Wednesday, September 9, 2009

வெட்ட வெட்டத் துளிர்க்கும்..


வினிதாவின் மீதான கோபம் இன்னும் அடங்கவில்லை அவனுக்கு. என்ன திமிர் அவளுக்கு.? இவ்வளவு விட்டுக்கொடுத்து நடந்துகொண்டும் கூட‌ கொஞ்சமும் நல்லெண்ணமில்லாமல் எப்படிப்பட்ட வார்த்தைகளை சடாரென வீசிவிடுகிறாள். காலையில் அலுவலகம் கிளம்புகையில் நிகழ்ந்த வாக்குவாதத்தில் மனம் வெறுத்துப்போயிருந்தான் ராஜேஷ். வழக்கமாக சில மணி நேரங்களில் தணிந்துவிடும் கோபம் இன்று இதோ வீட்டுக்கு கிளம்பும் நேரம் வரை தணியவில்லை.

சாதாரண ஒரு பிரச்சினை. காலையில் அவசர அவசரமாக அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்த நேரத்தில் ஒன்றரை வயது பிள்ளையைக் கையில் கொடுத்து, பால் பாட்டிலையும் பெட்டில் வைத்துவிட்டு, "இந்தப்பாலை கொடுத்துக்கொண்டிருங்கள், சட்னியை அரைச்சுட்டு வாங்கிக்கொள்கிறேன்" என்று பதிலை எதிர்பாராமல் கிச்சனுக்குள் போய்விட்டாள் வினிதா.

இன்று 9 மணிக்கு ரிவ்யூ மீட்டிங் இருக்கிறது. லேட்டானால் அந்த கடுவனிடம் மாட்டிக்கொண்டு விழிக்கமுடியாது. இது போன்ற அவசர நேரத்தில்தான் இப்படி ஏதாவது வெறுப்பேற்றுவாள். வேண்டுமென்றே செய்கிறாளோ?

ஆசிஷ் "..ம்மே ..ம்மே" என்று துவங்கிய அழுகையுடன் கிச்சனை நோக்கி கைகளைக் காட்டிபடி அவளிடம் செல்ல பரபரத்துக்கொண்டிருந்தான். எந்நேரமும் அது பலத்த அழுகையாக மாறிவிடக்கூடும். எரிச்சல் எரிச்சலாக வந்தது அவனுக்கு. காலடியில் இறக்கிவிட்டுவிட்டு சட்டையை போட அவன் முயன்ற அதே நேரம் பெட்டில் வைக்கப்பட்டிருந்த சரியாக மூடியிருக்காத பாட்டிலை த‌ள்ளிவிட்டிருந்தான் ஆசிஷ். புதிய வெள்ளை விரிப்பில் பால் முழுதும் ஆறாகியிருந்தது. அதன் பின் துவங்கிய வாக்குவாதம் வார்த்தைப் பிரயோகங்களால் கடும் சண்டையாக மாறியிருந்தது. அரை மணி நேரமுடிவில் ஓவென அழ ஆரம்பித்திருந்தாள்.

இப்போ வீட்டுக்கு போகலாமா? வேறங்காவது போய்த்தொலையலாமா? எப்படியும் ஊருக்கு போன் பண்ணி அப்பாவிடம் புலம்பியிருப்பாள். என்ன பண்ணலாம்? ஏதாவது பாருக்குப்போகலாம் என முடிவு செய்தவன்.. நோ நோ சின்னக்குழந்தையை வீட்டில் வைத்துக்கொண்டு என்ன இது? கடைசி நேரத்தில் மனம் மாறி வீடு நோக்கி வண்டியை செலுத்தினான்.

அவளிடம் எத்தனை நாளானாலும் பேசவே கூடாது. அதுதான் தண்டனை அவளுக்கு. நினைத்துக்கொண்டே வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான். டிவியை சத்தமாக வைத்துக்கொண்டே இடுப்பிலிருந்த ஆசிஷுக்கு ஏதோ உணவை ஊட்டிக்கொண்டிருந்தாள் வினிதா. "ப்பே..ப்பே.." என்று ஏதோ டிவியைப் பார்த்து சத்தமிட்டுக்கொண்டிருந்த ஆசிஷ் இவனைகண்டதும் விருட்டென திரும்பி இரண்டு கைகளையும் நீட்டியவாறே,

"அ..ப்..பா.." என்றான். முதன்முறையாக தெளிவாக வந்துவிழுந்தது வார்த்தை.

மனம் நெகிழ பிள்ளையை வாங்க விழைந்து அப்ப‌டியே வினிதாவையும் சேர்த்து அணைத்தான் ராஜேஷ்.
.

31 comments:

ஆதிமூலகிருஷ்ணன் said...

சில அறிவிப்புகள் :
1. அகவலோசைக்கவிதைகள் மாதிரி இதையும் ஒருமாதிரியான (பிராக்டிஸுக்காக) டெம்பிளேட் கதைகள் வரிசையில் எடுத்துக்கொள்ளவும். யாராவது மொத்திவிடவேண்டாம்.

2. இது உண்மைக்கதை என்று நினைப்பவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன்.

3. நேரமின்மையால் டிராஃப்டில் இருந்த கதைகள் வரிசையாக வருகின்றன. என்னடா திடீர்னு சிறுகதைகளாக வரத்துவங்கியுள்ளன, எழுத்தாளர் கிழுத்தாளர் ஆகிவிட்டாரோ என சந்தேகிக்கவேண்டாம்.

அப்பாவி முரு said...

//மனம் நெகிழ பிள்ளையை வாங்க விழைந்து அப்ப‌டியே வினிதாவையும் சேர்த்து அணைத்தான் ராஜேஷ்.//

ச்சி, அவ்வளவு தானா ராஜேசின் (அ மு கி -இன்)கோவம்...

ஆனால் அந்த முதல் வார்த்தைக்கு ஈடு இணை வேறேதுமில்லை.

பிரபாகர் said...

நண்பா,

ஒரு சிறிய சம்பவத்தை மிகவும் நயம்பட அருமையான வரிகளுடன் அழகாக்கியிருக்கிறீர்கள். குழலினிது எனும் வள்ளுவனின் கூற்று போல, மழலையில் முன்னால் நமது எல்லா வெட்டி வீராப்புகளும் சரணடைந்துவிரும் என்பது நிதர்சன உண்மை.

பிரபாகர்.

blogpaandi said...

Good short story. All the problems will fly away from the heart, while seeing a child's face.

Cable Sankar said...

:)
எழுத்தாளர் ஆதிமூல கிருஷ்ணன் வாழ்க..

துபாய் ராஜா said...

அருமை ஆதி.

Anonymous said...

இது போன்ற ஒரு நிஜ சம்பவம் ஒரு முறை நேரில் ரயில் நிலையத்தில் கண்டேன். :))

நாஞ்சில் நாதம் said...

///2. இது உண்மைக்கதை என்று நினைப்பவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன். ///

எங்கப்பன் குதருக்குள்ள இல்ல .

/// 3. நேரமின்மையால் டிராஃப்டில் இருந்த கதைகள் வரிசையாக வருகின்றன. என்னடா திடீர்னு சிறுகதைகளாக வரத்துவங்கியுள்ளன, எழுத்தாளர் கிழுத்தாளர் ஆகிவிட்டாரோ என சந்தேகிக்கவேண்டாம்.///

பம்பிலிக்கி பிம்பா.

இந்த கதை நல்லாயிருக்கு தல

பாலா said...

2. இது உண்மைக்கதை என்று நினைப்பவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன்.


இதை பார்த்து நான் சிரிக்கிறேன் ஹாஹாஹாஹாஹா

தராசு said...

//*பாட்டிலில் ஊற்றுவதற்கு முந்தைய விநாடிகளில் ஆறவைக்கப்பட்டிருந்த பால் மெத்தையில் கொட்டுப்படுகிறது.

அலறுவது ரமா.....//

//காலடியில் இறக்கிவிட்டுவிட்டு சட்டையை போட அவன் முயன்ற அதே நேரம் பெட்டில் வைக்கப்பட்டிருந்த சரியாக மூடியிருக்காத பாட்டிலை த‌ள்ளிவிட்டிருந்தான் ஆசிஷ். புதிய வெள்ளை விரிப்பில் பால் முழுதும் ஆறாகியிருந்தது.//

//இது உண்மைக்கதை என்று நினைப்பவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன்..//

இது உண்மைக்கதை என்று நினைக்காதவர்களைப் பார்த்து நான் அழுகிறேன்.

//நேரமின்மையால் டிராஃப்டில் இருந்த கதைகள் வரிசையாக வருகின்றன. என்னடா திடீர்னு சிறுகதைகளாக வரத்துவங்கியுள்ளன, எழுத்தாளர் கிழுத்தாளர் ஆகிவிட்டாரோ என சந்தேகிக்கவேண்டாம்.//

சரி,...... சரி,....... புரியுது, புரியுது.

ghost said...

கத நல்லா இருக்குது

2. இது உண்மைக்கதை என்று நினைப்பவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன்

இத பாத்து நாங்கூட சிரிக்கிறேன்

ஸ்ரீமதி said...

:)))))))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

அகவலோசைக்கவிதைகள் மாதிரி இதையும் ஒருமாதிரியான (பிராக்டிஸுக்காக) டெம்பிளேட் கதைகள் வரிசையில் எடுத்துக்கொள்ளவும். யாராவது மொத்திவிடவேண்டாம். //

நல்லவேளை தப்பிச்சீங்க

நேரமின்மையால் டிராஃப்டில் இருந்த கதைகள் வரிசையாக வருகின்றன. என்னடா திடீர்னு சிறுகதைகளாக வரத்துவங்கியுள்ளன, எழுத்தாளர் கிழுத்தாளர் ஆகிவிட்டாரோ என சந்தேகிக்கவேண்டாம் //

எழுத்தாளர் ஆதிக்கு ஒரு ரெக்வெஸ்ட்: ப்ளீஸ் ட்ராஃப்ட்லியே இருக்கட்டுமே :)

கார்க்கி said...

//எழுத்தாளர் ஆதிக்கு ஒரு ரெக்வெஸ்ட்: ப்ளீஸ் ட்ராஃப்ட்லியே இருக்கட்டுமே ://

அப்படி போடுங்க... நான் சொல்ல வந்ததும் இதேத்தான் :)))

கார்ல்ஸ்பெர்க் said...

//எழுத்தாளர் ஆதிமூல கிருஷ்ணன் வாழ்க.. //

-ரிப்பீட்டு..

Mahesh said...

என்னது... ப்ராக்டீசுக்காக கதை எழுதிப் பாக்கறீங்களா? இதெல்லாம் ரொம்ப ஓவர்.....

ஹ.... நாங்கள்லாம் ப்ராக்டீசே இல்லாம கவிதையே எழுதுவோம்... தெரியும்ல? நானும் வெச்சுருக்கேன்ல 40 கவிதைக ட்ராஃப்ட்ல... ஒண்ணொண்ணா எடுத்து விட்டா... அப்பறம் தெரியும் சேதி...

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி முரு.!
நன்றி பிரபாகர்.!

நன்றி பாண்டி.!
நன்றி கேபிள்.!

நன்றி ராஜா.!
நன்றி மயில்.!

நன்றி நாஞ்சில்.!
நன்றி பாலா.!

நன்றி தராசு.!
நன்றி கோஸ்ட்.!

நன்றி ஸ்ரீமதி.!
நன்றி அமித்து.! (அவ்வ்வ்வ்வ்வ்..)

நன்றி கார்க்கி.!
நன்றி கார்ல்ஸ்.!

நன்றி மகேஷ்.! (அய்யய்யோ.. வாணாம். நான் எழுதல.. எழுதல..)

எம்.எம்.அப்துல்லா said...

அருமை

பி.கு : டெம்ப்ளேட் பின்னூட்டம்

:)

T.V.Radhakrishnan said...

:-))

நர்சிம் said...

ஆதி, முந்தைய பதிவின் (திகில் புனைவு) மிக மிக அருமை.

இந்தப் பதிவின் முதல் பின்னூட்டம் புன்சிரிப்பு.

கலக்குங்க.

வித்யா said...

:)

அன்புடன் அருணா said...

//இது உண்மைக்கதை என்று நினைப்பவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன். //
இதுக்கு நாங்க தானே சிரிக்கணும்???

Achilles/அக்கிலீஸ் said...

சிறுகதை அருமை... :)

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

இய‌ற்கை said...

கத நல்லா இருக்குது
//இது உண்மைக்கதை என்று நினைப்பவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன்//

அப்படில்லாம் நினைக்க மாட்டோம்... உண்மைச் சம்பவத்துல பாலை பெட்ல கொட்டினா வார்த்தைப் பிரயோகம் ம‌ட்டுமா நடக்கும்?

Kathir said...

//2. இது உண்மைக்கதை என்று நினைப்பவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன். //

உண்மைக்கதை ன்னு நினைக்கலை...
உண்மைச்சம்பவம் ன்னு நினைக்கறோம்......

:))

ஆதிமூலகிருஷ்ணன் said...

அப்துல், டிவிஆர், நர்சிம், வித்யா, அருணா, அக்கிலீஸ், இயற்கை, கதிர்..

அனைவருக்கும் நன்றி.!

அ.மு.செய்யது said...

நானெல்லாம் வருசத்துக்கு ஒரு கதை எழுதுறதே பெரிசு..நீங்க பைஜாமா ஜிப்பா போட்டு ஜோல்னா
பை மாட்டாத கொற‌. அந்த அளவுக்கு கன்சிஸ்டன்டா போட்டுத் தாக்குறீங்க...

யாருக்கு யாரு போட்டி ??? ( நீங்கள் எனக்கு போட்ட பின்னூட்டத்துக்கு பதில் )

இந்த கதை: நல்லா இருக்கு.......கடைசியில இன்னும் கொஞ்சம் ரொமான்டிக் ஆக்கியிருக்கலாம்.

தமிழன்-கறுப்பி... said...

// என்னடா திடீர்னு சிறுகதைகளாக வரத்துவங்கியுள்ளன, எழுத்தாளர் கிழுத்தாளர் ஆகிவிட்டாரோ என சந்தேகிக்கவேண்டாம். //

அப்ப நீங்க இன்னும் எழுத்தாளர் ஆகலையா.?!!

:)

தமிழன்-கறுப்பி... said...

//இது உண்மைக்கதை என்று நினைப்பவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன். //


உங்ககிட்ட புடிச்சதே இந்த நேர்மைதான் அண்ணே..

:)

தமிழ்ப்பறவை said...

தலைப்பும், கதையும் சிம்பிள் பட் க்யூட்...
(டெம்ப்ளேட் பின்னூட்டமாகக் கருதிவிடாதீர்கள்...:-) )