Saturday, August 29, 2009

மொக்கைப்பதிவுகள் 2008: டாப் 10.!

டாப் 10 என்று பார்த்ததுமே இன்னொரு பத்தா? என டென்ஷன் ஆகாமல் மேலே போகவும். விஷயம் இருக்கிறது..

வேறு வழியே இல்லாமல் நண்பர்களிடமே சரணடைந்துவிடுவது என்று தீர்மானம் பண்ணிவிட்டேன். அதுவும் நம்ப செட்டில் மொக்கைகளுக்கா பஞ்சம்.? நேரடியாக விஷயத்துக்குப் போய்விடலாம். டாப்பிக்குக்குள் போவதற்குள் ஒரு ரெண்டு வரி பில்டப் கொடுப்பது வழக்கம். அதைப்பார்த்துவிட்டு ஓவரா முறுக்கு சுத்துராய்ம்ப்பா இவன் என்று கமெண்ட் வர ஆரம்பித்துவிட்டது. இனி சேவாக் ஸ்டைல்தான்.

கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகள் :

*சீனியர் பதிவுகள் கணக்கில் கொள்ள‌ப்படவில்லை.
*ஒரே நபரின் பல பதிவுகள் பரிசீலனையில் இருந்தாலும் 10க்குள் ஒன்றுக்கு மேற்பட்டவை வந்தால் ஒன்று மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது.
*தேர்வுக்குழுவில் நான் மட்டுமே இல்லை, எனினும் ரிஸ்க் கருதி பிறரது பெயர்கள் வெளியிடப்படமாட்டாது.
*இதில் லஞ்ச லாவண்யங்களுக்கு இடம்தரப்படவில்லை.
*சுமார் 30க்கும் மேற்பட்ட பதிவர்களின் 100க்கும் மேற்பட்ட பதிவுகள் இந்தப்போட்டியில் கலந்துகொண்டன. இறுதிச்சுற்றில் நடுவர்களுக்கு பைத்தியம் பிடிக்காத குறைதான்.

இனி டாப் 10..


10. ப‌த்தாவ‌து இட‌த்தில் அண்ண‌ன் த‌மிழ் பிரிய‌ன். சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன்பு வெளியான‌ இந்த‌ப்ப‌திவு ஆனந்தவிகடனில் வெளியாக இருந்து கடைசி நேரத்தில் சுயமறுப்பாக வேண்டாம் என்று இருந்த பதிவு. சமீபத்தில் இதன் ரீமிக்ஸ்ஸாக‌ இன்னொரு ப‌திவு அவ‌ர் இட்டிருந்தாலும்
ஒரிஜின‌லுக்கான‌ம‌திப்பே த‌னி.

9. அடுத்த‌ இட‌த்தை வெல்ப‌வ‌ர் தோழ‌ர் ப‌ரிச‌ல். இந்த‌ப்ப‌திவில் த‌ன‌க்காக‌ இல்லாம‌ல் த‌ன‌து ச‌க‌ ப‌திவர் தோழர் அதிஷாவுக்கு உதவும்பொருட்டு‌ மென‌க்கெட்டு செய்த‌ சேவை புல்ல‌ரிக்க‌வைப்ப‌தாக‌ இருந்த‌து.

8 . அடுத்த‌ இட‌ம் கார்க்கிக்கு செல்கிறது. இவ‌ரின் தலைசிறந்த ப‌ல‌ ப‌டைப்புக‌ளில் தேர்ந்தெடுப்ப‌து சிர‌மாக‌ இருந்த‌தால் கும்ஸாக‌ இது த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து. ந‌ண்ப‌ர்க‌ள் இருவ‌ருக்கிடையே நிக‌ழ்ந்த‌ ராபிட் ப‌ய‌ர் இன்ட‌ர்வியூவை த‌ந்திருக்கிறார்.

7. சீட்டு விளையாட்டைப்பற்றி அண்ணன் வால்பையன் எழுதிய இந்த ஆராய்ச்சிப்பதிவு பெரும் புரட்சியை கிளப்பியது அப்போது. நீங்களும் இதைப்படித்து சூது பற்றி அறிந்துகொள்ளுங்கள். இல்லையெனில் யாராவது உங்களைப்பார்த்து சூது வாது தெரியாதவன் என்று சொல்லிவிடக்கூடும்.

6. தான் பெண் பார்த்த அழகை எல்லோருக்கும் மெயில் அனுப்பி விதவிதமாக வாங்கிக்கட்டிக்கொண்ட அண்ணன் சஞ்சய்யின் இந்தப்பதிவு பிடிக்கிறது ஆறாவது இடத்தை.

5. எல்லோரும் ரொம்ப‌ சீரிய‌ஸா திங்க் பண்ணி ப‌தில் சொன்ன‌ ஒரு முக்கிய‌மான‌ தொட‌ர் ப‌திவில் தைரியமாய் முடிந்த‌ வ‌ரை மொக்கை போட்ட‌ வீராங்க‌னை அக்கா ஸ்ரீம‌தி வெல்கிறார் ஐந்தாவ‌து இட‌த்தை.!

4. உடல் நலமில்லாத ஒரு நேரத்தில், டாக்டரை பார்க்கச்செல்கிறார் நமது அனைவரின் அன்புக்குரிய அண்ணந்தம்பி அப்துல்லா. அப்போது அந்த டாக்டரை கலாய்த்த அனுபவம் பெறுகிறது அழகான இந்த நான்காவது இடத்தை.

3. ஆர‌ம்ப‌த்திலேயே அகிலாண்ட‌ நாய‌க‌னுக்கு அருமையாக குரல் கொடுத்து நமது அன்பை சம்பாதித்துக்கொண்ட அதிஷா அடுத்த இடத்தைப்பிடிக்கிறார். இதில் தெறிக்கும் JKR ஆத‌ர‌வுக்குர‌லைக‌வ‌னியுங்க‌ள்.

2. நமது கலாய்த்தல் திலகம் குசும்பன் அவர்கள் சக பதிவர்களை வைத்தே நமது அருமைத் தல.. நர்சிமை கலாய்த்த (இது கீழ்க்கண்ட மொக்கை இலக்கணத்தில் அடங்காவிட்டாலும்) இந்தப்பதிவுபெறுகிறது இரண்டாம் இடத்தை.! வாழ்த்துகள் குசும்பரே..

1. ஒரு மொக்கைக்கே அர‌ண்டு போகும் உங்க‌ளுக்கு ஒரு மொக்கை விருந்தே வைத்த‌ இந்த‌ப்ப‌திவுக்கே முத‌லிட‌ம் வ‌ழ‌ங்கி நானும் ர‌வுடிதான் என்ப‌தை பெருமையோடு ஒப்புக்கொள்கிறேன்.


பி.கு 1: நல்ல மொக்கைப்ப‌திவுக‌ள் எப்ப‌டி இருக்க‌வேண்டும் என‌ ச‌மீப‌த்தில் ஒரு மூத்த ப‌திவ‌ர் சொன்ன‌போது இந்த‌ விள‌க்க‌ம் கேட்க நேர்ந்த‌து. படித்தவுடன் வாசகர்களுக்கு ஏற்படும் உணர்ச்சியில் சிரிப்பு 5%, எரிச்சல் 40 %, கோபம் 5%, வாழ்க்கையின் மீதே வெறுப்பு 15%, டல் 8%, ஷாக்2%, ஆவ்வ்வ் 25% ஆகிய‌ன‌ ஏற்ப‌ட‌வேண்டுமாம். ஏற்ப‌ட்ட‌தா?

பி.கு 2: இந்த லிஸ்ட்டில் இடம்பெறாதவர்கள் ச்சு..ச்சு.. அழக்கூடாது.! இடம்பெற்றவர்கள் வரிசைப்படுத்தலை சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.. சும்மனாச்சுக்கும் போட்டது.

பி.கு 3: அத்தனை இணைப்புகளையும் படித்து மீண்ட வீரன் யாராவது இருப்பானாயின் அது போற்றத்தக்கது. உடன் தொடர்பு கொள்ளவும். 'மொக்கைகொண்டான்' என்ற பட்டமும், சிறப்புப்பரிசும் காத்திருக்கிறது.

**************************************

சென்ற ஆண்டு டிசம்பரில் 'வலைச்சரம்' வலைப்பூவில் எழுதிய பதிவு ரிப்பீட்டு செய்யப்படுகிறது. ஆகவே இது ரிப்பீட்டு கணக்கில் சேர்க்கப்படாது. மேலும் இந்த லிஸ்டில் இடம்பெற்ற மொக்கைப்பதிவர்களை தூக்கி சாப்பிடும் வகையில் புதிய மொக்கைகளின் வரவு மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களைப்பற்றிய லிஸ்ட் விரைவில் வெளியிடப்படும். நன்றி. ஹிஹி...

.

33 comments:

"ராஜா" from புலியூரான் said...

கலக்கல் கலெக்சன்...

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஒவ்வொரு பாயிண்டிலும் லிங்க் இருக்கிறது. காப்பி பேஸ்ட் பண்ணியதால் சரியாக தெரியவில்லை. மிஸ் பண்னவேண்டாம்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

+++நன்றி புலியூரான்.! ++++++எந்த ஊருன்னு கேட்டேனே போன்ன பதிவுலயே.. கீழப்புலியூரா?

நர்சிம் said...

இந்தப் பின்னூட்டம் சீரியஸாக எடுட்துக் கொள்ள..வேண்டும்..

அடுத்த்கட்டத்துக்குப் போயான்னா..செரின்னுட்டு..

கீழ இருக்குற கட்டத்துக்குப் போறீர்யா நீர்..(உங்க ஊரு பாஷை..)
*******

நீங்கள் அவள்விகடனுக்காக எழுதிய கட்டுரையின் தரம் நிரந்தரம்.நினைவில் கொள்ளுங்கள்..

Kathir said...

//பி.கு 3: அத்தனை இணைப்புகளையும் படித்து மீண்ட வீரன் யாராவது இருப்பானாயின் அது போற்றத்தக்கது. உடன் தொடர்பு கொள்ளவும். 'மொக்கைகொண்டான்' என்ற பட்டமும், சிறப்புப்பரிசும் காத்திருக்கிறது.//

படிச்சிட்டோம்ல...
அப்துல்லா அண்ணன் link வேலை செய்யலை.... (அவரோட பழைய ப்ளாக்கோட linkஆ அது....)

நர்சிம் said...

**எடுத்து

அத்திரி said...

ரைட்டு...........

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

//ஓவரா முறுக்கு சுத்துராய்ம்ப்பா இவன் என்று கமெண்ட் வர ஆரம்பித்துவிட்டது.//
நீங்க அப்போ உண்மையா முறுக்கு சுத்த மாட்டீங்களா? இருக்கட்டும், இருக்கட்டும். :-(

டம்பி மேவீ said...

அப்ப இவங்க எல்லாம் இலக்கியவாதி இல்லையா ??????


அட குஷ்டமே........ உங்களை எல்லாம் நான் இது வரைக்கும் ஒரு எஸ்ரா, ஜெயமோகன், சாரு, திருவள்ளுவர் அளவுக்கு கற்பனை வைத்து இருந்தேனே .....

என்ன கொடுமை சார் இது

டம்பி மேவீ said...

"ஆதிமூலகிருஷ்ணன் said...
ஒவ்வொரு பாயிண்டிலும் லிங்க் இருக்கிறது. காப்பி பேஸ்ட் பண்ணியதால் சரியாக தெரியவில்லை. மிஸ் பண்னவேண்டாம்.

August 29, 2009 12:08 PM


ஆதிமூலகிருஷ்ணன் said...
+++நன்றி புலியூரான்.! ++++++எந்த ஊருன்னு கேட்டேனே போன்ன பதிவுலயே.. கீழப்புலியூரா?

August 29, 2009 12:09 PM"


இதுக்கு பெயர் தான் சுய வேலைவாய்ப்பு திட்டமா ???

T.V.Radhakrishnan said...

:-)))

அ.மு.செய்யது said...

ஆல்ரெடி வலைச்சரத்துல ஒருநாள் எதையோ தேடிட்ருந்தப்ப ஒருநாள் இந்த பதிவ பார்த்தேன்.நல்ல தொகுப்பு !!!

பரிசல்காரன் said...

)(&*%**(%(#^%

நேர்ல வந்து பேசிக்கறேன்யா ஒன்ன...

பட்டிக்காட்டான்.. said...

//.. //பி.கு 3: அத்தனை இணைப்புகளையும் படித்து மீண்ட வீரன் யாராவது இருப்பானாயின் அது போற்றத்தக்கது. உடன் தொடர்பு கொள்ளவும். 'மொக்கைகொண்டான்' என்ற பட்டமும், சிறப்புப்பரிசும் காத்திருக்கிறது.//

படிச்சிட்டோம்ல...
அப்துல்லா அண்ணன் link வேலை செய்யலை.... (அவரோட பழைய ப்ளாக்கோட linkஆ அது....) ..//

Repeettuuuuuuu.......

புதுகைத் தென்றல் said...

அப்துல்லா link வேலை செய்யலை.

கும்க்கி said...

டம்பி மேவீ said...

அப்ப இவங்க எல்லாம் இலக்கியவாதி இல்லையா ??????


அட குஷ்டமே........ உங்களை எல்லாம் நான் இது வரைக்கும் ஒரு எஸ்ரா, ஜெயமோகன், சாரு, திருவள்ளுவர் அளவுக்கு கற்பனை வைத்து இருந்தேனே .....

என்ன கொடுமை தோஸ்த் இது...?

(டம்பீ மே.வீ...திருவள்ளுவர்ல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல..?)

கும்க்கி said...

எல்லாரையும் க்ரூப் ஆப் மொக்கையில் வகைப்படுத்திய(சும்மா டமாசுக்குதான்) உமது தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும்.

SanjaiGandhi said...

//அண்ணன் சஞ்சய்யின்//

வேற் கெட்ட வார்த்தை தெரியலையா அங்கிள்?

இந்த பட்டியலை ஒத்துக்க முடியாது? எனக்கு 5வது இடம் தானா? முதல் இடம் இல்லையா? இதில் அரசியல் இருக்கிறது. உங்களுக்கு வேண்டியவர்களுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் பட்டியல் ஏமாற்றம் அளிக்கிறது.

( இருங்க.. பைத்தியக்காரன் பதிவை பார்த்துட்டு வந்து மீதி கமெண்ட் போடறேன்.. )

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி நர்சிம்.! (சரி தல.. கோவப்படாதீங்க. இன்னும் ஒரு வாரத்துக்கு சீரியஸ் பதிவுகள்தான் வரும். கூட்டம் வரலையோ.. தெரியும் சேதி.!)

நன்றி மொக்கைகொண்டான் கதிர்.! (ஆமாம் அது ப்பழசுதான்.. ஹிஹி)

நன்றி அத்திரி.!
நன்றி பாலகுமாரன்.!

நன்றி மேவீ.! (திருவள்ளுவரா.. டேய்.. என்ன இது?)

நன்றி டிவிஆர்.!
நன்றி செய்யது.!

நன்றி பரிசல்.! (இன்னா கோவம்னு புர்லயே)

நன்றி பட்டிக்காட்டான்.!
நன்றி தென்றல்.!

நன்றி கும்க்கி.! (என் தெகிரியம் உங்களுக்கு தெரியாதா? ஆமா போனை ஆஃப் பண்ணிவெச்சுக்க வேண்டியது. அப்புறம் நம்மையெல்லாம் ஞாபகமிருக்குமானு கேட்கவேண்டியது..)

நன்றி சஞ்சய்.! (அங்கிளா? யாருதான் இதச்சொல்றதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம பூட்டுதே.! என்னிய அனாவசியமா கொலகாரனா மாத்தாதீங்க.. சொல்லிப்புட்டேன்)

RAMYA said...

ரைட்டு...........

Mãstän said...

<<
சிரிப்பு 5%, எரிச்சல் 40 %, கோபம் 5%, வாழ்க்கையின் மீதே வெறுப்பு 15%, டல் 8%, ஷாக்2%, ஆவ்வ்வ் 25%
>>

hehe... nice :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ரம்யா, மஸ்தான்.!

மாதவராஜ் said...

இயல்பான நகைச்சுவை உங்களிடம் இருக்கிறது. ரசித்துக்கொண்டு இருக்கிறேன்.

மங்களூர் சிவா said...

nice!

தராசு said...

ஒரு மீள் பதிவு போடறதுக்குத்தான் இந்த பில்டப்பா????

Mahesh said...

ஏண்ணே.... ஆபீஸ்ல ஆணிதான் இல்ல... ஒரு குண்டூசி கூடவா இல்ல? அவ்வ்வ்வ்வ்வ்வ்.......

எம்.எம்.அப்துல்லா said...

அப்துல்லா link வேலை செய்யலை.

//


அக்கா அது பழைய ஹேக் செய்யப்பட்ட பிளாக்கில் உள்ளது :(

பரிசல்காரன் said...

//நன்றி பரிசல்.! (இன்னா கோவம்னு புர்லயே)//

எங்க பேரையெல்லாம் போட்டு..
விதிமுறைல - //*சீனியர் பதிவுகள் கணக்கில் கொள்ள‌ப்படவில்லை.//

இப்படிப் போட்டிருக்கியளே.. அந்தக் கோவம்தான்!

நாஞ்சில் நாதம் said...

:))

Karthik said...

சும்மா மீ த 30 போடலாம்னு. ஒன்னும் தப்பில்லையே?! :)

"ராஜா" from புலியூரான் said...

//எந்த ஊருன்னு கேட்டேனே போன்ன பதிவுலயே.. கீழப்புலியூரா?

இல்லங்க ஆதி .... எங்க ஊரு அருப்புகோட்டைக்கு பக்கத்துல இருக்கு, விருதுநகர் மாவட்டம்... சித்தர் கோவில் ஒன்னு இருக்கும் (எனக்கு தெரிஞ்சி தமிழ்நாட்டுலேயே மூணு இடங்களில்தான் சித்தர் கோவில் இருக்கு) 63 நாயன்மார்கலுல ஒருத்தர கல்லற இங்கதான் இருக்கு

வால்பையன் said...

அட டாப் டென்ல நானும் வர்றேனா!
ரொம்ப நன்றியண்ணே!
மொக்கசாமி பட்டம் கொடுத்தததுக்கு!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி வால்பையன்.!
நன்றி புலியூரான்.!
நன்றி கார்த்திக்.!
நன்றி நாஞ்சில்.!
நன்றி அப்துல்.!
நன்றி மகேஷ்.!
நன்றி தராசு.!
நன்றி சிவா.!
நன்றி மாதவராஜ்.!