Thursday, September 10, 2009

ஆடிட் ஷெட்யூல் வந்தாச்சு..

"ஆடிட் ஷெட்யூல் வந்தாச்சு.. நாளைக்கு காலையில 10 மணிக்கே முதலில் உங்களுக்குதான் தெரியுமில்ல? என்ன எல்லாம் ரெடியா?" என்று பக்கத்து டிபார்ட்மென்டை பார்த்து வயிற்றில் புளியைக் கரைக்கும் வண்ணம் கேள்வி கேட்கும் போது நக்கல் புடிச்ச ஒருவர், "நாங்க இப்பதான் ISO 8500 வரை வந்திருக்கோம்.. காலைக்குள்ளே 9000 கிட்ட வந்திடுவோம்" என்பார்.

இதைப்போன்ற நகைச்சுவைகள் தொழிற்துறைகளில் மிகவும் சாதாரணமானது. அந்த 8500 என்றும் ஒரு ISO வகுப்பு (Standard) இருப்பதை இருவருமே அறியாதவரைக்கும்தான் அது நகைச்சுவை. அதைப்பற்றி ஒரு சின்ன பார்வையை பார்க்கும் முன்னதாக ஆடிட்டிங் திருவிழாவைப்பற்றி பார்ப்போம்.

ஆடிட்டுக்கு முதல் நாள் ஏதோ பொங்கலுக்கு வெள்ளையடிப்பது போல வேலை நடந்துகொண்டிருக்கும். எப்போதுமே பார்க்கமுடியாத எம்டி வேறு வந்து பொது மீட்டிங் ஏற்பாடு செய்து "ஊம்.. ஜாக்கிரதை.!" என்று பயங்காட்டிவிட்டு போயிருப்பார். ரெகுலர் வேலைகளையெல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு உள்ளுக்குள் பயத்துடன் பரபரப்பாக பழைய ரெக்கார்டுகளை நோண்டுவது, போலி ரிப்போர்ட்டுகளை தயார் செய்வது, மெஷின்கள், கருவிகளின் ரிப்போர்ட்டுகளை சரி பார்ப்பது, பிறவற்றை ஒழுங்கு செய்வது என விடிய விடிய வேலை நடக்கும்.

ஆனால் மறுநாள் ஆடிட்டின் போதோ எதுவும் தெரியாதது போல ஸ்டைலாக ரெகுலர் வேலைகளை பார்ப்பது போல நடித்துக்கொண்டிருப்பார்கள். பக்கத்து டிபார்ட்மென்டில் நடந்துகொண்டிருக்கும் ஆடிட்டிங் விபரங்களை நிமிடத்துக்கு நிமிடம் லைவ் டெலிகாஸ்ட் போல ஒருவர் நைஸாக வெளியே வந்தோ/ போனிலோ சொல்லிக்கொண்டிருப்பார். சேவாக் விக்கெட் விழுந்ததும் ஒண்ணு போச்சே என்று அலறுவதைப்போல முதல் NC (ஒவ்வாதவை-Non Conformity) வந்ததும் பிறர் கதிகலங்குவர். ஆடிட்டர் அப்படி.. இப்படி.. இன்னிக்கு ஆப்புதான்டி உங்களுக்கு என்று ஆடிட் முடிந்தவர்கள் வந்து கிலி ஏற்படுத்திச்செல்வார்கள். இப்படியாக திருவிழாக்கோலமாக அந்த ஒருநாளோ, இரண்டு நாட்களோ அமையும். ஆடிட் முடிந்ததும் ரெண்டு நாள் லீவு போட்டு ரெஸ்ட் எடுப்பவர்களையெல்லாம் பார்த்திருக்கிறேன்.

அப்படி என்னதான் இருக்கிறது அதில்? இந்த ISO நியதிகள் (Standards) முக்கியமானதுதானா? அப்படி என்றால் என்ன? வெவ்வேறு எண்களை குறிப்பிட்டு கன்ஃப்யூஸ் செய்கிறார்களே? அவையெல்லாம் என்ன?

கான்செப்ட் மிக எளிதானது. உங்களுக்கு ஒரு பொருள் தேவைப்படுகிறது. டிவி என்று கொள்ளலாம். ஏறக்குறைய எல்லாமே ஒரே அளவு, ஒரே விலை, ஒரே வாரன்டி காலம் என இருக்கின்றன. எதைத்தேர்வு செய்வீர்கள்? கூடுதலாக ஏதோ ஒன்று தேவைப்படுகிறது இல்லையா.? சூழலுக்கு பாதிப்பில்லாமல் அது தயாரிக்கப்பட்டதா? நம்மால் புரிந்துகொள்ள இயலாத அதன் உள்பாகங்கள் சிறப்பானவைதானா? நீண்ட நாட்களுக்கு தரமான சேவையை அது வழங்குமா? இவற்றையெல்லாம் யாராவது சோதித்துச் சொன்னால் நன்றாக இருக்கும்தானே.. அதைச்செய்வதுதான் சான்றிதழ்கள் வழங்கும் நிறுவனங்களின் பணி. அந்த சான்றிதழ் பெற்ற நிறுவனத்தின் டிவியை வாங்குவதென நாம் முடிவு செய்யலாம்.

ஹிஹி.. இதெல்லாம் சில ஐந்தாண்டுக‌ளுக்கு முந்தைய நிலை. இப்போ இதைச்சொல்லிவிட்டு எஸ்கேப்பானால் நீங்கள் மூக்கிலேயே குத்துவீர்கள் என தெரியும். இப்போதெல்லாம் கிட்டத்தட்ட எல்லா நுகர்பொருள் தயாரிப்பாளர்களுமே இந்தச் சான்றுகள் பெற்றிருந்தால்தான் சந்தையில் இருக்கமுடியும், அந்த அளவில் அவை அடிப்படைத் தேவை என்று ஆகிவிட்டன. அப்படியானால் இப்போது இரண்டு டிவி தயாரிப்பாளர்களும் சான்றிதழ் பெற்றிருக்க, நீங்கள் எப்படி டிவியைத் தேர்வு செய்வீர்கள்? அதெல்லாம் சொல்லமுடியாது. அதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். இதற்குள்ளாகவே பதிவு இம்மாம் பெரிதாக ஆகிவிட்டது. இன்னும் சொல்லவந்ததையே சொல்லவில்லை.. இப்போ உங்களுக்கு ISO பற்றி தெரியவேண்டுமா? இல்லையா?


ISO (சர்வதேச நியதிகள் நிறுவனம் -International Organization for Standardization) என்பது ஸ்விட்ஸர்லாந்த், ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம். இது கொசுவுக்கெல்லாம் குடை பிடிப்பது போல "குண்டூசி முதல் கப்பல் உள்ளான பொருட்கள் தயாரிப்பு, மற்றும் அனைத்து சேவைகள், அரசு உள்ளிட்ட நிறுவன இயக்கம்" என இந்த பூமிப்பந்தின் கிட்டத்தட்ட அனைத்து செயற்கைப்பொருட்களும் எவ்வாறு இருக்கவேண்டும், செயல்கள் எவ்வாறு நடக்கவேண்டும் என்ற‌ ஒப்பீட்டு வரையறைகள், நியதிகள், முறைப்படுத்தும் வழிமுறைகள் (Standards) உருவாக்கும் தலையாய பணியைச்செய்கிறது. இது உலகெங்கும் கிளைகளைக் கொண்டுள்ள மிகப்பெரிய வலைப்பின்னல் ஆகும். இதைப்போலவே IEC (International Electrotechnical Commission), ITU (International Telecommunication Union) ஆகிய இன்னும் சில பெரும் நிறுவனங்களும் செயல்படுகின்றன. சில பிரிவுகளில் இவை இணைந்தும் இயங்குகின்றன. இவை தவிர்த்து இன்னும் பல சிறு, குறு நிறுவனங்களும், ஸ்பெஷலைஸ்டு ஏரியாக்களை கைகளில் வைத்திருக்கும் நிறுவனங்களும் உண்டு.

இந்திய அரசு சார்ந்த நிறுவனம் BIS (Bureau of Indian Standards) என்பதும் இவ்வாறான ஒரு நிறுவனம்தான். இதுவும் IS (கவனிக்க ISO அல்ல IS) எனும் ஒரு பெரும் நியதிகள் தொகுப்பை நமக்கு வழங்குகிறது. மேலும் ISI, HALLMARK போன்ற முத்திரைகளும் BIS நமக்கு வழங்கும் சேவைகள்தான். சரி போதும். ஒரே நாளில் ரொம்ப தெரிந்துகொண்டால் மண்டை சூடாகிவிடும். இப்போதைக்கு ISO வை மட்டும் பார்க்கலாம்.

ISO நியதிகள் (Standards) பெரும்பாலும் Referral standards (ஒப்பீட்டு நியதிகள்) ஆகவும், சில Procedures (வழிமுறைகள்) ஆகவும் பயன்படுகின்றது. Referral Standards என்பவை ஒரு பொருள் எப்படி இருக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கின்றன. உதாரணமாக நீங்களும் நானும் CD தயாரிக்கும் நிறுவனங்கள் வைத்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். நான் வட்டமாக CD க்கள் தயாரித்தால், வித்தியாசமாக தயாரிக்கிறேன் பேர்வழி என்று நீங்கள் சதுரமாக தயாரித்தால் என்ன நடக்கும்? அதற்கென்று இருக்கும் அளவுகளில்தான் (Outer Diameter, Inner Diameter, Thickness, Material properties etc) அவை தயாரிக்கப்படவேண்டும். அதைப்போல என் பைக்கின் டயர் பழுதுபட்டு அதை நான் மாற்ற வேண்டும் என்றால் அந்த குறிப்பிட்ட வகைக்கு என்று ஒரு அளவு இருக்கிறது. MRF ஆக இருந்தாலும் சரி, TVS ஆக இருந்தாலும் சரி அந்த வகை டயர் ஒரே அளவுகளில்தான் தயாரிக்கப்படவேண்டும். (அதற்காக அவர்கள் இருவருமா உட்கார்ந்து பேசுவார்கள்? ஆகவேதான் பொதுவான நியதிகள். அனைவரும் அதை பின்பற்றலாம் அல்லவா?) பொருட்களின் பயன்பாட்டைப்பொறுத்து இந்த விதிமுறைகள் பொருந்தும், இதுவே கொசுவத்தியாக இருந்தால் நான் வட்டமாகவும், நீங்கள் சதுரமாகவும் செய்யலாம் தவறில்லை. அங்கு வேறொரு விதிமுறை கட்டாயம் பின்பற்றப்படவேண்டியது வரும். அது அதில் உள்ள கெமிக்கல்களின் அளவு. கொசுவைக் கொல்கிறேன் பேர்வழி என்று ஆட்களுக்கு புகைபோட்டுவிடக்கூடாது இல்லையா.?

இவ்வாறாக ISO 1 ல் துவங்கி ISO 80000 வரை Standards பட்டியல் நீள்கிறது. எல்லா எண்களிலுமே Standards இல்லை எனினும் (காலப்போக்கில் திரும்பப்பெறப்பட்டவை மற்றும் பிற காரணங்கள்) இந்தப் பட்டியல் மிகப்பெரியதுதான்.

உதாரணமாக சில..
ISO 1 (பொருட்களின் வெப்ப அளவீடுகள்) ISO 2 (துணியிழைகள் குறித்தவை)
ISO 216 (தாள்களின் அளவுகள்)
ISO 732 (புகைப்படச்சுருள் அளவுகள்)
ISO 1789 (ஆம்புலன்ஸ் வண்டிகள் குறித்தவை)
ISO 3632 (குங்குமப்பூவின் தரம்)
ISO 9001 (தர மேலாண்மை)
ISO 9407 (காலணிகளின் அளவுகள்)
ISO 15930 (PDF கோப்புகள் குறித்தவை)
ISO 22716 (அழகு சாதனம்/பொருட்கள்)
ISO 80000 (அளவுகள் மற்றும் அளவைகள்)

இந்த வரிசையில்தான் ISO 9001 வருகிறது பாருங்கள். இது பிறவற்றைப்போலில்லாமல் வழிமுறையியல் பற்றி பேசுகிறது. இதனடிப்படையில் இயங்கும் நிறுவனங்கள் இந்த சான்றிதழைப்பெற ISO வின் அனுமதி பெற்ற உலகளாவிய BVQI, DNV, SGS, LLOYD'S போன்ற சோதனை நடத்தி சான்றிதழ் தரும் (Certification bodies) நிறுவனங்களிடம் (இவர்கள் ஒழுங்கானவர்கள்தானா என்று பார்க்கவே ISO/IEC 17021:2006 என்று ஒரு தனி நியதி இருப்பது தனி கதை) விண்ணப்பித்து முதலிரண்டு பாராக்களில் பார்த்த கூத்துகளை சிறப்புற நடத்தி வெற்றிபெற்றுப் பெறலாம். அப்படியென்ன செய்யவேண்டும் என இந்த ISO 9001 சொல்கிறது?

ரொம்ப சிம்பிள். ISO 9001 நம்மை எதுவுமே செய்யச்சொல்லவில்லை. நாம்தான் நம் வேலைகளை இப்படியிப்படி செய்யப்போகிறோம், பொருட்களின் தரத்தை, செயல்களின் தரத்தை இவ்வாறு உறுதிசெய்யப்போகிறோம், சூழல் பாதிப்புகளை, கழிவுகள் வெளியேற்றத்தை இவ்வாறு செய்யப்போகிறோம், அதற்கான சாட்சிகள் இன்னின்ன என்பதான அனைத்து விஷயங்களையும் (ஒரு குண்டுமணியைக்கூட விடக்கூடாது) முதலிலேயே முடிவு செய்து ஒரு செயல்திட்டம் (Quality Procedure) ஒன்றை (ISO 9001 சுட்டும் டெம்ப்ளேட்டில்) வரைந்து கொள்ளவேண்டும். பெரும்பாலும் இதை 'அறிவுரை நிபுணர்' (Consultant- ஹிஹி.. எதற்கெல்லாம் நிபுணர் பாருங்கள்) பண்ணிக்கொடுத்துவிடுவார். அப்படிப்பண்ணாமல் நாமே செய்வதுதான் நன்மை பயக்கும். இவ்வாறு உருவாக்கப்பட்ட திட்டப்படி நம் நிறுவனம் குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் இயங்கியபின்னர் நாம் சோதனைக்கு தகுதிபெற்றுவிடுகிறோம். பின்னர் விண்ணப்பித்து 'பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா.. இதுதான் எங்கள் ப்ரொசிஜர். அது படி வேலை செய்றோமான்னு செக் பண்ணிக்குங்க' என்று சொல்ல வேண்டியதுதான். அவர்களும் பார்த்துவிட்டு திருப்தியாகிவிட்டார்களானால் சான்றிதழ் கிடைக்கும். அந்த சான்றிதழ் 3 வருடம் செல்லுபடியாகும். வருடம் ஒருமுறை இடைக்கால சோதனையும் உண்டு. முடிவுகாலத்திற்குப் பின்னும் தொடர விரும்பினால் நீட்சிக்கு விண்ணப்பிக்கவேண்டியதுதான்.

இந்த ISO 9001 (QUALITY MANAGEMENT SYSTEM) -ஐப் போல மேற்குறித்த பெரிய பட்டியலில் ISO 14001 (ENVIRONMENT MANAGEMENT SYSTEM), ISO 22000 (FOOD SAFETY MANAGEMENT SYSTEM) என இடையிடையே வழிமுறைகளைத்தரும் நியதிகளும் பலவுண்டு. தொழிற்சாலைக்குத் தகுந்த சான்றிதழ் வேண்டுவோர் தேவையானவற்றை விண்ணப்பித்துப்பெறலாம்.

இதில் பிறவற்றிற்கு இல்லாத சிறப்பு ISO 9001 க்கு மட்டும் ஒரு சிறப்பு உண்டு. இது அனைத்து வகையான தொழில்முனைவோருக்கும் பொருந்தக்கூடியதான 'தர மேலாண்மை' குறித்ததால் அனைத்து துறையினரும் இதைப்பெற முடியும். அரசு, தனியார் துறைகள் என்ற பாகுபாடின்றி தொழிற்சாலைகள், ஹாஸ்பிடல்ஸ், மளிகைக்கடைகள், காவல்நிலையம், திரையரங்கம்.. அவ்வளவு ஏன் ஒரு பப்ளிக் டாய்லெட் கூட பெறமுடியும்.

இதே போல ISO 14001 என்ன சொல்கிறது என்று பார்ப்போமானால்... (யாருப்பா அது தலை தெறிக்க ஓடுறது?.. ஓடாதீங்க, நில்லுங்க.. பாடம் நடத்தலை. நிறுத்திட்டேன். டெக்னிகல் பதிவு கேட்டோம்தான், அதுக்காக இப்பிடியா கேப்பு விடாம தாக்குவீங்க? ங்கிறீங்களா.. அந்த பயம் இருக்கட்டும். இனி யாராவது கேப்பீங்க துறைசார்ந்த பதிவு வேணும்னு.?)
.......

(பி.கு : ISO நியதிகளின் பட்டியல் தவிர்த்து கட்டுரை எனது சொந்த அனுபவத்தில் எழுதப்பட்டது. ஏதும் தவறான தகவல்கள் இருப்பின் தயவுகூர்ந்து திருத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்)
.

46 comments:

ஆதிமூலகிருஷ்ணன் said...

Me the first.!

hihi.. for follow up.!

Vijay said...

ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா.... கண்ண கட்டுதே... ஒரு கப் காபி பிளீஸ்.......

தமிழ்ப்பறவை said...

ஒரு பதிவுக்குள்ளேயே ISO பற்றிய பொது ஐடியாவைக் கொடுத்துவிட்டீர்கள்...
நல்ல பகிர்வு...
தொடருங்கள்...

துபாய் ராஜா said...

//ரெகுலர் வேலைகளையெல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு உள்ளுக்குள் பயத்துடன் பரபரப்பாக பழைய ரெக்கார்டுகளை நோண்டுவது, போலி ரிப்போர்ட்டுகளை தயார் செய்வது, மெஷின்கள், கருவிகளின் ரிப்போர்ட்டுகளை சரி பார்ப்பது, பிறவற்றை ஒழுங்கு செய்வது என விடிய விடிய வேலை நடக்கும்.
ஆனால் மறுநாள் ஆடிட்டின் போதோ எதுவும் தெரியாதது போல ஸ்டைலாக ரெகுலர் வேலைகளை பார்ப்பது போல நடித்துக்கொண்டிருப்பார்கள். பக்கத்து டிபார்ட்மென்டில் நடந்துகொண்டிருக்கும் ஆடிட்டிங் விபரங்களை நிமிடத்துக்கு நிமிடம் லைவ் டெலிகாஸ்ட் போல ஒருவர் நைஸாக வெளியே வந்தோ/ போனிலோ சொல்லிக்கொண்டிருப்பார்.//

உண்மையான உண்மை.

இந்த கொடுமையை நான் வேலை பார்த்த பல நிறுவனங்களிலும் அனுபவித்து உள்ளேன்.

தொடரட்டும் துறைசார்ந்த அனுபவப்பதிவுகள்.(எங்களுக்குதான் வலிக்கலையே... வலிக்கலையே... வலிக்கலையே....) :))

பீர் | Peer said...

ஆடிட்டிற்கு தயாராவதும் ஒரு வகை மார்கெட்டிங்.

ஆடிட்டிற்காக பழைய ஃபைலை தூசு தட்டி துடைத்து வைக்கும் வைபவத்தை சொன்ன விதம் அருமை, ஆதி. அப்படியே பொருந்தி வருகிறது...

அடுத்து OHSAS ன்னா என்னான்னு பாடம் எடுத்திடுங்க..

யாசவி said...

useful

Even known one but good refresh in simple language.

keep going

:-)

கார்க்கி said...

ரைட்டு.. வாங்கப்பா.. எல்லாம் வரிசைல வந்து நில்லுங்க

பாலா said...

ஏன் மாமா இப்படி ?
(படிக்கும் போது கொஞ்சம் கூட அலுப்புதட்டல நல்ல இருந்துது )

நர்சிம் said...

ரைட்டு ஆதி.ரைட்டு. “அக்மார்க்”பதிவு.

Sivakumar said...

Gud one after long time...any one can write junk blogs in hundreads but attempts like this bring fresh air...keep writing more like this.

ghost said...

பயனுள்ள பதிவு, என்ன ரொம்ப கண்ண கட்டிடுச்சு,

இந்த கொடுமையை நான் அனுபவிக்கிறேன்

பிரியமுடன்...வசந்த் said...

iso பின்னூட்டம்

சூப்பர்

Mahesh said...

//ஆடிட் ஷெட்யூல் வந்தாச்சு..// அப்ப ஒரு ஷார்ட் இண்டர்வெல்லா??

சும்மா சொல்லக்கூடாது ஆதி... துறை சார்ந்த்த பதிவுகளை இவ்வளவு எளிமையா சொல்றதுல தேர்ந்துட்டீங்க...

பீர் | Peer said...

ஒரு சந்தேகம்...
ISO 9001 தரச்சான்று 'புலம்பல்கள்' ப்ளாகிற்கு கிடைக்குமா? :)

Indian said...

Very good post.

First two paragraphs : No different from the audit of a s/w company :)

ராம்ஜி.யாஹூ said...

I am not discouraging your post. But this ISO and Internal quality audit is a criminal waste.

If we give money or use influence we will get ISO certificate easily.

small example, chennai police got ISO, sathyam got ISO, Level5, Level6 all awards.

With ISO certificate only Chennai police did lathi charge in chennai high court and was an audience to the law college violence.

But what to do we employees have to be YES SIR for the boss's words.

நாஞ்சில் நாதம் said...

Good Post

தராசு said...

கலக்கல் தல, முழுவதும் ரசித்தேன்.

துறை சார்ந்த பதிவுக்கு அப்பொழுதுமே டபுள் ரைட்டு.

Mahesh said...

//With ISO certificate only Chennai police did lathi charge in chennai high court and was an audience to the law college violence.//

ISO certification is only for the process, as I understand. A lathi charge or day light robbery or a brutal murder... ISO doesnt car what you do... but HOW you do. If Lathi charge was conducted as per their procedures on how they get approval, mode, time etc... it is still valid under the purview of ISO.

Pl dont confuse between the process and the product.

அனுஜன்யா said...

ஏதோ விஷயம் இருக்குய்யா உன்கிட்ட :)

A very good post. அப்படியே கவிதைக்கு எல்லாம் ISO 9001 எப்பூடின்னு ... சரி சரி :)

அனுஜன்யா

கார்ல்ஸ்பெர்க் said...

//ஆனால் மறுநாள் ஆடிட்டின் போதோ எதுவும் தெரியாதது போல ஸ்டைலாக ரெகுலர் வேலைகளை பார்ப்பது போல நடித்துக்கொண்டிருப்பார்கள்//

-எல்லா Office'லயும் நம்மள மாதிரி தானா??

பாபு said...

eppadi irukeenga??

அமுதா கிருஷ்ணா said...

இதை ரமா படிச்சாங்களா இல்லையா???

ஆதிமூலகிருஷ்ணன் said...

யப்பாடி.. ஓரளவு மானம் போகாத மாதிரி கூட்டம் வந்திருக்கீங்க.. நன்றி, நன்றி.. இதுதான் கொஞ்சம் துறைசார்ந்து எழுதவும் ஆர்வம் குறையாமலிருக்கிறது.

விஜய்
தமிழ்பறவை
ராஜா
பீர் (OHSAS? பின்னாடி பார்க்கலாம், பின்னாடி பார்க்கலாம்)
யாசவி
கார்க்கி
பாலா
நர்சிம்
சிவகுமார்
கோஸ்ட்
வசந்த்
மகேஷ்
இண்டியன்
ராம்ஜி
நாஞ்சில்
தராசு
அனுஜன்யா (பேப்பரை வீணாக்கக்கூடாதுன்னு ஒரு ஸ்டாண்டர்ட் இருக்கு. அவுங்களுக்கு எழுதிப்போடப்போறேன், நீங்க கவுஜைங்கிற பேர்ல..)
கார்ல்ஸ்
பாபு (ஏதோ பொழப்பு ஓடுது. நீங்க எப்பிடி இருக்கீங்க பாஸ்?)
அமுதா

அனைவருக்கும் அன்பார்ந்த நன்றி.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

Me the 25.!

☼ வெயிலான் said...

கலக்கல் ஆதி!!!!!!

அதிலேயும் ”கொசுவுக்கு குடை பிடிக்கிற மாதிரி” படிச்சிட்டு வாய் விட்டு சிரிச்சிட்டேன்.....

cheena (சீனா) said...

அன்பின் ஆதி

எங்கள் வங்கியின் கணினி - கொள்கையும் - திட்டமிடுதலும் துறைக்கு முதன் முதலாக ISO 9001 வாங்கினோம் - அண்டுக்கு ஒருமுறையோ 18 மாதங்களுக்கு ஒருமுறையோ ஆடிட் வரும் போது நாங்கள் படும் பாடு - ம்ம்ம்ம்ம் -

நல்லதொரு அறிமுக இடுகை ஆதி

நல்வாழ்த்துகள்

ஜோசப் பால்ராஜ் said...

யாரு சொன்னா வலிக்குதுன்னு?
அதெல்லாம் இல்ல. நீங்க தொடர்ந்து துறை சார்ந்தப் பதிவு எழுதுங்கண்ணா.

ரொம்ப அருமையா விவரிச்சுருக்கீங்க.

எனக்கு ISO 9001 எல்லாரும் வாங்குறது எப்டின்னு தெரியாம இருந்துச்சு, அதே மாதிரி ISO 1 எல்லாம் தெரியவே தெரியாது கேள்விப்பட்டது கூட இல்ல. இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.

தொடர்ந்து துறை சார்ந்து எழுதுங்க தொர.

இராகவன் நைஜிரியா said...

இந்த இடுகைக்கு ISO 9001 சான்றிதழ் கொடுக்கலாம்

இராகவன் நைஜிரியா said...

// ஜோசப் பால்ராஜ் said...
யாரு சொன்னா வலிக்குதுன்னு?
அதெல்லாம் இல்ல. நீங்க தொடர்ந்து துறை சார்ந்தப் பதிவு எழுதுங்கண்ணா.

ரொம்ப அருமையா விவரிச்சுருக்கீங்க.

எனக்கு ISO 9001 எல்லாரும் வாங்குறது எப்டின்னு தெரியாம இருந்துச்சு, அதே மாதிரி ISO 1 எல்லாம் தெரியவே தெரியாது கேள்விப்பட்டது கூட இல்ல. இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.

தொடர்ந்து துறை சார்ந்து எழுதுங்க தொர. //

அண்ணன் ஜோசப்பை நான் வழி மொழிகின்றேன்.

அறிவிலி said...

உங்கள் துறை சார்ந்த பதிவுகளில் தரம் நிரந்தரம்.

Sabarinathan Arthanari said...

நண்பா,

தகவல்கள் பயனுள்ளவையாக இருந்தன.

மேலும் துறை சார்ந்த பதிவுகளை எதிர் பார்க்கிறேன்.

---
தல உங்க குறும்பட முயற்சி நல்லா இருந்துது. உங்க கிட்ட இருந்து ஒரு vlog எதிர்பார்க்கிறேன். நேரமிருக்கும் போது போடவும்.

வாழ்த்துக்கள்!

பரிசல்காரன் said...

துறை சார்ந்த பதிவென்றாலே ஒரு மேதமையான எழுத்தில் பிரமிக்க வைக்கிறீர்கள் ஆதி!

நிஜமா நல்லவன் said...

ஆதி அண்ணே சூப்பர் பதிவு.

நிஜமா நல்லவன் said...

/ இராகவன் நைஜிரியா said...

இந்த இடுகைக்கு ISO 9001 சான்றிதழ் கொடுக்கலாம்/

வழிமொழிகிறேன்!

மங்களூர் சிவா said...

/
இராகவன் நைஜிரியா said...

இந்த இடுகைக்கு ISO 9001 சான்றிதழ் கொடுக்கலாம்
/

ஒரு மூனு மாசம் இந்த ஸ்டாண்டர்ட்ல பதிவு போடட்டும் அப்புறம் ஆடிட்டிங் பண்ணிட்டு குடுக்கலாம்
:)))))))))

ராஜா | KVR said...

// இனி யாராவது கேப்பீங்க துறைசார்ந்த பதிவு வேணும்னு.?//

கேப்போம் கேப்போம். இனி மாசத்துக்கு ஒரு “துறைச் சார்ந்த பதிவுகள்” போடலைன்னா உங்க மொக்கைப் பதிவுகளுக்கு பின்னூட்டம் போட மாட்டோம்ன்னு ஜெட் ஏர்வேஸ் பைலட்டுங்க கணக்கா ஸ்ட்ரைக் பண்ணுவோம்.

- இங்ஙணம்,

ஆதி “துறைச் சார்ந்த பதிவுகள்” ரசிகர் வட்டம்.

ஊர்சுற்றி said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
Me the first.!

hihi.. for follow up.!//

என்ன கொடுமை இது!

சரி...நானும் எனது ஆடிட் வேலைகளைப் பார்க்கப் போகிறேன். டாட்டா!

அன்புடன் அருணா said...

ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா.... கண்ண கட்டுதே.............இதுக்குப் ப்அனிஷ்மென்டா.....
உங்களுக்கு ஒரு வீட்டுப்பாடம் காத்திருக்கிறது என் வலைப்பூவில்....

Rangs said...

ஆதி.. கை கொடுங்க.. அசத்தல்.. நமக்கு தெரிஞ்ச விஷயங்களை அடுத்தவங்களுக்கு சொல்றதே ஒரு சேவைதான்.. சல்யூட் மை பிரென்ட்!

இதைப் படிச்சுட்டு எனக்கு உறுத்தலா இருக்கு.. இந்த மாதிரி நமக்கு தெரிஞ்ச, அடுத்தவங்களுக்குத் தெரியாத ஆனா பயன்படக் கூடிய (மிகக் குறைந்த அளவே ஆனாலும்) கட்டுரைகள் எதுவும் நான் எழுதி பங்களிக்கலையே அப்டிங்கற உறுத்தல்!

அந்த உறுத்தலே இந்தக் கட்டுரையோட வெற்றி..
எக்சலண்ட்..
அவசியம் தொடருங்க ப்ளீஸ்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

சிறப்பான பதிவு.

ஆதிமூலகிருஷ்ணன் said...

வெயிலான், சீனா, ஜோஸப், இராகவன், அறீவிலி, சபரிநாதன், பரிசல், நிஜமாநல்லவன், சிவா, ராஜா, ஊர்சுற்றி, அருணா, ரங்ஸ் (குளுருது), அமித்துஅம்மா..

அனைவருக்கும் நன்றி.!

ஆயில்யன் said...

வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்!

எப்படி மிஸ்ஸாகுதுன்னு யோசிச்சேன் ! இப்ப கரீக்ட் பண்ணிட்டேன் :))

ஆயில்யன் said...

ISO நியதிகள் (Standards) பெரும்பாலும் Referral standards (ஒப்பீட்டு நியதிகள்) ஆகவும், சில Procedures (வழிமுறைகள்) ஆகவும் பயன்படுகின்றது.//
//ரொம்ப சிம்பிள். ISO 9001 நம்மை எதுவுமே செய்யச்சொல்லவில்லை. நாம்தான் நம் வேலைகளை இப்படியிப்படி செய்யப்போகிறோம், பொருட்களின் தரத்தை, செயல்களின் தரத்தை இவ்வாறு உறுதிசெய்யப்போகிறோம், சூழல் பாதிப்புகளை, கழிவுகள் வெளியேற்றத்தை இவ்வாறு செய்யப்போகிறோம்,//

இது மெயின் மேட்டரூ! நல்லா சொல்லியிருக்கீங்க!!!
பலரும் ஐ எஸ் ஒ இப்படியெல்லாம் செய்யணும்ன்னு சொல்லிக்கொடுக்குத்துன்னு நினைச்சிக்கிறாங்க (மீ 2)

ஆயில்யன் said...

//ISO doesnt car what you do... but HOW you do. If Lathi charge was conducted as per their procedures on how they get approval, mode, time etc... it is still valid under the purview of ISO.///


எஸ் அண்ணாச்சி அவுங்களோட வேலை எதுவா இருந்தாலும் அதுல ஒரு புரொசீஜர் பாலோ செஞ்சுருக்காங்களா தான்!

ஆயில்யன் said...

மீண்டும் வருவோம்!


ஆதி “துறைச் சார்ந்த பதிவுகள்”
ரசிகர் வ(கூ)ட்டம்!