Thursday, September 10, 2009

வல்லவன்

மேஜை மீதிருந்த டம்ளரை எடுத்தேன், சட்.. ஸ்லிப் ஆகி தண்ணீர் கொட்டிவிட்டது. அம்மா பார்த்தால் திட்டுவாள். மேஜை மீது நிறைய சிடிக்கள் இருந்தன. அப்பா எதற்கு இவ்வளவு சிடிக்கள் வாங்கிவைத்திருக்கிறார்.? எல்லாவற்றையும் பார்க்கவேண்டும் போல இருந்தது. அவற்றையெல்லாம் எடுத்து கீழே வைத்து பொறுமையாக உட்கார்ந்து கவர்களை திறந்து சிடிக்களை எடுத்துப்பார்த்துவிட்டு வெளியே வைத்தேன். திரும்பவும் அந்தந்த கவர்களில் போடலாம் என்று பார்த்தால் கொஞ்சம் குழப்பமாக இருந்தது. அதற்குள் வெளியே யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு வெளியே வந்தேன். பக்கத்து வீட்டு ஆன்டி. அம்மாவை பார்க்க வந்திருக்கிறாள். என்னைப்பார்த்ததும் 'ஹாய்' என்று சொல்லி ஹிஹிஹ்ஹி என்று இளித்தாள். அதற்குள் கிச்சனிலிருந்து அம்மா வந்துவிட்டதால் நானும் பதிலுக்கு சிரித்துவிட்டு மீண்டும் ஹாலுக்கு வந்தேன்.

கொஞ்ச நேரம் டிவி பார்க்கலாம். இதென்ன எந்த நேரமும் யாராவது பொலபொலன்னு பொலம்பிக்கிட்டே இருக்காங்க.. ஒண்ணுமே புரியமாட்டேங்குதே. சானல் மாத்தலாம்னா இந்த ரிமோட்டை காணோம். எங்கேயோ ஒளிச்சுவைச்சிருக்கானு நினைக்கிறேன். இதையாவது அம்மாகிட்ட கேக்கலாமா? வேண்டாம். வந்து கத்துவா.

அட.. இப்போதான் கவனிக்கிறேன். இந்தப்பேனா இங்கேக்கிடக்குதா? எடுத்து எதையாவது எழுதிக்கொண்டிருக்கலாம். டிவி அருகே இருந்த பேனாவை எடுத்து மூடியைத் திறந்து டீப்பாயில் கிடந்த பேப்பரில் எழுத ஆரம்பித்தேன். இந்தப்பேனா சரியில்லையே, பேப்பரில் வழுக்கிக்கொண்டே போகிறது. சரியாக எழுதவும் மாட்டேங்குது. தூர வீசிவிட்டு பெட்ரூமுக்குள் போனேன். அதற்குள் அம்மாவின் குரல் கேட்டது, "சாப்பாடு ரெடியாயிடுச்சு, சாப்பிடுறியாடா?". இவள் தொல்லை வேற.. அந்த டாக்டர் அன்னிக்கு வெயிட் பார்த்துட்டு கம்மியா இருக்கேன்னு சொன்னாலும் சொன்னார், கண்டதையும் பண்ணி வச்சுக்கிட்டு சாப்பிடு, சாப்பிடுன்னு உயிரை வாங்குறா. நான் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன். என் பதிலை அவள் எதிர்பார்த்தது போலவும் தெரியவில்லை.

ரொம்ப போரடிக்குதே.. என்ன பண்ணலாம்? போய் குளிக்கலாமா? ஆஹா.. குளிப்பதுதான் எவ்வளவு சுகம். போயிடவேண்டியதுதான். பாத்ரூமுக்குள் போனேன். சட், நல்லவேளை, கதவைப்பிடித்துக்கொண்டேன். இல்லாவிட்டால் விழுந்திருப்பேன். ஏன் இந்தத்தரை இவ்வளவு வழுக்குகிறது? சே.. நல்ல வேளை வாளியில் தண்ணீர் பிடித்துவைத்திருக்கிறாள். ஒரு மக்கில் தண்ணீரை எடுத்து மேலே ஊற்றிக்கொண்டேன். ஹ்ஹ்ஹ்ஹ் என்ன குளிர். அடுத்த மக்கை ஊற்றுவதற்குள் எப்படித்தான் தெரிகிறதோ.. இதோ வந்தேவிட்டாள்.. விருட்டென என்னைதூக்கி வெளியே கொண்டுவந்தாள்.

"எந்த நேரமும் தண்ணியிலயே விளையாடிக்கிட்டு.. என்ன சேட்டை? பொறு உன்னிய என்ன பண்றேன்னு?"

அழுகை அழுகையாக வந்தது. என்னை இடைஞ்சல் பண்றதவிட உனக்கு வேற வேலையே இல்லையா? என்று கேட்க நினைத்து இப்படிக் கத்தினேன்,

"ஊவ்வ்… வெவ்வ்வ்.. ஈய்ய்ய்ய்ங்ங்ங்ங்.."

.

33 comments:

நாடோடி இலக்கியன் said...

நல்லாயிருக்கு ஆதி.

ஆனால் சாப்பாடு மேட்டர் வந்தபோதே தெரிந்துவிட்டது.இருந்தாலும் நல்ல ஃபுளோ.

ஆதிமூலகிருஷ்ணன் said...

சாப்பாடு மேட்டர் வந்தபோதே தெரிந்துவிட்டது// அவ்வ்வ்..

நன்றி இலக்கியன்.!

Anonymous said...

சுபாவின் லீலைகள் :)

Bhuvanesh said...

நல்லா இருக்கு அண்ணே.. பாதியிலையே தெருஞ்சிருச்சு !!

ஆயில்யன் said...

வித்தியாசமானதொரு பார்வை பாதியில புரிஞ்சுடுச்சு! பட் இன்னும் நிறைய டிரை செய்யுங்க பாஸ் :)

பாலா said...

என்ன சின்ன புள்ளத்தனமால இருக்கு :))))))))))))))))))))))


இன்னம் நிறைய எதிர் பார்க்கிறோம்

யாசவி said...

can easily guess from beginning.

I planned to do the same but u won.

few of your posts I planned before but u finish in better way.

nice

:-)

☀நான் ஆதவன்☀ said...

ஆம் ஆதி பாதியிலயே தெரிந்துவிட்டது :)

ஆனாலும் நல்ல ஐடியா. பாராட்டுக்கள் :)

நாஞ்சில் நாதம் said...

ரெம்ப படுத்துறாரோ :))

துபாய் ராஜா said...

வித்தியாசமான சிந்தனை.

புதியதொரு முயற்சி.

தொடரட்டும் பரிசோதனைகள்.
(எலிகள் நாங்கள் எப்போதும் உங்களோடு... :))..)

Mahesh said...

எந்நேரமும் ப்ளாக்லயே உக்காந்து என்ன சேட்டை? கத எழுதறேன்... கத்திரிக்கா வதக்கறேன்னு...ம்??? பொறு... உன்னிய என்ன பண்றேன்னு?

வித்யா said...

தொடரட்டும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நானும் அந்த சாப்பாடு மேட்டர்லதான் கண்டுபுடிச்சேன் :)))))))))))

ஏங்க் ஊங்க் வாங்க்
(மறுபடியும் விளக்கம் கேட்காதீங்க)

Cable Sankar said...

/அதற்குள் அம்மாவின் குரல் கேட்டது, "சாப்பாடு ரெடியாயிடுச்சு, சாப்பிடுறியாடா?". இவள் தொல்லை வேற.. அந்த டாக்டர் அன்னிக்கு வெயிட் பார்த்துட்டு கம்மியா இருக்கேன்னு சொன்னாலும் சொன்னார், கண்டதையும் பண்ணி வச்சுக்கிட்டு சாப்பிடு, சாப்பிடுன்னு உயிரை வாங்குறா. நான் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன். என் பதிலை அவள் எதிர்பார்த்தது போலவும் தெரியவில்லை.

ரொம்ப போரடிக்குதே.. என்ன பண்ணலாம்? போய் குளிக்கலாமா? ஆஹா.. குளிப்பதுதான் எவ்வளவு

சுகம். போயிடவேண்டியதுதான். பாத்ரூமுக்குள் போனேன். //

இந்த மேட்ட்ரை தூக்கினா.. நீங்க எதிர்பார்த்த கடைசி டிவிஸ்ட் கிடைச்சிருக்கும். ஆதி..

ஸ்ரீமதி said...

நீங்க ஜெயிச்சிட்டீங்க அண்ணா.. எனக்கெல்லாம் புரியவே இல்ல..

கடைசி வரைக்கும். ;)))

ஆதிமூலகிருஷ்ணன் said...

சரி, சரி புரிஞ்சா வுட்டுறவேண்டியதுதானே.. இப்பிடி பச்சப்புள்ளயப் போட்டு இந்த குத்துகுத்துனா என்ன அர்த்தம்.. அதெல்லாம் நாங்க 'உரையாடல்' டிரெயினிங் எடுத்துட்டு வந்து புரியாத மாதிரி கதை எழுதிக்குவோம்.. விட்டுத்தள்ளுங்க.!

அம்மிணி, புவனேஷ், ஆயில்யன், பாலா, யாசவி (நானே ஒரு லேட்டு கேஸ், என்னைவிட லேட்டா நீங்க.. ஹிஹி), ஆதவன், நாஞ்சில், துபாய், மகேஷ், வித்யா, அமித்து, கேபிள், ஸ்ரீமதி (ஆறுதல் சொல்றீங்களா?)..

அனைவருக்கும் அன்பான நன்றி.!

அன்புடன் அருணா said...

பாதியிலியே புரியலைன்னு சொல்லமாட்டேன்...okva?

கார்ல்ஸ்பெர்க் said...

//நீங்க ஜெயிச்சிட்டீங்க அண்ணா.. எனக்கெல்லாம் புரியவே இல்ல//

-நம்ம மண்டைக்கும் கடைசியிலதான் புரிஞ்சுது.. :)

ஜானி வாக்கர் said...

வல்லவன் நல்லா வந்து இருக்கு ;)

வால்பையன் said...

நல்லா வந்துருக்கு!

கொஞ்சம் டிங்கரிங் பார்த்து விகடனுக்கு சிறுகதையாக அனுப்பியிருக்கலாம்!

தராசு said...

/// வால்பையன் said...
நல்லா வந்துருக்கு!

கொஞ்சம் டிங்கரிங் பார்த்து விகடனுக்கு சிறுகதையாக அனுப்பியிருக்கலாம்!//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

ஆதிமூலகிருஷ்ணன் said...

அருணா, கார்ல்ஸ், ஜானி, வால் (அதுக்காக வச்சிருந்ததுதான், அதுக்கென்ன இப்பன்னுதான் இங்கேயே போட்டுட்டேன்), தராசு (தல நாளைக்கு ஒரு டெக்னிகல் பதிவு இருக்குது. மறக்காம வந்துருங்க)..

அனைவருக்கும் நன்றி.!

Truth said...

ஹ ஹ ஹ... நல்லா இருக்கு ஆதி. அந்த டி.வி வரும் போதே தெரிந்தது இது சுபாவின் கதை என்று. ஆனாலும் ஃப்ளோ அமேசிங். வாழ்த்துக்கள் ஆதி.

அறிவிலி said...

சுபா சூப்பர்.

T.V.Radhakrishnan said...

நல்லாயிருக்கு

கும்க்கி said...

நல்ல ப்ளோ தோஸ்த்...

நடுவில் தெரிஞ்சா என்ன கொனையில தெரிஞ்சா என்ன..?
அருமையான தீம்.வழமையான நடை..இன்னும் கொஞ்சம் நீளம் எதிர்பார்த்தேன்.சுருக்கமாக முடித்துவிட்டீர்கள்.
நன்றி.

கும்க்கி said...

நல்ல எழுத்து நடை தொடரும்போது நம்மாளுங்க இன்னும் இன்னும் என எதிர்பார்க்கிறார்கள் போலிருகிறது.அது சரி ”ஓடுற குதிர மேல தானே பந்தயம் கட்ட முடியும்”

ILA said...

நல்ல கதைங்க.. அருமை.. கடைசி வரைக்கும் யோசனை பண்ணவே முடியல

இரா.சிவக்குமரன் said...

///கும்க்கி said...
September 10, 2009 9:38 PM
நல்ல எழுத்து நடை தொடரும்போது நம்மாளுங்க இன்னும் இன்னும் என எதிர்பார்க்கிறார்கள் போலிருகிறது.அது சரி ”ஓடுற குதிர மேல தானே பந்தயம் கட்ட முடியும்”///

ஆதி, இன்னும் இன்னும் இன்னும் உங்ககிட்ட நிறைய எதிர்பார்க்கறேன்.

கும்க்கி said...

இரா.சிவக்குமரன் said.

ஆதி, இன்னும் இன்னும் இன்னும் உங்ககிட்ட நிறைய எதிர்பார்க்கறேன்.

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே.......

ஆதிமூலகிருஷ்ணன் said...

ட்ரூத், அறிவிலி, டிவிஆர், கும்க்கி (ரொம்ப நாள் கழிச்சு வந்தாலும் சேர்த்து வச்சி பூஸ்ட் தந்திருக்கீங்க), இளா, சிவக்குமரன்.. அனைவருக்கும் நன்றி.!

தமிழ்ப்பறவை said...

ஓகே ந்னு சொல்லலாமா??!!!
குமுதம் ஒருபக்கக் கதை போல் இருக்கு...

அ.மு.செய்யது said...

நல்ல ஃப்ளோ.....நடத்துங்க....!!!!

சிறுகதை பட்டறைக்கு வரமுடியவில்லை என்ற வருத்தமாக இருக்கிறது.முடிந்ததும் உங்கள் ஸ்டைலில்
ஒரு பதிவிடுங்கள் !!!