Tuesday, September 15, 2009

யாரு என் வரலாறு கூறுவது.?

'ஆறு தன் வரலாறு கூறுதல்' என்ற தலைப்பில் தொடர்ந்துகொண்டிருக்கும் இந்தத்தொடர் பதிவுக்கு என்னை அழைத்த அமிர்தவர்ஷினிஅம்மாவுக்கு நன்றி. நமக்குதான் கையை வச்சுக்கிட்டு சும்மா இருக்கமுடியாதே, அதான் தலைப்பை இப்படி குரங்கு வேலை பார்த்து வச்சிருக்கேன். உண்மையில் இந்தத்தொடரை ஆரம்பித்த மயூரன் இதற்கு தந்த தலைப்பு 'வலை பதிய வந்த கதை'. இதுவும் சுகமான ஒரு சுயபுகழ்தலுக்கான வாய்ப்பு என்பதால் தொடர் அறுபடாமல் செல்கிறது என நினைக்கிறேன். வழக்கமாக நான் தொடருக்கு அழைத்தால் ஒருவரும் அதை தொடராமல் அப்படியே ஒழிஞ்சுபோயிரும். (ஹிஹி.. நண்பர்களுக்கு நம்மீது அவ்வளவுதான் மருவாதி). இந்தத்தொடரை மட்டும் நான் அழைக்கப்போகும் நபர்கள் தொடர்கிறார்களா என்று கண்ணுல விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பார்ப்பேன். நடக்கலன்னா தெரியும் சேதி.!

இனி சுயபுராணம்..

2007 ஜனவரி வாக்கில் பழக்கமான ஒரு எழுத்தாளர், இன்னும் புத்தகமாகியிராத தனது எழுத்துகள், உரைகளை பிளாகில் போட்டுள்ளதாகவும், நேரமிருக்கும் போது படியுங்கள் என்றும் கூறிவந்தார். எனக்கு அலுவலக விஷயங்களை தெரிந்துகொள்ள இருக்கும் ஆவல் பிற விஷயங்களில் இருப்பதில்லை. அதுவும் புரியாத விஷயங்கள் என்றால் கடுப்பாக இருக்கும். ஆகவே அதென்ன பிளாக்கு ஒயிட்டுனு.. கடுப்பாகி விட்டுவிட்டேன்.

கொசு விரட்டிக்கொண்டிருந்த பின்னொரு அலுவலக நாளில் அதைப்படிக்கலாமே என்று பிளாகினுள் வந்தேன். அன்று அந்த பிளாகின் மேல் வலது மூலையில் கிரியேட் பிளாக் பட்டனைக்கண்டேன். இன்று இதோ நீங்கள் இதை வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

பிளாக் கிரியேட் பண்ணுவது அவ்வளவு எளிதாக இருக்கும் என நான் நினைத்திருக்கவில்லை, முதலில் பத்திரிகைகள் சீண்டாமல், என் டைரியில் தூங்கிக்கொண்டிருக்கும் கவிதைகளை போடலாம் என்றுதான் நினைத்து 'முதல்முத்தம்' என்ற பிளாகை ஆரம்பித்தேன். (இன்னிக்கு அந்தக்கடை கவனிக்கப்படாமல் சாத்துற நிலையில் இருக்குது). தொடர்ந்து வந்த சில வாரங்களில் 'குருவி' என்ற ஒரு சினிமாவைப் பார்த்துவிட்டு வந்த ஆற்றாமையில் ஆரம்பித்ததுதான் 'அலிபாபாவும் 108 அறிவுரைகளும்'. அந்த வகையில் விஜய்க்குதான் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். முதலில் சில பதிவுகள் எழுதிவிட்டு வாசிக்க நாதியில்லாமல் மூடிவிடலாமா என்று யோசிக்க ஆரம்பித்து பல வாரங்களுக்குப் பிறகுதான் தமிழ்மணம், தமிழ்வெளி போன்ற திரட்டிகள் குறித்து அறிய வந்து அவற்றில் இணைத்தேன். அதன் பிறகே ஹிட்ஸும், பின்னூட்டங்களும் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்தன.

அப்துல்லா, மங்களூர் சிவா, வெண்பூ, பரிசல், கார்க்கி போன்ற இன்றைய பிரபலங்களும் நான் பதிவுலகம் வந்த அதே சமயத்தில்தான் பதிவுலகம் வந்தனர். அவர்களே ஆரம்பத்தில் மிகுந்த உற்சாகம் தந்து ஊக்கப்படுத்தியவர்கள். பின்னர் நர்சிம், அனுஜன்யா, வேலன், கேபிள் என நட்பு வட்டம் பெருகியது. அனைவரும் குழுவாக செயல்படுகிறோம் என்ற குற்றச்சாட்டு இருப்பினும் அதுவல்ல உண்மை. பதிவுலகம் தாண்டிய நட்பு ஏற்பட்டிருப்பது உண்மையானாலும் ஒருவருக்கொருவர் தீராத போட்டியாகத்தான் கருதிக்கொண்டிருக்கிறோம். நன்கு எழுதும் புதியவர்களைக்காணும் போது இதோ இன்னுமொரு போட்டியென்ற பயமும் மகிழ்ச்சியும்தான் கொள்கிறோம்.

என்ன பேச்சு திசைமாறுது? நம்ப விஷயத்துக்கு வாங்க.. அடுத்து 'திருமணமாகாதவர்களுக்கான எச்சரிக்கை'ப் பதிவைத்துவங்கிய போது ஒரு பெரிய வரவேற்புக் கிடைத்தது. தொடர்ந்து எச்சரிக்கைகளும், மொக்கைகளுமாய் தொடர்ந்தேன். பின் கொஞ்சம் கவிதை, சினிமா என தொடர்ந்து அதன் பின் கதைகள், துறைசார்ந்த பதிவுகள் அறிமுகமாயின. இதில் துறை சார்ந்த பதிவுகள் கொஞ்சம் புதிய வாசகர்களையும், வலைக்கு ஒரு புதிய வண்ணத்தையும் தந்தது. தொடர்ந்து மொக்கைகளும், சில புதிய பதிவுகளுமாய் பயணம் ஒரு லட்சம் ஹிட்ஸையும், குறிப்பிடத்தகுந்த ஃபாலோயர்ஸையும் அடைந்தபோது ஒரு சிக்கல் வந்தது. அது தாமிரா என்ற பெயருக்கான சிக்கல். ஏற்கனவே பாப்புலராகியிருக்கும் திரைத்துறையைச்சார்ந்த தாமிரா இருப்பதால் என் நிஜப்பெயருக்கு மாறினேன். அதே சமயம் தமிழ்மண நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. பின்னர் எனது 'சிக்ஸ் சிக்மா' பதிவு தமிழ்மணத்தின் 2008க்கான தொழில்நுட்பத்துக்கான முதல் பரிசை வென்றது ஒரு மகிழ்வான தருணம். விகடன் வாய்ப்புகளும் வந்தன. பெயரைத்தொடர்ந்து வலையில் டெம்ப்ளேட் மாற்றம், டொமைன் மாற்றம், வலைப்பெயர் மாற்றம் என தொடர்மாற்றங்களும் நிகழ்ந்தது (ரொம்ப ஓவராயிருக்குதுல்ல.. ஹிஹி). சரி போதும், நிறுத்திக்கலாம்.

டெக்னிகல் சைட் என்று பார்த்தால் முதலில் நிறைய விட்ஜெட்ஸ் வைத்திருந்து அதனால் வலை பாதிக்கப்படுவது தெரிந்ததால் இப்போது பெரும்பாலும் தவிர்க்கிறேன். துவக்கத்தில் தமிழ் எழுத 'அழகி' உபயோகித்து இப்போது பெரும்பாலும் 'ஈகலப்பை (தமிழா)' மட்டுமே பயன்படுத்துகிறேன். ஆன்லைன் என்றால் எப்போதும் 'tamileditor.org' யில் எழுதுகிறேன். இடையில் பதிவேற்ற சிலகாலம் 'வின் லைவ் ரைட்டர்' பயன் படுத்திக்கொண்டிருந்தேன். இப்போது அதில் கொஞ்சம் சிக்கல் இருப்பதால் நேரடியாக பிளாகரிலேயே போட்டுக்கொண்டிருக்கிறேன். வாரத்துக்கு சராசரியாக 4 பதிவுகள் என்ற கணக்கில் பதிவுகள் எழுதிவருகிறேன். அதற்கே நேரம் கிடைப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது. நண்பர்களைப்படிக்கவும், பின்னூட்டமிடவுமே கிடைக்கும் நேரம் செலவாகிவிடுகிறது. பதிவுலகம் வந்தவுடன் புத்தகங்கள் படிப்பது, சினிமா பார்ப்பது வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனது எழுதும் ஆர்வத்துக்கு வடிகாலாக அமையும் அதே நேரம், பத்திரிகைகளுக்கான வாய்ப்பையும், ஆச்சரியங்களில் ஆழ்த்தும் அரிய நட்பையும் ஏற்படுத்தித்தரும் 'வலைப்பூ' என் வாழ்வின் ஒரு இனிய திருப்பம் என்பது ம்றுக்கமுடியாது. இந்த மகிழ்ச்சிக்கதையை தொடர இனிய நண்பர்கள்


..ஆகியோரை அழைக்கிறேன்.
.

39 comments:

Anonymous said...

//2007 ஜனவரி வாக்கில் பழக்கமான ஒரு எழுத்தாளர், இன்னும் புத்தகமாகியிராத தனது எழுத்துகள், உரைகளை பிளாகில் போட்டுள்ளதாகவும், நேரமிருக்கும் போது படியுங்கள் என்றும் கூறிவந்தார். //

நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் க்ரியேட் என்ற சொல்லை தட்டினதும் இவ்வளவு சுலபமா என்று தோன்றி விட்டது.

புதுகைத் தென்றல் said...

இப்போதைக்கு ப்ரசண்ட் போட்டுக்கோங்க.

அப்புறமா வந்து படிக்கறேன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இந்த தலைப்பும் நல்லாவே இருக்கே..யாரும் சொல்லாட்டி என்ன நாமே வரலாற்றில் இடம் உண்டாக்கிக்கலாம்.. :)

பாலா said...

கொசுவத்தி ஒரே புகை
லொக் லொக் (இருமுறேன் மாமா )
நல்ல இருக்குங்கோ

நர்சிம் said...

//இந்தத்தொடரை மட்டும் நான் அழைக்கப்போகும் நபர்கள் தொடர்கிறார்களா என்று கண்ணுல விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பார்ப்பேன். நடக்கலன்னா தெரியும் சேதி//

யாமினியாமினியாமினியாமினி.

கார்க்கி said...

நீங்க கூப்பிட்டா எழுதறது இல்லையா? சகா, நீங்க ஆர்ம்பிச்ச வாசிப்பு தொடர்பதிவு எவ்வளவு பெரிய வெற்றி?

சரி, நானும் எழுதிடறேன்..

நாடோடி இலக்கியன் said...

கொஞ்சம் இல்லை ரொம்பவே .....

ஆயில்யன் said...

//பதிவுலகம் வந்தவுடன் புத்தகங்கள் படிப்பது, சினிமா பார்ப்பது வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.//

:( உண்மைதான்!

நாஞ்சில் நாதம் said...

'திருமணமாகாதவர்களுக்கான எச்சரிக்கை', துறைசார்ந்த பதிவுகள்

இந்த ரெண்டும் தானே உங்க ஸ்பெஷல்

முரளிகுமார் பத்மநாபன் said...

நாஞ்சில் நாதம் வாழ்க

முரளிகுமார் பத்மநாபன் said...

//அனைவரும் குழுவாக செயல்படுகிறோம் என்ற குற்றச்சாட்டு //
நல்ல நண்பர்கள் கிடைப்பதானால் இதுபோல குற்றச்சாட்டுகளை இன்முகத்தோடு எதிர்கொள்ளாம். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. இல்லையா?

Ram said...

Add-தமிழ் விட்ஜெட் பட்டன், உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடுவதை மிகவும் எளிமையாக்குகிறது.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

ஸ்ரீமதி said...

:))

வித்யா said...

:))

தராசு said...

ம்ம், கொசு வர்த்தி சூப்பர்.

பரிசல்காரன் said...

நான் ஏற்கனவே இது பற்றி எழுதிவிட்டதால் ஒரு லிங்க் கொடுத்து போஸ்ட் போட்டுவிடுகிறேன்..

ஐயா.. ஜாலி ஜாலி!!!

குசும்பன் said...

//தொடர்கிறார்களா என்று கண்ணுல விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பார்ப்பேன். நடக்கலன்னா தெரியும் சேதி.!//

தொடரவில்லை என்றால் நாலு குறும் படத்தில் நடிப்பேன் என்று ஒரு கொலைவெறி மிரட்டல் கொடுக்க வேண்டியதுதானே:)) உடனே எழுதிடுவாங்க!

குசும்பன் said...

//மேல் வலது மூலையில் கிரியேட் பிளாக் பட்டனைக்கண்டேன். இன்று இதோ நீங்கள் இதை வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
//

உங்களுக்கு வலது மூலை எங்களுக்கு அது சனி மூலை:(((

அ.மு.செய்யது said...

//கொசு விரட்டிக்கொண்டிருந்த பின்னொரு அலுவலக நாளில் அதைப்படிக்கலாமே என்று பிளாகினுள் வந்தேன். //

சேம் பிளெட்..நானும் "பெஞ்சில்" இருந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் தான் எழுத‌ வந்தேன்.

அ.மு.செய்யது said...

//குசும்பன் said...
//தொடர்கிறார்களா என்று கண்ணுல விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பார்ப்பேன். நடக்கலன்னா தெரியும் சேதி.!//

தொடரவில்லை என்றால் நாலு குறும் படத்தில் நடிப்பேன் என்று ஒரு கொலைவெறி மிரட்டல் கொடுக்க வேண்டியதுதானே:)) உடனே எழுதிடுவாங்க!
//

தாறுமாறு !!!!!!!! ஹா ஹா ஹா..

இராகவன் நைஜிரியா said...

உங்க கூட கம்பேர் பண்ணா நான் படு ஜூனியருங்கோ....

நீங்க வாரத்துக்கு 4 இடுகை எழுதறீங்க.. நான் மாசம் 4 எழுதவே மூச்சு முட்டுது...

எம்.எம்.அப்துல்லா said...

//நீங்க வாரத்துக்கு 4 இடுகை எழுதறீங்க.. நான் மாசம் 4 எழுதவே மூச்சு முட்டுது...

//

எனக்கெல்லாம் வருஷத்துக்கு 4 எழுதவே மூச்சு முட்டுது :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

2007 ஜனவரி வாக்கில் பழக்கமான ஒரு எழுத்தாளர் //

இன்னும் அந்த எழுத்தாளர் இருக்காரா ?

இல்ல அந்த எழுத்தாளரே நீங்க தானா :)))))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

குசும்பன் said...
//தொடர்கிறார்களா என்று கண்ணுல விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பார்ப்பேன். நடக்கலன்னா தெரியும் சேதி.!//

தொடரவில்லை என்றால் நாலு குறும் படத்தில் நடிப்பேன் என்று ஒரு கொலைவெறி மிரட்டல் கொடுக்க வேண்டியதுதானே:)) உடனே எழுதிடுவாங்க!

:))))))))))))))))))))))))))))))))))))))))

வெ.இராதாகிருஷ்ணன் said...

பல விசயங்களைத் தெரிந்து கொள்ளும்வ் வகையில் மிகவும் சிறப்பான வரலாறு.

துபாய் ராஜா said...

ஆமாமா.வரலாறு ரொம்ப முக்கியம்.

" உழவன் " " Uzhavan " said...

விளக்கெண்ணெய் அவ்வளாவு சீக்கிரம் வாங்கிடுவீங்களா?
முடிஞ்சா ஃரான்ஞ்ச் ஆயில்னு மாத்திக்கோங்க :-)
வரலாறு சுவராஸ்யம்.

அறிவிலி said...

சரித்திரத்தை புரட்டி போட்றுக்கீங்க.
சுவை.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அம்மிணி.!
நன்றி தென்றல்.!
நன்றி முத்துலக்ஷ்மி.! (எப்பூடி நம்ப ஐடியா?)
நன்றி பாலா.! (பாத்து கவனம்)
நன்றி நர்சிம்.! (நறநற..)
நன்றி கார்க்கி.! (சரி வுடு, மீசையில மண் ஒட்டல)
நன்றி இலக்கியன்.!
நன்றி ஆயில்.!
நன்றி நாஞ்சில்.!
நன்றி முரளி.! (கரெக்டுதாம்பா)
நன்றி தென்றல்.!
நன்றி ராம்.!
நன்றி ஸ்ரீமதி.!
நன்றி வித்யா.!
நன்றி தராசு.!
நன்றி பரிசல்.!
நன்றி குசும்பன்.! (இல்லாவிட்டாலும் குறும்படத்தை யாரும் தடுக்கமுடியாது தல)
நன்றி செய்யது.!
நன்றி ராகவன்.! (ஏன் இப்படி?)
நன்றி அப்துல்.! (ஏன் இப்பூடி?)
நன்றி அமித்துஅம்மா.! (நிஜம்ங்க.. ஒருத்தர் இருக்காரு)
நன்றி இராதாகிருஷ்ணன்.! (என்ன நக்கலா?)
நன்றி துபாய்.!
நன்றி உழவன்.! (புரியலையே பாஸ்)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அறிவிலி.!

ராமலக்ஷ்மி said...

//என் நிஜப்பெயருக்கு மாறினேன்.//

மாறி விட்டாலும் எனக்கு தாமிரா என்றுதான் சொல்ல வருகிறது:)! அதுசரி, புனைப்பெயர் எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் என்று சொல்லவேயில்லையே. ஹி, நாமெல்லாம் குடித்து வளர்ந்த தண்ணீரின் நியாபகமாக:))?

Mahesh said...

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே... மிக முக்கியம்.

நம்ம வரலாறுல உங்களுக்கு ஒரு பக்கம் ஒதுக்கிடறேன்

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ராமலக்ஷ்மி.! (ஹிஹி.. மறந்துட்டேன். நீங்கள் சொன்னதுதான் சரியான காரணம். மேலும் நீங்கள் தாமிராவென்றே அழைக்கலாம். எழுத்துக்கு மட்டும்தான் ஆதி. நண்பர்களுக்கு என்றுமே தாமிராதான். நண்பர்கள் அப்படியே தொடர்கிறார்கள்)

நன்றி மகேஷ்.! (நிறைய பேரைக்குறிப்பிட மறந்துவிட்டேன் பாஸ். :((..)

தமிழ்ப்பறவை said...

:-)
//உங்களுக்கு வலது மூலை எங்களுக்கு அது சனி மூலை:((( //
:-)))

Vijay said...

//அந்த வகையில் விஜய்க்குதான் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.//


ஆதி லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா கேக்கறேன். சொல்லுங்க. அந்த விஜய் நான் தானே??????.........

பட்டிக்காட்டான்.. said...

//.. இராகவன் நைஜிரியா said...

நான் மாசம் 4 எழுதவே மூச்சு முட்டுது...

எம்.எம்.அப்துல்லா said...

எனக்கெல்லாம் வருஷத்துக்கு 4 எழுதவே மூச்சு முட்டுது :) ..//

எனக்கு எழுதவே மூச்சு முட்டுது..

எப்பூடி.. :-)

T.V.Radhakrishnan said...

உங்க வரலாறு..தமிழக யூனிவெர்சிடிக்கு அனுப்பப்படுகிறது.கூடிய விரைவில் பாடநூல்களில் இடம் பெறலாம்

கும்க்கி said...

தோஸ்த்,.
என்னதான் சொல்லுங்க,.
இந்த வலைப்பதிவு இல்லையென்றால்
என்னைபோன்ற அல்லது உங்களை போன்ற நட்பு வட்டம் (இதே குறுகிய கண்ணோட்டம்தானே) அமைய ஆச்சர்யம்தானே...

எங்கேனும் பஸ் நிலையங்களிலோ அல்லது ரயில் நிலையங்களிலோ அல்லது ஏதேனும் நிலையங்களிலோ பார்த்திருக்கலாம்...ஆனாலும் ஒரு புரிந்துகொள்ளுதல் இருந்திருக்குமா..அல்லது...அதனின் தொடர்ச்சி....இப்படியாக யோசித்துக்கொண்டேயிருக்கலாம்...
ஆச்சர்யம்.

கும்க்கி said...

நீங்களும் அப்ரூவலா...
நல்ல பின்னேற்றம்.....