Tuesday, August 25, 2009

சமூக அநீதி (+குறும்படக் கொடுமை)

நான் ஐந்தாம் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது சிறுவர் மலரில் வரும் கதைகளை வாசித்துவிட்டு மாதம் ஒரு முறை நிகழும் மாணவர் மன்றங்களில் கையைக்கட்டிக்கொண்டு கதை சொல்வேன். இதைக்கண்ட ஒரு ஆசிரியர் கொஞ்சம் வலிந்து ஊக்கம் தந்து அதே போன்ற ஒரு கதையை நாடகமாக்கி மேலும் சில மாணவர்களையும் சேர்த்து ஒரு முறை நடிக்க வைத்தார். அப்போதைய நாட்கள் சரியாக நினைவிலில்லை என்பதால் அதுகுறித்து எழுதமுடியவில்லை. ஆனால் அப்போதில்லாத மேடைநடுக்கம் அடுத்தடுத்த வருடங்களிலேயே பற்றிக்கொள்ள ஒன்பதாம் வகுப்பின் போது ஒரு திருக்குறளைக்கூட பிரேயரின் போது சொல்லமுடியாமல் 'பெப்பே பெப்பே' எனுமளவுக்குப் போய்விட்டது.

இவ்வாறான நிலையில் +2 படிக்கையில் ஒரு விபரீதம் நிகழ்ந்தது. கோவில் விழாக்களில் கரகம், லைட் மியூஸிக் என்பன ஜரூராக நடக்கும் வேளைகளில் சில சமயங்களில் சினிமா ஆர்வம் கொண்ட இளைஞர்கள் கூடி நாடகம் நிகழ்த்துவதுமுண்டு. அது போலத்தான் அந்த சம்பவமும் நிகழ்ந்தது. உடன் படிக்கும் நண்பன் ஒருவனின் (தீவிர ரஜினி ரசிகன்) தீராத நடிப்பு, இயக்க தாகத்தால் ஊர் கோவில் திருவிழாவின் போது ஒரு நாடகம் நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டது. அது எங்கள் ஊர் அல்ல. பக்கத்திலிருந்த நண்பனின் ஊர். என் தம்பி 10ம் வகுப்பு படிக்கும் போதே இன்னாரது மகன் என பக்கத்து ஊர்களில் எல்லாம் பிரபலம். என்னை எங்கள் ஊரிலேயே அவ்வளவாக யாருக்கும் தெரியாது (இன்றைக்கும் கூட). அவ்வளவு அமைதி (ஹிஹி).

கதை, வசனம், இயக்கம் மூன்றும் அவனேதான் (மொத்தமே அவ்வளவுதான்). இதுமாதிரி வேலைகள் எல்லாம் ரொம்ப சவாலானது. ஏனெனில் நிறைய தடங்கல்கள், எதிர்ப்புகள் இருக்கும். இரண்டு ஹீரோ சப்ஜெக்ட். ஹீரோயினெல்லாம் கிடையாது. முதலிலேயே நான் நடிக்கமாட்டேன் என்று கூறிவிட்டதால் மேல்வேலைகளுக்கு உதவி செய்துகொண்டிருந்தேன். சம்பவ தினத்துக்கு நான்கு நாட்களுக்கு முன்னமே பக்கத்து கல்யாணமண்டபத்தில் உள்ளுக்குள் பூட்டிக்கொண்டு (அப்போதானே தம்மடிக்கமுடியும்) ரிகர்சல் நடந்துகொண்டிருந்தது. டான்ஸெல்லாம் உண்டு. கதையில் இதற்கென்றே காட்சிகள் வைக்கப்படும் (திணிக்கப்படும்). ஆரம்பத்தில் நண்பர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் காண்பிக்கும் காட்சியில் பின்னணியில் 'பழமுதிர்ச்சோலை..' பாடல் ஒலிக்க டான்ஸ் ஆடுவார்கள். இப்படியாக லவ் ஸாங், சோகப்பாடல் எல்லாம் உண்டு. ஒரு சண்டைக்காட்சி கூட உண்டு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்நிலையில் கடைசி நாள் அன்று இன்னொரு ஹீரோ ஊரில் பாட்டிக்கு உடம்பு சரில்லை என கல்தா கொடுத்துவிட்டு ஓடிவிட்டான். இயக்குனருக்கு கடும் கோபம் பிளஸ் சங்கடம். நாலு பேரு சுத்தி உட்கார்ந்து எனக்கு சோப்பு போட ஆரம்பித்தார்கள் (இல்லைன்னா ரகசியங்கள் வெளியிடப்படும்னு மிரட்டல் வேறு). பிறகு டான்ஸ் காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்ற கண்டிஷன் பேரில் வேறு வழியில்லாமல் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இன்னொரு முக்கியமான விஷயத்தை நீங்கள் கவனிக்கவேண்டும். நான் நடிக்கவிருந்த அந்த இரண்டாவது ஹீரோ வேடம் ஒரு கால் ஊனமுற்ற இளைஞனது பாத்திரம். கதையே அவனது தாழ்வுமனப்பான்மையும், ஊரார் கேலியும் அதனால் அவன் கடைசியில் தற்கொலை செய்துகொள்வதும்தான். அந்த இன்னொரு ஹீரோ (இயக்குனர் நடிப்பது) இவனுக்கு தன்னம்பிக்கை கொடுக்கமுயன்று முடியாமல் கடைசியில் நண்பன் இறந்ததால் அதிர்ச்சியுற்று துக்கத்தில் ஊரைபார்த்து வசனம் பேசிவிட்டு அவனும் மருந்து குடித்து இறந்துவிடுவது போல டிராஜிடி கிளைமாக்ஸ். நாடகத்தின் பெயர் சொல்லலையே.. "சமூக அநீதி" (எப்பூடி?)

எனக்கு சும்மாவே ஞாபக சக்தி அதிகம். அவன் எழுதி வைத்துள்ள வசனங்கள் வேறு நாக்கு சுளுக்கிக் கொள்வது போல இருந்தன. ரிகர்சலுக்கும் நேரமில்லை. மாலை ஏழுமணிக்கு நாடகம் துவங்குகிறது. முகத்திலெல்லாம் அவ்வளவு நடிப்பை காண்பிக்க வேண்டிய அவசியமில்லை. லைட்டிங் லட்சணம் அவ்வளவுதான். மேலும் மக்கள் அமர்ந்திருக்கும் தூரத்தில் யாரோ மேடையில் நிற்பது மட்டும்தான் தெரியும்.

இருப்பினும் மேடையேறியதும் வந்திருந்த கூட்டத்தைப்பார்த்து என் கால்கள் உதற ஆரம்பித்தன. ஏற்கனவே கால் ஊனமுற்ற பாத்திரம் என்பதால் இயல்பாக இருந்ததாக பின்னர் நண்பர்கள் கூறினார்கள். இடையில் பல இடங்களில் "டேய் வசந்த்.." என்பதற்குப்பதிலாக "டேய் மாடசாமி.." (இயக்குனரின் நிஜப்பெயர்)என்று சொதப்பினேன். மக்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

கிளைமாக்ஸ் என்ன ஆச்சுன்னு சொல்லணுமே. நான் சோக வசனம் பேசிவிட்டு பூச்சி மருந்தைக்குடித்துவிட்டு மேடையில் பொத்தென விழுந்தேன். (அப்பாடா நிம்மதி, நம் வேலை முடிந்தது) அடுத்து இயக்குனர் வந்து வீராவேசமாய் வசனம் பேசி சாக வேண்டும். ஆனால் அவனோ யாரிடமும் சொல்லாமல் (இயக்குனரல்லவா?) ஏற்கனவே திரைக்கதையில் இல்லாதபடிக்கு ராஜ்கிரண் போல என்னை மடியில் போட்டு தலையில் முட்டி முட்டி அழுது (எனக்கு வலி தாங்கலை) மக்களைப்பார்த்து "இப்படி ஒரு நல்லவனை கொன்றுவிட்டீர்களே.. பாவிகளா?" என்று தாறுமாறாக வசனம் பேசி கடைசியில் மருந்தைக்குடித்து என் மேலேயே பொத்தென விழுந்தான். நானும் வலிக்காத மாதிரியே எவ்வளவு நேரம்தான் நடிப்பது?. திரை விழுந்ததுதான் தாமதம், அவனை விரட்டி விரட்டி மொத்தி என் ஆத்திரத்தை தணித்துக்கொண்டேன்.

அப்புறம் பின்னொரு நாள் அவன் வீட்டுக்கு சென்ற போது பக்கத்து வீட்டு பெண்கள் "அன்னிக்கு நாடகத்துல நடிச்சானே அந்தப்பையன்தானே இவன்.? காலு நல்லாயிருக்கே? நான் நிசமாவே காலு வெளங்காதுன்னுல்லா நினைச்சேன்.?" என்று புகழ்ந்த போது என் திறமையை நானே மெச்சிக்கொண்டேன்.

அதோடு நம் நடிப்பு பணிகள் மூட்டைகட்டப்பட்டன. பின்னர் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் சமீபத்தில் ஒரு குறும்பட முயற்சியில் இறங்கி அது பாதியில் கைவிடப்பட்டது (கார்க்கி நடித்த 'நீ எங்கே?' விற்குப் பிறகு நடந்தது அந்த அநியாயம்) உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அப்போதுதான் நம் நடிப்புக்கு மீண்டும் வேலை வந்தது. அதில் நடிக்க ஆள் கிடைக்காமல் நானே ஒரு பாத்திரத்தை (திருவோடு மாதிரின்னு வச்சுக்குங்களேன்) ஏற்கும் சூழல் வந்தது. சிட்டியில் வாழும் ஒரு நபர் கிராமத்துக்கு செல்லும் போது பக்கத்துக்கிராம பழைய நண்பனை சந்திப்பது போல காட்சி. அந்தப் படம் டிராப் செய்யப்பட்டதால் (ஹிஹி.. ஃபைனான்ஸ் பிரச்சினை) அந்தக்காட்சி மட்டும் எடிட் செய்து தரப்படுகிறது. அந்த நடிப்பு லட்சணத்தை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். (படத்தின் முழுக்கதையையும் சொன்னால் யாரும் சினிமாக்காரர்கள் திருடிவிடும் ஆபத்திருப்பதால் கதையை சொல்லமுடியாத நிலையில் இருக்கிறோம். ஸாரி..)
.

பின்குறிப்பு :

*இந்த நடிப்புக்கு யாராவது அவார்டு கொடுப்பதாக இருந்தால் மெயிலில் முன்னனுமதி வாங்கிக்கொள்ளவும்.

*படத்தின் ஸ்கிரீன் ஷாட்ஸ் எடுத்து கலாய்க்க கண்டிப்பாக குசும்பனுக்கு அனுமதி கிடையாது.

.

108 comments:

ஆதிமூலகிருஷ்ணன் said...

அவசரத்தில் எடிட் செய்யப்பட்டதால் எடிட்டிங் பற்றி வரும் விமர்சனங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

துளசி கோபால் said...

யாருப்பா கேமெரா?

அட்டகாசமா இருக்கு. அதுவும் அந்த வீட்டுத் தூண்....அபாரம்.

அவார்டு ஃபங்கஷனை எங்கே வைச்சுக்கலாம்?

Anonymous said...

//*படத்தின் ஸ்கிரீன் ஷாட்ஸ் எடுத்து கலாய்க்க கண்டிப்பாக குசும்பனுக்கு அனுமதி கிடையாது.//
எங்கப்பன் குதிர்ல இல்லன்னு நீங்களே எடுத்துக்குடுத்தா என்னதாம் பண்ணுவாரு குசும்பரும்.

ஆயில்யன் said...

அட பதிவுலகினை அடுத்த கட்ட வீடியோ பதிவுகள் தளத்திற்கு அலேக்கா தூக்கி போகும் முயற்சிகளாக தெரிகிறதே வாழ்த்துக்கள் :)

ஆயில்யன் said...

//படத்தின் ஸ்கிரீன் ஷாட்ஸ் எடுத்து கலாய்க்க கண்டிப்பாக குசும்பனுக்கு அனுமதி கிடையாது.//


குசும்பா படத்தின் ஸ்கீரின் ஷாட்க்கு அனுமதி கிடையாதாம் வீடியோவை யூஸ் பண்ணிக்கோங்க!!!! :)))

அ.மு.செய்யது said...

சும்மா ரவி.கே.சந்திரன் ரேஞ்சுக்கு கேமிராவ சுழல விட்டிருக்கீங்க....

பின்னணி இசை குழந்தைகள் சத்தம் அபாரம்....எங்கேயோ போயிட்டீங்க..

குறும்பட குழுவினருக்கு வாழ்த்துக்கள் ..?!?!?!?!?!?!??

ஸ்வாமி ஓம்கார் said...

அருமையான குறும்படம்.

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

பாதி வரைந்த ஓவியம் போல பிற பகுதிகளை பார்வையாளரே யூகிக்க விட்டுவிடும் யுக்தி அருமை ;)

உங்களை போன்றவர்களுக்கு முதலில் சமூகம் அநீதியைத்தான் செய்ய நினைக்கும். நீங்கள் குறும்படம் மூலம் முந்திக்கொள்வீர்கள் என நினைக்கிறேன் :)

வாத்தியார் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டதும் நீங்கள் காட்டும் ரியாக்‌ஷனை ரசித்தேன் :)

ஏதோ என்னால் முடிந்த பாராட்டுக்கள் முதன் முதலாக உங்கள் பதிவில்.

தமிழ்ப்பறவை said...

பதிவு நல்லா இருக்கு...
குறும்படத்தில உங்க கூட பேசுறவர் நல்லா நடிச்சிருக்காரு. 5 ரூபாய் கொடுத்தா 50 ரூபாய்க்கு நடிப்பாரு போல..?!
//*படத்தின் ஸ்கிரீன் ஷாட்ஸ் எடுத்து கலாய்க்க கண்டிப்பாக குசும்பனுக்கு அனுமதி கிடையாது.//
அவரு பொங்கலுக்கே வெடி வெடிக்கிற மனுசன், அவர்கிட்டப் போய்...

Cable Sankar said...

என்னன்னவோ சொல்லாமென ஆரம்பித்தால் சுவாமி ஓம்கார் பின்னி பெடலெடுத்துவிட்டார்... :)

நடிப்புக்கு, திரைகதை வசனத்துக்கும், இப்படத்தை தயாரித்த, அப்துலலா, நர்சிம், பரிசல் ஆகியோருக்கு நிறைய விருதுகள் கொடுக்க ஆசைபடுவதால்.. உங்களின் மின்னஞ்சலுக்கு மெயிலிடுகிறேன்.

நாஞ்சில் நாதம் said...

:))

பரிசல்காரன் said...

ஸ்பீக்கர் இல்லாததால் அண்ணாச்சியின் வசனங்களைக் கேட்க முடியவில்லை. மௌனப்படமே அபாரம்!

படம் ரொம்ப ஓடினால் தயாரிப்பாளர்களுக்கு என்னா தருவீங்க பாஸூ??

இரும்புத்திரை அரவிந்த் said...

//படத்தின் ஸ்கிரீன் ஷாட்ஸ் எடுத்து கலாய்க்க கண்டிப்பாக குசும்பனுக்கு அனுமதி கிடையாது.//

நானும் நைனாவும் இந்த வேலைய செய்யட்டுமா

ஸ்ரீமதி said...

:))))) வீடியோ ஆப்பீஸ்ல தெரியல....

வால்பையன் said...

கீழே தமிழ் சப்டைட்டில் போட்டிருக்கலாம்!

ஹிஹிஹி
என் பங்குங்கு!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி துளசி.! (தூணுக்கு பக்கத்தில நான் உட்கார்ந்திருந்தேனே.. சிம்பாலிக்கா சொல்றீங்களோ? அவ்வ்..)

நன்றி அம்மிணி.!

நன்றி ஆயில்.! (பரிசல் கவனிக்கவும், என் வலைப்பூ மட்டுமின்றி வலையுலகையே அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளேன் என்பதை அறியவும்.)

நன்றி செய்யது.! (பின்னணி இசை டைட்டிலை பார்த்தீங்கதானே?)

நன்றி ஸ்வாமி.! (முதல் வரவுன்னாலும் சரி காட்டு காட்டிட்டீங்க, அதென்ன வரிக்கு வரி சிரிப்பு? நான் என்ன காமெடி படமா காட்டினேன்? ஹிஹி)

நன்றி தமிழ்பறவை.! (இன்னும் எடிடிங்கில் போன காட்சிகளை பார்க்கவேண்டுமே.! வேணுமானா அதை தனியா போடவா? நாடு தாங்காதுன்னு பார்க்குறேன்)

நன்றி கேபிள்.! (நீங்கள்தான் இயக்குனராயிற்றே.. நீங்கள்தரும் விருதுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அப்படியே கூப்பிட்டு ஒதைக்கலாம்னு பிளானா? ஹை.. சிக்குவோமா?)

நன்றி நாஞ்சில்.!

நன்றி பரிசல்.! ((நேர்ல வருவீங்கள்ல.. அப்ப லம்ப்பா கிடைக்கும்)

நன்றி அர்விந்த்.! (ரூ.999/- செக்குடன் தனி மெயிலுக்கு வரவும்)

நன்றி ஸ்ரீமதி.! (கிரேட் எஸ்கேப்பா?)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி வால்.! (யோவ் அது தெரிஞ்சா.. டைட்டிலே போட்டிருக்க மாட்டோமா? என்ன, ஸ்டைல்னு நினைச்சீங்களா? எப்பிடி போடறதுன்னு தெரியலைய்யா.. ஹிஹி..)

குசும்பன் said...

//நாலு பேரு சுத்தி உட்கார்ந்து எனக்கு சோப்பு போட ஆரம்பித்தார்கள்//

சங்கவிக்கு விஜய் சோப்பு போட்டார் அதில் ஒரு நியாயம் இருந்துச்சு, உங்களுக்கு சோப்பு போட்ட பிரகஸ்பதிங்க யாரு பாஸ்?:))

குசும்பன் said...

//என்று தாறுமாறாக வசனம் பேசி கடைசியில் மருந்தைக்குடித்து என் மேலேயே பொத்தென விழுந்தான்//

பாஸ் நீங்க அவன் மேல விழுவது போல் இருந்திருந்தா அவர் நிலமை ரோட் ரோலரில் நசிங்கிய தக்காளி மாதிரி ஆகி இருக்காது? அப்புறம் எங்க இருந்து இப்படி பதிவு எழுதுவது இன்னேரம் ஜெயில் இருந்திருக்கனும்:)

நாடோடி இலக்கியன் said...

ஆதி,
மீதியும்,சொல்ல வந்த சேதியும் எப்போ?

குசும்பன் said...

ஹா ஹா ஹா ஹா ஏன் சிரிக்கிறேன் தெரியுமா? ஹீரோயின வெச்சு படம் எடுத்தா டிஸ்கசன் செய்வது போல் உங்க கூட எப்படி பரிசல் டிஸ்கசன் செஞ்சு இருப்பாருன்னு யோசிச்சேன் சிரிப்பு வந்துட்டு:))

குசும்பன் said...

டாப் ஆங்கிளில் கேமாரா சுழண்டாலும் வெச்சது விக் தான் என்பது தெரியாத அளவுக்கு பொருத்தமான மேக்கப் ஆதி, அதிலும் வெட்டு அருவா மாதிரி முன்னாடி சுழண்டு விழும் முடி சூப்பர் அருமையான விக்!

அப்புறம் அவரு வீட்டுகாரி எங்க என்று கேட்டதும் உங்கள் உடம்பி உங்களை அறியாமல் வந்த நடுக்கத்தை வெகவாக ரசித்தேன், பாத்திரத்தோட ஒன்றி நடிப்பது என்பது இதுதான்:)))

குசும்பன் said...

ஆதி அவரே நீங்க வருவதை பார்த்துட்டு சேரை தூக்கி உள்ள போட்டார், எங்க ரொம்ப நேரம் மொக்கை போடுவீங்களோன்னு,அப்படியும் விடாம உள்ளே போய் சேரை தூக்கிக்கிட்டு வந்துட்டீங்களே:)))

அப்புறம் உங்க நண்பர் வேலை வேறு ஏதும் பார்க்கிறாரா இல்லையா? ஸ்கூல் உள்ளே போன மாதிரி ஏகப்பட்ட பசங்க சத்தம் அதான் கேட்டேன்:))))

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி இலக்கியன்.! (ஒத்துக்கறேன்.. நீங்க தைரியசாலிதான்)

நன்றி குசும்பன்.! (என்னடா எல்லாரும் பதிவை விட்டு குறும்படத்தையே விமர்சிக்கிறாங்களேனு பார்த்தேன். நீங்களாவது பதிவைப் படிச்சதுக்கு நன்றி.!)

குசும்பன் said...

//காலு நல்லாயிருக்கே? நான் நிசமாவே காலு வெளங்காதுன்னுல்லா நினைச்சேன்.?" //

பாஸ் எதா இருந்தாலும் தப்பாவே நீங்க புரிஞ்சுக்கிறீங்க பாஸ்! அவுங்க சொன்னது ”இந்த பையன் வெளங்காதவன் என்று இல்ல நினைச்சேன்”

குசும்பன் said...
This comment has been removed by the author.
குசும்பன் said...

படம் ரொம்ப ஓடினால் தயாரிப்பாளர்களுக்கு என்னா தருவீங்க பாஸூ??//

பரிசல் ஓடினா ஓடாவிட்டால் என்ற சந்தேகம் எதுக்கு! ஹீரோ ஏற்ற பாத்திரத்தையே தந்துவிடுவோம்:)))

//நானே ஒரு பாத்திரத்தை (திருவோடு மாதிரின்னு வச்சுக்குங்களேன்) //

குசும்பன் said...

//நன்றி குசும்பன்.! (என்னடா எல்லாரும் பதிவை விட்டு குறும்படத்தையே விமர்சிக்கிறாங்களேனு பார்த்தேன். நீங்களாவது பதிவைப் படிச்சதுக்கு நன்றி.!)//

யோவ் இப்ப யாரு உங்களை நன்றி சொல்ல சொன்னா? நான் இன்னும் கமெண்ட் போட்டு முடிக்கவே இல்லை! முதலில் பதிவு, அப்புறம் படம், அப்புறம் பின்னூட்டம் என்று வரிசையா வந்துக்கிட்டு இருக்கேன் ஊடால பூந்து நன்றி சொல்லிக்கிட்டு! இன்னொரு தபா இப்படி நடந்துச்சு டென்சன் ஆயிடுவேன்!

குசும்பன் said...

// இரும்புத்திரை அரவிந்த் said...
நானும் நைனாவும் இந்த வேலைய செய்யட்டுமா//

கார்க்கிய கண் கொண்டு பார்த்ததுக்கே ரெண்டு நாள் பேதி ஆகி கிடந்தேன், இதுல ஆதியை நீங்க குளோசப்பில் பார்க்கனும் என்று ஆசைப்பட்டால் வேறு என்ன சொல்ல முடியும்:)

குசும்பன் said...

// துளசி கோபால் said...
யாருப்பா கேமெரா?

அட்டகாசமா இருக்கு. அதுவும் அந்த வீட்டுத் தூண்....அபாரம்.//

ஆதி இதை விட உங்களை வேறு யாரும் இப்படி நெக்கல் அடிக்க முடியாது:)))

டீச்சர் அது தூண் இல்லை, ஆதியோட கால்:)))

குசும்பன் said...

அதர் ஆப்சன் இல்ல ஆதி, இருந்திருந்தா சாம் ஆண்டர்சன், ரித்தீஸ் இப்படி எல்லாரையும் உங்க கிட்ட மடிப்பிச்சை கேட்க வெச்சு இருக்கலாம்:(((

குசும்பன் said...

ஸ்ரீமதி said...
:))))) வீடியோ ஆப்பீஸ்ல தெரியல....//

அதை எவ்வளோ சந்தோசமாக சொல்லுது பாரேன் இந்த புள்ள!!!

ஆதிமூலகிருஷ்ணன் said...

யோவ்.. போதும்யா போதும். நீங்களே நாப்பதையும் போட்டுட்டு போயிறாதீங்க.. அப்பறமா வந்து பதில் சொல்றேன்.

தமிழ் பிரியன் said...

கலக்கல் வீடியோ பதிவு! மொக்கை என்று எல்லாம் சொல்ல முடியாது.

தமிழ் பிரியன் said...

உங்க நடிப்பு சூப்பர்! (சொன்ன மாதிரி செக் அனுப்பிடுங்க தல... ;-)) )

ஆனா அவர் வீடியோவுக்காக பேசும் தொனி அப்படியே தெரியுது.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

நீங்க பின்குறிப்பா //*படத்தின் ஸ்கிரீன் ஷாட்ஸ் எடுத்து கலாய்க்க கண்டிப்பாக குசும்பனுக்கு அனுமதி கிடையாது.// என்று போட்ருக்கீங்க. நம்ம குசும்பன் என்னடான்ன ஜிடாக் ஸ்டேடஸா "kusumbuonly: இங்க கும்மிக்கு யார் வருகிறீர்கள்??? 100% காமெடி! http://www.aathi-thamira.com/" எல்லாரையும் கும்மியடிக்க கூப்டுட்டு இருக்கார்.

இராம்/Raam said...

//அட பதிவுலகினை அடுத்த கட்ட வீடியோ பதிவுகள் தளத்திற்கு அலேக்கா தூக்கி போகும் முயற்சிகளாக தெரிகிறதே வாழ்த்துக்கள் :)//

ரீப்பிட்டேய்... :)

கார்க்கி said...

என் வளர்ச்சியை தடுக்க நீஙக்ள் எடுத்த முயற்சி தோல்விதான் ஆதி. நீங்க பாக்யராஜ் ஆகல. சேரன் ஆயிட்டிங்க. :))


//அவசரத்தில் எடிட் செய்யப்பட்டதால் எடிட்டிங் பற்றி வரும் விமர்சனங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது//

ஓ. மற்றதெல்லாம் ஆற அமர யோசிச்சு செய்ததா? கதை அருமை. வசனம் சூப்பர். கேமராமேனும் உஙக்ளோடு 90 போட்டு எடுத்தாரா? ஆடிக்க் கொண்டே இருக்கிறார்.

கார்க்கி said...

வீட்டுகாரி என்று சொலும் போது குரலிலும், உடலிலும் லைட்டா ஷேக் காமிச்சதுக்கே ஆஸ்கார் கொடுக்கலாம்ப்பா

கார்க்கி said...

ஹீரோயினுக்காக நேர்முகத் தேர்வில் செய்த பழக்க தோஷம், உங்க நண்பர் காலையும் லைட்டா தடவறீஙக்ளே!! நீங்க பக்கா சினிமாக்கார் ஆயிட்டிங்க சகா

கார்க்கி said...

பேர் போடும் போது, சுடலைக்கும் ஆதிக்கு நடுவே கேப் விட்டு, அவரக்ளுக்கு இடையே விழுந்துவிட்ட இடைவெளிய்யை காட்டும் முயற்சி வாவ்.. உலகத் தரம்..

அட்ங்கொன்னியா.. இப்பதான் என் பேர பார்த்தேன்.. நான் எழுதிய ஸ்கிர்ரிப்ளே இதுவாலே.. முழுசா மாத்தினாலும் படத்த தூக்கி நிறுதுதுவதே விறுவிறுப்பான திரைக்கதைதான்..

சிவாண்ணா கிட்ட சொல்லி அடுத்த மாதம் இதையே போட சொல்லலாமா?

கார்க்கி said...

எல்லாத்துக்கும் யார் யார் பேரோ வருது.. அப்புறம் எப்படி a film by aathi?

ஊர்சுற்றி said...

என்னாது கார்க்கி எடுத்த படத்துக்கு நடிக்க ஆள் கிடைக்கலியா?

நம்மளயெல்லாம் யூஸ் பண்ணிக்கோங்க. நல்லா நடிப்பேங்க! :)))

உங்க நடிப்பை பார்த்துட்டு வந்து அப்புறமா இன்னொரு பின்னூட்டம் போடுறேன்.

ஊர்சுற்றி said...

கலக்கல் போங்க!

வடகரை வேலன் வசனமா... எனக்கு வசனம்தான் ரொம்ப பிடிச்சிருந்தது. சுடலை அவர்களின் டயலாக் டெலிவரி.... ரொம்ப பிரமாதம்ங்க.

இது எந்த ஊரில் நடப்பதாக எடுக்கப்பட்டுள்ளது ஆதி?

ஊர்சுற்றி said...

அந்த கிராமத்து நண்பர் பேசுவது எனது பள்ளிப்பருவ நண்பன் ஒருவன் பேசுவது போலவே இருந்தது. அதே பேச்சு வாடை...! அருமை.

ஜோசப் பால்ராஜ் said...

//படத்தின் ஸ்கிரீன் ஷாட்ஸ் எடுத்து கலாய்க்க கண்டிப்பாக குசும்பனுக்கு அனுமதி கிடையாது//

அவன் பொங்கலுக்கே வெடி போடுறவன், இது தீபாவளி மாதிரில்ல இருக்கு, சும்மாவா விடுவான் .

ஜோசப் பால்ராஜ் said...

//பரிசல்காரன் said...
ஸ்பீக்கர் இல்லாததால் அண்ணாச்சியின் வசனங்களைக் கேட்க முடியவில்லை. மௌனப்படமே அபாரம்!

படம் ரொம்ப ஓடினால் தயாரிப்பாளர்களுக்கு என்னா தருவீங்க பாஸூ??
//

என் ஆர் ஐ டா நீயின்னு சொல்லி எங்கிட்ட படத்துக்கு பைனான்ஸ் பண்ன சொல்லி வாங்குன அமவுண்ட்ட முதல்ல செட்டில் பண்ணுங்க பாஸு

ஜோசப் பால்ராஜ் said...

மிச்சத்த படத்த பார்த்துட்டு வந்து சொல்றேன்.

ஆயில்யன் said...

//குசும்பன் said...

டாப் ஆங்கிளில் கேமாரா சுழண்டாலும் வெச்சது விக் தான் என்பது தெரியாத அளவுக்கு பொருத்தமான மேக்கப் ஆதி, /

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்! :))

ஆயில்யன் said...

//குசும்பன் said...

ஸ்ரீமதி said...
:))))) வீடியோ ஆப்பீஸ்ல தெரியல....//

அதை எவ்வளோ சந்தோசமாக சொல்லுது பாரேன் இந்த புள்ள!!!//

ம்ம் கொடுத்து வைச்ச தங்கச்சி பாக்க முடியல :)))))))))

ஆயில்யன் said...

மீ த 50

ராஜா | KVR said...

ஆதி, அலுவலகத்தில் இருப்பதால் வசனங்கள் கேக்க முடியலை. ரெண்டு பேரோட நடிப்பு ரொம்ப இயல்பா இருக்கு. சினிமாட்டோக்ராஃபி பண்ணவரை தான் தேடுறேன், மனுஷன் ஏன் கேமராவை இந்தச் சுத்துச் சுத்துறாரு? படத்திலே எல்லோரும் ஒவ்வொரு வேலைப் பார்த்திருக்காங்க, டைரக்டரும் நீங்க இல்ல, பொறவு எப்படி இது ஆதி’ஸ் ஃபில்ம்?

கார்ல்ஸ்பெர்க் said...

//மாதம் ஒரு முறை நிகழும் மாணவர் மன்றங்களில் கையைக்கட்டிக்கொண்டு கதை சொல்வேன்.//

-ஓபனிங் சாட்'ஏ அசுர காமெடி போங்க..

//ஒன்பதாம் வகுப்பின் போது ஒரு திருக்குறளைக்கூட பிரேயரின் போது சொல்லமுடியாமல் 'பெப்பே பெப்பே' எனுமளவுக்குப் போய்விட்டது.//

-நம்மளுக்கும் இது மாதிரி நெறைய தடவ நடந்திருக்கு..

//மேலும் மக்கள் அமர்ந்திருக்கும் தூரத்தில் யாரோ மேடையில் நிற்பது மட்டும்தான் தெரியும்.//

-இந்த Distance தான் பல பேர காப்பாத்திட்டு இருக்கு :)

குசும்பன் said...

//ராஜா | KVR said...
ஆதி, அலுவலகத்தில் இருப்பதால் வசனங்கள் கேக்க முடியலை. ரெண்டு பேரோட நடிப்பு ரொம்ப இயல்பா இருக்கு. //

எப்படி ராஜா ஸ்மைலி போடாம பொய் சொல்ல முடியுது!????

கார்ல்ஸ்பெர்க் said...

Video எங்க office'ல ஓபன் ஆக மாட்டேன்குது.. வீட்ல போய் பார்த்துட்டு அப்பறமா மீதி comments..

குசும்பன் said...

ஊர்சுற்றி said...
நண்பன் ஒருவன் பேசுவது போலவே இருந்தது. அதே பேச்சு வாடை...! அருமை.//

பேசும் பொழுது வாடையா? அப்படின்னா ஒரு 90 உள்ளே போய் இருக்கும்:)


//தமிழ் பிரியன் said...
ஆனா அவர் வீடியோவுக்காக பேசும் தொனி அப்படியே தெரியுது.//

தமிழ் அவரு என்ன ஆதி மாதிரி பிறவி நடிகரா, அறிமுகம் பாஸ் கொஞ்சம் அட்ஜெஸ் செஞ்சுக்குங்க:)


//அட்ங்கொன்னியா.. இப்பதான் என் பேர பார்த்தேன்.. நான் எழுதிய ஸ்கிர்ரிப்ளே இதுவாலே//
கார்க்கி பன்னீர் செல்வம் அவரு பேப்பரை பார்த்துதான் அவரு பேரில் அறிக்கை வந்ததே தெரிஞ்சுப்பாராம்:)))

குசும்பன் said...

//கார்ல்ஸ்பெர்க் said...
Video எங்க office'ல ஓபன் ஆக மாட்டேன்குது.. வீட்ல போய் பார்த்துட்டு அப்பறமா மீதி comments..
//

இப்ப இங்க கமெண்ட் போட்டவங்க எல்லாம் என்ன வீடியோவ பார்த்துட்டா கமெண்ட் போடுறாங்க,சும்மா குத்துமதிப்பா ஆதி குறும்படம் என்றாலே மொக்கையா இருக்கும் என்ற நம்பிக்கையில் கொல குத்தா குத்துல அதுமாதிரி உங்க பங்குக்கு ஏதும் டேமேஜ் செய்யுங்க பாஸ்:)

ஜே கே | J K said...

//அட பதிவுலகினை அடுத்த கட்ட வீடியோ பதிவுகள் தளத்திற்கு அலேக்கா தூக்கி போகும் முயற்சிகளாக தெரிகிறதே வாழ்த்துக்கள் :)//

ரீப்பிட்டேய். :)

மஞ்சூர் ராசா said...

ஒலி இல்லாமல் பார்த்தப்போது தெரிந்த ஒரே சிறப்பான அம்சம் கைகடிகாரத்தை க்ளோசப்பில் காட்டியது தான். மற்றப்படி படம் எடுத்த காமிராமேன் இன்னும் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும்)

ஒலியுடன் மாலையில் பார்த்துவிட்டு இன்னும் ஒரு பின்னூட்டம் போடுகிறேன்.

குசும்பனுக்கு நன்றி இந்த பதிவை தனது சாட்டிங்கில் இணைத்துள்ளதற்கு.

ஜே கே | J K said...

//குசும்பன் said...

ஸ்ரீமதி said...
:))))) வீடியோ ஆப்பீஸ்ல தெரியல....//

அதை எவ்வளோ சந்தோசமாக சொல்லுது பாரேன் இந்த புள்ள!!!//

இருக்காதா பின்ன..

Truth said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
அவசரத்தில் எடிட் செய்யப்பட்டதால் எடிட்டிங் பற்றி வரும் விமர்சனங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

சரி ஒகே...

Screenplay - Karki ன்னு போட்டிருக்கீங்க. இந்த படத்துல என்ன screenplay வேண்டி கிடக்கு?

கேமரா யாரு கைல இருந்திச்சு? யாரா இருந்தாலும் சரி. அடுத்த முறை நான் நேருல பாத்தா தர்ம அடி தான். சொல்லிட்டேன்.

RAMYA said...

அருமை ஆதி, இப்போதைக்கு இதுதான் பிறகு வரேன் கதாநாயகரே:))

RAMYA said...

அவசரமா கேக்குறேன் அந்த காமெராமேன் முகவரி தர முடியுமா?
வேறே எதுக்கு பரிசு கொடுக்கத்தான் ஹி ஹி ஹி!!

அண்ணன் வணங்காமுடி said...

ஒலி, ஒளி இரண்டும் அருமை. ஒளிப்பதிவாளர் சில இடத்துல தள்ளடறார். தூணின் இடையும் ஹீரோக்களின் உடையும் அட்டகாசாம். தூண் கட்டைக்கும், ஹீரோவின் பட்டைக்கும் நெறைய செலவாயிருக்கும் போல.

ஆதிமூலகிருஷ்ணன் said...

ரொம்ப நாளைக்கு பிறகு இன்னிக்கு நல்ல யாவாரம் நடக்குதே.! மகிழ்ச்சி.!

குசும்பனுக்கு பதில் பிறகு.

நன்றி தமிழ்பிரியன்.! (எத்தினி தபா சொன்னாலும் புரியாதா, வீடியோ இல்லைங்க.. குறும்படம்)

நன்றி பாலகுமாரன்.! (தகவலுக்கு நன்றி, குசும்பன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்)

நன்றி இராம்.!

நன்றி கார்க்கி.! (எல்லாத்துக்கும் யார் யார் பேரோ வருது.. அப்புறம் எப்படி a film by aathi?// என்னா அப்போ அனுஜன்யாவா வந்து மீஜிக் போட்டுக்குடுத்தது? அப்பிடித்தான்யா போடுவேன்)

நன்றி ஊர்சுற்றி.! (அடுத்த படத்தில் உங்களையும் கம்பெனி கன்சிடர் பண்ணிக்கொள்ளும்)

நன்றி ஜோஸப்.! (படத்தை பார்க்காமத்தான் இந்த கூவு கூவுறீங்களா?)

நன்றி ராஜா.! (ரெண்டு பேரோட நடிப்பு ரொம்ப இயல்பா இருக்கு// நீங்க விஜய் ரசிகராமே.. அப்படியா?)

நன்றி கார்ல்ஸ்.! (விடியோ இல்ல குறும்படம்.. குறும்படம்.!)

நன்றி ஜேகே.!
நன்றி மஞ்சூர்.!

நன்றி ட்ரூத்.! (காமெராமேனா? அது ஒண்ணுதான் டைட்டிலில் நிஜம். படம் பிடித்தவர் என் தம்பி. மத்திய அரசு காவல் பணியில் அதுவும் அதிதீவிரப்படையில்(Commando) உள்ளார். பதிலுக்கு உதைப்பார், பரவாயில்லையா.?)

நன்றி ரம்யா.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி வணங்காமுடி.! (படத்தின் ஒரே செலவையும் கண்டுபிடித்துவிட்டீர்களே.. ஹிஹி..)

ரம்யா : மேலே ட்ரூத்துக்கான பதிலை பார்த்தீர்கள்தானே..

ஊர்சுற்றி said...

கன்னாபின்னான்னு எல்லாரையும் கலாய்க்கும் குசும்பனாரை வன்மையாகக் கண்டிக்கிறேன்... :))))

ஏன்னா ஆ.மூ.கி. Said..

//நன்றி ஊர்சுற்றி.! (அடுத்த படத்தில் உங்களையும் கம்பெனி கன்சிடர் பண்ணிக்கொள்ளும்)// :)))

அப்புறம் ஆதி...
//இது எந்த ஊரில் நடப்பதாக எடுக்கப்பட்டுள்ளது ஆதி?//
இதுக்கு பதில் சொல்லுங்களேன்.

கார்க்கி said...

//ஆதி குறும்படம் என்றாலே மொக்கையா இருக்கும் என்ற நம்பிக்கையில் கொல குத்தா குத்துல//

இது என்ன கேப்புல ? அவரோட முதல் படம் வணிக ரீதியாகவும், விமர்சகர்கள் பார்வையிலும் பெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்ப்டத்தக்கது குசும்பா

ஜானி வாக்கர் said...

அடுத்த J.K ரிதிஷ்னு சொல்ல ஆசையாத்தான் இருக்கு, என்னத்த சொல்லறதது. எதுக்கு இப்பிடி ஒரு கொலை வெறி??


//
பாஸ் எதா இருந்தாலும் தப்பாவே நீங்க புரிஞ்சுக்கிறீங்க பாஸ்! அவுங்க சொன்னது ”இந்த பையன் வெளங்காதவன் என்று இல்ல நினைச்சேன்”//


என்ன இருந்தாலும் எங்கள் தலைவர் டிரௌசரை கண்ணா பின்னாவென்று கிழித்து போட்ட திரு குசும்பனுக்கு அகில உலக ஆதி ரசிகர் மன்றம் சார்பாக கடும் கண்டனங்களை தெரிவித்துகொள்கிறோம்.

ஜானி வாக்கர் said...

//டாப் ஆங்கிளில் கேமாரா சுழண்டாலும் வெச்சது விக் தான் என்பது தெரியாத அளவுக்கு பொருத்தமான மேக்கப் ஆதி, அதிலும் வெட்டு அருவா மாதிரி முன்னாடி சுழண்டு விழும் முடி சூப்பர் அருமையான விக்!

அப்புறம் அவரு வீட்டுகாரி எங்க என்று கேட்டதும் உங்கள் உடம்பி உங்களை அறியாமல் வந்த நடுக்கத்தை வெகவாக ரசித்தேன், பாத்திரத்தோட ஒன்றி நடிப்பது என்பது இதுதான்:)))

//

திரு குசும்பனை பார்த்து சொல்கிறேன், நாங்க அரசியல் நாகரீகம் தெரிந்தவர்கள், இப்படி எங்கள தலைவரை நடு ரோட்டில் வைத்து ஏன் நைய புடைக்கவேண்டும்? தனியாக ரூம் போட்டு ஒரு வாரமோ பத்து நாளோ கும்மிவிட்டு நாகரீகமாக விட்டு விடும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

குசும்பன் said...

//குசும்பனுக்கு பதில் பிறகு.//

ஆதி இது என்னய்யா அக்கிரும்பா இருக்கு ஓவர் டைம் எல்லாம் பார்த்து கும்மி இருக்கேன்யா! பார்த்து போட்டு கொடுங்க ராசா:)

அமுதா கிருஷ்ணா said...

எனக்கு அகில இந்திய ஆதி ரசிகர் மன்ற தலைவி பதவி வேண்டும் இப்பவே சொல்லி புட்டேன்.

நர்சிம் said...

யோவ் ஆதி..டைட்டில்ல துபாய் உரிமம் குசும்பன்ன்னு போடணும்யா அடுத்து..இல்லேன்னா இப்பிடித்தான்

இதுல தயாரிப்பு வேற..

ஜானி வாக்கர் said...

//எனக்கு அகில இந்திய ஆதி ரசிகர் மன்ற தலைவி பதவி வேண்டும் இப்பவே சொல்லி புட்டேன்.//

சரி ரைட்டு வச்சுக்கொங்க அந்த பதவி காலியா தான் இருக்கு ஆனா ஒண்ணு, பாதில பதவி வேணாம்னு போக கூடாது சொல்லிட்டேன்.

குசும்பன் said...

//நர்சிம் said...
August 25, 2009 8:02 PM யோவ் ஆதி..டைட்டில்ல துபாய் உரிமம் குசும்பன்ன்னு போடணும்யா அடுத்து..இல்லேன்னா இப்பிடித்தான்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஆக இன்னொரு குறும்படமும் வருமா அப்ப:(((

வித்யா said...

ரொம்ப நாள் கழிச்சு ஒருத்தர கலாய்க்கிற வாய்ப்பு வந்திருக்கேன்னு ஆர்வமா வந்தா, இங்கன குசும்பன் கிழிச்சு தொங்கவிட்டுட்டாரு. பதிவை விட பின்னூட்டங்கள் சுவாரசியம்:)

Truth said...

'ஆமாம் செல்வம் என்ன பண்றான்'ன்னு வர்ற டயலாகுல அந்த 'ஆமாம்'ன்னு சொல்லும் போது கைய வெச்சு ஆக்ஷன் பண்ணீங்கள்ல அது பிரமாதம். :-)

போர் அடிக்கும் போதெல்லாம் இந்த பதிவுக்கு கமெண்டடிக்க போறேன். :-)

ராஜா | KVR said...

//நன்றி ராஜா.! (ரெண்டு பேரோட நடிப்பு ரொம்ப இயல்பா இருக்கு// நீங்க விஜய் ரசிகராமே.. அப்படியா?)//

உங்களுக்கெல்லாம் குசும்பன் தான் சரியான ஆளு. ஏதோ மனுஷன் கேமரா பார்க்காம கஷ்டப்பட்டு நடிச்சிருக்காரேன்னு பாராட்டினா.... குசும்பா, வாப்பா, வந்து இவர ரவுண்டு கட்டப்பா....

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஜானி.! (தனியாக ரூம் போட்டு ஒரு வாரமோ பத்து நாளோ கும்மிவிட்டு நாகரீகமாக விட்டு விடும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.// அப்படியே கோட்டரை மறந்துட்டீங்க..)

நன்றி அமுதா.! (அதுக்கெல்லாம் பெஸல் அப்ப்ரூவல் வாங்கணும்)

நன்றி நர்சிம்.! (அது சரி)

நன்றி வித்யா.! (ஏன் இப்படி கொலவெறி?)

வெண்பூ said...

ஹி..ஹி.. குறும்படம் பத்தி என்னோட ரெண்டு வார்த்தைகள் உங்க இந்த இடுகை தலைப்போட ரெண்டாவது மற்றும் நான்காவது வார்த்தைகள்...

அப்புறம், துளசி டீச்சரோட கமெண்டு சூப்பரு... :)))

Mahesh said...

ஆஹா... கண்ணுல தண்ணி..

பதிவை விட, படத்தை விட பின்னூட்டங்கள் படிச்சு சிரிச்சு சிரிச்சு....

சரவணகுமரன் said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்... தொடருங்கள், உங்கள் கலை பணியை...

சரவணகுமரன் said...

யாருங்க அந்த கேமராமேன்? ஒரு உரையாடல் காட்சிக்கே, விதவிதமா கோணங்கள் வச்சிருக்காரு...

சரவணகுமரன் said...

ஒரிஜினல் ஸ்கோர் - அனுஜன்யா’வா? எது அந்த பின்னணி இசையா? ரொம்ப எதார்த்தமா இருக்கே :-)

டைட்டில் இசை, யுவன்தானே?

சரவணகுமரன் said...

ஏன் நீங்க பேசுற வசனம், முந்தின வசனத்திற்கு சம்பந்தம் இல்லாத மாதிரி இருக்குது. அதுதான் உங்க ஸ்டைலா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சுடலை இயல்பா பேசறார்.. நேருக்கு நேர் கேமிரா இருக்கும்போது மட்டும் கொஞ்சம் தடுமாற்றம் தெரியுது..
நல்லா இருக்கு குறும்படம்..
:)
கேமராக்காரருக்கு சுத்தி சுத்தி எடுக்க சொல்லி யார் சொன்னது..
மத்தபடி இடம் கோலம் திண்ணை வீட்டுல குழந்தைங்க சத்தம்ன்னு ரொம்ப இயல்பா சூப்பரா இருக்கு பின் புலம்..

வாழ்த்துக்கள் ..

மங்களூர் சிவா said...

/
அதோடு நம் நடிப்பு பணிகள் மூட்டைகட்டப்பட்டன. பின்னர் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் சமீபத்தில் ஒரு குறும்பட முயற்சியில் இறங்கி அது பாதியில் கைவிடப்பட்டது
/
அங்கிள்!

உங்களை அங்கிள்னு கூப்பிட்டா என்னையும் அங்கிள்னு நெனைச்சிக்க போறாங்க பெருசு
:))))))))

மங்களூர் சிவா said...

/
உங்களை போன்றவர்களுக்கு முதலில் சமூகம் அநீதியைத்தான் செய்ய நினைக்கும். நீங்கள் குறும்படம் மூலம் முந்திக்கொள்வீர்கள் என நினைக்கிறேன் :)
/

@ஸ்வாமி ஓம்கார்
சான்ஸே இல்லை
:))))))))

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி வெண்பூ.! (இன்னா நக்கலா.. அடுத்த படத்தில் உங்களுக்கு இருக்குடி ஆப்பு)

நன்றி மகேஷ்.! (அடங்குங்க தல..)

நன்றி குமரன்.! (சுமார் 30 நிமிடம் வரும் உரையாடல் காட்சி 3 நிமிடமாக எடிட் செய்யப்பட்டுள்ளது. அதனால்தான் தொடர்பில்லாமல் இருக்கிறது. வேணும்னா முழுசையும் போட்டுரவா? சரி சரி.. போடலை. இதுக்கெல்லாம் அழக்கூடாது. கண்ணத்தொடச்சுக்கங்க..)

நன்றி முத்துலட்சுமி.! (டிராப் செய்யப்பட்ட ஒரு படத்தின் ஒரு பகுதிதான் மேடம் இது. காமிராவை சுத்திசுத்தி எடுக்கச்சொன்னது வேறு யாருமல்ல .. ஹிஹி.. நாந்தான்)

நன்றி மங்களூர்.! (அடுத்த படம் சரியில்லைன்னா உங்களுக்கும் மொட்டை போடுறதா வேண்டியிருக்கேன்)

அமிர்தவர்ஷினி அம்மா said...

*இந்த நடிப்புக்கு யாராவது அவார்டு கொடுப்பதாக இருந்தால் மெயிலில் முன்னனுமதி வாங்கிக்கொள்ளவும். //

நடிப்பா, அது எங்க இங்க வந்துது, நீங்க மொத்த 3 நிமிசமா ச்சேர்ல தானே உக்காந்துட்டு இருக்கீங்க. நல்லவேளை ஆடியோ கேட்கலை. :))))))))))

அந்த முதல் ட்ராமா காமெடி சூப்பர்.

பட்டிக்காட்டான்.. said...

//.. ஒன்பதாம் வகுப்பின் போது ஒரு திருக்குறளைக்கூட பிரேயரின் போது சொல்லமுடியாமல் 'பெப்பே பெப்பே' ..//

அது என்னமோ தெரியல 9 ம் வகுப்பு வந்தாலே எல்லாம் அமர்ந்து போய்டுது.. என்ன காரணம்ங்க..??

//.. பாட்டிக்கு உடம்பு சரில்லை என கல்தா கொடுத்துவிட்டு ஓடிவிட்டான். ..//

கிரேட் எஸ்கேப்..

//.. டிராப் செய்யப்பட்ட ஒரு படத்தின் ஒரு பகுதிதான் மேடம் இது. காமிராவை சுத்திசுத்தி எடுக்கச்சொன்னது வேறு யாருமல்ல .. ஹிஹி.. நாந்தான் ..//

அதுக்கு என்ன காரணம்னு எனக்கு தெரியும்..

//..படம் ரொம்ப ஓடினால் தயாரிப்பாளர்களுக்கு என்னா தருவீங்க பாஸூ?? ..//

ஓடின படத்த பிடிச்சுட்டு வந்து தருவோம்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

குசும்பன் said...
// துளசி கோபால் said...
யாருப்பா கேமெரா?

அட்டகாசமா இருக்கு. அதுவும் அந்த வீட்டுத் தூண்....அபாரம்.//

ஆதி இதை விட உங்களை வேறு யாரும் இப்படி நெக்கல் அடிக்க முடியாது:)))

டீச்சர் அது தூண் இல்லை, ஆதியோட கால்:)))


:)))))))))))))))))))))))))))))))))

சுவாரஸ்யமான பின்னூட்டங்கள்

பட்டிக்காட்டான்.. said...

:-)

சூரியன் said...

சிரிப்பு மழை -- பின்னூட்டம்தான் ..

எப்படியோ படத்த வெற்றிகரமா ஓட்டிருவீங்க போல

இரா.சிவக்குமரன் said...

அய்யா எனக்கு ஒரு கால்ஷீட் வேணுங்க! எப்ப கிடைக்குங்க? சொன்னீங்கன்னா பூஜை போட ஏற்பாடு பண்ணிருவேனுங்க!!

அன்புடன் அருணா said...

படம் ஆஸ்கர் அவார்டுக்கு நாமினேட் செய்யப் படுகிறதென்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

அறிவிலி said...

ஆதி.... அநத கடைசி சீன்ல சேரை லேசா ஒரு உதை விட்டுட்டு நகர்றீங்க பாருங்க.. அய்யோ.. சான்சே இல்ல. கமர்சியல் ஹீரோவுக்கெல்லாம் வயித்த கலக்கியிருக்கும்.

T.V.Radhakrishnan said...

கடைசியாக வந்த செய்தி...

ஆதியின் பெயர் சிறந்த நடிகருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளதாம்.

அத்திரி said...

சேரில் இருக்கும் அங்கிளுக்கு வயசு என்ன அண்ணே

அத்திரி said...

ஆனாலும் நல்லாத்தான் இருக்குது அண்ணே

அத்திரி said...

100 அடிச்சாச்சு..........அய்யயோ அண்ணே நீங்க நைன்டி தான் தாங்குவீங்களே

அத்திரி said...

வீட்டுக்காரி எங்கன்னு கேட்டதும் ஒரு ரீயாக்சன் காமிக்கிறீங்களே.......சூப்பர் அண்ணன்

சித்து said...

அண்ணே இதென்ன பொக்கிஷம் படத்துக்கு போட்டியா எடுத்ததா???

அனுஜன்யா said...

பதிவு செம்ம செம்ம. அக்மார்க் ஆதி நகைச்சுவை.

குறும்படம் - இசை அட்டகாசம். வசனம் ஓகே. உங்க நடிப்பு தேவலாம். நிச்சயம் சேரனை விட மேல். திரைக்கதை - என்னது கார்க்கியா? அப்ப இப்படித்தான் இருக்கும். இது என்ன லோ பட்ஜெட் படமா? தயாரிப்பாளர்கள் எல்லாம் கஞ்சூஸா?

சரி சரி, ஹிந்தி உரிமைக்கு எவ்வளவு?

அனுஜன்யா

மணிநரேன் said...

பதிவைவிட பின்னூட்டங்கள் மிகுந்த நகைச்சுவையாக இருந்தன.

குறும்படம்...ரொம்பவே எடிட் செய்துவிட்டீர்கள் போல உள்ளது.

"ராஜா" from புலியூரான் said...

கதை , திரைக்கதை , வசனம் , ஒளிப்பதிவு , இயக்கம் இப்டி எல்லாத்துலையும் இது "வில்லு" படத்த முந்திடுசுங்க.....

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அமித்துஅம்மா.! (லேடீஸ்கூட இரக்கம் பார்க்காம கும்முறாங்கப்பா.. நல்ல படம்தான் போலயிருக்குது)

நன்றி பட்டிக்காட்டான்.!
நன்றி சூரியன்.!

நன்றி சிவக்குமரன்.! (சென்னைதானா சொல்லுங்க.. போட்டுருவோம்)

நன்றி அருணா.! (வெளங்கிரும்)

நன்றி அறிவிலி.! (ஹிஹி..)

நன்றி டிவிஆர்.! (அடுத்த ஆப்பு)

நன்றி அத்திரி.! (நடத்துங்க..)

நன்றி சித்து.! (சீரியஸா சொல்லிப்புட்டேன். அந்தப் படத்தோடவெல்லாம் ஒப்பிட்டு என் படத்தை அவமானப்படுத்தாதீங்க..)

நன்றி அனுஜன்.! (டப் பண்ணிடலாமா? மும்பை கலங்கிறாது?)

நன்றி நரேன்.!

நன்றி புலியூரான்.! (கீழப்புலியூரா நமக்கு?)

கெக்கே பிக்குணி said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் ரசிச்சு சிரிச்சேன், சிரிச்சிட்டே இருக்கேன். ஆதி, குசும்பன் (கே, பேரை மாத்துங்கப்பா, ரெண்டெழுத்து சுருக்கம் வைக்கமுடியல), சிரிக்க வைச்சதுக்கு தாங்ஸ். "ஆதி, குறும்படம் சூப்பர்". பின்னூட்டங்கள் எல்லாம் பின்னி எடுத்துட்டாங்க! சான்ஸே இல்லை!

குசும்பன் சார், இவ்வளவு அருமையான படம் எடுத்துருக்காரு ஆதி. ஆதி இப்படியாப்பட்ட படம் எடுத்ததால வலையுலகமே அடுத்த நிலைக்கு நகர்கிறது. இந்த நிலையில, உங்களைக் கூப்பிட்டு வைச்சு ஸ்கிரீன் ஷாட் வச்சு பதிவு போட வேண்டாம் என்று சொல்லியிருந்தும் நீங்கள் வாளா (!) விருப்பது நன்றாக இல்லை.

வலையுலகத்தை இன்னும் அடுத்த அடுத்த அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வது குசும்பனின் கையிலே. அவசரமா, வசனம் வசனமா (Audio) போட்டு டரியல் ஆக்கும்படி குசும்பன் ரசிகர் மன்றம் அமெரிக்கா குறுக்குச் சந்து சார்பா கேட்டுக் கொள்கிறேன்.

கெக்கே பிக்குணி said...

ஒரு வேண்டுதல் தான்! 108!