Friday, August 28, 2009

நீ வெறும் பிளாகர்தான்..

என்ன விசேஷமோ தெரியவில்லை, ரமா இன்று பாயாசம் (என்ற பெயரில் ஒன்று) வைத்திருந்தார். மாலை வந்ததும் ஒரு கிளாஸ் தரப்பட்டது. குடித்துவிட்டு சும்மாயிருக்காமல் நான் சொன்ன கமெண்டில் கடுப்பானவர் "நக்கலா பண்றீங்க.. நைட்டுக்கு பால் கிடையாது. இதிலேயே தண்ணி ஊத்தி சுட வச்சு தருவேன். காலி பண்ணிட்டுதான் படுக்கிறீங்க.." வரவர நமக்கும் கொஞ்சம் வாய்க்கொழுப்பு ஜாஸ்தியாயிடுச்சு என்று நினைத்துக்கொண்டேன்.

**********

தங்கமணி, டெக்னிகல், கண்ணன் கதைகள் தலைப்புகளில் பல விஷயங்களை எழுத வைத்திருந்தாலும் நேரமில்லை. அவ்வப்போது வேறு விஷயங்களும் முன்னுரிமையில் வந்துவிடுகின்றன. கண்ணனிடம் புலம்பிக்கொண்டிருந்த போது கொஞ்சம் எரிச்சலில் சொன்னான், "என்னடா ஓவரா பில்ட்அப் பண்றே.. நீ இப்போ எழுதலைன்னு யாராவது அழுதாங்களா என்ன? நேரமிருக்கிறப்போ மெல்ல எழுது.. என்ன அவசரம். இல்லை மொக்கை போடத்தான் நேரமிருக்கிறது என்றால் செய். ஏன் இப்படி புலம்பல்? நீ வெறும்பிளாகர்தான், ஞாபகம் வச்சுக்கோ.." அவன் என்னவோ பிளாகர் என்ற சொல்லை அழுத்திச்சொன்னது போல எனக்குப்பட்டது. வேறெதுவும் அதில் உள்ளர்த்தம் இருக்கும்கிறீங்க..

**********

ஃபாலோயர்கள் எண்ணிக்கை 200ஐ தாண்டி சென்றுகொண்டிருக்கும் வேளையில் ஆதரவளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பார்ந்த நன்றி. (அதையேன் கேட்குறீங்க.. 207ல் பிரேக் அடித்து அப்படியே நின்று வெறுப்பேற்றியது இப்போது தன் பழைய (ஆமை) வேகத்தில் செல்வது மகிழ்ச்சியளிக்கிறது.. ஹிஹி..)

**********

இளவயதில் பிரிந்து, காதலாகி பருவத்தில் தேடியலைந்து காதலியை கண்டடைவதைப்போல அழகான கவிதையாய் மலரும் 'ஏர்டெல் டிஜிடல் டிவி' விளம்பரத்தின் கிளைமாக்ஸ் அதிர வைத்தது. அதுவும் சரிதான், பின்னே.. ஒரே கிளைமாக்ஸை இன்னும் எத்தனை நாட்கள்தான் பார்த்துக்கொண்டிருப்பது. வித்தியாசமான சிந்தனைதான் ரசனை.! அப்படியே சமீபத்தில் கவர்ந்த இன்னொரு விளம்பரம் 'கோஹினூர் ஜாஸ்மின்'. அழகு.!

**********
குட்டிக்கவிதை :

வெட்டுப்பட்ட இடங்களிலெல்லாம்
துளிர்த்துக்கொண்டேயிருக்கும்
முருங்கையைப்போன்றது
உனக்கும் எனக்கும் இடையேயான
காதல்.!

***********

போன பதிவின் கொடும்படத்தை ஸாரி குறும்படத்தை போட்டு கும்முகும்முனு கும்மிவிட்டீர்கள். அது இவ்வளவுக்கும் பாதியில் கைவிடப்பட்ட ஒரு படத்தில் சில காட்சிகள்தான். எடுத்த வரைக்கும் 30 நிமிடத்துக்கு மேல் வருகிறது. முழுதும் போட்டால் உங்கள் கதி என்னவாகும் என்பதை சற்று எண்ணிப்பார்க்கவும். இந்நிலையில் அடுத்த படத்துக்கான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. ஹீரோ கார்க்கிதான் என முடிவாகிவிட்டது. ஒரு முக்கியமான அப்பா காரெக்டர் இருப்பதால் அதற்காக அனுஜன்யா, வடகரை வேலனை அணுகியதில் ரெண்டு பேரும் கடுப்பாகி ஃபோனை ஆஃப் செய்துவிட்டு உட்கார்ந்திருக்கிறார்களாம்.

**********

ஒரு விளம்பரம் :

.

47 comments:

ஆதிமூலகிருஷ்ணன் said...

பின்னூட்ட கயமை.! (ஹிஹி.. மெயில் ஃபாலோ அப்புக்காக..)

துளசி கோபால் said...

நீங்க சொல்லும் அந்த ஏர்டெல் விளம்பரம்....
ஒரு தாத்தா தன்னுடைய பழைய கேர்ள் ஃப்ரண்டைத் தேடி ஒரு தீவுக்குப் போவார். அங்கே வீட்டுக்கு வெளியே தோழியின் துணிகள் காயப்போட்டுருக்கும். அந்த 'பிரமாண்டமான உள் உடுப்பைப் பார்த்துட்டு ஓசைப்படாம ஓடி வந்துருவார்.

இப்படி ஒன்னு ரொம்ப நாளைக்கு முன்னே எங்கூரில் போய்க்கிட்டு இருந்துச்சு.

(எங்கூர்= நியூஸி)

இராம்/Raam said...

/இளவயதில் பிரிந்து, காதலாகி பருவத்தில் தேடியலைந்து காதலியை கண்டடைவதைப்போல அழகான கவிதையாய் மலரும் 'ஏர்டெல் டிஜிடல் டிவி' விளம்பரத்தின் கிளைமாக்ஸ் அதிர வைத்தது. அதுவும் சரிதான், பின்னே.. ஒரே கிளைமாக்ஸை இன்னும் எத்தனை நாட்கள்தான் பார்த்துக்கொண்டிருப்பது. வித்தியாசமான சிந்தனைதான் ரசனை.! அப்படியே சமீபத்தில் கவர்ந்த இன்னொரு விளம்பரம் 'கோஹினூர் ஜாஸ்மின்'. அழகு.!//

youtube'லே இருக்கான்னு தேடி பார்க்கனும்.. :)

டம்பி மேவீ said...

"ஆதிமூலகிருஷ்ணன் said...
பின்னூட்ட கயமை.! (ஹிஹி.. மெயில் ஃபாலோ அப்புக்காக..)"


mudiyala ... mudiyala

kodumai kodumai

டம்பி மேவீ said...

naanum antha airtel ad yai parthen....


kareena kapoor udan neenga irunthaal nalla irukkum...


unga side face photo vukku sema match

டம்பி மேவீ said...

"நீ வெறும்பிளாகர்தான்"unga gathiye ippadi nna .. appo nanga ellam

டம்பி மேவீ said...

enakku followers niraiya irukkanga boss...... naan munnadi nadanthal , pinnadi varavanga ellam en followers than

நர்சிம் said...

நீ ‘வெறும்’ன்ற வார்த்தைய அழுத்திச் சொல்லல இல்ல..விடுங்க.

செல்வேந்திரன் said...

அப்பா வேடத்துக்கு கார்க்கிக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளரைக் கேட்டுப்பார்க்கலாமே?!

முரளிகண்ணன் said...

ஆதி மிக்ஸ்ட் ஊறுகாய்னு ஒரு தலைப்பு வச்சிருந்தீங்களே, இப்போ அதை யூஸ் பண்ணுறதில்லயா?

வால்பையன் said...

அப்போ நானும் வெறும் ப்ளாக்கர் தானா?

கார்க்கி said...

சகாம் அந்த கவின்ஸ் மில்க் விளம்பரம் எப்படி?

அனுஜன்யாவை என் அப்பாவாக போட்டால் என் இமேஜ் டேமேஜ் ஆகுமே? அவருக்கு 65 வயது என்றால் எனக்கு எப்படும் 30ஐ தாண்டிவிட்டது போல் தோன்றும். எனவே பரிசல் அல்லது தராசை கேட்டுப் பார்க்கவும்..

//செல்வேந்திரன் said...
அப்பா வேடத்துக்கு கார்க்கிக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளரைக் கேட்டுப்பார்க்கலாமே//

செல்வா, நீங்க எனக்கு அண்ணன் போலத்தான் இருக்கிங்க. உஙக்ளை எப்படி?

//முரளிகண்ணன் said...
ஆதி மிக்ஸ்ட் ஊறுகாய்னு ஒரு தலைப்பு வச்சிருந்தீங்களே, இப்போ அதை யூஸ் பண்ணுறதில்லயா?//

எண்ணெய் ஊத்தாதிங்க தல. சைடு டிஷ் மட்டும் வச்சிக்கிட்டு நாங்க என்ன செய்றதுன்னு எல்லோரும் காக்டெய்லை மட்டுமே அடிக்கிராங்களாம் :))))

வால்பையன் said...

கார்க்கியின் அப்பாவா நடிக்க சாருவை கேட்டு பார்க்கலாம்!
அதற்கு முன் பார்மால்டிக்கு ரஜினியை ஒருவார்த்தை கேட்டால் போதும், ஓடோடி வந்துவிடுவார்!

பணமும், இந்த தர்றேன், அந்தா தர்றேன்னு இழுத்தடிக்கலாம், அவரும் ஆவியில் இதை எழுதி நமக்கு விளம்பரம் தேடி தருவார்!

எப்படி என் ஐடியா!?

அமிர்தவர்ஷினி அம்மா said...

நக்கலா பண்றீங்க.. நைட்டுக்கு பால் கிடையாது. இதிலேயே தண்ணி ஊத்தி சுட வச்சு தருவேன். காலி பண்ணிட்டுதான் படுக்கிறீங்க. :))))))

அமுதா கிருஷ்ணா said...

பரவாயில்லை ரமா..நானயிருந்தால் பாயாச பாத்திரத்தில் ஒட்டி இருப்பதை தண்ணீர் ஊற்றி கொடுத்து விடுவேன். வாய் கொழுப்புக்காரர்களுக்கு!!!

ஜானி வாக்கர் said...

//ஒரு முக்கியமான அப்பா காரெக்டர் இருப்பதால் அதற்காக அனுஜன்யா, வடகரை வேலனை அணுகியதில் ரெண்டு பேரும் கடுப்பாகி ஃபோனை ஆஃப் செய்துவிட்டு உட்கார்ந்திருக்கிறார்களாம்//

உங்க குறும்படத்த பாத்ததுல இருந்து அவங்களுக்கும் அப்படி ஒரு ஆசை வந்ததுல தப்பு இல்லனு தோணுது. என்ன இருந்தாலும் எல்லோரும் விஜயகாந்த் ஆகமுடியாதுனு அவங்களுக்கு சொல்லுங்க தல

ஜானி வாக்கர் said...

//கார்க்கியின் அப்பாவா நடிக்க சாருவை கேட்டு பார்க்கலாம்!//

வாலு அவர் பாட்டுக்கு இருக்காரு என் அவர இதுல இழுக்கறீங்க. என்ன இருந்தாலும் குறும்படம் ஹிட் ஆக ரஜினிய கேட்டு பாக்கலாம் கார்க்கி அப்பாவ நடிக்க. வந்தா ரஜினிக்கு சினிமா வாழ்க்கைல ஒரு மைல் கல்லா இருக்கும்னு தோணுது.

ஜானி வாக்கர் said...

//எடுத்த வரைக்கும் 30 நிமிடத்துக்கு மேல் வருகிறது. முழுதும் போட்டால் உங்கள் கதி என்னவாகும் என்பதை சற்று எண்ணிப்பார்க்கவும்//

ஆனானப்பட்ட கந்தசாமிய பாத்தே ஒண்ணும் ஆகல, உங்களுது என்ன பிஸ்கோத்து

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி டீச்சர்.! (படிக்கும் போதே இவ்ளோ காமெடியா இருக்கே, பார்த்தா எப்பிடியிருக்கும்?)

நன்றி இராம்.! (நீங்களும் வெளிநாடுதானா?)

நன்றி டம்பி.! (கரீனாவா? ஸ்டூல் போட்டுதான் பக்கத்துல நிக்கணும் நான்.. ஹிஹி)

நன்றி நர்சிம்.! (வேறென்ன பண்றது?)

நன்றி செல்வா.! (அது என்ன பொங்கலு? சே. அது எந்த எழுத்தாளரு?)

நன்றி முரளி.! (ஒரே தலைப்பு போரடிக்குது பாஸ்.

யாருக்கு?

யாருக்கோ..)

நன்றி வால்.! (நீங்க வேணா வெறும் எடுத்துட்டு பெஸல்னு போட்டுக்கோங்களேன்)

நன்றி கார்க்கி.! (பரிசல் எங்கிருந்தாலும் உடனே வரவும். ஒரு ஆள் உங்களை நக்கல் பண்றான்)

நன்றி அமித்து.! (நான் பல்பு வாங்கினா சந்தோஷமா சிரிப்பீங்களே)

நன்றி அமுதா.! (எத்தினி பெர் கிளம்பியிருக்கீங்க இப்படி? ஏற்கனவே வைக்கிறதே தண்ணி மாதிரிதான் இருக்கும். இதுல இன்னும் கொஞ்சம் தண்ணியா.. சரிதான்)

நன்றி ஜானி.! (அதென்னவோ சரிதா.. மூன்று கமெண்டுக்குமே)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஜானி.! (அதென்னவோ சரிதா.. மூன்று கமெண்டுக்குமே)

//

சரிதா இல்லை, சரிதான்.!

புதுகைத் தென்றல் said...

ரசிச்சேன்

ஸ்ரீமதி said...

:)))))))))

அ.மு.செய்யது said...

//ஒரு முக்கியமான அப்பா காரெக்டர் இருப்பதால் அதற்காக அனுஜன்யா, வடகரை வேலனை அணுகியதில் ரெண்டு பேரும் கடுப்பாகி ஃபோனை ஆஃப் செய்துவிட்டு உட்கார்ந்திருக்கிறார்களாம்.
//

ஹா ஹா......

தாரணி பிரியா said...
This comment has been removed by the author.
தாரணி பிரியா said...

hi me the 25th

பட்டிக்காட்டான்.. said...

:-)

தாரணி பிரியா said...

/வரவர நமக்கும்//

தேவையே இல்லாம அந்த ம் எதுக்கு ஆதி. இதுல ரமாவை எல்லாம் கூட்டு சேர்த்த வேண்டாம் :)

என்னையெல்லாம் வெறும் ப்ளாக் ரீடரா இருக்கவே உனக்கு ஏன் இத்தனை லொள்ளுன்னு கேட்கறாங்க‌

ஏர்டெல் எப்பவுமே டாப்தான்

//ஹீரோ கார்க்கிதான் என முடிவாகிவிட்டது. //

இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்த பக்கம் வர கூடாது போல :

அப்பாவி முரு said...

//நீ வெறும் பிளாகர் தான்//

உங்க ச்ச்சீ நம்ம நிறத்தை தான் அப்பிடி சொல்லீட்டாரோ...

☼ வெயிலான் said...

// "என்னடா ஓவரா பில்ட்அப் பண்றே.. நீ இப்போ எழுதலைன்னு யாராவது அழுதாங்களா என்ன? நேரமிருக்கிறப்போ மெல்ல எழுது.. என்ன அவசரம்.//

இப்படி உண்மை பேசும் நண்பர்களையே எப்போதும் உடன் வைத்திருங்கள் :)

எம்.எம்.அப்துல்லா said...

/கொஞ்சம் வாய்க்கொழுப்பு //

என்னாது கொஞ்சமா???

கிர்ர்ர்ர்ர்ர்

எம்.எம்.அப்துல்லா said...

//சமீபத்தில் கவர்ந்த இன்னொரு விளம்பரம் 'கோஹினூர் ஜாஸ்மின்'. அழகு.!

//

விளம்பரம் மட்டும்தான் அழகு :(

கார்ல்ஸ்பெர்க் said...

//அவன் என்னவோ பிளாகர் என்ற சொல்லை அழுத்திச்சொன்னது போல எனக்குப்பட்டது. வேறெதுவும் அதில் உள்ளர்த்தம் இருக்கும்கிறீங்க//

- சே சே.. அண்ணா, இது வெறும் மனப் பிராந்தி தான்..

SK said...

ஹி ஹி ஹி ..

எல்லாரும் ஒரே தலைப்புல எழுதனும்னு ஆசைப்பட்ட நீங்க ஒரே தலைப்பா இருக்கேன்னு பீல் பண்றீங்க :-) ஜூப்பரு

வெங்கிராஜா said...

விளம்பரங்கள் பற்றி எல்லாரும் பதிவு போடுறீங்க... கேட்பரீஸ் விளம்பரம்? (ஆக்சுவலி, இந்திய விளம்பரம் தான் உவ்வே... அயல்நாட்டு கேட்பரீஸ் விளம்பரம் அள்ளுகிறது)
பாயாசம் மேட்டர் சூப்பர். நேத்து அம்மா வச்ச உப்புமாவை பொங்கலான்னு கேட்டதுல இன்னைக்கு காலைல டிபன் கட் ஆயிருச்சு.

மிக்ஸ்டு ஊறுகாய் பற்றி கார்க்கி சொன்னதை ரசித்தேன்!

அத்திரி said...

அண்ணே கலக்கல் கவிதை

Mahesh said...

//வெட்டுப்பட்ட இடங்களிலெல்லாம்
துளிர்த்துக்கொண்டேயிருக்கும்
முருங்கையைப்போன்றது
உனக்கும் எனக்கும் இடையேயான
காதல்.!//

அவ்வளவு வெட்டா??

இந்த 'வெறும்' ப்ளாக்கர், வெல்லம் போட்ட ப்ளாக்கர்... இதெல்லாம் விடுங்க தல... நாம எல்லாம் 'பிரபல' ப்ளாக்கர்க....

கும்க்கி said...

எம்.எம்.அப்துல்லா said...


இதுக்கு ரிப்பீட் மட்டும் போட்டுகுறேன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தென்றல்.!
நன்றி ஸ்ரீமதி.!
நன்றி செய்யது.!

நன்றி பட்டிக்காட்டான்.!
நன்றி தாரணி.!
நன்றி முரு.! (ஒருவேளை அப்படியிருக்குமோ?)

நன்றி வெயிலான்.! (அதான் நீங்க இருக்கீங்களேண்ணே)
நன்றி அப்துல்லா.! (அடல்ட்ஸ் ஒன்லி பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும். ஹிஹி..)

நன்றி கார்ல்ஸ்.!
நன்றி எஸ்கே.!
நன்றி வெங்கி.!
நன்றி அத்திரி.!

நன்றி மகேஷ்.! (ஹிஹி..)
நன்றி கும்கி.! (எப்பிடியிருக்கீங்க பாஸ்?)

கும்க்கி said...

நன்றி கும்கி.! (எப்பிடியிருக்கீங்க பாஸ்?)

ரெம்ப குஷ்டம்..

நல்ல வேளை பேரெல்லாம் நினைவு வெச்சுருக்கிங்க.தேங்ஸ்.

மங்களூர் சிவா said...

/
ஒரு முக்கியமான அப்பா காரெக்டர் இருப்பதால் அதற்காக அனுஜன்யா, வடகரை வேலனை அணுகியதில் ரெண்டு பேரும் கடுப்பாகி ஃபோனை ஆஃப் செய்துவிட்டு உட்கார்ந்திருக்கிறார்களாம்.
/

ஆதி இது 2 மச் யூத்துங்களை போய் அப்பா வேடத்துக்கு :(

மங்களூர் சிவா said...

கார்க்கியவே ஒரு மூனு நாள் தாடி வெச்சி அப்பாவா டபுள் ஆக்ட் பண்ண வைக்கலாம் குருவி படத்துலகூட ..............வேணாம் நா எதும் சொல்லலை
:))))))))))))))

மோனி said...

இரசித்தேன்...

பரிசல்காரன் said...

//எனவே பரிசல் அல்லது தராசை கேட்டுப் பார்க்கவும்..//

கார்க்கிண்ணா.. வேணாண்ணா... நான் பொறந்ததே இப்பதான்...

தமிழ்ப்பறவை said...

ஏர்டெல் விளம்பரம் ரசித்தேன்....
இன்னொரு குறும்படமா...?!:-((

நாஞ்சில் நாதம் said...

:))

அனுஜன்யா said...

கார்க்கிக்கு அப்பாவா நானா? ஒண்ணு எனக்கு அமெரிக்காவிலிருந்து மேக் அப் ஆளுங்க வந்து, என்னோட வயசை டபுள் ஆக்கி கிட்டத் தட்ட ஒரு 55 வயசுக்குக் கொண்டு வரணும். இல்ல கார்க்கிய எப்படி ஒரு மூணு வயசு குழந்தையா காமிக்கிரதுன்னு யோசிங்க (அவனுக்கே அஞ்சு வயசுக குழந்தை...சரி சரி)

அனுஜன்யா

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி சிவா.! (இது நல்ல ஐடியாவா இருக்கே)
நன்றி தமிழ்.!
நன்றி நாஞ்சில்.!
நன்றி அனுஜன்யா.! (யோவ் அங்கிள்.. ஏதாவது சொல்லிருவேன்)