Thursday, November 5, 2009

மறந்து தொலைக்காதவை : டாப் 10

   வீட்டுக்கு மாமா வந்திருக்கு.. வயிறு வேற பசிக்கி.. சினிமாக்கு போலாம்னு கண்ணன் சொல்லியிருக்கான்.. நேரமாயிட்டேயிருக்கு.. இந்தப்பய அழகா கோழிக்குண்டை (கோலி) குழியில போட்டுட்டானே.! போட்டுட்டு நக்கல் பண்ணுதமாரி சிரிக்கவேற செய்தான்.. நம்முளும் அடிச்சிற வேண்டிதுதான்.

பரிசல், மறதிகள் : டாப் 10 எழுதியுள்ளார்.

இதோ மறந்து தொலைக்காதவை 10..

1. வீட்டுல இருந்து கிளம்பும் போதோ, ஆபிஸ்ல இருந்து கிளம்பும் போதோ வண்டியை ஸ்டார்ட் செய்தபின் கண்டிப்பாக வந்து தொலைக்கிறது அந்த ஞாபகம்.. செல்போன் மேஜையிலேயே இருக்கிறது. அப்படியே அந்த எழவு நினைவிலிருந்தே மறந்துபோய் அம்னீஷியா வந்து வனாந்திரமாய் போய்த்தொலையமாட்டோமா எனத்தோன்றுகிறது ஒவ்வொரு முறையும்.

2. ரெண்டு வருடமாக 'அதெப்படி மறக்கும்?'னு கேட்டு ரமா பண்ணிய கொடுமையில் பூக்காரியை மட்டுமல்ல, நேரங்காலமில்லாமல் ஆஃபீஸ் மீட்டிங்கில் டேபிள் மீதிருக்கும் பூச்சாடியை பார்க்கும் போதும் ரமா நியாபகம் வந்து தொலைக்கிறது.

3. குச்சியை வைத்து குத்தினால் கூட தொண்டைக்குழிக்குள் இறங்காத கேண்டீன் பூரியை தின்று தொலைக்கும் போதெல்லாம், தென்காசி தோசைக்கடையின் தெய்வாம்சம் பொருந்திய தக்காளி தோசை நினைவிலாடுகிறது.

4. படுக்கையில் விழுந்தபிறகு ஞாபகம் வந்து தொலைக்கிறது நாளைக்காலை மீட்டிங்குத் தேவையான விடுபட்டுப்போன ரிப்போர்ட்.

5. வெயிலில் உச்சந்தலை தீப்பிடிக்க பைக்கில் சென்றுகொண்டிருக்கும் போது நியாபகம் வருகிறது, அம்பாசமுத்திரத்தின் இருபுறமும் மரங்கள் கூடு அமைத்திட்ட குளிர்ச்சாலைகள்.

6. தப்பித்தவறி தியேட்டருக்குப்போய் வாமனன் மாதிரி படங்களைப்பார்க்கும் போது நாக்கைப் பிடுங்கிப்போட்டுக் கொள்ளமுடியாத கையாலாகத்தனத்தில் அழுகை வர எத்தனிக்கும்போது சில நல்ல படங்கள் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

7. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் மகிழ்ச்சியோடு வெளிச்செல்லும்போதும் இது தற்காலிகம்தான் திங்களன்று மீண்டும் இங்குதான் வந்துதொலைக்கவேண்டும் என்ற உண்மையும் நினைவில் வந்து தொலைக்கிறது.

8. ஒவ்வொரு ஒண்ணாந்தேதியும் வரவேண்டிய கடன்கள் நியாபகம் இருக்கோ இல்லையோ கொடுக்கவேண்டியது மட்டும் நியாபகம் வந்து தொலைக்கிறது.. அவ்வ்வ்..

9. மனைவியோடு போய்க்கொண்டிருக்கும்போதுதான் இந்த மூணாவது வீட்டில் அந்த ஸ்லீவ்லெஸ் ஃபிகர் இருப்பது நினைவுக்கு வருகிறது.

10. பதிவர் சந்திப்புகள் நடக்கயிருக்கும் ஒவ்வொரு நாட்களும், நேரமும் மறந்து தொலைப்பதேயில்லை. 

35 comments:

Aravind said...

Thamira's touch! Good!

பிரபாகர் said...

//மனைவியோடு போய்க்கொண்டிருக்கும்போதுதான் இந்த மூணாவது வீட்டில் அந்த ஸ்லீவ்லெஸ் ஃபிகர் இருப்பது நினைவுக்கு வருகிறது.
//
எப்படித்தான் இப்படி துணிச்சலா சொல்ல முடியுதோ? ஆதிகிட்ட டியூஷன் போகணும்...

பிரபாகர்.

எம்.எம்.அப்துல்லா said...

என்ன அண்ணன் ’நோ’ இன்னும் இங்கே காணோம்??

:)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கலக்கல் ஆதி!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அப்துல்லா அண்ணனுக்குக் கரெக்டாய் ’நோ’ ஞாபகம் வந்து தொலைக்கிறார்!

எறும்பு said...

//அம்பாசமுத்திரத்தின் இருபுறமும் மரங்கள் கூடு அமைத்திட்ட குளிர்ச்சாலைகள்//
அண்ணாச்சி நானும் ரெம்ப மிஸ் பண்றேன்.. ஆமா அண்ணாச்சி நமக்கு எந்த ஊரு ??

சஹானா beautiful raga said...

//மனைவியோடு போய்க்கொண்டிருக்கும்போதுதான் இந்த மூணாவது வீட்டில் அந்த ஸ்லீவ்லெஸ் ஃபிகர் இருப்பது நினைவுக்கு வருகிறது.
//

இன்னிக்கு நைட்டு கஞ்சி உண்டா

பிடித்து, பிடிக்காதது, மறந்தது மறக்காதது, இந்த வரிசயில் அடுத்து யார் என்ன எழுத போறீங்க

ஆயில்யன் said...

//வெயிலில் உச்சந்தலை தீப்பிடிக்க பைக்கில் சென்றுகொண்டிருக்கும் போது நியாபகம் வருகிறது, அம்பாசமுத்திரத்தின் இருபுறமும் மரங்கள் கூடு அமைத்திட்ட குளிர்ச்சாலைகள்.//

ஹைய்ய்ய் அம்பாசமுத்திரம் போனப்ப நானும் ஃபீல் பண்ணியிருக்கேன் :))

அமிர்தவர்ஷினி அம்மா said...

மிகவும் ரசித்துப் படித்தேன்.

நாடோடி இலக்கியன் said...

நல்லாயிருக்கு ஆதி.

அம்பாசமுத்திரம் குளிர்சாலை படித்தபோது ஊர் ஞாபகம் வந்து அப்படியே கொஞ்ச நேரம் நினைவில் மூழ்கிவிட்டேன்.

நாகா said...

அருமைங்க ஆதி..

Cable Sankar said...

/ மனைவியோடு போய்க்கொண்டிருக்கும்போதுதான் இந்த மூணாவது வீட்டில் அந்த ஸ்லீவ்லெஸ் ஃபிகர் இருப்பது நினைவுக்கு வருகிறது.//

ஒண்ணு மட்டும் தானா..?

தராசு said...

எதுக்கு இப்படி ஒரே மேட்டர ரெண்டு பதிவ போட்டு எல்லாரையும் குழப்பறீங்க????

தண்டோரா ...... said...

மறக்காமல் போட்டேன் பின்னூட்டம்

அறிவிலி said...

நச்

☼ வெயிலான் said...

இந்த ஒரு வரி தான்யா பதிவையே தூக்கி நிறுத்துது.

“அம்பாசமுத்திரத்தின் இருபுறமும் மரங்கள் கூடு அமைத்திட்ட குளிர்ச்சாலைகள்”

கதிர் - ஈரோடு said...

//தென்காசி தக்காளி தோச...

ஸ்லீவ்லெஸ் ஃபிகர் ....//

என்னங்க ஆதி பண்றது.... திங்கட்கிழமை ஆபிஸ் போற மாதிரி, இது தான் வாழ்க்கையினு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்

புதுகைத் தென்றல் said...

ஆஹா இப்படி ஒரு தொடர் பதிவா.

சாமி........

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அரவிந்த், பிரபாகர்.!

நன்றி அப்துல்.! (அங்கே கமெண்ட் பார்த்தேன். என்னா.. மாட்டிவிடுறீரா? அதற்கும், நர்சிம் பதிவு கமெண்டுக்கும் இன்னும் சிரிச்சுக்கிட்டிருக்கேன்.. :-))

நன்றி ஜ்யோவ்ராம்.!
(ஆதி : ஏதாவது நல்லதா எழுதிவச்சுட்டு ஆளு வருமா வராதான்னு எதிர்பார்த்துக்கிட்டிருந்தா வரவேமாட்டீங்க. இப்டி மொக்கை போட்டாமட்டும் வந்து 'கலக்கல் ஆதி'யா? என்ன அநியாயம் இது?

ஜ்யோவ் : நல்லதாவா.. யோவ், எல்லா பதிவையும் படிச்சுக்கிட்டுதான் இருக்கேன். எந்தகாலத்துல நீ நல்லா எழுதியிருக்கே? ஏதோ போனா போவுதுன்னு பாராட்டினா.. கேள்வியா கேக்குற?

ஆதி : அவ்வ்வ்..)

நன்றி எறும்பு.! (அடடா.. எறும்புக்கும் நம்ப ஊரா? கார்க்கி பக்கம் போவாதீங்க.. நசுக்கிருவான்)

நன்றி சஹானா, ஆயில், அமித்து, இலக்கியன்.!

நன்றி நாகா, கேபிள்.!

நன்றி தராசு.! (அது ஏதோ உள்நாட்டு சதி போல தெரியுது தல..)

நன்றி தண்டோரா, அறிவிலி, வெயில், கதிர்.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தென்றல்.!

கடைக்குட்டி said...

பதிவர் சந்திப்புகள் நடக்கயிருக்கும் ஒவ்வொரு நாட்களும், நேரமும் மறந்து தொலைப்பதேயில்லை.//

அப்டியா :-)???

ஒவ்வாக்காசு said...

கலக்கல் தாமிரா...

- -ஒவ்வாக்காசு- -

vanila said...

ஆதி ஜீ..

கீழ் காண்பவர்களை (கடுமையாக)சர்வேசன், (மிதமாக) நரசிம் & வடகரை வேலன்.. மூவரையும் கண்டிக்கின்றேன்..

ஏங்க சர்வேசன்..

//என்ன கொடுமைங்க இது? வாரத்துக்கு ஒரு தபான்னுட்டு, டெய்லி ஒண்ணு வருது?//

மற்றும் இதற்கும்;

//டெய்லி குடுத்தீங்கன்னா, விருதோட ஒரு 'இது' இல்லாத போயிடும் :)//

ஏங்க நரசிம் / வேலன்..

//நர்சிம் சொன்னது சரியான கருத்து. நமக்குள்ளே மாத்தி மாத்திக் (விருது)கொடுப்பதை விட புதிதாக வந்தவர்களை ஊக்குவிக்கும்விதமாக இருக்கட்டுமே. //

தெரிஞ்சவங்கள, பாத்தவங்கள, பழகுனவங்கள,வரஞ்சிருந்தாப்படின்னா ... இது வரைக்கும் ஒரு அஞ்சாறு விருதாவது (புலம்பல் விருதுகள்) வந்திருக்கும்.. புதியவங்கள இமாஜின் பண்ணி வரையருதுக்கு அண்ணாச்சிக்கு இம்புட்டு டைம் ஆகுதுன்னு நினைக்கிறேன்..

மத்தபடி சீக்கிரம் புலம்புங்க அண்ணாச்சி..

//தக்காளி தோசை//
தென்காசி கோயிலுக்கு கிழக்கயா?, மேக்கயா? பரதன் தியேட்டர் பக்கத்துலயா ?. மேலகரம் பக்கத்துலயா ?..

//அம்பாசமுத்திரத்தின் இருபுறமும் மரங்கள் கூடு அமைத்திட்ட குளிர்ச்சாலைகள்.//

சேதுபதி ஆஸ்பத்திரில்லேருந்து ஆத்தங்கரை போவோம்ல, அந்த பாதையும் சரி, கல்லிடகுரிச்சிலேருந்து அம்பை வருவோம்லா.. அந்த ரோடு .. ரெண்டும் நல்ல இருக்கும்.. ஞாவகம் வருது.. நல்லா ஞாவகம் வருது..

புலம்பல் விருதுகள ஆரமிங்க தலைவா..

பட்டிக்காட்டான்.. said...

நல்லாருக்குங்க ..

ஆரூரன் விசுவநாதன் said...

கலக்கல்.....

அத்திரி said...

வழக்கம் போல் ஆதியின் டச்

துபாய் ராஜா said...

//☼ வெயிலான் said...
November 5, 2009 6:18 PM இந்த ஒரு வரி தான்யா பதிவையே தூக்கி நிறுத்துது.

“அம்பாசமுத்திரத்தின் இருபுறமும் மரங்கள் கூடு அமைத்திட்ட குளிர்ச்சாலைகள்” //

ரிப்பீட்ட்ட்ட்டேய்ய்ய்...

துபாய் ராஜா said...

//vanila said...

சேதுபதி ஆஸ்பத்திரில்லேருந்து ஆத்தங்கரை போவோம்ல, அந்த பாதையும் சரி,.... //

அது தீர்த்தபதி ஆஸ்பத்திரி.சிங்கம்பட்டி ஜமீன்லேயிருந்து அந்த காலத்துல பொதுமக்களுக்காக கட்டி கொடுத்தது.
தீர்த்தபதி ஸ்கூலும் சிங்கம்பட்டி ஜமீன் உருவாக்கியதுதான்....

vanila said...

நன்றி ராஜா.. அட ஆமாம்ல .. கரெக்ட். தீர்த்தபதி ஹாஸ்பிடல் தான்.. போலீஸ் ஸ்டேஷன் எதுத்தாப்புல.. (கோர்ட்' ன்னு சொல்லிடாதீங்க ராஜா..), கௌரி ஷங்கர்' க்கு பக்கத்துல.. 15 வருஷம் முன்னாடி வரைக்கும் அம்பை' ல ஹோட்டல் கிடையாது.. நெல்லைக்கு தான் போகணும்.. எனக்கு சுந்தர புருஷன் பாக்கும் போதெல்லாம் தீர்த்தபதி ஸ்கூலும், பழைய பஸ் ஸ்டாண்ட் பின்னாடி இருக்கற வயலும், ஆத்தங்கர ரோடு'ம் தான் ஞாபகத்துக்கு வரும்.. முதல்வன்' ல (அர்ஜுன் C.M. ஆனப்புறம், தலைப்ப கட்டிக்கிட்டு, முகத்தில பரு வச்சிக்கிட்டு மாறு வேஷத்தில போவாரே) கூட அந்த ரோடு வரும்' னு நினைக்கிறேன்.. நல்ல மலரும் நினைவுகள் (ஆதியின் ஒரு "வரி"யால்).

மங்களூர் சிவா said...

//மனைவியோடு போய்க்கொண்டிருக்கும்போதுதான் இந்த மூணாவது வீட்டில் அந்த ஸ்லீவ்லெஸ் ஃபிகர் இருப்பது நினைவுக்கு வருகிறது.
//

:)))

Anonymous said...

நல்லா இருக்கு :)

எறும்பு said...

/அந்த ரோடு வரும்' னு நினைக்கிறேன்.. நல்ல மலரும் நினைவுகள் (ஆதியின் ஒரு "வரி"யால்). ///
அது மலரும் நினைவாவே போயிரும்னு நினைக்கிறன். நீங்க இப்ப சமீபமா ஊரு பக்கம் போகலைனு நினைக்கிறன்.. அந்த ரோட்டு பக்கம் இருக்கிற வயலை எல்லாம் பிளாட் போட ஆரம்பிச்சிடாங்க... இன்னும் கொஞ்சம் வருசத்துல அங்க வயலே இருக்காது... வருத்தத்துடன்....

அ.மு.செய்யது said...

//மனைவியோடு போய்க்கொண்டிருக்கும்போதுதான் இந்த மூணாவது வீட்டில் அந்த ஸ்லீவ்லெஸ் ஃபிகர் இருப்பது நினைவுக்கு வருகிறது. //

அங்க நிக்கிறீங்க பாஸ் !!!

தாரணி பிரியா said...

இந்த கான்செப்டை சுட்டு நானும் ஒரு பதிவு போட்டுகிட்டேன். மிக்க நன்றி ஆதி

vanila said...

ஆமாம். எறும்பு ஜி.. சென்ற வருடம் கண்டேன்.. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது... : (