Monday, September 14, 2009

சிறுகதைப்பட்டறைப் புகைப்படங்கள்

வழக்கமாக நிகழும் பதிவர் சந்திப்புகளில் நான் எடுக்கும் பெரும்பாலான புகைப்படங்கள் என் கணினியிலேயே தூங்கிக்கொண்டிருக்கும். யாராவது ஓரிரு புகைப்படங்கள் இமெயில் செய்யச்சொன்னாலும் கூட சரி சரியென்று சொல்வேனே தவிர இவரிடம் கேட்பதைவிட குட்டிச்சுவரில் போய் முட்டிக்கொள்ளலாம் என கேட்பவர்கள் எண்ணுமளவுக்கு ஆக்கிவிடுவேன்.

இந்தமுறை அப்படியெல்லாம் ஆகிவிடக்கூடாது என முடிவு செய்து சென்னையில் நிகழ்ந்த 'உரையாடல்' சிறுகதைப்பட்டறையின் போது எடுத்த ஏறத்தாள அனைத்து புகைப்படங்களையும் பதிவேற்றிவிடுவது என முடிவு செய்து ஒவ்வொரு படமாக உட்கார்ந்து சைஸ் ஏற்புடையதாக்கி ஒருவழியாக பிளாகரிலேயே (லைவ் ரைட்டரில் ஏதோ பிரச்சினை) முட்டி மோதி ஏற்றியாயிற்று. எழுத்தாளர்கள், பிளாகர் சீனியர்ஸ், ஜூனியர்ஸ் என கலந்து கட்டி பதிவாகியிருக்கும் புகைப்படங்களில் முடிந்தவரை பெயர் குறிப்பிட முயற்சித்திருக்கிறேன். நேற்றைய பட்டறை குறித்த பதிவில் பிரதான பேச்சாளர்களின் படங்களை கண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.
1. Pudhinan, Tamilan

2. ??, Kirbal, ??

3. Muralikumar

4. Vadakarai Velan

5. ??, Ulavan, ??

6. Athisha

7. Yathra

8. Yuvakrishna (Lukylook)

9. Saravanan, ??, Muralikumar, Senthil

10. Cable shankar

11. Muraikannan

12. Tamilpriyan

13. Parisalkaran

14. ??

15. Nanjilnatham, Vaalpaiyan

16. Sa. Devadas

17. Rejovasan, ??

18. Cheral, Krishnaprabhu, Ulavan, ??

19. Kumky, Unmaiththamilan, Veyilan

20. Yvan chandrasekar

21. Pon.Vasudevan, Athimoolakrishnan

22. Athimoolakrishnan

23. Sa. Muthuvel

24. R.V.Chandrasekar, ??, ??

25. Pon. Vasudevan, Cable shankar

26. Vannauthupoochiyar, Thandora


27. Vadakarai Velan, Veyilan, Narsim

28. Karki, Parisalkaran

29. Pa. Ragavan, Paithiyakaran, Jyovram Sundar

பின் குறிப்பு : பெயர்கள், புகைப்படங்கள் நண்பர்களின் அனுமதியில்லாமல் வெளியிடப்பட்டுள்ளது. யாருக்காவது ஆட்சேபணை இருப்பின் அதற்காக வருந்துகிறேன். பின்னூட்டத்தில் தெரிவித்தால் நீக்கப்பட்டுவிடும். நான் பெயர் குறிப்பிடத் தவறிய பதிவர்கள் தெரிவித்தால் இணைத்துவிடுகிறேன். அனைவரின் அன்புக்கும் நன்றி.

.

39 comments:

எவனோ ஒருவன் said...

அண்ணே,
நான் இருப்பது 18 ல்.

ஆயில்யன் said...

எங்க தம்பி தமிழ்பிரியன் போஸ் கொடுங்கன்னு கேட்டு அழகா ஒரு போட்டோ எடுத்து கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள் + நன்றி சொல்லிக்கிறோம்! :)))

மத்தபடி போட்டோக்கள் நிறைய ?? குறிகளோட இருக்கிறது கூடிய விரைவிலேயே அப்டேய் செய்து எங்களை ! ஆழ்த்த வேண்டிக்கொள்கிறேன் :))))

butterfly Surya said...

நன்றி ஆதி.

10வது படம் தான் சூப்பர்..

ச்சின்னப் பையன் said...

ஆஹா! பின்னாடி ஒரு ஒளிவட்டம் தெரியுதே!!!
கடவுளே... கடவுளே...

துபாய் ராஜா said...

நல்ல தொகுப்பு.

//வழக்கமாக நிகழும் பதிவர் சந்திப்புகளில் நான் எடுக்கும் பெரும்பாலான புகைப்படங்கள் என் கணினியிலேயே தூங்கிக்கொண்டிருக்கும். யாராவது ஓரிரு புகைப்படங்கள் இமெயில் செய்யச்சொன்னாலும் கூட சரி சரியென்று சொல்வேனே தவிர இவரிடம் கேட்பதைவிட குட்டிச்சுவரில் போய் முட்டிக்கொள்ளலாம் என கேட்பவர்கள் எண்ணுமளவுக்கு ஆக்கிவிடுவேன்.
இந்தமுறை அப்படியெல்லாம் ஆகிவிடக்கூடாது என முடிவு செய்து சென்னையில் நிகழ்ந்த 'உரையாடல்' சிறுகதைப்பட்டறையின் போது எடுத்த ஏறத்தாள அனைத்து புகைப்படங்களையும் பதிவேற்றிவிடுவது என முடிவு செய்து ஒவ்வொரு படமாக உட்கார்ந்து சைஸ் ஏற்புடையதாக்கி ஒருவழியாக பிளாகரிலேயே (லைவ் ரைட்டரில் ஏதோ பிரச்சினை) முட்டி மோதி ஏற்றியாயிற்று.//

ஆதி,உங்களோட இந்த நேர்மை எல்லோருக்குமே ரொம்ப பிடிக்கும்...
:))

எல்லோர் பெயரும் நிரப்பப்பட்ட பிறகு இன்னொருமுறை வந்து பார்க்கறோம்..

அப்பாவி முரு said...

முதல் படத்தில் இருப்பவர்களை எனக்கு தெரியும்.

பேரை சொல்லலாமான்னு கேட்டுட்டு சொல்றேன்.

எவனோ ஒருவன் said...

//அப்பாவி முரு said...
முதல் படத்தில் இருப்பவர்களை எனக்கு தெரியும்.
பேரை சொல்லலாமான்னு கேட்டுட்டு சொல்றேன்.//
தாராளமா சொல்லலாமென்று அண்ணன் சொல்கிறார். மற்றவர்கள் தெரிந்துகொள்ள வசதியாய் இருக்கும்.

17ல் இடதுபுறம் இருப்பவர் ரெஜொவாசன் (rejovasan.com), சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர் (பெண்கள் இல்லாத ஊர்).

Cable Sankar said...

மொத்தத்தில் லைட் போதவில்லை சயிண்டிஸ்ட் படம் நலலருக்கு

தமிழன் said...

நன்றி நண்பரே!

1- வது புகைப்படத்தில் சிவப்பு சட்டை - புதினன்

அடுத்து நான்

கிரி said...

//பெயர்கள், புகைப்படங்கள் நண்பர்களின் அனுமதியில்லாமல் வெளியிடப்பட்டுள்ளது. யாருக்காவது ஆட்சேபணை இருப்பின் அதற்காக வருந்துகிறேன்//

அதெல்லாம் முடியாது! ;-)

படங்களுக்கு நன்றி

ஆதிமூலகிருஷ்ணன் said...

அலுவலகத்தில் அப்டேட் செய்யமுடியாது. பெயர்களை கூறுங்கள். மாலையில் அப்டேட் செய்துவிடுகிறேன்.

(நானென்ன அண்ணன் ச்சின்னப்பையன் மாதிரி மன்னார் அண்ட் கம்பெனியிலா வேலை பார்க்குறேன்? ஹிஹி..)

♠ ராஜு ♠ said...

பட்டறைக்கு வந்த எல்லாருக்கும் பேனா குடுத்தாங்களா அங்கிள்..?
பாரபட்சமே இல்லாம எல்லாரும் Reynolds பேனா வச்சுருக்காங்க.!


ச்சே...ஒரு பேனா போச்சே..!

கார்க்கி said...

உங்க ஃபோட்டோ மட்டும் ரெண்டு.. எனக்கு ஒன்னுதானா? ஒத்துக்க மாட்டேன்..

முரளிகுமார் பத்மநாபன் said...

2ல் கண்ணாடியோடு இருப்பது கிர்பால் (பதிவு -மரத்தடி)

முரளிகுமார் பத்மநாபன் said...

9ல் என் அருகில் இருப்பது செந்தில் (பதிவு -கருத்துக்கள்)

முரளிகுமார் பத்மநாபன் said...

18ல் இடது ஓரமாய் அமர்திருப்பவர் சேரல் அவர் பின்னால் கிருஷ்ணபிரபு

வால்பையன் said...

அண்ணே அங்க எடுத்த குறும்படம் எப்போ ரிலீஸ்!

வெயிலான் said...

உங்களுக்கு பின்னால் ஒளிவட்டம் தெரியும் படமெடுத்தவருக்கு நல்ல பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது ;)

butterfly Surya said...

அண்ணே..புகைப்படங்களை என் வலையிலும் வெளியிட அனுமதி வேண்டும்.

நன்றி

நாஞ்சில் நாதம் said...

/// அண்ணே அங்க எடுத்த குறும்படம் எப்போ ரிலீஸ்!///

வாலு அண்ணே தேரை இழுத்து தெருவில விட்டுட்டீங்களே. அவரு கத பக்கம் ஒதுங்கலாம் அப்படின்னு பட்டறைக்கெல்லாம் போய் வந்துருக்காரு. இனி என்ன நடக்கபோகுதோ. நேயர் விருப்பம்னு கொலைவெறி தாக்குதல் நடத்தபோறாரு

ராஜன் said...

போட்டோக்களுக்கு நன்றிகள்...

அமுதா கிருஷ்ணா said...

கார்க்கி photo clear -ஆ இல்லை. பெண் பதிவாளர்கள் யாரும் வரவில்லையா?

பரிசல்காரன் said...

ஆதி...

நீங்க எடுத்ததா இதெல்லாம்? உங்க திறமைன்னு நான் நினைக்கற ஃபோட்டோக்ராஃபியை இப்படிக் கொன்னுட்டீங்களே பாஸு???

:-(

ஆதிமூலகிருஷ்ணன் said...

எவனோ ஒருவன்
ஆயில்யன்

சூர்யா (அனுமதில்லாம் தேவையில்லை, பயன்படுத்திக்குங்க..)

சின்னவர்(தனியா பேசித்தீத்துக்கலாம்)

ராஜா, முரு, கேபிள், தமிழன், கிரி, ராஜு, கார்க்கி, முரளிகுமார்,

வால்பையன் (அதான் யாரும் கம்பெனி குடுக்கலையே, அப்புறம் எப்பிடி போடுறது?),

வெயிலான், நாஞ்சில், ராஜன்,அமுதா

அனைவருக்கும் நன்றி.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

யு ஆர் கரெக்ட் பரிசல்.!

கூட்டத்தின் ஊடாடி நினைத்தபடி படங்கள் எடுக்க கொஞ்சம் கூச்சமாக இருந்தது பரிசல். மேலும் அரங்கத்தில் புகைப்படம் எடுப்பதற்கான லைட்டிங் சரியானதாக இல்லை.

சரியான டைமிங்கில் கிடைத்த யுவனின் படம் கூட 'ப்ளர்' ஆகி சொதப்பிவிட்டது.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.! (எனக்குதான்)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நன்றி.. நன்றி.. நன்றி..!

புதுகைத் தென்றல் said...

நிறைய்ய பதிவர்களை பார்க்க வாய்ப்பு கிடைச்சது. நன்றி

முரளிகுமார் பத்மநாபன் said...

நாஞ்சில் நாதம் வாழ்க

Truth said...

கேபிள் சங்கர் தூங்கும் போது ஏன் ஃபோட்டோ புடிச்சீங்க?

தண்டோரா ...... said...

ரிசப்ஷன்ல உட்கார்ந்திருந்த குலோப்ஜாமூன்களை எடுக்கலையா ஆதி?

வால்பையன் said...

//ரிசப்ஷன்ல உட்கார்ந்திருந்த குலோப்ஜாமூன்களை எடுக்கலையா ஆதி? //

எடுத்தாரு ஆனா போடலை!

பதிவுல!

மண்குதிரை said...

thanks sir

Mahesh said...

எல்லாம் சரி... தல எங்க தல? தலய வுட்டுட்டீங்களே தல....

(நல்லா தலய பிச்சுக்கிட்டு அலைங்க)

கும்க்கி said...

எனது..., இருட்டடிப்பான, அதும் அந்த ராணுவ ரகசியம் பேசும்போது எடுக்கப்பட்ட போட்டோ வெளியிடப்பட்டதில் ஏதேனும் உள்குத்து இருக்கின்றதா தோஸ்த்..?

யாத்ரா said...

எல்லா புகைப்படங்களும் மிக அருமை, பகிர்வுக்கு மிக்க நன்றி.

எனக்குத் தெரிந்த சிலர் பெயரை குறிப்பிடுகிறேன்,

17 ரெஜோ வாசன் ( கறுப்பு சட்டை )

18 சேரல் ( வெள்ளை சட்டை )
உழவன் ( ஆரஞ்சு டி சர்ட் )

24 r v chandrasekar (black shirt)

ச.முத்துவேல் said...

5 ல் டி ஷர்ட்- உழவன், வலதுபக்கம் சேரல்
17 டி ஷர்ட் ஹீரோ- ரெஜோ
24 டி ஷர்ட் ஹீரோ-RVC(யோசிக்கிறாரோ)

நன்றி ஆதி.

ஆதிமூலகிருஷ்ணன் said...

இயன்றவரை அப்டேட் செய்துவிட்டேன்.

உண்மைத்தமிழன், தென்றல், ட்ரூத், தண்டோரா, வால், மண்குதிரை, மகேஷ், கும்க்கி,

யாத்ரா, முத்துவேல் (என்ன ஒரே கவிஞர்கள் கூட்டமா இருக்குது, நாம் கவிதை எழுதி ரொம்பநாளாச்சுதுனு நினைக்கிறேன், அந்த தெகிரியம்தான்)..

அனைவருக்கும் நன்றி.!

மங்களூர் சிவா said...

nice!

ஊர்சுற்றி said...


ஹா


ரு
மை!