Wednesday, August 12, 2009

லோன் குடுங்கடா டேய்..

முந்தைய பயோடேட்டா பதிவுகள் ரெண்டும் ஓரளவு ஹிட்டாகிவிட்டன. அதே கிரிப்பில் ஆதி : பயோடேட்டா, பதிவர்கள் : பயோடேட்டா என மொக்கை போட்டு பிஸியாக இருக்கும் இந்த வாரத்தை ஒப்பேற்றிவிடலாம் என திட்டமிட்டிருந்தேன். அதன் பின்னூட்டத்திலேயே ஜானி என் பயோடேட்டாவை போட்டு கலாய்க்க, அண்ணாச்சி தனி பதிவாகவே பயோடேட்டா போட்டு ஆப்பு வைத்துவிட்டார். மேலும் அமுதாகிருஷ்ணன் பதிவர்கள் டேட்டாவை எழுதிவிட என் திட்டம் அம்பேலாகிவிட்டது. வேறு வழியில்லாமல் இதோ அவியல் கிண்டிக்கொண்டிருக்கிறேன்.

**********

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பதிவுலக சிறுகதைத் திருவிழா கோலாகலமாக நடந்துமுடிந்திருக்கிறது. என்னதான் போட்டியில் நாம் பல்பு வாங்கினாலும், இந்த அரிய செயல் நடக்க காரணமானவர்களை பாராட்டாமல் போனால் எனக்குள்ளிருக்கும் எழுத்தாளன்(சிரிக்கக்கூடாது) என் மூக்கிலேயே குத்தும் ஆபத்திருக்கிறது. ஆகவே இன்னும் இதுபோன்ற பல நிகழ்வுகளை சாத்தியமாக்கி முன்னெடுத்துச்செல்ல அண்ணன்மார் பைத்தியக்காரன், ஜ்யோவ்ராம்சுந்தர் ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் அன்பு.

**********

வடகரை அண்ணாச்சி இன்று நம் பயோடேட்டாவை எழுத கோ இன்சிடெண்டாக கேபிள் சங்கரும் நம்மை கலாய்த்து இன்று பதிவெழுத அதனால் நம் கடைக்கு கூட்டம் கூட லாபம் நமக்கு. கேபிள் 2012ல் எடுக்கவிருக்கும் முதல் சினிமா இமாலய வெற்றி பெறக்கடவதாக. (தொடர்ந்து நர்சிம், பரிசல், கார்க்கி ஆகியோரும் என்னைப் பற்றி பாராட்டி இன்றே பதிவெழுத இருப்பதாக தகவல்கள் வருகின்றன, ஜாக்கிரதை.!)

**********

நாம் போகும் திசையில் மட்டும் பஸ்ஸே வராது என்பது போல தேவைப்படாத நேரங்களிலெல்லாம் போனிலும், நேரிலும் நொய்யி நொய்யி என்று படுத்தும் இந்த பாங்க்காரர்கள்.. ரெண்டு வாரமாக ஒரு சின்ன அமவுண்டை(2 மாச சம்பளம்தாங்க..) லோன் வாங்க முயன்று கொண்டிருக்கிறேன், படுத்துகிறார்கள். அலுவலகம் தவிர்த்து சென்னையில் அடிக்கடி வீடு மாறிக்கொண்டிருந்ததால் அட்ரஸ் இல்லாத ஆளாக கருதி அப்ளிகேஷன்களை ரிஜக்ட் செய்துவிடுகிறார்கள். கையெழுத்து கோணையாக இருக்கிறது (என் கையெழுத்தே அப்படித்தாண்டா இருக்கும்), ஸ்டேட்மெண்டில் பேரு இல்லை என காரணங்கள் வேறு. ஐந்து வருடங்களாக கிரிஸ்டல் கிளியர் பாங்கிங் ட்ரான்ஸ்சாக்ஷன்ஸ் வைத்திருந்தால் இப்படித்தான் படுத்துவீங்களா, அட போங்கப்பா.. லோனும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம். (கைமாத்து குடுக்க தயாரக இருப்பவர்கள் போனில் அழைக்கலாம்.. ஹிஹி..)

**********

என்னது கவுஜயா.? ஊஹூம் அதெல்லாம் கிடையாது. பொன்மொழிதான் சொல்லுவேன். பல்வேறு காரணங்களில் ஆக்கப்பூர்வமாக செயலாற்றிக்கொண்டிருக்கும் பதிவுலக நண்பர்களைக் காண்கையில் ஞாபகம் வருவது இது.

"பிரார்த்தனைக்காக முன்வரும் இரண்டு கைகளை விடவும், உதவுவதற்காக முன்வரும் ஒரு கை மிகவும் மதிப்பு வாய்ந்தது" - கமல்ஹாசன்.

.

34 comments:

தாரணி பிரியா said...

super aviyal :)

தாரணி பிரியா said...

ரமா எழுதும் ஆதியோட பயோடேட்டா எப்ப வரும் ??

இப்ப வாங்கி இருக்கிற பல்பு பின்னாடி பிரைட்டா எரிய வாழ்த்துக்கள் :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஃபாலோ அப் பின்னூட்டம்.

நன்றி தாரணி.! (எரியும்ங்கறீங்க.?)

ச்சின்னப் பையன் said...

பாராட்டி எழுதினா எவ்ளோ கிடைக்கும்னு சொல்லுங்க...

ஆபீஸுக்கு ரெண்டு நாள் லீவ் போட்டு எழுதிடறேன்...

:-))

நாஞ்சில் நாதம் said...

:))

நாஞ்சில் நாதம் said...

:))

ராமலக்ஷ்மி said...

அருமையான பொன்மொழி. தலைப்புக்கும் அதற்கும் சம்பந்தம் உண்டா இல்லையா:)?

பைத்தியக்காரன் said...

ஆதி,

அவியல் பதமா வெந்திருக்கு. அப்புறம் எனக்கென்னவோ, 'பின்னூட்டம் போடுங்கடா டேய்'னு தலைப்பு தெரியுது :-) ஒருவேளை கண்ணாடிய மாத்தணுமா? :-(

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ஸ்ரீமதி said...

நல்லா இருக்கு அண்ணா அவியல்.. :)))

ஸ்ரீமதி said...

Me the 10th :)

T.V.Radhakrishnan said...

super

ஜானி வாக்கர் said...

2 மாச சம்பளம் தான, இத ஏன் இப்படி மெதுவா கேக்குறீங்க, நல்ல சத்தமா கேளுங்க.

தம்பிக்கு கை மாத்து கொடுக்கணும்னு ஆசை தான், ஆனா , ஆனா அண்ணன் கிட்ட 10 பைசா கூட இல்லயே அது தான் வருத்தமா இருக்கு. ஹி ஹி.

மகளிர் சுய உதவி குழுக்கள் மாதிரி, பதிவர்கள் சுய உதவி குழு ஆரம்பிக்கலாமா?

ghost said...

அவியல் நல்லா இருக்கு /
அருமையான பொன்மொழி

பரிசல்காரன் said...

ஆதி

அது அன்னை தெரசா சொன்னது எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருவேளை அதை மறுபடி கமல் சொல்லியிருப்பாரோ..

நான் இனி இதைக் குறிப்பிடும்போது ஆதி சொல்லுவாரு..’ என்றும் சொல்லுவேன்!

BTW, பைத்தியகாரனின் பின்னூட்டம் கலகலகல....

புன்னகை said...

//பரிசல்காரன் said...
ஆதி

அது அன்னை தெரசா சொன்னது எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.//
எனக்கும் அப்படி தான் ஞாபகம்.

டக்ளஸ்... said...

\\மகளிர் சுய உதவி குழுக்கள் மாதிரி, பதிவர்கள் சுய உதவி குழு ஆரம்பிக்கலாமா? \\

வாக்கர் வந்துட்டீங்க போல..!
இந்த அங்கிள் ஒரு வார்த்தை கூட சொல்லலப்பா..!
:(

ஜானி வாக்கர் said...

டக்ளஸ்... நான் நேத்து தான் வந்தேன்.

வந்ததும் உங்க "முன்னால் காதலிக்கு கடிதம் " பதிவை படித்தேன். நல்லா இருந்துச்சு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

தாரணி பிரியா said...
ரமா எழுதும் ஆதியோட பயோடேட்டா எப்ப வரும் ??

இப்ப வாங்கி இருக்கிற பல்பு பின்னாடி பிரைட்டா எரிய வாழ்த்துக்கள் :)


வழிமொழிகிறேன்.

எவனோ ஒருவன் said...

//எனக்குள்ளிருக்கும் எழுத்தாளன்(சிரிக்கக்கூடாது) //
சாரிண்ணே.
--
ம்ம்ம்... Preapproved Loan எல்லாம் இப்பவே ட்ரை பண்ணி வச்சுக்கனும்.

தமிழ் காதலன் said...

//"பிரார்த்தனைக்காக முன்வரும் இரண்டு கைகளை விடவும், உதவுவதற்காக முன்வரும் ஒரு கை மிகவும் மதிப்பு வாய்ந்தது" - கமல்ஹாசன்.//


எனக்கு மிகவும் பிடித்த கலைஞர் , அருமையான வார்த்தை .
மேற்கோள் குறியிட்டமைக்கு நன்றி அண்ணா.

கார்க்கி said...

//(தொடர்ந்து நர்சிம், பரிசல், கார்க்கி ஆகியோரும் என்னைப் பற்றி பாராட்டி இன்றே பதிவெழுத இருப்பதாக தகவல்கள் வருகின்றன, ஜாக்கிரதை.//

எழுதும் முன்பே வந்த மிரட்டல் அழைப்புகளால் திட்டம் காலவரையன்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

Cable Sankar said...

//கேபிள் 2012ல் எடுக்கவிருக்கும் முதல் சினிமா இமாலய வெற்றி பெறக்கடவதாக.//
அலோவ் உஙக்ளை பத்தி பதிவெழுதினா 2012லதான் படம் பண்ணுவீங்கன்னு சொல்றீங்களே. எப்படியாவது இந்த வருஷமே படம் பண்ணி ...

ஆ.முத்துராமலிங்கம் said...

(நாங்களும் பிண்ணூட்டம் போட்டுட்டோம்பா!!)


பதிவு நன்று.
பொன் மொழி அருமை

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ச்சின்னவர்.!
நன்றி நாஞ்சில்.!
நன்றி ராமலக்ஷ்மி.! (ஹிஹி..)

நன்றி பைத்தியக்காரன்.! (முதல்ல அப்படித்தான் வைக்கலாம்னு நினைச்சேன். நாலு பதிவுக்கு ஒண்ணுங்கிற கணக்கிலயாவது பின்னூட்டம் வரலைன்னா தெரியும் சேதி.!)

நன்றி ஸ்ரீமதி.! (எப்டி போயிக்கினுருக்குது குடும்ப வண்டி?)

நன்றி ஜானி.!
நன்றி கோஸ்ட்.!

நன்றி பரிசல்.! (உண்மைன்னா கமல் ரிப்பீட்டு போட்டிருக்காருன்னு வெச்சுக்க வேண்டியதுதான். நல்ல விஷயத்த நம்மளும் ஒரு ரிப்பீட்டு போட்டுப்போம்)

நன்றி புன்னகை.!
நன்றி டக்ளஸ்.!
நன்றி அமித்துஅம்மா.!
நன்றி எவனோஒருவன்.!

நன்றி தமிழ்காதலன்.! (நீங்க தமிழ்காதலன்னா அப்ப நாங்க யாரு.?)

நன்றி கார்க்கி.!
நன்றி கேபிள்.!
நன்றி முத்துராமலிங்கம்.!

அ.மு.செய்யது said...

// (கைமாத்து குடுக்க தயாரக இருப்பவர்கள் போனில் அழைக்கலாம்.. ஹிஹி..)
//

கைமாத்து வாங்க நான் எப்போதும் தயார்.ஐசிஐசிஐ தான்.என்னை அக்கவுண்ட் பேயியாக ஏற்று கொள்ளவும்.

நிஜமா நல்லவன் said...

:)))

நிஜமா நல்லவன் said...

/மகளிர் சுய உதவி குழுக்கள் மாதிரி, பதிவர்கள் சுய உதவி குழு ஆரம்பிக்கலாமா?/

அட..இது கூட நல்ல ஐடியாவ இருக்கே...இப்படி ஒண்ணு ஆரம்பிச்சா மொத மாச கடன் எனக்கு கொடுங்கப்பா:))))

நிஜமா நல்லவன் said...

தலைப்பிலேயே தெரியுது பேங்க் காரங்க மேல செம கடுப்புல இருக்கீங்கன்னு:)))

நிஜமா நல்லவன் said...

/"பிரார்த்தனைக்காக முன்வரும் இரண்டு கைகளை விடவும், உதவுவதற்காக முன்வரும் ஒரு கை மிகவும் மதிப்பு வாய்ந்தது" /

யார் சொன்னதா இருந்தா என்ன...சொன்ன விஷயம் சூப்பர்!

பட்டிக்காட்டான்.. said...

நல்லத்தான் அவிச்சுருக்கிங்க..

//..ச்சின்னப் பையன் said...

பாராட்டி எழுதினா எவ்ளோ கிடைக்கும்னு சொல்லுங்க... //

இப்படி கேப்பாங்கன்னு தெரிஞ்சுதான் லோன் கேட்டு இருக்கிங்களோ..??!!

கார்ல்ஸ்பெர்க் said...

"பிரார்த்தனைக்காக முன்வரும் இரண்டு கைகளை விடவும், உதவுவதற்காக முன்வரும் ஒரு கை மிகவும் மதிப்பு வாய்ந்தது"

--சக பதிவர் சிங்கை நாதன் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் சமயத்தில் - இது பொன்மொழி அல்ல.. வைர மொழியாகத் தெரிகிறது..

கத்துக்குட்டி said...

"பிரார்த்தனைக்காக முன்வரும் இரண்டு கைகளை விடவும், உதவுவதற்காக முன்வரும் ஒரு கை மிகவும் மதிப்பு வாய்ந்தது"

பொன்னான மொழிங்க !!!

ரோஸ்விக் said...

இந்த முகவரி மாற்றம் நம்மள மாதிரி ஆளுங்களுக்கு தவிர்க்க முடியாதது. அதை இந்த பேங்க், காஸ் இணைப்பு கொடுக்குரவங்க புரிஞ்சிக்குற மாட்டாங்க. தனி நபர் அடையாள அட்டை கிடைத்த பிறகாவது இந்த பிரச்சனை தீருமா பார்ப்போம். http://thisaikaati.blogspot.com ல ஒரு பதிவும் இதை பத்தி போட்டுருக்கேன்.

அமுதா கிருஷ்ணா said...

கைமாத்துக்கு வட்டி கிடையாதுல்ல..இல்லைனா கொடுத்திடலாம்..