Friday, September 4, 2009

கமல் 50 : ரசனையானவன்

சாதனைகள் என்று சொல்லப்படுபவை குறித்து பேசிப்பேசி சலித்தாயிற்று. ஒப்பற்ற கலைஞன் என்று சொல்லிச் சொல்லி போரடித்தாயிற்று. நடிப்பைத்தாண்டி சினிமாவின் சகலதுறைகளிலும் அவருக்குள்ள நிபுணத்துவம், வெற்றி கண்டு பாராட்டியாயிற்று. இலக்கியம், வாழ்வு, சமூகம் குறித்த அவரின் தெளிந்த பார்வையும், அவரின் அழகான மேடைத்தமிழையும் கண்டு வியந்தாயிற்று.

இத்தனைக்கருத்துகளிலும் மாற்றுக்கருத்துகள் உலவிக்கொண்டேதான் இருக்கின்றன. அவற்றை முழுதுமாக நாம் ஒதுக்கிவிடவும் முடியாது, அதே நேரம் ஏற்றுக்கொண்டுவிடவும் முடியாது. தவிர்த்து..

சினிமா என்ற கலையின் மீது அவர் கொண்ட தீராத ஆர்வம் அளப்பரியது, சர்வ நிச்சயமானது. ஃப்ரொபஷன் மீதான காதலுக்கு அவர் ஒரு எடுத்துக்காட்டு. இந்த நீண்ட 50 வருட பயணத்தின் தொடர்ச்சியாக புதியவர்களை பயன்படுத்தி, அவர்களுக்கு தன் அனுபவங்களைக் கடத்தி ஒரு இயக்குனராக தமிழ்சினிமாவை இதுவரை கண்டிராத ஒரு புதிய ஆரோக்கியமான தளத்திற்கு கொண்டு செல்லவேண்டிய முக்கியமான கடமை அவருக்கு இருக்கிறது என்பதை நினைவூட்டி இவ்வரிய வேளையின் மனமார்ந்த வாழ்த்துகளை அவருக்கு நாம் தெரிவித்துக்கொள்கிறோம்.நல் ரசனைக்கான கூறுகளை உங்களிடமிருந்தே எதிர்பார்த்திருக்கும் ரசிகர்களின்,

வாழ்த்துகள் கமல்ஹாசன்.!
.

33 comments:

Anonymous said...

எங்க ஊருக்கு கமல் பஸ் வரும்னு தெரியலை...

வாழ்த்துக்கள் நானும் சொல்லிகறேன். :)

நாஞ்சில் நாதம் said...

:))

Cable Sankar said...

வாழ்த்துக்கள் கம்ல்.

ஆதி உங்களுக்கும் தான்.

வெங்கிராஜா said...

பாராட்டு விழாவில் முருகதாஸ் சொன்னது ரொம்ப ஏற்புடையதாக இருந்தது. தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டை கமலஹாசன் தெரு என்று ஏன் மாற்றி வைக்கக்கூடாது? என்.எஸ்.கே, கலைஞர், சிவாஜி கணேசன் ஆகியோரது பெயர்களில் இருக்கும் இடங்களைப் போல உலகநாயகனின் பெயரிலும் ஏன் ஒரு சாலை இருக்கக்கூடாது என்று கேட்டார். அதுவே நாம் அவருக்கு செய்யும் நல்ல மரியாதையாக இருக்கும்.

கமலுக்கும், உங்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துகள்!

பரிசல்காரன் said...

வாழும்போதே கமலுக்குண்டான அத்தனை மரியாதைகளையும் செய்து, அவரை கௌரவப்படுத்த வேண்டியது நம் கடமையென நினைக்கிறேன்...

Well... அத அவர் எதிர்பார்க்கமாட்டாரென்றாலுங்கூட!

தராசு said...

//இந்த நீண்ட 50 வருட பயணத்தின் தொடர்ச்சியாக புதியவர்களை பயன்படுத்தி, அவர்களுக்கு தன் அனுபவங்களைக் கடத்தி ஒரு இயக்குனராக தமிழ்சினிமாவை இதுவரை கண்டிராத ஒரு புதிய ஆரோக்கியமான தளத்திற்கு கொண்டு செல்லவேண்டிய முக்கியமான கடமை அவருக்கு இருக்கிறது என்பதை நினைவூட்டி இவ்வரிய வேளையின் மனமார்ந்த வாழ்த்துகளை அவருக்கு நாம் தெரிவித்துக்கொள்கிறோம்.//

இது ஒரு வாக்கியமா தலைவா, படிச்சு முடிச்சாலே ஒரு கிளாஸ் தண்ணி குடிக்கனும் போல இருக்குதே, நீங்க எழுதுனத நினைச்சா..............

கமலுக்கு வாழ்த்துக்கள்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

இது இன்னொருவருக்கான பதிவு என்பதால் தனித்தனியாக நன்றியெல்லாம் கிடையாது. (பதிவர் குறித்து வாழ்த்தினால் சம்பந்தப்பட்டவர் வந்து ஏற்பு நன்றி சொல்கிறார்கள் அல்லவா? அது போல கமல் வந்து வேண்டுமானால் சொல்லிக்கொள்ளட்டும்.. ஹிஹி) வந்தவர்களுக்கும், வரப்போகிறவர்களுக்கும் மொத்தமாக நன்றி.

பரிசலின் கடைசி வரிகள் ரசனை.

ஆதிமூலகிருஷ்ணன் said...

தராசு : அதெல்லாம் தானா வருது தல..

ஸ்ரீமதி said...

// பரிசல்காரன் said...
வாழும்போதே கமலுக்குண்டான அத்தனை மரியாதைகளையும் செய்து, அவரை கௌரவப்படுத்த வேண்டியது நம் கடமையென நினைக்கிறேன்...//

வழிமொழிகிறேன். :)) படம் பார்க்கறதில்லைன்னாலும் கமல் படம் என்றால் சிறிது ஆர்வம் உண்டு.. லாஜிக் இல்லாத பல படங்களுக்கு நடுவில் கமல் படம் வரப்ரசாதம் எனக்கு.. :)))

ஸ்ரீமதி said...

//அது போல கமல் வந்து வேண்டுமானால் சொல்லிக்கொள்ளட்டும்.. ஹிஹி//

ஹ்ம்ம்ம் என்ன சொல்ல.. :)))))))

வால்பையன் said...

நானும் வாழ்த்திகிறேன்!

தமிழ்ப்பறவை said...

கமலைப் பற்றிப் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அவர் ஒரு லெஜண்ட் என்பதை யாரும் மறுக்க முடியாது.வாழ்த்துகிறேன்...

SanjaiGandhi said...

சூப்பர்.. தலவரைப் பத்தி நானும் எழுத நினைச்சேன். சிம்பிளா சொல்லனும்னா , ”எல்லாரும் சொல்வாங்க.. சஞ்சய் வாழ்ந்த சம காலத்துல வாழ்வதே தங்களுக்குப் பெருமைன்னு. ஆனா அப்பேர்ப்பட்ட எனக்கே பெருமை என்னன்னா கமல் வாழ்ந்த காலத்துல நானும் வாழ்ந்திருக்கேன்” என்பது தான்.

கிகிகி.. எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்..

இ லவ் கமல்ஹாசன் தி லெஜண்ட்.

KamalHasan said...

ஆண்ணன் திரு தாமிரா அல்லது ஆதி அல்லது ஆதிமூலக்கிருஷ்ணன் அவரவர் விருப்பத்திற்கு எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் அவர் பெயரை விருப்பத்திர்கும் வேண்டுகோளுக்கும் இணங்கி இங்கு என்னை வாழ்த்தும் அன்பு நெஞ்சங்களுக்கு என் பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இங்கு வந்து உங்களுக்கு நன்றி சொல்வது அவையடக்கம் அல்லது வேறு எதுவும் என்று கூறிவிட முடியாது. ஆனாலும் வாழ்த்துகளை ஏற்றுக் கொள்வது தான் சிறந்த மானிட பண்பாடு என்று அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் சொல்லி இருப்பதாக ஆழ்வர்ப்பேட்டை ஆஞ்சநேயர் கோயில் அருகில் பேசிக் கொண்டார்கள். வாழ்த்து சொன்னவர்களுக்கும் சொல்லப் போகிறவர்களுக்கும் மன்னிக்கவும் சொல்ல வருபவர்களுக்கும் நன்றி. வணக்கம்.

அ.மு.செய்யது said...

கமலைப் பற்றி பேச ஆரம்பித்தால், ( முதல் படம் இதுவல்ல என்று தெரியும் ) நிழல் நிஜமாகிறது தொடங்கி, உனக்குள் ஒருவன் டிரைலர் வரை இன்று முழுவதும் நான் பேசுவேன்.

என்னைப் பொறுத்த மட்டில் கமல் என்ற ஒரு கலைஞனுக்கு ஒப்பீடே இல்லை.

வாழ்த்துக்கள் !!!!

கார்க்கி said...

லாஜிக் இல்லாத பல படங்களுக்கு நடுவில் கமல் படம் வரப்ரசாதம் எனக்கு.. :))

தசாவதாரம் லாஜிக் புரிஞ்சுதா?

கமல்.. லெஜெண்ட் தான்..

நாடோடி இலக்கியன் said...

நண்பர் நாஞ்சில் நாதத்தை வழி மொழிகிறேன்.

துபாய் ராஜா said...

//இந்த நீண்ட 50 வருட பயணத்தின் தொடர்ச்சியாக புதியவர்களை பயன்படுத்தி, அவர்களுக்கு தன் அனுபவங்களைக் கடத்தி ஒரு இயக்குனராக தமிழ்சினிமாவை இதுவரை கண்டிராத ஒரு புதிய ஆரோக்கியமான தளத்திற்கு கொண்டு செல்லவேண்டிய முக்கியமான கடமை அவருக்கு இருக்கிறது என்பதை நினைவூட்டி இவ்வரிய வேளையின் மனமார்ந்த வாழ்த்துகளை அவருக்கு நாம் தெரிவித்துக்கொள்கிறோம்//

வழிமொழிகிறோம்.

துபாய் ராஜா said...

இன்றும் என்றும் தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தி திரு.கமலை
வாழ்த்துகிறோம்.

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்க!வாழ்க!

ஆதிமூலகிருஷ்ணன் said...

கார்க்கி : குருவி, வில்லு லாஜிக்கையே நாங்க புரிஞ்சவங்களாக்கும்..

SanjaiGandhi said...

//குருவி, வில்லு லாஜிக்கையே நாங்க புரிஞ்சவங்களாக்கும்.. //

எங்கள் வருங்கால இளைஞரணித் தலைவரை கிண்டலடிக்கும் நோக்கத்துடன் எழுதப் படும் இந்த மாதிரி வரிகளை வன்மையாகக் கண்டிக்கிறென்.

வந்தியத்தேவன் said...

கமல் ரசிகனாக இருப்பதில் பெருமையடைகின்றேன்.

புனிதா||Punitha said...

//சஞ்சய் வாழ்ந்த சம காலத்துல வாழ்வதே தங்களுக்குப் பெருமைன்னு//

:-))

வித்யா said...

ஒரு தீவிர ரசிகையாக என் வாழ்த்துகளும்.

T.V.Radhakrishnan said...

கமலுக்கு வாழ்த்துக்கள்

Pl.also visit
http://tvrk.blogspot.com/2009/08/blog-post_12.html

கார்த்திக் பிரபு said...

wishes :)

http://gkpstar.googlepages.com/

பட்டிக்காட்டான்.. said...

உலக நாயகனுக்கு வாழ்த்துகள்..

//.. என்னைப் பொறுத்த மட்டில் கமல் என்ற ஒரு கலைஞனுக்கு ஒப்பீடே இல்லை. ..//

வழிமொழிகிறேன்..

ஆதிமூலகிருஷ்ணன் said...

அனைவருக்கும் நன்றி.!

செல்வேந்திரன் said...

கமல் தமிழ் சினிமாவின் ஆகிருதி! இக்கருத்தில் எனக்கு மாற்றமில்லை. ஆனால், இயக்குனராக கமல் தமிழ் சினிமாவை முன்னெடுத்துச் செல்வார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பஞ்சு அருணாசலமும், எஸ்.பி. முத்துராமனும் சினிமாவைச் சீரழித்த காலத்தில் வேண்டுமானால் உங்களது கூற்று சரியாக இருக்கலாம். ஆனால், நவசினிமாவின் முகம் முற்றிலும் மாற்றப்பட்டு வருகிறது. இன்றைய இயக்குனர்கள் கமல் நிகழ்த்திக்காட்டிய கதைக்களங்களைக் காட்டிலும் காத்திரமான தளங்களில் தீவிரமாக இயங்குகிறார்கள். அவ்வியக்குனர்களோடு சேர்ந்து 'நடிகனாக' தன் பங்களிப்பை கமல் செய்தாலே தமிழ் சினிமாவின் தரம் ஓங்கும்.

மஞ்சூர் ராசா said...

கமலுக்கு வாழ்த்துகள்.

உங்கள் கருத்துடன் ஒப்புக்கொள்ளக்கூடியதென்றாலும் கூட செல்வேந்திரனின் கருத்தே என் கருத்தும்.

எல்டாம்ஸ் ரோட்டை கமல்ஹாசன் சாலை என மாற்றுவதை ஆதரிக்கிறேன்.

மங்களூர் சிவா said...

//இந்த நீண்ட 50 வருட பயணத்தின் தொடர்ச்சியாக புதியவர்களை பயன்படுத்தி, அவர்களுக்கு தன் அனுபவங்களைக் கடத்தி ஒரு இயக்குனராக தமிழ்சினிமாவை இதுவரை கண்டிராத ஒரு புதிய ஆரோக்கியமான தளத்திற்கு கொண்டு செல்லவேண்டிய முக்கியமான கடமை அவருக்கு இருக்கிறது என்பதை நினைவூட்டி இவ்வரிய வேளையின் மனமார்ந்த வாழ்த்துகளை அவருக்கு நாம் தெரிவித்துக்கொள்கிறோம்//

வழிமொழிகிறோம்.

D.R.Ashok said...

//வாழும்போதே கமலுக்குண்டான அத்தனை மரியாதைகளையும் செய்து, அவரை கௌரவப்படுத்த வேண்டியது நம் கடமையென நினைக்கிறேன்...
Well... அத அவர் எதிர்பார்க்கமாட்டாரென்றாலுங்கூட! //

பரிசலை நான் வழிமொழிகிறேன்.