Thursday, August 27, 2009

வ‌சூல் ம‌ழை பொழிகிற‌து!

காலையில் லேட்டாக எழுந்து அவசர அவசரமாக பேப்பரைப்பார்த்துவிட்டு ரமா கொடுத்த காபியைக் குடித்துவிட்டு ஆ.:பீஸுக்கு கிளம்பிக்கொண்டிருந்தபோது கண்ணனிடமிருந்து போன் வந்தது.

'என்னடா?' என்றேன்.
'பேப்பர் பாத்தியா?'
'பார்த்தேனே, ஏதாவது முக்கியமான விஷயமா? மிஸ் பண்ணிட்டேனா..'

இப்பிடித்தான் பேப்பர் பார்த்துக்கொண்டிருக்கும் அல்லது டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போது டிஸ்கஸ்/இன்பார்ம் பண்ண‌ லைவ்வாக கூப்பிடுவான்.

'ஒண்ணும் இல்ல, கந்தசாமி விளம்பரத்த பாரு..'
மீண்டும் பேப்பரைத்திறந்தேன், விளம்பரத்தைத்தேடி.. பார்த்தேன்.

"இந்தப்படத்தின் சாதனை
கடலுக்குள் கடுகு போட்டு
தேடி கண்டு பிடிப்பதற்கு சமம்"


என்று எழுதியிருந்தார்கள்.
'அதுக்கென்ன இப்போ' என்றேன்.
'இல்ல, என்ன‌ அர்த்த‌ம்னு தெரிஞ்சுக்க‌லாம்னு..'
'க‌ட‌லுக்குள் போட‌ப்ப‌ட்ட‌ க‌டுகை எடுப்ப‌து எவ்வ‌ளவு பெரிய‌ சாத‌னையோ அதற்கு இணையான‌ சாத‌னை என்று அர்த்த‌ம்.'
'கடலுக்குள் போடப்பட்ட கடுகை கண்டுபிடிப்பது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினம் இப்படத்தில் என்ன சாதனை இருக்கிறது என்று கண்டுபிடிப்பதும் என்றுதான் எனக்கு விளங்குது'
'காலைலேயே என்ன‌ வெறுப்பேத்துறியா, ஆ.:பீஸுக்கு கிள‌ம்ப‌லியா இன்னும்?'
'நான் ஏதாவது அறிவுப்பூர்வமா கேட்டால் மட்டும் உனக்கு உடனே கோவம் வந்துருமே, சரி.. என்ன டிபன் பண்ணிருக்கா'
'பொங்கல்' என்று சொல்லிவிட்டு போனை க‌ட் பண்ணினேன்.

நான் சொல்வ‌து ச‌ரியா, இல்லை அவ‌ன் சொல்வ‌து ச‌ரியா என்று நீங்க‌ளே சொல்ல‌லாம். ஆர்வ‌முள்ள‌வ‌ர்க‌ள் கீழ்க்க‌ண்ட‌ கேள்விக‌ளுக்கும் ப‌தில் சொல்ல‌லாம்.

ப‌ட‌ம் வெளியான‌ இர‌ண்டாவ‌து நாளே 'வ‌சூல் ம‌ழை பொழிகிற‌து' என்று விள‌ம்ப‌ர‌ம் செய்கிறார்க‌ள். இத‌ற்கு 'எங்க‌ளுக்கு நிறைய‌ ப‌ண‌ம் கிடைத்திருக்கிற‌து, நீங்க‌ளும் வ‌ந்து ப‌ண‌ம் கொடுங்க‌ள்' என்றுதானே அர்த்த‌ம். ப‌திலாக‌ அத‌ன் உள்ள‌ர்த்த‌மான‌ 'நிறைய‌ கூட்ட‌ம் வ‌ருகிற‌து, ஆக‌வே இது ந‌ல்ல‌ ப‌ட‌ம் போல‌த்தான் தெரிகிற‌து, என‌வே நீங்க‌ளும் வ‌ந்து பாருங்க‌ள்' என்று ஏன் விள‌ம்ப‌ர‌ம் செய்ய‌வ‌தில்லை?

இவ்வ‌ளவு செல‌வு செய்து க‌லைய‌ம்ச‌ம் மிக்க‌ ப‌ட‌ங்க‌ள் எடுப்ப‌வ‌ர்க‌ள் கூட‌ இந்த‌ விள‌ம்ப‌ர‌ வாச‌க‌ங்க‌ளில் க‌வ‌ன‌ம் செலுத்தாம‌ல் மொக்கை ப‌ஞ்ச் வ‌ச‌ன‌ங்க‌ளையும், அதையும் மூன்று வ‌ரிக‌ளுக்கு ஏழு த‌வ‌று என்ற‌ அடிப்ப‌டையிலும் வெளியிடுவ‌து ஏன்? (குறைந்த‌ப‌ட்ச‌ம் அதை ப‌த்திரிகைக‌ள் கூட‌ க‌வ‌னிக்காம‌ல் யாருக்கோ வ‌ந்த‌ விருந்து போல‌ இருப்ப‌து ஏன்?)

உதார‌ணங்கள் :
1.(இரண்டாம் நாள் விளம்பரம்) இதுவறை கன்டிராத மாபெறும் வெற்ரி! அதிற‌டி வெற்றி! அடித‌டி வெற்றி!

2. கற்ப்புக்கு புதிய விளக்கம், தாய்ம்மார்க‌ள் கொன்டாடும் முன்றாவது நாள்!

3.இந்த ஆன்டின் இனையற்ற ஹிட்டு! இளஞர்கள் பேற்றும் 'மிய்யாவ்' பாடள்!

.

34 comments:

ஆதிமூலகிருஷ்ணன் said...

நா ரொம்ப பிசி.. அதான் ரிப்பீட்டு.! ஜாரிங்க..

தாரணி பிரியா said...

//சரி.. என்ன டிபன் பண்ணிருக்கா'
'பொங்கல்' //

சரி என்ன டிபன் பண்ணி இருக்கே ‍ நீங்களும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடதான் எழுதி இருக்கிங்க ஆதீஈஈஈஈ

தாரணி பிரியா said...

//இந்தப்படத்தின் சாதனை
கடலுக்குள் கடுகு போட்டு
தேடி கண்டு பிடிப்பதற்கு சமம்"//

இந்த படத்துல கதையையே கண்டு பிடிக்க முடியலையாம் இதுல நீங்க வேற ஏன் பாஸ் :)

இரும்புத்திரை அரவிந்த் said...

வசூல் மழை இல்லை வசூல் தூறல் கூட கிடையாது

கார்க்கி said...

ஹிஹி.. தசாவாதாரத்துக்கு போட்ட பதிவுதானே?

தமிழ்ப்பறவை said...

’காளை’ படத்தின் விளம்பரம்...
“சிம்புவின் மற்றுமொரு கமர்ஷியல் ஷிட்”...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\கடலுக்குள் போடப்பட்ட கடுகை கண்டுபிடிப்பது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினம் இப்படத்தில் என்ன சாதனை இருக்கிறது என்று கண்டுபிடிப்பதும் என்றுதான் எனக்கு விளங்குது'//

:))

Anonymous said...

இன்னி வரைக்கும் கந்தசாமி பாக்கறதில இருந்து தப்பிச்சுருக்கேன். எத்தனை நாள் தப்பிக்கறேன்னு பாக்கலாம்.

வித்யா said...

\\தாரணி பிரியா said...
August 27, 2009 9:07 AM //சரி.. என்ன டிபன் பண்ணிருக்கா'
'பொங்கல்' //

சரி என்ன டிபன் பண்ணி இருக்கே ‍ நீங்களும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடதான் எழுதி இருக்கிங்க ஆதீஈஈஈஈ \\

ரிப்பீட்டு

சூரியன் said...

"\\கடலுக்குள் போடப்பட்ட கடுகை கண்டுபிடிப்பது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினம் இப்படத்தில் என்ன சாதனை இருக்கிறது என்று கண்டுபிடிப்பதும் என்றுதான் எனக்கு விளங்குது'//

ஆமாசாமி

சூரியன் said...

கற்ப்புக்கு புதிய விளக்கம், தாய்ம்மார்க‌ள் கொன்டாடும் முன்றாவது நாள்!

இது டாப்பூ

ghost said...

"\\கடலுக்குள் போடப்பட்ட கடுகை கண்டுபிடிப்பது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினம் இப்படத்தில் என்ன சாதனை இருக்கிறது என்று கண்டுபிடிப்பதும் என்றுதான் எனக்கு விளங்குது'//

உண்மை தான்

//சரி.. என்ன டிபன் பண்ணிருக்கா'
'பொங்கல்' //

சரி என்ன டிபன் பண்ணி இருக்கே ‍ நீங்களும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடதான் எழுதி இருக்கிங்க ஆதீஈஈஈஈ

ரிபீட்டு

ஸ்ரீமதி said...

:))))))))))))))))

sakthi said...

:)))

ஜானி வாக்கர் said...

கந்தசாமி பத்தி மேலும் மேலும் பேசி கடுப்ப கிளப்பாதீங்க பாஸூ, பேர கேட்டாலே சும்மா பத்திகிட்டு வருது.

கார்ல்ஸ்பெர்க் said...

இதுக்கே இப்படின்னா அப்பறம் எங்க படத்துக்கு போடுற கமெண்ட்ட எல்லாம் என்னன்னு சொல்லுவீங்களோ..

gnani said...

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?

அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

Cable Sankar said...

/ஹிஹி.. தசாவாதாரத்துக்கு போட்ட பதிவுதானே?//

எனக்கு தெரிஞ்சி குருவிக்கோ, வில்லுக்கோ போட்டதுன்னு நினைக்கிறேன். இன்னும் சரியா சொல்லப்போனா தாணுவின் தயாரிப்பில் வெளிவந்து 175 நாளூக்கு மேலாக ஓட்டப்பட்ட சச்சின் திரைப்படத்துக்குன்னு நினைக்கிறேன். கார்க்கி..

அந்த படத்து விளம்பரத்துல ஒரு ஸ்பெஷல் என்னனனா.. தெனம் ஒரு வரி நீ விளக்கு, நான் வெளீச்சம்னு ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு வரி விஜயை பாராட்டி தாணு விளம்பரம் பண்ணுனாரு.. அதுக்கு யோசிச்சதுல ஒரு பத்து பர்செண்ட் படத்துக்கு யோசிச்சிருந்தா படமாவது நிஜமாவே 175 நாள் ஓடியிருக்கும்.. :)

கார்க்கி said...

கேபிளண்ணே,

அந்த ப்டம் பல நியூட்ரல் ரசிகரக்ளுக்கு பிடிச்ச படம். வணீக ரீதியாகவும் தோல்வியில்லை. சூப்பர்ஸ்டாருடன் வெளிவந்தும் தமிழகம் முழுவதும் 100% ஓப்பனிங் கண்ட படம்.

நானும் விஜயை முழுவதுமாக ரசிச்ச ரொம்ப சில படங்களில் அதுவும் ஒன்னு. நீங்க சொல்லும் அளவுக்கு மோசமில்லை :)))

சீக்கிரமே நீங்க படமெடுக்கனும். அதுக்கு எப்படி விளமபரம் செய்றீஙக்ன்னு பார்க்குறேன்

டம்பி மேவீ said...

நொந்தசாமி நொந்தசாமி

டம்பி மேவீ said...

நொந்தசாமி நொந்தசாமி"தாரணி பிரியா said...
//சரி.. என்ன டிபன் பண்ணிருக்கா'
'பொங்கல்' //

சரி என்ன டிபன் பண்ணி இருக்கே ‍ நீங்களும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடதான் எழுதி இருக்கிங்க ஆதீஈஈஈஈ"


பிரபலங்கள் செய்தால் அது எழுது பிழை இல்லை ..... அது புது வகையான தமிழ் எழுது முயற்சி ........

இரா.சிவக்குமரன் said...

.

அ.மு.செய்யது said...

கடைசில சொன்ன 3 விளம்பரங்கள் நம்ம சொள் அலகன் கொடுத்த விளம்பரமா இருக்குமோ !!??!?!?!?

ரெட்மகி said...

சின்ன அம்மிணி said...
August 27, 2009 10:30 AM

இன்னி வரைக்கும் கந்தசாமி பாக்கறதில இருந்து தப்பிச்சுருக்கேன். எத்தனை நாள் தப்பிக்கறேன்னு பாக்கலாம்.
//
என்ன அம்மிணி இப்படி சொல்லிடிங்க...

படத்த பாருங்க....

ஸ்ஸ்ஸூ பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

அ.மு.செய்யது said...

//தாரணி பிரியா said...
//சரி.. என்ன டிபன் பண்ணிருக்கா'
'பொங்கல்' //

சரி என்ன டிபன் பண்ணி இருக்கே ‍ நீங்களும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடதான் எழுதி இருக்கிங்க ஆதீஈஈஈஈ
//

@தாரணி பிரியா
@வித்யா
@

மூன்று பேருமே தப்பு !!!!

////சரி.. என்ன டிபன் பண்ணிருக்கா'//

அப்படின்னு கேள்வி கேட்டது ஆதியோட‌ பிரெண்டு கண்ணன்.

அதுக்கு தான் "பொங்கல்"னு ஆதி பதில் சொல்லியிருக்கார்.

கார்ல்ஸ்பெர்க் said...

//எனக்கு தெரிஞ்சி குருவிக்கோ, வில்லுக்கோ போட்டதுன்னு நினைக்கிறேன். இன்னும் சரியா சொல்லப்போனா தாணுவின் தயாரிப்பில் வெளிவந்து 175 நாளூக்கு மேலாக ஓட்டப்பட்ட சச்சின் திரைப்படத்துக்குன்னு நினைக்கிறேன்//

-கேபிள் அண்ணா,

கோடி கோடியா செலவு பண்ணி, ரெண்டு வருஷம் கஷ்டப்பட்டு எடுத்து ஒரு படம் Flop ஆகுறதுக்கு, நம்ம தலைவர் படம் எவ்வளவோ பரவாயில்ல'னா.. போட்ட முதலாவது பிரச்சனை இல்லாம வந்துடும்.. :)

pappu said...

இவ்வ‌ளவு செல‌வு செய்து க‌லைய‌ம்ச‌ம் மிக்க‌ ப‌ட‌ங்க‌ள் எடுப்ப‌வ‌ர்க‌ள் கூட‌ இந்த‌ விள‌ம்ப‌ர‌ வாச‌க‌ங்க‌ளில் க‌வ‌ன‌ம் செலுத்தாம‌ல் மொக்கை ப‌ஞ்ச் வ‌ச‌ன‌ங்க‌ளையும், அதையும் மூன்று வ‌ரிக‌ளுக்கு ஏழு த‌வ‌று என்ற‌ அடிப்ப‌டையிலும் வெளியிடுவ‌து ஏன்? ///////
கந்தசாமி கலையம்சம் உள்ள படமாண்ணா?

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தாரணி.! (ஏன் இப்பூடி? பாருங்க கீழ எத்தனை ரிப்பீட்டு)

நன்றி அர்விந்த்.! (நான் கந்த சாமியை சொல்லலை, பொதுவாச்சொன்னேன்)

நன்றி கார்க்கி.! (ஹிஹி..)

நன்றி அர்விந்த்.! (ஹாஹா..)

நன்றி முத்துலட்சுமி.!

நன்றி அம்மிணி.! (ஆல் தி பெஸ்ட்)

நன்றி வித்யா.!

நன்றி சூர்யன்.!

நன்றி கோஸ்ட்.!

நன்றி ஸ்ரீமதி.!

நன்றி சக்தி.!

நன்றி ஜானி.! (ஹிஹி)

நன்றி கார்ல்ஸ்.! (புரியலையே..)

நன்றி ஞானி.! (வாழ்த்துகள் ஸார்.!)

நன்றி கேபிள்.! (கார்க்கி சொல்றதுதான் கரெக்ட். இன்னிக்கு வரைக்கும் விஜய் படத்துல எதுவாவது எனக்கு பிடிச்சிருந்ததுன்னா அது சச்சின் மட்டும்தான்)

நன்றி மேவீ.! (அதுசரி)

நன்றி சிவக்குமரன்.! (சும்மா போனா என்ன அர்த்தம்?)

நன்றி செய்யது.! (சொள் அலகன் வால்பையனின் பிரதான வாசகர். கொஞ்சம் கோபக்காரர், ஜாக்கிரதை செய்யது)

நன்றி ரெட்மகி.!

நன்றி பப்பு.! (அதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்குதா? என்ன கொடுமை சார் இது?)

எம்.எம்.அப்துல்லா said...

நடுராத்திரி இரண்டரை மணிக்குகூட நிம்மதியா ஒரு நல்ல பதிவ படிக்கமுடியுதா?? தாங்கல கந்தசாமி தொல்லை.

T.V.Radhakrishnan said...

வசூல் தூறல் கூட கிடையாது

செல்வேந்திரன் said...

ஓஹோ!

" உழவன் " " Uzhavan " said...

கந்தசாமியக் கந்தலாக்க ஒரு குரூப்ப கெளம்பிருக்கு போல :-)

பட்டிக்காட்டான்.. said...

//.. அ.மு.செய்யது said...

//தாரணி பிரியா said...
//சரி.. என்ன டிபன் பண்ணிருக்கா'
'பொங்கல்' //

சரி என்ன டிபன் பண்ணி இருக்கே ‍ நீங்களும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடதான் எழுதி இருக்கிங்க ஆதீஈஈஈஈ
//

@தாரணி பிரியா
@வித்யா
@

மூன்று பேருமே தப்பு !!!!

////சரி.. என்ன டிபன் பண்ணிருக்கா'//

அப்படின்னு கேள்வி கேட்டது ஆதியோட‌ பிரெண்டு கண்ணன்.

அதுக்கு தான் "பொங்கல்"னு ஆதி பதில் சொல்லியிருக்கார். ..//

அண்ணா, அவங்க மூன்று பேரும் சொல்ல வந்தது 'வீட்ல ஆதியண்ணன் தான் சமையல்'னு நினைக்கறேன்..

நாஞ்சில் நாதம் said...

:))