Thursday, October 1, 2009

எஸ்ஜியின் ஒரு கடிதம்


கேகே,

எப்படிச்சொல்லி உன்னை விளிப்பது என்ற குழப்பத்துடனும், இந்த மடலை உனக்குச் சேர்ப்பேனா என்ற சந்தேகத்துடனும், எப்படி இதை துவங்குவது என்ற சிரமத்துடனும், பலப்பல உணர்வுகள் உந்தித்தள்ள இதை ஆரம்பிக்கிறேன்.

இத்தனை வருடங்களுக்கு பிறகு ஏன் இந்தக்கடிதத்தை எழுதுகிறேன் என்பதும் தெரியவில்லை. இப்போது இல்லாவிட்டால் நான் நினைத்துக்கொண்டிருப்பதை இனி எப்போதுமே முடியாதோ எனவும் தோன்றுகிறது. வெளிநாட்டுக்குத்தானே செல்லப்போகிறேன். பிறகேன் மொத்தமாகச் செல்வதைப்போல பல விஷயங்களையும் சொல்ல விழைகிறேன் என்பதும் புரியவில்லை.

நான் செய்தது துரோகம்தானா என்பது இன்றைக்கு வரைக்கும் புரியாமலே அவதியுற்றுக்கொண்டிருக்கிறேன். ஒரு வேளை அந்த அவதியிலிருந்து விடுபடும் சுயநோக்கத்துடன் கூட இந்த மடலை நான் எழுதிக்கொண்டிருக்கலாம். இப்போது பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்த சம்பவங்களுக்கான காரணமாக எதைச் சொல்லப்போகிறேன்.? அவை இப்போது உனக்கு என்ன மாதிரியான ஆறுதலைத் தர முடியும், அல்லது எனக்கு?

காலம் எல்லாவற்றையும் கடக்கச்செய்கிறதுதான், காதலைத் தவிர.. அதில் நிகழ்ந்த துரோகங்களைத் தவிர. நீ என்னிடம் எப்படியெல்லாம் பேசினாய், என்னைப்பார்க்கும் போது உன் கண்கள் எத்தனை மலர்ந்தன என்பதையெல்லாம் உன்னைப் பிரிந்த பல மாதங்களுக்குப்பின் நினைக்கத்துவங்கினேன். பின் அந்த நினைவுகள் என்னை நீங்காது தங்கிவிட்டன. உண்மைதான் கேகே, அந்தப் பொழுதுகளில் உன் உணர்வுகளை நான் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் நினைக்கிறேன். உன்னுடன் பழகுவது குறுகுறுப்பாக இருந்தது. யாருக்கும் தெரியாமல் தொட்டுக்கொள்வதில் ஒரு பரபரப்பு, அதுதான் எத்தனை மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சிக்காகத்தான் உன்னுடன் பழகியிருக்க வேண்டும். இல்லையானால் ஏற்பட்ட அந்த சின்ன சலசலப்புகளுக்காக உன்னை இழக்க சம்மதித்திருக்கமாட்டேன். உன் வலி பெரிதென்பதை பின் உணர்ந்தேன்.

காலம் கடந்துவிட்டது. உன் தீவிரம் என்னைச் சுட்டது. பின் உன்னை நெருங்கும் அருகதையும் எனக்கில்லாமல் இருந்தது, அந்தத் துணிச்சலும் இல்லை. ஒரு அழகிய நாளில் என் திருமணம் நிகழ்ந்தபோது அன்று முழுதும் உன் நினைவாகவே இருந்தேன். எங்கே திருமணம் செய்துகொள்ளாமலேயே இருந்துவிடுவாயோ என பதறிய நாட்கள் அவை. உன்னைப்போலவே நானும் உன் திருமணத்துக்கு வரமலிருந்துவிட்டாலும், உன் திருமணப்பத்திரிகை எனக்குத் தந்த ஆறுதலை நீ என்னை மனமுவந்து மன்னித்துவிட்டாலும் கிடைத்துவிடாது கேகே.

இந்த மடல் தந்த ஆச்சரியத்தைவிடவும் இப்போதைய என் தமிழ் உனக்கு ஆச்சரியமாக இருக்கும் என நினைக்கிறேன். உன்னைப்போலவே சில விஷயங்களில் மாற நான் ஆசைப்பட்டேன் கேகே. அன்று உன் கைகளில் நான் பார்த்த புத்தகங்கள் இப்போது நினைவுக்கு வருகின்றன. நிறைய வாசிக்கிறேன் கேகே. ஒரு வேளை அந்த தைரியம்தான் இந்த மடலோ என்னவோ?

சொல்லவந்ததை சொல்லிவிட்டேனா? இந்த உறவைத்தொடர வேண்டுமா? உன்னிடம் நான் மன்னிப்பு கேட்கவேண்டுமா? காலத்தில் மூழ்கிக்கிடந்த உணர்வுகளை தேவையேயில்லாமல் எழுப்பிவிட்டேனா? எல்லாமே தீர்ந்துபோய்விட்டதா? அல்லது இது தீரவே தீராததா? எதுவுமே தெரியவில்லை கேகே. நீ அன்பானவன் என்பது மட்டும் தெரியும்.

சில கண்ணீர்த்துளிகள்.. உனக்காகவும், சில முத்தங்கள்.. உன் குழந்தைக்காகவும்.!

-எஸ்ஜி
.

29 comments:

Cable Sankar said...

/சில மன்னிப்புகள்.. உன்னிடமும், சில முத்தங்கள்.. உன் குழந்தைக்காகவும்.!//

ப்ராய்ட்..

Anonymous said...

கேகே ன்னா பரிசலா !!

pappu said...

நான் எல்கேஜியின் கடிதம்னு படிச்சிட்டேன். என்னடா ஓவரா இருக்குன்னு பாத்தா எஸ்.ஜி. எனி பழைய கிளறல்ஸ்? என்னங்க எஸ்.ஜி, கேகே, 377 தூக்கியிருக்கிற காலத்தில முழு பேரப் போடுங்க!

அப்பாவி முரு said...

நான் முதலில் வந்து படித்த போது படம் இல்லை, குழப்பம் தான் மிஞ்சியது.


இப்ப ஒத்துக்கிறேன், இது ஒரு பொண்ணு, ஆணுக்கு எழுதிய கடிதம் தான்-ன்னு

ஆயில்யன் said...

இனி எல்லாரும் தன் மனசுக்குள்ள ஒழிச்சு மறைச்சு மடக்கி வைச்சிருக்கிறதை இப்படி இனிஷியல் போட்டு எல்லாருக்கும் சொல்லிடலாம்போல சூப்பரூ :)

அதுசரி எஸ்ஜி & கேகே எதுனாச்சும் க்ளு கொடுத்தா நல்லா இருக்கும்ல :))

அ.மு.செய்யது said...

அது என்னவோ தெரியலங்க..

கடிதம் என்றவுடனே ,எழுத்துகளுக்கு அப்படியொரு
அழுத்தம் கூடிவிடுகிறது.அந்த‌ வ‌ரிசையில் இந்த‌ க‌டித‌த்தையும்
சேர்க்க‌லாம்.

CLASS !!!

( இன்னிக்கு நானும் ஒரு க‌டித‌ம் எழுத‌லாம்னு நினைச்சேன் !)

சூரியன் said...

பரிசலாருக்கு வந்த கடிதமா?

தண்டோரா ...... said...

ஆதி..கவிதை வடிவத்தில் எழுதி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கலாம் என்பது என் கருத்து...(100 க்கு நன்றி)

தத்துபித்து said...

//கேகே ன்னா பரிசலா //

kk na kurumbu krisnan (annana sinna vayasula ellorum appadithan koopiduvanga)
.
// இப்ப ஒத்துக்கிறேன், இது ஒரு பொண்ணு, ஆணுக்கு எழுதிய கடிதம் தான்-ன்னு//
naanum othukiren ithu oru ponnu ANNANUKU eluthiya kaditham thanu...
.
///அதுசரி எஸ்ஜி & கேகே எதுனாச்சும் க்ளு கொடுத்தா நல்லா இருக்கும்ல :))///

kk - kurumbu krishnan
sg - s.gokila, s.gayathri ...etc apadi irukumo,ippadi irukumo
(enna villathanam)

கார்க்கி said...

ரைட்டுன்னேன்

அமுதா கிருஷ்ணா said...

யாரோ யாருக்கோ எழுதிய லட்டர்.....ஆனால் இது யார்யாருக்கோ பொருந்தும்..இல்லையா...

Karthik said...

டச்சிங்கா இருக்கு.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி கேபிள்.!
நன்றி அம்மிணி.! (இல்லை)
நன்றி பப்பு.!
நன்றி முரு.!
நன்றி ஆயில்யன்.!
நன்றி செய்யது.!
நன்றி சூரியன்.!
நன்றி தண்டோரா.!
நன்றி தத்துபித்து.! (நல்ல சேவை, ஹிஹி)
நன்றி கார்க்கி.!
நன்றி அமுதா.! (சரிதான் இல்ல)
நன்றி கார்த்திக்.!

அமிர்தவர்ஷினி அம்மா said...

கேகே க்கு பதிலா ஏம்கே ந்னு இருக்கனுமோ :)))))))

கடைசி வரிகள் மற்ற வரிகளை மிஞ்சி விட்டன.

நன்றாக இருக்கிறது

பாலா said...

அய்யா கைய்ய குடுங்க முத்தம் கொடுக்கணும் . பிரமாதம் .
(ஆமாம் இந்த கே கே க்கும் - ஆதிமூலகிருஷ்ணனுக்கும் என்ன சம்பந்தம் )

நர்சிம் said...

இங்கேயும் துரோகமா..விளங்குனாப்புலதான்.

******
ஆதி,
மிக நேர்த்தியான வார்த்தைகளின் மிகச்சரியான கோர்வையில் அற்புதமான வடிவம் இந்தக் கடிதம்.வாழ்த்துக்கள்.

நர்சிம் said...

சமீபத்தியப் பதிவுகளில் மிகச்சிறந்த ஒன்று.உங்கள் சமீபத்திய அல்ல.

Shanmugam said...

ஐயா வணக்கம்

தமிழ்ப்பறவை said...

நல்லா இருக்கு...
ரெண்டாவது தடவை படிச்சப்புறம்தான் புரிஞ்சது ஆதி....

Muthukumar said...

என்ன எல்லாரும் துரோகம் பத்தி எழுதறீங்க? என்ன நடக்குது?

நல்லாருக்கு ஆதி

பட்டிக்காட்டான்.. said...

அருமை..

எஸ்ஜி உண்மைங்களா..??

ஜானி வாக்கர் said...

எனக்கு என்னவோ இது ஆதி அவரோட எக்ஸ்க்கு எழுதின கடிதம் மாதிரி தோணுது.

என்ன எஸ் ஜி / கே கேக்கு எழுதின கடிதம் னு ரூட் மாத்தி விட்டுப்பாரோ??

எது எப்படி இருந்தாலும் கடிதம் நல்லா இருக்கு.

மங்களூர் சிவா said...

/
சில முத்தங்கள்.. உன் குழந்தைக்காகவும்.!
/

மீதி உனக்காகவும்???

பாத்து அவ புருஷனுக்கு தெரிஞ்சு அருவா எடுத்துட்டு வந்திட போறான்
:)))))))))))

துபாய் ராஜா said...

//சில கண்ணீர்த்துளிகள்.. உனக்காகவும், சில முத்தங்கள்.. உன் குழந்தைக்காகவும்.! //

அப்பாவி தங்கமணிக்கு ஒண்ணும் கிடையாதா.....

துபாய் ராஜா said...

//"எஸ்ஜியின் ஒரு கடிதம்"//

அப்போ இது மாதிரி ஏகப்பட்ட கடிதம் இருக்கா... .

செந்தில் நாதன் said...

கடிதம் செம மிரட்டல்... அசத்திடிங்க..

கதிர் - ஈரோடு said...

காத்து வாங்கற மாதிரி தெரியலையே

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அமித்து.! (கடைசி வரிகளை திருத்தியுள்ளேன், இன்னொரு வாட்டி பார்த்துவிடவும்)

நன்றி நர்சிம்.!
நன்றி சண்முகம்.!
நன்றி தமிழ்பறவை.!
நன்றி முத்துக்குமார்.!
நன்றி பட்டிக்காட்டான்.!
நன்றி ஜானி.!
நன்றி மங்களூர்.!
நன்றி துபாய்ராஜா.!
நன்றி செந்தில்நாதன்.!
நன்றி கதிர்.!

RAMYA said...

ஆதி இந்த கடிதம் யாருக்கு யாரு எழுதினாங்களோ!

அந்த விவாதத்தை தூக்கி சாப்பிட்டு விட்டது கடிதத்தின் அருமையான எழுத்து நடை, நன்றாக ரசிக்க முடிந்தது.