Sunday, October 11, 2009

புலம்பல்கள் விருது : கார்க்கி


புலம்பல்கள் விருது -சில விளக்கங்கள் :

1. வலையுலகில் சிறப்பாக இயங்கும் பதிவர்களுக்கு மரியாதை செலுத்த விரும்பி இதை ஏற்படுத்தினேன்.
2. தேர்வு என் சொந்த விருப்பத்தின் பெயரில் செய்யப்படுகிறது. பிற்பாடு இதில் நண்பர்களும் இணையக்கூடும்.
3. இது சங்கிலித்தொடர் விருதல்ல. வாங்குபவர் மற்றவர்களுக்கு பகிரமுடியாது.
4. தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவரின் என்னால் வரையப்பட்ட பென்சில் போர்ட்ரெய்டே விருதாக்கப்படுகிறது.
5. பதிவர்களுக்கு மரியாதை, ஒரு பதிவுக்கான மேட்டர், ஓவியத்திறனை காட்டி பாராட்டுபெற ஒரு வழி என ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிப்பது உள்நோக்கம்.
6. துவக்கத்தில் நெருங்கியவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதுபோல தோற்றம் ஏற்படக்கூடும். அது தவிர்க்க இயலாதது. ரசனைக்காரர்கள் அனைவருக்குமே வழங்க விரும்புகிறேன். அது நடக்கும்.
7. முதலில் பெறுபவர் முதல்வர் என்பது அர்த்தமல்ல. வரிசை ரேண்டம் தேர்வாகும்.
8. சிறிது உழைப்பைக் கேட்கும் செயல் என்பதால் வாரம் ஒன்று வழங்க விருப்பமிருந்தாலும் மாதம் ஒன்றாவது வழங்குவேன் என நம்புகிறேன்.
9. விருதுபெற்றவர் விருப்பமிருந்தால் போர்ட்ரெய்டின் ஒரிஜினலை நேரிலோ, அஞ்சலிலோ பெற்றுக்கொள்ளலாம்.
10. விருதுபெற்றவருக்கு 'புலம்பல்களி'ன் வாழ்த்துகள்.! துணைநிற்கும் அனைவருக்கும் நன்றி.!

பி.கு :
விருதின் நோக்கத்தை பாராட்டி விருதுக்கமிட்டியாருக்கு யாராவது ஏதும் பணமுடிப்பு வழங்க விருப்பப்பட்டால் மெயிலுக்கு வரவும்.. ஹிஹி.!
.

43 comments:

ராஜா | KVR said...

படம் நல்லா இருக்கு ஆதி. ஆனால் ஏன் கீழே வரும் பத்திகளும் செண்டர் அலைண்ட்டா இருக்கு? படிக்கிறப்போ நெஜமாவே கண்ணைக் கட்டுது :-)

cheena (சீனா) said...

நல்ல முயற்சி ஆதி - நல்வாழ்த்துகள்

பிரபாகர் said...

நல்லாருக்கே இந்த விளம்பர டெக்னிக்..... இது பற்றி ஓர் சந்திப்பு போடுவோமா சகா?

பிரபாகர்.

அமுதா கிருஷ்ணா said...

அந்த பூக்களுக்கு பதிலாக ஒரு புட்டி படம் போட்டிருக்கலாமோ..சும்மா,புட்டிக்
கதைகள் ரொம்ப ஃபேமஸ் இல்லையா..அதான்....

மகேஷ் said...

படம் பட்டாசா இருக்கு. அண்ணாச்சி ஏன் சோகமா இருக்கார்?

வாழ்த்துக்கள் அண்ணே. வாழ்த்துக்கள் கார்க்கி.

ஆயில்யன் said...

பாஸ் ஓவியத்திறனில் ஜொலிக்கிறீங்க !

முரளிகண்ணன் said...

படம் அருமை ஆதி. அட்டகாசம். வாழ்த்துக்கள் உங்களுக்கும் கார்க்கிக்கும்

தமிழ்ப்பறவை said...

i salute for this portrait...
பிரமாதம் ஆதி... என்ன வார்த்தைகள் போ(தே)டுவது தெரியவில்லை...
பொறாமைன்னு சொல்லலாமா?... எதுக்கு மறைமுகம்.. அதை விடச் சிறந்த பாராட்டு எதுவும் எனக்குத் தோணவில்லை...

அறிவிலி said...

ஆதி.. படம் சூப்பர், ஐடியா சூப்பர். வழக்கம் போல உங்கள் எழுத்து நடை சூப்பர். இப்படி எல்லாத் திறமைகளும் ஒருங்கிணைந்து ஒருத்தரிடம் இருப்பது அபூர்வம்.

சே.. சே... அதுக்காகவெல்லாம் இல்லீங்க.. எனக்கு அதிலெல்லாம் இன்ட்ரஸ்டே கெடையாது..

தமிழ்ப்பறவை said...

படத்தின் ஒவ்வொரு புள்ளியிலும் உங்கள் உழைப்பு தெரிகிறது ஆதி...
அசத்தல்...

குசும்பன் said...

ஆதி முன்னாடி ஒரு பொண்ணு படம் போட்டிங்களே அதுமாதிரி கொஞ்சம் ட்ரை செஞ்சு பாருங்களேன் கார்க்கியை:) மாடலாக கார்க்கி நிற்க எப்பவும் ரெடியாம்:)

(உங்க கண்ணை நொல்லை ஆக்க எப்படி நம்ம டெக்னிக்?:)

போனசாக: கேபிளார் உங்களை எங்கு பார்த்தாலும் அங்கயே ”போஸ்” கொடுக்க எப்பவும் தயராக இருக்கிறாராம்.

அ.மு.செய்யது said...

நல்லா வரைஞ்சிருக்கீங்க !!!! உங்களுக்குள்ள நிறைய திறமைகள் ஒளிஞ்சிருக்கு !!!

சென்னையில் இருக்கும் என் நண்பனும் இது போல் பென்சில் போர்ட்ராய்ட் வரைவான்.( என் படம் கூட வரைந்திருக்கிறான் ).பென்சில் ஆர்ட் வரைவதற்கு எவ்வளவு பொறுமையும் கவனமும் வேண்டும்
என்பதை பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன்.

அப்சாரா 4hH haaya namahaa !!!

Mahesh said...

ஆதி... அட்டகாசம் போங்க... உங்க ஓவியத் திறமை நிஜமாவே வியப்பா இருக்கு !!! கழுத்துல போட்டிருக்கற செயின் (அல்லது வேற எதோ) லேசா எட்டிப்பாக்கறதெல்லாம் டீட்டெய்லா வரைஞ்சுருக்கீங்க !!

உங்க திறமைகள் மேலும் வளர வாழ்த்துகள் !!

கத, கவித, ஓவியம், ஃபோட்டோ, குறும்படம்.... இன்னும் எதாவது பாக்கி இருக்கா?

Anonymous said...

நல்லா இருக்கு ஆதி.

+1 போட்டாச்சு

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
அன்புடன் அருணா said...

வாவ்..இது நல்ல ஐடியாவா இருக்கே!

Truth said...

வாவ், நல்ல விஷயம் பண்ணியிருக்கீங்க ஆதி அண்ணே! வாழ்த்துக்கள்.

pappu said...

பி.கு :
விருதின் நோக்கத்தை பாராட்டி விருதுக்கமிட்டியாருக்கு யாராவது ஏதும் பணமுடிப்பு வழங்க விருப்பப்பட்டால் மெயிலுக்கு வரவும்.. ஹிஹி.!
.////

எப்படி? காசையும் படமா வரைஞ்சு அனுப்பிறலாமா? இல்ல அதை போட்டோவா அனுப்பவா?

வெண்பூ said...

படம் அருமை.. பாராட்டுகள் உங்களுக்கு, வாழ்த்துகள் சகாவிற்கு..

துபாய் ராஜா said...

அருமையான படம்.

அட்டகாசமான பதிவு ஆதி.

ஆப்பு said...

ஐ எம் பேக்!! (*****ஆப்பு*****)
http://evandapirabalam.blogspot.com/2009/10/blog-post.html

இம்சை அரசன் said...

இந்த விருது கிடைத்ததற்காக வருத்தப்பட்டு தற்கொலை செய்துகொள்ள நினைப்பவர்கள் எந்த பாருக்கு யாருடன் போகவேண்டும்?

Achilles/அக்கிலீஸ் said...

நல்ல முயர்சி.. வாழ்த்துக்கள் கார்க்கி. :))

ராமலக்ஷ்மி said...

படம் அருமையாய் வரைந்திருக்கிறீர்கள், பொறுமையாகவும்:)! பாராட்டுக்கள்!

//ஒரே கல்லில் மூன்று மாங்காய் //
டெக்னிக்கும் சூப்பர்:)!

இராகவன் நைஜிரியா said...

புலம்பலகள் விருது - அருமை .

தாங்கள் வரைந்த ஓவியம் அதைவிட அருமை.

பெற்றவருக்கும் கொடுத்தவருக்கும் வாழ்த்துகள்.

இன்னிக்கு தமிழ் மணத்தில் போடப்பட்ட இரண்டாவது ஓட்டும், தமிழிஷில் போடப்பட்ட 11 வது ஓட்டும் என்னோடது என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

பாலா said...

பி.கு :
விருதின் நோக்கத்தை பாராட்டி விருதுக்கமிட்டியாருக்கு யாராவது ஏதும் பணமுடிப்பு வழங்க விருப்பப்பட்டால் மெயிலுக்கு வரவும்.. ஹிஹி

sorry wrong number

செல்வேந்திரன் said...

கார்க்கி முகத்துல லேசா சச்சின் சாயல் இருக்கிற மாதிரி இருக்குல்ல...

ஆதிமூலகிருஷ்ணன் said...

விருதை ஏற்பவர்தான் வந்து ஏற்புரை ஆற்றி நன்றி சொல்லவேண்டும் என்பதால் தனித்தனியாக நன்றி சொல்லாமல் மொத்தமாக நன்றி சொல்லி கழன்றுகொள்கிறேன். நன்றி.. நன்றி.!

ராஜா : மாற்றியாகிவிட்டது.
குசும்பன் : நீங்கள் போஸ் தரத்தயாரா? ஹிஹி..

(எத்தனை பேர் இருக்கீங்க.. நான் எப்ப வரைஞ்சு.. எப்ப தந்து.. ஒரே மலைப்பா இருக்குது.!)

நாடோடி இலக்கியன் said...

தமிழ்ப்பறவை மற்றும் செல்வேந்திரனையும் வழிமொழிந்து கொள்கிறேன்.

Romeoboy said...

\\6. துவக்கத்தில் நெருங்கியவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதுபோல தோற்றம் ஏற்படக்கூடும். அது தவிர்க்க இயலாதது. ரசனைக்காரர்கள் அனைவருக்குமே வழங்க விரும்புகிறேன். அது நடக்கும்.//

நடந்தா சரி தல ..

Anonymous said...

//இது சங்கிலித்தொடர் விருதல்ல. வாங்குபவர் மற்றவர்களுக்கு பகிரமுடியாது.//

அப்பாடி , இது தான் ஆறுதலா இருக்கு :)

RAMYA said...

அட இது நம்ம ஆதி வரைஞ்சதா??

இவ்வளவு நாள் இந்த திறமையை எங்கே ஒளிச்சி வச்சிருந்தீங்க???

அபாராமா வரைஞ்சிருக்கீங்க ஆதி
வாழ்த்துக்கள்!

போர்ட்ராய்ட் வரைவைது என்பது அவ்வளவு எளிதல்ல.. நானும் வரைந்திருக்கின்றேன்.. :)

//ஒரே கல்லில் மூன்று மாங்காய் //

இந்த ஐடியா சூப்பர்:)


//
பி.கு :
விருதின் நோக்கத்தை பாராட்டி விருதுக்கமிட்டியாருக்கு யாராவது ஏதும் பணமுடிப்பு வழங்க விருப்பப்பட்டால் மெயிலுக்கு வரவும்.. ஹிஹி.!
//

இதுதான் எப்படி உங்களுக்கு அனுப்பி வைக்கறதுன்னு
யோசிச்சிகிட்டு இருக்கேன்.

அப்புறம் இவ்வளவு அழகாய் :) கார்க்கியை வரைஞ்சிருக்கீங்க
மொதல்ல அவருகிட்டே பணமுடிப்பு கறாராய் வாங்கிடுங்க :))

தராசு said...

தல,

அருமை.

//ரசனைக்காரர்கள் அனைவருக்குமே வழங்க விரும்புகிறேன். அது நடக்கும்//

நம்புறோம்.

தத்துபித்து said...

ennai pola pinnootam (mattum) podaravangalukku ethavathu viruthu unda?
.
anna appadiye intha virudhuku thernthu edutha karanathaiyum ,ungalai kavarnthavatraiyum koorinaal sirappaga irukume...
.

பாலகுமார் said...

வாழ்த்துக்கள் ஆதி, படம் ரொம்ப நல்லா வரைஞ்சிருக்கீங்க....

"புலம்பல்கள் விருது" பெயர் தான் கொஞ்சம் odd ஆ இருக்குற மாதிரி இருக்கு...

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள்

வரைந்தவருக்கும் வாங்கியவருக்கும்.

குசும்பன் said...

//செல்வேந்திரன் said...
October 11, 2009 9:08 PM கார்க்கி முகத்துல லேசா சச்சின் சாயல் இருக்கிற மாதிரி இருக்குல்ல...
//

நல்லவேளை சச்சினுக்கு தமிழ் தெரியாது!

மங்களூர் சிவா said...

நல்ல முயற்சி ஆதி - நல்வாழ்த்துகள்!

3 மாங்கா டெக்னிக் சூப்பர்!

வெங்கிராஜா | Venkiraja said...

ஒரு பதிவர், ஒரு பதிவருக்கு விருது தருவதை விட... ஒரு பத்து கேட்டகரி போட்டு விருது தர்ற மாதிரி ஆச்சுன்னா பெட்டர்.

எம்.எம்.அப்துல்லா said...

படம் படுஜீப்பரு :)

Karthik said...

இதுவும் செமயா இருக்கு.. பின்றீங்க.. :)

Karthik said...

//குசும்பன் said...
ஆதி முன்னாடி ஒரு பொண்ணு படம் போட்டிங்களே அதுமாதிரி கொஞ்சம் ட்ரை செஞ்சு பாருங்களேன் கார்க்கியை:) மாடலாக கார்க்கி நிற்க எப்பவும் ரெடியாம்:)

ROFL.....:))))

வால்பையன் said...

படம் அருமையா இருக்கு!

தொடர்ந்து வரையுங்க