Saturday, October 3, 2009

எனக்கொரு பரிசு

சமீபத்தில் நிகழ்ந்த பதிவர் சந்திப்புக்குச் செல்ல கிளம்பிக்கொண்டிருந்த போது நீண்ட நாட்களாக திரைமறைவில் இருந்த (நெம்ப வேலையாம்ப்பா) ஒரு யூத் பதிவர் போன் பண்ணினார். நான் விபரங்கள் சொல்ல தானும் வருவதாகவும் அருகிலிருப்பதால் என்னையும் பிக்கப் செய்துகொள்வதாகவும் கூறினார்.ரயில், பஸ்ஸைத் தவிர்க்கலாமே என்ற மகிழ்ச்சி எனக்கு. ஆனால் அது தவறு என்பது சிறிது நேரத்திலேயே விளங்கிவிட்டது. அவருடைய பைக்கை பைக் என்றும் சொல்லலாம், லாரி என்றும் சொல்லலாம். அவ்வளவு நீள அகலத்துடன் யூத்கள் ஓட்டக்கூடிய வண்டி (தண்டர் பேர்டோ என்னவோ அடையாளம் தெரியாத அளவில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது) அது.

அது தடாதடாவென்று கிளம்பியதும் காரில் உட்கார்வது போல வசதியாக உட்கார்ந்துகொண்டேன். தாம்பரம் வரை டிராஃபிக்கில் மெதுவாக சென்ற அது பின்னர் மெயின் ரோட்டிற்கு வந்ததும் டிராஃபிக்கை பொருட்படுத்தாமல் மின்னல் வேகம் எடுத்தது. மீனம்பாக்கம் பாலத்தின் மீது வேகம் 120தைத்தொட்டபோது எங்கே அப்படியே டேக் ஆஃப் பண்ணப்போகிறாரோ என்ற பயம் எனக்கு. பின்னர் புள்ளைக்குட்டிக்காரன்யா என்று கெஞ்சிய பிறகே கொஞ்சம் வேகம் குறைந்தது. என் டி ஷர்ட்டையும், கூலிங்கிளாஸையும் பார்த்துக்கொண்டு பின்னர் நினைத்துக்கொண்டேன்.. நாமெல்லாம் யூத் மாதிரி, ஆனால் யூத் இல்ல என்று. இதே கேபிளோ, அனுஜன்யாவாகவோ இருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என நினைத்துப்பார்க்கிறேன். ஊஹூம், ஒண்ணும் சொல்றதுக்கில்ல..

**********

சமீபத்தில் ரசித்த அழகான விளம்பரம் நிப்பான் பெயிண்ட்ஸ். அதில் ஒரு லாரியிலிருந்து கொட்டிப்போகும் பெயிண்ட்கள் பெயிண்ட் குட்டிகளாக உருவெடுத்து ஒரு பெரும் படையைப்போல குதித்துக் குதித்து ஓடி கார்கள், வீடுகள் என கண்ணில் படும் பொருட்கள் மீதெல்லாம் மோதி வண்ண மயமான டிஸைன்களாக உருவெடுக்கின்றன. ரசனை.

**********

பதிவுலகில் பெரும்பாலும் நண்பர்கள் ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்கிறோம். என்ன இருந்தாலும் உள்ளூர இது சும்மா ஃபார்மாலிடி பாராட்டா இருக்குமோ என்ற சந்தேகம் எழுதுவதை தவிர்க்கமுடியாது. எழுத்தாளர்களுக்குதான் ஃபேன்ஸ் இருப்பாங்க. அதெல்லாம் நமக்கு கொஞ்சம் ஓவருல்ல என்று சமயங்களில் நினைத்துக்கொள்வேன். ஆனாலும் ஒருநாளும் பின்னூட்டமிட்டிராத, மெயிலுக்கு வராத நம்மீது மரியாதை கொண்ட வாசகர்களும் இருக்கக்கூடும் என்பது உண்மைதான். அவ்வாறான நபர்களில் மெதுவாக தம்மை வெளிப்படுத்திக் கொண்டவர்கள் நாஞ்சில்நாதம், வனம் ராஜராஜன் போன்றோர். சமீபத்தில் யுஎஸ்ஸிலிருந்து RR எனும் நண்பர் தமிழகம் வந்த போது நேரில் சந்திக்க பெரும் ஆவல் கொண்டார். கடைசியில் இயலவில்லை எனினும் சிலருக்காக கொண்டு வந்த பரிசுகள் என்னைச்சேருமாறு பார்த்துக்கொண்டார். பிறருக்கு புத்தகங்களும், செண்ட் பாட்டில்களும் கொண்டு வந்தவர் எனக்கு கொண்டுவந்தது என்ன என்று கேட்காதீர்கள்.. அவ்வ்வ்வ்வ்..

நேரம் எடுத்து எழுதுவது பயனுள்ளதாகத்தான் இருக்கிறது. அது சிலருக்கு எந்தவகையிலாவது மகிழ்ச்சியை உண்டுபண்ணுகிறது. பெரும்பாலும் வெளிப்படாமலேயே இருப்பினும், பதிலாக அவர்கள் நமக்கு அளவற்ற அன்பைத் தருகிறார்கள். (சமயங்களில் இதுபோல ஏதாவது பரிசும் கிடைக்கலாம்.. ஹிஹி.!)

**********

எனக்கு ஃபேண்டஸி கதைகள் பிடிக்கும் என்பதால் சமீபத்தில் 'X மென் 4 : வோல்வரின்' பார்த்தேன். ஒவ்வொருவருக்கும் ஒரு வித விசேஷ, வினோத சக்திகள். ஒருவருக்கு கைகளிலிருந்து நீளமாக கத்தி வருகிறது, இன்னொருவருக்கு நகம் நீளமாக வருகிறது, அடுத்து ஒருவருக்கு கண்களிலிருந்து லேசர் பாய்கிறது. இன்னொருவருக்கு மறையும் சக்தி இருக்கிறது. மற்றொருவர் மெஷின் கன்னிலிருந்து வரும் குண்டுகளைவிடவும் வேகமாக கத்தி சுழற்றுகிறார். பாவம் இந்த ஆங்கிலப்பட இயக்குனர்கள், படத்தை சுவாரசியப்படுத்த ஒவ்வொரு முறையும் எப்படியெல்லாம் வித்தியாசமாக சிந்திக்கவேண்டிதிருக்கிறது. இந்த முறை வில்லனுக்கு என்ன சக்தி இருக்கிறது என்று காண ஆவலாக இருந்தேன். ஆச்சுடா.. ஒரு விஞ்ஞானி, மேற்சொன்ன அத்தனை சக்திகளையும் ஒன்றிணைத்து ஒரு நபரை உருவாக்கிவிடுகிறார். எப்பூடி?

கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் நான் மிகவும் ரசிக்கும் நுட்பமான ஒரு கலை. அசத்தலான சேஸிங், ஆக்ஷன் என பின்னியிருக்கிறார்கள். ஒரு ஹெலிகாப்டரை கைகளினால் கிறிச் சென வெட்டி வீழ்த்திவிட்டு பின்னணியில் அது வெடித்துச்சிதற நம்ப ரஜினிகாந்த் மாதிரி ஹோய் ஹோய் என நடந்துவருகிறார் ஹீரோ. காது மணக்க மணக்க படம் பார்க்கலாம்.

**********

ஒரு கவிதை(தான் நம்புங்க..)

ஒரு தக்கையைப்போல
காதலின் நீர்ப்பரப்பில் மிதந்துகொண்டிருந்தேன்
நீ வந்தாய்
ஒரு கல்லைப்போல
மூழ்கிப்போய்விட்டேன்

**********
.

50 comments:

கதிர் - ஈரோடு said...

//நாமெல்லாம் யூத் மாதிரி, ஆனால் யூத் இல்ல என்று.//

ஆமாங்க... நானும் டீ சர்ட் போடறப்போ மனசாட்சி சொல்லுது

தமிழ்ப்பறவை said...

hi..hi...
ippovavathu youth illaennu accept pannitteengalae..
//நேரம் எடுத்து எழுதுவது பயனுள்ளதாகத்தான் இருக்கிறது. அது சிலருக்கு எந்தவகையிலாவது மகிழ்ச்சியை உண்டுபண்ணுகிறது//
uNmaiyaaka irukkalaam...
kavithai nallaaththaan keethu...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வலையுலகத்துல இருக்குற ஒரே யூத்து நான்தான்..

என்னைவிட்டு நாலு பிள்ளைக்கு அப்பாவான பார்ட்டிகளையெல்லாம் யூத்துன்னு சொல்றதை வன்மையாகக் கண்டிக்கிறேன்..

ஆதிமூலகிருஷ்ணன் ஒழிக..!

T.V.Radhakrishnan said...

//ஒரு யூத் பதிவர் போன் பண்ணினார்.//

நான் உங்களுக்கு ஃபோன் பண்ணலையே!!

டம்பி மேவீ said...

அட பாவமே ...... நானும் உங்களை அன்று என் பைக்கில் வைத்து ஒரு ரவுண்டு அடித்திருக்க வேண்டும் ....... அப்பொழுது தெரிந்து இருக்கும் பயம் என்றால் என்ன என்று ....... மார்க்கெட்டிங் பசங்க பைக்கில் ஒரு தடவை லிப்ட் கேட்டு பாருங்க

சாம்ராஜ்ய ப்ரியன் said...

மழையில் பக்கத்திலிருந்த ஆதி முகமே தெரியல என்று 'கேபிள் சங்கர்' என்னிடம் சொன்னார். அது நீங்க தானா?

ஆயில்யன் said...

அட நம்ம புல்லட்டு பாண்டி தம்பி :))))

Romeoboy said...

அருமையான பரிசு எங்களுக்கு .

ஆதிமூலகிருஷ்ணன் said...

பரவாயில்லபா.. சனிக்கிழமை நைட்டு கூட கூட்டம் வருதே.. அல்லாரும் அப்பிடியே முந்தின பதிவுக்கும் போயி பார்த்து ஒரு பின்னூட்டம் போட்டுட்டு போங்கப்பா, ரெண்டு நாளா கடை காத்துவாங்குது.!

நன்றி கதிர்.!
நன்றி தமிழ்பறவை.!

நன்றி உண்மைத்தமிழன்.! (அது சரிண்ணே.. சிறுகதைப்பட்டறைம்போது உங்க கைத்தடியை வெச்சுட்டுப்போயிட்டீங்களாமே, எப்பிடி சமாளிக்கிறீங்க.?)

நன்றி டிவிஆர்.! (சரிதான்! என்னத்தச்சொல்ல)

நன்றி மேவீ.!
நன்றி பிரியன்.!
நன்றி ஆயில்யன்.!

நன்றி ரோமியோ.! (மண்டையைப்பார்த்தா ரோமியோ மாதிரி தெரியலையே.. ஹிஹி)

pappu said...

ரஜினிகாந்த் மாதிரி ஹோய் ஹோய் என நடந்துவருகிறார் ஹீரோ. காது மணக்க மணக்க படம் பார்க்கலாம்.////
அத விடுங்க! படத்துக்கு அவங்க வச்சுருக்க தமிழ் பேர் கேட்டிங்களா? விடாக்கண்டனும் கொடாக்கண்டனும்!

இளவட்டம் said...

கவிதை கலக்கல் சார்.

♠புதுவை சிவா♠ said...

"மீனம்பாக்கம் பாலத்தின் மீது வேகம் 120தைத்தொட்டபோது எங்கே அப்படியே டேக் ஆஃப் பண்ணப்போகிறாரோ என்ற பயம் எனக்கு."

:-)))))))))))

பீர் | Peer said...

:)

துபாய் ராஜா said...

:))

இராகவன் நைஜிரியா said...

////நாமெல்லாம் யூத் மாதிரி, ஆனால் யூத் இல்ல என்று.//

நீங்க யூத் இல்லையென்றால் வேறு யாரை யூத் என்றுச் சொல்ல இயலும் அண்ணே?

butterfly Surya said...

அனைத்தும் அருமை.

கவிதையும் தான்.

செந்தில் நாதன் said...

//எழுத்தாளர்களுக்குதான் ஃபேன்ஸ் இருப்பாங்க. அதெல்லாம் நமக்கு கொஞ்சம் ஓவருல்ல என்று சமயங்களில் நினைத்துக்கொள்வேன். //

உண்மைய சொல்லறேங்க..நா பெரிய எழுத்தாளர்கள வாசிக்கும் போது பட்ட சந்தோசத்த விட உங்கள மாதிரி எழுத்துகள படிக்கும் போது ரெம்பவே அதிகமா மகிழ்துருக்கேன்... நம்புங்க பாஸ்.. you are kind of close to the reality and day to day life..if their's is classical music, you guys are like harris jeyaraj...you know which one reaches the masses... :-)

keep writing to keep us happy...

velji said...

it seems to be 'writing on the way'.
nice work!
my shop is also there! i hope you would like the SARAKKU there! i invite you,friend.

Vidhoosh said...

//கேபிளோ, அனுஜன்யாவாகவோ இருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்//

:)) பக்கத்துல ஹிந்து மிஷன் ஆஸ்பத்திரில அட்மிட் ஆகிருப்பாங்க.. நல்ல பயணக் கட்டுரை ;))

nippon paints - few days back there was an ad for TV (Samsung, if I am right), likewise.

movie..ம்ம் ...

kavithai - அப்ப கொன்னுட்டாங்கன்னு சொல்லனுமா, கொன்னுட்டீங்கன்னு சொல்லனுமா ??

-வித்யா

Vidhoosh said...

நல்ல பயாணக் கட்டுரை ;))

கும்க்கி said...

;:”_”’

Cable Sankar said...

/வலையுலகத்துல இருக்குற ஒரே யூத்து நான்தான்..//

நெனப்புதான் பொழைப்பை கெடுக்குதாம்.. போய் புள்ளை குட்டிகளை படிக்க வைக்கிற வேலைய பாருண்ணே..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///வலையுலகத்துல இருக்குற ஒரே யூத்து நான்தான்..//

நெனப்புதான் பொழைப்பை கெடுக்குதாம்.. போய் புள்ளை குட்டிகளை படிக்க வைக்கிற வேலைய பாருண்ணே..///

புள்ளை குட்டியெல்லாம் இருந்தா நான் ஏன் யூத்துன்னு சொல்லிக்கிட்டு திரியப் போறேன்..

இல்லாமத்தானே தெனாவெட்டா திரியறோம்..!

அ.மு.செய்யது said...

//"மீனம்பாக்கம் பாலத்தின் மீது வேகம் 120தைத்தொட்டபோது எங்கே அப்படியே டேக் ஆஃப் பண்ணப்போகிறாரோ என்ற பயம் எனக்கு."//

அந்த டைமிங் சென்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

அறிவிலி said...

///ஃபார்மாலிடி பாராட்டா இருக்குமோ ///

இல்லீங்க. உண்மையாகவே வலைப்பூக்களில் பலருடைய எழுத்துகள் வெகுஜனப் பத்திரிக்கைகள் படிப்பதைவிட நிறைவான திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றன. நன்றாக எழுதுபவர்களின் பதிவுகளுக்கு திரும்ப திரும்ப வருகிறோம், மற்றவற்றை அவ்வப்போது எட்டிப் பார்க்கிறோம். நியூ விசிட்டர்ஸ் எண்ணிக்கையை விட ரிட்டர்னிங் விசிட்டர்ஸ் எண்ணிக்கைதான் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.

பாலா said...

மாம்ஸ் இன்னம் யூத்தவே இருக்கீங்களே எப்படி ?
கவிதை தூள் ,இதனால்தான் மேல உள்ள கேள்வி

குசும்பன் said...

//இதே கேபிளோ, அனுஜன்யாவாகவோ இருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என நினைத்துப்பார்க்கிறேன். ஊஹூம், ஒண்ணும் சொல்றதுக்கில்ல..
//

அனுஜன்யா: யோவ் என் பல் செட்டு, தலையில் போட்டு இருந்த விக்கு எல்லாம் எங்கய்யா?

பைக் யூத்: ரெட்டை பாலத்துக்கிட்ட விழுந்தேச்சே நீங்க பார்க்கலையா?

குசும்பன் said...

//சிலருக்காக கொண்டு வந்த பரிசுகள் என்னைச்சேருமாறு பார்த்துக்கொண்டார்.//

வெளங்கிடும்:))) நான் ஒருத்தவன் தான் அப்படின்னு நினைச்சேன்!!! எனக்கு சோடிக்கு ஆள் இருக்கு சித்தப்பு! திரும்ப ஒரு பார்சல் அனுப்பின பதிவு வரும்:) இந்த முறை ஆந்திரா பார்டர் வரை போய் முயற்சி செய்யவும்!

குசும்பன் said...

//(சமயங்களில் இதுபோல ஏதாவது பரிசும் கிடைக்கலாம்.. ஹிஹி.!)
//

நானும் எடுத்து வருகிறேன் சித்தப்பு உங்களுக்காக ஸ்பெசல் துபாய் பாலைவன மண் ரெண்டு கிலோ! பாலைவன மண் பார்க்கனும் என்றால் நீங்க எம்புட்டு தூரம் போகனும்....:)


//எனக்கு ஃபேண்டஸி கதைகள் பிடிக்கும் என்பதால் சமீபத்தில் 'X மென் 4 : //

எனக்கு .......கதைகள் பிடிக்கும் என்பதால் சமீபத்தில் ‘xxx வுமன்' அப்படி என்றுதானே வரனும்...என்ன ஆச்சு வர வர ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை விட இதுமாதிரி வார்த்தைகள் மிஸ்டேக்கா வருது உங்க கிட்ட இருந்து!!!

குசும்பன் said...

குவாட்டரை போட்டுவிட்டு தண்ணியில் மிதந்ததை என்னமா ரீஜண்டா சொல்றாருப்பா கவிதையா!!!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி பப்பு.!
நன்றி இளவட்டம்.!
நன்றி புதுவை.!
நன்றி பீர்.!
நன்றி துபாய்.!
நன்றி ராகவன்.!
நன்றி சூர்யா.!

நன்றி நாதன்.! (டவுன்ல இருந்த பேட்டரியை நல்லா சார்ஜ் போட்டிருக்கீங்க.. ஸார்)

நன்றி வெல்ஜி.! (என்ன சொல்றீங்கன்னு புரியலை ஃபிரெண்ட், எங்க இருக்கீங்க?)

நன்றி விதூஷ்.!
நன்றி கேபிள்.!
நன்றி கும்க்கி.!
நன்றி செய்யது.!

நன்றி அறிவிலி.! (சார்ஜ் ஃபுல்லாயிடுச்சு)

நன்றி பாலா.!
நன்றி குசும்பன்.!(அனுஜன்யாவுக்கு மெயிலனுப்பி வரச்சொல்லியிருக்கேன், ஜாக்கிரதை)

ராஜா | KVR said...

//பதிவுலகில் பெரும்பாலும் நண்பர்கள் ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்கிறோம்.//

அப்படி குறுக்கிவிட முடியாது ஆதி. நான் உங்கள் நண்பனான்னு எனக்குத் தெரியாது, ஆனால் உங்கள் தங்கமணி பதிவுகளுக்கும் துறைச் சார்ந்த பதிவுகளுக்கும் ரசிகன்.

RAMYA said...

//
அவருடைய பைக்கை பைக் என்றும் சொல்லலாம், லாரி என்றும் சொல்லலாம். அவ்வளவு நீள அகலத்துடன் யூத்கள் ஓட்டக்கூடிய வண்டி (தண்டர் பேர்டோ என்னவோ அடையாளம் தெரியாத அளவில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது) அது.
//

ஐயோ இந்த பைக்கை பார்க்கும்போது பயமாத்தான் இருக்கு
எப்படித்தான் உக்காந்து போனீங்களோ?

யூத் என்ற எண்ணம்தான் உங்களை உற்சாகப் படுத்தி இருக்கும்னு நம்பறேன்! ஹி ஹி ஹி :))

RAMYA said...

//
சிலருக்காக கொண்டு வந்த பரிசுகள் என்னைச்சேருமாறு பார்த்துக்கொண்டார்.
//

அது சரி இது ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கே :-)

RAMYA said...

//
மீனம்பாக்கம் பாலத்தின் மீது வேகம் 120தைத்தொட்டபோது எங்கே அப்படியே டேக் ஆஃப் பண்ணப்போகிறாரோ என்ற பயம் எனக்கு.
//

இது நல்ல ஜோக :))

பயத்துலேயும் டெர்றரா யோசிக்கறீங்க பாருங்க அங்கே தான் நீங்க நிக்கிறீங்க ஆதி!!

எவனோ ஒருவன் said...

//இதே கேபிளோ, அனுஜன்யாவாகவோ இருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என நினைத்துப்பார்க்கிறேன்//
கேபிள்ஜியை நினைத்துப் பார்க்கிறேன்... :)))

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
வலையுலகத்துல இருக்குற ஒரே யூத்து நான்தான்..//
:)))))))

//Cable Sankar said...
/வலையுலகத்துல இருக்குற ஒரே யூத்து நான்தான்..//
நெனப்புதான் பொழைப்பை கெடுக்குதாம்.. போய் புள்ளை குட்டிகளை படிக்க வைக்கிற வேலைய பாருண்ணே..//

இந்த யூத்துங்க தொல்லை தாங்க முடியலப்பா.

ச்சின்னப் பையன் said...

//பதிவுலகில் பெரும்பாலும் நண்பர்கள் ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்கிறோம். என்ன இருந்தாலும் உள்ளூர இது சும்மா ஃபார்மாலிடி பாராட்டா இருக்குமோ என்ற சந்தேகம் எழுதுவதை தவிர்க்கமுடியாது//

அண்ணே... அற்புதமா எழுதறீங்க... இந்த மாதிரி யாராலும் எழுத முடியாது...

ஊர்சுற்றி said...

இந்த மாதிரி அசுர வேகத்தில் பைக் ஒட்டுபவர்களிடம் சிக்கிக் கொண்ட அனுபவம் எனக்கும் இருக்கிறது. நல்ல புலம்பல்!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ராஜா.! (வாங்க சீனியர்)

நன்றி ரம்யா.! (உடல்நிலை சரியாயிடுச்சா ஃபிரெண்ட்?)

நன்றி எவனோஒருவன்.!

நன்றி சின்னவர்.! (அப்படி என்ன இருக்கு அதில்? கிண்டல் பண்றீங்களா? அல்லது அதை துணிச்சலாக கருதுறீங்களா?)

நன்றி ஊர்சுற்றி.!

செல்வேந்திரன் said...

நண்பா, தமிழ்நாட்டு எழுத்தாளர்களில் சாருவுக்கு மட்டுமே இதுவரை கிடைத்து வந்த பெருமை ஆர்.ஆர் மூலம் உங்களுக்கும் கிடைத்திருக்கிறது...

RAMYA said...

//
நன்றி ரம்யா.! (உடல்நிலை சரியாயிடுச்சா ஃபிரெண்ட்?)
//

நல்லா இருக்கேன் ஃபிரெண்ட்.

நலம் விசாரிப்புக்கு நன்றி ஃபிரெண்ட்!

நர்சிம் said...

வணக்கம்

சூரியன் said...

அய்யோ ராமா இந்த கொசு(யூத்) தொல்லை தாங்க முடியலை..

கவிதைனு சரக்க பத்திதானே சொன்னீங்க..

கொஞ்சமா அடிச்சிட்டு மிதக்கும் போது இன்னொரு குவார்ட்டர உள்ள போனதும் மல்லாந்துட்டீங்க அதானே சொல்ல வறீங்க...

அமிர்தவர்ஷினி அம்மா said...

:))

அனுஜன்யா said...

யோவ், நீ பைக்குல போக பயந்த. சரி. அதுக்கு ஏன்யா என்ன வம்புக்கு இழுக்குற. இதுக்கு குசும்பன் மாதிரி குடும்பஸ்தன் வேற சப்போர்ட்டு. ஒண்ணு மட்டும் ஞாபகம் வெச்சுக்க. நா எப்பவும் புல்லட் பாண்டிதான் :)

அனுஜன்யா

அன்புடன் அருணா said...

கவிதை கலக்குறீங்க!

valipokkan said...

I entered into blog world as reader after sujata left us. i read unmaithamilan's blog first. then many.
I'm avid reader of ur blog. i visit ur blog almost 3 times a week.u stand top in my charts till now. donno how to comment in tamil. lemme kno.

வித்யா said...

:))

ஆதிமூலகிருஷ்ணன் said...

அனைவருக்கும் நன்றி.!

(அனுஜன்யா : குசும்பன் கமெண்டில் இன்னும் சிரிச்சுக்கிட்டிருக்கேன்.. ஹெஹெ.. பல்லு செட்டு கேஸு)

புதுகைத் தென்றல் said...

me the 50th