Saturday, September 19, 2009

உன்னைப்போல் ஒருவன் - விமர்சனம்

இதுவும் தமிழ்சினிமா காலங்காலமாய் கண்டுகொண்டிருக்கும் நடக்க இயலாத, அநீதிக்கு எதிராக ஹீரோ ஆக்ஷன் அவதாரம் எடுக்கும், ரசிகனுக்கு சுகமான இன்னொரு ஃபேன்டஸி ஹீரோயிஸ‌க்கதைதான்.

ஆனால் நமது ஆச்சரியம் யாதெனின் அதே கதையை, இது வரை நீங்கள் பார்த்திருக்கமுடியாத கோணத்தில், பல்லி சண்டைகள், குத்து டான்ஸ், மொக்கை ஹீரோயின் இவை எதுவுமே இல்லாமல் சொல்ல‌முடியுமா என்பதுதான். கமல்ஹாசன், சக்ரி டோலெட்டி கூட்டணி அதை நிகழ்த்திக்காட்டியிருக்கிறது. சமீபத்தில் இவ்வளவு விறுவிறுப்பான சினிமாவைக் கண்டதாக நினைவில்லை. படம் கிளைமாக்ஸை நெருங்கியிருக்கையில் ஒரே ஒரு வருத்தம்தான், இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சு போச்சே என்று.

கமலின் சமீபத்திய படங்கள் என்னதான் பிடித்திருந்தாலும் மனதின் ஓரத்தில் ஒரு சின்ன அதிருப்தி நிலவும்.. அதை கொஞ்சம் அப்படிப் பண்ணியிருக்கலாமோ, இதை இப்படிப் பண்ணியிருக்கவேண்டாமோ என்று. இதில் அப்படியில்லாமல் முழு மகிழ்ச்சியை உணர்ந்தேன். குறிப்பாக இந்தப்படத்தில் பாடல்கள் இல்லை. (டிவியில் கூட இந்த சினிமா பாடல்களை கொஞ்சம் சகித்துக்கொண்டு பார்த்துவிடலாம், முடியாவிட்டாலும் இருக்கவே இருக்கிறது ரிமோட். ஆனால் தியேட்டரில்? பாடல்களுக்கும், குத்து டான்ஸுக்கும் பயந்துதான் நான் தியேட்டர்களுக்கு சமீபகாலமாக போவதேயில்லை).

கதையை இதற்குள் பல விமர்சனங்களிலிருந்து தெரிந்துகொண்டிருப்பீர்கள். ஏற்கனவே பலரும் குறிப்பிட்டபடி படத்தின் திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஆர்ட் ஆகியன ஆகச்சிறந்தவை. சில லாஜிக் பிரச்சினைகளை இனி படம் பார்க்கச் செல்ப‌வர்களின் சுவாரசியம் கருதி குறிப்பிடவேண்டியதில்லை என நினைக்கிறேன். மேலும் தற்போதைய பிற தமிழ் சினிமாக்களின் உலக லாஜிக்குகளுடன் ஒப்பிடுகையில் இந்தப்படத்தில் மீறப்பட்டுள்ளவற்றை கொசுவின் கால் சுண்டுவிரலளவில் கொள்ளலாம்.

க‌ம‌ல் ப‌ட‌த்தில் பொதுவாகக் கிடைக்கும்‌ ம‌ற்றொரு விருந்து, க‌ம‌ல் ஏற்கும் பாத்திர‌ங்க‌ள் த‌விர்த்த‌ பிற‌ பாத்திர‌ங்க‌ளின் அமைப்பு ம‌ற்றும் அதில் வ‌ரும் ஆர்ட்டிஸ்டுக‌ளின் ப‌ர்ஃபாமென்ஸ். இதிலும் அது கிடைக்க‌த்த‌வ‌ற‌வில்லை. க‌ம‌ல்ஹாச‌ன், மோக‌ன்லால், ல‌ட்சுமி இவ‌ர்க‌ள் சிற‌ப்பாக‌ ப‌ண்ண‌வில்லையென்றால்தான் நாம் ஆச்ச‌ரிய‌ப்ப‌ட‌வேண்டும். அவ‌ர்க‌ள் அனுப‌வ‌ம் அப்ப‌டி. (ரித‌ம் ப‌ட‌த்தில் கிளைமாக்ஸில் மீனாவிட‌ம் ம‌ன்றாடும் ல‌ட்சுமியை நினைவு கூறுங்க‌ள். அது திற‌னையும் தாண்டிய‌ அனுப‌வ‌த்தில் வரக்கூடிய‌ ப‌ர்ஃபெக்ஷ‌ன்)

மோக‌ன்லாலின் கீழ்‌நிலை அதிகாரிக‌ளாக‌ வ‌ரும் ப‌ர‌த்ரெட்டி, க‌ணேஷ்‌வெங்க‌ட்ராம், ஆகியோர் அச‌ர‌வைக்கின்ற‌ன‌ர். அதுவும் கணேஷின் ஸ்டைலும் ஃபிட்டும் பார்க்கையில் பொறாமை எழுகிறது. இருவரும் இதற்குள் விஜய், அஜித்களுக்கு வயிற்றில் புளிகரைத்திருப்பார்கள் என்பது நிச்சயம். மேலும் சின்னச்சின்ன‌ காரெக்ட‌ர்க‌ளில் அனுஜா, சிவாஜி, பாஸ்க‌ர், ப்ரேம், ஆன‌ந்த்கிருஷ்ண‌மூர்த்தி (ச‌திலீலாவ‌தியில் க‌ம‌லின் வாரிசு), ஸ்ரீமன் என‌ ஒவ்வொருவ‌ரும் க‌ச்சித‌ம். நம்பிக்கை தரும் புது வரவான இய‌க்குன‌ர் ச‌க்ரி த‌சாவ‌தார‌த்தில் கோவிந்தின் அமெரிக்க‌ ந‌ண்ப‌ராக‌ வ‌ந்து ஃப்ளெட்ச‌ரிட‌ம் அடிப‌ட்டு இற‌ந்துபோகும் காரெக்ட‌ரில் வ‌ந்த‌வர், நிஜ‌த்திலும் க‌ம‌லின் ந‌ண்ப‌ர் என்ப‌தும் ச‌ல‌ங்கை ஒலியில் க‌ம‌லை அவுட் ஆஃப் போக‌ஸில் புகைப்ப‌ட‌ம் எடுத்து க‌டுப்பேற்றும் குட்டிப்பையனாக வந்தவர் என்ப‌தும் கூடுத‌ல் த‌க‌வ‌ல்.

எல்லாக் கமல் படங்களிலும் இருக்கும் நுண்ணியமாய் கவனித்து ரசித்துத்திளைக்க வேண்டிய‌ காட்சிகள் இதிலும் விரவிக்கிட‌க்கின்றன. மிஸ் பண்ணிவிடாதீர்கள். கமலும் கூட தப்பமுடிந்திராத அல்லது அவருக்கும் கூட அவசியப்படுகின்ற விசிலடிச்சான் குஞ்சுகளின் விசில் சத்தம் ரெண்டு நாட்களில் ஓய்ந்துவிடும். பின்னர் சென்று நிதானமாக நல்லதொரு தியேட்டராக‌ போய் பார்த்து அனுபவியுங்கள் இந்த எக்ஸ்பிரஸ் வேக திரைப்படத்தை.

அது க‌லைஞ‌ரின் குர‌லா இல்லையா? தீவிர‌வாதிக‌ள்னா இஸ்லாமிய‌ர்க‌ள் ம‌ட்டும்தானா? காம‌ன் மேன் எப்ப‌டி பிரெட் சாப்பிட‌லாம்? ந‌ஸ்ருதீன் ப‌ர்ஃபாமென்ஸ்க்கு முன்னால் ஹிஹி.. என பலரும் அறிவாளித்த‌ன‌மான‌ அரிய‌ க‌ருத்துக‌ளைத் தெரிவிக்க‌லாம். கேட்டுக்கொள்ளுங்கள்.

சிலமணி நேரங்களில் நிகழும் கதை, மிகச்சில காட்சிக்களங்கள் என்றிருப்பதால் விரைவிலேயே பணிகள் நிறைவு பெற்றிருக்கும் என நம்பலாம். இது போன்றும் கதைகளை தேர்வுசெய்தால் பசியோடிருக்கும் ரசிக யானைக்கு இன்னும் கொஞ்சம் தீனி போடலாம். செய்வாரா கமல்?

அப்புற‌ம் முக்கியமான‌தொரு செய்தி. A time and tide waits for none.. கமல்ஹாசனுக்கும் வயதாகிக்கொண்டிருக்கிறது. முகமும் கண்களும் காட்டிக்கொடுக்கின்றன. இந்தப்படத்திலும் வயதானவரைப்போல அவர் மேக்கப் போட்டுக்கொண்டிருக்கிறார் என்று என்னையே நான் ஏமாற்றிக்கொண்டேன்.

இருப்பினும், Age is something that doesn't matter, If you are a wine..தான் இல்லையா?

.

38 comments:

அத்திரி said...

நாந்தான் மொதல்ல

அத்திரி said...

பல்லிச்சண்டை அப்படினா......ஹிஹிஹி

அத்திரி said...

படத்தை பார்க்கத்தூண்டும் விமர்சனம்

ரசனைக்காரி said...

//பாடல்களுக்கும், குத்து டான்ஸுக்கும் பயந்துதான் நான் தியேட்டர்களுக்கு சமீபகாலமாக போவதேயில்லை//

சரியா சொன்னிங்க போங்க...

//கமலும் கூட தப்பமுடிந்திராத அல்லது அவருக்கும் கூட அவசியப்படுகின்ற விசிலடிச்சான் குஞ்சுகளின் விசில் சத்தம் ரெண்டு நாட்களில் ஓய்ந்துவிடும். பின்னர் சென்று நிதானமாக நல்லதொரு தியேட்டராக‌ போய் பார்த்து அனுபவியுங்கள் இந்த எக்ஸ்பிரஸ் வேக திரைப்படத்தை.//

அந்த எண்ணத்துல தான் இருக்கேன்!!!

அறிவிலி said...

// Age is something that doesn't matter, If you are a wine//

absolutely true

மணிகண்டன் said...

***
அது க‌லைஞ‌ரின் குர‌லா இல்லையா? தீவிர‌வாதிக‌ள்னா இஸ்லாமிய‌ர்க‌ள் ம‌ட்டும்தானா? காம‌ன் மேன் எப்ப‌டி பிரெட் சாப்பிட‌லாம்? ந‌ஸ்ருதீன் ப‌ர்ஃபாமென்ஸ்க்கு முன்னால் ஹிஹி.. என பலரும் அறிவாளித்த‌ன‌மான‌ அரிய‌ க‌ருத்துக‌ளைத் தெரிவிக்க‌லாம். கேட்டுக்கொள்ளுங்கள்.
***
புன்னகையுடன் கேட்டுக்கொள்ளுங்கள்ன்னு இருக்கணும் :)-

நஸ்ருதின் ஷா அளவுக்கு கமலும் சூப்பரா பண்ணி இருந்தார் என்பது தான் எனது கணிப்பு.

ஒரே ஒரு கேள்வி - கமல் எதுக்கு ஒரு பையை தூக்கிக்கிட்டு போய் ட்ரைன்ல வச்சாரு ?

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அத்திரி.!
நன்றி ரசனைக்காரி.! (ரொம்ப லேட் பண்ணிடாதீங்க..)

நன்றி அறிவிலி.!
நன்றி மணிகண்டன்.! (ரசிகர்களை படத்தோடு கட்டிப்போட செய்யப்பட்ட லாஜிக் மீறல், அதைத்தான் சொல்லாமல் இருந்தேன். கரெக்டா கேட்டுருவீங்களே?)

ஜோ/Joe said...

//அது க‌லைஞ‌ரின் குர‌லா இல்லையா? தீவிர‌வாதிக‌ள்னா இஸ்லாமிய‌ர்க‌ள் ம‌ட்டும்தானா? காம‌ன் மேன் எப்ப‌டி பிரெட் சாப்பிட‌லாம்? ந‌ஸ்ருதீன் ப‌ர்ஃபாமென்ஸ்க்கு முன்னால் ஹிஹி.. என பலரும் அறிவாளித்த‌ன‌மான‌ அரிய‌ க‌ருத்துக‌ளைத் தெரிவிக்க‌லாம். கேட்டுக்கொள்ளுங்கள்.//

நச்!

கார்க்கி said...

என்ன ஆங்காங்கே பீட்டர் அதிகமயிருக்கு?

கமலுக்கு விசிலடிச்சா மட்டும் ஏத்துப்பிங்க... என்ன லாஜிக்கோ? முனியாண்டி விலாஸ் ஓட்டலில் கரப்பான் பூச்சி இருக்கலாம்.. சரவண பவனில் இருக்கலாமோ?

Mahesh said...

ஐ.... ரொம்ப நாளைக்கப்பறம் அண்ணனோட விமர்சனம்.... நல்லாவே இருக்கு !!!

sanjay said...

//அது க‌லைஞ‌ரின் குர‌லா இல்லையா? தீவிர‌வாதிக‌ள்னா இஸ்லாமிய‌ர்க‌ள் ம‌ட்டும்தானா? காம‌ன் மேன் எப்ப‌டி பிரெட் சாப்பிட‌லாம்? ந‌ஸ்ருதீன் ப‌ர்ஃபாமென்ஸ்க்கு முன்னால் ஹிஹி.. என பலரும் அறிவாளித்த‌ன‌மான‌ அரிய‌ க‌ருத்துக‌ளைத் தெரிவிக்க‌லாம். கேட்டுக்கொள்ளுங்கள்.//

ஷோக்காச் சொல்லிக்கின மாமே.

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஜோ, மகேஷ், சஞ்சய்..

கார்க்கி (அட லூசே.. விசிலுக்கு மாற்றுக்கருத்துதானே சொல்லியிருக்கேன்)..

நால்வருக்கும் நன்றி.!

இளவட்டம் said...

டைரக்டர் பேர சொல்லி விமர்சனம் பண்ண ஆளு நீங்க மட்டும் தான் சார்.
கேபிள்...பரிசல்..யுவகிருஷ்ணா... யாருமே டைரக்டர் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லல.ம்ம்ம்.... என்ன சொல்ல.

அ.மு.செய்யது said...

ஓ.....கலக்கலா ????

இந்த மாச இறுதியில் சென்னை வருகிறேன்.சத்யத்தில் ரிலீஸ் ஆயிருக்காண்ணே ???

இங்கிருந்தே டிக்கெட் ரிச‌ர்வ் செய்து விட‌ வேண்டுமென்று நினைக்கிறேன்.

எச்சரிக்கை: உன்னைப்போல் ஒருவ‌ன் ரிலீஸ் ஆவ‌ற‌துக்கு முன்னாடியே அதை முன்னிட்டு ஒரு க‌தை எழுதியிருந்தேன்.நீங்க‌ இன்னும் வ‌ந்து பாக்க‌ல..!

ஜோசப் பால்ராஜ் said...

நான் நேத்து படம் பார்த்துட்டு ரொம்ப சந்தோசப் பட்டேன். தமிழ் சினிமால ஒரு வித்தியாசமான முயற்சி இது. 5 லொக்கோசன் தான்.
சாதாரணமா இந்தப் படத்த தமிழ்ல எடுத்திருந்தா அந்த மொட்டை மாடியில இருந்து கமல் 5 தடவ ஃபாரின் போயி டூயட் பாடிட்டு வந்துருப்பாரு.கதாநாயகியே இல்லாம எடுக்கப்பட்ட மிக அருமையானப் படம். ஆனா இதுக்கு எந்தளவுக்கு வரவேற்பு இருக்கும்னு தெரியல.

சூப்பர் விமரிசனம் அண்ணே.

ஜோசப் பால்ராஜ் said...

//ஒரே ஒரு கேள்வி - கமல் எதுக்கு ஒரு பையை தூக்கிக்கிட்டு போய் ட்ரைன்ல வச்சாரு ?//

ட்ரெயின்ல மட்டுமா வைச்சாரு? ஒரு பஸ்ல வைப்பாரு, ஒரு ஷாப்பிங் மால்ல வைப்பாரு. அதெல்லாம் பார்க்கலையா நீங்க?

எவனோ ஒருவன் said...

ஏற்கனவே சில விமர்சனங்கள் படித்திருந்தாலும், இங்கு சில தகவல்கள் கூடுதலாகக் கிடைத்தன.
நன்றி.

சங்கரராம் said...

நல்ல விமர்சனம். எந்த படத்தில தான் குறை இல்லை இது மாதிரியான நல்ல படத்துக்கு நேர்மையான விமர்சனமாக உங்கள் விமர்சனம் இருந்தது நன்றி
பின்குறிப்பு :நான் இன்னும் படம் பார்க்கவில்லை

Anonymous said...

//என பலரும் அறிவாளித்த‌ன‌மான‌ அரிய‌ க‌ருத்துக‌ளைத் தெரிவிக்க‌லாம்//

அதையெல்லாம் விட்டுத்தள்ளி படம் பாத்தாச்சு. அருமையான படம்.

நிஜமா நல்லவன் said...

/ஜோசப் பால்ராஜ் said...

நான் நேத்து படம் பார்த்துட்டு ரொம்ப சந்தோசப் பட்டேன். தமிழ் சினிமால ஒரு வித்தியாசமான முயற்சி இது. 5 லொக்கோசன் தான்.
சாதாரணமா இந்தப் படத்த தமிழ்ல எடுத்திருந்தா அந்த மொட்டை மாடியில இருந்து கமல் 5 தடவ ஃபாரின் போயி டூயட் பாடிட்டு வந்துருப்பாரு.கதாநாயகியே இல்லாம எடுக்கப்பட்ட மிக அருமையானப் படம். ஆனா இதுக்கு எந்தளவுக்கு வரவேற்பு இருக்கும்னு தெரியல.

சூப்பர் விமரிசனம் அண்ணே./


ரிப்பீட்டேய்..

மங்களூர் சிவா said...

படத்தை பார்க்கத்தூண்டும் விமர்சனம்

எவனோ ஒருவன் said...

//அது க‌லைஞ‌ரின் குர‌லா இல்லையா? தீவிர‌வாதிக‌ள்னா இஸ்லாமிய‌ர்க‌ள் ம‌ட்டும்தானா? காம‌ன் மேன் எப்ப‌டி பிரெட் சாப்பிட‌லாம்? ந‌ஸ்ருதீன் ப‌ர்ஃபாமென்ஸ்க்கு முன்னால் ஹிஹி.. என பலரும் அறிவாளித்த‌ன‌மான‌ அரிய‌ க‌ருத்துக‌ளைத் தெரிவிக்க‌லாம். கேட்டுக்கொள்ளுங்கள்.//
இப்பத்தான் புரிஞ்சது தலைவா. :)

வித்யா said...

கமல் ரசிகனின் விமர்சனம். பார்க்கனும். பார்க்கலாம்.

செல்வேந்திரன் said...

பாந்தமான விமர்சனம்.

பரிசல்காரன் said...

யோவ்...

விமர்சனம்னு படிக்க வந்தேன். அசர வெச்சுட்டய்யா! இப்படியும் விமர்சனம் பண்ணலாம்லன்னு யோசிக்க வெச்சுட்ட!

க்ரேட் ரைட்டிங் ஆதி..

வெயிலான் said...

இப்படியும் சொல்லலாமா?

இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை என்பது போன்றதொரு விமர்சனம்!

செல்வேந்திரன் said...

ஆமூகி, தாங்கள் ஒரு பின்னூட்டத்தில் அப்பட்டமான இந்துத்வா படம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

எனக்குத் தெரிஞ்சு எந்த இந்தியனோ குறிப்பாக இந்துவோ பாகிஸ்தானுக்கோ, ஆப்கானிஸ்தானுக்கோ போயி பொது இடங்களில் குண்டு வைச்சதாகவோ, ரயில்வே ஸ்டேசன்களில் புகுந்து பச்சைக் குழந்தையிலிருந்து பூக்காரக் கிழவி வரை சுட்டுக் கொன்றதாகவோ, பாராளுமன்றத்துக்குள் புகுந்து சுட்டதாகவோ சரித்திரம் இல்லை. மதம் எதுவாயினும் தீவிரவாதம் தீவிரவாதம்தான். . ஐம்பதாண்டு காலமாக மனித உரிமை மண்ணாங்கட்டி சமாச்சாரத்தைப் பேசி பேசி வீடு முழுக்க மூட்டைப்பூச்சிகள். பெரும்பான்மையின் பாதுகாப்பு என்கிற ஒரு காரணம் போதும் அவர்களை நசுக்கிக் கொல்வதற்கு மனிதனுக்கே இல்லாத மனித உரிமைகள் மிருகங்களுக்கு என்ன மயிருக்கு? என்றுதானே கமல் கேட்கிறார்.

இந்துத்வா, ஜிகாத் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஜெரிமி பெந்தாம் என்று ஒரு அரசியல் நெறியாளர் இருந்தார். வாழ்ந்த காலம் முழுக்க 'பெரும்பான்மையோரின் மட்டற்ற மகிழ்ச்சி' என்றொரு கோட்பாட்டைக் கதறிக்கொண்டே இருந்தார். ஒரு பயலும் கேட்கலை, படிக்கலை. உலகமே சுடுகாடாகி இருக்கிறது. செசன்யா துவங்கி நாரிமன் வரை ஜனங்கள் ரத்தம் சிந்துகிறார்கள். நமக்கு கணிப்பொறி, இணையம், நேரம் எல்லாமும் இருக்கிறது. நாமாவது கேட்கலாமே.

இது பதிவிற்கான பின்னுட்டமல்ல. பின்னுட்டத்திற்கான பதிலூட்டம். ஒரு ஸ்மைலீ போட்டுக்கறேன் யாராச்சும் சண்டை போடுறாங்கன்னு நினைச்சுக்கப் போறாங்க :) :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி இளவட்டம்.!
நன்றி செய்யது.!
நன்றி ஜோஸப்.!

நன்றி எவனோ ஒருவன்.! (யோவ் அப்பிடி என்ன ஸ்பெஷலா புரிஞ்சுது? புரிஞ்சுதுன்னா அப்பிடியே போக வேண்டியதுதானே)

நன்றி சங்கரராம்.!
நன்றி அம்மிணி.!
நன்றி நிஜமாநல்லவன்.!
நன்றி சிவா.!
நன்றி வித்யா.!
நன்றி செல்வா.!
நன்றி பரிசல்.! (ஹிஹி.. தேங்ஸ்ஸு)
நன்றி வெயிலான்.!

(செல்வா : யோவ் வெளக்கெண்ணெய், நா எங்கையா அப்பிடிச்சொன்னேன்? அதுக்குப்போய் ஒரு சின்னப்புள்ளக்கிட்ட ஜெரிமி பெந்தாம், செசன்யா அப்பிடி இப்பிடின்னு சொல்லி வயித்துல புளிகரைக்கிறீங்க.?)

Truth said...

//அது க‌லைஞ‌ரின் குர‌லா இல்லையா? தீவிர‌வாதிக‌ள்னா இஸ்லாமிய‌ர்க‌ள் ம‌ட்டும்தானா? காம‌ன் மேன் எப்ப‌டி பிரெட் சாப்பிட‌லாம்? ந‌ஸ்ருதீன் ப‌ர்ஃபாமென்ஸ்க்கு முன்னால் ஹிஹி.. என பலரும் அறிவாளித்த‌ன‌மான‌ அரிய‌ க‌ருத்துக‌ளைத் தெரிவிக்க‌லாம். கேட்டுக்கொள்ளுங்கள்.

ஹி ஹி, படித்துவிட்டு தான் வந்தேன் :-)

Sridhar Narayanan said...

//ரசிகர்களை படத்தோடு கட்டிப்போட செய்யப்பட்ட லாஜிக் மீறல், //

இதிலென்ன லாஜிக் மீறல்னு புரியல. பாம் வைக்கிறதுக்காக ட்ரெய்ன், பஸ், மால் எல்லாத்திலேயும் பை வைக்கிறாரே பார்க்கலையா?

இறுதிக் காட்சியில அதில் எல்லாம் பாம் இல்லைன்னு சொல்லிடறார். அதாவது போலிஸ் ஸ்டேஷன்ல வச்சது கூட பாம் இல்ல. பாம் வச்சது சோழாவரத்துல மட்டும்தான். மத்ததெல்லாம் வெறும் எலக்ட்ரானிக்ஸ் செட்டப்.

Aravind said...

<< Sridhar Narayanan said...

அதாவது போலிஸ் ஸ்டேஷன்ல வச்சது கூட பாம் இல்ல. பாம் வச்சது சோழாவரத்துல மட்டும்தான். மத்ததெல்லாம் வெறும் எலக்ட்ரானிக்ஸ் செட்டப்.>>

நான் இல்லை என்று க‌ருதுகிறேன்.. போலிஸ் ஸ்டேச‌னில் வைத்த‌து மூன்று கிலோ ம‌ற்றும் மீத‌ மூன்று கிலோ தான் சோழவர‌த்தில் வைத்த‌து.. அவ‌ர் வாங்கிய‌து ஆறு கிலோ மொத்த‌ம்..இவை வ‌ச‌ன‌ங்க‌ளில் தெளிவாக‌ சொல்ல‌ப்ப‌ட்ட‌ன..

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரித‌ம் ப‌ட‌த்தில் கிளைமாக்ஸில் மீனாவிட‌ம் ம‌ன்றாடும் ல‌ட்சுமியை நினைவு கூறுங்க‌ள். அது திற‌னையும் தாண்டிய‌ அனுப‌வ‌த்தில் வரக்கூடிய‌ ப‌ர்ஃபெக்ஷ‌ன்) //

அழகாய் விமர்சித்திருக்கிறீர்கள்

நாஞ்சில் நாதம் said...

//பல்லிச்சண்டை//

தல உங்க சினிமா பத்தின பல பதிவுகளில இந்த வார்த்தைய பாத்திருக்கேன். ஒரு பதிவு போட்டு விளக்கிருங்க பாஸ். இந்த வார்த்தைக்குள்ள எதோ விசியம் இருக்கு.

D.R.Ashok said...

உங்கள் விமர்சனம் நல்லாயிருக்குங்க.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ட்ரூத்.!

நன்றி ஸ்ரீதர்.! (எழுதணுமான்னு யோசிக்கிறேன். இருப்பினும் எழுதறேன். எப்படியும் அவர் அந்த இடங்களிலெல்லாம் குண்டு வைக்கவில்லை. போலீஸில் வைத்ததாக பொய்தான் சொல்கிறார். போலீஸை நம்ப வைக்கவே ஒரு பாமை போலீஸ் ஸ்டேஷனில் மட்டும்தான் வைக்கிறார். போலீஸ் அதன் பின்னும் அவரை நம்பாமல் போயிருந்தால் அவரது திட்டம் தோல்வியடைந்திருக்கும் என்பது வேறு விஷயம். அப்படியிருக்க ஒரு வெற்றுப்பையை அந்தந்த இடங்களில் வைப்பதான காட்சிகள் லாஜிக் மீறல், ரசிகனை படத்தோடு ஒன்றவைக்க நுழைக்கப்பட்ட காட்சிகள். அவற்றை அவர் வைப்பதைப்போல காட்டாமல் சில பைகள் மட்டும் அந்த இடங்களில் இருப்பதாக காட்டப்பட்டிருந்தால் நமக்கும் பில்ட் அப்பாக இருந்திருக்கும். பின்னால் அவை வேறு பொதுமக்களின் பைகள் என்று எண்ண ஏதுவாயிருக்கும்)

நன்றி அரவிந்த்.! (ஏன் இப்பிடி கரெக்டா கணக்கு பண்றீங்க.. பிஎஸ்ஸி மேத்ஸா?)

நன்றி அமித்துஅம்மா.!
நன்றி நாஞ்சில்.! (எழுதிடலாம்)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அஷோக்.!

ஸ்ரீமதி said...

ரொம்ப நல்ல விமர்சனம் அண்ணா... ஒரு சிரிப்போடவே படிச்சேன்.. :)))))

ராஜ நடராஜன் said...

//கமலும் கூட தப்பமுடிந்திராத அல்லது அவருக்கும் கூட அவசியப்படுகின்ற விசிலடிச்சான் குஞ்சுகளின் விசில் சத்தம் ரெண்டு நாட்களில் ஓய்ந்துவிடும். பின்னர் சென்று நிதானமாக நல்லதொரு தியேட்டராக‌ போய் பார்த்து அனுபவியுங்கள் இந்த எக்ஸ்பிரஸ் வேக திரைப்படத்தை.//

நேற்று படம் பார்த்தேன்.படம் துவக்கம் முதல் இறுதி வரை ஊசி முனை சத்தம்.அங்கங்கே வசனங்களின் மெல்லிய சிரிப்பொலி தவிர.