Wednesday, August 19, 2009

விடியலைப்போன்ற உன் அழகுஒரு மத்தாப்பூவைப்போல
நீ செல்லுமிடமெல்லாம்
சிதறிக்கொண்டிருக்கிறது
அழகு.!

**********

காதலின் அழகு உன் முகமென்றால்
காமத்தின் அழகு உன் இதழ்கள்
அதற்குத் தருவதற்காகவும்
இதற்குத் தருவதற்காகவும்
அழகை
தனித்தனியே சேமித்துவைத்திருக்கிறாய்

**********

உன் அழகு
ஒரு விடியலைப்போல
புலர்ந்துகொண்டேயிருக்கிறது
நான்
ஒரு அதிகாலைப்பறவைபோல
பறந்துகொண்டேயிருக்கிறேன்

**********

காலத்திலிருந்தும்
இந்தக் காற்றிலிருந்தும்
உனக்கான அழகை
சேகரித்துக்கொண்டேயிருக்கிறாய்

.

41 comments:

Cable Sankar said...

/காதலின் அழகு உன் முகமென்றால்
காமத்தின் அழகு உன் இதழ்கள்
அதற்குத் தருவதற்காகவும்
இதற்குத் தருவதற்காகவும்
அழகை
தனித்தனியே சேமித்துவைத்திருக்கிறாய்
//

லேசான கிளர்ச்சியை உண்டு பண்ணுகிறது கவிதை..

ghost said...

எல்ல கவுஜயும் சூப்பரு

ஸ்ரீமதி said...

Arumai anaiththum.. :))

பரிசல்காரன் said...

நான் சொல்ல வந்ததை கேபிளார் சொல்லிவிட்டார்.

கருத்து சொல்ல வேண்டுமென்றால் -

அந்தக் கவிதையில் ’இதற்கு’ என்பதற்கு பதில் ’அதிலிருந்து’ என்று மாற்றிப் பாருங்கள். ஜிவ்வென்றிருக்கிறது!

கார்க்கி said...

கலக்குறேள்.. ஆனால் இங்கு இதைப் போட்டால் முதல் முத்தம் கடையில் தங்கமணி மேட்டர் போடுவீரா?

"அகநாழிகை" பொன்.வாசுதேவன் said...

ஆதி,
எளிமையான அழகான கவிதைகள். பாசாங்கற்று இயல்பாக எழுதியிருப்பதனாலேயே
இக்கவிதைகள் மனதில் சட்டென பற்றிக் கொள்கின்றன.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

துபாய் ராஜா said...

அனைத்தும் அருமை.

//உன் அழகு
ஒரு விடியலைப்போல
புலர்ந்துகொண்டேயிருக்கிறது
நான்
ஒரு அதிகாலைப்பறவைபோல
பறந்துகொண்டேயிருக்கிறேன்//

அனைத்திலும் அருமை.

Kalyani Suresh said...

காலத்திலிருந்தும்இந்தக் காற்றிலிருந்தும் உனக்கான அழகைசேகரித்துக்கொண்டேயிருக்கிறாய்
.

Chumma Nachunu irukku nanba

நர்சிம் said...

ரைட்டு..ரைட்டு..

//அகநாழிகை" பொன்.வாசுதேவன் said...
ஆதி,
எளிமையான அழகான கவிதைகள். பாசாங்கற்று இயல்பாக எழுதியிருப்பதனாலேயே
இக்கவிதைகள் மனதில் சட்டென பற்றிக் கொள்கின்றன.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
//

இன்னும் என்ன வேண்டும் ஆதி ??? கலக்குங்க.

ஜோதி said...

//ஒரு மத்தாப்பூவைப்போலநீ செல்லுமிடமெல்லாம்சிதறிக்கொண்டிருக்கிறது//
சிம்பாலிக்கா ஏதோ சொல்ர மாதிர தெரியுது

வனம் said...

வணக்கம் ஆதி

கலக்குறீங்க...........

இராஜராஜன்

ஜோதி said...

உன் அழகு ஒரு விடியலைப்போல புலர்ந்துகொண்டேயிருக்கிறதுநான் ஒரு அதிகாலைப்பறவைபோலபறந்துகொண்டேயிருக்கிறேன்

அழகு கவிதை

அப்புறம் ஏன் பறந்து போரிங்க :(

லவ்டேல் மேடி said...

// உன் அழகு
ஒரு விடியலைப்போல
புலர்ந்துகொண்டேயிருக்கிறது
நான்
ஒரு அதிகாலைப்பறவைபோல
பறந்துகொண்டேயிருக்கிறேன் //நல்ல ரசனை....!! அழகு......

குசும்பன் said...
This comment has been removed by the author.
குசும்பன் said...

//“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
//

இன்னும் என்ன வேண்டும் ஆதி ??? கலக்குங்க. //

மிக்சிங்குக்கு ஒரு 7அப் வேண்டும் வந்தா கலக்கிடலாம்!

இப்படிக்கு
ஆதி மனசாட்சி

குசும்பன் said...

ஆதியின் ரசிகைகள் பார்க்க கூடாத பதிவு

http://kusumbuonly.blogspot.com/2009/08/blog-post_8664.html

அ.மு.செய்யது said...

காதலும் ரசனையும் சரியான ப்ரோபோஷனில் இயல்பாக வந்திருக்கிறது.

உங்களுடைய பன்முகங்களில் கவிதை முகமும் குறைவில்லாமல்..!!

( Voted )

நையாண்டி நைனா said...

வட போச்சே...

கொஞ்சம் இந்த பக்கத்துக்கும் விசிட் கொடுங்க தல.

Anonymous said...

நீங்க கவுஞர்ன்னு தெரியாமப் போச்சே இவ்வளவு நாளா? அடடா!! காதல்தான் உங்க கவுஜைக்கு ஜப்ஜெக்டா?

நானும் குஜும்பனை மாதிரி ஒரு பதிவு போட்டுடுறேன் :-)

வணங்காமுடி...! said...

ரொம்ப புடிச்சிருக்கு சகா, மனசுக்கு இதமா இருந்தது.....

கார்ல்ஸ்பெர்க் said...

ப்ரெசென்ட் சார்..
கவிதைக்கு எப்பவுமே அட்டன்டன்ஸ் மட்டும் தான்.. நம்ம அறிவுக்கு இதான் முடிஞ்சது.. ஹி ஹி :))

aravind said...

unga blog thinamum irubathu thadavai varuven antha urimaiyile unga kavithaiya ulta panniten

thirunelveil thane neenga athan ketkaama suttuten

aravind said...

அண்ணா உங்க பேர இந்த பதிவிலும் யூஸ் பண்ணிருக்கேன்

இதுக்கும் என்னை தனியா திட்டாதீங்க

இங்கே பாருங்க

SK said...

அருமை

பரிசல் சொன்ன மாற்றம் ஓஹோ :-)

sakthi said...

அழகான வரிகள் ஆதி அண்ணா

தாரணி பிரியா said...

கவிதையெல்லாம் அழகுங்கோ

குசும்பன் said...

தல இன்னைக்கு எந்த பக்கம் உட்காந்து கவிதை எழுதுனீங்க?
வடக்கே சூலம் என்று ஏதும் போட்டு இருந்துச்சா? எல்லா பக்கத்துலேந்தும் அடிக்கிறாங்க:)

ஆ.முத்துராமலிங்கம் said...

அழகான கவிதைகள்.

பட்டிக்காட்டான்.. said...

ரசனையான கவிதைகள்...

RR said...

நாலு வரியில எவ்வளவு அழகா சொல்லிருகீங்க ஆதி. அனைத்து கவிதைகளும் ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு. வாழ்த்துகள்!

ஆதிமூலகிருஷ்ணன் said...

என்ன நம்ப முடியலை.. இது நம்ப கடைதானா? இல்ல.. கவிதைக்கு இவ்வளவு கூட்டம் வந்திருக்குதேன்னு கேட்டேன்.

ஓகோ.. அதுதான் வந்த மழையும் போயிடுச்சா சரிதான்.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

கேபிள்கோஸ்ட்ஸ்ரீமதிபரிசல்கார்க்கிவாசுதேவன் ராஜாகல்யாணிநர்சிம்ஜோதிராஜராஜன்லவ்டேல் குசும்பன்செய்யதுநைனாஆசிஃப்வணங்காமுடி கார்ல்ஸ்அர்விந்த்எஸ்கேசக்திதாரணிராமலிங்கம் பட்டிக்காட்டான்ஆர்ஆர்.... அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

ஆதிமூலகிருஷ்ணன் said...

கார்க்கி : அந்தக்கடையை மூடிடலாமான்னு பார்க்குறேன், மற்றது எழுத நேரமில்லாதப்போ கவுஜை போட்டு ஒப்பேத்தலாமில்லையா? அப்புறம் ஒரு கடையையே ஒழுங்கா பார்க்க துப்பில்லை நமக்கு.

வாசுதேவன் : சும்மா இருக்குற சங்கை ஊதுற மாதிரி இந்தப்பாராட்டு தேவைதானா இப்போ? இதோ பாருங்க அடுத்த கவிதை எழுத மண்டையை பிறாண்டிக்கொண்டிருக்கிறேன்.

செய்யது : ஏற்கனவே என்முகம் பன் மாதிரிதான் இருக்குதுங்கிறாங்க.. இதுல நீங்க வேறயா?

குசும்பன், நைனா, அரவிந்த் : அனுஜன் மாதிரி புலிவேட்டைக்கு போங்கையா.. என்னை மாதிரி எலியை வேட்டையாடிக்கிட்டு..

ஆசிஃப் : அடடா.. என்னே துர்பாக்கியம். இப்போதான் தெரியுமா நான் கவுஞர்னு? இணைய இதழ்களிலெல்லாம் வருமளவில் நானும் ஒரு பெய்ய்ய்ய கவுஞந்தான்னு சொல்லிக்கிறேன் அண்ணாச்சி. தனிக்கடையே அதற்காக நடாத்திக்கொண்டிருக்கிறோம். என்ன ஒண்ணு சில கடைகளில் தோசை மட்டும்தான்கிற மாதிரி நம்மகடையில் காதல் கவுஜ மட்டும்தான் கிடைக்கும். சைடில் 'கவுஜகள்' லேபிளை கிளிக் செய்து படித்துவிட்டு கவிமடத்தில் நமக்கு சீட் உண்டா என கூறவும். தேவைப்பட்டால் ரோஜாப்பூக்கள்(ஹிஹி) அலங்கரிக்கும் www.muthalmuththam.blogspot.com க்கும் விஸிட் செய்யலாம்.

முரளிகண்ணன் said...

சில பவுலர்கள் பேட்ஸ்மென் சிக்ஸர் அடிக்க வாகா புல்டாஸ் போடுவாங்க. அதுமாதிரி இதுஎதிர்க்கவிதைகளுக்கான அல்வா

தமிழ்ப்பறவை said...

1 மற்றும் 3 பிடித்தது...

நாஞ்சில் நாதம் said...

:))

Silk Smitha said...

$ காதலின் அழகு உன் முகமென்றால்
காமத்தின் அழகு உன் இதழ்கள்
அதற்குத் தருவதற்காகவும்
இதற்குத் தருவதற்காகவும்
அழகை
தனித்தனியே சேமித்துவைத்திருக்கிறாய் $


அருமை

அத்திரி said...

அண்ணே ரசனையான வரிகள்...............

மங்களூர் சிவா said...

அனைத்தும் அருமை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

உன் அழகு ஒரு விடியலைப்போல புலர்ந்துகொண்டேயிருக்கிறதுநான் ஒரு அதிகாலைப்பறவைபோலபறந்துகொண்டேயிருக்கிறேன்

nice

ஊர்சுற்றி said...

கலக்கல்.

கவிஞர் ஆமூகி வாழ்க.