Monday, August 17, 2009

ஆஃபிஸ் மீட்டிங்கும் அரசியல் மீட்டிங்கும்

டாபிக்கை ஆரம்பிக்கும் முன், பெரிசா பில்டப் பண்ணினா தேடி வந்து ஒதைப்பேன்னு ஒரு முக்கிய பதிவர் மிரட்டியுள்ளதால் நேரடியாக விஷயத்துக்குப் போய்விடுவோம்.

10. ஆபிஸ் மீட்டிங்குக்கு கூட்டம் சேர்ப்பது எவ்வளவு கடினமோ அதே கடினம்தான் அரசியல் மீட்டிங்குக்கு ஆள் சேர்ப்பதும். என்ன ஒண்ணு, சைஸ்தான் வித்தியாசம்.

09. அங்கே பேப்பர் விளம்பரம், போஸ்டர், ஆட்டோ அலறல்கள் எனில் இங்கே இண்டர் மெயில்கள், ரிமைண்டர்கள் கடைசி நேர போன்கால்கள். அப்படியும் எதிர்பார்த்த அளவில் கூட்டம் சேராது.

08. அங்கே பிரியாணி, கோட்டர் என்றால் இங்கே பிஸ்கெட்ஸ், டீ. சமயங்களில் மிரட்டல்களும் உண்டு.

07. பேசுபவர்களை உற்றுக் கவனித்தோமானால் கொஞ்சம் பைத்தியம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது இரண்டிலுமே.. தேமே என்று இருந்துவிட்டு கடைசியில் கைதட்டிவிட்டு போய்விடுவது நல்லது.

06. இரண்டு மீட்டிங்குமே யாரோ ஒருத்தரின் பொழுதுபோக்குக்காகவே கூட்டப்படுகிறது. அவர் தன் சாதனைகளாக கருதுவதை பிறருக்கு விளக்கவே இந்தப்பாடு.

05. அல்லக்கைகள் சப்போர்ட் இரண்டுக்குமே ரொம்ப அவசியம்.

04. இரண்டிலுமே கேட்டுக் கொண்டிருப்பவர்கள் தூங்கிவிடும் அபாயம் இருக்கிறது. குறைந்தபட்சம் கொட்டாவி நிச்சயம்.

03. எப்போதாவது அதிசயமாய் இங்கே திட்டமிடல், அங்கே தேர்தல் பிரச்சாரம் என நடத்தப்படும் மீட்டிங்குகளின் போது பேசுபவர்கள் கேட்பவர்களிடம் பணிந்து செல்வதும் உண்டு.

02. வாய்ஜாலம் மிக்கவர்கள் முன்னேற மிக நல்ல வாய்ப்பாக இருப்பது இவ்வாறான மீட்டிங்குகளே.

01. நோக்கம் துளியளவும் பிரயோஜனம் உள்ளதா என்றால், ஊஹூம்.. ஸாரி, இரண்டிலுமே.

37 comments:

சென்ஷி said...

//06. இரண்டு மீட்டிங்குமே யாரோ ஒருத்தரின் பொழுதுபோக்குக்காகவே கூட்டப்படுகிறது. அவர் தன் சாதனைகளாக கருதுவதை பிறருக்கு விளக்கவே இந்தப்பாடு//

LOL :))))

Cable Sankar said...

மீட்டிங்க்கு வந்து பின்னாடியோ.. அல்லது சைடிலோ தூங்குபவர்களை பற்றி சொல்லாததை.. நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

முரளிகண்ணன் said...

வழக் கலக்

மங்களூர் சிவா said...

இதுக்குதான் ஆபீஸ் மீட்டிங்னாலே முடிஞ்சவரைக்கும் எஸ்ஸாகீடறது
:))

ghost said...

06. இரண்டு மீட்டிங்குமே யாரோ ஒருத்தரின் பொழுதுபோக்குக்காகவே கூட்டப்படுகிறது. அவர் தன் சாதனைகளாக கருதுவதை பிறருக்கு விளக்கவே இந்தப்பாடு.
04. இரண்டிலுமே கேட்டுக் கொண்டிருப்பவர்கள் தூங்கிவிடும் அபாயம் இருக்கிறது. குறைந்தபட்சம் கொட்டாவி நிச்சயம்.
01. நோக்கம் துளியளவும் பிரயோஜனம் உள்ளதா என்றால், ஊஹூம்.. ஸாரி, இரண்டிலுமே

//ஆரம்பிச்சுட்டாங்கய்யா, அடுத்த பத்து.//

ரூம் போட்டு யோசிப்பீங்களோ?

ஜானி வாக்கர் said...

1) அரசியல் மீட்டிங் போனா சமயத்துல பைசா கெடைக்கும், ஆஃபீஸ் மீட்டிங் போலனா மெமோ கெடைக்கும்.

2) அரசியல் மீட்டிங் ல யாரும் நம்ம கருத்த கேக்க மாட்டாங்க. ஆஃபீஸ் மீட்டிங் ல கடமைக்கு நம்ம கருத்த கேட்டாலும் கேப்பாங்க.

நர்சிம் said...

//07. பேசுபவர்களை உற்றுக் கவனித்தோமானால் கொஞ்சம் பைத்தியம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது இரண்டிலுமே.. தேமே என்று இருந்துவிட்டு கடைசியில் கைதட்டிவிட்டு போய்விடுவது நல்லது.//

‘நச்’சத்திரம்.

கதிர் - ஈரோடு said...

//01. நோக்கம் துளியளவும் பிரயோஜனம் உள்ளதா என்றால், ஊஹூம்.. ஸாரி, இரண்டிலுமே. //

ஹி..ஹி...

உண்மைய சொல்லாதீங்க

அ.மு.செய்யது said...

வயசானவங்கள கூப்பிட்டா வரமாட்டேங்குறாங்குளேன்னு, என்ன மாதிரி சின்ன பசங்கள குண்டு கட்டா அள்ளிட்டு போயி, மீட்டிங் ரூம்ல போட்டு,கான் கால்ல,

"ஹாய் திஸ் இஸ் ஆப்ஷோர்" என்று சொல்லும் போது,எவ்வளவு காண்டாகும்..??

பிரபாகர் said...

நண்பரே, ஒரு முக்கியமான விஷயத்தை விட்டுவிட்டீர்கள்... சரக்கடிச்சுட்டுத்தான் அரசியல் மீட்டிங்குக்கு போகனும், ஆபிஸுக்கு முடியாது... ஹி.. ஹி...

பிரபாகர்.

நாஞ்சில் நாதம் said...

தல சூப்பர்.

☀நான் ஆதவன்☀ said...

:))

ஸ்ரீமதி said...

:)))))))))

தராசு said...

தல,

ஆபீஸ் மீட்டிங் எப்ப முடியும்னு தெரியும், ஆனா அரசியல் மீட்டிங்.....

ஆயில்யன் said...

/இங்கே பிஸ்கெட்ஸ், டீ. சமயங்களில் மிரட்டல்களும் உண்டு.///

அதே மேரி பிஸ்கட் தானா??? :(

ஆயில்யன் said...

//நோக்கம் துளியளவும் பிரயோஜனம் உள்ளதா என்றால், ஊஹூம்.. ஸாரி, இரண்டிலுமே. ///

ரியலி :((

ஒரு எண்டெர்டெயின்மெண்ட் ரேஞ்சுக்கு இருந்தாலும் கூட சாதிக்க வேண்டிய விசயங்களை பத்தி சாயம் போற அளவுக்கு அலசமாட்டாங்களா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

அறிவிலி said...

இது ரெண்டுக்கும் கம்பேர் பண்ணிணா பதிவர்கள் கூட்டம் பெட்டர், இல்ல?

Truth said...

//01. நோக்கம் துளியளவும் பிரயோஜனம் உள்ளதா என்றால், ஊஹூம்.. ஸாரி, இரண்டிலுமே.

ரொம்பச் சரி :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

:))))))))

அ.மு.செய்யது said...
வயசானவங்கள கூப்பிட்டா வரமாட்டேங்குறாங்குளேன்னு, என்ன மாதிரி சின்ன பசங்கள குண்டு கட்டா அள்ளிட்டு போயி, மீட்டிங் ரூம்ல போட்டு,கான் கால்ல, //

இதுல ஏதோ ஒரு உள்குத்து இருக்குதே :))))))

அ.மு.செய்யது said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

இதுல ஏதோ ஒரு உள்குத்து இருக்குதே :)))))) //

ஆதிய நான் வம்புக்கே இழுக்கலியே !! ஏங்க ??

பரிசல்காரன் said...

முக்கியமான இன்னொரு பாய்ண்ட் இரண்டு மீட்டிங்கிலுமே மீட்டிங் முடிந்தபின், மீட்டிங்கில் பேசப்பட்ட விஷயத்தை மீட்டிங்கில் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் ஆஃப் த ரெகார்டாகப் பேசுவது மிக ஸ்வாரஸ்யமாக இருக்கும்.

எ.கா:-

அரசியல்: போன எலக்‌ஷன்ல இப்படித்தான் சொன்னான், அப்புறம் என்னத்தக் கிழிச்சான்னு தெரியாதா..

ஆஃபீஸ்: போன வருஷமும் இப்படித்தான் சொன்னாங்க.. இன்க்ரிமெண்ட் டைம் வந்தப்ப அதப்பத்தி பேச்சையே காணோமே..

கார்ல்ஸ்பெர்க் said...

/இங்கே பிஸ்கெட்ஸ், டீ/

- குடுத்து வச்சவங்க.. எங்க கம்பெனி'ல அது கூட கிடையாது..

/இரண்டிலுமே கேட்டுக் கொண்டிருப்பவர்கள் தூங்கிவிடும் அபாயம் இருக்கிறது. குறைந்தபட்சம் கொட்டாவி நிச்சயம்/

- இதான் நம்ம ஏரியா..

/நோக்கம் துளியளவும் பிரயோஜனம் உள்ளதா என்றால், ஊஹூம்.. ஸாரி, இரண்டிலுமே/

- நோக்கம் என்ன மண்ணாங்கட்டியா இருந்தா நமக்கு என்ன'ணா?எப்படியும் ஒரு அரை மணி நேரம் டைம் பாஸ் ஆனா சரிதான்னு நானெல்லாம் கேளம்பிடுவேன்ப்பா.. யாரு உட்கார்ந்து கோடிங் எல்லாம் பண்ணிட்டு இருக்குறது??

ச்சின்னப் பையன் said...

வழக் கலக்

ராம்ஜி.யாஹூ said...

நான் உங்கள் கருத்தில் இருந்து சற்று மாறு படுகிறேன்.

என் வாழ்வில் ரசனை மிக்க அரசியல் மீட்டிங்குகள் கேட்டு இருக்கேன்.

வைகோ, காளிமுத்து, தீப்பொறி ஆறுமுகம், திருச்சி சிவா, விடுதலை விரும்பி , கலைஞர் , வாஜ்பாயே போண்டோரின் மீட்டிங்குகள் என்றுமே சுவை யானவை.

என்ன வைகோ, கலைஞர் பேச்சுக்கு முன்னாள் இருபது ஒன்றிய செயலார்க்ள, மாவட்டங்கள் (கங்கைகொண்டான் கருப்பையா, பத்தமடை பரமசிவம், பொதுக்குழு உறுப்பினர் அண்ணன் ஆவுடைபப்பன், மாமா டி பி எம் மைடீன்கான போன்ற கழஅகத்தின் மூத்த முன்னோடிகள், செயல் மறவர்கள் ) பேசுவார்கள், அந்த பேச்சை தவிர்த்து இறுதியில் கிடைக்கும் சிறப்புரை இருக்கே.

அதுவும் தமிழ்நாட்டில் சிறப்பான இடங்கள் உள்ளன, மயிலை மாங்கொல்லை, மாம்பலம் அரங்கநாதன் சுரங்க பாதை, சிண்டடாரிப்பெட்டை, புல்லா அவின்யு , தஞ்சை வெண்ணை தாளி திடல், திருச்சி வெல்ல மண்டி ரோடு, சேலம் four ரோடு, மதுரை மேல ஆவணி வீதி முக்கு, விளக்கு தூண் முக்கு, கல்பாலம், தமுக்கம் மைதானம், நாகர்கோயில் நாகராஜா திடல், நெல்லை டவுன் தேரடி திடல், பாளை மார்க்கட் திடல், அம்பை ரயில்வே கேட் அருகில், வீ கே புரம் மூணு லாம்பு திடல்...

இணைய தள காலத்தில் கூட வைகோவின் அரசியல் பேச்சும் கலைஞரின் அரசியல் உரையும் செவிக்கு தெவிட்டாத இன்பம் அளிப்பவை.

எனக்கு கல்லூரி நாட்களில் தமிழ், வாசிப்பு மீது ஆர்வம் வர கூட வைகோ, விடுதலை விரும்பி, கலைஞர் போன்றோர் காரணம் என்பேன்.

S.Gnanasekar Somasundaram said...

ஆபிஸ் மீட்டிங்குக்கும், அரசியல் மீட்டிங்குக்கும் ஒன்னுதாங்க (அரசியல்) அங்கேயும் கை தட்டுவாங்க (ஆபிஸ்) இங்கேயும் கை தட்டுவாங்க அங்க கேள்ளி கேட்டா அடி உதை கொடுப்பாங்க இங்க கேள்ளி கேட்டா வேலையைவுட்டு தூக்குவாங்க...

அன்புடன் அருணா said...

இந்தப் பதிவை உங்க டேமேஜர்கிட்டே காட்டியாச்சா??

அத்திரி said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.நல்லாயிருக்கு.............

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி சென்ஷி.!
நன்றி கேபிள்.! ((படத்தை முழுசாப்பார்த்துட்டு விமர்சனம் எழுதுங்கையா.. அதான் எழுதிருக்கேன்ல)

நன்றி முரளி.!
நன்றி கோஸ்ட்.!
நன்றி ஜானி.! (நான் ஒற்றுமைகளை மட்டுமே பட்டியலிட்டிருப்பதைக் கவனிக்கவும்)

நன்றி நர்சிம்.!
நன்றி கதிர்.!
நன்றி செய்யது.!
நன்றி பிரபாகர்.! (ஹிஹி)

நன்றி நாஞ்சில்.!
நன்றி ஆதவன்.!
நன்றி ஸ்ரீமதி.!
நன்றி தராசு.! (யோவ் வெண்ணை.! ரெண்ண்டுலயுமே எப்ப ஆரம்பிப்பாங்க, எப்ப முடிப்பாய்ங்கன்னு தெரியாது என்பதுதான் சரி.. ஒரு பாயிண்ட் போச்சேன்னு நானே நினைக்கிறேன். இவுரு என்னடான்னா ஆபீஸ்ல நேரம் தெரியும்கிறாரு..)

நன்றி ஆயில்யன்.! (சேம் பிளட்)

நன்றி அறிவிலி.! (ட்ரூத்)

நன்றி ட்ரூத்.!
நன்றி பரிசல்.! (கரெக்டுதான்)

நன்றி செய்யது.!
நன்றி அமித்துஅம்மா.!
நன்றி கார்ல்ஸ்.!
நன்றி சின்னவர்.!
நன்றி ராம்ஜி.! (இது நகைப்புக்காக எழுதப்பட்டது தோழர். அப்போ ஆபீஸ் மீட்டிங்குகளை எழுதியது நிஜம்னா நினைக்குறீங்க.. அவ்வ்வ்வ்வ்வ்வ்..)

நன்றி ஞானசேகர்.!
நன்றி அருணா.! (ஏன் இப்படி கொலவெறி?)

நன்றி அத்திரி.!

Anonymous said...

சூப்பர்

பீர் | Peer said...

அசத்தல்,

ஆஃபிஸ்ல பிட்சா கிடைக்கும்,
அங்க பிஞ்ச செருப்பு கிடைக்கும.

ஆஃபிஸ் மீட்டிங் மினிட்ஸ் யாராவது ஒருவர் எழுதணும், யாரும் படிக்க மாட்டாங்க.
அங்க பத்திரிக்கைல எழுதுறத எல்லோரும் படிப்பாங்க.

டம்பி மேவீ said...

"05. அல்லக்கைகள் சப்போர்ட் இரண்டுக்குமே ரொம்ப அவசியம்."இது தான் டாப் வாத்தியாரே

தமிழ்ப்பறவை said...

:-)த்தேன்

பட்டிக்காட்டான்.. said...

கலக்கல்..

//.. வயசானவங்கள கூப்பிட்டா வரமாட்டேங்குறாங்குளேன்னு, என்ன மாதிரி சின்ன பசங்கள குண்டு கட்டா அள்ளிட்டு போயி, மீட்டிங் ரூம்ல போட்டு,கான் கால்ல,

"ஹாய் திஸ் இஸ் ஆப்ஷோர்" என்று சொல்லும் போது,எவ்வளவு காண்டாகும்..?? ..//

why blood..?? same blood..!!

எம்.எம்.அப்துல்லா said...

என்னுடைய மொக்கைக்கு நான் மேட்டர் யோசிப்பதே கம்பெனி மீட்டிங்கில்தான்.

:)

theone said...

Sorry for disturbing the flow of comments. still waiting for the 1,00,000 party. we love watching your blog grow. guess who.....

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி வேலன்.!
நன்றி பீர்.! (ஹிஹி..)
நன்றி மேவீ.!
நன்றி தமிழ்பறவை.!
நன்றி பட்டிக்காட்டான்.!
நன்றி அப்துல்லா.!

நன்றி தி ஒன்.! (யாருப்பா இது புண்ணியவான். ஆபீஸ்ல யாராவதா? இல்ல..)

RR said...

வழக்கம் போல கலக்கல்.