Tuesday, August 11, 2009

ரமா : பயோடேட்டா

முன்குறிப்பு : ஒரு பதிவு ஹிட்டானா அந்த ஐடியாவை அவ்வளவு சீக்கிரம் விட்டுடமுடியுமா? தமிழ்சினிமாக்காரங்க மாதிரி அதே பிளேட்ட திருப்பித் திருப்பி போடுவோம்ல.. நாளைக்கும் கூட பயோடேட்டாதான்.. யாரோடதுன்னு சொல்லுங்க பார்ப்போம். (ஹிஹி.. உண்மையில் நேரமின்மை. அதான் இப்பிடி சிம்பிள் பதிவுகள்)

பெயர் : ரமா

புதிய பெயர் : சுபா அம்மா

வயது : அப்படின்னா.?

தொழில் : இம்சை

உபதொழில் : பர்சேஸ் பண்ணுவது

குணம் : கொஞ்சம் ஆங்காரம் கொஞ்சம் ரீங்காரம்

குரல் : எப்போதும் ஹை பிட்ச்

நண்பர்கள் : கீழ்வீட்டுக்காரர்கள் தக்காளிப்பழம் கடன் தரும் போது

எதிரிகள் : அவர்களே.. தண்ணீர் பிடித்து வைக்காத போது

பிடித்த வேலை : சமைப்பது அல்ல

பிடித்த உணவு : கண்டிப்பாக தாமிராவுக்கு பிடிக்காதது

பிடித்த உடை : கடைகளிலிருந்து இன்னும் வாங்கப்பட்டிருக்காத சேலைகள்

பிடித்த இடம் : அஞ்சப்பர், தாம்பரம்

விரும்புவது : டெபிட் கார்டு

விரும்பாதது : நல்லவேளையாய் கிரெடிட் கார்டு

பொழுதுபோக்கு : தாமிராவை ஒரு நாளைக்கு ஐந்துமுறை கடைக்கு அனுப்புவது

புரிந்தது : ஆண்கள் ஆபீஸில் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டிருக்கிறார்கள்

புரியாதது : எதிலேயுமே திருப்தின்னா.?

எளிய செயல் : தாமிராவை கோபப்படுத்துவது

அதைவிட எளிய செயல் : அதை ஆற்றுப்படுத்துவது

சமீபத்திய எரிச்சல் : பழைய பேப்பர்காரன் 1 ரூபாய் ஏமாற்றியது

நீண்டகால எரிச்சல் : தாமிரா

சமீபத்திய சாதனை : முட்டைக்குழம்பு டேஸ்ட்டாக வைத்தது

நீண்டகால சாதனை : 'நா தப்புப்பண்ணிட்டேண்டா' என தாமிராவை அலறவைத்தது


பின்குறிப்பு : வீடு, அடுப்பு, குழந்தை என்று பெண்கள் விரிந்து / ஒடுங்கிப்போவதில் எனக்கும் தெளிந்த மனநிலை இல்லை எனினும் பெரும்பாலாலும் கற்பனையான இந்தப்பதிவை உள்நோக்கமில்லாத நகைச்சுவை நோக்கில் எடுத்துக்கொள்ளும் படி பெண்ணியலாளர்களை கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

.

64 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்ட்டேய்ய்ய்ய்!

ஆயில்யன் said...

//புரிந்தது : ஆண்கள் ஆபீஸில் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டிருக்கிறார்கள்/

LOL :)))))))))))

கோவி.கண்ணன் said...

வழக்கமான கலக்கல் !

தங்கமணி சங்கத்தின் தலைமை பொறுப்பு இன்னும் 5 ஆண்டுகளுக்கு உங்களுக்கு தான்

எம்.எம்.அப்துல்லா said...

//பின்குறிப்பு : வீடு, அடுப்பு, குழந்தை என்று பெண்கள் விரிந்து / ஒடுங்கிப்போவதில் எனக்கும் தெளிந்த மனநிலை இல்லை எனினும் பெரும்பாலாலும் கற்பனையான இந்தப்பதிவை உள்நோக்கமில்லாத நகைச்சுவை நோக்கில் எடுத்துக்கொள்ளும் படி பெண்ணியலாளர்களை கேட்டுக்கொள்கிறேன்.

//


இதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

நாடோடி இலக்கியன் said...

வழக்கம் போல் கலக்கல், உங்க தங்கமணியோட பொழுதுபோக்குதான் ரொம்ப பிடிச்சிருந்தது.
(அந்த டைம்ல தாமிராவின் முகத்தை கற்பனை செய்து பார்த்தேன் ஹி ஹி ஹா.. ஹா..).

Cable Sankar said...

//பின்குறிப்பு : வீடு, அடுப்பு, குழந்தை என்று பெண்கள் விரிந்து / ஒடுங்கிப்போவதில் எனக்கும் தெளிந்த மனநிலை இல்லை எனினும் பெரும்பாலாலும் கற்பனையான இந்தப்பதிவை உள்நோக்கமில்லாத நகைச்சுவை நோக்கில் எடுத்துக்கொள்ளும் படி பெண்ணியலாளர்களை கேட்டுக்கொள்கிறேன்.

//


இதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.//

எனக்கும் ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்..

Anonymous said...

//பிடித்த வேலை : சமைப்பது அல்ல//

அனேகமா எல்லாப்பெண்களுக்கும் அப்படித்தான்.

கடைசில டிஸ்கி போட்டுட்டூங்க. அதனால தப்பிச்சீங்க :)

சங்கா said...

சூப்பர்!!!, இது ஆக்சுவலா, “தங்கமணி” பயோடேட்டா! கோவி கண்ணன் அவர்கணின் கூற்றைச் சற்று மாற்றி நீங்கள்தான் தங்கமணி சங்கத்தின் நிரந்தரத் தலைவர் என்று கூறி பின்னூட்டத்தை முடிக்கிறேன்!

தாரணி பிரியா said...

அஞ்சு தடவை கடைக்கு அனுப்பறதுக்கே இத்தனை அலுப்பா அது சரி :)

டக்ளஸ்... said...

நோ கமென்ட்ஸ்...!
:)

சங்கா said...

முந்தைய பின்னூட்டத்தில், “கோவி கண்ணன் அவர்களின்” என்று வாசிக்கவும்.

தாரணி பிரியா said...

இந்த பயோடேட்டாவை ரமா படிச்சபிறகு நாளைக்கு உங்க பயடேட்டா எழுதுவிங்கதானே அப்ப சமீபத்திய எரிச்சல் : இப்படித்தான் இருக்கும். அடிப்பட்ட இடத்தில் டெட்டால் வைத்த போது :)

என். உலகநாதன் said...

ஆதி,

எனக்கு என்னவோ இவ்வளவு பெர்சனலான விசயம் எல்லாம் எழுதனுமானு தோணுது??

இது என்னுடைய கருத்து மட்டுமே. மற்றபடி உங்கள் இஷ்டம்.

என். உலகநாதன் said...

ஆதி,

பின் குறிப்பு படிச்சேன். இருந்தாலும் பேர் எல்லாம் போட்டு எழுதறதால சொன்னேன்.

நாஞ்சில் நாதம் said...

:)))

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஆயில்.! (ரேர் விஸிட் 1)
நன்றி கோவிஜி.! (ரேர் விஸிட் 2)
நன்றி அப்துல்.!
நன்றி இலக்கியன்.!
நன்றி கேபிள்.!
நன்றி அம்மிணி.!
நன்றி சங்கா.!
நன்றி தாரணி.! (நாளைக்கு பயோடேட்டாவில் ஒரு வரி போச்சு)
நன்றி டக்ளஸ்.!

நன்றி உலகநாதன்.! (நீங்கள் என் புதிய வாசகர் என்று நினைக்கிறேன். இந்த பெரும் வரலாற்றை பதிவதில் மாற்றுக்கருத்து ஏற்றுக்கொள்ளப்படாது. ஹிஹி.. சும்மனாச்சுக்கும்.. உங்கள் அன்புக்கு நன்றி.

இந்த திருமணமாகதவர்களுக்கான எச்சரிக்கை பதிவுகளில் வரும் பெயர்கள், சம்பவங்களனைத்துமே உண்மையை ஒட்டியவையே தவிர எனக்கு நிகழும் உண்மையல்ல.
மேலும் இந்தப்பதிவைப் பொறுத்தவரை இவற்றை எனக்கு மட்டும் நிகழும் பர்சனல் விஷயங்கள் என நீங்கள் நினைத்தால் உங்களைப் பார்த்து பரிதாபப்படத்தான் முடியும்.. ஹிஹி..)

நன்றி நாஞ்சில்.!

துபாய் ராஜா said...

//புரியாதது : எதிலேயுமே திருப்தின்னா.?
எளிய செயல் : தாமிராவை கோபப்படுத்துவது
அதைவிட எளிய செயல் : அதை ஆற்றுப்படுத்துவது//

இங்கதான் நீங்க நிக்கிறீங்க.... :))
(வீட்ல ரொம்ப உட்கார வச்சிட்டாங்க போல....... :)))

நர்சிம் said...

//உள்நோக்கமில்லாத நகைச்சுவை நோக்கில் எடுத்துக்கொள்ளும் படி பெண்ணியலாளர்களை கேட்டுக்கொள்கிறேன்//

ஏன் இந்த பயம்????

கார்க்கி said...

யோவ் பெரியவரே, நாங்க அக்‌ஷ்டப்பட்டு தாமிராவை அழித்து ஆதின்னு சொல்ல ஆரம்பிச்சா, நீங்க்ளே தாமிரா தாமிரா என்று சொல்வது ஏன்?

ஆதியில் நீங்க தாமிரா. ஆனா இப்ப தாமிரா ஆதியாகியாச்சு.. கொஞ்சம் பார்த்து எழுதுங்க..

அப்புறம் நாளைக்கு உங்க பயோடேட்டாவா?

அமிர்தவர்ஷினி அம்மா said...

தொழில் : இம்சை

:))))))

(உங்களோட பயோடேட்டாவை அவங்க எழுதி நாங்க படிக்கனும்னு ஆசை, ஆவண செய்வீர்களா ஆதி)

குசும்பன் said...

//தாமிரா// அவரு பேரு மாத்தி ஒரு யுகம் ஆவுது:)

//பொழுதுபோக்கு : தாமிராவை ஒரு நாளைக்கு ஐந்துமுறை கடைக்கு அனுப்புவது//

படிக்கும் பொழுதே எவ்வளோ சந்தோசமாக இருக்கு தெரியுமா?:)


//பிடித்த இடம் : அஞ்சப்பர், தாம்பரம்//

அண்ணே எல்லா பெண்களுக்கும் பிடிச்ச இடம் இன்னொன்னு இருக்கு
ஆங் 1000கிலோ மீட்டருக்கு அப்பால இருக்கும் அவுங்க அம்மா வூடு:)

சென்ஷி said...

:-), :-) டிஸ்கிக்கு தனி ஸ்மைலி!

ghost said...

எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க....///
நல்லா இருங்க

அ.மு.செய்யது said...

சுனா பானா பயடேட்டாவிட இந்த பய டேட்டா ரொம்ப 'ஆழமா இருக்கு'.

கலக்கல் சரவெடி..பின்னுறீங்க..

குமுதம் மாதிரி வாரத்துக்கு அட்லீஸ்ட் ஒரு பயோடேட்டாவாவது எழுதுங்கண்ணே !!! நல்லா வருது உங்களுக்கு...!!!

ராமலக்ஷ்மி said...

நான் சொல்ல நினைத்ததை அமித்து அம்மா சொல்லிட்டாங்க:)!

அப்புறம் அந்த பின்குறிப்பு, ஸோ பிழைச்சீங்க:)!

என். உலகநாதன் said...

//நன்றி உலகநாதன்.! (நீங்கள் என் புதிய வாசகர் என்று நினைக்கிறேன். இந்த பெரும் வரலாற்றை பதிவதில் மாற்றுக்கருத்து ஏற்றுக்கொள்ளப்படாது. ஹிஹி.. சும்மனாச்சுக்கும்.. உங்கள் அன்புக்கு நன்றி//

ஆதி நான் பழைய வாசகர்தான். முன்னாடி இனியவன் ன்னு எழுதிட்டு இருந்தேன். இப்போ என். உலகநாதன் என் இயற்பெயர்ல எழுதறேன்.

வெண்பூ said...

ஹி..ஹி.. சூப்பரு.. ஆனாலும் நீங்க ரொம்ப தைரியசாலிங்கோவ்....

Truth said...

//புரிந்தது : ஆண்கள் ஆபீஸில் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டிருக்கிறார்க

இது சூப்பர். :-)

//உங்களோட பயோடேட்டாவை அவங்க எழுதி நாங்க படிக்கனும்னு ஆசை, ஆவண செய்வீர்களா ஆதி

அதே அதே!!!

எவனோ ஒருவன் said...

என்னது நீங்க தைரியசாலியா?

மொத்தத்தையும் , முக்கியமா பின்குறிப்பையும் பாக்கும்போது நீங்க (பெண்களுக்கு) ரொம்ப பயந்தவர்னே தோனுது.

ச்சின்னப் பையன் said...

நேயர் விருப்பம்: ஆதியோட பயோடேட்டா... டிஸ்கி எதுவுமில்லாமல்... ஹிஹி...

ஆயில்யன் said...

//நன்றி ஆயில்.! (ரேர் விஸிட் 1)//

:)))))))

தமிழ்ப்பறவை said...

நச்..
//எனினும் பெரும்பாலாலும் கற்பனையான இந்தப்பதிவை உள்நோக்கமில்லாத நகைச்சுவை நோக்கில் எடுத்துக்கொள்ளும் ப//
இதுதான் கற்பனைன்னு தோணுது...
வேறன்ன சொல்ல...இன்னும் இந்த வாரம் எவ்வளவு பயடேட்டா வரப்போகுதோ...?! பொதுவாச் சொன்னேன்...

தராசு said...

படிச்சுட்டேன்

ஜானி வாக்கர் said...

பெயர் : ஆதி

புதிய பெயர் : சுபா அப்பா

வயது : இன்னும் 10 வருடத்தில் ஓய்வூதியம் வாங்குவோர் வரிசையில்.

தொழில் : வலைப்பூவில் எழுதுவது.

உபதொழில் : நன்றி சொல்லுவது
வலைப்பூவில்

குணம் : கேள்வி பட்ட வரை மனித குணமும் உண்டு.

நண்பர்கள் : பதிவை படிப்பவர்கள்.

எதிரிகள் : படித்துவிட்டு பதிவுக்கு பின்நூட்டம் போடாதோர்.

பிடித்த வேலை : தூங்குவது / துவைப்பது வீட்டில்.

பிடித்த உணவு : விமானம் மற்றும் கப்பல் தவிர்த்து பறப்பன , ஊர்வன அனைத்தும்.

பிடித்த உடை : கொஞ்ச நாளாகவே காவி வேட்டி, சட்டை, துண்டு

பிடித்த இடம் : TASMAC

விரும்புவது : கண்ணனுடன் 90 போடுவதை.

விரும்பாதது : அலுவலகம் முடிந்து வீட்டுக்கு போவதை.

பொழுதுபோக்கு : வீட்டுல கும்மி வாங்குவது.

புரிந்தது : தங்கமணி பதிவுகள் எழுத.

புரியாதது : சமூக இலக்கிய சிறுகதை போட்டி ல் வெல்ல எப்படி கதை எழுத வேண்டும் என்று

எளிய செயல் : பின்நூட்டம் இடுவது.

அதைவிட எளிய செயல் : Template பின்நூட்டம் இடுவது.

சமீபத்திய எரிச்சல் : சிறுகதை போட்டி ல் 20 இல் வராமல் போனது.

நீண்டகால எரிச்சல் : புனை பெயர் போனது.

சமீபத்திய சாதனை : புதிய வீடு பிடித்தது.

நீண்டகால சாதனை : திருமணம் ஆனது.

இப்படிக்கு அகில உலக ஆதி
ரசிகர் மன்றம்.

அறிவிலி said...
This comment has been removed by the author.
அறிவிலி said...

// ஒரு பதிவு ஹிட்டானா அந்த ஐடியாவை அவ்வளவு சீக்கிரம் விட்டுடமுடியுமா?/

இந்த பதிவுக்கு நிச்சயமா ஹிட் உண்டு. (பயோடேட்டாவுக்கு சொந்தக்காரங்ககிட்ட இருந்து)

T.V.Radhakrishnan said...

:-))

அன்புடன் அருணா said...

நீண்டகால எரிச்சல் : தாமிரா...இது சூபபர்!!!

அமுதா கிருஷ்ணா said...

உங்களை காப்பி அடிச்சு ஒரு பதிவு போட்டாச்சு..

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி துபாய்.!

நன்றி கார்க்கி.! (தாமிரா ரமாவின் ஹஸ்பண்டுப்பா)

நன்றி நர்சிம்.! (யோவ்.. ஏன் இப்படி?)

நன்றி அமித்து.!

நன்றி குசும்பன்.! (படிக்கும் பொழுதே எவ்வளோ சந்தோசமாக இருக்கு தெரியுமா?// என்ன நல்ல எண்ணமய்யா உமக்கு?)

நன்றி சென்ஷி.!
நன்றி கோஸ்ட்.!
நன்றி செய்யது.!
நன்றி ராமலக்ஷ்மி.!
நன்றி வெண்பூ.!
நன்றி ட்ரூத்.!
நன்றி ஒருவன்.!
நன்றி சின்னவர்.!
நன்றி தராசு.!
நன்றி தமிழ்பறவை.!

நன்றி ஜானி.! (ஏன் இந்த கொலவெறி? நாளைக்கு இதை எழுதி ஒப்பேத்தலாம்னு நினைச்சிருந்தேன். போச்சா..)


நன்றி அறிவிலி.!
நன்றி டிவிஆர்.!
நன்றி அருணா.!
நன்றி அமுதா.! (நீங்களுமா? அப்புறம் இந்த ஐடியா சொந்த சரக்கு இல்லையே.. அதான் ஊரறிஞ்சதாச்சே.!)

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஜானி எழுதிவிட்டதால் நான் வேறு தனியாக எழுதணுமா என்ன? நாளைக்கு வேறெதையாவது கிளறலாம்.!

இராகவன் நைஜிரியா said...

ம்....ஹும்... தங்கமணியப் பத்தி பயப்படாம எழுத முடியுது உங்களால...

நம்மால முடியலையேன்னு பெரு மூச்சுத்தான் விட முடியுது...

கொடுத்து வச்ச புண்ணியவான்.

anto said...

இப்படி ஒரு பதிவு போடுறதுக்கே தனி துணிவு வேணும்.அதெல்லாம் இருக்கட்டும் இப்ப கஞ்சிக்கு என்ன பண்றீங்க...?

வால்பையன் said...

//உபதொழில் : பர்சேஸ் பண்ணுவது//

ஹாஹாஹாஹா!

திரும்பவும் சேம் ப்ளட் போட வச்சிடிங்க!

நேத்தெல்லாம் கொழம்புங்குற பேர்ல வீட்ல ஒன்னு இருந்துச்சு பாருங்க!, நான் அழாத குறை தான்!

வால்பையன் said...

//சமீபத்திய எரிச்சல் : இப்படித்தான் இருக்கும். அடிப்பட்ட இடத்தில் டெட்டால் வைத்த போது :)//

அது உண்மை தானே!

sakthi said...

குணம் : கொஞ்சம் ஆங்காரம் கொஞ்சம் ரீங்காரம்

அருமையான குணம் பெண்களின் தேசிய குணம் இது ஆதி அண்ணா

sakthi said...

பிடித்த உடை : கடைகளிலிருந்து இன்னும் வாங்கப்பட்டிருக்காத சேலைகள்

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

sakthi said...

சமீபத்திய சாதனை : முட்டைக்குழம்பு டேஸ்ட்டாக வைத்தது
நீண்டகால சாதனை : 'நா தப்புப்பண்ணிட்டேண்டா' என தாமிராவை அலறவைத்தது


ஹ ஹ ஹ ஹ

ரசித்தேன்

பட்டிக்காட்டான்.. said...

அருமை..

//ஆண்கள் ஆபீஸில் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டிருக்கிறார்கள்..//

:-)

கார்ல்ஸ்பெர்க் said...

//குமுதம் மாதிரி வாரத்துக்கு அட்லீஸ்ட் ஒரு பயோடேட்டாவாவது எழுதுங்கண்ணே !!! நல்லா வருது உங்களுக்கு...!!!
//
ரிப்பீட்டேய்ய்ய்ய்

நிஜமா நல்லவன் said...

:)))))

நிஜமா நல்லவன் said...

/பொழுதுபோக்கு:தாமிராவை ஒரு நாளைக்கு ஐந்துமுறை கடைக்கு அனுப்புவது./

அண்ணே...நீங்க நெம்ப கொடுத்து வைத்தவர்.....நானெல்லாம் ஒரு நாளைக்கு பத்து முறை கடைக்கு போக வேண்டி இருக்கு:)))

நிஜமா நல்லவன் said...

/ இராகவன் நைஜிரியா said...

ம்....ஹும்... தங்கமணியப் பத்தி பயப்படாம எழுத முடியுது உங்களால...

நம்மால முடியலையேன்னு பெரு மூச்சுத்தான் விட முடியுது.../


நைஜீரிய சிங்கத்துக்கு இப்படி ஒரு சோதனையா???

நட்புடன் ஜமால் said...

பிடித்த உடை : கடைகளிலிருந்து இன்னும் வாங்கப்பட்டிருக்காத சேலைகள்]]


இது ஜூப்பரு ...

தமிழ் பிரியன் said...

///வெண்பூ said...
August 11, 2009 12:29 PM

ஹி..ஹி.. சூப்பரு.. ஆனாலும் நீங்க ரொம்ப தைரியசாலிங்கோவ்....////

சொல்ல நினைச்சது.. ;-)

RR said...

இந்த பதிவு போட தங்கமணி கிட்ட எவ்வளவு கஷ்டப்பட்டு Permission வாங்கி இருப்பிங்க என்பதை நினைத்து பார்த்தான்........

வண்ணத்துபூச்சியார் said...

Why Blood..?? Same Blood..??

எல்லாருடைய வீட்டிலேயும் இப்படிதானா..??

நிம்மதியா இருக்கு ஆதி..

Anonymous said...

ரங்கமணிகளெல்லாம் கொஞ்சம் பாவம்தான் போல இருக்கு... :)

புன்னகை said...

//வயது : அப்படின்னா.?//
இப்படி சொல்றதுக்குக் காரணம் நீங்க தான். "அய்யோ பாவம், சின்ன பொண்ணு, வயசான ஆள கல்யாணம் பண்ணி கஷ்டப்படுது" அப்படின்னு யாரும் உங்கள குறை சொல்லக் கூடாதுனு ஒரு நல்ல எண்ணம் தான்! :-)

//அதைவிட எளிய செயல் : அதை ஆற்றுப்படுத்துவது//
:-) உங்க ராமாவிற்கு மட்டுமல்ல, எல்லா பெண்களின் சாதனையும் அது தான்!

பின்குறிப்புப் போட்டதால கொஞ்சம் பிழைசீங்க போங்க. இல்லனா, ஒரு கிழி கிழிச்சிருப்பேன்! :-)

அத்திரி said...

ஆதி எப்ப தாமிரா ஆனாரு.......அய்யய்யோ....ஒன்னுமே புரியலையே.....

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி இராகவன்.! (என்ன அண்ணாச்சி ஊர்ல போய் செட்டிலாயாச்சா? பயணக்கட்டுரை ஆரம்பிச்சிருக்கீண்க்க போல..)

நன்றி அன்டோ.!

நன்றி வால்பையன்.! (நேத்தெல்லாம் கொழம்புங்குற பேர்ல வீட்ல ஒன்னு இருந்துச்சு பாருங்க!// என்ன செய்ய.. விதி வலியது)

நன்றி சக்தி.! (உங்கள் ரசனையை ரசித்தேன்)

நன்றி பட்டிக்காட்டான்.!
நன்றி கார்ல்ஸ்.!

வாங்க வாங்க நெசமா நல்லவரு, என்னல்லாம் பண்ண வேண்டிருக்குதுய்யா.!

நன்றி ஜமால்.!
நன்றி தமிழ்.!
நன்றி RR.!
நன்றி வண்ணத்துப்பூச்சி.!
நன்றி மயில்.! (நோ கமெண்ட்ஸ்.. ஹிஹி)

நன்றி புன்னகை.! (அய்யோ பாவம், சின்ன பொண்ணு, வயசான ஆள கல்யாணம் பண்ணி கஷ்டப்படுது// அடப்பாவிகளா.?)

நன்றி அத்திரி.! (பதிவை மட்டும் படிச்சா போறாது ராசா, பின்னூட்டங்களையும் படிக்கணும்)

மங்களூர் சிவா said...

/
பின்குறிப்பு : வீடு, அடுப்பு, குழந்தை என்று பெண்கள் விரிந்து / ஒடுங்கிப்போவதில் எனக்கும் தெளிந்த மனநிலை இல்லை எனினும் பெரும்பாலாலும் கற்பனையான இந்தப்பதிவை உள்நோக்கமில்லாத நகைச்சுவை நோக்கில் எடுத்துக்கொள்ளும் படி பெண்ணியலாளர்களை கேட்டுக்கொள்கிறேன்.
/

இந்த பயம் மனசுல எப்பவும் இருக்கட்டும் ஆதி
:)))

மங்களூர் சிவா said...

//புரிந்தது : ஆண்கள் ஆபீஸில் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டிருக்கிறார்கள்/

:))))))))

மங்களூர் சிவா said...

//புரிந்தது : ஆண்கள் ஆபீஸில் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டிருக்கிறார்கள்//

எப்பிடித்தான் இப்பிடி கம்பேனி சீக்ரெட் எல்லாம் கண்டுபிடிக்கிறாய்ங்களோ
எங்கூட்டுக்காரம்மாவும் இப்பிடித்தான்

:)))))))))))