Wednesday, October 28, 2009

ஒரு முன்னிரவுப்பொழுதும் அருகே ஓர் இளம்பெண்ணும்..

எதிர்பாராத தருணங்களை அற்புதக் கணங்களாக்கும் மாயத்தை இந்த வாழ்க்கை வழிநெடுக செய்துகொண்டேதான் இருக்கிறது. அந்த மொட்டை மாடியின் விளிம்புச்சுவரில் சாய்ந்து நின்றுகொண்டிருக்கும் அவ‌னுக்கு 23 வ‌ய‌து இருக்கலாம். நில‌வு இவ்வ‌ள‌வு வெளிச்ச‌மாக‌வும் கூட‌ இருக்குமா? இந்த‌ வெளிச்ச‌த்தில் த‌டையின்றி புத்த‌கம் வாசிக்க‌லாம் போல‌ இருக்கிற‌தே? இந்த‌ ம‌ய‌க்கும் ம‌ண‌ம் எங்கிருந்து வ‌ருகிற‌து?

அவ‌ள் சாப்பிடக் கீழே போக‌லாம் என்று அவ‌னை அழைத்த‌போது மெலிதாக‌ ம‌றுத்தான். கொஞ்ச‌ம் நேர‌ம் ஆக‌ட்டும். அவ‌னுக்குப் ப‌சியில்லை.. இர‌வு முழுதும் இப்ப‌டியே இருந்துவிட்டாலும் கூட‌ அவ‌னுக்கு ப‌சியெடுக்குமா என்ப‌து ச‌ந்தேக‌மே. இன்னொரு விதத்தில் இந்த மகிழ்ச்சியை இழக்க அவனுக்கு மனமில்லை. இந்த குளிர்ந்த இரவில், தென்றல் தீண்டியதால் அலைபாயும் கூந்தலுடன் அவனருகே இருக்கும் அவளுடன் கழியும் இந்த பொழுதை, கீழே சென்றால் மீண்டும் தொடர இயலாமல் போகலாம். உண்மையில் அவ‌ளுக்கும் ப‌சியில்லை. அவ‌னுட‌ன் மிக‌ மெலிதாக கிசுகிசுப்பாக பேசிக்கொண்டிருக்கும் இந்த‌ நேர‌த்தின் அரிய‌ த‌ன்மையை அறிந்திருந்தாள்.

மேக‌ங்க‌ளே இல்லாத‌ வான‌ம். என்ன‌ இன்று இந்த‌ முழு நிலா இவ்வ‌ள‌வு பெரிதாக‌ இருக்கிற‌து? இவ‌ள் இந்த நிலவொளியில் நின்று கொண்டிருக்கும் இந்த‌க் காட்சியை ஓவியமாக வ‌ரையும‌ள‌வில் ந‌ம‌க்கு திற‌னிருக்கிற‌தா என்று அவனுள் ஒரு எண்ண‌ம் வ‌ந்து சென்ற‌து. தொட்டுக்கொள்ள‌முடியாத‌ இடைவெளி அவ‌ர்க‌ளுக்கிடையே இருந்த‌து. ஆனால் மெலிதாக‌ பேசிக்கொள்வது தெளிவாக கேட்கும் இடைவெளியாக அது இருந்த‌து.

அவ‌ளுக்கு 20 வ‌ய‌து நிர‌ம்பியிருக்கலாம். அரிதாக‌ இன்று இந்த‌ நீல‌நிற‌ தாவ‌ணியை அணிந்திருக்கிறாள். இவ‌ன் வ‌ந்திருப்ப‌தால் கூட‌ இருக்க‌லாம். மாலையில் வ‌ந்த‌வ‌ன் இன்று இர‌வு இங்கேயே த‌ங்க‌ நேரிடும் என்று அவ‌னும் நினைத்திருக்க‌வில்லை. அவ‌ளும் நினைத்திருக்க‌வில்லை. அவ‌ள‌து தாவ‌ணியின் நிற‌ம் இந்த‌ இர‌வோடு க‌ல‌ந்திருந்த‌து. க‌றுப்பு வெள்ளை ஓவிய‌ம் போல‌ இருந்தாள். அந்த‌ச்சூழ‌லிலேயே எந்த‌ வ‌ண்ண‌ங்க‌ளும் க‌வ‌ன‌ம் க‌லைப்ப‌தைப்போல‌ இல்லாதிருந்த‌தை உண‌ர்ந்தான். நிமிட‌ங்க‌ளாக‌ மௌன‌ம் நில‌விக்கொண்டிருந்த‌து. க‌டைசியாக‌ என்ன‌ பேசினாள்? அவ‌ன் கைக‌ளை மார்புக்குக் குறுக்காக‌ இறுக்கிக்க‌ட்டிக்கொண்டு பெருமூச்சொன்றை வெளிப்ப‌டுத்தினான். என்ன‌ என்ப‌தைப்போல‌ அவ‌ள் அவ‌னைப் பார்த்தாள். அவ‌ள் க‌ண்க‌ள் ப‌ளப‌ள‌வென‌ மின்னுகிற‌து. அந்த‌க்க‌ண்க‌ளில் குறிப்பு எதுவும் உள்ள‌தா?

இப்படியே இவனை இறுக்கி அணைத்து ஒரு முத்தம் தந்தாலென்ன? ஏன் இவ‌ன் மீது என‌க்கு இந்த‌ ஈர்ப்பு? அவ‌ளுக்குள்ளும் இவ‌ன் ம‌ன‌தின் அதே எண்ண‌ங்க‌ளே ஓடிக்கொண்டிருந்த‌து. எது இவ‌ன்பால் என்னை ம‌ய‌க்கி இழுக்கிற‌து. புரிய‌வில்லை அவ‌ளுக்கு. யுக‌ம் தோறும் ஆணும் பெண்ணும் ஒருவ‌ரையொருவ‌ர் உள்வாங்கிக்கொள்ள‌ விழையும் அதே உண‌ர்வுதானா? ப‌ல்கிப்பெருக‌ விதிக்க‌ப்ப‌ட்ட‌ அதே பார்வையைத்தான் இவ‌ன் மேல் நானும், என் மீது அவ‌னும் வீசிக்கொண்டிருக்கிறோமா? அப்ப‌டியெனில் இது ஏன் இன்னொருவ‌ன் மீது எனக்குத் தோன்ற‌வில்லை? ச‌மூக‌ ஒழுக்க‌ங்க‌ள் என்ற‌ மாயையில் ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌தால் நான் செய்த‌ தேர்வா இவ‌ன் என‌க்கு? இவ்வளவில்தானா இந்த உறவு? ம்ஹூம்.. ச‌மாதான‌மாக‌வில்லை அவ‌ள் ம‌ன‌து.

'சாப்பிட‌ப்போக‌லாம் பாஸ்கர்' என்றபடி அவள் அவ‌ன் கைக‌ளைப் ப‌ற்றினாள்.

.

29 comments:

ஆதிமூலகிருஷ்ணன் said...

நேரமின்மையால் எனக்குப்பிடித்த என் முந்தைய பதிவுகளில் ஒன்றான இந்த இளம்பெண்னை மீள்பதிவு செய்கிறேன். நன்றி.

ஆயில்யன் said...

23 வயது இளைஞனின் மனதில் தோன்றும் புரிபடா கேள்விகள் பெண்ணின் மனதில் தோன்றும் கேள்விகளும் சுவாரஸ்யம் !

:)

ஸ்ரீமதி said...

ஏற்கனவே படித்திருப்பினும் மறுமுறை படிப்பதிலும் சுவாரஸ்யம்.. :))

அப்பாவி முரு said...

//நேரமின்மையால் எனக்குப்பிடித்த என் முந்தைய பதிவுகளில் ஒன்றான இந்த இளம்பெண்னை மீள்பதிவு செய்கிறேன். நன்றி.//

நேரமின்மையால், வாக்களித்துவிட்டு நானும் கிளம்புகிறேன். நன்றி.

கார்க்கி said...

//ஏற்கனவே படித்திருப்பினும் மறுமுறை படிப்பதிலும் சுவாரஸ்யம்.. :))

மீண்டும் அதே பொய்........:)))

கதிர் - ஈரோடு said...

முதல்முறை வாசிக்கிறேன்


தலைப்பே ஒரு கவிதைபோல்
........நன்றாக இருக்கிறது ஆதி

நர்சிம் said...

6,4,

அமிர்தவர்ஷினி அம்மா said...

மீண்டும் படித்தாலும் அலுக்கவில்லை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆயில்யன் said...
23 வயது இளைஞனின் மனதில் தோன்றும் புரிபடா கேள்விகள் பெண்ணின் மனதில் தோன்றும் கேள்விகளும் சுவாரஸ்யம் !

:) //

ஆயில்ஸ் பாஸ்,
அது 23 வயது இளைஞனுக்கு, நீங்க ஏன் பாஸ் ஸ்மைலி போட்டு வெச்சிருக்கீங்க.

மா.குருபரன் said...

//மேக‌ங்க‌ளே இல்லாத‌ வான‌ம்......

தொட்டுக்கொள்ள‌முடியாத‌ இடைவெளி அவ‌ர்க‌ளுக்கிடையே இருந்த‌து. ஆனால் மெலிதாக‌ பேசிக்கொள்வது தெளிவாக கேட்கும் இடைவெளியாக அது இருந்த‌து//

நன்றாக உள்ளது.....

க.பாலாசி said...

வர்ணனைகள் மிக அழகாக இருக்கிறது அன்பரே...

தண்டோரா ...... said...

:):):)

அ.மு.செய்யது said...

நான் இப்பத்தாங்க படிக்கிறேன்....

படுரொமான்டிக் !!!

Karthik said...

கலக்கல்.. :)

Karthik said...
This comment has been removed by the author.
மங்களூர் சிவா said...

முதல்முறை வாசிக்கிறேன்
நன்றாக இருக்கிறது ஆதி

துபாய் ராஜா said...

நானும் ஏற்கனவே படிச்சிருக்கேன்...

பீர் | Peer said...

நேரமில்லாதிருந்தாலும் பழைய பதிவுகளை போஸ்ட் ஷெட்யூல்ல போட்டு போங்க. இதுவரை வாசிக்காத எங்களுக்கு வாசிக்க கிடைக்கும்.

Romeoboy said...

சுவாரசியமான மீள் பதிவு .

ஸ்ரீமதி said...

//கார்க்கி said...
October 28, 2009 1:13 PM //ஏற்கனவே படித்திருப்பினும் மறுமுறை படிப்பதிலும் சுவாரஸ்யம்.. :))

மீண்டும் அதே பொய்........:)))//

என்ன பொய் மேன்??

எவனோ ஒருவன் said...

நல்லாயிருக்கு. (நேரமின்மை)

தராசு said...

நல்லா பண்றாய்ங்கைய்யா ரொமான்சு.

மணிகண்டன் said...

போனமுறை இந்த பதிவுக்கு நான் ஏதோ சாப்பாடு பத்தி கமெண்ட் போட உங்களுக்கு கோவம் வந்துச்சு :)- அதுனால இந்த முறை உண்மையாவே பதிவு ரொம்ப நல்லா இருந்துச்சுன்னு சொல்லிடறேன்.

KaveriGanesh said...

யுக‌ம் தோறும் ஆணும் பெண்ணும் ஒருவ‌ரையொருவ‌ர் உள்வாங்கிக்கொள்ள‌ விழையும் அதே உண‌ர்வுதானா? ப‌ல்கிப்பெருக‌ விதிக்க‌ப்ப‌ட்ட‌ அதே பார்வையைத்தான் இவ‌ன் மேல் நானும், என் மீது அவ‌னும் வீசிக்கொண்டிருக்கிறோமா? அப்ப‌டியெனில் இது ஏன் இன்னொருவ‌ன் மீது எனக்குத் தோன்ற‌வில்லை? ச‌மூக‌ ஒழுக்க‌ங்க‌ள் என்ற‌ மாயையில் ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌தால் நான் செய்த‌ தேர்வா இவ‌ன் என‌க்கு?


என்னவொரு மனபோராட்டம் அந்த பெண்ணின் மனதில்,

இதை படிக்கும் பொழுது இப்படிதான் பெண்கள் உணர்வார்களா என்ற சிந்தனை என் மனதில் ஊடுருவுகிறது, ஆதி.

இதை எழுதும் பொழுது ஓரு பெண்ணாய் உங்க‌ளை உருவ‌க‌படுத்தி எழுதின‌ உண‌ர்வு புரிகிற‌து.ஆதி

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஆயில்.!
நன்றி ஸ்ரீமதி.!
நன்றி முரு.!
நன்றி கார்க்கி.!
நன்றி கதிர்.!

நன்றி நர்சிம்.! (அடுத்து 2 தான், நான் என்ன நர்சிம்மா? 6,6,6 னு போக?)

நன்றி அமித்து.!
நன்றி குருபரன்.!
நன்றி பாலாசி.!
நன்றி தண்டோரா.!
நன்றி செய்யது.!
நன்றி கார்த்திக்.!
நன்றி சிவா.!
நன்றி ராஜா.!

நன்றி பீர்.! (நீங்களே போய் படிச்சா என்னாவாம்?)

நன்றி ரோமியோ.!
நன்றி ஒருவன்.!

நன்றி தராசு.! (பெருசுக்கு பொறாமையை பாருங்கையா?)

நன்றி மணிகண்டன்.!

நன்றி காவேரி.! (அடிக்கடி கடைப்பக்கம் வாங்கய்யா)

அத்திரி said...

உணர்வுகள் அழகாக

அன்புடன் அருணா said...

எப்படி மிஸ் பண்ணீனேன்னு தெரில்லியே...நல்லாருக்கு

" உழவன் " " Uzhavan " said...

முதல் பதிவில்தான் பெளர்ணமி.. நல்ல நிலா வெளிச்சம்; இந்தப் பதிவுலயாவது நிலா கொஞ்சம் தேய்ஞ்சு கொஞ்சம் இருட்டு வந்திருக்கும்னு பார்த்தா... ம்ஹூம்.
ரெண்டும் ரொம்ப பாவம். :-)

Sarathguru Vijayananda said...

நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்று புரியவில்லை.ஆனால் மிக அருமையான சொல்லாடல். ரசித்தேன். ஒரு பஞ்ச்(ஆங்கிலத்துக்கு மன்னிக்கவும்) இருந்திருந்தால் இன்னும் அற்புதமாக இருந்திருக்கும் என்பது என் தாழ்மையான
கருத்து.

இப்படிக்கு
விஜயசாரதி
http://www.manalkayiru.com