Wednesday, September 16, 2009

இன்னொரு முகம்

சில பல வருடங்களுக்கு முன் நம் கலைத்தாகத்துக்கு கவிதைகளும், ஓவியமும்தான் வடிகால். இப்போதான் நீங்க இருக்கீங்களே.! அதனால் இப்போது அதெல்லாம் பண்ணுவதில்லை. நானும் இதுவரை என் பல திறமைகளை உங்களிடம் காட்டி மிரட்டியிருக்கிறேன் அல்லவா? இந்த ஓவியத்திறமை மட்டும் பாக்கியிருந்தது. அதையேன் பாக்கிவைக்கவேண்டும் என்று பழைய நோட்டுப்புத்தகங்களை புரட்டி நண்பர்கள் லவுட்டிக்கொண்டு போனவை, கிழிந்து போனவை, தொலைந்து போனவை (2005ல் என்னைக்கவர்ந்த பெண் செலிபிரட்டிகளை நான் வரைந்து வைத்திருந்த என் ஓவிய நோட்டை சென்னை கோவை பேருந்தில் தவறவிட்டது என் வாழ்நாள் சோகம்) போக மிச்சமிருந்த படங்களில் ஒன்று உங்கள் பார்வைக்கு.. 2003ல் வரைந்தது. இதில் இருக்கும் கூடுதல் ஸ்பெஷலை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.


பி.கு : எப்படி கவிதைன்னா காதல் மட்டும்தான் என்பது போல படம் என்றால் கார்ட்டூனோ, ஓவியமோ, போர்ட்ரெய்டோ பெண்கள் மட்டும்தான் என்பது நம் கொள்கை. யோசித்துப்பார்க்கிறேன்.. இயற்கைக்காட்சிகளோ, ஆண்களோ இதுவரை வரைந்ததேயில்லை என்றுதான் நினைக்கிறேன்.
.

42 comments:

இரா.சிவக்குமரன் said...

கருத்து சொல்லனுமான்னு யோசிச்சிக்கிட்டே இருக்கேன்!

Cable Sankar said...

/ இதில் இருக்கும் கூடுதல் ஸ்பெஷலை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.//

நீங்கள் படத்தை மடிக்கும் போது அதில் வரும் லைட்டிங் அல்லது ஷேட்.. நன்றாக இருக்கிறது..

அப்புறம் ஒரு யூத்தான் கவனிப்பு எல்லா படத்திலும் டென்னிஸ்கோர்ட்டாக இருக்கிறது..:)

ஜானி வாக்கர் said...

நல்லாவே இருக்கு உங்க ஓவியம், கூடுதல் சிறப்பை ரசித்தேன்.

pappu said...

ஆண்கள வரையத்தேவையில்லங்கறேன்!
ஆண்கள வரைஞ்சு என்ன பிரயோஜனம்!
அத பொண்ணுக வரைஞ்சுகட்டும்!
நம்ம ஸ்பெஷாலிட்டிய விட்டுக்கொடுக்க கூடாது.

தமிழ்ப்பறவை said...

பிரமாதம் ஆதி சார்....
//(2005ல் என்னைக்கவர்ந்த பெண் செலிபிரட்டிகளை நான் வரைந்து வைத்திருந்த என் ஓவிய நோட்டை சென்னை கோவை பேருந்தில் தவறவிட்டது என் வாழ்நாள் சோகம்)//
வருந்துகிறேன்...
மற்றையப் படங்களையும் எதிர்பார்க்கிறேன்...
ஹாட் ஸ்பாட் படங்கள் மட்டுமின்றி கோல்ட்ஸ்பாட் படங்களும் பதிவிடவும்..
இதில்கூட வித்தியாசப்படுத்திக் காட்டும் கூடுதல் சிறப்பு அழகு...

"அகநாழிகை" பொன்.வாசுதேவன் said...

ஆதி,
அப்பவே ஆரம்பிச்சாச்சா ?
நல்லாயிருக்கு.

ஆயில்யன் said...

//இதில் இருக்கும் கூடுதல் ஸ்பெஷலை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.//

புரியுது ஆனா புரியல!

படத்தை தொட்டு பார்த்து தெரிஞ்சுகிடலாம்ன்னா அதுவும் முடியல :(

முரளிகுமார் பத்மநாபன் said...

க க போ

பரிசல்காரன் said...

ஆதி..

கலக்கல்யா... இன்னும் என்னென்ன திறமையை ஒளிச்சு வெச்சிருக்கீங்களோ..

எம்.எம்.அப்துல்லா said...

.//யோசித்துப்பார்க்கிறேன்.. இயற்கைக்காட்சிகளோ, ஆண்களோ இதுவரை வரைந்ததேயில்லை என்றுதான் நினைக்கிறேன்.
//

பெண்களை வரைந்தபின் இயற்கைக்காட்சி என்று தனியாக உண்டா என்ன??

கே.ரவிஷங்கர் said...

பின் நவீனத்துவம்? இளமை நினைவுகள்
காலத்தால் அழிக்கமுடியாதது.நல்லா இருக்கு.

ஓவியர் ஜெ... யின் தாக்கம் தெரிகிறார் போல் இருக்கிறது.

வாழ்த்துக்கள்!

சூரியன் said...

என்னத்த சொல்ல... :)

பாலா said...

இததான் பிறவி கலைஞன்னு சொல்றதோ ??!!!!!!!!!!!

குசும்பன் said...

//ஓவியமும்தான் வடிகால். //

ஆமாங்க புரியுது உங்க கஷ்டம்:))) சிலருக்கு சிடி சிலருக்கு ஓவியம் போல...ம்ம்ம்ம்

குசும்பன் said...

காலையில் பழய பேப்பர் காரனை வீட்டுக்கு அனுப்பிவிட்டு மாலை வீட்டுக்கு போன நீங்க அதன் பிறகு காணவில்லை கேட்டா பைக்கில் இருந்து கீழே விழுந்துட்டேன் ”அடி” எல்லாம் ஊமை காயம் என்று சொன்னதன் உண்மையான காரணம் இப்ப புரியுது.

அம்மணி கண்ணி எப்படி இந்த நோட்டு மாட்டாமல் போனது?

குசும்பன் said...

//இருக்கும் கூடுதல் ஸ்பெஷலை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.//

கூடுதல் ஸ்பெசல் மாதிரி ஒன்னும் தெரியலையே, நார்மல் மாதிரிதான் தெரியுது:))))

குசும்பன் said...

இதோட 101வது முறையா பேஜ்ஜை ரெப்ரஸ் செஞ்சு பார்த்துட்டேன் அடுத்த பக்கத்துக்கு போக மாட்டேங்குது சீக்கிரம் திருப்பும் ஒய்...

கிறுக்கல் கிறுக்கன் said...

கலக்கல், உங்கள் கலை

நாஞ்சில் நாதம் said...

பல முக மன்னன் ஜே மாதிரி பல
க(கொ)லை மனனன் ஆதி வாழ்க.

இததான் பிறவி க(கொ)லைஞன்னு சொல்றதோ ??!!!!!!!!!!!

Rangs said...

மற்றையப் படங்களையும் எதிர்பார்க்கிறேன்...

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

எப்பூடி ஆதி உங்களால மட்டும் முடியுது?
இன்னும் எத்தனை முகம் ஒளிச்சு வச்சிருக்கிங்க?

நாடோடி இலக்கியன் said...

கலக்கல் ஆதி.

இந்த படங்களைப் பார்த்ததும் ஊருக்கு போய் என்னோட ஓவிய நோட்டையும் எடுத்து வரணும்னு தோணுது.உங்க அளவிற்கு இல்லாவிடினும் ஓரளவு நானும் வரைவேன்,நான் வரைந்து வைத்திருப்பதும் பெண்கள் பெண்கள் பெண்கள் மட்டும் தான்.

இரா.சிவக்குமரன் said...

/// நாடோடி இலக்கியன் said...
கலக்கல் ஆதி.

இந்த படங்களைப் பார்த்ததும் ஊருக்கு போய் என்னோட ஓவிய நோட்டையும் எடுத்து வரணும்னு தோணுது.உங்க அளவிற்கு இல்லாவிடினும் ஓரளவு நானும் வரைவேன்,நான் வரைந்து வைத்திருப்பதும் பெண்கள் பெண்கள் பெண்கள் மட்டும் தான்.///

ஹூம்...வெளங்........ம்

வெயிலான் said...

நல்ல க்ரியேட்டிவிட்டி ஆதி!

மின்னுது மின்னல் said...

:)

::))

Truth said...

கலக்கிட்டீங்க ஆதி.

அ.மு.செய்யது said...

you are blessed with bunch of talents aadhi annaey !!!!!!

attagasam !!!

இந்த படம் வரைஞ்சது வீட்டில தெரியுமா ??

ஆதிமூலகிருஷ்ணன் said...

சீவக்குமரன், கோபிள்சங்கர், ஜாணி, பப்பி, தமிழ்பரவை, பொன். வாசுதவன், அயில்யன், முரலிகுமார், பரிசள், ஆப்துல்லா, ராவிஷங்கர், சுரியன், பலா, குசும்பான், கிருக்கன், நஞ்சில், ராங்க்ஸ், பலகுமாரன், இளக்கியன், வெயிழான், மிண்ணல், ட்றுத், செய்யாது..

அனைவருக்கும் நன்றி.! (ஏன் இந்த கொலவெறின்னு பாக்குறீங்களா? நாளைக்கு ஒரு கதை எழுத தலைய பிச்சிக்கினு இருந்தேன். அதுல கொஞ்சம் கொழம்பிட்டேன்.. ஹிஹி..)

பட்டிக்காட்டான்.. said...

நல்லாயிருக்குங்க..

cheena (சீனா) said...

அன்பின் ஆதி

அருமை அருமை - ஓவியம் அருமை - திறமைக்கு நல்வாழ்த்துகள்

அப்பாவி முரு said...

அந்தப் புள்ளைக்கி துணிய மாட்டிவிட்டதால, அந்த பொண்ணுக்கு நீங்க என்ன முறை வரும்?

அப்பாவி முரு said...

Question first.,

Comments next.

மங்களூர் சிவா said...

சூப்பர்!

மணிகண்டன் said...

நல்லா இருக்கு ஆதி.

Anonymous said...

Hi,
I did a similar thing (as u turn pages dresses wil reduce) in a card for my frnds birth day card (that was during 2000- college days)

nice drawing...

reg, madhan

செல்வேந்திரன் said...

பத்து வருஷத்துக்கு முன்னாலயும் உம்ம புத்தி இப்படித்தான் இருந்திருக்கு பார்த்தீரா...?!

Karthik said...

ஆஹா!! ஏகப்பட்ட திறமைகள் இருக்கும் போலிருக்கே?! முன்னாடியே கேட்டுர்றேன், பாடுவீங்களா?? :)

வால்பையன் said...

முப்பரிணாம ஓவியம் முயற்சி செய்துள்ளீர்கள்!

நான் பல முறை தோற்றிருக்கிறேன்
எனக்கு கொஞ்சம் சொல்லி கொடுங்களேன் குரு!

யாத்ரா said...

ரொம்ப பிடிச்சிருக்குங்க உங்க ஓவியங்களும்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

பட்டிக்காட்டான்,
சீனா,
முரு (ஒரு வேளை முறைப்பெண் முறை வருமோ?),
சிவா,
மணிகண்டன்,
பவர்,
செல்வா,
கார்த்திக் (அது ஒண்ணுதான் நம்பகிட்ட வம்பு பண்ணுது. டிரை பண்ணிடவா? ஹ்ஹி),
வால்பையன்,
யாத்ரா..

அனைவருக்கும் நன்றி.!

ஊர்சுற்றி said...

ஆதீதீதீ.... கலக்கிட்டீங்க போங்க!
மீண்டும் ஒருமுறை! :)

ஆதவா said...

ரொம்ப நல்லாயிருக்குங்க. ஓவியத்தோட இரண்டாவது பக்கத்தை நீங்க முழுசா காமிச்சிருக்கலாம்!! நல்ல ஐடியா!
///கார்ட்டூனோ, ஓவியமோ, போர்ட்ரெய்டோ பெண்கள் மட்டும்தான் என்பது நம் கொள்கை.///
உண்மையிலேயே ஆண்களை வரைவதை விட பெண்களை வரைவது கொஞ்ஞ்ஞ்சம் சிரமம்தான். யோசிச்சு பார்த்தேன்... நானும் இதுவரைக்கும் ஆண்களை வரைஞ்சதேயில்லை (பென்சில் ஸ்கெட்ச் மட்டும்)

வாழ்த்துக்கள்.