Monday, August 31, 2009

பார்வதி நாச்சியார் (முடிவு)


அன்று அவள் அழுத அழுகையின் ஓலம் அந்த ஆனைமலை அய்யனாருக்கே கேட்டிருக்கும்...

..நாலாபுறமிருந்தும் சொந்தங்கள் திரள அன்றே தெரிந்த இடத்திலிருந்து கார் வரவழைக்கப்பட்டு ஆனைக்குட்டி அம்பாசமுத்திரம் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவனுக்கு வயது இருபத்தெட்டு. அடுத்து வந்த சில வாரங்களிலேயே அவனுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே புரிந்துபோயிற்று, இதனோடேதான் இனிவரும் வாழ்க்கை என. பார்வதி உணவென்பதையும், உறக்கமென்பதையும் மறந்திருந்தாள். வயிற்றிலிருக்கும் குழந்தைக்காக அவளைப் போராடி உணவு உண்ணவைத்தது அவளது மாமியார் பிச்சம்மா நாச்சி. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய ஆனைக்குட்டி வீட்டிற்குள் கட்டிலிலும், வீட்டு முற்றத்தில் இருந்த வேப்பமரத்தினருகே போடப்பட்டிருந்த மர நாற்காலியிலும் வாழ்க்கையைத் துவங்கினான்.

இளமைத்துடிப்புடன் ஓடித்திரிந்த ஆனைக்குட்டி மிகுந்த வேதனை தந்த நாற்காலி வாழ்க்கையை ஏற்க சில மாதங்களாயிற்று. பின்னர் நிதர்சனத்தை புரிந்து கொண்ட ஆனைக்குட்டி பள்ளி செல்லும் பிள்ளைகள் மாலை நேரத்தில் மரநிழலில் விளையாடுவதைக் கண்டு ரசிக்கத்துவங்கினான். அவர்களின் சில விளையாட்டுகளில் அமர்ந்தவாறே பங்குகொண்டான். பாடங்கள் சொல்லித்தந்தான். மாலை நேரங்களில் தேடி வந்த நண்பர்களுடன் பேசி மகிழ்ந்திருக்கத் துவங்கினான். அவன் முகத்தில் மீண்டும் சிரிப்பைக் கண்டு கொஞ்சம் ஆறுதலை அடையும் போது பார்வதியின் கைகளில் ஐந்தாவது குழந்தை காந்திமதி சிரித்துக் கொண்டிருந்தாள். குழந்தையை மடியில் கிடத்தி ஒற்றைக்கையால் பிடித்துக்கொண்டு கொஞ்சிக்கொண்டிருக்க விரும்பினான். முந்தைய பிள்ளைகளுக்குக் கிடைக்காத வாய்ப்பு இந்தப் பிள்ளைக்குக் கிடைத்தது. நாற்காலியில் அமர்ந்திருக்கும் அவன் மடியில் பிள்ளையைக்கிடத்திவிட்டு பிற வேலைகளை கவனிக்கத்துவங்கினாள் பார்வதி. அவனது சகல தேவைகளையும் கவனிக்கும் தாயானாள் பார்வதி. குளிக்க வைத்தாள், உடையணிவித்தாள், உணவை ஊட்டினாள். ஐந்தோடு அவளுக்கு ஆறாவது பிள்ளையானான் ஆனைக்குட்டி.

சில மாதங்களுக்குப் பிந்தைய ஓர் நாளில் பிள்ளைகளை உறங்க வைத்துவிட்டு, கட்டிலில் படுத்திருந்த கணவன் உறங்கிவிட்டானா எனப் பார்க்க விழைந்தவளின் வலது கையை இடது கையினால் பற்றினான் ஆனைக்குட்டி. இந்த இறுக்கம் இந்தக்கைகளில் இப்போது எப்படி? இந்தப் பிடி அவளுக்குள் ஆயிரம் கதை பேசும் பிடியல்லவா? அதிர்ந்து நின்றாள் பார்வதி நாச்சியார். இது எப்படி சாத்தியமாகும்? அவனால் சாத்தியமாயிற்று. அவளால் சாத்தியமாயிற்று. அடுத்த மூன்றாவது மாதம் ஒரு மாலை வேளையில் அவள் வாந்தியெடுத்த போது வேப்பமர நிழலில் நாற்காலியில் அமர்ந்திருந்த ஆனைக்குட்டி இடதுகையினால் எண்ணையைத் தொட்டு மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டிருந்தான்.

வயல்வெளிகளையும், தோட்டங்களையும் பார்வதி கவனிக்கத்துவங்கினாள். இருந்த இடத்திலிருந்தே அவளை ஆட்டிவைத்தான் அவன். தான் அறிந்ததையெல்லாம் அவள் அறிய வைத்தான். பருத்திக்காட்டின் மூன்றாவது பூச்சிக்கொல்லி மருந்தடித்தலின் அளவும், காலமும் என்ன?. புளியங்காய்கள் ஏன் சொத்தைப்பட்டுப் போய்விடுகின்றன? வாழைப்பராமரிப்பு எத்தனை சிரமமானது? மிளகாய் ஏன் நாம் பயிரிடுவதில்லை? தென்னைக்கு என்ன உரம்? அனைத்தும் அறிந்தாள். வீட்டை பன்னிரண்டு வயதான மூத்த பிள்ளை பார்த்துக்கொள்ள வயல்வெளிகளை அறிந்தாள். அவளின் சாட்டையாக அவன் இருந்தான். அவனை விடவும் சிறப்பாக அவள் விளைவித்த கரைவயலின் அறுவடை நாளின் போது உடனிருக்கமுடியாமல் ஆறாவது பிள்ளையை பெற்றெடுப்பதற்காக வீட்டில் கதறிக்கொண்டிருந்தாள். அந்த ஆறாவது பிள்ளையைப்பெற்ற மயக்கத்தில் அவளிருந்த அதே மாலையில் அறுவடை ஒன்றரை மடங்காய் வீடுவந்து இறங்கிக் கொண்டிருந்தது. பார்வதியை பிரமிக்கத்துவங்கியிருந்தான் ஆனைக்குட்டி. அவளது வீட்டிற்கும் காட்டிற்குமான அலைச்சல்களை ரசனையோடு கவனிக்கத் துவங்கியிருந்தான்.

அவனையும் மீறிய ஒரு கணிப்பு அவளுக்கிருந்தது. எதிர்காலம் பள்ளிக்கல்வியை முன்னிறுத்தும். பிள்ளைகளை பள்ளிக்கு வலிந்து அனுப்பினாள். கடிந்து அனுப்பினாள். அதையும் மீறி முத்துப்பாண்டி எட்டாம் வகுப்பில் இரண்டு வருடங்கள் தங்கிவிட்டு பின்னர் தாயோடு தோட்டத்தில் நின்றான். தங்கம்மா நாச்சியார் முன்னமே பள்ளி செல்வதை நிறுத்தியிருந்தாள். தாயின் தீவிரம் கண்ட பிற பிள்ளைகள் ஒழுங்காக பள்ளி செல்லத் துவங்கியிருந்தன.

பின்பு வந்த ஒரு மாசி மாதத்தின் ஒரு நள்ளிரவில் தண்ணீர் தர எழுந்தவளின் இடுப்பை அவன் இடது கையினால் வளைத்தபோது முதன்முறையாக தயங்கினாள். அவன் காதோடு புலம்பினாள்..

‘ஊரென்ன சொல்லும்?’

அவனும் புன்னகையுடனே பகிர்ந்தான், ‘சொல்லுதவள கூட்டியா.. பத்து மாசத்துல ரெட்டப்புள்ள குடுக்கேன்’

“பாவதி..” இந்த முறை தெளிவான அழைப்பில் விருட்டென எழுந்து கட்டிலினருகே சென்றாள்.

“இருக்கேன்யா.. தண்ணி வேணுமா? மருந்து தேச்சிவிடவா?”

“ஒண்ணும் வேண்டா.. பக்கத்துல வா..”

“..ம்..” மிக அருகே சென்றாள். என்றுமில்லாத தெளிவு அந்த முகத்தில் இன்று. முதன்முதலாக அவனைக்கண்ட போது பார்த்த அந்த பொலிவு.. இப்போது இந்த வற்றிய முகத்தில்.! அதே அழகான சிரிப்பு.

“பிள்ளையளெல்லாம் எழுப்பு.. நா.. பாக்குணும்”

வருவதறிந்த பார்வதிக்கு இதயமே நின்றுவிடும் போலிருந்தது. “தூங்குதுவளே.. காலையில பாத்துக்கிடக்கூடாதா?”

“எழுப்பேன்.. பாக்குணுங்கிறன்லா..”

தன்னைக் கட்டுக்குள் வைத்திருந்த பார்வதி பிள்ளைகளை எழுப்பினாள். நிற்க முடியாமல் பிள்ளைகள் தூங்கி வழிந்தன. முத்துப்பாண்டியும், தங்கம்மாவும் என்னவோ ஏதோவென விழித்துக்கொண்டனர். மற்றவை தூக்கம் கலையாமல் தாயின் சேலைத்தலைப்பை பிடித்து தொங்கிக்கொண்டிருந்தன. கடைசிப்பிள்ளையை பார்வதி கையில் வைத்திருந்தாள். சொல்லாமலே அணைந்து போகவிருந்த அரிக்கேன் விளக்கைத் தூண்டிவிட்டிருந்தாள். ஆனைக்குட்டி மெல்லிய சிரிப்புடன் இடதுகையால் பிள்ளைகளை தொட்டுப் பார்த்துக்கொண்டான்.

“சும்மாதா கூப்புட்டேன்.. பாக்குணும் போலயிருந்துச்சு.. போய் படுக்கச்சொல்லு எல்லாத்தியும்...”

அனைவரையும் படுக்க வைத்தாள். பின்னர் அவனருகே வந்தாள். இவளது வலது கையைப் பிடித்த அவனது இடது கையில் வலுவில்லை. கட்டிலில் உட்காரச்சொன்னான். அவனது தோளருகே அமர்ந்தாள். எந்நேரமும் உடைந்துவிடக்கூடியதாய் அவள் இருந்தாள். அந்த‌ மெல்லிய‌ நில‌வொளியிலும் அவ‌ன‌து க‌ண்க‌ள் ப‌ள‌ப‌ள‌த்த‌ன‌. முக‌த்தோடு முக‌ம் நெருங்கிய‌போது, அவ‌ற்றில் இன்னும் ஒரு ஜென்ம‌ம் உன்னோடு இருக்க‌வேண்டும் என்ற‌ ஆசை ப‌ள‌ப‌ள‌த்த‌தைக் க‌ண்டாள். ஆனால் சொல்வ‌த‌ற்கு அவ‌னிட‌மோ, அவ‌ளிட‌மோ வார்த்தைக‌ள் ஒன்றுமில்லை. நரகம் இப்போது அவள் இருக்கும் இடமாய் அவளுக்குத் தோன்றியது. முத‌ல் முறையாக‌ அவ‌ன் க‌ண்க‌ளில் க‌ண்ணீரைக்கண்டாள். காதை நோக்கி வ‌ழிந்த‌ க‌ண்ணீரை த‌ன் க‌ன்ன‌த்தால் துடைத்தாள்.

“ஏங்ய்யா.. இப்பிடிலாம் பண்றீய..?”

“இப்ப எதுக்கு அழுவுத..? எப்பிடியா பட்டவ.. நீ? எனக்குஞ்சேத்து இருக்க வந்தவள்ளா நீ? பிள்ளையள ஆளாக்கி படிக்கவெச்சி கலியாணம்பண்ணி வெச்சி பேரம்பேத்தியள பாத்து.. அவ்வொ பிள்ளையளவும் பாத்துட்டுல்லா நீ வரணும்.. எத்தன பேத்துக்கு இப்பிடி சொல்லிட்டுப் போற குடுப்பின இருக்கும்? ஒனக்கு ஒண்ணும் அவசரமில்ல.. நீ நல்லாயிருப்பே..”

அந்த ‘நீ நல்லாயிருப்பே..’ என்ற வாழ்த்து நூறாண்டு தவமிருந்த பலனாய் கிடைத்த வரத்திற்கு ஒப்பானதாய் இருந்தது. அனைத்தும் புரிந்த பார்வதியின் கண்கள் அன்று சிந்திய கண்ணீர் அவனது முகமெங்கும் ஈரம்படரச்செய்தது. தொடர்ந்து விடிந்த காலையில் அவன் அவளோடு இல்லை. அவள் கால்கள் பின்னர் கடந்த பாதையில் மலர்கள் கிடக்கவுமில்லை. அவளது கண்கள் பின்னர் கண்ணீர் கண்டறியவுமில்லை.

சுமார் ஐம்பது வருடங்களுக்குப் பின்னர் ஒரு மாலை நேரத்தில் மடியில் விளையாடிக்கொண்டிருந்த காந்திமதி அதன் அம்மாவைத்தேடி அழத்துவங்கியிருக்க, முப்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்த பேரனிடம் அதுவும் ஓர் ஆண்மகனிடம் யாரிடமும் இதுவரை சொல்லிருக்காத ஒரு கதையினை சொல்லி முடித்திருந்த போது அந்த பார்வதி ஆச்சியின் கண்கள் லேசாக கலங்கியிருந்தன. இந்தக்கதையை அவள் எங்கு துவங்கினாள்.. எங்கு முடித்தாள்.? இன்றைய பெண்களும் பேசத்தயங்கும் செய்திகளை பகிர்ந்துகொள்ள அவளைத்தூண்டியது எது? அந்த நெகிழ்ச்சி கணவன் விட்டுச்சென்ற பணிகளை செவ்வனே நிறைவேற்றியதால் ஏற்பட்ட மகிழ்ச்சியா.?

".. ஆனா அவ்வொ சொன்ன மாதி இன்னும் தெடமாத்தா இருக்கேன்.. இன்னும் தோட்டவேலய நானேதான் பாத்துக்கிடுதேன்.. ஒம்பிள்ளை கலியாணத்தையும் பாத்துட்டுதான் போவேனு நினைக்கேன்..”

சிரித்த‌ப‌டி தொட‌ர்ந்த‌வ‌ள்,

“அவ்வொ சொன்ன மாதி எல்லாத்தியும் பாத்துட்டேன்.. இன்னும் அவ்வுளுக்கு என்னிய கூப்பிட்டுக்கதான் ஆசையில்ல போலுக்கு.."

பனித்த கண்ணீரை தன் வெள்ளைச்சேலை முந்தானையில் துடைத்துக் கொண்டாள்.

.

48 comments:

ஜானி வாக்கர் said...

me the first, will come back after reading

ஜானி வாக்கர் said...

ஆதி, நெஞ்சை தொடும் பதிவு. மேட்கொண்டு புகழ வார்த்தைகள் இல்லை.

Jack said...

மிகவும் அருமை. நீங்கள் சிறுகதை என்று கூறினாலும் ஒரு மனதை கவர்ந்த நெடிய நாவலை வாசித்த உணர்வு. நன்றி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இப்படியொரு முடிவை எதிர்பார்க்கவில்லை

பேச்சு வழக்கு நெஞ்சில் நிற்கிறது

அருமை

சூரியன் said...

கிராமத்தில் பல பாட்டிகளின் கதை கிட்டத்தட்ட இதுவாத்தான் இருக்கும்..

அ.மு.செய்யது said...

பார்வதி நாச்சியாரை விட ஆனைக்குட்டி மனதை நெகிழ வைக்கிறார்.

அப்பாவி முருவின் கேள்விக்கு பதில் சொல்வதற்காக நடுவில் ஒரு பத்தியை செருகியிருப்பதைக் கண்டு
கொள்ள முடிந்தது.

கூடிய விரைவில், இதை கொஞ்சம் பட்டி,டிங்கரிங்.ஆல்டரேஷன்,ஃபைன் டியூனிங் எல்லாம் செய்து
ஒரு முழு நீள நாவலை எழுதும் முயற்சியை மேற்கொள்ள வேண்டி விண்ணப்பம்.ஆனால் கதைக்களம்
நிச்சயமாக இதுவாகத்தானிருக்க வேண்டும்.

துபாய் ராஜா said...

//கதையினை சொல்லி முடித்திருந்த போது அந்த பார்வதி ஆச்சியின் கண்கள் லேசாக கலங்கியிருந்தன//

படித்த எங்கள் கண்களும்தான்....

ஆனைக்குட்டித்தேவர் பேரனாய்யா நீ ??!!........

கே.ரவிஷங்கர் said...

கதை மாந்தர்களின் உணர்ச்சிகள் அங்கும் இங்கும் நன்றாக வெளிப்பட்டு இருக்கிறது.

நீங்கள் உள் வாங்கிய அளவுக்கு(பின்னி பிசைய வைத்து காவியமாக்கி
விடனும்!) பார்வதி நாச்சியாரின்
வாழ்க்கை சம்பவங்கள் கதையில்
வலுவாக வெளிப்படவில்லை.

சம்திங் மிஸ்ஸிங்.

நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்.

கும்க்கி said...

;-))

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஜானி.! (முதல் தடவையா சீரியஸா பின்னூட்டமிடுறீங்க போல)

நன்றி ஜாக்.! (இது ஒரு நாவலுக்கான தீம் என நண்பர்க்கள் சிலர் கூறினர். நமக்கு இங்கே சிறுகதையே நாக்கு தள்ளுது)

நன்றி அமித்துஅம்மா.! (எதிர்பார்க்கலைன்னா என்ன அர்த்தம் நல்லாருதுதுல்ல.?)

நன்றி சூரியன்.!

நன்றி செய்யது.! (மூன்று மாதங்களுக்கு முன்பே எழுதப்பட்டு பல முறைகள் வாசித்து பினிஷிங் செய்யப்பட்ட கதை இது. இப்போது எந்த இடைச்செருகலும் செய்யப்படவில்லை)

நன்றி ராஜா.! (அப்படிச்சொல்லிவிட முடியாது)

நன்றி ரவிஷங்கர்.! (எவ்வளவு எழுதுனாலும் இன்னும் இன்னும்ங்கிறீங்க.. டிரை பண்ணுறேன்.. ஹிஹி)

கும்க்கி said...

ஒரு நாவலுக்குரிய கதை.சுருக்கினால் இப்படித்தான் வரும்.தடாலென ஆரம்பித்து திடீரென முடிந்துவிடுகிறது.

ஆரம்பமும் முடிவும் தவிர்த்து அற்புதமான விவரணைகள்.

பட்டரைக்கு வர்ரீங்கள்ல...அங்கே வைத்து கொஞ்சம் டிங்கரிங் செய்து பட்டி பார்த்து பெயிண்ட் செய்து விட்டா போதும்..அபாரமா வரக்கூடிய வாய்ப்பு தெரியுது.

அப்பாவி முரு said...

கதை கொஞ்சம் யூகிக்கக் கூடியதாக இருந்தாலும்,

ஊருக்கு ரெண்டு தாட்டியமான கிழவிகள் இருந்ததை மறுக்கவும் முடியாது,

அவர்கள் பட்ட கஷ்ட்டங்களையும் மறக்கவ்ய்ம் கூடாது!

☼ வெயிலான் said...

இதான்... இதான்....

அனுஜன்யா said...

பிரபல பத்திரிகைளில் வர பல கதைகளைவிட இந்தக் கதை நல்லா இருக்கு ஆதி. வட்டார நடை உங்க பலம். வணிகக் கதை என்றால் இன்னும் கொஞ்சம் மசாலா வேணும்.

இல்ல இலக்கிய முயற்சி என்றால் இன்னும் கொஞ்சம் மெனக்கெட வேண்டும். கொஞ்சம் பூடகமாக, நிறைய பன்முகத் தன்மையோடு இருக்கணும். அப்படின்னா என்னனு கேக்குறது சிறுபிள்ளைத்தனம். தெரிஞ்சா நாங்களும் எழுதுவோம்ல. ஒரு உதாரணத்திற்கு எப்படி ஏழு குழந்தைகள் என்பதை வாசகர்கள் கற்பனைக்கு விட்டு விடலாம். போலவே அவர் உடல்நலம் திடீரென்று பாதிக்கப்படும் பின்புலமும்.

மொத்தத்தில் நல்லா இருக்கு ஆதி. இதுக்கு ஒருவேளை பின்னூட்டங்கள் அவ்வளவு வரலைனா, கவலைப்படாதீங்க. தொடர்ந்து இந்த மாதிரியும் எழுதுங்க.

அனுஜன்யா

பி.கு: இன்னும் கொஞ்சம் புகழ்ந்திருப்பேன். 'அப்பா' ரோலா தரீங்க :((

செல்வன் said...
This comment has been removed by the author.
செல்வன் said...

மனதைத் தொட்ட கதை.
பல வருடங்களில் நீண்டு இருக்கும் ஒரு வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக சிறுகதையாக எழுதும் போது, எழுத்தாளர் தேர்ந்தெடுக்கும் சம்பவங்களும், அதன வர்ணனையும் வாசகனுக்கு ஒரு மன நிறைவையும், இடைப்பட்ட பலப் பல ஆண்டுகளில் நடைபெற்ற சம்பவங்களை இயல்பாக மனதுக்குள் ஓட விட்டு ஒரு நாவலைப் படித்த திருப்தியையும் உருவாக்குவாதாக இருக்க வேண்டும். இக்கதை நிச்சயம் அந்தத் தரத்தில் எழுதப்பட்டுள்ளது. ஓராண்டாக உங்களைப் படிக்கிறேன். தவறாக என்ன வேண்டாம். படித்து முடித்ததும் இது நீங்கள் எழுதியதா என சந்தேகமாக இருந்தது. நன்றி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி அமித்துஅம்மா.! (எதிர்பார்க்கலைன்னா என்ன அர்த்தம் நல்லாருதுதுல்ல.?)

அய்யோ, நல்லா இருக்குதுங்க

முடிவு சோகமயமா இருக்கேன்னு ஃபீலிங்க் அதைத்தான் எதிர்ப்பார்க்கலைன்னு சொன்னேன்.

அது சரி said...

ஆதி,

படிக்க சலிப்பில்லாமல் போகிறது...நல்ல நடை...வாழ்த்துக்கள்...

ஆனால், கதையின் அடிப்படையான இழை என்ன? எதை நோக்கியுமே கதை செல்லவில்லை...சிறு கதை என்பதால் ஏதேனும் திருப்பம் இருக்குமா என்று எதிர்பார்த்தேன்...இல்லை...ஒரு பெண்ணின் வாழ்க்கை பதிவு என்று சொன்னாலும் ஏதோ ஒன்று மிஸ்ஸிங்...முடிவு ச்சப்பென்று இருக்கிறது...

ஒரு வேளை என் புரிதல்களில் தவறு இருக்கலாம்...பட், ஸாரி, எனக்கு தோன்றியதை சொல்லிவிட்டேன்..

நாடோடி இலக்கியன் said...

இதுவரைக்கும் வந்த உங்க புனைவுகளில் இது தான் பெஸ்ட்.வட்டார வழக்கு அபாரம்.

இன்னும் நீங்க சிறப்பா எழுத முயற்சிக்க வேண்டுமென விரும்புவதால் ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்.
இக்கதையை படித்து முடிக்கையில் எனக்கு தோனியது இறுதியில்
கொஞ்சம் நிதானித்து எழுதியிருக்கலாமோ. ஏனெனில் அருமையான ஓட்டம் இறுதியில் அவசரப்பட்டு முடித்துவிட்ட மாதிரி ஒரு ஃபீல்.

தாரணி பிரியா said...

பொதுவா வட்டார வழக்கு கதைகளை நான் சரியா படிக்க மாட்டேன். ஆனா இதை முழுசா படிச்சேன் ஆதி. உங்க எழுத்து நடை அபாரம்

கார்ல்ஸ்பெர்க் said...

//இப்படியொரு முடிவை எதிர்பார்க்கவில்லை

பேச்சு வழக்கு நெஞ்சில் நிற்கிறது//

-ரிப்பீட்டு!!!

T.V.Radhakrishnan said...

அருமை

Mahesh said...

ஆதி... சுட்டுப் போட்டாலும் இது மாதிரியெல்லாம் அம்சமா எனக்கு எழுத வரவே வராது... வட்டார நடைல கலக்கைட்டீங்க...

ஆனா... 'அதுசரி' சொன்னா மாதிரிதான் எனக்கும் தோணுச்சு.... rudderless ship மாதிரி... எங்க போறதுன்னு கொஞ்சம் அலைபாயற மாதிரி...

ஆனா... என்ன மாதிரி ஜுஜுபி ஆளுங்க சொல்றதெல்லாம் விமர்சனம்னு எடுத்துகிடாதீங்க... எங்க ரசனை அவ்வளவுதான்,.

தமிழ்ப்பறவை said...

நல்லா இருக்கு தலை...
நாவல்..? குறு நாவல்..?
//ஒரு உதாரணத்திற்கு எப்படி ஏழு குழந்தைகள் என்பதை வாசகர்கள் கற்பனைக்கு விட்டு விடலாம். //
எனக்கும் தோன்றியது இதுதான்...ஒவ்வொரு குழந்தைக்கும் நீங்கள் மெனக்கெட்டிருக்க வேண்டாம்..
வட்டாரவழக்கு நன்றாக இருக்கிறது.(எனக்குத் தெரியாது உங்கள் வழக்கு.மதுர பாஷைன்னா விமர்சிக்கலாம்)..
பழைய தினமணிகதிர்,விகடன்(90-97) இதழ்களில் வரும் கதை போல் நன்றாகவே உள்ளது...
நீங்க மாஸா இல்லை கிளாஸா..? புரியலையே...?!
கதையின் பின்புறம் உங்களின் தீவிரப் பயிற்சி புரிகிறது. வாழ்த்துக்கள் ஆதி...

அன்புடன் அருணா said...

ம்ம்ம்....பூங்கொத்து!

மாதவராஜ் said...

ஆதி!
இரண்டு பகுதிகளையும் சேர்த்தே வாசித்தேன். அனுஜன்யா சொன்னது போல வணிகப்பத்திரிகைகளில் வரும் பெரும்பான்மையான கதைகளை விட, வலைப்பக்கங்களில் பார்க்கின்ற பல கதைகளை விட, அருமை. வட்டார மொழி நடையும் சிறப்பு.

சில உவமைகளும், விளக்கங்களும் ஏற்கனவே படித்து, கேட்டு மிகப் பழசானவை. (உ.ம்)//அதிர்ச்சியில் கால்கள் தரையிலிருந்து நழுவ.. கீழே விழுந்துவிடாமலிருக்க சுவரைப்பிடித்துக்கொண்டு நின்ற// & //என்று சிரித்துக்கொண்டே நெட்டிமுறித்த போது அவள் வெட்கத்தில் சிவந்துபோனாள்.// வேறு மாதிரி சொல்லலாம். இது போன்று சில இடங்கள் இருக்கின்றன.

அப்புறம் //அவள் கண்கள் மாறி மாறி இரட்டைவேடம் போட்டுக்கொண்டிருந்தன.// என்று நிச்சயம் சொல்லக்கூடாது. இரட்டை வேடம் என்பது வேறு புரிதல் கொடுக்கும் சொல்லாடல்.

இரண்டு பிளாஷ் பேக்குகள், (அதிலும் கால இடைவெளி இருக்கிறது) மாறி மாறி வந்து, கடைசியில் ஐம்பது வருடம் கழித்த நிகழ்காலம் வருகிறது. கதை சொல்வதில் உங்களுக்குள்ள குழப்பமேத் தெரிகிறது. கதை முடிந்த இடத்திலிருந்தும், கதையைச் சொல்லிப் பார்க்கலாம்.

சில இடங்கள் அற்புதமாக இருந்தன.பாராட்டியே ஆக வேண்டும். (உ-ம்)

//வயல் வெளிகளிலிருந்து அவளுக்காக கடலைச்செடி பிடுங்கி வந்தான். பிஞ்சு வெண்டைக்காய்களையும், வெள்ளரிக்காய்களையும் கொண்டுவந்தான். //

//அன்று அவள் அழுத அழுகையின் ஓலம் அந்த ஆனைமலை அய்யனாருக்கே கேட்டிருக்கும்..//

//குழந்தையை மடியில் கிடத்தி ஒற்றைக்கையால் பிடித்துக்கொண்டு கொஞ்சிக்கொண்டிருக்க விரும்பினான். முந்தைய பிள்ளைகளுக்குக் கிடைக்காத வாய்ப்பு இந்தப் பிள்ளைக்குக் கிடைத்தது. //

இதுபோன்ற வாழ்வோடு கூடிய நடையில் சொல்ல முயலும்போது கதை வாசிப்பவனுக்கு மிக நெருக்கமாகச் செல்லும்.

நல்ல முயற்சி. புதுமைப்பித்தன், கி,ராவைப் படியுங்கள். இன்னும் தெளீவாகும் உங்கள் எழுத்துலகம் நிச்சய்மாய். வாழ்த்துக்கள்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி கும்க்கி.! (ஒரு நாவலுக்குரிய கதை.சுருக்கினால் இப்படித்தான் வரும்.// அதானே.. பாருங்க பச்சைப்புள்ளைய எப்பிடில்லாம் பண்றாங்கன்னு?)

நன்றி முரு.! (நீங்கள் சொல்வதும் சரிதான்)

நன்றி வெயிலான்.! (யோவ்.. ஏதாச்சும் சொல்லுங்கையா..)

நன்றி அனுஜன்யா.! (வணிகக் கதை என்றால் இன்னும் கொஞ்சம் மசாலா வேணும்.
இல்ல இலக்கிய முயற்சி என்றால் இன்னும் கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.// நல்ல பாடம், மைண்ட்ல வெச்சுக்கிறேன். அப்புறம் நீங்க சொல்றவரைக்கும் பின்னூட்டம் வந்துகொண்டுதான் இருந்தது. இப்போதான் நின்னுபோச்சு.. அவ்வ்..)

நன்றி செல்வன்.! (அவ்வப்போது உங்களை மாதிரி ஆட்கள் தோன்றி ரெண்டு மாசத்துக்கு தாங்குற மாதிரி ஊக்குவிச்சுட்டுப் போயிடறீங்க. அதுதான் தொடர்ந்து இயங்க வைக்குது..

அப்புறம் அதென்ன..

படித்து முடித்ததும் இது நீங்கள் எழுதியதா என சந்தேகமாக இருந்தது. //

அந்த அளவுக்கா இதுவரை மொக்கை போட்டுருக்கேன்.. அவ்வ்வ்வ்..)

நன்றி அதுசரி.! (பலரும் உங்க கருத்தை சொல்லியிருக்காங்க..)

நன்றி இலக்கியன்.! (அவசரப்பட்டு முடித்துவிட்ட மாதிரி// இதுவே நாலு பக்கத்தை தாண்டுது. இதுக்கு மேல என்னையா எழுதச்சொல்றீங்க.. ஹிஹி..)

நன்றி தாரணி.!
நன்றி கார்ல்ஸ்.!
நன்றி டிவிஆர்.!

நன்றி மகேஷ்.! (உங்களது புரிதலும், ரசனையையும் பற்றி நானறிவேன் தோழர்)

நன்றி தமிழ்பறவை.! (நல்லாருந்தா சரின்னு விடுவீங்களா? அதவுட்டுட்டு மாஸா, கிளாஸானு சந்தேகமா? என்னது இது சின்னப்புள்ளத்தனமா? ஹிஹி..)

நன்றி அருணா.! (மணக்குது)

சங்கரராம் said...

நல்ல கதைங்க.
எங்க ஊரு அம்பாசமுத்திரங்க.

பட்டிக்காட்டான்.. said...

அருமையான கதைங்க..

வட்டார வழக்குதான் கொஞ்சம் புதுசு..

Anonymous said...

ரெண்டு பகுதியையும் படிச்சேன். நாச்சியார் உங்களுக்கு உறவா.
முதல் பகுதில கொஞ்சம் தெளிவா இல்லாத மாதிரி இருந்துது. (நான் மறுபடியும் நல்லா படிக்கணுமோ)
ரெண்டாவது பகுதி தெளிவா இருக்கு.

Cable Sankar said...

அருமையான வட்டார வழக்கு. கண்களில் ஓடும் நாச்சியாவின் முகம்.(என் மனசுள் அனுஷ்காவின் முகம் ஓடுகிறது).. நிச்சயமாய் வெகுஜன பத்திரிக்கையில் வந்திருக்க வேண்டிய கதை..

Cable Sankar said...

/ஒரு உதாரணத்திற்கு எப்படி ஏழு குழந்தைகள் என்பதை வாசகர்கள் கற்பனைக்கு விட்டு விடலாம். //

எனக்கும் அப்படித்தான் தோன்றியது.. அது சாத்யமானது எப்படி என்படும் போது என்னுள் ஒரு கற்பனை ஓடிய போது அதை எழுதி தடுத்துவிட்டீர்கள். ஒரு வேளை நீங்கள் உருவாக்கிய பார்வதியின் கேரக்டர் கெட்டுவிடுமோ என்கிற ஐயமோ..?

நாடோடி இலக்கியன் said...

//இதுக்கு மேல என்னையா எழுதச்சொல்றீங்க//

அதுக்கு மேல எழுத சொல்லலீங்க, முடிவுகிட்ட கொஞ்சம் எழுத்து நடையில் முடிதாகவேண்டுமென்ற அவசரம் இருந்த மாதிரி இருந்தது,அதற்கு முன்பிருந்த ஃபுளோ மிஸ் ஆன மாதிரி இருந்தது, அதை கொஞ்சம் செதுக்கியிருக்கலாமோன்னு சொல்ல வந்தேன்.ஹி ஹி(ஹி ஹி போடலைன்னா சீரியஸ் பின்னூட்டமாகிவிடுகிறது).

குசும்பன் said...

மனதை பிசையும் கதை!முடிவு கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது!

இப்படிக்கு
கதை படிச்சமாதிரியே பில்டப் கொடுப்போர் சங்கம்

வால்பையன் said...

அருமையான கதை!

ஒரே பதிவாகவே போட்டிருக்கலாம்!
ப்ளோ சரியா அமைஞ்சிருக்கும்!

RAMYA said...

//
குசும்பன் said...
மனதை பிசையும் கதை!முடிவு கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது!

இப்படிக்கு
கதை படிச்சமாதிரியே பில்டப் கொடுப்போர் சங்கம்
//

இது சரியா ஆதி? இது பரவா இல்லையா ஆதி??
கேள்வி கேட்போர் சங்கத்தின் உறுப்பினர் :-)
கிளை தெரியவில்லை :-)

நான் பிறகு படித்து விட்டு பின்னூட்டமிடுகிறேன் :-)

ஸ்ரீமதி said...

மிக அருமை அண்ணா.. :)

தராசு said...

தல,

வட்டார வழக்குல பின்னி பெடலெடுக்கறீங்க.

வாழ்த்துக்கள்.

ஆனா, இந்த மாதிரி கதைகளிலெல்லாம் கஷ்டப்பட்டவங்க கதையை மாத்திரம் ஏன் எழுதறாங்கன்னு புரியல, உதாரணத்துக்கு கள்ளிக்காட்டு இதிகாசத்துல பேயத்தேவர், கருவாச்சி, இப்ப உங்க பார்வதி.......

ஏய்யா, சந்தோஷமா வாழ்ந்து செத்தவனே கிடையாதா, அல்லது அவனது சந்தோஷங்கள் கவனிக்கப்ப்டுவதில்லையா????

Marathamizhan said...

ஆதி,

ஆனைக்குட்டிதேவரையும் பார்வதி நாச்சியாரையும் க‌ண்முன்னே ந‌ட‌மாட‌விட்டு
கண்ணீர் வரவழைத்து விட்டீர்கள் !

"அடுத்த மூன்றாவது மாதம் ஒரு மாலை வேளையில் அவள் வாந்தியெடுத்த போது வேப்பமர நிழலில் நாற்காலியில் அமர்ந்திருந்த ஆனைக்குட்டி இடதுகையினால் எண்ணையைத் தொட்டு மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டிருந்தான்"

‘ஊரென்ன சொல்லும்?’

அவனும் புன்னகையுடனே பகிர்ந்தான், ‘சொல்லுதவள கூட்டியா.. பத்து மாசத்துல ரெட்டப்புள்ள குடுக்கேன்"

தூள் பறக்குதே ரசனையில....


"முக‌த்தோடு முக‌ம் நெருங்கிய‌போது, அவ‌ற்றில் இன்னும் ஒரு ஜென்ம‌ம் உன்னோடு இருக்க‌வேண்டும் என்ற‌ ஆசை ப‌ள‌ப‌ள‌த்த‌தைக் க‌ண்டாள்". "காதை நோக்கி வ‌ழிந்த‌ க‌ண்ணீரை த‌ன் க‌ன்ன‌த்தால் துடைத்தாள்"

“ஏங்ய்யா.. இப்பிடிலாம் பண்றீய..?”

“இப்ப எதுக்கு அழுவுத..? எப்பிடியா பட்டவ.. நீ? எனக்குஞ்சேத்து இருக்க வந்தவள்ளா நீ? பிள்ளையள ஆளாக்கி படிக்கவெச்சி கலியாணம்பண்ணி வெச்சி பேரம்பேத்தியள பாத்து.. அவ்வொ பிள்ளையளவும் பாத்துட்டுல்லா நீ வரணும்.. எத்தன பேத்துக்கு இப்பிடி சொல்லிட்டுப் போற குடுப்பின இருக்கும்? ஒனக்கு ஒண்ணும் அவசரமில்ல.. நீ நல்லாயிருப்பே..”

வ‌ட்டாற‌ வ‌ழ‌க்கு கொடிக‌ட்டி ப‌ற‌க்குது..

ர‌விச‌ங்க‌ருக்கான‌ பதிலை ர‌சித்தேன்.

உங்களுக்குள் உறங்கிக்கிடந்த படைப்பாளியை எழுப்பி வெளியே
உலாவ விட்டிருக்கிறீர்கள் !

வாழ்த்துக்க‌ள் !

ந‌ட்புட‌ன்
ம‌ற‌த்த‌மிழ‌ன்.

இளைய நிலவு said...

நல்ல கரு ... நல்ல நடை .... யாரோ கேட்டதற்காக கதையின் இடைச்செருகல் (குழந்தைக் கணக்கு) தனித்து நிற்பதை தவிர்த்து இருக்கலாம். அந்த பத்தி முழுவதுமே மின்னல் வேகத்தில் பயணிக்கிறது. வாழ்த்துக்கள் நண்பரே !!!

bahurudeen said...

ayyaa romba nallaa irukkungka. manathai nekizha vaiththa kathai.

SK said...

அண்ணே சூப்பர்.

இன்னும் பதிவை படிக்கவில்லை நான். கொஞ்சம் நேரம் எடுத்து படிக்க வேண்டும் என்று தோனுகிறது. ஏன்னா எனக்கு அவ்வளவு எளிதா புரிந்துவிடாது எதுவுமே.

அப்பறம் எதுக்கு பின்னூட்டமா ?? இதே வரிசைல அடிச்சு ஆடுங்க அதுக்கு தான் .. வாழ்த்துக்கள் சொல்லத்தான்.

அதிஷா said...

உங்க கதைய விமர்சிக்கற அளவுக்கு இன்னும் நான் வளரல.. மத்தபடி கதையை முழுமையாய் படித்தேன். நல்லாருந்துச்சுண்ணே

பரிசல்காரன் said...

ஆதி

ஏற்கனவே படித்தேன். இப்போதும் இருமுறை படித்தேன்.

எலலரும் சொல்வது போல, வட்டார வழக்கும், கதை மாந்தர்களோடே எங்களையும் அழைத்துச் செல்லும் நடையும் ப்ளஸ்.

மாதவராஜின் பின்னூட்டத்தைப் படித்த பிறகு, மீண்டும் கதையைப் படிக்கத் தூண்டியது. அவருக்கு தனிப்பட்ட நன்றிகள்.

ஆதி.. இது உங்கள் டாப் டென்னில் ஒன்றாக வரும்.

Keep Going!

நாஞ்சில் நாதம் said...

நல்லாயிருக்கு தல.

ஒரு நாவல் படித்த மாதிரி உணர்வு.

பாட்டி கதைய சொல்லுரதமாதிரி முடிச்சதால இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்துருக்கலாம்.

//மூன்று மாதங்களுக்கு முன்பே எழுதப்பட்டு பல முறைகள் வாசித்து பினிஷிங் செய்யப்பட்ட கதை இது//

முத்துகளை டிராப்டுலையா வைக்குறது.

உரையடலுக்கு எழுதுன "ஒரு மழைநாள் இரவு" கதய விட இது சூப்பர்.

தொடர்ந்து இந்த மாதிரியும் எழுதுங்க

ரெட்மகி said...

நல்ல இருக்கு ஆதி...

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மாதவராஜ்.! (சிறப்பான அறிவுரைக்கு நன்றியண்ணே.. குறிப்பாக நீங்கள் மைனஸ் என்று சொன்ன விஷயங்கள் பளிச்சென தவறுகளை விளக்கின)

நன்றி சங்கரராம்.!(நம்மூர் கூட்டம் கூடிக்கொண்டேயிருக்கிறது, ஹிஹி)

நன்றி பட்டிக்காட்டான்.!
நன்றி அம்மிணி.!

நன்றி கேபிள்.! (உங்கள் விமர்சனங்களில் மகிழ்ச்சி. கருத்துகள் ஏற்கப்பட்டன)

நன்றி இலக்கியன்.! (நீங்கள் அதிகமாக எழுதச்சொல்லியதாக நான் தவறாக புரிந்துகொண்டதாக நீங்கல் தவறாக புரிந்துகொண்டிருக்கமாட்டீர்கள் என நான் புரிந்துகொண்டிருக்கிறேன்.)

நன்றி குசும்பன்.! (ஹிஹி)
நன்றி வால்பையன்.! (பண்ணியிருக்கலாம். இப்போ வந்த எண்ணிக்கை கூட வந்திருக்கமாட்டாங்கன்னு நினைக்கிறேன்)

நன்றி ரம்யா.!
நன்றி ஸ்ரீமதி.!

நன்றி தராசு.! (சோகமா எழுதற மததவங்களையும் கேக்குறதுதானே? நானே முதல் தடவையா ஒண்ணு எழுதிருக்கனேன்னு பாராட்டுறத வுட்டுப்புட்டு.. சோகமா இருக்குதாம். போரும்யா அந்தால..)

நன்றி மறத்தமிழன்.!
நன்றி நிலவு.!
நன்றி பக்ருதீன்.!
நன்றி எஸ்கே.! (படிச்சுட்டு திரும்பவும் வாங்க)

நன்றி அதிஷா.! (அப்பிடிங்களா? சரிங்ணே)
நன்றி பரிசல்.! (கொற ஒண்ணுமில்லையா?)

நன்றி நாஞ்சில்.! (எழுதலாம்)
நன்றி ரெட்மகி.!

வாசகி said...

அருமையான கதைங்க ஆதி. நான் படிச்சதுல கள்ளிக்காட்டு இதிகாசத்துக்கு அப்புறமா கதாப்பாத்திரங்களை கண்முன் நிற்க வெச்சு, ஒரு பார்வையாளரா இருக்க வெச்சு, அழவெச்சு, மனசுல ஒரு தாக்கத்த ஏற்படுதினது இந்த கதை தாங்க !! Wishes.