Monday, September 7, 2009

7.10 pm மூன்றாவது பிளாக்

செய்தி வந்த அடுத்த விநாடியே பாய்ந்து வெளியேறினேன். காரை யாரோ எடுத்துப்போயிருக்கவேண்டும். பைக்கை எடுத்துக்கொண்டு விரைந்தேன் சைட்டுக்கு. ஒரே பதற்றமாக இருந்தது, கொஞ்சம் வெறுப்பாக வந்தது. 'சே.. இதென்ன எவ்வளவு சொன்னாலும் ஒழுங்கா வேலையை பார்க்காம இப்படியெல்லாம் ஆக்கிடுறான்களே.. இன்னும் முந்துன கேஸே முடிஞ்சபாடில்ல' ஒரு உயிர் போனதுக்காக வருத்தப்படுவதா? பின்விளைவுகள் குறித்து எரிச்சல் படுவதா? என்று புரியாமல் குழப்ப மனநிலையில் இருந்தேன். மணியைப் பார்த்தேன் மாலை 7.40.

ஸ்பாட்டில் நெருங்கிய போது மணி 8.00. இறங்கியவுடனே விபத்து நிகழ்ந்த பிளாக்கை நோக்கி விரைந்தேன். அதற்குள் எதிரே வந்த மணியை நோக்கி இரைந்தேன், "என்ன சொன்னாலும் புரியாதா உங்களுக்கு? இன்னிக்கு ஞாயித்துக்கிழமை, 6 மணிக்கே வேலையை முடிச்சுட்டு போய்த் தொலைங்கன்னுதானே சொல்லிட்டுப்போனேன்" அவரை பதில் சொல்லவிடாமல் தொடர்ந்து இரைந்துகொண்டே அவர் பின்தொடர ஸ்பாட்டை நோக்கிச் சென்றேன். "மூணாவது பிளாக்குதானே? போலீஸ் வந்தாச்சா? எந்த ஹாஸ்பிடலுக்கு கொண்டு போயிருக்காங்க? யாரு கூட போயிருக்கா? முதல்ல என்ன நடந்தது, அதச்சொல்லுங்க? எத்தனை பேரு ஸ்பாட்ல இருந்தீங்க? எதையாவது சொல்லித்தொலைங்க.." கோபம் தெறித்தது என் வார்த்தைகளில்.

மணி சொல்லத்துவங்கினார், "போலீஸ் 10 நிமிஷத்துக்கு முன்னாடிதான் வந்தாங்க ஸார். எல்லாத்தையும் அப்படியே சொல்லிட்டேன் ஸார். ஸ்பாட்லதான் இருக்காங்க. சம்பவம் நடந்தப்போ நான், நரசிம்மன் அப்புறம் நாலு சித்தாளுங்க மட்டும்தான் இருந்தோம் ஸார். அப்புறம் செக்யூரிட்டி இருந்தாரு. மற்ற எல்லாரையுமே நீங்க சொன்ன மாதிரி ஆறு மணிக்கே வேலையை முடிச்சு அனுப்பிச்சிட்டேன் ஸார். நாங்களுந்தான் கிளம்பிக்கிட்டிருந்தோம். கிளம்புறப்போ செக்யூரிடி மூணாவது பிளாக்கில லைட் எரியலை பாக்கணும்னு சொன்னார். நேத்தே சொல்லியிருந்தார், பாக்காம போயிட்டோம். அதான் பாத்துடலாமேனு குமாரைப்போயி பாக்கச்சொல்லிட்டு மத்தெல்லாரும் கேட்லதான் வெயிட் பண்ணிக்கிட்டிருந்தோம். அங்கே மூணாவது ஃப்ளோர் வேலை நடந்துகிட்டிருக்கிறதால சாரத்துல ஏறிப் பார்த்திருக்கான் ஸார். சாரம் சரிஞ்சி கீழ இருந்த பைப்ல விழுந்து வயிறு கிழிஞ்சு போச்சு. சத்தமே கேக்கல ஸார். ஆளக்காணோமின்னு நாங்கதான் அஞ்சு நிமிஷம் கழிச்சு போய் பாத்தோம். உடனே தூக்கிட்டு ஆட்டோ பிடிச்சு பக்கத்துல சூர்யா ஹாஸ்பிடலுக்கு அனுப்பிச்சேன் ஸார். நரசிம்மனும், இன்னொரு பையனையும் கூட அனுப்பிச்சுட்டு போலீஸுக்கு தகவல் குடுத்தேன் ஸார். அதுக்குள்ள நரசிம்மன் போன் பண்ணினார். முடிஞ்சுபோச்சாம் சார். ஜிஹெச்சுக்கு கொண்டுபோகச்சொன்னதால அங்க கொண்டு போயிருக்காராம்."

ஸ்பாட்டை நெருங்கியிருந்தேன். 4 போலீஸ்காரர்களும் இன்னும் நான்கு பேரும் அங்கே சூழ்ந்திருந்தனர். அருகே சென்றபோது கவனித்தேன் அந்த இடமே ரத்தக்களறியாக மாறியிருந்தது. பச்சை நிற புற்களின் மீதெல்லாம் காவியை கரைத்து ஊற்றினாற்போல கருஞ்சாந்து நிறம் அப்பியிருந்தது.

ன்றிலிருந்து ஆறாவது நாள். சைட் ஆஃபீஸில் உட்கார்ந்திருந்தேன். என் முன்னால் மணி அமர்ந்திருந்தார். அந்த சைட்டுக்கான முழு பொறுப்பில் இருக்கும் என் மீதான கைது நடவடிக்கையில் இருந்து என்னை காப்பாற்ற எம்டி கொஞ்சம் மெனக்கெட்டதில் மணி கைது செய்யப்பட்டு நான் தப்பியிருந்தேன். மணியும் உடனே பெயிலில் எடுக்கப்பட்டிருந்தார். வேலை தடைபட்டிருந்தது. எம்டியிடமிருந்து போன் வந்த வண்ணமிருந்தன. போலீஸ் ஃபார்மாலிடீஸ் முடிந்திருந்தாலும் இன்னும் வேலையை ஆரம்பிக்க முடியாமல் பாதுகாப்பு இயக்ககத்திலிருந்து இன்றைக்கு சோதனைக்கு ஆள் வருவதாக இருந்தது. இறந்து போனவர் லோக்கல் ஆள் என்பதால் கொஞ்சம் பிரச்சினை அதிகம் ஆயிருந்தது.

"நாளைக்காவது வேலையை ஆரம்பிச்சுடலாமா ஸார்?" மணி கேட்டார்.

"இன்னிக்கு இன்ஸ்பெக்ஷன் ஒழுங்கா முடிஞ்சுதுன்னா நாளைக்கு ஆரம்பிச்சுடலாம். நீங்க எதுக்கும் ஆளுங்களை ரெடியா வெச்சிருங்க" சொல்லிவிட்டு தொடர்ந்தேன், "உள்ள ரொம்ப கஷ்டமாயிடுச்சா மணி. நா போயிருக்கவேண்டியது.. ஸாரி மணி".

"பரவாயில்ல ஸார். யார் போனா என்ன? நீங்களுந்தான் என்ன பண்ணமுடியும்? எத்தனை வருஷமா உங்கள பாத்துக்கிட்டிருக்கேன்.. கிளீன் கேஸ்ங்கறதால உள்ளயும் அவ்வளவா ஒண்ணும் பிரச்சினையில்ல.."

மேல்கொண்டு என்ன பேசுவது என தெரியாமல் அமைதியாக இருந்தேன். மணி தொடர்ந்தார்.

"ஆனா இன்னொரு பிரச்சினை இருக்கு ஸார்.."

"என்ன பிரச்சினை?"

"இல்ல.. போன மாசம் நடந்த ஆக்ஸிடெண்டும் இதே மூணாவது பிளாக்தான். அதுவும் ஞாயித்துக்கிழம சாய்ந்தரம்தான் ஸார்."

"அதுனால.."

"நம்மாளுங்கல்லாம் ஆறுமணிக்கு மேல மூணாவது பிளாக்ல வேல பாக்க பயப்பிடுறாங்க.."

"என்ன மணி சொல்றீங்க..ஏற்கனவே இதப்பத்தி கேள்விப்பட்டேன். நீங்களுமா பயப்படுறீங்க?"

"நீங்களே சொல்லுங்க.. முதல்ல நடந்தது போன மாசம் முதல் ஞாயித்துக்கிழம சாய்ந்தரம் 7 மணிக்கு. அப்பவே சில ஆளுங்க பயந்துகிட்டிருந்தாங்க.. இப்ப ரெண்டாவ்து நடந்ததும் முதல் ஞாயித்துக்கிழம சாய்ந்தரம் 7 மணிக்குதான். அதே இடம். ரெண்டு கேஸ்லயுமே சாரம்தான் சரிஞ்சிருக்குது. வயித்துல அடிபட்டுதான் செத்துப்போயிருக்காங்க.. அதான் எல்லாரும் பயப்பிடுறாங்க. நாம எதுக்கும் ஏதும் சாமியாரக்கூப்பிட்டு பாத்திரலாம்னு.."

"நிறுத்துங்க மணி. எனக்கு நிறைய வேலையிருக்கு. சும்மா டைம் வேஸ்ட் பண்ணாதிங்க. பத்து வருஷமா கூடத்தான இருக்கீங்க எத்தனி கேஸ் பாத்துருக்கோம். சும்மா யாரோ ஏதோ பேசுனாங்கன்னு நீங்களும் வந்து கத விட்டுக்கிட்டு.. ரெண்டு நாளைக்கு பயப்பிடுவாங்க, அப்புறம் சரியாப்போயிரும்"

"ஸார்.. எதுக்கும் கொஞ்சம் யோசிச்சு.."

"பாப்போம், கிளம்புங்க.."

சற்று நேரத்தில் எம்டி வரவும் இன்ஸ்பெக்டர்கள் வரவும் சரியாக இருந்தது. கிளியரன்ஸ் முடிஞ்சு இன்று மாலையே வேலை துவங்க முடிவு செய்தோம். எம்டி கிளம்புகையில்,

"ரொம்ப டிலே ஆயிடுச்சு கேகே, என்ன பண்ணுவீங்களோ தெரியாது. கரெக்டா 60 நாள்தான். பிரேக் வேண்டாம். டபிள் பண்ணுங்க, நைட் பிளான் பண்ணுங்க. டார்கெட்டுக்குள்ள முடிக்கிறோம்.. பிளஸ் 4 இன்னும் ஆரம்பிக்கவேயில்லையே.. முடிச்சிரலாமா?"

"ஒண்ணும், ரெண்டும் அல்மோஸ்ட் முடிஞ்சது மாதிரிதான். பிளாக் மூணும், நாலும் மட்டும்தான் சார்.. பண்ணிடலாம் சார்.!"

"யு'ர் மை ஹோப்"

அடுத்த 10 நாட்களுக்கு வீட்டுக்கே போக முடியவில்லை. அதன் பின்னர்தான் குறித்த தேதிக்குள் முடிக்கமுடியும் என்று நம்பிக்கையே வந்தது. மணி, நரசிம்மன் மாதிரி ஆட்கள் இருக்கும் வரை பிரச்சினையேயில்லை. அடுத்தடுத்த வாரங்களில் கட்டிடம் வேகமாக வளர ஆரம்பித்திருந்தது. ஆனாலும் இந்த பிராஜக்ட் கொஞ்சம் ஓவராகத்தான் படுத்துகிறது. கிளம்ப தினமும் எட்டு மணியாகிவிடுகிறது. இது நான் தனியாக கையாளும் மூன்றாவது பிராஜக்ட். அதுவும் இவ்வளவு பெரிய இண்டஸ்ட்ரி எனக்கு முதல். என் கேரியரில் முக்கியமான பில்டிங். எம்டி என் மீதுள்ள நம்பிக்கையால் தந்தது இது. சில இடங்களில் சந்தேகம் இருந்தன, கொஞ்சம் பாபுவை வரச்சொல்லி பார்க்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

பாபு இன்னொரு பிராஜக்டை பார்த்துக்கொண்டிருக்கும் எங்கள் நிறுவனத்தின் இன்னொரு பிஎம். என் நண்பன். கமெண்ட் பண்ண வரச்சொல்லி ஒரு மாசமாக அழைத்துக்கொண்டிருக்கிறேன். வர நேரமில்லாமலிருக்கிறான். உதவி தேவைப்படும் போதெல்லாம் போனிலேயே கன்சல்ட் செய்து பிளான் பண்ணிக்கொண்டிருந்தேன். பில்டிங் வளர்ந்து கொண்டிருந்தது.

அன்று நான்காவது பிளாகில் ஐந்தாவது மாடியில் நின்றுகொண்டிருந்தேன். பீம்களே இல்லாமல் அந்த பெரிய ஹால் முடியும் தருவாயில் இருந்தது. பக்கத்தில் பாபு.

"ஃபெண்டாஸ்டிக்டா, பிரமாதமா பண்ணியிருக்கே. எங்கே முடிக்கப்போறீங்கன்னு நானே கொஞ்சம் பயந்துக்கிட்டிருந்தேன். இந்த ஸ்பீட்ல போனா கண்டிப்பா பண்ணிடலாம். உன் கேரியர்ல ஒரு அழுத்தமான கிரீன் மார்க்"

மகிழ்ச்சியாக இருந்தது. அப்படியே பேசிக்கொண்டே கீழே இறங்கி மற்ற பிளாக்குகளையும் சுற்றிப்பார்க்க அவனை அழைத்துச்சென்றேன். பேசிக்கொண்டே சென்றோம். இரண்டாவது தளத்தில் வேலை கிட்டத்தட்ட வேலைகள் முடிந்து பூச்சு வேலைகள் நடந்துகொண்டிருந்தது. இதன் வலது புற வெளிப்பக்க சுவரில்தான் அந்த பெரிய ரேஜிங் கிரேட்ஸ் வருகிறது. அதைக்காண விரும்பி அந்த ஃபுல் விண்டோவின் வழியே இரும்பு பைப்புகளால் அமைக்கப்பட்டிருந்த சாரத்தில் இறங்கினேன். பாபுவையும் அழைத்தேன்.

"டைம் ஆகுதுடா.. சீக்கிரம் வா" என்றவாறே ஒரு போன்காலை அட்டண்ட் செய்யத்துவங்கினான்.

"என்ன அவசரம், போகலாம்" என்றவாறே இன்னும் இரண்டு அடிகள் எடுத்து வைத்தேன். என்ன இந்தப்பக்கம் யாரும் வேலை பார்க்கவில்லையா? என்ன ஆச்சு? மணியை செல்போனில் அழைக்க டயல் செய்தேன். பாபு என்னிடம்,

"என்ன அவசரமா? 7 மணிக்கெல்லாம் வர்றேன்னு சொல்லியிருந்தேன், தேடிக்கிட்டிருப்பா. இன்னிக்கு ஞாயித்துக்கிழமை வேற.."

எங்கோ உறைக்க சடாரென வாட்சைப்பார்த்தேன். மணி 7.10. ஞாயிற்றுக்கிழமை. நான் நின்றுகொண்டிருப்பது மூன்றாவது பிளாக். இந்த லைட் இன்னுமா சரியாகவில்லை. நேற்று கூட இந்தப்பக்கம் வந்தேனே? எரிந்துகொண்டிருந்ததே. சாரம் ஆடுகிறதா என்ன? விருட்டென கீழே நோக்கினேன்.

அந்த இருளிலும் பளீரென தெரிந்தது.

மசமசவென வெள்ளையாய் ஒரு உருவம் சாரத்தின் கட்டுக்களை அவிழ்த்துக்கொண்டிருந்தது.
.

45 comments:

தராசு said...

ஃபர்ஸ்டு. படிச்சுட்டு வர்றேன்

ஜோதி said...

திகில் கதையா (தொடரா ?)
நல்லா இருக்கு

குசும்பன் said...

//7.10 pm மூன்றாவது பிளாக் //

புலம்பல்கள்

முதல் முத்தம்

மாதிரி 7.10 மன்மோகன் மூன்றாவது பிளாக்கோன்னு கொஞ்சம் பயந்து போய்விட்டேன்:)

தராசு said...

டெரரா இருக்கு.

ராம்ஜி.யாஹூ said...

இரண்டு போன அந்த கட்டிட தொழிலாளிக்கு அனுதாபங்கள், அவரது குடும்பத்தை நினைத்துப் பார்க்கிறேன்.

இன்னமும் கட்டுமானப் பணிகளில் நாம் பாதுகாப்பு முறைகளை சரியாக பயன் படுத்தாமல் இருப்பதே இது போன்ற விபத்திற்கு காரணம்.

அவரது இறப்பின் சோகத்தால் எனக்கு உங்கள் எழுத்து நடை எல்லாம் ரசிக்க முடிய வில்லை. மன்னிக்கவும்.

குசும்பன் said...

திகில் கதை அருமை ஆதி!

Cable Sankar said...

முடிவு.. அருமை.. :)

ராஜு.. said...

எப்பவும் இந்த இடத்துல படிக்காமயே கும்மியடிக்கிற குசும்பனே சொல்லிட்டதால, நானும் படிக்காமயே சொல்றேன்.
திகில்கதை அருமை ஆதி அங்கிள்.

அ.மு.செய்யது said...

வித்தியாசமா இருந்தது.......!!!!!!!!

நாஞ்சில் நாதம் said...

திகில் கதை நல்லாயிருக்கு

ஸ்ரீமதி said...

பயந்துட்டேன்... :(((

அமிர்தவர்ஷினி அம்மா said...

கதை முடியும்போது கொஞ்சம் திக்..திக்.

பயத்தை கோர்வையான வார்த்தைகளால் இட்டு நிரப்பியிருக்கிறீர்கள்.

நல்லா வந்திருக்கு :))

ghost said...

திகில் கதை நல்லா இருக்கு

பாலகுமார் said...

தத்ரூபம்

ஆயில்யன் said...

//குசும்பன் said...
September 7, 2009 10:09 AM

திகில் கதை அருமை ஆதி!
//

நான் சொல்ல நினைச்சதை எங்க அண்ணன் வந்து முன்னாடியே சொல்லிட்டுப்போச்சு :)

blogpaandi said...

அவரு பொழச்சாரா , செத்தாரா ? சொல்லாம முடிச்சிடீங்களே. ஏன்னா நான் கொஞ்சம் டியூப் லைட்.

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

Achilles/அக்கிலீஸ் said...

கதை நல்லா இருக்கு.. பட் கடைசில வெள்ளை உருவம் தான் கொஞம் உறுத்துற மாதிரி இருக்கு...

வால்பையன் said...

பேய் கதை எழுதுறதுக்கு ஆள் இல்லையேன்னு தேடிகிட்டு இருந்தேன்
கிடைச்சிட்டிங்க!

வால்பையன் said...

//அவரது இறப்பின் சோகத்தால் எனக்கு உங்கள் எழுத்து நடை எல்லாம் ரசிக்க முடிய வில்லை. மன்னிக்கவும்.//

என்னாமா ஃபீல் பண்றாரு!
லேபிளையெல்லாம் பார்க்க மாட்டாரா!?

கார்ல்ஸ்பெர்க் said...

//மசமசவென வெள்ளையாய் ஒரு உருவம் சாரத்தின் கட்டுக்களை அவிழ்த்துக்கொண்டிருந்தது.//

-அண்ணா, டெர்ரர் கதைனா கண்டிப்பா ஒரு வெள்ளை Character இருக்கணும்னு அவசியமா?

துபாய் ராஜா said...

நல்லாத்தான் கெளப்பறீங்க பீதியை...

" உழவன் " " Uzhavan " said...

இறுதி வரிகளில் யாவரும் நலம் படம் பார்த்த எபெக்ட் இருந்தது.

அறிவிலி said...

அய்யோ!!! சூப்பர்....

Truth said...

வாவ், நல்லாருக்கு ஆதி. எதிர்பார்க்காத முடிவு.

பரிசல்காரன் said...

அசத்தலான நடை ஆதி!

உண்மையாவே இந்த நடை உங்களுக்கு ரொம்ப நல்லா வருது.... கலக்குங்க!

ஆதிமூலகிருஷ்ணன் said...

தராசு, ஜோதி, குசும்பன் (என்ன சீரியஸ் பின்னூட்டம், உடம்பு சரியில்லையா?), ராம்ஜி (கதைதாங்க, விடுவீங்களா..), கேபிள், ராஜூ, செய்யது (உங்கள் கமெண்டையும் முக்கியமானதாக கருதுகிறேன் செய்யது. வித்தியாசம்னா.. எப்பிடி? இதெல்லாம் தேவையாங்கிற மாதிரியா..), நாஞ்சில், ஸ்ரீமதி, அமித்து, கோஸ்ட், பாலகுமார், ஆயில், பாண்டி (நீங்களே முடிவு பண்ணிக்குங்க), அக்கிலீஸ், வால்பையன், கார்ல்ஸ் (கருப்புன்னா ஏன் கருப்பும்பீங்க, வேணும்னா பச்சைன்னு வச்சுக்கலாமா? அடப்போங்கங்க.. சில விஷயங்கள் அப்படித்தான். நாட்டாமைக்கு சொம்பு மாதிரி), ராஜா, உழவன், அறிவிலி, ட்ரூத், பரிசல் ...

அனைவருக்கும் நன்றிகள்.!

ராஜா | KVR said...

கதை நல்லா இருக்கு ஆதி. கதையின் முடிவில் இவனும் அதே 7 மணிக்கு 3வது மாடிக்குச் செல்வான் என்று யூகித்தாலும் அந்தக் கட்டு அவிழ்க்கிற மேட்டர் சூப்பர்.

வித்யா said...

நல்லாருக்கு...

pappu said...

முடிவு தெரிஞ்சதுன்னாலும் நடை நல்லாருக்கதுங்கிறது தான் மேட்டராப் படுது!

அ.மு.செய்யது said...

வழக்கமான டிரெண்டிலிருந்து மாறுபட்டு, ஒரு திகில் தொடரை எழுதியிருக்கிறீர்கள்.

உங்களின் எழுத்தை பொறுத்த மட்டில், இது வித்தியாச நடை தான்."தில்" அட்டெம்ட்....

இப்ப ரேஸ் எழத்துல தானங்க...கதை செகண்ட்ரி...( கரெக்ட்டா ?? ).

Mahesh said...

என்னது இன்னொரு ப்ளாக்கா? தாங்காது பூமி... சோதனை மேல் சோதனை...

அப்பிடின்னு பாடலாம்னு பாத்தா...
பீதியைக் கிளப்பி பேதியை புடுங்கறீங்களே !!!

பட்டிக்காட்டான்.. said...

கதை திகிலாத்தான் இருக்கு..

ஆனா முடிவு யூகிக்க முடியுது..

எம்.எம்.அப்துல்லா said...

கதையை மிகவும் இரசித்தேன். அதைவிட //சில விஷயங்கள் அப்படித்தான். நாட்டாமைக்கு சொம்பு மாதிரி // இந்த கமெண்ட்டை மிகவும் இரசித்தேன் :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

ராஜா, வித்யா, பப்பு, செய்யது (கரெக்டு), மகேஷ் (பயந்துட்டீங்கதானே?), பட்டிக்காட்டான், அப்பு..

அனைவருக்கும் அன்பான நன்றிகள்.!

கார்க்கி said...

என் கமெண்ட்டு எங்க?

காக்கா தூக்கிட்டு போயிடுச்சா?

அது என்னன்னா

//ஸ்ரீமதி said...
பயந்துட்டேன்... :((//

அனுஜன்யா கவிதைகளையே பயப்படாம படிக்கிற ஒரு சில பெண்பதிவர்களில் இவரும் ஒருவர்.. அவரையே பயப்பட வச்சிட்டிஙக்ளே சகா!!!!!

ivingobi said...

-அண்ணா, டெர்ரர் கதைனா கண்டிப்பா ஒரு வெள்ளை Character இருக்கணும்னு அவசியமா?
correct so change that word manjal uruvam.....
eppudiiiiii ?

ஆதிமூலகிருஷ்ணன் said...

கார்க்கி, கோபி (யோவ்.. அதான் ஏற்கனவே பின்னூட்டத்துல சொல்லிட்டேன்ல) க்கு நன்றி.!

தமிழ்ப்பறவை said...

நல்லாக் கிளப்புறீங்க பீதியை...
வேகமான நடையில் கதை நல்லாத்தான் இருக்குது.
வரிகள் சின்னச்சின்னதா அழகா இருக்கு...(நான் எதை எழுதினாலும் 20,30 வார்த்தைகளுக்கப்புறம்தான் முற்றுப்புள்ளியே வருது..:-(( )

T.V.Radhakrishnan said...

கதை நல்லா இருக்கு

நாடோடி இலக்கியன் said...

கலக்கல்.

☼ வெயிலான் said...

கதை மிக அருமை!

முதலில் நீங்கள் எடுத்த க(த)ளம், படிப்பவர்களுக்கு புரியவைப்பதற்கே சிரமம் இருந்தாலும் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.

திருப்பம் முன்னமே யூகித்திருந்தாலும், வார்த்தைகளின் ஓட்டத்தால் மிக சுவாரசியமாக்கியிருக்கிறீர்கள் ஆதி!

sriram said...

கத நல்லா வந்திருக்கு ஆதி,
பாபு தான் அடுத்த பலி என்று நினைத்தேன், நல்ல ட்விஸ்ட்
என்றும அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com

பாலகுமார் said...

ரொம்ப நல்ல இருக்கு..

எவனோ ஒருவன் said...

ரொம்ப நல்லாயிருக்கு.

கடைசி வரி எதிர்பார்க்கவே இல்லை.