Monday, September 14, 2009

'உரையாடல்' சிறுகதைப்பட்டறை : ஓர் அனுபவம்

முழுநாள் நிகழ்ச்சி என்பதால் வழக்கம்போல அல்லாமல் சில நாட்களுக்கு முன்னரே அலுவலக சம்பந்தமாக ஒரு 'பயிற்சி வகுப்பு' இருக்கிறது என்று ரமாவிடம் தெளிவாக பொய் சொல்லிவைத்திருந்தேன். இருப்பினும் அந்த நாள் வரும்முன் எங்கே நானே உண்மையை உளறிவிடுவேனோ என்றும் பயந்துகொண்டிருந்தேன். நல்லவேளையாக அப்படியேதும் நடக்காமல் திட்டம் நிறைவேறியது. அருகிலிருக்கும் நண்பர் நாஞ்சிலும் வீட்டில் இதே போன்ற பொய்யை டிட்டோவாக சொல்லிவிட்டு நடுங்கிக் கொண்டிருந்திருக்கிறார் என்று பின்னர் தெரிந்துகொண்டேன். அதுசரி, வீட்டுக்கு வீடு காலிங்பெல். 7 மணிக்கெல்லாம் இருவரும் கிளம்பினோம்.

இருவரும் தாமதமாகிவிட்டதே என்ற அவசரத்தில் தாம்பரத்தில் வண்டியைப் போட்டுவிட்டு ட்ரெயினில் (ஞாயிற்றுக்கிழமை அதிகாலையும் ஸ்டாண்டிங்தான்பா.. 7.45 அதிகாலைதானே) பயணித்து 'ரீஜென்சி' விடுதி அரங்கை அடைந்தபோது மணி 8.45. அதுதானே பார்த்தேன்.. தமிழ்நாட்டில்தானே இருக்கிறோம். சுமார் 15 பேர்தான் கூடியிருந்தனர். பின்னர் திட்டமிட்டபடி நண்பர்கள் அனைவரும் வந்து சேர்ந்து நிகழ்ச்சி சரியாக 10 மணிக்கு துவங்கியது. பிரபல பதிவர்கள் பலர் கூடியிருந்த அதே நேரம் புதியவர்கள் பலரையும் காணமுடிந்தது. நிதானமாக அனைவரையும் அறிமுகம் செய்துகொள்ளத்தான் முடியவில்லை. பதிவெழுதாவிட்டாலும் வலையுலகை தொடர்ந்து கவனித்து வருபவர்கள் (ஹிஹி.. வாசகர்கள்) சிலரும் கலந்துகொண்டதை அறியமுடிந்தது. மதுரை, கோவை, திருப்பூர் (தனியாக திருப்பூர்னு சொல்லலைன்னா உதைப்பாங்க) போன்ற தொலைதூரங்களிலிருந்து பிரபல பதிவர்கள் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பு செய்தனர். உமாசக்தி, ராமச்சந்திரன் உஷா, விதூஷ் ஆகிய பெண் பதிவர்களும் கலந்துகொண்டனர்.

DSC06693

முதலில் தனது சிறுகதை அனுபவம் குறித்து பாஸ்கர் சக்தி உரையாடினார். அவர் எழுதிய 'தக்ளி' கதையின் அனுபவம் குறித்து விளக்கமாக நினைவுகூர்ந்தார். எனது பள்ளிக் காலங்களில் அந்தக் கதையை படித்த நினைவு. யாரோ பழம்பெரும் எழுத்தாளர் எழுதியதாக இருக்கும் என்ற நினைப்பிலிருந்த நான் அது பாஸ்கர் சக்தி என்றறிந்து வியப்புற்றேன். தொடர்ந்து கேள்வி-பதில் பகுதியை அவர் எதிர்கொண்டார். நினைத்தது போலவே வெறுப்படைய வைக்கும் மொக்கைக்கேள்விகள், பதிலைப் புரிந்துகொள்ளாமல் வரும் ரிப்பீட்டுக்கேள்விகள் என கொஞ்சம் சிரமப்பட்டார். நல்ல வேளையாக அவருக்குப் பின் வந்த மற்ற எழுத்தாளர்களுக்கு இந்த நிலை நேரவில்லை, அந்த 'சித்தூர் சிறுகதையம்மன்'தான் அவர்களைக் காப்பாற்றியிருக்கவேண்டும்.

DSC06700

(பாஸ்கர் சக்தி)

தொடர்ந்து யுவன் சந்திரசேகர் இலக்கணங்களுக்குள், கட்டுகளுக்குள் அடங்காத தனது சிறுகதைகள் குறித்து உரையாடினார். நான் அவரது சிறுகதைகளை படித்திருக்காவிட்டாலும் (மற்றவர்களையெல்லாம் கரைத்துக் குடித்துவிட்டாயடா கண்மணி) அந்தப்பெயர் கவர்ச்சியோ, அவரது கவிதைகளை பிரபல இதழ்களில் கண்டதாலோ அவர் பெயருக்கென்று ஒரு கற்பனை இருந்தது என்னிடம். சில வருடங்களுக்கு முன்னர் ஒரு பிரபல எழுத்தாளரை அறிமுகம் செய்துகொண்ட போது முந்திரிக்கொட்டைத்தனமாக 'நீங்கள்தானே யுவன் சந்திரசேகர்?' என்று கேட்டு மூக்கிலேயே குத்துவாங்கிய நிகழ்ச்சி நினைவில் வந்துபோனது. தனது உறுதியான, ஆளுமையான பேச்சால் கூட்டத்தை பசி நேரம் தாண்டியும் கட்டிப்போட்டார். எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை பற்றிய பேச்சு வந்த போது கொஞ்சம் ஆவேசமாகவே கோபத்தைக்காட்டினார். அதுதான் பிரதானம், அதை முதலில் சரிசெய்து கொண்டு பின்னர் வைத்துக்கொள்ளலாம் உங்கள் படைப்புப் புண்ணாக்குகளை என்றார், நியாயம்தான். விட்டால் தவறாக எழுதுபவர்களை தேடி வந்து உதைப்பார் போலிருந்தது. (இதில் எத்தனை சந்திப்பிழைகள் உள்ளனவோ, அவர் படிக்க நேர்ந்தால்.. அவ்வ்வ்வ்). கேள்வி-பதிலின் போது கலகலப்புக்குப் பஞ்சமில்லாமல் தூள் பறந்தது.

DSC06773

(யுவன் சந்திரசேகர்)

நல்லதொரு மதிய உணவுக்குப் பின்னர் உலக சிறுகதைகள் மீதான ஒரு அறிமுகத்தைத் தந்தார் சா. தேவதாஸ். நல்ல அழகான கேட்டுக்கொண்டேயிருக்கலாம் போன்ற தமிழ்ப்பேச்சு அவருடையது. அவருடைய உலகளாவிய சிறுகதை வாசிப்பு மற்றும் மொழிபெயர்ப்புக்கு அவர் எவ்வளவு வாசித்திருக்கவேண்டும் என்ற எண்ணம் பிரமிப்பைத்தந்தது. (இன்னும் உள்ளூர் சிறுகதைகளையே உருப்படியாக வாசித்திராத நானெல்லாம் என்றைக்கு உலக சிறுகதைகளை.. வாசித்துக் கொண்டாடி.. ஹூம்).

DSC06811

(சா.தேவதாஸ்)

பின்னர் 'பவர்பாயிண்ட்' பிரசண்டேஷனுடன் துவக்கநிலை எழுத்தாளர்கள் பத்திரிகைகளுக்கான சிறுகதைகளை எப்படி எழுத வேண்டும், தயார் படுத்திக்கொள்ளவேண்டும் என்று தன் பகுதியை துவங்கினார் பா.ராகவன். கல்கி மற்றும் குமுதத்தில் பல ஆண்டுகள் கதைத்தேர்வுப் பணியை அவர் எவ்வாறு செய்தார் என்பதையும், உதவி ஆசிரியர்களின் மனநிலையும், கொடும்பணியும் எவ்வாறு இருக்கும் என்பதையும் நகைச்சுவை ததும்ப எடுத்துரைத்தார். முதலில் நன்கு பயிற்சி எடுத்துக்கொண்டு, டிபிகல் கதைகளை எழுதுவதில் தேர்ந்த பின்னர் பிற கட்டுடைப்பு முயற்சிகளை செய்துபார்க்கலாம் என்பதை வலியுறுத்தினார். அதற்கும் பிரதானமாக ஏன் எழுதுகிறோம் புகழுக்காகவா? பணத்துக்காகவா? பகிர்ந்துகொள்ளும் மகிழ்ச்சிக்காகவா? என்பதில் ஒரு தெளிவு வேண்டும் என்றார். இந்த வரிசையில் பணத்துக்காகவா? என்ற கேள்வி வந்ததும் தமிழ்ச்சூழலில் எழுதி பணம் சம்பாதிக்கமுடியம் என்பதில் நம்பிக்கையில்லாத பலரும் (அனைவரும்) நகைக்க எத்தனித்தனர். ஆனால் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதையும் பின்னர் மெலிதாக குறிப்பிட்டார் பா.ராகவன்.

DSC06821

(பா.ராகவன்)

இறுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி குறித்த புத்தகங்கள் வழங்கப்பட்டன. பொதுவாக மறக்க இயலாத நல்லதொரு அனுபவமாகவும், தொடர்ந்து சிறுகதைகள் எழுத முயற்சிக்கலாம் என்ற நம்பிக்கையையும் இந்த பட்டறை எனக்குத்தந்தது. மேலும் ஒரு மெகா சைஸ் பதிவர் சந்திப்பாகவும் அமைந்தது. டோண்டு, உண்மைத்தமிழன், லக்கி, அதிஷா, பரிசல், பொன்.வாசுதேவன், வடகரை வேலன், கார்க்கி, முரளி, வால்பையன், கேபிள்சங்கர், வெயிலான் போன்ற பிரபல பதிவர்களை ஒரே நேரத்தில் காணமுடிந்த அதே நேரம் நிறைய புதியவர்களையும் (பெயர்களை எழுதினால் கம்பெனி தாங்காது) பார்த்து மகிழமுடிந்தது.

இவ்வரிய நிகழ்வை நிகழ்த்திக்காட்டிய பைத்தியக்காரன், ஜ்யோவ்ராம் சுந்தர் இணைக்கும், அதற்கு உறுதுணையாக நின்ற 'கிழக்கு' பத்ரி, நர்சிம் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

The 4

(பைத்தியக்காரன், ஜ்யோவ்ராம்சுந்தர், பத்ரி, நர்சிம்)

சுமார் 7 மணிக்கு விழா இனிதே நிறைவு பெற்றது. பின்னர் அனைவரும் கிளம்ப அன்றே ஊருக்குக்கிளம்ப வேண்டிய ஒரு பதிவர்குழுவுடன் இணைந்து செண்ட்ரல் அருகிலிருந்த ஒரு உணவகத்துக்குச்சென்றேன் (கொண்டுசெல்லப்பட்டேன் என்றும் சொல்லலாம்). ரமாவை மனக்கண்ணில் நிறுத்திக்கொண்டதால் என் கைகள் பெப்ஸி பாட்டிலை மட்டுமே கைக்கொண்டது. ஹாஃப் காலியான நிலையில் (ஹிஹி.. பியர் பாட்டில்தான்) ஒரு பிரபல பதிவர் என்னனப்பார்த்து நீங்கள்தான் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் என்றார் கொஞ்சம் சீரியஸாகவே. கார்க்கியின் புட்டிக்கதைகளில் வரும் ஏழு காரெக்டர் யாருடைய இன்ஸ்பிரேஷனில் உருவாக்கப்பட்டது என்ற ரகசியம் கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு விளங்கத்துவங்கியது.

.

42 comments:

எம்.எம்.அப்துல்லா said...

i missed all you செல்லம்ஸ் :(

ஆதிமூலகிருஷ்ணன் said...

என்ன செல்லம் வேண்டிகிடக்குது.. வயித்தெரிச்சலை கிளப்பாம போயிடும் சொல்லிப்புட்டேன்.!

Anonymous said...

என்ன நடக்குது அப்துல்லாவுக்கும் ஆதிக்கும் நடுவுல. ரொம்ப கொஞ்சிக்கறீங்க :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தலைப்பில் ‘, “ : எல்லாம் உபயோகித்தால் தமிழ்மண முகப்பில் வராது :)

அமுதா கிருஷ்ணா said...

i missed all you brothers!!!

முரளிகுமார் பத்மநாபன் said...

அண்ணே வணக்கம், ஆமா தெரியாமத்தான் கேக்குறேன், யாருண்ணே, அந்த ஏழு. பக்கத்துலையே இருந்தும் தெரியாம போச்சே! :-)

கார்க்கி said...

//எம்.எம்.அப்துல்லா said...
i missed all you செல்லம்ஸ் :(
/

எல்லோரும் எஸ்கேப்... :))))

அ.மு.செய்யது said...

ப‌திவுக்கு ந‌ன்றிண்ணே !!! அச‌த்த‌லா எழுதியிருக்கீங்க‌ !!!
சிறுக‌தையை ப‌ட்ட‌றையை நான் ரொம்ப‌வே மிஸ் ப‌ண்ணேன் !

இந்த‌ ப‌யிற்சிக்கு பிற‌கு,மெருகேறிய‌ உங்க‌ள் சிறுக‌தைக‌ளை எதிர்பார்க்கிறேன்.

என். உலகநாதன் said...

//முழுநாள் நிகழ்ச்சி என்பதால் வழக்கம்போல அல்லாமல் சில நாட்களுக்கு முன்னரே அலுவலக சம்பந்தமாக ஒரு 'பயிற்சி வகுப்பு' இருக்கிறது என்று ரமாவிடம் தெளிவாக பொய் சொல்லிவைத்திருந்தேன்//

நல்ல விசயத்துக்கு போகும்போது உண்மையை சொல்லி விட்டு போனால் என்ன?

மண்குதிரை said...

thanks for sharing

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...
தலைப்பில் ‘, “ : எல்லாம் உபயோகித்தால் தமிழ்மண முகப்பில் வராது :)

haahaaahaaaaaa

ஏன் எப்பவுமே உங்க பதிவ படிச்சுட்டு கமெண்ட் போட வந்தா நடுவுல ஏதாவது பின்னூட்டத்தைப் பார்த்து சிரிக்கவேண்டி வருது.:)))))

வர முடியாம போச்சு, :(
உங்களின் ட்ரேட் மார்க் வசனங்களோடு பகிர்ந்ததற்கு நன்றி

தராசு said...

யோவ் பட்டறையைப் பத்தி மாத்திரம் எழுது, அவனவன் கலந்துக்க முடியலையேங்கற வயித்தெரிச்சல்ல இருக்கான், இதுல உங்க வீட்ல என்ன நடந்தது, நாஞ்சில் வீட்ல என்ன நடந்ததுன்னெல்லாம் நாங்க கேட்டமா?????

ஆயில்யன் said...

என்ன நடக்குது அப்துல்லாவுக்கும் ஆதிக்கும் நடுவுல. ரொம்ப கொஞ்சிக்கறீங்க :)

ஆயில்யன் said...

தலைப்பில் ‘, “ : எல்லாம் உபயோகித்தால் தமிழ்மண முகப்பில் வராது :)

:)))))

வால்பையன் said...

ஆமாம், நல்லதொரு அனுபவம்!

நாஞ்சில் நாதம் said...

படமெல்லாம் அருமையா புடுச்சுருக்கீங்க.

/// நல்ல விசயத்துக்கு போகும்போது உண்மையை சொல்லி விட்டு போனால் என்ன? ///

யாருக்கு அண்ணாச்சி நல்ல விஷயம்?

ஆதி இவருக்கு ஒரு தங்கமணி ட்ரைனிங் ப்ரோக்ராம் ஷெட்யூல் பண்ணுங்க. பிஞ்சு மூஞ்சியா இருக்காரு.

முரளிகுமார் பத்மநாபன் said...

நாஞ்சில் நாதம் வாழ்க
நாஞ்சில் நாதம் வாழ்க
நாஞ்சில் நாதம் வாழ்க

நாஞ்சில் நாதம் said...

படமெல்லாம் அருமையா புடுச்சுருக்கீங்க.

/// நல்ல விசயத்துக்கு போகும்போது உண்மையை சொல்லி விட்டு போனால் என்ன? ///

யாருக்கு அண்ணாச்சி நல்ல விஷயம்?

ஆதி இவருக்கு ஒரு தங்கமணி ட்ரைனிங் ப்ரோக்ராம் ஷெட்யூல் பண்ணுங்க. பிஞ்சு மூஞ்சியா இருக்காரு.

என்ன்னா ஒரு வில்லத்தனம்? நம்பள மாட்டி விடுறதுல

" உழவன் " " Uzhavan " said...

ஃபியரோட ஆரம்பிச்சு பீரோட முடிச்சிருந்த விதம் நல்லா ஒரு கிக்காதான் இருக்கு. சூப்பர்
பல புதிய எழுத்தாளர்களுக்கு மிக அதிகமாகவே பயன்பட்டிருக்கும்.
சிறப்பாக நடத்திய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.

அன்புடன்
உழவன்

நர்சிம் said...

யோவ்..எல்லாம் சரிதான் என் ஃபோட்டோவ எதுக்குய்யா பை.ஜ்யோவ் கூட சேர்த்துப் போட்டு இருக்கீரு? நேத்துக்கூட நல்லாத்தான பேசுனீரு?

Cable Sankar said...

நிஜமாவே பெப்ஸியை ஏன் லார்ஜு, லார்ஜுனு சொன்னிங்க ? :)

ராஜா | KVR said...

//எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை பற்றிய பேச்சு வந்த போது கொஞ்சம் ஆவேசமாகவே கோபத்தைக்காட்டினார். அதுதான் பிரதானம், அதை முதலில் சரிசெய்து கொண்டு பின்னர் வைத்துக்கொள்ளலாம் உங்கள் படைப்புப் புண்ணாக்குகளை என்றார், நியாயம்தான்//

எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை இல்லாமல், குறிப்பாக சந்திப்பிழை இல்லாமல் எழுதுவது ஒரு பெரிய சவால் தான். படைப்புகளை கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தும் தமிழில் பிழையில்லாமல் எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருப்பவர்களை நோக்கிய கோபமாகவே தோன்றுகிறது.

நல்ல பகிர்வு ஆதி.

செல்வா said...

பட்டறை முடிஞ்சது. சரி. அடுத்த கதைய வெயிட்டா எதிர்பார்க்கலாம்தானே....?

நாடோடி இலக்கியன் said...

நல்ல தொகுத்திருக்கீங்க ஆதி.
ரொம்ப நல்ல அனுபவமாக இருந்தது.
யுவன் சாரின் பதில்கள் பட்டாசென்றால், தேவதாஸ் ஐயாவின் ஆழ்ந்த இலக்கிய வாசிப்ப மிரட்டலா இருந்தது. பா.ரா வின் பவர்பாயிண்ட் ஷோ ரொம்பவும் பயனுள்ளதாக இருந்தது.பாஸ்கர் சக்தியின் தக்ளி கதையனுபவம் அருமையாக இருந்தது.


மேலும் எனக்கு பிடித்த எழுத்தாளர்களான நர்சிம்,ஆதியை நேரில் பார்த்து உரையாடியது மட்டற்ற மகிழ்ச்சியதைத் தந்தது.

கும்க்கி said...

கார்க்கியின் புட்டிக்கதைகளில் வரும் ஏழு காரெக்டர் யாருடைய இன்ஸ்பிரேஷனில் உருவாக்கப்பட்டது என்ற ரகசியம் கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு விளங்கத்துவங்கியது...

இஃகி..இஃகி.இஃகி..

கும்க்கி said...

நாஞ்சில் நாதம் வாழ்க
நாஞ்சில் நாதம் வாழ்க
நாஞ்சில் நாதம் வாழ்க
நாஞ்சில் நாதம் வாழ்க
நாஞ்சில் நாதம் வாழ்க
நாஞ்சில் நாதம் வாழ்க
நாஞ்சில் நாதம் வாழ்க

அளவுக்கு தக்க கூவுனுமுல்ல.....

கும்க்கி said...
This comment has been removed by the author.
இராகவன் நைஜிரியா said...

நானும் தவறவிட்டவர்கள் லிஸ்டில் இருக்கின்றேன். எனக்கு வேறு வழியில்லை .. அதனால் நீங்க எல்லோரும் எழுதும் இடுகைகளைப் படித்து மனதை சந்தோஷப் படுத்திக்க வேண்டியதுதான்.

இராகவன் நைஜிரியா said...

உங்களை எல்லாம் பார்க்கும் போது கொஞ்சம் பொறாமையாகத்தாங்க இருக்கு. இதுக்கெல்லாம் பொறாமைப் பட்டா உடம்புக்கு ஆகாது என்பதால்............ ------- (நீங்களே மிச்சத்தை எழுதிக்குங்க)

இராகவன் நைஜிரியா said...

புலம்பல்கள் வலைப் பதிவில் வந்து புலம்பத்தான் முடியுதுப்பா...:-)

குசும்பன் said...

சும்மாவே ஒரு கதை எழுதிட்டு அதுக்கு நாளு நாளைக்கு தட்டி வச்சு ஆள் புடிப்பீங்க, இதுல பட்டறைக்கு எல்லாம் போய்ட்டு வந்துட்டீங்களா? இனி என்ன ஆகுமோ.....ஆண்டவா எங்களை ஆதிக்கிட்ட இருந்து காப்பாத்து வேட்டைக்காரனை நாங்கள் சமாளிச்சுக்கிறோம்!!!

Vidhoosh/விதூஷ் said...

:))
--வித்யா

"அகநாழிகை" பொன்.வாசுதேவன் said...

ஆதி,
நல்லா எழுதியிருக்கீங்க.

‘அகநாழிகை‘ பற்றிய அறிவிப்பை தங்கள் வலைப்பக்கத்தில் வெளியிட்டதற்கு என் நன்றியும், அன்பும்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

அன்புடன் அருணா said...

ம்ம்ம்..பொறாமையா இருக்கு!

அறிவிலி said...

உங்க ஸ்டைல்ல நல்ல தொகுப்பு.


//பொதுவாக மறக்க இயலாத நல்லதொரு அனுபவமாகவும், தொடர்ந்து சிறுகதைகள் எழுத முயற்சிக்கலாம் என்ற நம்பிக்கையையும் இந்த பட்டறை எனக்குத்தந்தது//

அது.

ஆதிமூலகிருஷ்ணன் said...

அம்மிணி
சுந்தர்ஜி (வட போச்சே.! கொஞ்சம் முன்னாடியே சொல்லித்தொலைக்கப்பிடாதா?)
அமுதா
முரளிகுமார்
கார்க்கி
செய்யது (ரொம்பதான் எதிர்பார்க்குறீங்க தம்பி. மரத்தை சுத்துன உடனே வயித்தை தடவிப்பார்க்குறமாதிரி)
உலகநாதன் (கீழ பதிலைப் பார்த்தீங்களா?)
மண்குதிரை
அமித்துஅம்மா (பதிவுதான் இப்பிடி, பின்னூட்டங்களாவது சுவாரசியமாக இருக்குதேனு சந்தோஷப்பட்டுக்குவேன் அப்பப்ப..)
தராசு
ஆயில்யன் (முந்தின பதிவுக்கு உங்களை எதிர்பார்த்தேனே)
வால்பையன்
நாஞ்சில்
உழவன்
நர்சிம்
கேபிள் (சிலர் வாயிலேயே குத்தலாமான்னு யோசிக்கிறேன்)
ராஜா (ஹிஹி.. நீங்க எழுதுன பதிலிலும் ஒரு சந்திப்பிழை உள்ளது)
செல்வா
இலக்கியன் (ரொம்ப நக்கல் புடிச்சவருய்யா நீங்க)
இராகவன் (கூல் பாஸ்)
குசும்பன் (யோவ்.. டேமேஜர், நறநற..)
விதூஷ்
வாசுதேவன்..

அனைவருக்கும் அன்பான நன்றிகள்.!

☼ வெயிலான் said...

யுவனோட படம் எடுக்கும் போதே பார்த்தேன். ரொம்ப அம்சமா வந்திருக்கு.

தமிழ்ப்பறவை said...

சுருக்கமா,சுவாரஸ்யமான பகிர்வு.. படங்கள் அட்டகாசம்...
வரக் கொடுத்துவைக்கலை... :-(

துபாய் ராஜா said...

படங்களும்,பகிர்வும் அருமை ஆதி.

ராஜன் said...

நன்றிகள்...

யாத்ரா said...

ரொம்ப நல்ல பகிர்வு, எல்லாருக்கும் நிறைவாய் அமைந்த நிகழ்ச்சி, எல்லாரையும் சந்திக்க முடிந்ததிலும் மிக்க மகிழ்ச்சி.நீங்கள் நிகழ்வை அருமையாக பகிர்ந்திருக்கிறீர்கள் மிக்க நன்றி.

மங்களூர் சிவா said...

nice!