Sunday, November 22, 2009

பதிவர் சந்திப்பு (21.11.09) : புகைப்படங்கள்

கடந்த வாரங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட சென்னை பதிவர் சந்திப்புகள் மழை காரணமாக ரத்து செய்யப்பட, திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட நேற்றைய (21.11.09) பதிவர் சந்திப்பு வழக்கத்தை விடவும் சிறப்பாகவே நடைபெற்றது.

வழக்கமாக எந்த நேரத்திலாவது ஆரம்பித்து எந்த நேரத்திலாவது முடிந்துவிடும். இந்த முறை சந்திப்பு குறித்த 5.30 ‍டு 7.00 நடந்ததும் இன்னொரு ஆச்சரியம். திடீரென அறிவிப்பு செய்யப்பட்டதால் கூட்டம் குறைவாக இருந்தது என எண்ணுகிறேன். மேலும் வழக்கமாக வந்துவிடுகிற சில நண்பர்களையும் காணமுடியவில்லை. இருப்பினும் ஜ்யோவ்ராம், பைத்தியக்காரன், லக்கிலுக், புரூனோ, கேபிள் போன்ற முக்கிய தலைகளையும் பல புதியவர்களையும் (அதாவது எனக்கு) காணமுடிந்தது. அனுஜன்யா மும்பையிலிருந்து வந்து கூட்டத்தை சிறப்பு செய்திருந்தார்.

எல்லோரும் மாலைக்காற்றில் சுகமாக பேசிக்கொண்டிருக்க, மழையை எதிர்பார்த்து ரெயின்கோட்டுடன் வந்திருந்த நான் மட்டும் புழுக்கத்துடன் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஏன் கழற்றி கையில் வைத்துக்கொள்வதுதானே என்கிறீர்களா? ஊஹூம், அதில் ஒரு பிரச்சினை, அதை இங்கெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. சரி, விஷயத்துக்குப்போகலாம்.

சிறப்பு விருந்தினர் வா.மணிகண்டனுடன் கவிதை இலக்கியம் குறித்தான விவாதம் நிகழ்ந்தது (உரையாடலின் அடர்த்தியை அறிய நர்சிம் பதிவுக்குச் செல்லலாம்). பின்னர் நரன் டெம்பிளேட் பின்னூட்டங்கள் குறித்த எரிச்சலைச்சொல்லி பின்னூட்ட வாய்ப்பு என்பது வாசகர்கள் மற்றும் படைப்பாளி அந்தப்படைப்பு குறித்த தொடர் விவாதங்களை நிகழ்த்தக் கிடைத்த அருமையான வாய்ப்பு என்றும் அது கிட்டத்தட்ட நிகழ்வதே இல்லை என்றும் கருத்து தெரிவித்தார். இல்லை இல்லையென்று சிலர் மறுக்க அதற்குள் பேச்சு திசைமாறியது. எனக்கும் அதுகுறித்து பல கருத்துகள் இருந்தாலும் அங்கு பேசினால் வாய் வலிக்கும் என்பதால் பேசவில்லை, இங்கு எழுதினால் கைவலிக்கும் என்பதால் இங்கும் வேண்டாம்.. ஹிஹி.!

இடையிடையே நானும், அதிஷாவும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து சோவாறிவிட்டு வந்தோம். (சீரியஸாக நாலு பேரு பேசிக்கொண்டிருக்கும் போது வெளிநடப்பு செய்து கூட்டத்தில் குழப்பம் விளைவிக்கவில்லை என்றால் அதுவும் ஒரு கூட்டமா என்ன.?). பின்னர் நல்லதொரு தேநீருடன் டீக்கடையில் சந்திப்பு இனிதே நிறைவுற்றது. கிளம்பும் முன்னதாக இனி தீவிரமாக கவிதைகள் எழுதலாம் என்று முடிவு செய்திருப்பதாக நான் அனுஜன்யாவிடம் கூறியபோது அவரது முகத்தில் ஒரு அதிர்ச்சி பரவியதை காணமுடிந்தது.

********

இனி புகைப்படங்கள்..

துவக்கச்செவ்வான பேக்ட்ராப்பில் காந்தி சிலை.


கூட்டத்தின் ஒரு பகுதி.


பைத்தியக்காரன்.


அதிஷாவின் தீரம்.


கடற்கரைச்சாலையின் ஒளிவெள்ளம்.


முரளிகண்ணன்.


காவேரிகணேஷ்.


கூட்டத்தின் இன்னொரு பகுதி.

யுவகிருஷ்ணா.

ஜ்யோவ்ராம்சுந்தர்.


பேக்ட்ராப் லைட்டிங்கில் விழாநாயகன் வா.மணிகண்டன்.


கிட்டத்தட்ட கூட்டத்தின் முழுப்பகுதி.


டாக்டர் புரூனோ, அதியமான்.


அனுஜன்யா அங்கிள்.நர்சிம்.


விடைதந்த பிறைநிலா.


.

58 comments:

குசும்பன் said...

ஆதி கடைசி போட்டோவிலும் உங்க முகம் தான் எனக்கு தெரிகிறது? என் கண்ணு நொல்லையா ஆயிட்டா?

குசும்பன் said...

//நான் அனுஜன்யாவிடம் கூறியபோது அவரது முகத்தில் ஒரு அதிர்ச்சி பரவியதை காணமுடிந்தது.//

தென்னை மரத்தில் தேள் கொட்டினா பனமரத்தில் நெறிகட்டுதாம் என்பது போல், கவிதைய நீங்க கொலை செய்ய போறேன் என்று சொன்னா நிஜ கவிஞர் தானே அதிர்ச்சி அடையனும், இவரு எதுக்கு ரியாக்சன் கொடுக்கிறார். இவருக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம்! கேட்டு சொல்லுங்கப்பா!

அபி அப்பா said...

\\எல்லோரும் மாலைக்காற்றில் சுகமாக பேசிக்கொண்டிருக்க, மழையை எதிர்பார்த்து ரெயின்கோட்டுடன் வந்திருந்த நான் மட்டும் புழுக்கத்துடன் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஏன் கழற்றி கையில் வைத்துக்கொள்வதுதானே என்கிறீர்களா? ஊஹூம், அதில் ஒரு பிரச்சினை, அதை இங்கெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. சரி, விஷயத்துக்குப்போகலாம்.
\\

நல்லா புரியுது சாமீஸ்! உள்ளே அகோரி, வெளியே தாமிரா அது தானே! நல்ல வேளை நடக்க கூடாது எதும் நடக்கலை:-))

கோவி.கண்ணன் said...

:)

இதெல்லாம் 1...2...3 மச் !

இராகவன் நைஜிரியா said...

// பின்னர் நரன் டெம்பிளேட் பின்னூட்டங்கள் குறித்த எரிச்சலைச்சொல்லி //

பல சமயங்களில், நமது இருப்பை காட்டிக் கொள்ள இந்த டெம்ப்ளேட் உதவுகின்றதுங்க..

இது கொஞ்சம் ஜாஸ்திதான்.. வேற வழி..

உங்க பதிவுக்கு வந்துட்டு நான் போனேன் என்பதற்கு அத்தாட்சி வேணுமில்ல... அடுத்த தடவை இந்தியா வரும் போது, நீங்க ஏன் என் பதிவுக்கு வருவதில்லை என கேட்டால், அதற்கு எனக்கு அத்தாட்சி வேணுமில்ல...

இராகவன் நைஜிரியா said...

// கிளம்பும் முன்னதாக இனி தீவிரமாக கவிதைகள் எழுதலாம் என்று முடிவு செய்திருப்பதாக நான் அனுஜன்யாவிடம் கூறியபோது அவரது முகத்தில் ஒரு அதிர்ச்சி பரவியதை காணமுடிந்தது. //

கடைசியில ஏன் அவருக்கு ஒரு பீதிய கொடுத்து அனுப்பி வச்சு இருக்கீங்க

இராகவன் நைஜிரியா said...

முதல் படமும், கடைசிப் படமும் அருமை..

துளசி கோபால் said...

நன்றிப்பா.

அடுத்தமுறை வர முயற்சிக்கிறேன்.

டிசம்பர் முதல் 'சனி'ன்னு பேச்சுவாக்கில் காதில் ஒரு சேதி வந்துருக்கே!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்ல தொகுப்பு ... படங்கள் அருமை ...

நான் ஊருக்கு வந்தால் கண்டிப்பாக கலந்து கொள்வேன் ...

டம்பி மேவீ said...

நேத்து முக்கியமான வேலையா அறையில் துங்கி கொண்டு இருந்ததால் கூட்டத்திற்கு வர முடியல .....ஹீ ஹீ
(உண்மையாக சந்திப்பு இருப்பது எனக்கு தெரியாதுங்க)

நீங்க கவிதை எழுதினால் வைரமுத்து மாதிரியே இருப்பிங்க (தோற்றத்தில் தான்)

"கவர்ச்சி கவிதை மன்னன்" அனுஜன்யா வந்தாரா????

சே அவரை பார்க்க முடியாமல் போயிருச்சே

Mahesh said...

அட... முந்திக்கிட்டீங்களே... அனுஜன்யாவுக்கு இருக்கு.... அங்க மட்டும் ஸ்பெஷல் ஆஜர்.... சிங்கப்பூருக்கு கடுக்காயா? (இதையே இன்னும் இரு வருஷத்துக்கு சொல்லிட்டு திரியுவோமில்ல....)

பா.ராஜாராம் said...

:-))))))

நன்றி ஆதி!

KVR said...

//பின்னர் நரன் டெம்பிளேட் பின்னூட்டங்கள் குறித்த எரிச்சலைச்சொல்லி பின்னூட்ட வாய்ப்பு என்பது வாசகர்கள் மற்றும் படைப்பாளி அந்தப்படைப்பு குறித்த தொடர் விவாதங்களை நிகழ்த்தக் கிடைத்த அருமையான வாய்ப்பு என்றும் அது கிட்டத்தட்ட நிகழ்வதே இல்லை என்றும் கருத்து தெரிவித்தார். இல்லை இல்லையென்று சிலர் மறுக்க அதற்குள் பேச்சு திசைமாறியது.//

பின்னூட்டங்கள் என்பது பல நேரங்களில் இருப்பைக் காண்பித்துக்கொள்ளவும், நான் வந்துட்டுப் போய்ருக்கேன்னு சொல்லிக்கவும் மட்டுமே பயன்படுகிறது. அதிகபட்சம் பதிவைப் பாராட்டவும்.

பின்னூட்டங்களின் வாயிலாக விவாதங்கள் நீளாமைக்கு எனக்குத் தோன்றிய காரணங்கள்:

1. விவாதிக்கும் அளவிலான பதிவுகள் வருவது குறைவாக இருக்கிறது.

2. விவாதிக்கக்கூடிய பதிவிலும் பின்னூட்டமிடுபவர்களுக்கு விவாதிப்பதில் இருக்கும் தயக்கம். நமக்கெதுக்கு நேரவிரயம் என்று போவது ஒரு வித தயக்கம். மற்றது முக்கியமானது, பரிச்சயமான நண்பர்களே கூட அவர்களது பதிவில் இடுகைக்கு மாற்றுக்கருத்தை வைக்கும்போது அதை சரியான கோணத்தில் புரிந்துகொள்ளாமல் நட்பை முறித்துக்கோள்ளும் அபாயம். இத்தகைய மாற்றுக்கருத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், அவரிடம் தொடர்ந்து விவாதிக்கும் பெருந்தன்மையும் தமிழ் பதிவுலகத்தில் கொஞ்சம் குறைவாகவே இருப்பதாகத் தோன்றுகிறது.

3. இடுகையை எழுதுபவர்களே விவாதமாகிவிடக்கூடாது என எண்ணுவது. விவாதம் நீண்டு, திசை மாறிவிடும்போது கடைக்கு வருபவர்கள் கூட வராமல் போய்விடப் போகிறார்கள் என்று நினைத்து விவாதத்தை பாதியிலேயே முறித்துவிடுவது.

முரளிகுமார் பத்மநாபன் said...

தலைவரே எங்க உங்களை கானோமே? குசும்பன் உங்களை பார்த்ததா சொல்றாரு, ஒன்னுமே பிரியலை உலகத்துல :-)

அப்பாவி முரு said...

//Mahesh said...
November 22, 2009 3:08 PM அட... முந்திக்கிட்டீங்களே... அனுஜன்யாவுக்கு இருக்கு.... அங்க மட்டும் ஸ்பெஷல் ஆஜர்.... சிங்கப்பூருக்கு கடுக்காயா? (இதையே இன்னும் இரு வருஷத்துக்கு சொல்லிட்டு திரியுவோமில்ல....) //

ரிபீட்டுவது பாசக்கார பயபுள்ளக சங்கம், சிங்கை கிளை....

துபாய் ராஜா said...

//பின்னூட்ட வாய்ப்பு என்பது வாசகர்கள் மற்றும் படைப்பாளி அந்தப்படைப்பு குறித்த தொடர் விவாதங்களை நிகழ்த்தக் கிடைத்த அருமையான வாய்ப்பு என்றும் அது கிட்டத்தட்ட நிகழ்வதே இல்லை என்றும் கருத்து தெரிவித்தார்.//

நியாயமான வருத்தம்தான்.இதற்கு முக்கியமான கா'ரணம்' பதிவுலகில் வாசகர்களை விட படைப்பாளிகள் அதிகமாக இருப்பதுதான்.

அறிவிலி said...

காந்தி சிலை படம் அருமை.

எழுத்தில் பார்த்த எங்களுக்கே இவ்வளவு அதிர்ச்சசியா இருக்கும்போது, பாவம் அனுஜன்யாவுக்கு எப்படி இருந்திருக்கும்?

(அதிர்ச்சியான முகத்தை போட்டோ புடிககலையா?)

எம்.எம்.அப்துல்லா said...

நீங்க வெளிநடப்பு செய்த நேரத்தில் நான் உள்நடப்பு செஞ்சுட்டு போனேன். கேள்விப்பட்டீங்களா??

அறிவிலி said...

இள்வட்டக் கல் தூக்கினாரே அதிஷா, பொண்ணு கெடச்சுதா???

Truth said...

ஆதி, ரொம்ப நாளா கேட்கணும்னு இருந்தேன். பதிவர் சந்திப்புல என்ன பண்ணுவீங்க?

RAD MADHAV said...

பதிவர்களே.....நல் வணக்கங்கள்...
“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் சிறுகதைப் பரிசுப் போட்டி... http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html

Mahesh said...

//அறிவிலி said...

இள்வட்டக் கல் தூக்கினாரே அதிஷா, பொண்ணு கெடச்சுதா???//

அதெல்லாம் நம்ம அனுஜன்யா அசால்ட்டா இடதுகை சுண்டு விரலாலயே தூக்கிப் போட்ட கல்லுக...ஹ...

சங்கர் said...

//கிளம்பும் முன்னதாக இனி தீவிரமாக கவிதைகள் எழுதலாம் என்று முடிவு செய்திருப்பதாக நான் அனுஜன்யாவிடம் கூறியபோது அவரது முகத்தில் ஒரு அதிர்ச்சி பரவியதை காணமுடிந்தது//இங்கு தீவிரம் என்பது எதை குறிக்கிறது?

கவிதையின் பொருளையா?
வார்த்தைகளையா?
அல்லது எந்த கவிதையாக இருந்தாலும் அதை தீவிரமாக யோசித்து எழுதப்போவதையா?
வார்த்தையில் தீவிரம் என்றால், அது எனக்கு தீவிரமாக தோன்றாவிட்டால் என்ன செய்வது?
அது உங்களுக்கான கவிதையா இல்லை, மற்றவர்களுக்கான கவிதையா?
மேலும், .....

ஒண்ணும் இல்லைங்க நேற்றைய விவாதத்தின் தீவிரத்திலிருந்து (திருப்பியும் தீவிரமா) வெளிவர முடியல.

RAMYA said...

ம்ம்ம்.. நல்ல சந்திப்பின் தொகுப்பை அளித்தமைக்கு நன்றி ஆதி..

நிறைய பேரை பார்ர்க்கும் வாய்ப்பு கிடைத்தது :))

Romeoboy said...

கடைசி நேரத்தில் தெரிந்ததால் என்னால் வர இயலவில்லை. படங்கள் அருமை .

கணேஷ் said...

ஜ்யோவ்ராமின் ஃபோட்டோ, சூப்பர்ப்.

பைத்தியக்காரன் அவர்களுடன் சீரியஸாக கேட்டுக் கொண்டிருப்பவர் ஒரு பிரபலம். அவர் பெயரை எழுத மறந்ததற்கு உங்களுக்கு ஒரு குட்டு :) :)

சரவணகுமரன் said...

படங்கள் அருமை

செந்தில் நாதன் said...

KVR பின்னூட்டத்துக்கு ஒரு பெரிய ரிப்பிட்டு!!

அப்புறம் கட்சி படம் சூப்பர்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

உங்க கண்ணு நொள்ளைங்கிறது தெரிஞ்ச விஷயம்தானே தல.!

ஏன் இந்த கொலவெறி அபி டாடி.?

எதைச்சொல்றீங்க கோவிஜி?

உங்க பதிவுக்கு வந்துட்டு நான் போனேன் என்பதற்கு அத்தாட்சி வேணுமில்ல// இது பாயிண்ட் இராகவன்.!

அடுத்த தபா மறக்காம வாங்க துளசி மேடம்.!

வாங்க ஸ்டார்ஜன்.

நல்லா தூக்கமா தம்பி மேவீ.?

அனுஜன்யா அங்கிள் அவர் எப்படி அவரது கவிதைகளை கண்டடைகிறார் என்று எனக்கு பேட்டி தந்திருக்கிறார். அதை தனி பதிவாக போடலாம் என்று எண்ணியிருக்கிறேன். நீங்கள் எதுக்கும் ஒரு வாரத்துக்கு இணையம் பக்கமே வந்துடாதீங்க மகேஷ். ஜாக்கிரதை.

நன்றி பா.ராஜாராம்.

பின்னூட்டத்தில் விவாதம் நடப்பதில்லை என்ற கருத்தையே பின்னூட்டத்தில் விவாதமாக நிகழ்த்தியிருக்கிறீர்கள் கேவிஆர்.!

படம் ஒண்ணுகூட தேரலை முரளிகுமார். அவ்வ்வ்..

கரெக்டுதான், உடாதீங்க முரு.

நன்றி ராஜா.

அறிவிலி, ஒரு பயங்கரமான போட்டோ வச்சிருக்கேன். போட்டுறவா?

கிளம்பும்போதுதான் நர்சிம் சொன்னாரு அண்ணே.!

ட்ரூத், என்ன நக்கலா? என்ன நடந்துச்சுன்னுதான் எழுதியிருக்கேன்ல..

நன்றி மாதவ்.!

ஒரு சந்திப்பிலேயே இப்பிடியாயிட்டீங்களே, பாவம் சங்கர் நீங்க. அடுத்த சந்திப்புக்கெல்லாம் வரணுமான்னு நல்லா யோசிச்சுக்குங்க.!

நன்றி ரம்யா.

நன்றி ரோமியோ.

ஹிஹி.. ஜாரி கணேஷ்.

நன்றி சரவணகுமரன்.

நன்றி செந்தில்நாதன்.!

நர்சிம் said...

அருமை. நன்றி. பதிவு போட்டாச்சு

☼ வெயிலான் said...

பதிவு சொல்லாததை படங்கள் சொல்லியது :)

karisalkaran said...

//நான் அனுஜன்யாவிடம் கூறியபோது அவரது முகத்தில் ஒரு அதிர்ச்சி பரவியதை காணமுடிந்தது.//

கல் தூக்கினாரே அதிஷா கொலவெறி???????????????

ஸ்ரீமதி said...

படங்கள் அருமை.. :))

பைத்தியக்காரன் said...

அன்பின் ஆதி, புகைப்படங்களுக்காகவே - குறும்படங்களும் - ஒரு வலைத்தளத்தை நீங்கள் ஏன் ஆரம்பிக்கக்கூடாது?

தோழமையுடன்
பைத்தியக்காரன்

மண்குதிரை said...

nice sir

thanks.

கோவி.கண்ணன் said...

//எதைச்சொல்றீங்க கோவிஜி?
//

கூட்டத்தின் ஒரு பகுதி, நடு பகுதி என்று அரசியல் கூட்டம் போல் சொல்லியது !

:)

செல்வேந்திரன் said...

Good show!

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)

தராசு said...

//அங்கு பேசினால் வாய் வலிக்கும் //

//இங்கு எழுதினால் கைவலிக்கும் //

பின்ன எங்கதான் சொல்லுவீங்க.

சரி, ஒரு யூத் அனுஜன்யாவை படம் புடிச்சீங்க, எங்க இன்னொரு யூத் கேபிள் அண்ணன் வந்தாராமே, அவர ஏன் படம் புடிக்கல.

குசும்பன் said...

நிக்கிற காந்தியையும் மூன் வாக் போவது மாதிரி போட்டோ எடுக்க உம்மால் மட்டுமே முடியும்!

குசும்பன் said...

நேத்தியே முடிஞ்ச பூசைய என்னா திரும்ப இன்னைக்கு ஆரம்பிக்கிறேன் என்று பார்க்குறீங்களா ஆதி! ஒன்னும் இல்ல 39ல் நின்னுச்சு, அதான் ரெண்டு கமெண்ட் போட்டு முதல் பக்கத்தில் இருந்து தூக்கிடலாமே என்று :)))

எப்பூடி?

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி நர்சிம்.!
நன்றி வெயிலான்.!

நன்றி கரிசல்காரன்.! (இந்தப்பெயரும் நல்லாயிருக்குதே..)

நன்றி ஸ்ரீமதி.!

நன்றி பைத்தியக்காரன்.! (புகைப்படம் ஓகே. அதென்ன குறும்படம்? என்ன நக்கலா.?)

நன்றி செந்தில்நாதன்.!
நன்றி சரவணகுமரன்.

நன்றி மண்குதிரை.!
நன்றி செல்வேந்திரன்.!
நன்றி அமித்து.!

நன்றி தராசு.! (நல்ல கேள்வி)

நன்றி குசும்பன்.! (யோவ், ஆத்திரத்தைக் கிளப்பாமல் போயிடும் சொல்லிப்புட்டேன். வர்றதே 100, 200 ன்னு இருக்குது, இந்த லட்சணத்துல இதுவேற.?)

Mohan Kumar said...

ஆதி: புகை படங்கள் அருமை. நீங்க போட்டோ எடுப்பதில் ரொம்ப பிஸி-ஆ இருந்ததால் பேச முடியலை. அடுத்த முறை பேசுவோம்.

சந்திப்பு குறித்த என் பதிவு இங்கே: http://veeduthirumbal.blogspot.com/

ஒரே ஒரு போட்டோ மட்டும் (தங்களுக்கு நன்றி என்ற கமெண்ட் உடன்) உங்கள் வலையில் இருந்து எடுத்துள்ளேன். கோபிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை.

புருனோ Bruno said...

எனக்கு தெரிந்த வகையில் என் இடுகைகளில் விவாதங்கள் நடந்து கொண்டு தானிருக்கிறது :) :)

//பின்னூட்டங்களின் வாயிலாக விவாதங்கள் நீளாமைக்கு எனக்குத் தோன்றிய காரணங்கள்:
//

நீங்கள் கூறியது தவிர விவாதத்திற்குரிய விஷயங்கள் குறித்து எழுதும் நபர்கள் குறைவாகவே உள்ளார்கள்

KVR said...

// புருனோ Bruno said...
எனக்கு தெரிந்த வகையில் என் இடுகைகளில் விவாதங்கள் நடந்து கொண்டு தானிருக்கிறது :) :)//

புருனோ சார், ஒட்டுமொத்தமாக விவாதமே நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. வெகு குறைவாக இருக்கிறது என்கிறேன்.

//நீங்கள் கூறியது தவிர விவாதத்திற்குரிய விஷயங்கள் குறித்து எழுதும் நபர்கள் குறைவாகவே உள்ளார்கள்//

இதை தான் [1. விவாதிக்கும் அளவிலான பதிவுகள் வருவது குறைவாக இருக்கிறது.] என்று பதிவுகளாக குறிப்பிட்டேன்.

நன்றி.

ச.முத்துவேல் said...

அந்தி வானத்தில் ஆரம்பித்து , நட்சத்திரங்களை நடுவில் அள்ளித்தெளித்து, பிறை நிலாவில் முடித்து வைத்திருப்பதே கவிதைதான்.

நன்றி புகைப்படங்கள் பகிர்விற்கு.

யாத்ரா said...

புகைப்படங்கள், சந்திப்பில் கலந்து கொண்ட நிறைவைத் தருகிறது, மிக்க நன்றி.

கும்க்கி said...

அங்கிளை ”அங்கிள்” என்று குறிப்பிட்டதை வன்மையாக கண்டித்து வெளிநடக்கிறேன்.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

என்னால் தான் கலந்துகொள்ள முடியவில்லை.. :(

sriram said...

தல,
நல்லதானே போயிட்டு இருக்கு, இப்போ எதுக்கு கவிதையெல்லாம் எழுதறேன்னு சொல்லி டரியல கெளப்புறீங்க? எங்க மீது கருணை காட்டி முடிவை மறுபறிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

நாய்க்குட்டி மனசு said...

இலக்கியத்துக்கும் நிலவின் ஒளிக்கும் ஏதோ நல்ல தொடர்பு இருக்கிறது. நான் பெண் என்பதற்கு வருத்தபட்டதே இல்லை இந்த மாதிரி சந்தர்ப்பங்கள் பார்க்கும் போது மட்டும் ஏனோ லேசாக வலிக்கிறது. புகைப்படங்கள் உடன் பதிவும் தந்ததற்கு நன்றியும் வாழ்த்தும்.

" உழவன் " " Uzhavan " said...

சூப்பர். தலைவர்களே சனிக்கிழமையும் நமக்கு ஆபீசு உண்டு. அதனால்தான் வரமுடியல. இனிமேல் கூடுமானவரைக்கும் ௯௯௯௯௯சன்டேல வைக்க முயற்சி பண்ணுனா நல்லாருக்கும் :-)

வா.மணிகண்டன் said...

ஆதி படங்களுக்கு நன்றி.

விழாநாயகன் எனப்தெல்லாம் கொஞ்சம் ஓவரோ? :) நல்லாத்தானே உங்க கூட பேசினேன். உங்களுக்கு என் மேல ஏன் இந்த கொலைவெறி? :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மோகன்.! (கோபித்தல் என்ன வேண்டிகிடக்குது. மகிழ்ச்சிதான் எனக்கு)

நன்றி டாக்டர்.!

நன்றி முத்துவேல்.! (நீங்கள் கவிஞரய்யா.!)

நன்றி யாத்ரா.!

நன்றி கும்க்கி.!

நன்றி பாலபாரதி.! (உங்களை எதிர்பார்த்தேன் பாஸ்.!)

நன்றி ஸ்ரீராம்.!

நன்றி நாய்க்குட்டிமனசு.! (இதைப்போலெல்லாம் வரமுடியவில்லை என வருந்துகிறீர்களா? பெண்களும் வரலாம். சென்ற முறை அமுதாகிருஷ்ணா, இந்தமுறை லேகா போன்ற பெண் பதிவர்களும் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்)

நன்றி உழவன்.!

நன்றி வா.மணிகண்டன்.! (ஹிஹி.. சும்மனாச்சுக்கும்)

ஊர்சுற்றி said...

//கிளம்பும் முன்னதாக இனி தீவிரமாக கவிதைகள் எழுதலாம் என்று முடிவு செய்திருப்பதாக நான் அனுஜன்யாவிடம் கூறியபோது அவரது முகத்தில் ஒரு அதிர்ச்சி பரவியதை காணமுடிந்தது.
//அதே அதிர்ச்சி ரேகைகள்... !!!

புகைப்படங்களுக்கு நன்றி. என்னைய ரொம்ப அழகா ஒரு படம் புடிச்சித் தரணும்னு ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருக்கேன். அடுத்தமுறை கட்டாயம் எடுக்கணும். நானும் வந்துடுவேன்.

balaji said...

நான் இந்த உலகிற்கு புதியவன்.சார்
உங்களது அடுதத சந்திப்பு எப்போது என்று தெரிவிக்க முடிந்தால் நல்லது
நானும் வருவதற்கு முயற்சி செய்கிறேன்.

இனியன் பாலாஜி

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஊர்சுற்றி.! (புடிச்சுருவோம் பாஸ்)

நன்றி பாலாஜி.! (அதெல்லாம் இப்பவே சொல்லமுடியாது. ஹிஹி.. ஏன்னா எங்களுக்கே தெரியாது. ரெண்டு நாளைக்கு முன்னாடி ஏதாவது நாலைஞ்சு பிரபல(?) பதிவர்களின் பதிவுகளில் அறிவிப்பு வரும். அதைவச்சு தெரிஞ்சுக்கணும். :-))

balaji said...

சார்
ஆயார் சார் அந்த நாலைஞ்சு பிரபல பதிவர்கள்
அவர்களது அலை பேசி எண்ணை தயவு செய்து தாங்க‌
அல்லது நீங்களாவது எனக்கு தெரிவியுஙளேன்.1 நாள்
2 நாள் முன்னாடி தெரிஞசா லீவு போட ச்வுகரியமா இருக்கும்
iniyan balaji