Monday, September 21, 2009

எப்படி இப்படில்லாம்..

'காஞ்சிவரம்' சினிமாவின் முதல் காட்சி. ஒரு மழைநாளில் ஏதோ கிராமத்துக்குப் போய்க்கொண்டிருக்கும் ஒரு பேருந்தில் ஒரு முதிய கைதி இரண்டு போலீஸ்காரர்கள் துணையுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார். அந்தக்காரெக்டரில் நடித்தவர் டினு ஆனந்த் (பிரபல இந்தி நடிகர், இயக்குனர் - நாயகன் படத்தில் கமலஹாசனை இறுதியில் சுட்டுவீழ்த்தியவர்).. அது பிரகாஷ் காரெக்டர் என்றும் பிளாஷ்பேக்கில் அவர் வருவார், அவரது வயதான தோற்றத்தில் டினு நடித்திருக்கிறார் என்று நினைத்தேன்... ஆம் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன் ரொம்ப நேரமாய். பின்னர் அதுவும் பிரகாஷ்ராஜ்தான் என தெரியவந்தபோது சிறிது அயர்ந்துபோனேன். அவரது மிகச்சிறப்பான நடிப்பு மட்டுமல்ல அந்தப்படமும் ஒரு மிகச்சிறப்பான ஒரு சமூகப்பதிவு.

தமிழகத்திலிருந்து நான்காவது நபராக சிறந்த நடிப்புக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கும் பிரகாஷ்ராஜுக்கு நம் நல்வாழ்த்துகள். இதனாலெல்லாம் அவர் விஜய்களிடமும், விஷால்களிடமும் உதை வாங்குவது குறைந்துவிடாது என்றுதான் நினைக்கிறேன். நடத்துங்கள். ஹிஹி..

***************

எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சாகவேண்டும், தமிழிஷில் என் எல்லா பதிவுகளுக்கும் சரியாக 14±1 ஓட்டு கிடைக்கிறது (உ.போ.ஒ விமர்சனம் தவிர). ஒவ்வொரு முறையும் ஒரே ஆட்களும் இல்லை. சில மாற்றங்களும் இருக்கின்றன. கூடவும் செய்யாமல் குறையவும் செய்யாமல்.. எப்பிடி இப்படில்லாம்? போடுபவர்களுக்கு நன்றி. இதுவாவது பரவாயில்லை. தமிழ்மணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் துவக்கத்திலிருந்தே என்னால் ஓட்டுப்போட முடியவில்லை. டெக்னிகல் சிக்கல். அது பரவாயில்லை, ஆனால் தவறாமல் எல்லா பதிவுகளுக்கும் தமிழ்மணத்தில் நான் பெறும் ஓட்டு எத்தனை தெரியுமா? போய்ப்பாருங்கள்.. ஒண்ணே ஒண்ணுதான். எனக்குத்தெரிஞ்சாவணும், யாரந்த புண்ணியவான்?

****************

சமீபத்தில் அலுவலக நண்பரின் குழந்தையின் முதல் பிறந்தநாள் விழாவுக்குப் போயிருந்தேன். அங்கு நண்பர் குழாமே உணவு பறிமாறுவது உட்பட அனைத்து வேலைகளையும் செய்துகொண்டிருந்தார்கள். நானும் அதில் கலந்து அப்பளம் வைத்தல், ஊறுகாய் வைத்தல், ஐஸ்கிரீம் குச்சி வைத்தல் போன்ற கடின வேலைகளையெல்லாம் செய்துகொண்டிருந்தேன். பல வருடங்களுக்கு முன்னால் கிராமங்களில் விசேஷ வீடுகளில் இந்த வேலைகளைச் செய்தது. இப்போது எல்லாமே கேட்டரிங்காரர்களே செய்துவிடுவதால் எதிர்பாராது கிடைத்த இந்த அனுபவத்தால் ரொம்ப மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.

***************

ஒரு ஃப்ளோவில் 250வது பதிவை கணக்கில் வைக்க மிஸ் பண்ணிட்டேன். இப்போது திரும்பிப் பார்க்கையில் அது ஒரு ரிப்பீட்டுப்பதிவாக அமைந்துவிட்டது தெரிந்தாலும்.. மகிழ்ச்சிதான். விதைபோல விழுந்தவன்.

****************

ஈரம் : விமர்சனம்

ஹீரோ ஆதி அந்தப்படத்தின் ஸ்டில் காமெராமேனுக்கு கோயில் கட்டிக்கும்பிடலாம், அவ்வளவு அழகாக அவரை போஸ்டர்களிலும், விளம்பரங்களிலும் காணமுடிந்தது. படத்திலும் ஓகேதான் என்றாலும் அவருக்கு இன்னும் கொஞ்சம் சரியாக முடிவெட்டிவிட்டிருக்கலாம்.பல இடங்களில் படம் கொஞ்சம் படுத்துகிறது. விறுவிறு கதையில் சும்மா கிளப்பியிருக்கவேண்டாமா? வழவழான்னு ஹீரோவின் லவ் போர்ஷன், தொடர்கொலைகள் பண்ணுமளவில் நந்தாவின் காரெக்டர் அறிமுகப்படுத்தப்படாதது என பல தொங்கல்கள். ஹீரோவை படமாக்கிய அழகில் அவர் ஏதாவது பண்ணுவார்.. பண்ணுவார் நினைத்துக் கொண்டேயிருக்கிறோம், அவரது ஹையர் அஃபிஷியல்ஸைப்போல நாமும். அவர் பண்ணினாத்தானே ஆச்சு.? மைல்டா சப்போர்ட் பண்ணியவங்களையே தண்ணீர், சிவப்புக்கலர் என போட்டுப்பார்க்கும் ஆவி, மெயின் வில்லனை போலீஸில் பிடிச்சுக்கொடுக்கிறது. கிளைமாக்ஸ் டிவிஸ்ட் அவலை நினைத்து இடித்த உமி. ரொம்பவே இங்கிலீஷ் படம் பார்த்தா இப்பிடித்தான் ஆகும்.

என்னதான் இருந்தாலும் வித்தியாசமான படமாக இருப்பதால் பக்கத்தில் ஏதாவது தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தால் மிஸ் பண்ணாமல் போய் பார்த்துவிடுங்கள். கொஞ்சம் நல்லது இருந்தாலும் பாராட்டியாக வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம்.

****************

எல்லோரும் குறைந்தது ஆறு மாசமாவது தாங்குமா, ஒரு வருஷம் வந்தா சந்தோஷம்ங்கிற நினைப்பிலேயே செருப்பு வாங்குவீர்கள் என நம்புகிறேன். ஆனாலும் நமக்கு ஒரு சேஞ்ச் தேவைப்படுகிறது, செருப்பாக இருப்பினும் அளவுக்கு மீறி உழைத்தால் எரிச்சல்தான். ஐந்து வருடங்களுக்கு முன்னால் வாங்கிய செருப்பு இன்னும் பிய்ந்துபோகாமல் என்னை படுத்திக்கொண்டிருக்கிறது ஐயா.. நம்புவீர்களா? என்னதான் பெரும்பாலான நேரங்களில் ஷூ அணிந்திருந்தாலும் 5 வருஷம் கொஞ்சம் ஓவர்தான் இல்லையா? நானே கடுப்பில் இருக்கிறேன். அந்த செருப்புகள் என்ன மேக் என என்னிடம் கேட்காதீர்கள்.!

.

42 comments:

♠ ராஜு ♠ said...

ம்ம்...!

சூரியன் said...

தல 50 ரூ ஹவாய் செருப்பா?

samundi said...

உன்னைபோல ஒருவன் குறித்த அருமையான விமர்சனம் http://kattamanaku.blogspot.com/2009/09/blog-post.html

தியாவின் பேனா said...

ம்...ம்... அருமை

நாடோடி இலக்கியன் said...

அந்த விருந்து பறிமாறல் எங்க ஊரிலெல்லாம் இன்னும் தொடர்கிறது. எனக்கு அப்பளம், ஊறுகாய்தான் எப்போதும் ஒதுக்குவாய்ங்க.வேற எதாவது வாளியைத் தூக்கினா "ராசா, நீ வாளியே தூக்க வேண்டாம்" என்று அன்பாய் சொல்லிவிடுவார்கள்.:) நம்ம சுறுசுறுப்பு அப்படி.

//கொஞ்சம் நல்லது இருந்தாலும் பாராட்டியாக வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம்.//
சரியாச் சொன்னீங்க ஆதி.நாடோடிகள் படத்திலும் கூட நிறைய விஷயங்கள் எனக்குப் பிடிக்கவில்லை இருப்பினும் நீங்க சொல்லியிருக்கும் காரணத்திற்காகவே ரொம்பப் பெரிதாய் பாராட்டி எழுதியிருந்தேன். எல்லாம் பிரகாஸ்ராஜை படத்திற்கு படம் புரட்டி எடுப்பவர்களால் அடைந்த பீதியே காரணம்.

Mahesh said...

அதானே... எப்பிடி இப்பிடில்லாம்???

Cable Sankar said...

/உன்னைபோல ஒருவன் குறித்த அருமையான விமர்சனம் //

அதை படிச்சுட்டு அருமையா இருக்குன்னு நாங்க தானே சொல்லணும் சாமுண்டி..:)

ஆமாம் ஆதி.. நல்ல விஷயஙக்ள் உடனடியாய் பாராட்ட வேண்டிய இடத்தில்தான் நாம் இருக்கிறோம்

அந்த ஒரு ஓட்டை பல சமயம் நான் போட்டிருக்கிறேன்

அ.மு.செய்யது said...

//அவரது மிகச்சிறப்பான நடிப்பு மட்டுமல்ல அந்தப்படமும் ஒரு மிகச்சிறப்பான ஒரு சமூகப்பதிவு.
//

அதனால் தான் தேசிய விருது..கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடல்...

// ஒண்ணே ஒண்ணுதான். எனக்குத்தெரிஞ்சாவணும், யாரந்த புண்ணியவான் ? //

ப‌ல‌ ப‌திவுக‌ளில் அது நானாக‌த்தானிருந்திருக்கிறேன்..இதுக்கு கூட‌ நான் தாங்க‌ போட்டேன்..

அ.மு.செய்யது said...

கேபிள் ஷங்கர் அண்ணே..நீங்களுமா போட்டீங்க...

அப்ப அரை ஓட்டாத்தான் விழுவுதா ??

ச்சொல்லவேயில்ல ??

அறிவிலி said...

தமில்ஷ்ல 10 ஆவது ஓட்டு என்னோடது. தமிழ்மணத்துல ஓட்டு போட்டுட்டு செக் பண்ணி பாத்தா 2/2 இருந்தது.

என்னோட அனுமானத்துல தமிலிஷில் பிரபல இடுகையா மாறினவுடன யாரும் ஓட்டு போடுவதில்லை.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ராஜு.! (முதல் பின்னூட்டம் கலகலப்பா இருக்குணும்யா. அதென்ன உம்ம்? என்ன மனசுல்ல நர்சிம்னு நினைப்பா மனசுல?)

நன்றி சூரியன்.!
நன்றி சாமுண்டி.!
நன்றி தியா.!
நன்றி இலக்கியன்.! (ஹிஹி..)

நன்றி மகேஷ்.!
நன்றி கேபிள், செய்யது.! (யேய் என்னாது.? யாருகிட்ட.. டுபாகூர் வுடுறீங்களா என்னாண்ட?)

நன்றி அறிவிலி.! (இனியாவது ஒழுங்கா ஓட்டுப்போடுங்கையா)

samundi said...

இணைய ரவுடிகளால் பரிதாபமாக பறிபோன உயிர் http://a1realism.blogspot.com/2009/09/blog-post_20.html

T.V.Radhakrishnan said...

//கொஞ்சம் நல்லது இருந்தாலும் பாராட்டியாக வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம்.//


repeateyyy

வெங்கிராஜா | Venkiraja said...

//அவரது மிகச்சிறப்பான நடிப்பு மட்டுமல்ல அந்தப்படமும் ஒரு மிகச்சிறப்பான ஒரு சமூகப்பதிவு.//
நான் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவன். படத்தில் வரும் பேச்சுவழக்கு சுத்தமாக ஒட்டவில்லை. இசையும். மற்றபடி அவார்ட் மெட்டீரியல். கிளைமேக்ஸ்... சும்மா சொல்லக்கூடாது: டாப் க்ளாஸ்!

பரிசல்காரன் said...

அந்த ஒரு ஓட்டு உன்னுதுதான்யா!

ராஜராஜன் said...

//அந்த செருப்புகள் என்ன மேக் என என்னிடம் கேட்காதீர்கள்.//


உண்மைய சொல்லுங்க அது MRF கம்பெனி டயர் தானே ??

க.பாலாஜி said...

ஓட்டு போடுறதுக்கு சைடுல கவனிச்சீங்கன்னா நிறைய கிடைக்கும்.

இப்ப பாருங்க தமிழ்மணத்துல 3/3 ன்னு இருக்கும்...(இதற்கான சன்மானத்தை மணியார்டர் செய்யவும்)

வித்யா said...

:))

தராசு said...

வாழ்க்கையில பெரிய சந்தோஷம் அடுத்தவனை சாப்பிட வெச்சு பார்க்கறது தான்யா, அதுனால தான் ஊர்பக்கம், எந்த விஷேசம்னாலும் அந்த ஊட்டுக்காரங்களோ, உறவுக்காரங்களோதான் பரிமாறுவாங்க, வெறும் அப்பளம் வெச்சதுக்கே உனக்கு இன்னா ஃபீலிங்க்ஸ் பாத்தியா, அப்ப சோறு போட்டுருந்தா, சரி, சரி, எதுன்னாலும் நல்லது பண்ணீருக்கீங்க, நல்லாரு சாமி.

என்னது ஒரு ஃப்ளோவுல 250 மிஸ்ஸா, சொல்லவேயில்ல, மறுபடியும் வாழ்த்துக்கள்.

அந்த செருப்பு மேட்டர் கொஞ்சம் ஓவர்தான்.

அ.மு.செய்யது said...

//பரிசல்காரன் said...
அந்த ஒரு ஓட்டு உன்னுதுதான்யா!
//

அப்ப கேபிள் அண்ணனும் fake aa ??

கார்க்கி said...

அப்ப ஆதி யாரையும் செருப்பு பிஞ்சிடும் ராஸ்கல்ன்னு திட்டவே முடியாதா??????????????

கார்க்கி said...

// சூரியன் said...
தல 50 ரூ ஹவாய் செருப்பா?//

என்னதான் இருந்தாலும் அவரை இவ்ளோ கேவலமா சொல்லக் கூடாதுங்க.. அப்புறம் அத்திப்பட்டி ஆளுங்க பொங்கிட போறாங்க

இராகவன் நைஜிரியா said...

// எனக்குத்தெரிஞ்சாவணும், யாரந்த புண்ணியவான்? //

அண்ணே அந்த புண்ணியவான் நானுதாங்கோ... அடாது மழை பெய்தாலும் விடாது ஓட்டு போடுவோமுங்க.. (ஆமாங்க இங்க மழை பெய்யும் போதெல்லாம் நெட் கிடைக்காதுங்க.. அதனாலத்தான் அப்படிச் சொன்னேன்..)

இராகவன் நைஜிரியா said...

இன்னிக்கு தமிழ் மணத்தில் போட்ட 6 வது ஓட்டும், தமிழிஷில் போட்ட 14 வது ஓட்டும் என்னோடதுதாங்க.. (ஐயா கொஞ்சம் பார்த்துப் போட்டு கொடுங்க..)

இராகவன் நைஜிரியா said...

// ஒரு ஃப்ளோவில் 250வது பதிவை கணக்கில் வைக்க மிஸ் பண்ணிட்டேன். //

ஐயா நீங்களுமா... 250வது இடுகையை... எங்க சொல்லுங்க இடுகையை..

இராகவன் நைஜிரியா said...

ஆஹா இன்னிக்கு நாமதான் 25வது பின்னூட்டமுங்கோ..

pappu said...

அந்த ஒத்த ஓட்டு உங்களுதா இருக்கப் போகுது போய் பாருங்க!

செருப்பு பிய்யலயா? அந்த மேக் சொல்லுங்க!
நாலு மாசத்துக்கு ஒரு செருப்பான்னு அதாலயே அடி வாங்காத குறை தான்!

டம்பி மேவீ said...

நன்றி தாமிர

நிஜமா நல்லவன் said...

முதல் தடவையா ஒரு ஓட்டு போட்டு இருக்கேன்:))

அனுஜன்யா said...

பதிவு .....ஸ்ஸப்பா, இடுகை நல்ல சுவாரஸ்யம்.

அனுஜன்யா

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)

செந்தில் நாதன் said...

முதல் தடவையா நானும் ஒரு ஓட்டு போட்டு இருக்கேன்!!

அமுதா கிருஷ்ணா said...

அடுத்து வரும் என் பையன் பிறந்த நாளுக்கு கஷ்டமான வேலை செய்ய உங்களுக்கு இப்பவே அழைப்பு விடலாம் என்று இருக்கிறேன்...

மங்களூர் சிவா said...

/
தமிழகத்திலிருந்து நான்காவது நபராக சிறந்த நடிப்புக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கும் பிரகாஷ்ராஜுக்கு நம் நல்வாழ்த்துகள். இதனாலெல்லாம் அவர் விஜய்களிடமும், விஷால்களிடமும் உதை வாங்குவது குறைந்துவிடாது என்றுதான் நினைக்கிறேன். நடத்துங்கள். ஹிஹி../

அது வேறு இது வேறு
:)

மங்களூர் சிவா said...

/
எனக்குத்தெரிஞ்சாவணும், யாரந்த புண்ணியவான்?
/

ரமாவா இருக்குமோ?????

மங்களூர் சிவா said...

/
கொஞ்சம் நல்லது இருந்தாலும் பாராட்டியாக வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம்.
/

கொடுமை இல்ல
:)))

நாஞ்சில் நாதம் said...

//ஐந்து வருடங்களுக்கு முன்னால் வாங்கிய செருப்பு இன்னும் பிய்ந்துபோகாமல் //

தல செருப்பு கால்ல தானே போடுறீங்க

ஸ்ரீமதி said...

:)))))

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி டிவிஆர்.!
நன்றி வெங்கிராஜா.!
நன்றி பரிசல்.!
நன்றி ராஜராஜன்.! (ROTFL.:))
நன்றி பாலாஜி.!
நன்றி வித்யா.!
நன்றி தாராசு.!
நன்றி செய்யது.!
நன்றி கார்க்கி.!
நன்றி இராகவன்.!
நன்றி பப்பு.! (ROTFL.:))
நன்றி மேவீ.! (எதுக்குப்பா?)
நன்றி நல்லவன்.!
நன்றி அனுஜன்யா.!
நன்றி அமித்துஅம்மா.!
நன்றி செந்தில்.!
நன்றி அமுதா.! (கண்டிப்பா கூப்பிடுங்க)
நன்றி மங்களூர்.!
நன்றி நாஞ்சில்.!
நன்றி ஸ்ரீமதி.!

பட்டிக்காட்டான்.. said...

//.. விஜய்களிடமும், விஷால்களிடமும் உதை வாங்குவது குறைந்துவிடாது என்றுதான் நினைக்கிறேன்.. //

ஹி.. ஹி..

//.. நண்பர் குழாமே உணவு பறிமாறுவது ..//

ஒருமுறை நான் பரிமாறியபோது அனைவரும் பிரியாணியுடன் விருந்தை முடித்துக்கொண்டனர்(அவ்ளோ தாரள மனசு)..

//.. எல்லோரும் குறைந்தது ஆறு மாசமாவது தாங்குமா, ஒரு வருஷம் வந்தா சந்தோஷம்ங்கிற ..//

எனக்கு ஆறு மாசம் தாங்கினாலே சந்தோசப்படுவேன்..

Anonymous said...

//ஐந்து வருடங்களுக்கு முன்னால் வாங்கிய செருப்பு இன்னும் பிய்ந்துபோகாமல் //
//


இதுக்கு ஏதாவது சிதம்பர ரகசியம் இருக்கா?

Saravana Kumar MSK said...

//நானும் அதில் கலந்து அப்பளம் வைத்தல், ஊறுகாய் வைத்தல், ஐஸ்கிரீம் குச்சி வைத்தல் போன்ற கடின வேலைகளையெல்லாம் செய்துகொண்டிருந்தேன்//

ரசித்தேன்.. :)


//கொஞ்சம் நல்லது இருந்தாலும் பாராட்டியாக வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம்.//

இதற்காகத்தான் நானும் படத்தை பாராட்டியே எழுதி இருந்தேன்.. :)