Monday, October 26, 2009

ஒரு சிறுகதையும்.. நான் ஸ்டிக் தவாவும்..

ஹாய்..

கொஞ்சம் உடல் நலம் சரியில்லாததால் மல்லாக்க படுத்துக்கொண்டு புத்தகத்தை கூட தூக்கி படிக்கமுடியாமல் விட்டத்தை பார்த்துக்கொண்டிருந்ததில் நான்கு நாட்கள் காலியானது. பின்னர் அலுவலகத்தில் நான்கு இன்ச் இடைவெளியில் நின்றுகொண்டு நான்கு பேர் நான்கு திசையிலும் இழுத்துக்கொண்டிருந்ததில் வேலை பார்த்தேனோ இல்லையோ நாட்கள் உருண்டன. வீட்டில் கதை புதுமையாக ஒன்றுமில்லையாயினும் தலை மேல் அமர்ந்துகொண்டு பிறாண்டிக்கொண்டிருக்கும் எஃபெக்டை ரமாவால் எந்நேரமும் தந்துகொண்டிருக்க முடியும் என்பதை அறிவீர்கள் ஆயினும் அதே அனுபவத்தை வெறும் எஃபெக்டாக இல்லாமல் நிஜமாகவே சுபா தந்துகொண்டிருப்பதாலும் மற்றும் சரியாக 10 வருட இந்த சென்னை வாழ்க்கையில் முதல் சென்னைத் தீபாவளியை பெற்றோருடன் கொண்டாடிக்களித்ததாலும் வலைக்கடையை சிறிது நாட்கள் சார்த்தியிருக்க நேர்ந்தது.! ஆனாலும், ஓவரா ரெஸ்ட் எடுத்தா ஒடம்புக்கு ஆவாதுன்னு.. இதோ வந்துவிட்டேன். (ஆமா, இவ்வளவு நீளமாக விளக்கிக்கொண்டிருக்கிறேனே.. யாராவது என்னை தேடினீர்கள்தானே?)

மற்றபடி ஓரிரு வருடங்கள் இயங்கிவிட்டு போரடித்து ஓடிவிடுபவர்கள் வரிசையில் என்னையும் யாராவது எண்ணியிருந்தீர்கள் எனின்.. ஸாரி, எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வளவு சீக்கிரமாய் ஓடிவிடுவதாக ஐடியா இல்லை, மேலும் பல திட்டங்கள் வேறு இருக்கின்றன. அப்புறம் இன்னொரு கோணத்தில் பார்த்தால் மேற்குறித்தவை போன்ற பல பிரச்சினைகளிலிருந்தும் தப்பி மகிழ்ந்திருக்க வலைதானே சரியான மாற்றாக இருக்கமுடியும்.?

இனி வழக்கமான வழக்கமாய் வாரம் நான்கென பதிவுகள் தொடரும்.

***************

வெளியான சிறுகதைக்கு சன்மானமாக அந்த பிரபல பத்திரிகையில் இருந்து வந்திருந்த செக்கை பத்திரமாக வைத்திருந்தேன். தீபாவளிக்குச் சென்னை வந்திருந்த அம்மாவிடம் கொஞ்சம் பெருமையுடன் ஆசையாக காட்டியபோது அம்மா இப்படிச்சொன்னார், "ஒரு நான்ஸ்டிக் தவா வாங்கக்கூட பத்தாது போலருக்கே..!"

களுக்கென சிரித்த ரமாவை கொஞ்சம் கடுப்பாக திரும்பிப்பார்த்தேன். செக் வந்த போது அவர் சொன்ன அதே வார்த்தைகளின் ரிப்பீட்டுதான் அம்மா சொன்னதும்.

***************

காய்ச்சலில் படுத்திருந்த துவக்க நாளில் மருத்துவரைக் காணச்சென்றபோது செக்கிங் முடிந்து மருந்துமாத்திரைகள் எழுதித்தந்துவிட்டு பின்வருமாறு கூறினார் மருத்துவர்,

"சாதாரண வைரல் ஃபீவர்தான். இந்த டேப்லட்ஸ் எடுத்துக்குங்க.."

"டயட்.." என்று இழுத்தேன்.

"வெந்நீரில் ஒரு நாளைக்கு மூணு வாட்டி பல்லு தேய்ங்க.. நாலு வாட்டி உப்பு போட்டு வாய்கொப்பளிங்க.. மணிக்கொருவாட்டி எலக்ட்ரால் குடிங்க.. ஜாம் இல்லாமல் ப்ரெட் சாப்பிடுங்க.. ரஸ்க் சாப்பிடுங்க.. ரைஸ் வடிச்ச தண்ணி குடிங்க.. ஓட்ஸ் கஞ்சி குடிங்க.." என்று சொல்லிக்கொண்டே போனார்.

இப்படியெல்லாம் டயட் பண்ணினால் நம் உடம்பு குணமாகுமா இல்லையா என்பதெல்லாம் வேறு விஷயம், ஆனால் இதற்குக் காரணமான வைரஸ்கள் மட்டும் 'இவனிடம் இருப்பதை விடவும் எங்கேயாவது போய்த்தொலையலாம்' என்று முடிவு செய்துகொண்டு ஓடிப்போய்விடும் என்பது மட்டும் நிச்சயம்.

***************

Mr.Bean உங்களுக்குப்பிடிக்குமா?

நான் ரோவன் அட்கின்சனின் ரசிகன். சும்மாவே அவரது நடிப்பும் முகபாவங்களும் அள்ளிக்கொண்டு செல்லும். அந்த அழகில் ஜேம்ஸ்பாண்ட் மாதிரி அவர் ஒரு சீக்ரெட் ஏஜெண்டாக இருந்தால் எப்படியிருக்கும்? ஒரு பார்ட்டியில் அவர் துப்பறியும் அழகும், ஆக்ஷன் காட்சிகளும், கையில் மதுக்கோப்பையை பிடிக்கும் லட்சணமும்... JOHNNY ENGLISH சமீபத்தில்தான் பார்க்க நேர்ந்தது.. ரசனை.!

***************

நேற்று ரமா மற்றும் சுபாவுடன் தாம்பரம் வித்யாவில் ஆதவன். இந்த நான்கு வருடத்தில் நாங்கள் ஜோடியாக பார்க்கும் நான்காவது படம். இரண்டு வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் சுபாவுக்கு இது முதலோ முதல் படம். சுபா எங்கே படுத்திவிடுவானோ என்று பயந்துகொண்டே போனோம். நாங்கள் பயந்ததுபோலல்லாமல் சுபா ஒழுங்காக படம் பார்க்க படம்தான் படுத்திவிட்டது. சரி விடுங்க..

சூர்யாவின் அறிமுகம் மற்றும் பாடலில் ஓவர் பில்டப் உடம்புக்காவாது என்று தோன்றியது. ஆரம்ப 5 நிமிட ஃபாரின் காட்சிகள், சேஸிங், பிளாஷ்பேக் குட்டி சூர்யா, இன்னும் பல விஷயங்களை பார்த்த போது கே.எஸ். ரவிக்குமார் தசாவதாரத்தில் நல்ல டிரெயினிங் எடுத்துக்கொண்டிருக்கிறார் என்பது புரிகிறது. குட்டி சூர்யாவில் பர்ஃபெக்ஷன் கொஞ்சம் குறைவென்றாலும் இது போன்ற முயற்சிகள் கண்டிப்பாக பாராட்டப்படவேண்டியவை. ஒரு துவக்கம்தான்.. பல வளர்ச்சிகளுக்கு வழிகாட்டியாக இருக்கும்.

இரண்டு நிமிடங்கள் என்றாலும் கிளைமாக்ஸில் ரெட்ஜெயண்டைப் பார்த்தபோது நன்றாகத்தானிருந்தது. விரைவில் முழுநீளமாய் காணக்கூடிய வாய்ப்பிருக்கிறது. மற்றவங்கள்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையப்போவ்..

***************

சமீபத்தில் அழகியதொரு ஆண்குழந்தைக்கு த‌ந்தையாகியிருக்கும் நண்பர் குசும்பனுக்கும், இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கும் நண்பர் கடையம் ஆனந்துக்கும்.. மனமார்ந்த வாழ்த்துகள்.!

.

40 comments:

அனுஜன்யா said...

Welcome back.

பிரபாகர் said...

வாங்க ஆதி.. கலக்குங்க... காத்திருக்கிறோம்.

பிரபாகர்.

Mahesh said...

வருக ! வருக !! நல்வரவு !!!

தராசு said...

Welcome back

//அவர் சொன்ன அதே வார்த்தைகளின் ரிப்பீட்டுதான் அம்மா சொன்னதும்.//

ஆமா, ரிப்பீட்டேய்

Anonymous said...

நான்ஸ்டிக் கமெண்ட் :)

ரோவன் அட்கின்ஸன் அற்புதமான நடிகர். ப்ளாக்கடர் கிடச்சாலும் பாருங்க. ஆக்ஷன் படம் பாத்து சலிச்ச கண்களுக்கு இவர் ஒரு வரம்.

தராசு said...

//"ஒரு சிறுகதையும்.. நான் ஸ்டிக் தவாவும்.."//

என்னது நீங்க ஸ்டிக் தவா ஆயிட்டீங்களா,

ஹி, ஹி, எப்பூடி

துளசி கோபால் said...

மீண்டு(ம்) வந்ததுக்கு இனிய வாழ்த்து(க்)கள்.

கதிர் - ஈரோடு said...

//இதற்குக் காரணமான வைரஸ்கள் மட்டும் 'இவனிடம் இருப்பதை விடவும் எங்கேயாவது போய்த்தொலையலாம்' //

இது சரி...

அ.மு.செய்யது said...

welcome back !!!

நீண்ட இடைவெளிக்கு பிறகு,அதிரடியாய் ஆரம்பிப்பீர்கள் என எதிர்பார்த்தேன்....கேப்ல லைட்டா அவுட்
ஆஃப் ஃபார்ம் ஆன மாதிரி இருக்கு..!!

சீக்கிரமா பாரத்துக்கு வாங்க !!!

அபி அப்பா said...

வாங்க வாங்க நல்லா பாஃர்ம்ல தான் வந்திருக்கீங்க! வந்து கலக்குங்க!!

ராமலக்ஷ்மி said...

வருக வருக தாமிரா.

//நான் ஸ்டிக் தவா//

பள்ளி வகுப்பில் எதையாவது நாம சிறப்பாகச் செய்கையில் ஆசிரியர் சாக்லேட் கொடுத்துப் பாராட்டுவார் இல்லையா:), அப்படியான இனிய சந்தோஷம்தான் இந்த சன்மானங்கள் நமக்கு! புரியுமா இது மற்றவருக்கு:)?

ஸ்ரீமதி said...

வெல்கம் பேக் அண்ணா.

இப்போ எப்படி இருக்கீங்க?

//இனி வழக்கமான வழக்கமாய் வாரம் நான்கென பதிவுகள் தொடரும்.//

நன்று :))

// "ஒரு நான்ஸ்டிக் தவா வாங்கக்கூட பத்தாது போலருக்கே..!"//

அம்மாவுக்கும், அண்ணிக்கும் சண்டையே வராது போல உங்க விஷயத்துல. ;))

pappu said...

சென்னைக்கு வந்தப்ப நானே வித்யால நாலு படம் பாத்திருக்கேன். நீங்க தாம்பரமா?

Cable Sankar said...

பரவாயில்லை.. எனக்கு ரெண்டு செக் வந்து ஒரு மாச செல் பில்லை கட்டிட்டேன்..:)

Rishi said...

how are you now? hope ur doing good and fine.

Welcome BACK

ஆதிமூலகிருஷ்ணன் said...

மொத கமெண்ட் போட்டுக்கீற.. வணக்கம் அண்ணாத்தே.. கட கல்லா கட்டல அப்பால வெச்சிக்கிறன் உன்னிய.!

நன்றி பிரபாகர், மகேஷ்.!

எப்பிடிக்கீற தராசண்ணே.?

நீங்களும் ரோவன் ஃபேனா அம்மிணி.?

நன்றி துளசி, கதிர்.!

டாய் தம்பி, முத நாளே சரக்கு பத்தாதுன்னு கலாய்க்கிறியா.. இருடி.!

வாங்க சீனியர்ஸ் அபிஅப்பா, ராமலக்ஷ்மி.!

ரோஸ்விக் said...

//வெளியான சிறுகதைக்கு சன்மானமாக அந்த பிரபல பத்திரிகையில் இருந்து வந்திருந்த செக்கை பத்திரமாக வைத்திருந்தேன். தீபாவளிக்குச் சென்னை வந்திருந்த அம்மாவிடம் கொஞ்சம் பெருமையுடன் ஆசையாக காட்டியபோது அம்மா இப்படிச்சொன்னார், "ஒரு நான்ஸ்டிக் தவா வாங்கக்கூட பத்தாது போலருக்கே..!"//

என்னத்த சொல்ல....உஷாரா இருங்க அண்ணேன்...அம்மாவும், மனைவியும் கூட்டணி வச்சிருக்காங்க போல..


http://thisaikaati.blogspot.com

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி திருமதி.!

நன்றி பப்பு.! (ஆமா)

நன்றி கேபிள்.! (பெரிய்ய அமவுண்டுதான் போல..)

நன்றி ரிஷி.!

நன்ற்றி ரோஸ்விக்.!

Karthik said...

welcome back!! :)

//Mr.Bean உங்களுக்குப்பிடிக்குமா?
நான் ரோவன் அட்கின்சனின் ரசிகன்.

me too...:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

(ஆமா, இவ்வளவு நீளமாக விளக்கிக்கொண்டிருக்கிறேனே.. யாராவது என்னை தேடினீர்கள்தானே?)

யெஸ் பாஸ்

தவா :)))))))))))

நாடோடி இலக்கியன் said...

//'இவனிடம் இருப்பதை விடவும் எங்கேயாவது போய்த்தொலையலாம்' என்று முடிவு செய்துகொண்டு ஓடிப்போய்விடும் என்பது மட்டும் நிச்சயம்//

//சுபா ஒழுங்காக படம் பார்க்க படம்தான் படுத்திவிட்டது//

ஆதி பிராண்ட் ஹா ஹா.

விக்னேஷ்வரி said...

ஆமா, இவ்வளவு நீளமாக விளக்கிக்கொண்டிருக்கிறேனே.. யாராவது என்னை தேடினீர்கள்தானே? //

ஹாஹாஹா...

செக் வந்த போது அவர் சொன்ன அதே வார்த்தைகளின் ரிப்பீட்டுதான் அம்மா சொன்னதும். //

இந்த விஷயத்திலாவது மாமியார், மருமகள் ஒத்துப் போவதை எண்ணி சந்தோஷப்படுங்க.

'இவனிடம் இருப்பதை விடவும் எங்கேயாவது போய்த்தொலையலாம்' என்று முடிவு செய்துகொண்டு ஓடிப்போய்விடும் என்பது மட்டும் நிச்சயம். //

சரிதான்.

Mr.Bean உங்களுக்குப்பிடிக்குமா? //

யாருக்குத் தான் பிடிக்காது...

ஆதவன் பார்த்தாச்சா.... ரைட்டு.

கார்க்கி said...

வாங்க வாங்க.. வாங்கறதுக்கு வாங்க..

ஆதவன் கடைசி 15 நிமிஷம் பத்தி எதுவும் சொல்லலையே!!!

யாசவி said...

looks sujatha style especially on fever bits.

:)

As usual good hasyam

அப்பாவி முரு said...

காய்ச்சலா இருந்து வந்தீங்களா?

சந்தோசம்...

:)

புதுகைத் தென்றல் said...

இவ்வளவு நீளமாக விளக்கிக்கொண்டிருக்கிறேனே.. யாராவது என்னை தேடினீர்கள்தானே?)

நான் தேடினேன் ஃப்ரெண்ட். நம்ம கார்பரேட் கம்பர்கிட்ட கூட விசாரிச்சேன். கடைக்கு லீவு விட்டிருக்கீங்கன்னு சொன்னார்.

:))

நர்சிம் said...

வருக..வருக..

☼ வெயிலான் said...

ம்... காய்ச்சல் வந்திட்டுப் போய்டுச்சு.
இந்த வருச தீபாவளி சென்னையில.
செக் வந்திருச்சு. சூர்யா பார்த்தாச்சு.

ஆதி வலைக்கடை தொறந்தாச்சு :)

Indian said...

welcome back.
Howz your health?

SanjaiGandhi said...

//அம்மா இப்படிச்சொன்னார், "ஒரு நான்ஸ்டிக் தவா வாங்கக்கூட பத்தாது போலருக்கே..!"//

:))

உடல் நலமா இப்போ?. நலன் விசாரிப்புக் கூட வலையில் தான்.. நல்லதில்லை.. எனக்கு இப்போது தான் தெரியும். உங்க செட் யாரும் சொல்லலை.. கவனிச்சிக்கிறேன் அவங்கள..

மிஸ்டர் பீன் யாருக்காச்சும் பிடிக்காமல் இருக்குமா என்ன?

KVR said...

//யாராவது என்னை தேடினீர்கள்தானே?//

அலுவலக வேலையா இருப்பிங்கன்னு நினைச்சோம் (ஹிஹி நான் மட்டும் தான்), உடல்நலம் :-( - இப்போ தேவலை தானே?

// "ஒரு நான்ஸ்டிக் தவா வாங்கக்கூட பத்தாது போலருக்கே..!"//

இலக்கியவாதியின் வாழ்க்கைப்பாதையிலே இதெல்லாம் ஜகஜம் :-)

நாஞ்சில் நாதம் said...

வெல்கம் பேக் தல.

//காய்ச்சலில் படுத்திருந்த துவக்க நாளில் மருத்துவரைக் காணச்சென்றபோது //

உங்களுக்குமா? கூட்டு சேந்து திருட்டு வேலை செயப்பிடாது.

//இவனிடம் இருப்பதை விடவும் எங்கேயாவது போய்த்தொலையலாம்' என்று முடிவு செய்துகொண்டு ஓடிப்போய்விடும் என்பது மட்டும் நிச்சயம்//

ஹாஹாஹா...

கும்க்கி said...

மீண்டு(ம்) வருக..

அடிக்கடி யோசிச்சதுண்டு...ஆளைக்காணோமே என்று..

Truth said...

ம்ம், கேள்விப் பட்டேன், கொஞ்ச நாள் ரெஸ்டல இருக்கப் போறீங்க, யாரும் உங்களை தேடக் கூடாதுன்னு, ஆனா உடம்பு நலம் இல்லைன்னு தெரியாது. இப்போ எப்படி இருக்கீங்க?

btw, என்ன சிறுகதை அது வெளியானது?

//இவனிடம் இருப்பதை விடவும் எங்கேயாவது போய்த்தொலையலாம்' என்று முடிவு செய்துகொண்டு ஓடிப்போய்விடும் என்பது மட்டும் நிச்சயம்.

இன்னும் சிரித்துக் கொண்டே தான் இருக்கிறேன், உங்களோட டச் சார் இது.

Mr Bean மிஸ்டர் பீன்-ஆக நடித்தது மொத்தம் இடண்டு படங்கள் தான்.
முதல் படம் - The Ultimate Disaster Movie
இரண்டாவ்து படம் - Mr Bean Holidays.
இது தான் அவருடைய கடைசி படம்.

இனி படத்தில் நடிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்துவிட்டார் என்று கேள்விப் பட்டேன். ஒரு வருடத்திற்கு முன் ஒரு மேடை நாடகத்தில் நடித்தார். பார்க்க முடியவில்லை. டிக்கெட் கொஞ்சம் பர்ஸ பதம் பார்க்கிற மாதிரி இருந்தது.

அவரின் கார்டூன் கூட நான் அனைத்தும் பார்த்து இருக்கிறேன். :-)

ஆதவன் படம் பார்க்க ஏனோ இன்னும் மூட் வரவில்லை. பேராணமை பார்த்தேன். நல்லா இருந்தது.

அத்திரி said...

அண்ணே உடம்பை பாத்துக்குங்க..அப்புறம் சுபாவை கேட்டதா சொல்லுங்க

valipokkan said...

gud one again. i visited every 2days. welcome. all these days i was reading kusumban's

Romeoboy said...

சுய புலம்பல்கள் போல ??

அறிவிலி said...

உடல் மற்றும் சூழ் நலம் சரியாகிவிட்டதா? வெல்கம் பேக்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி கார்த்திக்.!

நன்றி அமித்துஅம்மா.! (தேடுனதுக்கு சாட்சி இருக்கா? கீழ புதுகைத்தென்றல பாத்தீங்கள்ல..)

நன்றி இலக்கியன்.!

நன்றி விக்னேஷ்வரி.!

நன்றி கார்க்கி.! (எதைச்சொல்றன்னு தெரியலையே)

நன்றி யாசவி.! (சுஜாதாவா? ஏன் இந்த கொலவெறி? யாராவது கும்மிரப்போறாங்க)

நன்றி முரு.! (அதுல உமக்கு என்னையா சந்தோஷம்)

நன்றி தென்றல்.! (அதானே.. அந்த பயம் இருக்கட்டும்)

நன்றி நர்சிம்.!

நன்றி வெயிலான்.!

நன்றி இண்டியன்.!

நன்றி சஞ்சய்.! (டிசம்பரில் கோவை விசிட் இருக்கிறது. இப்போதே வரவேற்க தயாராகவும்)

நன்றி கேவிஆர்.! (இலக்கியவாதி?? அதானே.!)

நன்றி நாஞ்சில்.!

நன்றி கும்க்கி.!

நன்றி ட்ரூத்.!

நன்றி அத்திரி.!

நன்றி வழிப்போக்கன்.!

நன்றி ரோமியோ.!

நன்றி அறிவிலி.!

துபாய் ராஜா said...

நல்லா அடிச்சு ஆடுங்க...

நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...