Wednesday, September 23, 2009

காய்ந்துபோன சில ஆரஞ்சுகள்

ரமாவும், தாமிராவும் பிஸியாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். நீங்கள் நினைப்பது சரிதான், ரமா டிவி பார்த்துக்கொண்டிருந்தார், தாமிரா காய்கறி நறுக்கிக்கொண்டிருந்தார். சுபா தாமிராவின் முதுகில் ஸ்கெட்ச் பேனாவால் முட்டை முட்டையாக வரைந்துகொண்டிருந்தான். பேனாவை பிடுங்கினால் ஊருக்கே கேட்பது போல ஊளையிட்டு வைப்பான், எப்படியோ விளையாடிக்கொண்டிருந்தால் சரிதான் என்று விட்டுவைத்திருந்தார்கள் இருவரும்.

ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாய் என்ன தாமிரா அதிசயமாக வீட்டுவேலைகள் செய்துகொண்டிருக்கிறார்? மதியம் அவரது நண்பர் ஒருவர் குடும்பத்துடன் விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். இது அவர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இது போன்ற நேரங்களில்தான் அவரை நல்ல வேலை வாங்க முடியும் என்பது ரமாவுக்கு நன்கு தெரியும் என்பது நமக்கு தெரியும். முதல் நாள் மாலையே கால் கிலோமீட்டர் நீள‌த்திற்கு எழுதப்பட்ட ஷாப்பிங் லிஸ்டை எடுத்துக்கொண்டு பைக்கில் ஷாப்பிங் போய் வந்தாயிற்று. கடைகடையாக அலைய மனவலு இல்லாததால் சூப்பர் மார்கெட் போகத்தான் அவர் விரும்புவார். ஆனால் ரமாவின் லிஸ்டோ சூப்பர் மார்கெட்டையும் திணறச்செய்யும் சக்தி வாய்ந்தது என்பதும் அவருக்குத்தெரியாதது அல்ல. எப்பேர்ப்பட்ட கடையாக இருப்பினும் அங்கே கிடைக்காத பொருள் லிஸ்டில் இருக்கும்.

உதாரணமாக பத்தி, கற்பூரம், சந்தனம், விளக்குத்திரி வரிசையில் அவர் கேட்கும் தூள் சாம்பிராணி இருக்காது. அவன் கம்ப்யூட்டர் சாம்பிராணி வைத்திருப்பான். ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, மாம்பழ வரிசையில் அவர் கேட்ட கொய்யாப்பழம் மட்டும் இருக்காது. ஹார்லிக்ஸ், போர்ன்விடா, பூஸ்ட் வரிசையில் அவர் கேட்ட மால்டோவா மட்டும் இருக்காது. மளிகைச்சாமான்களில் ஐந்து வகை புளி பாக்கெட்டுகள் இருந்தாலும் அவர் கேட்ட மான் மார்க் புளி இருக்காது. அதனால் எப்படித்திட்டமிட்டு கடைக்குப்போனாலும் ஐந்து கடைகளாவது ஏறி இறங்காமல் வேலை நடக்காது. இவ்வாறாக போய் ஒரு சிறிய பெட்டிக்கடைக்காரர் டிவிஎஸ்50யில் ஒரு லாரியைப் போன்ற தோற்றத்துடன் பொருட்கள் வாங்கிவருவதைப்போல வண்டியின் இடது, வலது, ஹான்டில்பார்கள், பில்லியன் அனைத்திலும் மூட்டைகளாக வைத்து கொண்டு வந்தாயிற்று. அப்படியும் லிஸ்ட்டில் ஒரு மூலையில் முக்கியமான பொருள் மிஸ்ஸாகி இரண்டாவது தடவையும் அவர் கடைக்குப்போகவேண்டி வந்தது. சரி இன்னிக்குப் பிரச்சினைக்கு வாருங்கள்.

ஒருவழியாக சமையல் முன்னேற்பாடுகள் முடிந்து சமையல் துவங்கும் நேரத்தில், குறித்த நேரத்துக்கு சற்று முன்னதாகவே அழைக்கப்பட்ட பிரபல பதிவர் தங்கமணி, குழந்தை சகிதமாக வந்துவிட்டதால் நைஸாக ரமாவிடம் சமையலைத் தொடர பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவரும் கொஞ்சம் கோபம் கொப்பளிக்கும் கண்களுடன் சமையலைத் தொடர, தாமிரா அவ்வளவு நேரம் டிவி பார்த்துக்கொண்டிருந்ததைப்போல பாவனை செய்துவிட்டு வந்தவர்களுடன் உரையாடத்துவங்கினார்.

இரண்டு தங்கமணிகளும் கிச்சனில் உரையாடலைத்துவங்கி சமையல் வேலையைக் கவனிக்க, ஏதாவது சிக்கலான விஷயப்பரிமாற்றம் நிகழ்ந்துவிடுமோ என்ற பயம் உள்ளூர ஊர.. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இரண்டு ரங்கமணிகளும் ஹாலில் பேசிக்கொண்டிருந்தனர். உள்ளே கிச்சனில்..

"அக்கா.. வீட்ல நீங்கதான் சமைப்பீங்களா? எங்க வீட்லயும் நாந்தான் சமைப்பேன்க்கா, அவர் ஒரு வேலையும் செய்யமாட்டார்"

"என்ன பண்றதுக்கா? நம்ம தலையெழுத்து அப்படி. நீங்க வேலைக்கும் போறீங்களாமே. அவர் சொன்னார்.."

"ஆமாக்கா.. வர்றதுக்கு 7 மணியாயிடும்.."

"பிள்ளையை எப்பிடி பார்த்துக்கறீங்க.."

"அதுக்குதானே மாமியாரை கூட வச்சிருக்கேன்.."

"ஆமா, எதுக்கு இவ்வளவு பழம் வாங்கிட்டு வந்தீங்கக்கா.. ஏற்கனவே நிறைய கிடக்குது"

"இருக்கட்டும்க்கா.. ஆனா எங்க வீட்லயும் இப்பிடித்தான் பழமெல்லாம் வாடிக்கிட்டு கிடக்குது. என்ன பண்ணுவீங்க.. மொத்தமா ஜூஸ் போட்டுக்கொடுப்பீங்களா?"

"ஜூஸா? அதை யாரு பண்ணிக்கிட்டு.. அதையெல்லாம் காலிபண்றதுக்கு கைவசம் ஐடியா இருக்குது?"

"என்ன பண்றதுக்கா?"

"சொல்றேன். உங்க வீட்ல வழக்கமா எத்தனை மணிக்கு சாப்பிடுவீங்க?"

"1 மணிக்கு"

"இங்கேயும் கிட்டத்தட்ட 1 மணிதான். இப்ப மணி 1.20.. இந்தாங்க இந்தக்காபியை குடிங்க, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.."

ஹாலிலிருந்து தாமிராவின் குரல், "என்னாச்சும்மா.. ரெடியா?"

"கொஞ்சம் பொறுங்கங்க, ரெடியாயிரும்"

இப்போது புதிய தோழி ரமாவைப்பார்த்து கேட்கிறார், "ரெடியாயிருச்சுல்ல.. கொண்டுபோயிரலாமா?"

"ஊம்.. கொஞ்சம் பொறுங்க.. பாருங்க வேடிக்கையை.."

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் இரண்டு ரங்கமணிகளின் முன்னாலும் சில ஆரஞ்சுகள் உருண்டுகொண்டிருக்க, உரித்து விழுங்கிக்கொண்டே சுவாரசியமாக எதையோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

"இப்ப.. தெரிஞ்சுதா காஞ்சுபோன பழங்களை எப்படி காலிபண்றதுன்னு?"

.

43 comments:

ஆதிமூலகிருஷ்ணன் said...

pin thodara..

Mahesh said...

இப்பப் புரிஞ்சுதா எல்லாருக்கும்.... எதையெல்லாம் பதிவுல ஏத்தலாம்னு!!

நாஞ்சில் நாதம் said...

தல பின்னி பெடலெடுக்குறீங்க.
ஒரு பொடி வச்சு எழுதுற மாதிரி இருக்கு

ஹா ஹா ஹா ஹா ..

பாலா said...

ஹாஹாஹா
தங்கமணி பதிவுக்கு இன்னம் மவுசு குறையிலேப்பா

தராசு said...

//ஏதாவது சிக்கலான விஷயப்பரிமாற்றம் நிகழ்ந்துவிடுமோ என்ற பயம் உள்ளூர ஊர.. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இரண்டு ரங்கமணிகளும் ஹாலில் பேசிக்கொண்டிருந்தனர்.//

அது, அந்த பயம் இருக்கட்டும்.

உங்களுக்கு போய் உடம்புக்கு நல்லதேன்னு பழம் குடுத்தாங்க பாரு, அவங்கள சொல்லணும்.

அடுத்த தரம், கொஞ்சம் கந்தகமும் மளிகை லிஸ்ட்ல சேத்துக்க சொல்லறேன்.

pappu said...

அந்த இன்னொரு ஆசாமி நீங்க்தானா?

Anonymous said...

இப்படியே போச்சுன்னு உங்களுக்கு காஞ்சு போன ஆரஞ்சிப்பழம் கூட கிடைக்காது ஆமாம் :)

பரிசல்காரன் said...

ரைட்டு.. பிரபல பதிவர்னதும் நான் வேற ஒண்ணை எதிர்பார்த்தேன்..

Anonymous said...

//அவர் கேட்ட மான் மார்க் புளி இருக்காது. //

கல்யாணமாகி எத்தன நாள் ஆச்சு. இன்னும் ரமா எந்த ப்ராண்ட் புளி வாங்கறாங்கன்னு மனப்பாடம் ஆகியிருக்கவேண்டாம். :)

Anonymous said...

//அவரை நல்ல வேலை வாங்க முடியும்//

நல்ல வேலை , கெட்ட வேலைன்னு பலவிதமா வேண்டாத வேலை செய்வீங்க போல இருக்கு.

ஸ்ரீமதி said...

// சுபா தாமிராவின் முதுகில் ஸ்கெட்ச் பேனாவால் முட்டை முட்டையாக வரைந்துகொண்டிருந்தான்.//

:)))))))))நல்லா சிரிச்சேன் அண்ணா.. (திட்டாதீங்க.. ;))) உங்களுக்கு சமையல் கூட வருமா?? அடடா கத்துக்க சொல்லனுமே... தேங்க்ஸ் ஃபார் த இன்ஃபோ... :)))

ராமலக்ஷ்மி said...

:))!

அ.மு.செய்யது said...

//ரமாவின் லிஸ்டோ சூப்பர் மார்கெட்டையும் திணறச்செய்யும் சக்தி வாய்ந்தது
என்பதும் அவருக்குத்தெரியாதது அல்ல//

//தாமிரா அவ்வளவு நேரம் டிவி பார்த்துக்கொண்டிருந்ததைப்போல பாவனை செய்துவிட்டு வந்தவர்களுடன் உரையாடத்துவங்கினார்//

குபீர் சிரிப்பு...அப்படியே அனுபவிச்சி எழுதியிருக்கீங்கண்ணே !!!!!

அ.மு.செய்யது said...

// ஸ்ரீமதி said...
// சுபா தாமிராவின் முதுகில் ஸ்கெட்ச் பேனாவால் முட்டை முட்டையாக வரைந்துகொண்டிருந்தான்.//

:)))))))))நல்லா சிரிச்சேன் அண்ணா.. (திட்டாதீங்க.. ;))) உங்களுக்கு சமையல் கூட வருமா?? அடடா கத்துக்க சொல்லனுமே... தேங்க்ஸ் ஃபார் த இன்ஃபோ... :)))
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......!!!

பித்தன் said...

ஆகா அந்த கடைசீ ரெண்டு வரிகள் தான் பாஸ் தூள் கிளப்பீட்டிங்க. எல்லா வீட்டுலையும் காய் நறுக்கறது ரங்கமணி தானா?. அப்பா, இப்பதான் ஒரு அல்ப சந்தொசம். நல்ல பதிவு.

அனுஜன்யா said...

ஏன்யா இப்படி கொஞ்சங்கூட சொரணை இல்லாம, தன்மானமில்லாம....

இதோ வந்திட்டேம்மா.

அனுஜன்யா

துபாய் ராஜா said...

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை குதிச்சு குதிச்சு ஆடுச்சாம்.....

நல்ல சாப்பாடு சாப்பிடலாம்னு நண்பர் உங்க வீட்டுக்கு வந்தா தங்கமணிங்க இப்படி கூட்டணி அமைச்சு கும்மிட்டாங்களே....... :))

அமிர்தவர்ஷினி அம்மா said...

இது அவர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இது போன்ற நேரங்களில்தான் அவரை நல்ல வேலை வாங்க முடியும் என்பது ரமாவுக்கு நன்கு தெரியும் //

good approach rama, congrats.
:))))))))))))

ஜானி வாக்கர் said...

//ஏன்யா இப்படி கொஞ்சங்கூட சொரணை இல்லாம, தன்மானமில்லாம....

இதோ வந்திட்டேம்மா.//

இந்த டீல் நல்ல இருக்கு ஸார் ஹி ஹி.

ஜானி வாக்கர் said...

//சுபா தாமிராவின் முதுகில் ஸ்கெட்ச் பேனாவால் முட்டை முட்டையாக வரைந்துகொண்டிருந்தான்.//

முதுகில் முட்டை வரைய சொல்லி அம்மணி கிட்ட வாங்கின அடியால் உண்டான காயங்களை மறைக்க முயன்றதாக விருந்துக்கு வந்த பிரபல பதிவர் சொல்லாத வரைக்கும் சந்தோசம்.

அறிவிலி said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
pin thodara..//

மீ தி ஃப்ர்ஸ்ட் அவாய்ட் பண்றதுக்காக ஐடியாவா?

ரோஜா காதலன் said...

//இப்ப.. தெரிஞ்சுதா காஞ்சுபோன பழங்களை எப்படி காலிபண்றதுன்னு?//

திகில் கிளப்பும் வரிகள்...

பட்டாம்பூச்சி said...

ஹாஹாஹா
:))))

தாரணி பிரியா said...

காஞ்சு போன பழத்தை உங்களுக்கு சாப்பிட குடுத்தது தப்பு. உரிச்சு ஜூஸ் போட்டு ரமாவுக்கு தர சொல்லி இருக்கணும். ரமாவுக்கு கொஞ்சம் சொல்லி தரணும் போல‌

Truth said...

:)

அப்பாவி முரு said...

சிங்கம் சிங்கிளா இருந்தா தான் மவுசோ....

அப்பாவி முரு said...

//கடைகடையாக அலைய மனவலு//

கடைசியில் இருப்பது தெலுங்கு வார்த்தையா???

அமுதா கிருஷ்ணா said...

உங்க வீட்டு அம்மணியிடம் கத்துக்க நிறைய விஷயங்கள் இருக்கு சார்...

வித்யா said...

சரி...

Karthik said...

செம பதிவு. :)))))

அதை ஏங்ணா கம்ப்யூட்டர் சாம்பிராணினு சொல்றோம்?

வேல் ப்ரிண்ட்ஸ் said...

தாமிரா,

நல்லா இருக்கு. ”கடுகு”ன்னு ஒரு எழுத்தாளர் இருந்தார். அவர் புத்தகங்கள் கிடைத்தால் படிக்கவும்.

ஸ்ரீமதி said...

//அதை ஏங்ணா கம்ப்யூட்டர் சாம்பிராணினு சொல்றோம்?//

மடசாம்பிராணின்னா அறிவில்லாதவன், கம்ப்யூட்டர் சாம்பிராணின்னா கம்ப்யூட்டர் அறிவில்லாதவன் (Knowledge)??!!?!?! ஹி ஹி ஹி ஏதோ நம்மால முடிஞ்சது... ;)))

Karthik said...

//Blogger ஸ்ரீமதி said...
மடசாம்பிராணின்னா அறிவில்லாதவன், கம்ப்யூட்டர் சாம்பிராணின்னா கம்ப்யூட்டர் அறிவில்லாதவன் (Knowledge)??!!?!?! ஹி ஹி ஹி ஏதோ நம்மால முடிஞ்சது... ;)))

இதுக்கு உங்க பிந கவிதையே தேவலாம். என்ன லாஜிக் இது? :))

லவ்டேல் மேடி said...

அய்யோ ...!! பாவம் நீங்க ...!!

மாதவராஜ் said...

:-)))))

செந்தில் நாதன் said...

அனுபவிச்சு எழுதுனது நல்லாவே புரியுது!! கலக்குறிங்க அண்ணா!!

Saravana Kumar MSK said...

அண்ணி, ராஜதந்திரங்களை கரைத்து குடித்திருக்கிறார் போலும்.. உங்களுக்கு தான் இன்னும் பயிற்சி வேண்டும் அண்ணா.. :)

Saravana Kumar MSK said...

//சுபா தாமிராவின் முதுகில் ஸ்கெட்ச் பேனாவால் முட்டை முட்டையாக வரைந்துகொண்டிருந்தான். பேனாவை பிடுங்கினால் ஊருக்கே கேட்பது போல ஊளையிட்டு வைப்பான், எப்படியோ விளையாடிக்கொண்டிருந்தால் சரிதான் என்று விட்டுவைத்திருந்தார்கள்//

ரொம்ப சிரிச்சிட்டேன்.. :)

Saravana Kumar MSK said...

ரொம்ப நாளா பின்னூட்டம் போட முடியவில்லையே தவிர, எல்லா பதிவுகளையும் மிஸ் பண்ணாமல் படித்தேன்.. ரொம்பவே சூப்பரா எழுதறீங்க..

அதிலும் "ஆடிட் ஷெட்யூல் வந்தாச்சு..", "தயிரைக்கொட்டியது யார்?", "பயோடேட்டா" எல்லாம் சூப்பர்..

Saravana Kumar MSK said...

Me the 40 ;)

அன்புடன் அருணா said...

அய்யோ ...!! பாவம் நீங்க ...!!

பிரசன்ன குமார் said...

ரெண்டு தங்க மணிகளுமே, அடுத்தவரை அக்கா என்று அழைக்கும் Technique சூப்பர்..
பல இடங்களில் குபீர் சிரிப்பு வர வழைத்து விட்டது..

Sabarinathan Arthanari said...

நல்லா இருக்குங்க