சொல்லிடுங்க..), சூரியன், டிவிஆர், ஜோதி, அறிவிலி (கருத்துகள் ஏற்புடையவை), செய்யது,

ராமலக்ஷ்மி (மாசத்துக்கு 4 பதிவு போடலாம்தான்.. என்ன உங்கள மாதிரி வயசானவங்க லிஸ்ட்ல சேத்துடுவாங்க.. ஹிஹி..), மேவீ (எனக்கு நீங்க போடுற மொக்கை பதிவுகள் தான் ரொம்ப பிடிக்கும்// எளக்கியவாதியாகலாம்னா உட மாட்டீங்களே..), முத்துராமலிங்கம், அப்துல்லா (ஏன் இப்படி?), பரிசல் (வலதுபுறம் உங்க அவார்டுகள் பிரமிக்க வைக்குது// ஏன் இப்படி கொலவெறி, காரணம் சொன்னேன்ல..),

பாலா, ஸ்ரீ (அப்ப நிஜமாவே மொக்கை வேண்டாங்கறீங்களா?), தாரணி, தராசு (நேர்ல பாக்கும் போது கொட்டையை எங்க துப்பினேன்னு சொல்றேன்), டக்ளஸ் (ஜானி 10 நாள் லீவ் சொல்லியிருக்காரு, அப்புறம் என்ன சொல்றதானாலும் என்னிடமே சொல்லிடுங்க, வாழவந்தான் பாவம் விட்டுடலாம். என்னை பாராட்டினது குத்தமாய்யா?),

இலக்கியன் (தரமான பதிவுகள் என்று எதனை அளவுகோலாக வைத்திருக்கின்றீர்கள்// வீட்ல ஒரு இஞ்ச் டேப் வச்சிருக்கேன்.. உங்களுக்கும் வேணுமா? ஹிஹி.. உங்கள் பதிவிலேயே விடை இருக்கிறது. உங்களிடமிருந்து எல்லா பதிவுகளுக்குமே பின்னூட்டம் வாங்க வேண்டுமென்பதே அந்த அளவுகோல். உங்கள் கருத்துகளும் ஏற்புடையவை. கவனம் கொள்கிறேன். அன்புக்கு நன்றி), ஆப்பு (பணிசிறக்க‌ வாழ்த்துகள்), விஜி, அத்திரி,

ராஜா (நான் குறிப்பிட்டது எழுத்துலகமே தமிழ்ச்சூழலைப்பொறுத்தவரை 15 நிமிடப்புகழ்தானோ என்று. பதிவுலகை அல்ல.. பதிவுலகம் 15 செகன்டுகளாவது தாங்குமா என்பது சந்தேகமே.! அதற்குத்தான் இத்தனை சண்டைகள், சச்சரவுகள், ஹேக்கிங்குகள், புழுதிவாறி தூற்றல்கள், அனானிகள், உள்நோக்கம் கொண்ட மனதுகள், ஆபாசங்கள் அனைத்துமே), மகேஷ்....

அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.!!

Saravana Kumar MSK said...

குவாலிட்டி கன்ட்ரோல்??

தரமான பதிவு போடும் அண்ணன் ஆதி வாழ்க..

Saravana Kumar MSK said...

அண்ணன் அது சரி கருத்தை யோசித்து பார்க்கவும்.

ஊர்சுற்றி said...

நீங்க சொல்லியிருக்கிற மாதிரி எல்லாத்தையும் எல்லோரும் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். நம்ம ஸ்டைல்ல அதை எப்படி சொல்கிறோம் என்பதில் இருக்கிறது 'சுவாரசியம்' என்பது.

அது வரதுக்குத்தான் நானும் ரொம்ப முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன். ஆனால் உண்மையிலேயே தரமான பதிவுகளைத் தரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

//வாசிக்கும் வழக்கத்தை அதிகரித்து//

ஏதோ இதற்கெல்லாம் நேரம் கிடைக்கும் என சொல்ல வந்தால் இப்படி வாறி விட்டீர்களே:)! சரி நம்ம ஊர்க்காரர் எனும் உரிமையிலேன்னுதான் எடுத்துக்கறேன்:))!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி சரவணா.!
நன்றி ஊர்சுற்றி.!
நன்றி ராமலக்ஷ்மி.! (நிச்சயமாக.. நான் எடுத்துக்கொண்ட உரிமையை புரிந்துகொண்டமைக்கு மகிழ்ச்சி.!)

வெயிலான் said...

உங்கள் பதிவுகள் அனைத்தும் படிக்கிறேன். சிலவற்றுக்கு பின்னூட்டமிடாமலேயே செல்கிறேன் நாடோடியைப் போலவே.....

நாஞ்சில் நாதம் said...

உங்க பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். எனக்கு உங்க பதிவில் முகம் சுழிக்க வைக்காத மெல்லிய நகைச்சுவையுணர்வு இழையோட எழுதும் உங்க எழுத்து தான் பிடிச்சுருக்கு. எதை எழுதினாலும் ஒரு சின்ன காமெடி பிட்ட போடு தான் எழுதுறிங்க. நல்லாயிருக்கு.

எதை பற்றி வேணாலும் எழுதுங்க ஆனா உங்க ஸ்டைல்ல இருக்கணும்.

வாழ்த்துக்கள் ........

டிஸ்கி : தரமான பதிவுகளை எப்படி? அப்பிடின்னு ஒரு காமெடி பதிவு எழுத போறீங்கண்ணு நினைக்கறேன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

டெக்னிகல் பதிவுகள் என்று பார்த்தால் அட என்னப்பா இவன் கேஸட்டை திருப்பி திருப்பி போட்டுகிட்டிருக்கான் என்று முனகல் சத்தம் கேட்கிறது. எவ்வளவுதான் நைஸாக அரைத்தாலும் அரைச்ச மாவு என்பதை கண்டுபிடித்துவிடுகிறார்கள்
போராட்டக்களத்தில் பூங்குயில் கூவுவதா? சான்ஸேயில்லை. //


haahaa

உங்களுக்கு இந்த மாதிரி காமெடி ஃப்ளோ நல்லா வருது.
எதை எழுதினாலும் இந்த நடையை மட்டும் விட்டுறாதீங்க.

Joe said...

//
ஆகவே இனி தரமான பதிவுகள் மட்டும்தான் எழுதுவது என்று முடிவு செய்தாயிற்று.

இனி கண்டதையும் எழுதுவதை கூடுமானவரை தவிர்த்து, வாசிக்கும் வழக்கத்தை அதிகரித்து வாரம் ஒன்றல்லது இரண்டு பதிவுகளாயினும் என்னளவில் தரம் என்ற சொல்லுக்கு நியாயம் செய்ய முயல்கிறேன்.
//

வாழ்த்துக்கள் ஆதி!


இலக்கியத்தையே எளிமையாக எல்லோருக்கும் சென்றடையும் வகையில் உங்களால் தர முடியும் என்று நம்புகிறேன்.

புதுகைத் தென்றல் said...

http://pudugaithendral.blogspot.com/2009/07/blog-post_3116.html

மறக்காம ஒரு எட்டு வந்திட்டு போங்க ஃப்ரெண்ட்

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி வெயில்.!
நன்றி நாஞ்சில்.!
நன்றி அமித்து.!
நன்றி ஜோ.!
நன்றி தென்றல்.! (வந்தாச்சு, பார்த்தாச்சு, பதிவும் போட்டாச்சு.!)