Monday, August 10, 2009

சுபா : பயோடேட்டா


பெயர் : சுபா

வயது : ம்மா.. தவிர்த்து இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை

தொழில் : படுத்துவது

உபதொழில் : தோளில் மட்டுமே தூங்குவது

நண்பர்கள் : வெளியே தூக்கிச்செல்பவர்கள்

எதிரிகள் : தண்ணீரில் சலம்ப விடாதவர்கள்

பிடித்த வேலை : கையில் கிடைப்பதை எடுத்து கண்ணில் படுவதன் மேல் எறிவது (அதாவது செல்போனை டிவி மேல் எறிவது போன்ற)

பிடித்த உணவு : ஐஸ்கிரீம் (அதுவும் இரவில்)

பிடித்த உடை : எதுவும் இல்லை (அதாவது எதுவும் இல்லாமலிருப்பது)

பிடித்த இடம் : ஃபிரிட்ஜ்

விரும்புவது : கொட்டிக்கவிழ்ப்பது (பவுடர் டப்பா, உணவுக்கிண்ணம், தண்ணீர் பாட்டில் என எதையும் எப்போதும்)

விரும்பாதது : சாப்பிடுவது

பொழுதுபோக்கு : இரவு நேரங்களில் அலறி பிறரை எழுப்பிவிடுவது

பிடித்த பொருட்கள் : வாட்ச், செல்போன், ரிமோட், etc.,

பிடிக்காத பொருட்கள் : பொம்மைகள்

சமீபத்திய எரிச்சல் : கதவிடுக்கில் விரல் மாட்டிக்கொண்டது

நீண்டகால எரிச்சல் : பால்

சமீபத்திய சாதனை : முத்தம் கொடுக்கக் கற்றது

நீண்டகால சாதனை : 'ஒண்ணு போதும்டா' என நினைக்கவைத்தது

.

58 comments:

புதுகைத் தென்றல் said...

:) பயோடேட்டா நெசமாவே பயோடேட்டா தான்.

'ஒண்ணு போதும்டா' என நினைக்கவைத்தது//

:))))))))))))))))

Cable Sankar said...

/ஒண்ணு போதும்டா' என நினைக்கவைத்தது////

அடுத்தது வரும் வரை.. ஹி..ஹி..ஹி.

தராசு said...

//நீண்டகால சாதனை : 'ஒண்ணு போதும்டா' என நினைக்கவைத்தது//

பாக்கறோம், பாக்கறோம், எத்தனை நாளைக்குன்னு பாக்கறோம்.

நாஞ்சில் நாதம் said...

///பிடித்த உணவு : ஐஸ்கிரீம் (அதுவும் இரவில்)///

ஏசி கேக்கல ?????????

தல இது உங்க பய டேட்டா மாதிரி இருக்கு

பாலா said...

அழகு

அறிவிலி said...

:))

பாலா said...

நீண்டகால சாதனை : 'ஒண்ணு போதும்டா' என நினைக்கவைத்தது//


இன்னம் எத்தனை நாளைக்கு இப்படி சொல்வீங்க பாஸு

அ.மு.செய்யது said...

ஹா..ஹா...ரசித்து வாசித்தேன்....குழந்தைகள் !!

சுபா பெரியவளானதும் இதை படிக்க கொடுங்கள் !!!

Anonymous said...

சுபா, வெரி குட் டா கண்ணு, இப்படியே இரு.

நீண்டகால சாதனை : 'ஒண்ணு போதும்டா' என நினைக்கவைத்தது//
இது சும்மா, பாக்கத்தானே போறோம்.

இன்னொரு குழந்தை இருந்தா அவளுக்கு பொழுது போகும், ரெண்டும் அட்ஜஸ் பண்ணிக்கும். நீங்க இவ்வளவு டெர்ரர் ஆக வேண்டாம்.

டம்பி மேவீ said...

ரசித்தேன் ; சிரித்தேன் ....."ஒண்ணு போதும்டா' என நினைக்கவைத்தது"


நோ கமெண்ட்ஸ்
:))

டக்ளஸ்... said...

அவங்களோட பயோடேட்டா, உங்களுக்கு "பய"டேட்டாவா இருக்கும் போலயே..!

மங்களூர் சிவா said...

ஹா ஹா கலக்கல் பயோ டேட்டா!
:))))

மங்களூர் சிவா said...

//

'ஒண்ணு போதும்டா' என நினைக்கவைத்தது
//

பிரசவ வலி வந்த பொம்பளைங்க சொல்லுவாங்களாம் இனிமே இந்த மனுசன் பக்கமே .............
:)))))))))))))

ghost said...

டக்ளஸ்... said...
அவங்களோட பயோடேட்டா, உங்களுக்கு "பய"டேட்டாவா இருக்கும் போலயே..!


ரிப்பிட்டேய்ய்ய்ய்

ராமலக்ஷ்மி said...

கலக்கல்:))!

நர்சிம் said...

கலக்கல்.

Truth said...

சூப்பரா இருக்கு அண்ணே. :-)
என்சாய் பண்ணுங்கோ...

சென்ஷி said...

:-)

கார்க்கி said...

இது பயடேட்டா மாதிரி இல்ல இருக்கு.. ம்ம்

எவனோ ஒருவன் said...

//நீண்டகால சாதனை : 'ஒண்ணு போதும்டா' என நினைக்கவைத்தது//

பயமுருத்துறீங்க அண்ணே.
---
போட்டோல இருக்குறது யாரு? சுபாவா?

அனுஜன்யா said...

'பய' டேட்டா கலக்கல்.

அனுஜன்யா

தமிழ் பிரியன் said...

;-))

அமுதா கிருஷ்ணா said...

இன்னைக்கு வீட்டுற்குள் நுழையும் போது ஜாக்கிரதையாக நுழையவும்...அந்த ஸ்பூன் பறக்க போகுது..ஒரு பக்கம் ரமா..இன்னொரு பக்கம் சுபா கொடுத்து வைத்தவர் தான்..

SK said...

அருமை தலைவா :-)

ஆதிமூலகிருஷ்ணன் said...

விளக்கமான நன்றிகள் மாலையில்.. இப்போது ஒரு விளக்கம் மட்டும். நீண்ட பெயரின் சுருக்கமே சுபா.. மற்றபடி பயோடேட்டாவும், போட்டோவும் என் மகனுடையது. ஹிஹி.. ரொம்ப நாளைக்கு ஏமாற்றமுடியாதல்லவா? மயில், செய்யது போன்ற தோழர்கள் ஏமாந்ததில் ஒரு சின்ன மகிழ்ச்சி.!

அனைவரின் அன்புக்கும் நன்றி.

அப்படியே மீ த 25.!

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)))))))))

அசத்தல் கலக்கல் இப்படி நிறைய சொல்லலாம் இந்த இடுகைக்கும், ஆண் குழந்தையை பெண் குழந்தை என்று எல்லோரையும் நினைக்க வைத்ததற்கும்.

☀நான் ஆதவன்☀ said...

கலக்கல் ஆதி :)

”சமீபத்திய எரிச்சல்“ இதை படிக்கும் போதே நமக்கும் வலிக்குது.

Mahesh said...

சுபா எல்லாத்தையும் கரெக்டாத்தான் செய்யறாரு.... நீங்கதான் புலம்பறீங்க !!!!

Karthik said...

கலக்கல்ஸ். :))

பரிசல்காரன் said...

நேரமில்லாவிட்டாலும் ச்சின்னதொரு ஐடியாவால் ச்சின்னப் பதிவையும் சூப்பர் பதிவாக்கலாம் என்பதற்கு இந்தப் பதிவு ஒரு சாட்சி!

ஜானி வாக்கர் said...

வணக்கம்,
ஒரு சிறியஇடை வெளிக்கு பிறகு மீண்டும் என் வருகையை பதிவு செய்துக்கிறேன்.

பிடித்த இடம் : அப்பாவின் தொப்பை இல்லையா? சறுக்கி சறுக்கி வீளை யாட

ராமலக்ஷ்மி said...

மகனா? நானும்தான் ஏமாந்து போனேன்:)!

கார்ல்ஸ்பெர்க் said...

//நீண்டகால சாதனை : 'ஒண்ணு போதும்டா' என நினைக்கவைத்தது//

//இன்னொரு குழந்தை இருந்தா அவளுக்கு பொழுது போகும், ரெண்டும் அட்ஜஸ் பண்ணிக்கும். நீங்க இவ்வளவு டெர்ரர் ஆக வேண்டாம்.//

இதெல்லாம் விட உங்களுக்கு இன்னொரு பதிவு போட நெறைய விஷயம் கிடைக்கும்'ல.. யோசிங்க'ணா..

துபாய் ராஜா said...

ம்ம்ம்ம்.வீட்டுக்கு வீடு வாசப்படி. :))

☼ வெயிலான் said...

ஆதி!

அழகு பெத்த பேரை ஏன் சுனாபானானு போட்டிருக்கீங்க?

அவனுக்கு படிக்கத் தெரிஞ்சப்பறம் உங்க நிலமை என்னாகும்னு யோசிங்க! :)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அப்பனே இப்படி பிராடா இருந்தா.. புள்ளை இப்படித்தான் படுத்தும்..!

அ.மு.செய்யது said...

//விளக்கமான நன்றிகள் மாலையில்.. இப்போது ஒரு விளக்கம் மட்டும். நீண்ட பெயரின் சுருக்கமே சுபா.. மற்றபடி பயோடேட்டாவும், போட்டோவும் என் மகனுடையது. ஹிஹி.. ரொம்ப நாளைக்கு ஏமாற்றமுடியாதல்லவா? மயில், செய்யது போன்ற தோழர்கள் ஏமாந்ததில் ஒரு சின்ன மகிழ்ச்சி.!//

அவ்வ்வ்வ்வ்....ஒரு "ளா" போட்டு ஏமாந்துட்டனே !!!!

அ.மு.செய்யது said...

//வெயிலான் said...
ஆதி!

அழகு பெத்த பேரை ஏன் சுனாபானானு போட்டிருக்கீங்க?
//

சூனா பானா ஹா ஹா....

விட்ரா விட்ரா..லேசாத்தான் வீங்கிருக்கு..எப்பவும் போல ரெகுலரா போயிக்கிட்டேரு....

டக்ளஸ்... said...

\\விளக்கமான நன்றிகள் மாலையில்.. இப்போது ஒரு விளக்கம் மட்டும். நீண்ட பெயரின் சுருக்கமே சுபா.. மற்றபடி பயோடேட்டாவும், போட்டோவும் என் மகனுடையது. ஹிஹி.. ரொம்ப நாளைக்கு ஏமாற்றமுடியாதல்லவா? மயில், செய்யது போன்ற தோழர்கள் ஏமாந்ததில் ஒரு சின்ன மகிழ்ச்சி.!\\\

அப்பிடியா..?
முழுப்பெயர் என்ன..?
"சுப்ரமண்ய பாரதியா அங்கிள்...?"

வால்பையன் said...

//நீண்டகால சாதனை : 'ஒண்ணு போதும்டா' என நினைக்கவைத்தது//

சேம் ப்ளட்!

பாலகுமார் said...

:) :) :)

அத்திரி said...

அண்ணே ரசித்து சிரித்தேன் ( என் வீட்டிலையும் இதே கதைதான்)

அழகோ அழகு

S.Gnanasekar Somasundaram said...

'ஒண்ணு போதும்டா' என நினைக்கவைத்தது. ஒண்ணுக்கே இப்படினா இந்த சேட்டைகலை பெரிதாகிவிட்டால் ரசிக்க நமக்கு சந்தற்பம் கிடைக்காது நன்கு ரசியிங்கள்...

anto said...

சூப்பரான பதிவு. நான் மிகவும் ரசித்தேன்.சுபா செல்லத்தை கேட்டதாக சொல்லுங்கள்.... நானுன் இது போன்ற ஒரு அழகான இம்சையின் வரவுக்காக காத்திருக்கிறேன்...

Anonymous said...

ஆதி,
கலக்கல். ஆனா இப்படி ஒண்ணே போதும்னு சொன்னவங்க எல்லாம் என்ன ஆனாங்கன்னு கொஞ்சம் விசாரிச்சுப் பாருங்க.

செல்வேந்திரன் said...

வலைக்குள் சிக்காமல் இருந்தேன். அண்ணாச்சி சிலாகித்ததில் இந்த பக்கத்திற்கு வந்தால் வழக்கம் போல அசத்திட்டீங்கண்ணா... நீங்கள் நிச்சயம் மதுரை ஜி. செந்தில்குமாரை ஜெயிப்பீர்கள். இது சத்தியம்!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தென்றல்.!
நன்றி கேபிள்.!
நன்றி தராசு.!
நன்றி நாஞ்சில்.!
நன்றி பாலா.!
நன்றி அறிவிலி.!
நன்றி செய்யது.!
நன்றி மயில்.!
நன்றி டம்பி.!
நன்றி டக்ளஸ்.!
நன்றி சிவா.!
நன்றி கோஸ்ட்.!
நன்றி மகேஷ்.!
நன்றி கார்ல்ஸ்பெர்க்.!
நன்றி கோஸ்ட்.!
நன்றி ராமலக்ஷ்மி.!
நன்றி நர்சிம்.!
நன்றி ட்ரூத்.!
நன்றி சென்ஷி.!
நன்றி கார்க்கி.!
நன்றி ஒருவன்.!
நன்றி அனுஜன்யா.!
நன்றி தமிழ்.!
நன்றி அமுதா.!
நன்றி எஸ்கே.!
நன்றி அமித்து.!
நன்றி ஆதவன்.! (நீங்கள் ரொம்ப உணர்வுப்பூர்வமானவர் என நினைக்கிறேன். நான் கூட முதலில் அது வேண்டாமென்று நினைத்தேன்)
நன்றி மகேஷ்.! (அதுசரி)
நன்றி கார்த்திக்.!
நன்றி பரிசல்.! (கரெக்டா பிடிச்சீங்க.. கடைசி வரிதான் துவக்கம். மிகக்குறைந்த நேரத்தில் நான் எழுதிய முதல் பதிவாக இது இருக்கலாம்)
நன்றி ஜானி.! (வெல்கம் பேக். மற்றவற்றையும் படிக்க மறக்க வேண்டாம்)
நன்றி ராமலக்ஷ்மி.! (ஹிஹி..)
நன்றி கார்ல்ஸ்.!
நன்றி துபாய்.!
நன்றி வெயிலான்.!
நன்றி உண்மையார்.!
நன்றி செய்யது.!

நன்றி டக்ளஸ்.! (ஓரளவு கரெக்டாதான் பிடிச்சிருக்கீங்க.. முழுப்பெயர் 'சுப்பையாபாரதி' பதிவில் இனி சுபாதான் மாற்றமில்லை)

நன்றி வால்பையன்.!
நன்றி பாலகுமார்.!
நன்றி அத்திரி.!
நன்றி ஞானசேகர்.!
நன்றி அன்டோ.! (வாழ்த்துகள் தோழர்)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி வேலன்.! (யாரு இது.. புதுசா இருக்கு?)
நன்றி செல்வா.! (அது யாரு.. புதுசா இருக்கு?)

தமிழ்ப்பறவை said...

படமும்,பதிவும் க்யூட்...

பட்டிக்காட்டான்.. said...

:-)

Anonymous said...

//பொழுதுபோக்கு : இரவு நேரங்களில் அலறி பிறரை எழுப்பிவிடுவது//

:) அதான் அம்மாவும் குழந்தையும் அலறின பதிவு ஒண்ணு படிச்சேனே.

நானும் பொண்ணுன்னு நினைச்சேன்.

நாடோடி இலக்கியன் said...

உங்க பயடேட்டா கலக்கல்.

'பய' இரு அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளவும். :)

குசும்பன் said...

//எதிரிகள் : தண்ணீரில் சலம்ப விடாதவர்கள்//

அப்பா மாதிரி போல:))

Rithu`s Dad said...

//நீண்டகால சாதனை : 'ஒண்ணு போதும்டா' என நினைக்கவைத்தது//

சரி தான்..உங்களுக்கேவா ஆதி.. !!

ரிஸ்க்குன்ன.. உங்களுக்கு ரஸ்க் சாப்டர மாதிரியாச்சே.. :)

நிஜமா நல்லவன் said...

:)

kumar said...

//நீண்டகால சாதனை : 'ஒண்ணு போதும்டா' என நினைக்கவைத்தது//

சூப்பரப்பு

புன்னகை said...

பாப்பா செம்ம அழகு, அப்படியே உங்க சாயல் கொஞ்சம் கூட இல்லை :-) கண்கள் ஹைலைட்!

//தொழில் : படுத்துவது//
குலத் தொழிலா? ;-)


//பிடித்த இடம் : ஃபிரிட்ஜ்//
அப்பா தொப்பை இல்லையா? எனக்கெல்லாம் இன்னமும் பிடித்த இடம் அது தான்! :-)

//சமீபத்திய எரிச்சல் : கதவிடுக்கில் விரல் மாட்டிக்கொண்டது//
அய்யோ பாவம்! :-(

//சமீபத்திய சாதனை : முத்தம் கொடுக்கக் கற்றது//
:-)

//நீண்டகால சாதனை : 'ஒண்ணு போதும்டா' என நினைக்கவைத்தது//
பனங்காட்டு நரி, இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சலாமா??? :-)

ஆணிகள் அதிகமாகிப் போனதால் பாப்பாவின் புகைப்படம் மட்டும் ரசித்து விட்டு சென்று விட்டேன்! இப்போ தான் நேரம் கிடச்சுது. அதான் கொஞ்சம் டேமேஜ் பண்ணலாம்னு! :-)

Mãstän said...

:)
very nice.

Is her birthday near?