Tuesday, July 14, 2009

நாடோடிப்பசங்க..

கொஞ்சம் தாமதமானாலும் சில நல்ல விஷயங்களை பாராட்டுவதில் தவறிவிடக்கூடாது என்பதனால் இந்தப்பதிவு. பார்க்கவேண்டிய லிஸ்டில் இருந்த 'பசங்க', 'நாடோடிகள்' இரண்டு படங்களையுமே சமீபத்தில்தான் காணமுடிந்தது.

பசங்க

இதுவரை தமிழ்சினிமா காணாத புத்தம் புதிய கதைக்களம். முதல் முறையாக தமிழில் ஒரு சிறுவர் சினிமா, பெரியவர்களுக்காகவும் கூட. பள்ளிப்பிள்ளைகளுக்கிடையே நிகழும் ஒரு யுத்தத்தினை மிக இயல்பாக நிகழ்த்தியிருக்கிறார்கள் திரையில்.


ஒரு கதாநாயக சிறுவன், ஒரு வில்லச் சிறுவன். அவர்களின் அடிப்பொடிகள். அவர்களின் இயல்பான பெற்றோர்கள், அவர்களின் இரண்டு குடும்பங்களுக்கு இடையே நிகழும் ஒரு மெல்லிய காதல் என மற்றொரு அழகிய திரைப்படம். திரைக்கதை, வசனம், நடிப்பு இன்னும் அத்தனை அம்சங்களும் சிறப்பாக அமைந்திருந்தன.

இது போன்ற சொல்லப்படாத புதிய கதைகளைத்தான் எதிர்பார்த்திருக்கிறார்கள் ரசிகர்கள். பாண்டிராஜ் நம்பிக்கை தருகிறார். வில்லச்சிறுவனின் நடிப்பு பிரமிப்பு தருவதாக இருந்தது. மிகச்சவாலான விஷயமே சிறுவர்களை நடிக்கவைப்பதுதான் என நினைக்கிறேன், அதில் நிறைவாய் செய்யவைக்க எத்தனை உழைப்பையும், பொறுமையையும் கைக்கொண்டாரோ இயக்குனர் பாண்டிராஜ்? அவருக்கு இதற்காகவே ஒரு பெரிய பாராட்டு. குறிப்பாக 'எப்பூடி?' சிறுவன் திரையில் வரும் காட்சிகள் அனைத்துமே கவிதை.! இன்னும் கொஞ்சம் வராதா என ஏங்க வைக்கும் காட்சிகள் அவை.

மிகச்சில குறைகள் இருந்தாலும் யாரும் தவறவிடக்கூடாத தரமான சினிமா 'பசங்க'.

நாடோடிகள்

இன்னுமொரு இயல்பான சினிமா. இயக்குனரின் இஷ்டத்துக்கு கேரக்டர்கள் மொண்ணைத்தனமாக ஆடாமல், அவர்களின் இயல்புக்குத்தக்க முடிவெடுப்பதும், நடந்துகொள்வதுமே ஒரு சினிமாவுக்கு உயிரோட்டத்தைத் தரமுடியும். அந்த வகையில் இந்தப்படம் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. சிறு உதவியோ, பெரிய உதவியோ.. ஒருவர் இன்னொருவருக்கு உதவும் போது அந்த உதவிக்குப்பின்னால் எத்தனை உழைப்போ, சங்கடங்களோ, வலியோ இருக்கிறது என்பது பல சமயங்களில் உதவி பெறுபவரால் நினைத்துப் பார்க்கப்படுவதில்லை. அதுவும் காதலுக்கு உதவுவதென்றால்..


இரண்டு மிகப்பெரிய பணபலம், அதிகாரபலம் மிக்க பெற்றோரின் பிள்ளைகளுக்கு அவர்களின் பெற்றோரை எதிர்த்து திருமணம் நடத்திவைத்தால் அதை நடத்திவைப்போருக்கு உண்மையில் என்ன கஷ்டங்கள் நேரும்? கொஞ்சம் கூட சினிமாடிக் இல்லாமல் மிக இயல்பாக அவர்களின் வலிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அப்படி அவர்கள் இணைத்துவைத்த ஜோடிகள் காதல் முறிய பிரிய நேர்ந்தால்.? கதையை இயல்பாக சொல்வதென்று முடிவு செய்தபின்னும் கூட இவ்வளவு பரபரவென சொல்லமுடியுமா? யப்பா.. கமர்ஷியல் புண்ணியவான்களே, கொஞ்சம் கத்துக்கங்கப்பா சமுத்திரக்கனியிடமிருந்து.!

நடிப்பில் அனைவரும் சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். சம்போ சம்போ பாடலின் பீட் மிக நன்றாகத்தான் இருக்கிறது. படம் நெடுக வருகிறது அந்தப்பாடல். இருந்தாலும் கொஞ்சம் ஓவர்தான். ஒரு கட்டத்தில் ஆமா சம்போ.. அதுக்கென்ன இப்போன்னு கேட்குற அளவில் பயன்படுத்தியிருக்கிறார்கள். மற்றபடி அனைத்தும் சிறப்பே. பயமாக இருக்கிறது. தொடர்ந்து வெற்றி வந்து சேர்கையில் அடுத்து கும்மாங்குத்து, பல்லி சண்டைகள் என நமது ஹீரோக்கள் இறங்கிவிடுவார்கள். சசிகுமார் அந்தமாதிரியெல்லாம் இறங்கிவிடமாட்டார் என நம்புவோம். வாழ்த்துவோம்.

.
தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டுகள் தவிர்த்து மறக்காமல் வலதுபுறம் தேர்தலிலும் ஓட்டுப்போட்டீர்கள்தானே..

39 comments:

நாஞ்சில் நாதம் said...

:))))))))))))

ஆதிமூலகிருஷ்ணன் said...

நாளைக்கு ஷெட்யூல் பண்ணி கைதவறி போஸ்ட் பண்ணி சரி இருந்துட்டுப்போகட்டுமேனு விட்டுட்டேன்.. ஹிஹி..

நன்றி நாஞ்சில்.!

தராசு said...

))))))))))))))

ஹலோ, நான் சிரிச்சேன். அவ்வளவுதான்.

Anonymous said...

ஆதி

பசங்க குறித்து எனக்கு மாற்றுப்பார்வை இருக்கிறது இருந்தாலும்...
நாடோடிகளோடு ஒன்றுபடுகிறேன் :-)

ஜானி வாக்கர் said...

நாடோடிகள் பார்த்தேன், நல்லா இருக்கு. அதுவும் கார்ல நாமக்கல் போகும்போது ஊரு பேரு கேக்குறது செம டைமிங்.

இப்படி தினம் ரெண்டு மூணு பதிவு போடத்தான் நேத்து ஒரு பில்ட் அப் ஆ? இனிமேல் முன்ன மாதிரி இயங்க முடியுமானு .

கார்க்கி said...

இன்னும் ரெண்டுமே பார்க்கல

டக்ளஸ்....... said...

\\தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டுகள் தவிர்த்து மறக்காமல் வலதுபுறம் தேர்தலிலும் ஓட்டுப்போட்டீர்கள்தானே.. \\
இல்லையே..!
என்னா பண்ணுவீங்க..?
:)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தராசு.!
நன்றி ஆசிப்.!
நன்றி ஜானி.!
நன்றி கார்க்கி.!

நன்றி டக்ளஸ்.! (நமக்குன்னா வர்றதெல்லாமே அகராதி புடிச்சதாகவே இருக்குதுங்க.. சை.!)

அப்பாவி முரு said...

மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் - ன்னு பாராட்டலாமா?

இல்லை,

லேட்டாக எழுதுனதுக்கு ஒரண்டை இழுக்கலாமா?

Truth said...

பசங்க டாப்பு. ஒவ்வொரு சீனும் புதுசு. ஜீவா நித்யானந்தம், பகடா, குட்டிமணி, அன்புக்கரசு எல்லோரும் வாழ்ந்து காட்டியிருக்காங்க.
ஹீரோ, ஃபோன் காமெடியும் புதுவகை.

நாடோடிகள் இன்னும் பாக்கல. நல்லா இருக்குன்னு சொல்றீங்களா?

அத்திரி said...

// கார்க்கி said...
இன்னும் ரெண்டுமே பார்க்கல//

உன்னோட தலை படம் மொக்கையா இருந்தாலும் போய் பாத்துர்ற........நல்ல படமெல்லாம் உன் கண்ணுக்கு தெரியாதோ?

தமிழ்ப்பறவை said...

'பசங்க’ளோடு ஒத்துப் போகிறேன்..
‘நாடோடிகள்’-இன்னொமொரு இலுப்பைப்பூ...அவ்வளவே... நடிப்பில் செயற்கைத்தனம், வலியத்திணிக்கப் பட்ட கமர்ஷியல்கள், 90-2000 தெலுங்குப்பட வாடை, எல்லாவற்றிற்கும் மேலாக சீரியல் நடை ...
இயக்குனரின் முதலிரண்டு படங்கள் கூட இதற்குப் பரவாயில்லை போல...(உன்னைச் சரணடைந்தேன்,நெறஞ்சமனசு..?!)
விமர்சனங்கள் இப்படத்திற்கு ஒரு சார்பாகவே இருக்கிறது..
// இயல்பான சினிமா.//
98 சதம் ஒத்துப் போகவில்லை.
//கொஞ்சம் கூட சினிமாடிக் இல்லாமல் மிக இயல்பாக அவர்களின் வலிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன//
வலிகள் ப்திவு செய்யப்பட்டுள்ளன மிகுந்த நாடகத்தன்மையுடன்...
//சசிகுமார் அந்தமாதிரியெல்லாம் இறங்கிவிடமாட்டார் என நம்புவோம். வாழ்த்துவோம்.//
யக்கா யக்கா பாடலில் கடைசியில் கர்ஷீப் கட்டிக்கொண்டு சசிகுமார் ஆடுவது, ‘மதுர’ படத்தில் விஜய் ஆடுவதற்கு ஒப்பானது...
கடைசியில் பிரிந்த காதலர்களைக் கடத்தும்போது வருவது பல்லி சண்டையா எனத்தெரியவில்லை...
நாடோடிகளிடம் சில நல்ல விஷய்ங்கள் இருக்கிறது... ஆனால் விமர்சனங்களில் இருக்கும் புகழாரம் அதிகம்...
அதிஷாவின் ‘காவிய ஒப்பீடும்’, நர்சிம்மின் சிலாகித்தலும், இன்னும் பிற பதிவர்களின் புகழாரங்களும் மிகமிக செயற்கை/...

தமிழ்ப்பறவை said...

சொல்ல மறந்துட்டேன்..
‘நாடோடிகள்’ நவீன விக்ரமன் படம்....

அத்திரி said...

ஆதி அண்ணே நாடோடிகள் இன்னும் பாக்கலை..........பசங்க படம் நம்முடைய பள்ளி நாட்களை ஞாபகப்பாடுத்துகிறது....................

அ.மு.செய்யது said...

//ஒரு கட்டத்தில் ஆமா சம்போ.. அதுக்கென்ன இப்போன்னு கேட்குற அளவில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.//

ஹா ஹா...

விமர்சனத்த ஷாட்டா கிரிஸ்ப்பா எழுதியிருக்கிங்க..

(ரெண்டு படத்தையும் பார்க்காத ஃபர்ஸ்ட் பெஞ்ச் பையன் நானு..)

அறிவிலி said...

பதிவ படிச்சுட்டேன். படங்கள இனிமேதான் பாக்கணும்.

வாழவந்தான் said...

side bar voting-ல் துறை சார்ந்த பதிவுகள் option இல்லை. (இதை குறிப்பிட காரணம் நடந்து முடிந்த univ exam-ல் six sigma and S5 பதிவுகளால் தப்பித்தேன்... நன்றி...)
'your preference' needs multiple choice because...
உங்கள் துறை சார்ந்த பதிவுகளை காமடியில் சேர்த்துக்கொண்டாலும், எச்சரிக்கை பதிவுகளை பொதுநலநிலும், அனேக சொந்த கதைகளிலும் காமடி இருப்பதாலும், சில நேரங்களில் ரசிக்கும் படி கதைகளும், புரியும்படி கவிதைகளும் எழுதுவதால்...

சென்ஷி said...

// அறிவிலி said...

பதிவ படிச்சுட்டேன். படங்கள இனிமேதான் பாக்கணும்.//

:(((

சோகத்தோட ரிப்பீட்டு வுட்டுக்கறேன்..!

Mahesh said...

'பசங்க' - வித்தியாசமான களமா இருந்ததால வெற்றி... clean entertainment !!

'நாடோடிகள்' - அவ்வளவு ஒண்ணும் சிறப்புன்னு சொல்ல முடியல. கொஞ்சம் லாஜிக் ஓட்டைகள், கமர்ஷியல் திணிப்புகள், அப்பறம் அதே அரதப் பழைய 'காதலர்களுக்கு உதவி'... ஆனா வந்த படங்கள்ல இது பெட்டர்...

சாம் ஆண்டர்சன் இன்னும் பாக்கலயா? அதிஷா கோச்சுக்கப் போறாரு...

T.V.Radhakrishnan said...

ரெண்டுமே பார்க்கல

அ.மு.செய்யது said...

உங்களுக்கு என்னால் இய‌ன்ற ஒரு சிறு ப‌ரிசு.வ‌ந்து பார்க்க‌வும்.

இங்கே கிளிக்க‌வும்.

லவ்டேல் மேடி said...

ஒன்னு " சங்கி மங்கி " நா.... இன்னொன்னு " மங்கி சங்கி "........

Cable Sankar said...

நல்ல விமர்சனம்..

புதுகைத் தென்றல் said...

புதுக்கோட்டையின் புகழ் பரப்பிய பசங்க படம் விமர்சனம் சூப்பர். நாடோடிகள் பாக்கலை(முடியும்னு தோணலை :(( )
விமர்சனம் மட்டும் படிச்சுக்க வேண்டியதுதான்

புதுகைத் தென்றல் said...

me the 25th

மங்களூர் சிவா said...

/கமர்ஷியல் புண்ணியவான்களே, கொஞ்சம் கத்துக்கங்கப்பா சமுத்திரக்கனியிடமிருந்து.!
/

படம் நல்ல ஸ்பீட்

/
தொடர்ந்து வெற்றி வந்து சேர்கையில் அடுத்து கும்மாங்குத்து, பல்லி சண்டைகள் என நமது ஹீரோக்கள் இறங்கிவிடுவார்கள். சசிகுமார் அந்தமாதிரியெல்லாம் இறங்கிவிடமாட்டார் என நம்புவோம். வாழ்த்துவோம்.
/
ok

Anonymous said...

நல்லா இருந்துச்சுங்க...உங்க இடுகையும் கூடவே அவ்விரு படங்களும்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

தலைப்பு ரசிக்கும்படி.. விமர்சனமும் அவ்வாறே.

நர்சிம் said...

ரைட்டு. விருதுக்கு வாழ்த்துக்கள்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி முரு.!
நன்றி ட்ரூத்.!
நன்றி அத்திரி.!

நன்றி தமிழ்பறவை.!(ஹிஹி.. கிழிச்சுட்டீங்க.! கொஞ்சம் ஓவராத்தான் புகழ்ந்துட்டேனோ? அப்புறம் நம்ப விஜய் விஷால் படங்களை மனதில் கொண்டு பாருங்கள். கொஞ்சம் நல்ல விஷயங்கள் இருந்தாலும் பாராட்டணுமா இல்லியா?)

நன்றி செய்யது.!
நன்றி அறிவிலி.!

நன்றி வாழவந்தான்.!(ஹிஹி..ரொம்ப புகழறீங்க.. முதல் கேள்வி எனக்காக கேட்கவில்லை. பொதுவான ரசனை குறித்து கேட்டேன்)

நன்றி சென்ஷி.!
நன்றி மகேஷ்.!
நன்றி லவ்டேல்.!
நன்றி டிவிஆர்.!
நன்றி கேபிள்.!
நன்றி தென்றல்.!
நன்றி சிவா.!
நன்றி இங்க்லீஷ்காரன்.!
நன்றி அமித்துஅம்மா.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தல.! (இண்டெரெஸ்டிங் பிளாக் விருதையா சொல்றீங்க.?)

விக்னேஷ்வரி said...

எளிய அழகான விமர்சனம்.

டக்ளஸ்... said...

\\side bar voting-ல் துறை சார்ந்த பதிவுகள் option இல்லை. (இதை குறிப்பிட காரணம் நடந்து முடிந்த univ exam-ல் six sigma and S5 பதிவுகளால் தப்பித்தேன்... நன்றி...)
'your preference' needs multiple choice because...
உங்கள் துறை சார்ந்த பதிவுகளை காமடியில் சேர்த்துக்கொண்டாலும், எச்சரிக்கை பதிவுகளை பொதுநலநிலும், அனேக சொந்த கதைகளிலும் காமடி இருப்பதாலும், சில நேரங்களில் ரசிக்கும் படி கதைகளும், புரியும்படி கவிதைகளும் எழுதுவதால்..\\

உங்கள் வெற்றி தெரியுதா அங்கிள்..?
ஆனால் அவர் "சில நேரங்களில்" மட்டும் Bold பண்ணியிருக்காரு கவனிச்சீங்களா..?
வாழ்த்துக்கள் பா..!

புன்னகை said...

ரெண்டு படமும் இன்னும் பாக்கல :-(

ஆப்பு said...

அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ஆதி,

இரண்டுமே அருமையான படங்கள். சிறப்பான ஒளிப்பதிவும் கூட. நல்ல நடிகர் தேர்வுகள். பாவம் த்ரிஷா இந்த முறையும் இரண்டு படங்களிலும் வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டார்.

தராசு said...

//@ வாழவந்தான் said...
side bar voting-ல் துறை சார்ந்த பதிவுகள் option இல்லை. (இதை குறிப்பிட காரணம் நடந்து முடிந்த univ exam-ல் six sigma and S5 பதிவுகளால் தப்பித்தேன்... நன்றி...)
'your preference' needs multiple choice because...
உங்கள் துறை சார்ந்த பதிவுகளை காமடியில் சேர்த்துக்கொண்டாலும், எச்சரிக்கை பதிவுகளை பொதுநலநிலும், அனேக சொந்த கதைகளிலும் காமடி இருப்பதாலும், சில நேரங்களில் ரசிக்கும் படி கதைகளும், புரியும்படி கவிதைகளும் எழுதுவதால்...//

தலைவா,

இது இது இது தான் வெற்றி.

கேட்பதற்கே ரொம்ப சந்தோஷமா இருக்கு. Hats off to you.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி விக்னேஷ்வரி.!
நன்றி டக்ளஸ்.! (கவனிச்சேன், கவனிச்சேன். இது மட்டும் நல்லா கண்ணுல தெரியுமே..)

நன்றி புன்னகை.!
நன்றி ஆப்பு.!
நன்றி ரிஷான் ஷெரீப்.!
நன்றி தராசு.! (அதுக்காக பதிவு போட்டு கவுரவிப்பீர்கள் என எதிர்பார்க்கவில்லை தராசு. நெகிழ்ச்சியில் நன்றி உங்களுக்கும், வாழவந்தானுக்கும்)

ஊர்சுற்றி said...

நல்ல விசயம். அதைப் பதிவு செய்ததும் கூட.

'ஒரு வெக்கம் வருதே வருதே' தான் இப்போ என்னோட காதில் எப்பவும் ஒலிச்சிகிட்டே இருக்கு. :)

பசங்க - நாடோடிகள்; சமீபத்தில் வந்த மிகச்சிறந்த திரைப்படங்கள்.