Monday, October 12, 2009

புலம்பல்கள் விருது : பரிசல்காரன்


புலம்பல்கள் விருது -சில விளக்கங்கள் :

1. வலையுலகில் சிறப்பாக இயங்கும் பதிவர்களுக்கு மரியாதை செலுத்த விரும்பி இதை ஏற்படுத்தினேன்.
2. தேர்வு என் சொந்த விருப்பத்தின் பெயரில் செய்யப்படுகிறது. பிற்பாடு இதில் நண்பர்களும் இணையக்கூடும்.
3. இது சங்கிலித்தொடர் விருதல்ல. வாங்குபவர் மற்றவர்களுக்கு பகிரமுடியாது.
4. தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவரின் என்னால் வரையப்பட்ட பென்சில் போர்ட்ரெய்டே விருதாக்கப்படுகிறது.
5. பதிவர்களுக்கு மரியாதை, ஒரு பதிவுக்கான மேட்டர், ஓவியத்திறனை காட்டி பாராட்டுபெற ஒரு வழி என ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிப்பது உள்நோக்கம்.
6. துவக்கத்தில் நெருங்கியவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதுபோல தோற்றம் ஏற்படக்கூடும். அது தவிர்க்க இயலாதது. ரசனைக்காரர்கள் அனைவருக்குமே வழங்க விரும்புகிறேன். அது நடக்கும்.
7. முதலில் பெறுபவர் முதல்வர் என்பது அர்த்தமல்ல. வரிசை ரேண்டம் தேர்வாகும்.
8. சிறிது உழைப்பைக் கேட்கும் செயல் என்பதால் வாரம் ஒன்று வழங்க விருப்பமிருந்தாலும் மாதம் ஒன்றாவது வழங்குவேன் என நம்புகிறேன்.
9. விருதுபெற்றவர் விருப்பமிருந்தால் போர்ட்ரெய்டின் ஒரிஜினலை நேரிலோ, அஞ்சலிலோ பெற்றுக்கொள்ளலாம்.
10. விருதுபெற்றவருக்கு 'புலம்பல்களி'ன் வாழ்த்துகள்.! துணைநிற்கும் அனைவருக்கும் நன்றி.!

பி.கு :
உடல்நலம், சூழ்நலம் கொஞ்சம் தகராறு செய்துகொண்டிருப்பதால் பதிவெழுத ஒருமாதம் விடுமுறை விட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது முன்னேற்பாடு செய்யப்பட்ட பதிவுகளென்பதால் கணக்கில் வராது. ஹிஹி.!
.

27 comments:

Anonymous said...

//5. பதிவர்களுக்கு மரியாதை, ஒரு பதிவுக்கான மேட்டர், ஓவியத்திறனை காட்டி பாராட்டுபெற ஒரு வழி என ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிப்பது உள்நோக்கம்.//

இப்பப்புரிஞ்சிச்சு. பரிசலுக்கு வாழ்த்துக்கள்

தராசு said...

பரிசலுக்கு வாழ்த்துக்கள்,

உடம்புக்கு என்னாச்சு தலைவா????

ராமலக்ஷ்மி said...

இந்தப் படமும் அருமை. வாழ்த்துக்கள் பரிசல்.

உடல் நலம் பெற உங்களுக்கும் வாழ்த்துக்கள் தாமிரா!

குசும்பன் said...

யோவ் ஆதி பேச்சு பேச்சா இருக்கனும்

//8. சிறிது உழைப்பைக் கேட்கும் செயல் என்பதால் வாரம் ஒன்று வழங்க விருப்பமிருந்தாலும் மாதம் ஒன்றாவது வழங்குவேன் என நம்புகிறேன்.//

குசும்பன் said...

ஆமாம் பரிசல் எங்க அண்டார்டிக்காவில் இருக்கிறாரா?

நர்சிம் said...

பரிசலுக்கும் கார்க்கிக்கும் வாழ்த்துகள்.

உங்களுக்கு நன்றிகள் பதிவுலகின் சார்பில்.

Achilles/அக்கிலீஸ் said...

பரிசலுக்கு வாழ்த்துக்கள்... :))

இனி உங்களின் பதிவுக்கு ஒரு மாதம் காத்திருக்க வேண்டுமா?? :(( உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் அண்ணா..

தமிழ்ப்பறவை said...

அடுத்த அசத்தல் ஓவியம்...
நல்லா இருக்கு ஆதி...

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்லாருக்கு உங்க ஓவியம். இதை விட பெரிய பாராட்டு என்னவாக இருக்க முடியும்..

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள் பரிசலுக்கு

பாராட்டுக்கள் உங்களுக்கு

அப்பாவி முரு said...

//உடல்நலம், சூழ்நலம் கொஞ்சம் தகராறு செய்துகொண்டிருப்பதால் //

???

வெண்பூ said...

பரிசலுக்கு வாழ்த்துகள்.. பதிவுலகத்தை அடுத்த கட்டத்துக்கு நல்ல முறையில் நகர்த்துவதற்கு பாராட்டுகள். :)

ஸ்ரீமதி said...

//நர்சிம் said...
பரிசலுக்கும் கார்க்கிக்கும் வாழ்த்துகள்.

உங்களுக்கு நன்றிகள் பதிவுலகின் சார்பில்.//

ரிப்பீட்டு.. :)))

RAMYA said...

இந்தப் படமும் அருமை.

வாழ்த்துக்கள் பரிசல்!

விரைவில் உடல் நலம் பெற்று
விரைவில் பதிவெழுத வரவும்!

அடுத்து யாருக்கு என்று மிகவும்
ஆவலுடன் காத்திருக்கிறேன்!!

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்த்துகள் :)

Truth said...

உடம்ப பாத்துக்கோங்க ஆதி அண்ணே! விரைவில் ஃபார்முக்கு வாங்க.

Karthik said...

கலக்கலா இருக்கு.. :)

பரிசல்காரன் said...

என்னென்னவோ செய்திகள் வந்து மனதை அலைகழித்துக் கொண்டிருந்தாலும், உன்னைப் போன்ற பலரின் அன்பு எல்லாரையும் செலுத்தும்.

மிக அவசியமான நேரத்தில் இந்த யோசனை உதித்ததற்கு நன்றி நண்பா.

இந்த ஓவியம் வரைய நீ எடுத்துக் கொண்ட நேரம் முழுதும் என் நினைவு உனக்குள் இருந்திருக்கும் என்ற எண்ணத்தைவிட இப்போது என்னை நெகிழ்ச்சியுறச் செய்வது வேறெதுவும் இல்லை.

அன்புக்கு... அன்புதான். வேறென்ன!

கார்க்கி said...

//அன்புக்கு... அன்புதான். வேறென்ன//

நல்ல வேளை.. ஓவியத்துக்கு ஓவியம்தான் களத்தில் இறங்காமல் போன பரிசல் வாழ்க..

ஆதி, ஒரு சின்ன சஜெஷன்.. என்னைப் போன்றவரக்ளின் படத்தை எப்படி வரைந்தாலும் அழகாய்த்தான் வரும்.. பரிசல் மாதிரி ஆட்களை தேர்ந்தெடுக்குமுன் யோசிங்க.. எப்படி வரைந்தாலும் நல்லா இல்லைன்னு தோணும். அது பரிசல் பிரச்சினை..

வெண்பூ said...

//
ஒரு சின்ன சஜெஷன்.. என்னைப் போன்றவரக்ளின் படத்தை எப்படி வரைந்தாலும் அழகாய்த்தான் வரும்..
//

நாராயணா, இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா... யாராவது இதை மருந்தடிச்சி கொல்லுங்கடா.. :)))

சுசி said...

சீக்கிரம் உடல்நிலை சீராகட்டும்.

வித்யாசமான முயற்சி. சிறப்பான விருது.

கார்க்கி, பரிசலுக்கும் வரைந்து வழங்கிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

செல்வேந்திரன் said...

பரிசலை இதற்கு மேல் இளமையாகக் காட்ட முடியாது...

துபாய் ராஜா said...

சுவர் நன்றாக இருந்தால்தான் இன்னும் பல சித்திரங்கள் வரையமுடியும்... உடல்நலமே முக்கியம். ஆண்டுகள் பல கழித்துவந்தாலும் அன்பு நண்பர்கள் எப்போதும் உங்களுடனே இருப்பர்..

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஷெட்யூல் செய்யப்பட்ட அடுத்த விருது நாளை வெளியாகும். தொடர்ந்து சில வாரங்கள் கழித்து சந்திக்கிறேன்.. புதிய பதிவுகளுடனும், அடுத்த கட்ட விருதுகளுடனும்.!

தற்காலிக பை..பை..! வணக்கம்.!

அன்புமிகுந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.!

அ.மு.செய்யது said...

தொடர்க !!!!

செந்தில் நாதன் said...

உடம்ப பார்த்துக்க ராசா..இன்னும் 1000 பேருக்கு பரிசு தர வேணாமா? (அட 1000 பேருக்கு குடுத்தா என் பெயரும் வந்துரும்ல... ஹி ஹி)

ரசிக்கும் சீமாட்டி said...

//ரசனைக்காரர்கள் அனைவருக்குமே வழங்க விரும்புகிறேன். அது நடக்கும்.//

எனக்கு உண்டா??!!!