Friday, September 25, 2009

சோர்விலன்

"2393 காலிங் 2472 ரோஜர் ஓவர்"

"ரிப்போர்டிங் 2472 ஓவர்"

"H2003461 ரிப்பீட் H2003461.. சாம்பிள்ஸ் பெயிலியர். லைன் ஸ்டாப்பேஜ். பெக்கூலியர் சிச்சுவேஷன். ஜிஎம் ஆன் தி வே டு தி ஸ்பாட்.. ரிப்பீட் ஜிஎம் ஆன் தி வே டு ஸ்பாட். ஓவர்"

"அய்யய்யோ என்னால தனியா சமாளிக்கமுடியாது ஓவர், முடிஞ்சா நீங்களும் வாங்க ஓவர்"

"ரோஜர் அண்ட் அவுட். ஓவர்"

******

மண்டை காயும் அலுவலக பிரச்சினைகளில் வருடக்கணக்கில் உழல்வதால் ஒரு அயர்ச்சி ஏற்பட்டுவிடுவது தவிர்க்க இயலாதது. ஆனால் அவ்வப்போது ஏதாவது சுவாரசியமாக நடந்துகொண்டேதானிருக்கிறது. அலுவலக விஷயங்களோடு வடிவேலு, கவுண்டமணி ஜோக்குகளை மிக்ஸ் செய்து சிரித்துக்கொண்டே பிரச்சினைகளை எதிர்கொள்வது கொஞ்சம் பதற்றம் தணிக்கும், அயர்ச்சியிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள இயலும். ஒவ்வொரு அலுவலகச்சூழலும் வித்தியாசமென்பதால் அந்த நகைச்சுவைகளை பகிர்ந்துகொள்வது கொஞ்சம் சிரமமானதென்பதை நீங்களும் அறிவீர்கள்.

மேலும் புதிய நபர்களோடு, கலகலப்பான இளைஞர்களோடு வேலை பார்ப்பது நம்மை இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வைத்துக்கொள்ள ஒரு சிறந்த வழி. சமீபத்தில் எங்கள் குழுவோடு இணைந்த ஒரு கலகலப்பான இளம் எஞ்சினியரோடு நான் நடத்திய உரையாடல்தான் மேலே நீங்கள் காண்பது. செல்போன்களில் பேசிப்பேசியே காது ஓட்டையாகிப்போனதால் பெரும்பாலும் எங்கள் நிறுவனத்தில் செல்போனின் ஸ்பீக்கர் போன் வசதியை பயன்படுத்தி ஒரு வாக்கிடாக்கியைப் போல பயன்படுத்துவது இப்போது அதிகமாகிவருகிறது. அந்தப் புதியவரின் பழக்கமும் அதுதான். கொஞ்ச நாட்களுக்கு முன்னர் இதே பிரச்சினையை நான் கையாண்டிருந்தால் அது இப்படியிருந்திருக்கும்..

"ராஜன், நா கேகே பேசுறேன்"

"சொல்லுங்க"

"3461 ரிஜக்டாயிப்போச்சு, லைன் நிக்கிது, பாஸ் வாறாரு.. பாத்துக்குங்க"

"சரி"

சுறுசுறு விறுவிறுன்னு வேலையை பார்க்கும் அதே நேரம் போரடிக்காமல் சிரித்தமுகமாக, கலகலப்பாக சூழலையும் மகிழ்ச்சிப்படுத்திக்கொண்டு வேலை பார்ப்பதற்கு ஒரு தனித்திறன் வேண்டும். எப்படி இருக்கமுடிகிறது இப்படி இவர்களால்? அது வரம்.! சின்னச்சின்னதாக வேலைகள் இருக்கும் என்பதால் பெரும்பாலும் மறக்காமலிருக்க சின்னூண்டு பாக்கெட் டைரியில் எழுதிவைத்துக்கொள்வது எங்கள் கம்பெனியில் வழக்கம், பலருக்கும். அவரும் அப்படித்தான். ஆனால் அதையே அவர் இப்படிச்சொல்கிறார் நேற்று..

"ஹோ..யா.. ஹோ..யா.. க ஜி னி... க ஜி னி..!!
பாருங்க ஸார், மறந்து போயிரும்னு எழுதிவச்சு எல்லாம் வேலை பாக்கவேண்டியிருக்குது ஸார்.. லைன்ல நாலு நாள் வேலையை ஒரே நாள்ல வாங்குறாங்க ஸார்.. அவ்வ்வ்வ்...
ஹோ.. யா.. க ஜி னி..!!"

.

26 comments:

அத்திரி said...

நாந்தான் மொதல்ல

அத்திரி said...

நல்ல அனுபவமான பதிவு அண்ணே

Cable Sankar said...

நைஸ்

ஸ்ரீமதி said...

சூப்பர் :))

ஆயில்யன் said...

//அலுவலக விஷயங்களோடு வடிவேலு, கவுண்டமணி ஜோக்குகளை மிக்ஸ் செய்து சிரித்துக்கொண்டே பிரச்சினைகளை எதிர்கொள்வது கொஞ்சம் பதற்றம் தணிக்கும்,///

எச்சாட்டிலி ஷேம் டெக்னிக்கு :) பட் இதுல வடிவேலு செமயா சூட் ஆவாரு ! :))

ஆயில்யன் said...

பை தி பை இந்த ரோஜர் என்னா மீனிங்கு...? :)

அதிகமா போலீஸ் வாக்கி டாக்கியில பேசுவாங்க கேட்டிருக்கேன்!

ஜானி வாக்கர் said...

அனுபவ பதிவு :))

வனம் said...

வணக்கம் ஆதி

நல்ல அனுபவம், வேலையிடத்தில் கலைப்படையாமல் இருக்க இதுவும் நல்ல யோசணைதான்

உங்கள் இடுகைகளை தொடருந்து படிப்பேன், -- பின்னூட்டம்தான் இடிக்கின்றது

இராஜராஜன்

இராகவன் நைஜிரியா said...

அண்ணே இந்த டைரி எழுதி வைப்பதில் எனக்கு ஒரு கஷ்டம் இருக்கண்ணே. இந்த சின்ன டைரிய எங்காவது வச்சுட்டு தேடுவோம் பாருங்க.. அது ஒரு தனிக்கதை.

பட்டிக்காட்டான்.. said...

//.. இராகவன் நைஜிரியா said...

அண்ணே இந்த டைரி எழுதி வைப்பதில் எனக்கு ஒரு கஷ்டம் இருக்கண்ணே. இந்த சின்ன டைரிய எங்காவது வச்சுட்டு தேடுவோம் பாருங்க.. //

அந்த டைரிய எங்கெங்க வைப்பீங்கன்னு ஒரு லிஸ்ட் போட்டு பாக்கெட்ல வச்சுக்கங்க(ஹிஹி ஐடியா..!)

எவனோ ஒருவன் said...

நல்லாயிருக்கு அண்ணே.

அப்புறம்
ரோஜர்னா
புரிஞ்சுபோச்சு.

வித்யா said...

நல்லாருக்கு.

pappu said...

கேன் யு ஹியர் மி?
லவுட் அண்ட் க்ளியர்.
இது எங்க டயலாக் போன் எடுத்ததும்!

Anonymous said...

ஒரு ஓட்டு போட்டச்சு.

தராசு said...

சும்மா எத வேண்ணாலும் எழுதிட்டு, அது துறை சார்ந்ததுன்னெல்லாம் சொல்லக் கூடாது.

தராசு said...

சும்மா எத வேண்ணாலும் எழுதிட்டு, அது துறை சார்ந்ததுன்னெல்லாம் சொல்லக் கூடாது.

துபாய் ராஜா said...

:))

ஆதிமூலகிருஷ்ணன் said...

அத்திரி, கேபிள் (பதிவு போட்டாச்சு), ஸ்ரீமதி, ஆயில்யன், ஜானி, ராஜராஜன், ராகவன், பட்டிக்காட்டான், எவனோ ஒருவன் (எனக்கே தெரியாமல்தான் ஆயில்யனுக்கு டிமிக்கி குடுத்திருக்கேன். உங்களுக்கு என்ன புரிஞ்சது?)..

வித்யா, பப்பு, வேலன், தராசு (அதை ஏன் ரெண்டு வாட்டி சொல்றீங்க?), ராஜா..

அனைவருக்கும் நன்றி.!

(என்ன கூட்டத்தையே காணோம்? வட போச்சே.!)

Karthik said...

கலக்கல்! :))

எவனோ ஒருவன் said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
உங்களுக்கு என்ன புரிஞ்சது?//

//எவனோ ஒருவன் said...
ரோஜர்னா
புரிஞ்சுபோச்சு.//

//In radio phraseology, "Roger" means "Message Understood" //
அதத்தான் அப்படி சொன்னேன்.

http://en.wikipedia.org/wiki/Roger

Mahesh said...

'மகேஷ் ஹியர்...ஓவர்..ஒவர்"
'ஆதி ஹியர்... இன்னும் ரெண்டு ஓவர்'
'ஓவர்.. ஒவர்'
'ஒரு ஒவர் பாக்கி... ஒவர்'
'மேட்ச் முடிஞ்சு கோப்பையை எடுத்தாச்சு...ஒவர்'
'என்னது... ஒவரா... அவ்வ்வ்....'

அன்புடன் அருணா said...

:)

அ.மு.செய்யது said...

துறை சார்ந்த பதிவு ??

ஓவர் !

மங்களூர் சிவா said...

ஓவர் !ஓவர் !

தமிழ்ப்பறவை said...

பதிவை நான் படிக்கிறது ஓவர் தாமதமோ...?
:-)த்தேன்...

☀நான் ஆதவன்☀ said...

//எவனோ ஒருவன் said...
September 25, 2009 7:51 PM
//ஆதிமூலகிருஷ்ணன் said...
உங்களுக்கு என்ன புரிஞ்சது?//

//எவனோ ஒருவன் said...
ரோஜர்னா
புரிஞ்சுபோச்சு.//

//In radio phraseology, "Roger" means "Message Understood" //
அதத்தான் அப்படி சொன்னேன்.

http://en.wikipedia.org/wiki/Roger//

:)))))))))))))))))