Friday, August 7, 2009

ட்ரெயின் லேட்டாவுது சார்..

சமீபத்தில் அண்ணாச்சி வடகரை வேலன் 'மக்கட்பதர்' என்று ஒரு பதிவில் சில கருத்துகளை எழுதியிருந்தார். அதைப்படித்ததும் இந்த கீழ்க்கண்ட விஷயம் நினைவுக்கு வந்தது. தொடர்ந்த 'ஓடினால்தான் ஆறு' பதிவில் அவரின் நோக்கத்தை முழுதும் அறியலாம்.

எங்கள் நிறுவனத்திலும் ஆன் ரோல், ஆஃப் ரோல் நடைமுறை உள்ளது. எங்கள் துறையில் குவிந்துகிடக்கும் ரிப்போர்ட்டுகளை கணினியில் எண்ட்ரி செய்வது, ஃபைல் பண்ணுவது, தேவைப்படும் போது தேடி எடுத்துத்தருவது, நகல் எடுப்பது போன்ற வேலைகளைச் செய்ய இரண்டு +2 படித்த பையன்கள் இருந்தனர். சமீபத்தில் ஒரு பையன் வேறு வேலை கிடைத்துப் போய்விட புதிய பையன் ஒருவனை அமர்த்தினோம். பெரிதாக இண்டர்வியூவெல்லாம் கிடையாது. வழக்கமான மேன் பவர் காண்ட்ராக்டரிடம் இருந்தே பெற்றுக்கொள்வோம்.

எந்த பிரஷரும் இல்லாத சுகமான வேலை. மானேஜர் டார்ச்சர் கிடையாது. டெக்னிகல் டென்ஷன் கிடையாது. ஃபிரீயா போன். ஃப்ரீயா இண்டர்நெட். அதெல்லாம் நாங்கள் ஒன்றும் பெரிதாக மறுப்பு சொல்லமாட்டோம். மணியடித்தால் சாப்பாடு. நடுக்கும் ஏசி ரூம். வாய்ப்பு கிடைத்து திறனையும் வளர்த்துக்கொண்டால் ஆன் ரோலுக்கான வாய்ப்பு (சிறந்த முன்னுதாரணங்கள் உண்டு எங்கள் நிறுவனத்திலேயே).

வந்தவனுக்கு முதல் நாள் மூச்சு முட்ட இரண்டு மணிநேரம் நிறுவனம் குறித்தும், பிராடக்ட் குறித்தும் கிளாஸ் நடத்தினார் ராஜன் (இதெல்லாம் தெரிஞ்சாதான் முழுமையா ஈடுபாட்டோடு வேலை செய்யமுடியும்னு எங்களுக்கு ஒரு நினைப்பு). எக்செல், வேர்ட் மட்டும் கொ்ஞ்சூண்டு தெரிந்திருக்கவேண்டும். முதலில் எல்லாம் தெரியும் தெரியும்னு மண்டையை ஆட்டிவிட்டு எக்செல் ஃபைலில் என்ன கட்டம் கட்டமாக இருக்கிறது என்று கேட்டு முதல் நாளே ராஜனை கடுப்பேத்தினான். டென்ஷனாகாமல் ஒருமணி நேரம் உட்கார வைத்து எக்செல் சொல்லித்தந்தார் ராஜன். மணி ஐந்தாகும் போது 'மிச்சத்தை நாளைக்கு பாத்துக்கலாம், கிளம்பவா சார்?' என்றான்.

மறுநாள் வேர்ட் தெரியுமா என்றதற்கு எங்கே தெரிந்தால் வேலை செய்யச்சொல்லிவிடுவார்களோ என்ற எண்ணத்தில் சேஃபாக, ஸ்டைலாக 'ஊஹூம் தெரியாது' என்றான். தலைவிதியே(பாவம், ஒரு பையனை வீட்டுக்கு அனுப்பவேண்டாமே, கொஞ்சம் முயற்சித்தால் பிக்கப் செய்துகொள்வானோ என்ற நல்லெண்ணத்தில்) என்று ராஜன் வேர்டும் சொல்லித்தந்தார். அப்புறம்தான் தெரிந்தது.. ஆங்கிலம் வாசிக்கக்கூட தெரியாது என்று. பேப்பரில் இருப்பதை கீ போர்டில் தேடித்தேடி அப்படியே குத்திக்கொண்டிருந்தான். ஏன் எழுத்துகள் வரிசையாக இல்லை என்று மட்டும்தான் கேட்கவில்லை. (அவ்வளவு கேள்விகள் கேட்டானா என்று கேட்காதீர்கள். அதுதான் உருப்புடுற ஆட்கள் செய்வதாயிற்றே. அவ்வளவு படுத்திவிட்டான் என்று சொல்லவந்தேன்.)

பிறகு கிருஷ்ணா கம்பெனி ஃபைலை எடு என்றால் கிருபா கம்பெனி ஃபைலை எடுத்தான். இன்னாரிடம் (முதல் மாடியில்) இந்த ஃபைலை வாங்கி வா என்றால் 'அவர் 5 நிமிசம் வெயிட் பண்ணச்சொன்னார், 5 நிமிசம் நின்னு பார்த்தேன். அவர் தரலை. வந்துட்டேன்' என்றான். 'ஜெராக்ஸ் மெஷினில் பேப்பர் இல்லை' என்றான் (பக்கத்தில் இருந்தால் எப்படி வைப்பது என்று தெரியவில்லை, சொல்லிக்கொடுத்தபின்னும்). 'உங்களுக்கு எவ்வளவு சார் சம்பளம்?' என்றான். பிரிண்ட் கொடுத்திருக்கேன் எடுத்துட்டு வா என்றால் 'டீக்கு டைமாயிருச்சு, வந்து எடுத்துத் தர்றேன்' என்றான். 'எப்பிடி சார் காண்டீன்ல சாப்புடுறீங்க? ஒரே மாதிரி போடுறானுங்க?'(வருஷத்துக்கு எட்டு இலக்கத்தைத்தாண்டி சம்பளம் வாங்கும் எங்கள் டைரக்டர் உண்பதும் அதே காண்டீன் உணவைத்தான்). அவசரமா அந்த ரிப்போர்ட்டை தேடு என்றால் 'என்ன அவசரம், நாளைக்கு எடுக்கலாமா? மணி நாலேமுக்கால் ஆவுது' என்றான்.

தினமும் காலையில் அரைமணிக்கும் மேலாக லேட்டாக வந்தான்.
ராஜன், "ஏம்ப்பா லேட்டு?"
"ட்ரெயின் லேட்டாவுது சார்"
"முந்தின ட்ரெயின்ல வரவேண்டியதுதானே?"
"அப்படின்னா நா எட்டு மணி ட்ரெயினையே பிடிக்கணும் சார்"
ராஜன் வீட்டிலிருந்து கிளம்பும் நேரம் காலை மணி 6.

ஒரு கட்டத்தில் இந்த ரிப்போர்ட்டை எண்ட்ரி போட்டுக்கொடு அவசரம் என்ற போது, 'ரொம்ப டயர்டா இருக்குது (சாப்பிட்டுவிட்டு வந்த நேரம்).. நீங்களே போட்டுக்குங்க..' என்றான். ராஜன் என்னைப்பார்த்தார் பரிதாபமாக. பின்பு கேட்டார்,

"எனக்கு மட்டும் ஏன் இப்படில்லாம் நடக்குது கேகே.?"

அன்றுதான் வேறு வழியில்லாமல் அவனை வேலையை விட்டு தூக்க நேர்ந்தது.

.

42 comments:

தராசு said...

இந்த மாதிரி கேசுங்க எல்லா ஆபீஸ்லயும் உண்டு.

ஆனா, பாருங்க, இப்ப இருக்கற நிலைமையில only the fittest can survive.

தராசு said...

ஐ,, மீ த ஃபர்ஷ்டா,,,,,,

டக்ளஸ்... said...

பதிவுலக் விதிப்படி, இதுக்கு எப்பிடி ஸ்மைலி போடனும்..

:) (இப்பிடியா..?)
இல்ல :( இப்பிடியா அங்கிள்.

ஆ.முத்துராமலிங்கம் said...

உங்கள புலம்பல் எனக்கு நிரைய இடங்கள்ல உண்டு!!!

நாஞ்சில் நாதம் said...

/// பதிவுலக் விதிப்படி, இதுக்கு எப்பிடி ஸ்மைலி போடனும்..

:) (இப்பிடியா..?)
இல்ல :( இப்பிடியா அங்கிள் ////

ஆதிக்கு இப்படி :)
அந்த பையனுக்கு இப்படி :(

Cable Sankar said...

தராச்ண்ணன் சொன்ன மாதிரி இந்தமாதிரி கேஸுகள் நிறைய இடஙக்ளில் உண்டுதான் ஆதி..

விஜய் ஆனந்த் said...

// "எனக்கு மட்டும் ஏன் இப்படில்லாம் நடக்குது கேகே.?" //

கேகே.வா???

ஒருவேள, சம்பவம் பரிசல் ஆபிஸ்ல நடந்திருக்குமோ???

அப்பாவி முரு said...

//அன்றுதான் வேறு வழியில்லாமல் அவனை வேலையை விட்டு தூக்க நேர்ந்தது.//


அவனிருந்து எல்லா வேலையையும் நாமே செய்யுறதுக்கு, அவனிலாமலேயே நாமே செய்துக்க வேண்டியது தான்.

கதிர் - ஈரோடு said...

ஆனா....
இந்த மாதிரி ஆட்களும்தானே வாழ்க்கையை நடத்தி முடிக்கிறார்கள்...
ஆச்சரியமும் பொறாமையுமாக இருக்கிறது

ghost said...

தராசு said...
இந்த மாதிரி கேசுங்க எல்லா ஆபீஸ்லயும் உண்டு.

ஆனா, பாருங்க, இப்ப இருக்கற நிலைமையில only the fittest can survive.

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

அ.மு.செய்யது said...

அவங்கள மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் இன்னொரு வேலை ஈஸியா கிடைச்சிரும்.

நம்மள மாதிரி..சாரி என்ன மாதிரி ஆளுங்கல ஃபெர்மான்ஸன்ஸ் சரி இல்லன்னு, பிங் ஸ்லிப் கொடுத்தா
என்ன பண்றது.......உங்க கம்பெனில வந்து அதே ஆபிஸ் பாயாத்தான் சேரணும்.

பாத்துச் செய்ங்க தல..நாடு சரியில்ல...இப்பல்லாம் ஆபிஸ்ல ப்ளாக் ஓபன் பண்ணவே பயமாயிருக்கு..!!!

Varadaradjalou .P said...

வாழ்க்கையில் எந்த பெரிய சிரமும் இன்றி தேவையானவை அனைத்தையும் பெறும் (தாய், தந்தை (அ) உறவினர்கள் மூலமாக) இத்தகையவர்கள் நமக்கு கீழ் பணிபுரிந்தால் இப்படிதான் இருக்கும். வ.வே. அவர்கள் குறிப்பிட்டருக்கு இவர்கள் அப்படியே எதிர்மாறானவர்கள்

இராகவன் நைஜிரியா said...

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள். அலுவலகம் வருவதற்கே சம்பளம் கொடுக்க வேண்டும் என நினைப்பவர்கள். வேலையைவிட்டு எடுத்தது சரிதான்.

புதுகைத் தென்றல் said...

ம்ம்..

இந்தமாதிரி ஆளுங்களுக்குத்தான் இது காலம். :(((

Mahesh said...

இவ்வளவு நாள் நீங்க பொறுமையா இருந்ததே பெரிய வேலை !!

கார்ல்ஸ்பெர்க் said...

வடிவேலு : ''நடக்குறது கூட ஒரு வேலையா இருக்கே..''

இவனும் அவரு கூட சேர்ந்தவனா இருப்பான் போலயே..

துபாய் ராஜா said...

//வேறு வழியில்லாமல் அவனை வேலையை விட்டு தூக்க நேர்ந்தது.//

நமக்கேற்ப ஆளை மாற்றவேண்டும். இல்லை ஆளுக்கேற்ப நாம் மாற வேண்டும்.நீங்க ஆளையே மாத்திட்டிங்க. :))

மங்களூர் சிவா said...

இந்த மாதிரி கேசுங்க எல்லா ஆபீஸ்லயும் உண்டு.

வால்பையன் said...

//ஃபிரீயா போன். ஃப்ரீயா இண்டர்நெட். அதெல்லாம் நாங்கள் ஒன்றும் பெரிதாக மறுப்பு சொல்லமாட்டோம். மணியடித்தால் சாப்பாடு. நடுக்கும் ஏசி ரூம். வாய்ப்பு கிடைத்து திறனையும் வளர்த்துக்கொண்டால் ஆன் ரோலுக்கான வாய்ப்//

எனது பயோடேட்டா உங்கள் மெயிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது!

வால்பையன் said...

//ஏன் எழுத்துகள் வரிசையாக இல்லை என்று மட்டும்தான் கேட்கவில்லை.//

முதன் முதலில் கீ போர்டை பார்க்கும் போது நான் கேட்டேனே!

வால்பையன் said...

//அன்றுதான் வேறு வழியில்லாமல் அவனை வேலையை விட்டு தூக்க நேர்ந்தது.//

பொழுதுபோகாமல் வேலைக்கு வந்திருப்பான்!
இப்போ யார் உயிரை எடுத்து கொண்டிருக்கிறானோ!

என்ன அவன் ஈரோட்டில் இருக்கிறானா!?

பீர் | Peer said...

அதே வேலை இப்பவும் காலியிருக்கா, ஆதி?

ஜஸ்ட ஒரு மெயில் பண்ணுங்க... ஓடி வந்திடறேன்.

வால்பையன் said...

அதே வேலை இப்பவும் காலியிருக்கா, ஆதி?
ஜஸ்ட ஒரு மெயில் பண்ணுங்க... ஓடி வந்திடறேன். //

முதல் அப்பிளிகேஷன் போட்டது நான் தான்! எனக்கே முதலிடம்!

வேலைக்கு சேரும் போது ட்ரைன் லேட்டாகாது! அதன் பிறகு ஆகலாம்!

பீர் | Peer said...

//Blogger வால்பையன் said...
.... எனது பயோடேட்டா உங்கள் மெயிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது!//

ஆஹா.. வட போச்சே... ;(

அறிவிலி said...

இந்த மாதிரி ஆட்களெல்லாம் அப்பன் பாட்டன் காசில் லஞசம் கொடுத்து அரசு வேலையில் சேர்ந்து சுபிட்சமாக இருப்பார்கள்.

பீர் | Peer said...

//Blogger அறிவிலி said...

இந்த மாதிரி ஆட்களெல்லாம் அப்பன் பாட்டன் காசில் லஞசம் கொடுத்து அரசு வேலையில் சேர்ந்து சுபிட்சமாக இருப்பார்கள்.//

இதுக்கு புருனோ சார் வந்து விளக்கமா பதில் சொல்லுவாரு...

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தராசு.!
நன்றி டக்ளஸ்.!
நன்றி முத்து.!
நன்றி நாஞ்சில்.!
நன்றி கேபிள்.!

நன்றி விஜய்.! (ஆபிஸ் சம்பந்தப்பட்ட பதிவுகளில் எனது கேரக்டரின் பெயராக கேகே என்பதை பயன்படுத்திவருகிறேன் துவக்கத்திலிருந்தே.. பரிசலை அறியும் முன்பே.. என் கஸின் பெயர் கே.கார்த்திக்)

நன்றி முரு.!
நன்றி கதிர்.! (சமயங்களில் நம்மைவிடவும் சிறப்பாக)
நன்றி கோஸ்ட்.!
நன்றி செய்யது.!
நன்றி வரதராஜுலு.!
நன்றி ராகவன்.!
நன்றி தென்றல்.!
நன்றி மகேஷ்.!
நன்றி கார்ல்ஸ்பெர்க்.!

நன்றி துபாய்.! (அவனுக்கு ஏத்தமாதிரி நாம மாறுவதா? வெளங்கிரும்..)

நன்றி மங்களூர்.!
நன்றி வால்.!(அவன் இப்போதும் அதே காண்ட்ராக்டரிடம்தான் இருக்கிறான். கடும் வெயிலில் லாரியில் பொருட்களை ஏற்றி இறக்கும் லோட்மேனாக வேலை பார்ப்பதைக் கண்டேன். ஒருவேளை அந்த வேலைதான் அவனுக்கு பிடித்திருக்கிறதோ என்னவோ? இல்லை அதிலிருந்தும் எப்போது வேண்டுமானாலும் வெளியேறுவானோ தெரியாது.

நீங்களும் கோல்மால் பண்ணினால் லோட் ஏத்தணும் பரவால்லையா? ஹிஹி..)

நன்றி பீர்.!
நன்றி அறிவிலி.!

தமிழ் பிரியன் said...

உங்களுக்காவது பரவாயில்ல.. இங்க விசா எல்லாம் கொடுத்து கூப்பிட்டு வந்து விடுகிறார்கள்... திரும்பவும் ஊருக்கு அனுப்ப முடியாது.. வேலை வாங்காமலும் இருக்க முடியாது.. வேற வழி இல்லாம தண்டனையை நாங்க தான் அனுபவிக்கனும். எங்களை பார்த்தா பாவமா இருக்குல்ல..

பட்டிக்காட்டான்.. said...

//.. தராசு said...

இப்ப இருக்கற நிலைமையில only the fittest can survive ..//

fittest க்கே நாக்கு தள்ளுதுங்க..

//.. கதிர் - ஈரோடு said...

ஆச்சரியமும் பொறாமையுமாக இருக்கிறது..//

பொறாம படாதிங்க, அவங்க வாழுறதுக்கு பேரு வாழ்க்கை இல்ல..

T.V.Radhakrishnan said...

பொறுமை...பொறுமை..றுமை..றுமை..மை..மை.....
எனக்கு மட்டும் ஏன் இப்படில்லாம் நடக்குது

Truth said...

உண்மையில் பரிதாபமாகத் தான் இருக்கிறது, இராஜனைப் பார்த்தால். இதே மாதிரி நானும் அனுபவிச்சிருக்கேன். உங்களால அவனை வேலையிலிருந்து தூக்க முடிந்தது. என்னால் அது முடியவில்லை, ஏனா, அவனும் BE :)

மாசற்ற கொடி said...

200 க்கு வாழ்த்துக்கள் ஆதி.

இந்த மாதிரி ஆட்கள் இல்லை என்றால்தான் அதிசயம்.

அன்புடன்
மாசற்ற கொடி

RAMYA said...

பாவம் ராஜன் சார்!

ஆமா உங்க ஆபிச்லே வேலை காலி இருக்கா?

வேலைக்கு நான் வரலாமான்னு யோசிக்கறேன். ஆனா எனக்கு வோர்ட், எக்ஸ்செல் எல்லாம் தெரியாது :))

இது பக்கத்துலே உக்காந்திருக்கவங்க கேக்குறாங்க!

அந்த ராஜன் நீங்க தானே சும்மா சொல்லுங்க :))

ஆபிஸ் பாய் ரொம்ப வறுத்துட்டாங்க போல :((

S.Gnanasekar Somasundaram said...

அந்தப் பையன் பிறகு செய்கிரேனு கூறினான் எங்களிடம் உள்ள பையன் இது என் வேலையில்லை என்கிரான் இதுக்கு என்ன சொல்ரேங்க.

தமிழ் காதலன் said...

nice experiance,

தமிழ் காதலன் said...

nice experiance,

pappu said...

பாவம், உங்க தலையெழுத்து!
ஸ்மைலி போடுறது என் தலையெழுத்து!
:)

கும்க்கி said...

நல்ல வேளை அவன் ராஜன் கண்ட்ரோல்ல வந்ததால வேலை மட்டும்தான் போனது.
கே.கே வாக இருந்திருந்தால் 5வது மாடியிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டிருப்பான்.

தனியார் என்பதனால் ஆப்ரோல்,ஆன் ரோல்லாம் வச்சு கச்சிதமா காரியத்த முடிக்கறீங்க.இதே அரசு துறைன்னா எவ்வளவு சிரமம் தெரியுமா?
ஆளையும் நீக்க முடியாது.மிரட்டியும் வேளை வாங்க முடியாது.சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கவும் நேரமிருக்காது. ஒரே குஷ்டம்தான் போங்க.

கும்க்கி said...

சரி ஒரு மனுஷன் ஆளைக்காணோமே....என்ன ஏதுன்னு விசாரிக்கறதில்லையா ஆமூகி....?

நல்லாருங்க சாமியோ......

ராமலக்ஷ்மி said...

நோகாமல் நுங்கு தின்ன ஆசைப்படும் இது போன்றவரை என்கரேஜ் செய்யக் கூடாது என்ற ரீதியில் நானும் ஒரு கவிதை சில ஆண்டு முன்னர் எழுதியது திண்ணை இணைய இதழில் வ்ந்திருந்தது. வலையேற்றலாம் என்றே தோன்றுகிறது.

வானம்பாடிகள் said...

/கும்க்கி said... இதே அரசு துறைன்னா எவ்வளவு சிரமம் தெரியுமா?
ஆளையும் நீக்க முடியாது.மிரட்டியும் வேளை வாங்க முடியாது.சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கவும் நேரமிருக்காது. ஒரே குஷ்டம்தான் போங்க./

சரியா சொன்னீங்க. யூனியன்ல சொல்லி மூணு தலைமுறைய திட்றதுல இருந்து லேசா அறுப்பு போடுறது வரைக்கும் நடக்கும்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தமிழ்பிரியன்.! (பாவம்தான் பாஸ்)
நன்றி பட்டிக்காட்டான்.!
நன்றி டிவிஆர்.!
நன்றி ட்ரூத்.! (வெளங்கிரும்)
நன்றி மாசற்றகொடி.!
நன்றி ரம்யா.! (நிஜமாவே அப்படி ஒரு காரெக்டர் இருக்கிறது ரம்யா. பழைய பதிவுகளில் பாத்திருக்கலாம்)
நன்றி ஞானசேகரன்.!
நன்றி பப்பு.!
நன்றி தமிழ்காதலன்.!
நன்றி கும்க்கி.! (சரியாக சொன்னீங்க. உங்க பாடு கொஞ்சம் கஷ்டம்தான்)
நன்றி ராமலக்ஷ்மி.! (வலையேற்றுங்க தோழி)
நன்றி வானம்பாடிகள்.!