Monday, October 5, 2009

ஒரு அளுவாச்சி கதை

இந்தா போறாரே அவுரு ஊட்டாண்டதான் என்கடையை போட்டுருக்கேன். மனுசன் தங்கமானவரு, இஞ்சினியரு வேல பாக்குறாரு. துணி அயன் பண்ண வரச்சொல்லோ எங்கிட்ட பொலம்பிக்கிட்டிருப்பாரு. பேருதான் என்னான்னு தெர்ல.. ஒரு தபா போன்ல ஆருகிட்டயோ பேசச்சொல்லோ ஆதின்னாரு, உன்னொரு தபா தாமிரான்னாரு, உன்னொருக்கா கிஸ்ணன்னாரு.. அத்த வுடு, நல்ல மனுஷன். பாத்துக்கோ.. ஊட்ல எல்லா வேலையும் அதுதாம் செய்யுமின்னு நினைக்கேன். பக்கத்துலதான இருக்கேன் எனக்குத்தெரியாதா? பிள்ளயும், பையும் எட்த்துக்கினு கடைக்கு போய் வாறதா நானும் பாத்துக்கினேதான் இருக்கேன். மாடில துணிகாயப்போடும்போதும் பாத்திருக்கேன். ஆனா பாரு செல நாளு மாடீல ஒரே சத்தமா கேக்கும், டம்மா டும்மூன்னு பாத்திரம் உருளுத சத்தமெல்லாம் கேட்க்கும். அப்பால அந்த மனுஷன் மூஞ்சி வீங்கிப்போயி வெளிய வந்து எங்கடையாண்ட தம்மடிச்சிக்கினுப்பாரு. பாக்க பாவமா இருக்கும். 'இன்னாபா ஊட்ல ஏதா பிரச்சினயா?'னு கேட்டா சொம்மா இளிச்சிகினு போயிருவாரு.

இப்பிடித்தான் ஒரு நாளு டூட்டி முட்ச்சினு வண்டிய எட்த்து வெச்சினு பக்கத்துல டாஸ்மாக்குல போயி உக்காந்தா.. பக்கத்துல இந்த மனுஷன். கண்ணுல்லாம் அளுவுன மாதிரி வீங்கிப்போயி கெடந்துது. நா பாத்து, 'இன்னா சார் கடைக்கிலாம் வந்துகினே? இந்தப்பயக்கம் வேற இர்க்கா' னு கேட்டு சிரிச்சப்போ லேஸா சிரிச்சார். ஒரு கோட்டர் பாட்டிலும், அதுக்கு சேத்துக்க நாலு கூல்டிரிங்ஸும் பக்கத்துல இர்ந்துச்சு. நா சிர்ச்சுப்புட்டு அப்பாலிக்கா என் வேலைய பாக்க ஆரம்பிச்சுட்டேன்.

கொஞ்ச நேரம் களிச்சு அவருகிட்ட பேச்சுக்குட்த்தேன். அப்போதைக்கு ஒரு கட்டிங்குதான் உள்ளப்போயிருந்தது, பாவம் அதுக்கு மேல முடியலன்னு நெனக்கேன். ஆனா கூல்டிரிங்ஸெல்லாம் காலியாயிருந்தது. முதல்ல சொல்லமாட்டேன்னு அளுத்தமா இர்ந்தவர் பாசமா கேக்கச்சொல்லோ முடியல. மனுஷனுக்கு அளுவாச்சியா வந்துடுச்சி. 'அளுவாத சார், எல்லா ஊட்லயும் அப்பிடிதான். காலயில கூட எம்பொண்ணாட்டி சோறு போட மாட்டேன்னுட்டா.. நா இன்னா ஒன்னமாதிரி அளுதுக்கினா இருக்கேன்'னு சமாதானம் பண்ணி அனுப்பிச்சி வெச்சேன். 'கூட வர்னுமா சார், போயிடுவியா? எங்கனயாவது உளுந்து மண்டையை ஒடைச்சிக்காத' ன்னப்போ மண்டையை ஆட்டிக்கினே போயிட்டார்.

நானும் ரோசனை பண்ணிக்கிட்டே அவுரு முடியாத மிச்சம் வெச்சினு போன நைண்டியை அட்ச்சேன். இந்தப்பொம்பளைகளே மோசம்ப்பா.. இப்போ அல்லாரும் பட்ச்சி வேலைக்கி போறமின்னு திமிரு வந்துட்சுப்பா, ஆம்பிளைகளை மதிக்கிறதேயில்ல. இருவது நுப்பது வர்சம்மின்னாடிலாம் எப்பிடி சோக்காயிர்ந்தது.. நைனா, அவுரோட நைனான்னு பார்த்து வளந்தவங்கதான நாம. இவுளுக கேக்கிறது நாயம்தான், ஆரு இல்லன்னு சொன்னா இப்போ? ஆனா இப்பிடி வெச்சடில மாறச்சொன்னா எப்பிடி? இவுளுங்க ஆட்டம் தாங்கமுடியலயே. அடங்கிப்போவாட்டாலும் அடங்கிப்போவுறா மேரி நடிச்சா இன்னா கொறஞ்சா பூடுவாளுங்க.. அவுளுங்க நெனக்கிறமாதிரி முளுசா மாற நமக்கும் கொஞ்சம் டயம் வேண்டாமா? எப்பிடியும் நம்ப பசங்க காலத்துல முளுசா அடங்கித்தான் போவப்போறானுங்கோ.. இன்னா சொல்ற நீயி?

இன்னா சொல்லு சாரே.. எங்க நைனா இர்க்கச்சொல்லோ இர்ந்தா மேரி இப்போ இல்லனுவேன். அப்போ நா சின்னக் கொயந்தையா இர்ந்தப்போ எங்க நைனா டெய்லி குட்ச்சினு வந்து எங்க அம்மாவையும் ஆயாவையும் இஸ்த்துபோட்டு அடிப்பாரு.. கேக்க ஒரு நாதி கெடியாது. இப்போ பாரு, எம்பொண்டாட்டி என்ன போட்டு இந்த மாத்து மாத்துறா.. கேக்குறதுக்கு ஒரு நாதி இல்ல. ஒலகம் மாறிப்போச்சு வாத்யாரே.. சரி, எங்க ஊட்டுக்காரி சைதாப்பேட்டை அவுங்க ஆத்தா ஊட்டுக்கு போயிக்கீறா, நா டாஸ்மாக்கு போவுணும், டயமாச்சி.. வர்ட்டா?
.

39 comments:

தத்துபித்து said...

inna sare,valappovula thaan polambikinu irntha,ippa alla pakkamum polampitu irka. naan appave sonnen vaanam vaanamu, ketiyia? sari ethukkum mersalavatha thalivaa.
athu inna thaliva naalu cooldrinks kudikka quarter vaangitu?
sari vudu ethukum anniyanda matter povama parthukka.appala soru kadikkathu.

Anonymous said...

இது அளுவாச்சி கதை அல்ல. அளுவாச்சி காவியம் :)

Anonymous said...

//எங்கடையாண்ட தம்மடிச்சிக்கினுப்பாரு.//

இதுக்கு எக்ஸ்ட்ராவா எதுவாச்சும் அடி விழுந்துருக்கணுமே :)

அமுதா கிருஷ்ணா said...

ஏலே,ஏட்டி எல்லாம் போச்சா, இன்னாபா,என்னாமே,வரசொல்லோ, தபா இப்படி சென்னை செந்தமிழ் வந்துருச்சா....

கார்க்கி said...

இன்னா நைனா? ஒரே மெர்ஸிலா கீது. அல்லாம் நம்க்கு பயகின விஷயம்தானே?
மெட்ராஸ் தமிளூ சோக்கா இல்லீனாலும் சுமாரா வர்து உனக்கு.இன்னிம் கொஞ்சம் டீஷன் போகனும்ப்பா. அதிஷாகண்டி எயிதினா வை, அப்ப்டியே டப்பா கஞ்சி அடிச்சா மேரி ஃபீலாவேன். செளத்ல இந்து வந்ததால் ஃப்ரீயா வுடறேன். சோக்கா எய்தி கீறப்பா.. நான் காண்டி கண்ணாலம் பண்ணேன்னு வை, விடுவிடு..

அப்பாவி முரு said...

”யோவ் ஏட்டு, போன வாரம் ஓவ்வீட்டம்மா, என்ன பண்ணுனாங்க?”

”லட்டியால அடி, அடின்னு அடிச்சுட்டாங்க சார்”

”பதிலுக்கு நீ என்ன பண்ணின?”

“பேசாம, யூனிபார்ம் மாட்டிகிட்டு வேலைக்கு வந்துட்டேன் சார்”

உ. போ. ஒ-வில் வரும் வசனம்.(சொந்த அனுபவம் இல்லாததால்)

அப்பாவி முரு said...

ஆனாலும், இதுவும் நல்லா தான் இருக்கும் போலிருக்கு.

:)))


எத்தினி நாளைக்குத்தான் நெஞ்ச வெடைச்சுக்கிட்டு, யளந்தாரியாவே ஊருக்குள்ள திரியுறது?

வனம் said...

வணக்கம் தாமிரா
சரி, சரி லூசா விடுங்க.... இதுக்குத்தான் என்னமாரி முடிவுபண்ணனும் சரி மாட்டிக்கிட்டீங்க.

புரியுது தாமிரா.

இராஜராஜன்

அப்பாவி முரு said...

மறத்தமிழனாய் பிறந்த எல்லோரும் போர்ல கலந்துக்க வேண்டும் தானே.


வாய்ப்பு இருக்குறவன், வீட்டை விட்டு களத்துக்கு போய் சண்டை போடுறான்,

இல்லாதவன், களத்தைவிட்டு வீட்டுக்கு போய் சண்டை போடுறான்.ம்ம்ம், அவ்வளவுதான்...

அப்பாவி முரு said...

சித்தப்பு, என்ன சொன்னாலும் சரி, காயங்களை காட்டினாலும் சரி...(கிணத்தில்) குதிக்கிறது, குதிக்கிறது தான். மாற்றமே இல்லை...

ghost said...

சரி சரி விடு அண்ணாத்தே ரொம்ப பீல் பண்ணகூடாது கண்ணதொடச்சுக்கோங்க எல்லாம் பாக்கறாங்கல்ல

ஆரூரன் விசுவநாதன் said...

ஒரே சோக்கா கீதுப்பா.....கண்டினு....

Truth said...

ஏன் சார், உங்க வாழ்க்கைல இம்பூட்டு சோகமா?

ஜானி வாக்கர் said...

வழக்கம் போல கலகல பதிவு.

உண்மையவே அடி கிடி விழுந்ததா?? அடி பலமோ? என்ன தான் புனைவா இருந்தாலும் எப்படி உண்மை சம்பவம் மாதிரி ??

சரி தலைவா, இனி கேள்வி கேக்கல போதுமா கண்ணதொடச்சுக்கோங்க.

ஆதிமூலகிருஷ்ணன் said...

கொஞ்சம் பிஸியாக இருப்பதால் அனைவருக்கும் சேர்ந்தாப்புல நன்றி சொல்லிகிறேன். நன்றி.!

ச்சின்னப் பையன் said...

எங்க ஊர்லேயும் டாஸ்மாக் கிளைகளை திறக்க உடனே ஏற்பாடு செய்யணும்!!!

நாஞ்சில் நாதம் said...

ப்ச்.

Raju said...

பொய்.

இது ஒரு வியாதி!

உண்மை.

நல்லது!

( எனக்கு நிஜமா இன்னும் கல்யாணம் ஆகலே! )

முரளிகண்ணன் said...

ம்ம்ம்ம் அடுத்து கொங்கு அல்லது நெல்லை பாஷையில் எதிர்பார்க்கிறேன்

அறிவிலி said...

//இப்போ பாரு, எம்பொண்டாட்டி என்ன போட்டு இந்த மாத்து மாத்துறா.. //

உங்க சுத்துவட்டாரத்துல எல்லாரும் இப்படித்தானா..நாங்கல்லாம் அப்படி கெடையாது, ரொம்ப வீரமாக்கும்....

(தோ.. வந்துட்டேன்..வந்துட்டேன்... அதுக்குள்ள கரண்டிய எடுத்தா எப்புடி....)

அன்புடன் அருணா said...

பாவம் ரமா!!:)

எவனோ ஒருவன் said...

//எப்பிடியும் நம்ப பசங்க காலத்துல முளுசா அடங்கித்தான் போவப்போறானுங்கோ.. இன்னா சொல்ற நீயி?//

சைதை வ.வா.ச. சார்பில் ஆதிபயங்கரமாக இப்படி இல்லை என்று மறுக்கிறோம். (தலைவர் - யூத் கேபிள்ஜி)

துபாய் ராஜா said...

என்ன ஆதி,நேத்து அடி கொஞ்சம் அதிகமோ.....

வாயிலே குத்திட்டாங்களா....ஆள் வச்சு புலம்பற அளவுக்கு ஆகிப்போச்சு.... :))

மகேஷ் said...

Life is a cycle Sir
உங்கள‌ மாதிரி ஆளுங்களால தான் sir அந்த சைக்கிள்ள ஏறதுக்கே பயமா இருக்கு.

Romeoboy said...

ஆதி .. இவ்வளவு நீங்க எவ்வளவு நல்லவனா??

லவ்டேல் மேடி said...

" கருவாச்சி காவியம் " மாதிரி இது " அழுவாச்சி காவியம் " ... !! செமையா அழுதுட்டேன் தல...!! படமா எடுத்தா... " தேவதாஸ் " படத்த விட செம அழுவாச்சி படமா ஹிட் ஆகும் .....!!


ஆஆவ்வ்வ்... முடியல.....

மகேஷ் said...

ஐ.... லவ்டேல் மேடி கெடச்சிட்டார்,

Anand said...

ஆதி, இந்த பதிவுல ஒரு சின்ன லாஜிக் மீறல்...உங்களுடன் அவர் டாஸ்மாக் பாரில் சந்தித்து பேசுகிறார். கதை/கட்டுரை முடியும் போது அவர் மீண்டும் டாஸ்மாக் போகிறேன் என்கிறார். சரியா?

அன்புடன்,
ஆனந்த்

தராசு said...

அப்புறம்......

ஸ்ரீமதி said...

:))))))))

பித்தனின் வாக்கு said...

இது உங்களுக்கு நல்லா இருக்கா, தாங்க முடியலை, வேனாம் அழுதுருவன், என்ன ஆதி நான் நாப்பது வயசு வரைக்கும் கண்ணாலம் வேண்டாம்னு இருந்துட்டு இப்பதான் பாட்டி பார்க்க சொல்லியிருக்கன், இப்படி பயப்படுத்திறிங்க.
பேசாம நமக்கு கொள்கைதான் முக்கியம், கண்ணாலம் வேண்டாமுன்னு ஜகா வாங்கிறலாமனு யோசிக்க வச்சுட்டிங்க.

தமிழ்ப்பறவை said...

இதுக்கு :-)தா இல்லை :-(தான்னு தெரியலையேப்பா....?!

Karthik said...

நிஜமாவே சான்ஸ்லெஸ்..:))))

ஊடகன் said...

அருமையான பதிவு ..........
உங்கள் கலக்கலை தொடருங்கள்.........

rajasurian said...

கலியாணம் பண்ணப்போற நேரத்துல கிலிய கொடுக்கிறீங்களே பாஸு

rajasurian said...

கலியாணம் பண்ணப்போற நேரத்துல கிலிய கொடுக்கிறீங்களே பாஸு

rajasurian said...

கலியாணம் பண்ணப்போற நேரத்துல கிலிய கொடுக்கிறீங்களே பாஸு

ஆதிமூலகிருஷ்ணன் said...

அனைவருக்கும் நன்றி.!

(ஆனந்த் : யாருகிட்ட லாஜிக் பத்தி பேசுறீங்க.. நல்லா படிங்கையா, என்னைக்கோ நடந்ததைப்பற்றி சொல்லிட்டு இன்னிக்கும் போறார்.. ஹிஹி)

Anand said...

ஆமாங்க ஆதி, ரெண்டாவது தடவை படிச்ச அப்போ தான் நோட் பண்ணினேன்:-)

நீங்க இந்த மாதிரி எல்லா பின்னுட்டதுக்கும் அக்கறை எடுத்து பதில் சொல்ற விதம் நல்ல இருக்கு. This made me to post the comment. Btw I am the silent reader to your blog for about an year.