Tuesday, August 4, 2009

பிரியா நீ.?

எனக்கும் சுவையான உணவுக்கும் இடையில் உள்ள இடைவெளி நான் கடக்கமுடியாத ஒரு தூரமாகவே இத்தனை நாட்களும் இருந்துவந்திருக்கிறது, அது கல்யாணத்துக்கு முன்பானாலும் சரி, பின்பானாலும் சரி. நான் பிளஸ் டூ முடிந்ததுமே வீட்டைப்பிரிந்தவன். அதற்கு முன்பும் கூட அவ்வளவு விசேஷமாக ஒன்றும் கிடையாது. என் அம்மா வைக்கும் மீன்குழம்புக்கு இணையாக இன்றுவரை பிறிதொன்றை பார்க்கவில்லை எனினும் அவ்வளவு சிறப்பாக சொல்லிக்கொள்ளும்படி சமையலில் என் அம்மாவுக்கு ஆர்வமிருந்ததில்லை. பல நாட்கள் இரவு உணவு கடைகளிலேயே நிகழும். எனக்கும் 25 வயது வரை உணவின் மீது அவ்வளவாக ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் அதன்பின்னர் சிறிது சிறிதாக ஏற்பட்ட ஆர்வம் தீயென பற்றிக்கொண்டது. சுவையான உணவுக்காக அலைய ஆரம்பித்தேன். என்ன இருக்குதோ இல்லையோ நன்கு சமைக்கத் தெரிந்திருக்கவேண்டும் என்று பெண்பார்க்கும் போது கண்டிஷனெல்லாம் போட்டேன். அதை யார் காதில் வாங்கிக்கொண்டார்கள்.? ஹும்.!

வீட்டில் வெறுத்து, ஆபீஸ் கேண்டீனில் வெறுத்து, சில ஹோட்டல்களில் வெறுத்து 'கடவுளே ஏன் என்னை இப்படி சோதிக்கிறாய்.?' என்று சில‌ நாட்க‌ளில் வாய்விட்டு புல‌ம்பியிருக்கிறேன். இப்ப‌டியான‌ சூழ்நிலைக‌ளில் என்றாவ‌து ம‌ண‌க்க‌ ம‌ண‌க்க‌ ர‌மா 'கூட்டாஞ்சோறு' செய்திருப்பாள். புல‌ம்பிக்கொண்டே ஏதோ ஒரு லோக்கல் ஹோட்ட‌லில் போய் அம‌ர்ந்தால் ஆப்ப‌மும் தேங்காய்ப்பாலும் ம‌ன‌தை நிறைக்கும். கேண்டீனில் கீரைக்க‌றியும், ர‌ச‌மும் என‌ புல்ல‌ரிக்க‌ வைப்பார்க‌ள். அன்றெல்லாம் எழுந்திருக்க முடியாத அளவு சாப்பிட்டுவைப்பேன். ஆனால் எல்லாமே அத்தி பூத்தாற்போல‌த்தான். சரி விஷ‌ய‌த்துக்கு வாருங்க‌ள்.

ஹைத‌ராபாத் பிரியாணி, ஹைத‌ராபாத் பிரியாணி என்று வ‌ஸ்து ரொம்ப‌ .:பேம‌ஸாக‌ இருக்கிற‌தே.. நாமும்தான் அடிக்க‌டி ஹைத‌ராபாத் போகிறோமே.. இந்த‌முறை ச‌ரியாக‌ க‌டையை விசாரித்து வாங்கிவிட‌ வேண்டிய‌துதான் என்று முடிவு செய்திருந்தேன். முந்தைய‌ அனுப‌வ‌ங்க‌ள் அவ்வ‌ள‌வு சு‌க‌மில்லை. ஒருமுறை த‌ங்கியிருந்த‌ ஹோட்ட‌லில் இரவு உணவுக்காக ஆர்ட‌ர் செய்த‌போது (ஹைத‌ராபாத் ஸ்பெஷ‌ல் பிரியாணி என்று மெனுவில் இருந்த‌து) மிள‌காய் ம‌ண‌க்க‌ ம‌ண‌க்க‌ க‌டும் ம‌சாலா நிறைந்த‌ குறைந்த‌து நான்கு பேர் சாப்பிடும் அளவில் ஒரு ப‌டைய‌லை நிக‌ழ்த்திவிட்டு போனார் உப‌ச‌ரிப்பாள‌ர். அதைப்பார்த்தே வ‌யிறு நிறைந்துபோனேன்.

எப்ப‌டி திருநெல்வேலி அல்வா எனில் இருட்டுக்க‌டையோ அதைப்போல‌ இங்கு ஏதாவ‌து ஸ்பெஷ‌ல் க‌டை இருக்க‌க்கூடும் என‌ எண்ணிக்கொண்டேன். சில‌ரை விசாரித்த‌போது ஒவ்வொருவ‌ரும் ஒவ்வொரு வித‌மாய் ப‌தில் சொன்னார்க‌ள். ஒருவ‌ர் பார‌டைஸ் ச‌ர்க்கிளில் உள்ள‌து என்றார். இன்னொருவ‌ர் பாலாந‌க‌ர் என்றார். இன்னொருவ‌ர் சாக‌ர் லேக் அருகில் என்றார். சிலருக்கு பிரியாணியா அப்பிடின்னா என்ன என்றார்கள். விள‌ங்கிரும் என்று விட்டுவிட்டேன்.

ஆகவே குறைந்தபட்சம் ஒவ்வொருமுறையும் வெவ்வேறு கடைகளில் ட்ரை பண்ணுவேன். அவ்வாறே இந்தமுறை ர‌யில்வேஸ்டேஷ‌னில் ஒரு க‌டையில் 'ஸ்பெஷ‌ல் சிக்க‌ன் பிரியாணி' வாங்கிக்கொண்டேன். சாப்பிடும் போது பார்ச‌லைத்திற‌ந்தேன். நான்கு பேர் சாப்பிடும் அள‌வு. நம்புங்கள், உப்பு உறைப்பில்லாத‌ வெள்ளை சாத‌ம். அடியாள‌த்தில் ஒரு முட்டையும், இர‌ண்டு பெரிய‌ சைஸ் சிக்க‌ன் 65 துண்டுக‌ளும் ஒளித்துவைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன‌. இதுதான் பிரியாணி என்று இன்னும் என்னால் ந‌ம்ப‌முடிய‌வில்லை. யாராவ‌து புண்ணிய‌வான் அடுத்தமுறையாவ‌து நான் அங்கே வ‌ரும்போது பிரியாணி வாங்கித்த‌ர‌ட்டும் என‌ வாழ்த்துங்க‌ள்.

டிஸ்கி : சென்ற‌ ர‌ம்ஜானுக்கு அப்துலுக்கு போன் ப‌ண்ணி பிரியாணி என்று இழுத்தேன். 'நான் சைவ‌ம்' என்று ஒரே வ‌ரியில் முடித்துக்கொண்டார். கிடைத்த‌ ஒரே இஸ்லாமிய‌த்தோழ‌ரும் (த‌மிழ் பிரிய‌ன்தான் துபாயில் இருக்கிறாரே..) சைவ‌ம் என்றால் நான் என்ன‌தான் செய்ய‌முடியும் சொல்லுங்க‌ள்.

39 comments:

ஆதிமூலகிருஷ்ணன் said...

அலோ..யாரு? தன்ராஜா.? நா ரொம்ப பிஸி..!!

(அதான் ரிப்பீட்டு.. ஜாரிங்க)

Cable Sankar said...

ஆதி.. செகந்த்ராபாத்தில் ஸ்டேஷ்ன் எதிரே ஒரு ஹோட்டல் பெயர் மறந்துவிட்டது. அது இல்லாவிட்டால் ஹைதையில் பாவர்சி, பாரடைஸ் கண்டுபிடிக்க கஷ்டமாயிருந்தா போறப்ப என்னையும் கூட்டி போங்க நான் காட்டுறேன் கடைய.. :)

குடுகுடுப்பை said...

ஹைதராபாத் பிரியாணி அப்படிதான் இருக்கும். நம்மூர் பிரியாணி எல்லாம் சேந்து வேக வைக்கிறது. அங்கே எல்லாததையும் வேக வெச்சு அப்புரம் மிக்ஸ் பண்ணுவாங்க.

ஆனா பிரியாணி சமைக்கிறது ரொம்ப ஈஸி...

டக்ளஸ்... said...

Raittu Uncle...!

தமிழ் பிரியன் said...

///எனக்கும் சுவையான உணவுக்கும் இடையில் உள்ள இடைவெளி நான் கடக்கமுடியாத ஒரு தூரமாகவே இத்தனை நாட்களும் இருந்துவந்திருக்கிறது, அது கல்யாணத்துக்கு முன்பானாலும் சரி, பின்பானாலும் சரி.////

அங்கிளேய்.. இப்படி எழுதி அடி வாங்கியது மறந்துடுச்சா.. ரிப்பீட்டு அடி உண்டும்ங்கோ.. ;-)))

தராசு said...

//சென்ற‌ ர‌ம்ஜானுக்கு அப்துலுக்கு போன் ப‌ண்ணி பிரியாணி என்று இழுத்தேன். 'நான் சைவ‌ம்' என்று ஒரே வ‌ரியில் முடித்துக்கொண்டார். கிடைத்த‌ ஒரே இஸ்லாமிய‌த்தோழ‌ரும் (த‌மிழ் பிரிய‌ன்தான் துபாயில் இருக்கிறாரே..) சைவ‌ம் என்றால் நான் என்ன‌தான் செய்ய‌முடியும் சொல்லுங்க‌ள்.//

நண்பா, முதலில் பிரியாணி என்றால் இஸ்லாமியர்கள்தான் சிறப்பாக செய்வார்கள் என்ற நினைப்பு உமக்கு ஏன்? பிரியாணி என்பது ஒரு உணவு வகைதானே தவிர, அது ஒரு பிரிவினரின் சிறப்பம்சமல்ல.

ஆனா, என்ன இருந்தாலும் அப்துல்லா அண்ணன் அப்படி சொல்லியிருக்க கூடாது.

நாஞ்சில் நாதம் said...

:))

கார்க்கி said...

யார் சகா பிரியா? அண்ணிக்கு தெரியுமா?

டிஸ்கி: தலைப்பை மட்டும் தான் படித்தேன்..

pappu said...

அழுவாதீங்கண்ணே உங்களுக்கு நல்ல பிரியாணி பிரியா கிடைக்கும்!

நர்சிம் said...

//எனக்கும் 25 வயது வரை உணவின் மீது அவ்வளவாக ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் அதன்பின்னர் சிறிது சிறிதாக ஏற்பட்ட ஆர்வம் தீயென பற்றிக்கொண்டது//

அப்போ,20 வருஷமா தீ பற்றியெரியுதா? ரைட்டு.

ஹைதையில்..ஓல்டு சிட்டிக்கு போங்க.எல்லா ஹோட்டல்களிலும் அருமையாக இருக்கும்.கொஞ்சம் ஹைஃபையா என்றால் செகந்திராபாத்தில் ஹோட்டல் பசேரா..

MayVee said...

shabad illatti paradise , bahar la try panni parunga thala

MayVee said...

"கார்க்கி said...
யார் சகா பிரியா? அண்ணிக்கு தெரியுமா?"


periya repeatyyyyy........

MayVee said...

oru velai athu hydai a_i yaga irukkumo....

hee he hee hee

தாரணி பிரியா said...

இப்படி புலம்பற ஆளா +2 வரைக்கும் வீட்டுல வெச்சு இருந்ததே பெரிசு :)


இப்படி ரமா கண்டிஷன் எல்லாம் போட்டு இருந்தா என்ன ஆகி இருக்கும் யோசிங்க :)

உம் எல்லாரும் சைவமுன்னா நீங்களே சமைச்சு பழகுங்க வேற என்ன செய்ய :)

உங்களை எல்லாம் ஒரு நாலு வருசத்துக்கு நாடு கடத்தணும் அப்பதான் வீட்டு சமையல் டேஸ்ட் தெரியும் :)

அ.மு.செய்யது said...

கொஞ்ச நாளாவே நிறைய சுயபுராணம் எழுதறீங்க...

ப்ளீஸ்...கொஞ்சம் டிரெண்ட மாத்துங்க தல..

Mrs.Faizakader said...

அண்ணனுக்கு ஹைதராபாத் பிடியாணி மேல் இப்படியொரு மோகமா.
ஹைதராபாத் ஹவுஸ், பாரடைசில், ரெட்டி போலியில் உள்ள 4சீஸனில் பிரியாணி நல்லாயிருக்கும்.
வீட்டிலே செய்வதும் மிகவும் சுலபம் தான். விருப்பமிருந்தால் நான் செய்த செய்முறை குறிப்புகளை பார்க்கவும்
http://eniniyaillam.blogspot.com/2009/08/blog-post_04.html

வெண்பூ said...

இது மீள் பதிவாச்சே... இன்னுமா உங்களுக்கு நல்ல ஹைதராபாத் பிரியாணி கிடைக்கலை.. வெட்கம், வெட்கம்...

உங்களுக்கு நம்ம ஊர் தலைப்பாக்கட்டு, ஆம்பூர் பிரியாணிகள் மிகவும் பிடிக்கும் என்றால் ஹைதை பிரியாணி உங்களை ஏமாற்றலாம். மசாலா குறைவாக வெள்ளை சாதம் மட்டுமே இருப்பதாக தோன்றலாம்.

எனக்குத் தெரிந்து விலையும் குறைவாக அருமையாக இருப்பது, ஹைதராபாத் ஹவுஸ் ஹோட்டல்களிலும், பாரடைஸ் மற்றும் பாவார்ச்சியிலும். டிரை பண்ணி பாருங்க..

இய‌ற்கை said...

நல்லாவே பிரியா ஃபீல் பண்றீங்க..//சமைச்சு பழகுங்க வேற என்ன செய்ய :)//

தாரணிக்கா..

இப்படி ஒரு வார்த்தை உங்ககிட்ட இருந்து வரலாமா.. அநியாயம்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

பிரியா நீ.?

ஏன் இப்படி ஆதியை தொந்தரவு செய்கிறாய். :))))))))))))))))))))))

துபாய் ராஜா said...

நான் ஹைதராபாத்தில் இருந்த பொழுது
'ஷோஹைல்' என்ற ஹோட்டலில் அடிக்கடி சென்று சிக்கன்,மட்டன் பிரியாணி சாப்பிடுவோம். சைடு டிஷ்களும் அருமையாக இருக்கும். அதுபோன்ற ருசி எங்குமே கண்டதில்லை.

நம்ம ஊரு 'அரசன்'ல பிரியாணி பரவாயில்லை.ஆனா நமக்கெல்லாம் நாலு பிளேட் சாப்பிட்டாலும் பத்தாது. அளவு அவ்வளவு கம்மி.

அ.மு.செய்யது said...

ஓ மீள் பதிவா ?? ஐயாம் எக்ஸ்டிரிமிலி சாரிண்ணே !!

பூனேல கிடைக்கிற மட்டமான பிரியாணிய மனசுல வச்சிட்டு, அப்படி சொல்லிட்டேன்.

இருந்தாலும்,மனந்தளராமல் அடுத்து உங்களிடமிருந்து வரப்போகும் தாறுமாறான பதிவை எதிர்பார்த்து....

வனம் said...

வணக்கம் ஆதிமூலகிருஷ்ணன்

பிரியாணிதானே பெங்களூரு ஒருமுறை வாங்க கட்டீடலாம்

என்னபண்னுரது, எல்லாறுக்கும் இப்படித்தான் வாய்திருக்கின்றது.

இராஜராஜன்

வாழவந்தான் said...

என்ன இருந்தாலும் நம்மூரு தலப்பாக்கட்டு, முனியாண்டி விலாஸ் இதையெல்லாம் அடிச்சுக்க முடியாதுப்பா

Karthik said...

:))

" உழவன் " " Uzhavan " said...

ஹைதராபாத்லேயே பிரியாணி கிடைக்கலயா.. என்ன கொடுமை சார் இது.

குசும்பன் said...

//ஹைதராபாத்லேயே பிரியாணி கிடைக்கலயா.. என்ன கொடுமை சார் இது.//

எங்க தஞ்சாவூரிலேயே ஆந்திரா பொன்னிதான் கிடைக்குது:(((

தஞ்சாவூர் பொன்னின்னு துபாயில் கிடைக்குது இத எங்க போய் சொல்வது?

பிரியாணிக்கு தனி பதிவா பதில் சொல்றேண்டி!:))) பின்னூட்டத்துக்கு பதில் சொல்ல நேரம் இல்லை அடுத்த அடுத்த பதிவு! உங்களை தனியா கவனிச்சுக்கிறேன்:)

Anonymous said...

-)))

கும்மாச்சி said...

ஹைதேராபடுலே சைவ உணவு வேண்டுமென்றால் இடம் சொல்லுகிறேன், கண்டிப்பாக திருப்தி அடைவீர்கள்.

பீர் | Peer said...

மதுர பக்கம் வரதா இருந்தா, என்னை கேளுங்க, எந்தெந்த கடைக்கு போக கூடாதுன்னு சொல்றேன்.

பரிசல்காரன் said...

உங்க மொத பின்னூட்டம் பதிவை விட சுவாரஸ்யம்!

பரிசல்காரன் said...

பதிவைப் படிச்சுட்டேன்ப்பா... படிக்காம பின்னூட்டத்தை மட்டும் பார்த்து கமெண்ட் போட்டேன்னு நெனைச்சுக்கப்படாது!

(ரெண்டுக்கு ரெண்டு சரியாப் போச்சா???)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி கேபிள்.!
நன்றி குடுகுடுப்பை.!
நன்றி டக்ளஸ்.!
நன்றி தமிழ்பிரியன்.!
நன்றி தராசு.!
நன்றி நாஞ்சில்.!
நன்றி கார்க்கி.!
நன்றி பப்பு.!
நன்றி நர்சிம்.! (நீங்களும் இதுவிஷயத்துல எக்ஸ்பர்ட்டுதானா.. சொல்லவேயில்ல)
நன்றி மேவீ.!
நன்றி தாரணி.!
நன்றி செய்யது.!(கொஞ்சம் பிஸிங்க.. பொறுத்துக்கங்க..)
நன்றி மிஸஸ்.காதர்.!
நன்றி வெண்பூ.! (ரிப்பீட்டு பதிவுன்னா ரிப்பீட்டு பின்னூட்டமா?)
நன்றி இயற்கை.!
நன்றி அமித்து.! (ரசித்தேன்..)
நன்றி துபாய்ராஜா.!
நன்றி வனம்.! (இருக்கீங்களா?)
நன்றி வாழவந்தான்.!
நன்றி கார்த்திக்.!
நன்றி உழவன்.!
நன்றி குசும்பன்.! (பதில் போட்டாச்சு போதுமா?)
நன்றி ஆனந்த்.!
நன்றி கும்மாச்சி.!
நன்றி பீர்.!
நன்றி பரிச‌ல்.! (இதுலயுமாய்யா.. கணக்கு?)

Mahesh said...

நான் பிரி இல்லீங்க.... ஆணி ரொம்பவே அதிகமாயிடுச்சு.... புடுங்க புடுங்க அடிக்கறாங்க.... அதான் அந்தக் கடை, இந்தக் கடை... நம்ம கடையவே திறக்க முடியல... இதெல்லாம் ஏன் இங்க வந்து சொல்றன்னு கேக்காதீங்க.... இங்க வந்து புலம்பலேன்னா அப்பறம் எங்க போய் புலம்பறது?

Anand said...

Hyderabad house - for Hyderabadi DUM briyani..Kanya briyani, Panjagutta - for SPL white briyani..

ரோஜா காதலன் said...

மீள்பதிவானாலும், பிரியாணிய பத்தி எழுதியிருப்பதால் வெண்பூ அண்ணன் சார்பாகவும், எனது சார்பாகவும் வாழ்த்துக்கள் !

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மகேஷ்.! (அதானே பாத்தேன். நா என்னடான்னா ஆளக்காணோம்னு பயந்தே போயிட்டேன், ரொம்ப பிளேடு போட்டதால் ஓடிட்டாரான்னு)

நன்றி ஆனந்த்.!
நன்றி ரோஜாக்காதலன்.!

மங்களூர் சிவா said...

/
25 வயது வரை உணவின் மீது அவ்வளவாக ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் அதன்பின்னர் சிறிது சிறிதாக ஏற்பட்ட ஆர்வம் தீயென பற்றிக்கொண்டது. சுவையான உணவுக்காக அலைய ஆரம்பித்தேன். என்ன இருக்குதோ இல்லையோ நன்கு சமைக்கத் தெரிந்திருக்கவேண்டும் என்று பெண்பார்க்கும் போது கண்டிஷனெல்லாம் போட்டேன்.
/

ஹும்

Gopalakrishnan said...

You can try Chillies near JNTU or Papaji I do not know the exact location but it in old city

வெண்பூ said...

//
Gopalakrishnan said...
You can try Chillies near JNTU or Papaji I do not know the exact location but it in old city
//

Chillies is not so good in Biriyani. It is good option for north indian items.