Thursday, August 13, 2009

பொய்யோடு மகிழ்தல்

ஒரே ஆரவாரம்.. அமைதியாக இருந்த அந்த நீர்ப்பரப்பு மெல்ல மெல்ல அலைபாயத்துவங்கியது. நேரம் செல்லச்செல்ல அலைகள் பெரிதாக எழத்துவங்கின. கொஞ்ச நேரத்தில் பெருத்த இடியோசை, சூறாவளியின் பேரிரைச்சல், அருகிலிருந்த கொடித்தூண் சாய.. வெண்புகை சூழ, நூறடி உயரத்துக்கு நீர்த்தாரைகள் எழும்பின. ஓவென எங்கும் மக்களின் உற்சாக பேரிரைச்சல்.

சுனாமி.?

ஒன்றுமில்லை, மேற்சொன்ன காட்சி கிஷ்கிந்தாவில் தினமும் நிகழும் சுனாமிக்காட்சி.! ஜோக் சொன்னால் இப்ப என்ன என்று கேட்கிறவர்களும், கொஞ்சம் முதிர்ந்த மனநிலையும் கொண்டவர்கள் "ஹோஸ் பைப்பில் தண்ணிய பீச்சியடிச்சா அது சுனாமியா.?" என்று கேட்கக்கூடும். இதையே குழந்தை மனநிலையில் இருந்தால் மேற்சொன்ன மாதிரியும் அந்தக் காட்சியைக் காணலாம். அது குழந்தைகளுக்கான நிகழ்ச்சிதான், வளர்ந்த குழந்தைகளுக்கும் சேர்த்துதான். நான்கைந்து ஃபவுண்டன்களை ஒரு சேர பீய்ச்சி, வெண்புகை கிளப்பி சுனாமி போல ஒரு தோற்றத்தை உருவாக்க முனைந்திருக்கிறார்கள். அதற்கு உறுதுணையாக இருப்பது பேரிரைச்சலை உருவாக்கும் பெரிய பெரிய ஸ்பீக்கர்கள். சிறப்பு என்று சொல்ல இயலாவிட்டாலும் முயற்சியை பாராட்டலாம்.

மேலும் இன்னொரு சுவாரசியம், சிமுலேஷன் காட்சி. முன்னால் ஸ்பென்ஸர்ஸில் ஒரு சிறிய சிமுலேஷன் காட்சி அரங்கம் இருந்தது. இப்போது இல்லை என நினைக்கிறேன். திரையில் ஓடும் படத்திற்கேற்ப நாம் அமர்ந்திருக்கும் நாற்காலிகளும் ஆட குழந்தைகளுக்கு ஒரு குட்டி திரில்லிங் அனுபவம். அரதப்பழசான "பழுதுபட்ட தண்டவாளம், குகைகளுக்குள் ஓடும் ட்ராலியில் பயணம்" செய்யும் அதே படத்தைத்தான் இன்னும் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் ரசிக்கமுடிகிறது.

எதையோ சொல்ல வந்து கிஷ்கிந்தா மார்கெட்டிங் வேலை பண்ணிக்கொண்டிருக்கிறேன் பாருங்கள்.

பொய்கள்.!

உங்கள் லாஜிக்குகளையும், புத்திசாலித்தனங்களையும் குப்பையிலே கொண்டு போட்டுவிடலாம். பொய்களை அனுபவிக்கலாம். அது சுகமானது. ஒரு மாஜிக் நிபுணர் வித்தைகள் செய்து காண்பிக்கிறார். ஆவ்வ்வ்.. வென வேடிக்கை பார்க்கலாம். அவர் அதை அங்கே மறைத்து வைத்திருக்கிறார், முன்னமே இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்.. என்றெல்லாம் ஆராய்ச்சி எதற்கு? டிவியிலே 'டோராவின் பயணங்கள்' பார்க்கிறோம். புஜ்ஜிக்கு உதவ மூன்று தடவை "பேக் பேக்" என்று கத்த வேண்டும். நாம் கத்தினால்தான் Pack வெளிவரும். ஆம், நிஜம்தான். கத்தலாம், புஜ்ஜிக்கு உதவலாம்.

சுகமானதல்லவா அந்த உலகம்.

என் மாமா ஒருவர் இருக்கிறார். குழந்தைகளோடு விளையாடுகையில் குழந்தையாகவே மாறிவிடுவார். ஒரு காட்சி. ஐந்து சின்னக்குழந்தைகள். இவர். வட்டமாக அமர்ந்திருக்கின்றனர். கைகளில் ஒரு பக்கம் தரையில் உரசிய சுமார் 50 புளியமுத்துக்கள் இருக்கின்றன. அவற்றுடன் உரசப்படாத முழு முத்துக்களும் கலக்கப்படுகின்றன. ஒருவர் அவற்றை குலுக்கி நடுவில் வீசிவிட அனைவரும் வேகமாக உரசிய முத்துக்களை மட்டும் பொறுக்க வேண்டும். அதிக முத்துக்கள் எடுப்பவர் வெற்றியாளர்.

இந்த விளையாட்டை பக்கத்திலிருந்து பார்க்கவேண்டுமே.. அவ்வளவு குதூகலமாக இருக்கும். வட்டத்தின் நடுவில் அவ்வளவு கைகலப்பு நிகழும். குழந்தைக் கைகள் என்றும் பாராமல் அவரும் ஊடே முத்துக்களை எடுக்க போராடுவர். விட்டுக் கொடுக்கமாட்டார். சமயங்களில் வட்டம் கலைந்து அடிதடி நிகழும். கைகளில் உரத்து இடி வாங்கிய குழந்தைகள் ஓவென அழுதுகொண்டே எழுந்து பெண்களிடம் சென்று முறையிடத்துவங்கும். முத்துக்கள் கிடைக்காத குழந்தைகளும் ஆற்றாமையால் அழுகையை அடக்கமுடியாமல் அடிபட்டு அழுவதைப்போல பொய்யாக அழுதுகொண்டே எழுந்து செல்வார்கள். அற்புதமாக இருக்கும். உள்ளிருக்கும் குழந்தைக்காகவும் கொஞ்சம் வாழ்வோமே. உலகம் புதிதாக இருக்கும்.!

.

32 comments:

நாஞ்சில் நாதம் said...

:))

ஸ்ரீமதி said...

Super.. :)))

ஆதிமூலகிருஷ்ணன் said...

Thanks Nanjil, Srimathi.!

Cable Sankar said...

உள்ளிருக்கும் குழந்தைக்காக வாழ்வோமே.. நிதர்சனமான வரிகள் ஆதி.

முரளிகண்ணன் said...

அருமை ஆதி

கார்க்கி said...

என்னமோ ஆயிடுச்சு தலைவருக்கு..

டோரா மேட்டர்.. நானும் என் அக்கா பையனும் அமர்ந்து மணிக்கணக்கில் கத்திக் கொண்டிருப்போம்..

பரிசல்காரன் said...

டோரா - சேம் பின்ச்!

குழந்தையாயிருத்தல் சுகமே!

அப்பாவி முரு said...

மனநிலை முதிர்ந்து(வளர்ந்து) கொண்டு தானிருக்கும்.

இயல்புக்கு வராது, வந்தாலும் வரவிடாது.

அதான் மனிதன்.

அப்பாவி முரு said...

//வெண்புகை சூழ, நூறடி உயரத்துக்கு நீர்த்தாரைகள் எழும்பின//

நீர்தாரைகள், எழும்பினவா?

கத்துக்குட்டி said...

நல்லா சொல்லிருகிங்க ஆதி!!

கதிர் - ஈரோடு said...

//உள்ளிருக்கும் குழந்தைக்காகவும் கொஞ்சம் வாழ்வோமே. உலகம் புதிதாக இருக்கும்.!//

பிடித்த வரிகள்

குழந்தை போல் அழகாயிருக்கு

கார்ல்ஸ்பெர்க் said...

//உள்ளிருக்கும் குழந்தைக்காகவும் கொஞ்சம் வாழ்வோமே. உலகம் புதிதாக இருக்கும்.!//

பிடித்த வரிகள்..

ரிப்பீட்டு..

நாமெல்லாம்(நம்ம ரெண்டு பேரும் மட்டும் தான்) எப்பவுமே குழந்தை தான்'ணா..

இராகவன் நைஜிரியா said...

// உள்ளிருக்கும் குழந்தைக்காகவும் கொஞ்சம் வாழ்வோமே. உலகம் புதிதாக இருக்கும்.! //

சரியாகச் சொன்னீர்கள் ஆதி...

குழந்தைகளுடன் குழந்தையாக விளையாட ஒரு மனப் பக்குவம் வேண்டும். நம்மிள் பலரிடம் அது இல்லை.

அமுதா கிருஷ்ணா said...

குழந்தைகளுடன் விளையாட விளையாட நமக்கு வயதே ஏறாது..என்றும் இளமையுடன் இருக்கலாம்..

Truth said...

மேஜிக் - அதே அதே.
இங்கு லண்டனில் நான் தெருக்களில் மேஜிக் செய்ய கண்டிருக்கிறேன். மேஜிக் செய்பவருக்கும் எனக்கும் சிமார் இரண்டு அல்லது மூன்றடி தான் இடைவெளி இருக்கும். அவர் என்ன செய்கிறார் என்று நினைத்தால் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் நம்மால் அதை ரசிக்க முடியாது. இதுவரை நான் பலமுறை பார்த்திருப்பேன், ஆனால் ஒரு முறை கூட அவரின் ட்ரிக்சை கண்டுபிடிக்க முயற்சித்ததில்லை.

நாடோடி இலக்கியன் said...

// உள்ளிருக்கும் குழந்தைக்காகவும் கொஞ்சம் வாழ்வோமே. உலகம் புதிதாக இருக்கும்.! //

இப்படி முடித்து ஒரு சாதா பதிவை சூப்பர் பதிவுன்னு சொல்ல வச்சிட்டீங்களே ஆதி.கலக்கல்.

Anonymous said...

ரொம்ப சரி ஆதி, நம்மில் இருக்கும் குழந்தைதான் இன்னும் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.. :)

மங்களூர் சிவா said...

/
கார்க்கி said...

என்னமோ ஆயிடுச்சு தலைவருக்கு..
/

ம் கரெக்ட்

டோரா ஒரே ஒரு நாள் இன்னொரு நண்பர் வீட்டுல பார்த்தேன். மத்தபடி சுட்டி டிவி பாக்க வீட்டுல ஆள் இல்ல!

அ.மு.செய்யது said...

கொயந்தையா ஆவணுமா இல்ல சுனா பானா ஆவணுமா ?? பாத்துச் செய்ங்க..!!

அத்திரி said...

அண்ணே சுபாவோட நல்லா விளையாடுறீங்க போல

செல்வேந்திரன் said...

இதற்கும் இன்றைய நம்முடைய உரையாடலுக்கும் சம்பந்தம் இல்லைதானே?

தமிழ்ப்பறவை said...

பிடித்தது.. பதிவும் குழந்தை மனமும்... :-)

Mahesh said...

to be young is not being young but feeling young... யாரோ சொன்னது... அழகு ஆதி !!

பட்டிக்காட்டான்.. said...

//.. உள்ளிருக்கும் குழந்தைக்காகவும் கொஞ்சம் வாழ்வோமே. உலகம் புதிதாக இருக்கும்.! ..//

அருமை..

கிஸ்கிந்தா அனுபவம் எனக்கும் உண்டு.. :-)

RR said...

அருமை ஆதி வாழ்த்துகள்!

டோராவோட (Dora) தம்பி டியாகோன்னு (Diego) ஒருத்தர் இருக்கார் அவரையும் பாருங்கள் வெகு சிறப்பாக இருப்பார். பெண் பிள்ளைகளுக்கு டோரன்னா, ஆண் பிள்ளைகளுக்கு Diego ரொம்ப பிடிக்கும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

// உள்ளிருக்கும் குழந்தைக்காகவும் கொஞ்சம் வாழ்வோமே. உலகம் புதிதாக இருக்கும்.! //

கண்டிப்பா

சூப்பர் பதிவு.

Vijayashankar said...

ஆறு வயது குதுகலிக்கும் எண்ணம் தான் அறுபதிலும் இருக்கும். சரியா?

T.V.Radhakrishnan said...

:-))

எம்.எம்.அப்துல்லா said...

//குழந்தைக்காகவும் கொஞ்சம் வாழ்வோமே. உலகம் புதிதாக இருக்கும்.!


//

அதுனாலதான் உங்ககிட்ட பழகிக்கிட்டு இருக்கேன் :))

பீர் | Peer said...

குழந்தைகளுடனான பழக்கத்தின் மகிழ்வை ஒரு பதிவில் சொல்லி திருப்திபடுத்த முடியாது,

அருமையாக செய்திருக்கிறீர்கள், ஆதி.

தராசு said...

Super

ஆதிமூலகிருஷ்ணன் said...

கேபிள், முரளி, கார்க்கி,பரிசல், முரு, கத்துக்குட்டி, கதிர், கார்ல்ஸ், இராகவன், அமுதா, ட்ரூத், இலக்கியன், மயில், மங்களூர், செய்யது, அத்திரி, செல்வா, தமிழ்பறவை, மகேஷ், பட்டிக்காட்டான், RR, அமித்து, விஜய், டிவிஆர், பீர், தராசு, அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.!

நன்றி அப்துல், பாருங்க மேல உள்ளவங்க எல்லோரும் 'பின்ன நாங்கெல்லாம் யாருன்னு?' கேட்கிறாங்க..